கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
பாடையில் ஏற்றும் பிணத்தின் நெற்றியில் ஒட்டும் நாணயக்குற்றியை நெஞ்சாங்கட்டை நெருப்பெரிந்து முடிந்ததும் கரியைக் கழுவிக் காசெடுக்கும் வெட்டியான்களாய்.. விதைகள் சுமந்த விருட்சங்கள் எல்லாம் வேரோடு அழிக்கப்பட்டு விட்டன வியாபாரிகளால்.. அறுக்கும் முன் அலங்கரிக்கப்படும் ஆட்டுக்கடாக்கள் போல விதைக்கும் முன்னே வீழ்த்தப்பட்டு விட்டது.. பருத்துக் கொழுப்பதற்காய் கிளிசறியாக்குழையும் பூவரசங்குழையும் பருத்திப்புண்ணாக்கும் முத்தர் வீட்டு நல்ல தண்ணியும் குடுத்து நலமெடுத்துக் கிலோ ஏத்தி நல்ல நாள்ப் பார்த்து நாற்பது பேர் சேர்ந்து சுத்தி நிக்க வெட்டி இரத்தம் மூளை மார்பு,தொடை,வயிறு குடல் என்று பங்கு நல்ல விலை அதிலும் நல்ல வியாபாரம்.. மயிலற்றை ஆடு நல்ல விலையாம…
-
- 24 replies
- 2.9k views
-
-
என்றும் நீ எனக்கே...... வீசும் காற்று ஓயும் நேரம் கங்கை நதிகள் காயும் நேரம் நம் காதலை நானும் மறந்து போவேன் பேசும் பேதை ஊமை ஆனால் வீசும் பார்வை ஓய்ந்து போனால் உயிரே நானும் என்ன செய்வேன் கன்னி நீயும் என்னை வெறுந்தால் காரணம் அதை சொல்ல மறுத்தால் பெண்னே நானும் என்ன செய்வேன் விழிகள் தீண்டி காதல் கொண்டேன் வழிகள் மாறி எங்கோ சென்றேன் விதிகள் இது என விட மாட்டேன் கண்கள் கலங்கி கணவுகள் தொலைந்தால் காதல் ரகங்கள் நெஞ்சை எரித்தால் வாழ்க்கை இதுவேன வாட மாட்டேன் வாடும் மலர்கள் பூத்தவை தான் சொட்டும் மழைதுளி மண்ணிற்கே தான் என்னவளே நீ என்றும் எனக்கே தான் வானத்தில் பல நட்சத்திரம் உலா இருதும் ஒரே ஒரு வெண்ணிலா ஏங்…
-
- 24 replies
- 4.4k views
-
-
வந்தது கடிதம் முத்தான எழுத்துக்கள் கொண்டு முத்தங்கள் பல இட்டு சுருக்கமாக நீ எழுதிய மடல் சுணக்கமாக கிடைத்தது இன்று விரித்து வாசித்த வேளை சிரித்தது என் உதடு சின்ன சின்ன சொல்லெடுத்து செதுக்கிய அழகிய காதலை உன் கடிதத்தில் கண்டதும் கண்கள் சந்தோசமாக கண்ணீரை உதிர்த்து நன்றி சொன்னேன் மனசுக்குள் நான் உனக்கு எத்தனை தடவைகள் அன்பான உன் மடலை வாசித்தேனோ நானறியேன்... என் மென்மையான நெஞ்சத்தில் அவ்வரிகள் ஆழமாக பதிந்தன "அன்பே என் நிலா உன் காதல் விண்ணப்பத்தை இன்று நான் ஏற்றுக்கொண்ட்டென் உன்னையே என் இதயவீட்டில் குடியேற்றிவிட்டேன் ஆதலால் ஓடி வா என்னிடம் நீ.. முத்தங்கள் பல தந்து முடிக்கின்றேன் இம்மடலை. என்றும் உன்னவன் ...........…
-
- 24 replies
- 4.4k views
-
-
அந்தி சாயும் அந்த வேளை.. அருவி கீதம் இசைக்க அணில்கள் குத்தாட்டம் போட அண்டங் காக்கைகள் ஆர்ப்பரிக்க அழகிய தோப்பதில் அன்புடன் நான்..! ஆதவனின் மறைவோடு ஆதாம் ஏவாள் நினைவோடு - நிலவை ஆரத்தழுவும் ஆதங்கத்துடன் ஆகி நின்றது செக்கச் சிவந்து வானம்..! இலைகளின் நடுவே இளகிய இதழ் விரித்து இனிமையாய் தேன் சொரிந்து இளமையின் இறுதி நேர உச்சம் கண்டு.. இன்புற்றுக் கொண்டிருந்தன பூக்கள்..! ஈக்களின் கூட்டம் ஈரம் கண்டு மொய்க்க ஈகமே கொள்கை என்று ஈடுகொடுத்து நின்றது காளான்..! உற்றுப் பார்க்கிறேன்... உறவுகள் யாரும் இல்லை உதவிகள் எதுவுமில்லை.. உணவின்றி ஒட்டிய வயிறு உயிரின் இறுதி முனகல்.. உணர்வுகள் மட்டும் எஞ்சிய நிலையில்.... உயிர்ப்புக…
-
- 24 replies
- 2.6k views
-
-
காதல் கிங்கை மீண்டும் ஒருவர் கவிதை ஒன்றை எழுத உசுப்பேத்தி உள்ளார். நானும் எனது சரக்கை இங்கு அவிழ்த்து விட்டுள்ளேன். சொன்னாலும் சொல்லாட்டிலும் இவள் தாண்டா இப்ப மொடேர்ன் காதலி!!! எல்லாமே நீ தானடி!! கவனக் குறைவாக நான் எனது வாழ்க்கை காரை ஓட்டி அக் சிடண்ட் பட்ட போது உயிர்ப் பிச்சைதந்த Air Bag.. கயவர்கள் எனைப்பிடித்து அதளபாதாளத்தில் தள்ளிவிடும் அகால நேரங்களில் என் சுவாசத்திற்கு உதவும் ஒட்சிசன் சிலிண்டர்.. எனக்குள் இருக்கும் வியாதிகளைக் கண்டுபிடித்து சிகிச்சை தருகின்ற லேசர் கதிர்.. நான் சோர்வடையும் நிலையில் instant ஆக அன்பைப் பொழிகின்ற ATM மிசீன்.. என் உடலை செழிப்புடன் வைத்திருக்க ஊக்குவிக்கும் Fi…
-
- 24 replies
- 3.6k views
-
-
யாழ் இணையம் - 8ஆவது அகவை - வாழ்த்துக்கவிதை யாழ் இணையத்தின் எட்டாவது அகவையை முன்னிட்டு யாழ் இணையம் பற்றிய உங்கள் கவிதைகளை, வாழ்த்துக்கவிதைகளை இப்பகுதியில் இணையுங்கள்.
-
- 24 replies
- 4.1k views
-
-
தீண்டத் தீண்டத் துடிப்பவளே நோண்ட நோண்ட நெருங்குபவளே தொடுகை எனும் மந்திரத்தால் தூரம் எனும் இலக்கை தகர்ப்பவளே..! அழகு முகம் காட்டி உடல்தனை வருடத் தருபவளே சுகிப்பின் களிப்பில் சூடாகிச் சிணுங்குபவளே..! அணைப்புத் தப்பினால் அலங்கோலம் ஆகி நிற்பவளே..! தொடாமல் நானிருக்க விரதம் கொள்ளத் தூண்டுபவளே கொண்ட கொள்கை நீளாமல்.. சிணுங்கி அழைத்து சில்மிசத்தில் சிக்க வைப்பவளே..! மணிகளை வினாடிகளாக்கி இனிய பொழுதை நொடியில் விழுங்குபவளே.. நீ இன்றிய தருணங்கள் நினைச்சும் பார்க்க முடியல்லையடி..! எட்ட நின்றாலும் கிட்ட வந்து சட்டைப் பையில் அடங்கி விடும் அழகினவளே நீ ..சட்டென்று தொலைந்து விட்டால் பதைபதைக்குமே மனசு..! பெற்ற இடத்தில் சொல்லாத ரகசியம் உன்னிடத்தில் சொல்லி வை…
-
- 24 replies
- 1.5k views
-
-
திருக்கேதீஸ்வரத்து எலும்புகளுடன் ஓர் இதயம்...! எஸ். ஹமீத். **மன்னார் குடாவை மரணக் குழியாய் மாற்றிய மா பாதகர் யார்...? **மாந்தை வயல்களில் மனிதர்களை விதைத்த மனசாட்சியற்றோர் யார்..? **சிவ தலத்தை சவ தளமாய் ஆக்கிய சண்டாளர் யார்..? **அது ஒரு காலம்... **தோண்டத் தோண்ட மாணிக்கங்களும் இரத்தினங்களும் மரகதங்களும் வைரங்களுமாய். **இப்போதெல்லாம்... பல்லாங்குழியாடப் பள்ளம் தோண்டினாலும் பல்லிளித்தபடித் தெரிகின்றன மனிதக் கூடுகள்...! **உச்சக்கட்டத்தில் கண்டுபிடிப்புகள் உலகெங்கும் நிகழ்கின்றன... **மருத்துவத்தில்-தொழில் நுட்பத்தில் விண்வெளியில்-விவசாயத்தில் தொடர்பாடலில்-இடர் முகாமையில் பிரயாணங்களில்-ப…
-
- 24 replies
- 1.3k views
-
-
கொஞ்சி விளையாட..!!! புலர்ந்தது பொழுது மலர்ந்தது என் வதனம் எழுந்தேன் படுக்கைவிட்டு தொழுதேன் உன்கால்களை ஏன் என்று நீ கேட்கிறாயா? எப்போதேனும் உன் கால்களை வார நான் குனியும் போது உனக்கு ஐயம் வராதல்லவா? சரியன்பே கொஞ்சம் சிரி உன்னிதழ்விரித்து... குளிர்த்து நீராடிவிட்டு குளிர்போக சுடுநீரில் அன்பைக் கலந்து அணங்கு நான் தேநீர் தயாரிக்க போகணும் அன்பே... சிரி ஒருமுறை சிரி குவி உன்னிதழைக் குவி கவி நீயானாலும் பல கவி நான் எழுதுவேன் உன்னிதழ் மேல்..! மங்கை நான் அருகிருக்க அங்கை அள்ளத் துடிக்கையில் அன்பே... கொங்கைகள் ஏங்குமடா! சங்குக் கழுத்தும் உன்னிதழ் முத்தத்திற்காக காத்திருக்குதடா! பொங்குகின்ற இன்பம் கோடி மங…
-
- 24 replies
- 4.2k views
-
-
பாலைவனத்தில் முளைத்த கள்ளியாய் என் மனதில் முளைத்த கள்ளி நீ . பருவத்தின் வாசலில் எனக்கு நீ ராணி தான் . உன் உதடும் என் உதடும் பற்றியவேளை , உலகமே எமக்கில்லை . வளர் பிறை போல் எம்காதல் மலர பிடித்தது சனி உன்னப்பனுக்கு . தன்னையும் உன்னையும் பிரிக்கவந்த சுவர் நான் என்றான் . இனிப்பான பேச்சினால் தந்திரமாய் உனை மாற்றி , மாணவர் விசாவில் பறக்கவைத்தான் . உன் தொடுகைச் சூடும் , உன் முத்தத்தின் இனிப்பும் , இனியவையாகவே என்மனதில் இருக்கும் . உன் பிரிவு வாட்டினாலும் உன் நினைவுடன் நான் இருப்பேன் கள்ளி ....................
-
- 24 replies
- 2.5k views
-
-
[size=5]மண்டியிடாத வீரம் !![/size] [size=1] [size=4]நேற்று மாவீரர் நாள் [/size][/size][size=1] [size=4]உலகெங்கும் நாம் நினைவில் கொண்டோம் [/size][/size][size=1] [size=4]மாவீரர்கள் தியாகத்தை சுதந்திரமாக [/size][/size] [size=1] [size=4]நீங்கள் இன்னும் முடியாத தாகத்திற்குள் [/size][/size] [size=1] [size=4]தமிழீழமெல்லாம் அரக்கர்கள் இன்று[/size][/size][size=1] [size=4]ஒரு பெண் மானபங்கப்பட்டால் துடித்திடுவார்கள் [/size][/size][size=1] [size=4]எம் கவிஞர்கள் [/size][/size] [size=1] [size=4]நீங்கள் இன்னும் முடியாத தாகத்திற்குள் [/size][/size] [size=1] [size=4]அப்பெண்ணே முன்னாள் போராளி என்றால் [/size][/size][size=1] [size=4]கேட்டிடுவார்கள் கணக்குகளை …
-
- 24 replies
- 1.9k views
-
-
இன்னொரு பக்கம் ஜெயபாஸ்கரன் தெளிவாகவே தெரிகிறது நிகழ்வுகளின் இன்னொரு பக்கம் கண்களை கவரும் வண்ண வண்ண கடவுள் படங்களின் மீது, அச்சு இயந்திரங்களின் ஓசையும் 'முருகனுக்கு மெஜந்தா போதாது' என்றொரு குரலும் கேட்கிறது எனக்கு. திரையரங்குகளில் கிடந்து வெளியேறும் போது சொல்கிறார்கள் 'அப்பாசாமி நடிப்பு அற்புதம்' உள்ளுக்குள் உறுமுகிறேன் நான். 'அடபாவிகளே' எடுத்தத்தில் தேறியதை காட்டுகிறார்கள் நமக்கு. எடுத்து எடுத்து வெட்டி வீசப்பட்டதைக் குறித்து ஏதாவது தெரியுமா உனக்கு? இங்கிலாந்து ராணி இந்தியா வந்தபோது எல்லோரும் பார்த்தார்கள் அவரை. நான் பார்த்தது அவருக்காகவே அங்கிருந்தே கொண்டு வரப்பட்ட காரை. என்னவோ போங…
-
- 24 replies
- 4.1k views
-
-
வாயும் வயிறும்.. ஜம்மு பே(பி) யின் வாய்..! விடிந்த அந்த பொழுதினில் வீசிய இதமான வாசனையில் கருவாட்டின் மணம் முகர்ந்து விரிந்துகொண்டது வாய்! விரிந்த அந்தவாய் கருவாட்டு வாசம்வந்த குசினிப்பக்கம் பார்த்து ஏவறை விட்டுக்கொண்டது! பின்னர் வாய் திறக்கப் பட்டபோது வயிறு புழுங்கி எரிந்தது.. வாயை திறந்ததும்.. வாயிலிருந்த பற்கள் ஒவ்வொன்றும் பலவிதமான நாற்றத்தை உருவாக்க.. இந்த நாற்றம் வயிறுவரை சென்றுவிட்டது போலும்..! வயிறு அதனை விரும்பவில்லை..! நெடியின் கோரத்தில் தலைக்கு தலைசுற்ற அது குப்பறப்படுத்துக் கொண்டது! வாய் உடனடியாக மூடப்பட.. மீண்டும் கருவாட்டு வாசனை வர இப்போது வயிறு வாயை தவிர்த்து மூக்குடன்…
-
- 24 replies
- 3.9k views
-
-
கல்வாரி வலிசுமந்த எம் மீட்பரே...! மறுமுறையும் எம் மண்மீது வருவீரோ...? எம் தமிழ் கருவறைகள் உமக்காய்க் காத்திருக்கின்றன...! யாருமில்லையாம் இனிமேல்...எமக்காய்!! உள்ளம் பதைக்கிறது.... எதிர்காலம் என்றொன்று, இல்லாத காலத்தை நினைத்து!!! ஏக்கங்கள் மட்டும் எம்மை வாட்டுகின்றதே! ஏமாற்றங்கள் மட்டும் எம்மைத் துரத்துகின்றதே!! எங்கு ஒளித்துவைத்தீர்... எம் விடுதலையை? உங்கள் புதிர்கள் இன்னும் புரியாத... பதர்களாய்த்தான் ... இன்னும் நாங்கள்!! மீட்பர் வருவார்... உயிர்த்தெழுவார்... இதெல்லாம் வெறும் நம்பிக்கையாய்ப் போய்விடலாம்... பரவாயில்லை! ஆனால் உம் உன்னத தியாகங்கள் தோற்றதாய்... வரலாறு எழுதத் துடிக்கின்ற பாவிகளுக்கும் மேலாய் நாம்! 'இயலாமை' என்றொன்று…
-
- 24 replies
- 3.4k views
-
-
புலிகளைச் சீண்டிப்பார்க்கும் சில ”கழுதைகளுக்கு” ..... ஒருநாள் என் நாட்டு அரசியல் சாரா அறிவு ஜீவிகள் எளிமையான எம் மக்களால் குறுக்கு விசாரணை செய்யப்படுவர். தன்னைச் சிறுகச் சிறுக இழந்து கொண்டிருந்த தீச்சுடரென மெதுவாக அவர்கள் தேசம் செத்துக் கொண்டிருந்தபோது அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று விசாரிக்கப்படுவார்கள். ஒருவரும் அவர்களிடம் அவர்கள் உடைகளைப் பற்றியோ அவர்களின் மதிய உணவையடுத்த நீண்ட உறக்கத்தைப் பற்றியோ கேட்கப் போவதில்லை. அவர்களின் ‘உலகலாவிய’ கருத்துக் கொண்ட மலட்டுப் புரட்சியைப் பற்றிக்கூட அறிய எவரும் ஆவலாக இல்லை. அவர்கள் தங்கள் நீதியை எப்படிப் பெற்றார்கள் என்று ஒருவருமே கவலைப்படவில்லை. கிரேக்கப் புராணங்களைப் பற்றியோ ஒரு சுய மாறுதலை அவர்கள் உணர்…
-
- 24 replies
- 4k views
-
-
எல்லாருக்கும் வணக்கம் கலியாணச் சடங்கு எண்டு சொல்லிப் போட்டு எங்கடை புரோகிதர்மார் பண்ணுற அட்டகாசம் இருக்குதே, சீயெண்டு போயிடும். ரெண்டு பேரையும் இருத்திவைச்சுப் போட்டு ஒருத்தருக்கும் விளங்காத (அவையளுக்கே விளங்குமோ தெரியாது) மந்திரங்களைச் சொல்லுறதென்ன, அதை இங்கை போடுங்கோ இதை அங்;கை போடுங்கோ அப்பிடிப் பாருங்கோ இப்பிடிப் பாருங்கோ, மூண்டு தரம் சுத்துங்கோ ஆறுதரம் இருந்தெழும்புங்கோ .. . . . அப்பப்பா .. . . கலியாணம் பேசேக்குள்ளையும் அந்தப் பொருத்தம் , இந்தப் பொருத்தம் எண்டு பாக்கிற ஆக்கள் மனப் பொருத்தம் எண்ட ஒண்டையும் பாத்தால் நல்லா இருக்குமெண்டு நினைக்கிறன். நான் என்ன சொல்ல வாறனெண்டால் ஆம்பிளையும் பொம்பிளையும் நான் கீழை சொல்லிற மாதிரி ஒருத்தருக்கொருத்தர் தங்கடை விர…
-
- 24 replies
- 4.5k views
-
-
வட்ட..... வட்ட .... வெண்ணிலாவே... தொட்டு தொட்டு பேச வாவேன்..! நெட்டநெடு வானதிலே தன்னம் தனியாக நீ என்னை... என்னை சுற்றி வாறாய் இதை நிறுத்தாயா...? உன்னை...... உன்னை.... நித்தமுமே நான்நினைத்து வருந்துகிறேன்.. நிம்மதியாய்... நித்தியமாய் இரண்டு வார்த்தை கொஞ்சி... கொஞ்சி ....பேசிடலாம் கீழ் இறங்கி வராயோ..? நீல நீள வானத்திலே நீ வரும் காட்சி கண் கொள்ளாக் காட்சி..... அதைக் காணும் போது உனைக் கட்டியணைச்சு முத்தமிட ஆசை ஆனால் ....முடியவில்லை..என்னால்.. கதிரவன்... கண்ணுறங்கும்நேரத்தில்... நீ என் வீட்டுக்கு விளக்கேற்ற வாறாயே.... எப்படித் தான் நன்றி சொல்வேன்.. நான் உனக்கு... மல்லிகை மொட்டவிழும் மாலை நேர…
-
- 24 replies
- 7.4k views
-
-
-
எங்கள் அரசியல்வாதிகளின் முகங்களில், இறுக்கம் தெரிந்தது! சிங்கக் குரலோன் செருமிய போது, கூட்டம் கொஞ்சம் கலங்கித் தான் போனது! சங்கம் வளர்த்த இனம் நமதினம் என்றீர்கள்! எங்கள் தோள்கள் கொஞ்சம் அசைந்ததும் உண்மை! செருக்களமாடியது எமதினம் என்றீர்கள்! பெருமையில் விரிந்தன எமது மார்புகள்! ஒரே ஒரு தடவை மட்டும் ஒற்றுமை காட்டுங்கள், உலகத்தின் கண்கள் உற்றுப் பார்க்கின்றன! ஓடோடி வரக் காத்திருக்கின்றன! உங்கள் வாக்குகள் தான் எங்கள் அஸ்திரங்கள், மீண்டுமொரு முறை நம்பினோம்! எத்தனை தலைமுறைகள் நம்பினோம், இன்னுமொரு முறை நம்புவதால், என்ன கேடா வந்துவிடப் போகின்றது? இந்த முறை வாக்குகளைக் கிள்ளித் தரவில்லை! அள்ளியே தந்தோம்! வாக்குகள் எண்ணி முடிந்ததும், வார்த்தைகள் தடுமாறுகின்றன…
-
- 24 replies
- 1.5k views
-
-
முதியோர் இல்லத்து முதியவரின் முற்றிய வலிகள்...!!! தவமிருந்துதான் பெற்றோம் உன்னை, தடுமாறி வாழ்கை நடத்தியபோதும் தனித்தன்மையாய் வளர்த்தோம், உன் எச்சில் பட்ட என் கண்ணங்கள் இன்னும் குளிருதாடா..!மகனே... உன் மழலை புன்னகையை பிச்சை கேட்டு பல நாட்கள் உன்னிடம் மண்டியிட்டிருக்கிறேன் , என் செல்ல மகனே..., உன் பால் வாசத்தில் என் பாசம் உணர்ந்தேன், நீ கடித்து காயபடுத்திய என் கன்னத்து தழும்பை இன்னமும் முத்தமிடுகிறாள் உன் அம்மா...! என் கிழிந்த வேட்டியை மறைத்து,மடித்து கட்டி வேட்டி வாங்கும் பணத்தில் வாங்கியதுதான் உன் வெள்ளி பாலாடை...! என் அன்பு மகனே..! முதல் முறை நீ பள்ளி செல்லும்போது …
-
- 23 replies
- 2.1k views
-
-
யோசி....நேசி....![/ அந்திசாயும் இதமான நேரம் மந்திகள் தொங்கும் மரநிழலின்கீழ் உன் தோளில் என் தலைசாய்த்து பன்னாட்டு கதை பல பேசி.... இனிமையான அப்பொழுதில் இணைந்த நம் இதழ்களோடு நாசிகள் உரசியவேளையில் நங்கையிவள் சட்டென கூசி... இன்னும் எத்தனையோ சில்மிசங்கள் இவையனைத்தயும் ஒருநொடியில் மறந்ததுமேனோ மன்னவனே மனம் திறந்து நீ யோசி.... என் உடல் உருக உருக உன்னையே தினமும் சுற்றி சுற்றி கன்னக்குழிகள் தெரிய சிரித்து வந்த வெண்ணிலாவை ஒருகணம் யாசி... பட்டாம்பூச்சியென பறந்து திரிந்தவள் விட்டில் பூச்சியாகி சாகத்துணிந்து தன்னந் தனிமையில் அல்லாடும் கன்னியவளை வா வந்து நேசி...
-
- 23 replies
- 3.7k views
-
-
பொய்மையும் கயமையும் கூடிக் கொக்கரிக்க , ஒட்டிய வயிறும் பஞ்சடைத்த கண்களும், உங்களை நோக்கியே ............. நீங்கள் சொல்கின்ற ஒரு இசங்களும் என்செவியில் எட்டவேயில்லை . நீங்கள் உல்லாசமாய் உங்கிருக்க , குடும்பமாய் உறுமினோம் . ஊழிக்காற்றில் உக்கியே போனோம் . எச்சங்களாய் நாங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக , இருப்பதற்கு வக்கற்றவர்களாக இரைப்பையை நிரப்ப கருப்பையை விற்கவே துணிந்தோம் . முன்பு நான் உறுமிய புலி . இன்று நான் சருகு புலி . உங்கள் உல்லாசத்தில் ஒருதுளி சருகுபுலிகளுக்கு வந்தால் , நாங்கள் கருப்பையையும் விக்கமாட்டோம் ...... எங்களை நாங்கள் எரிக்கவும் மாட்டோம் ...........
-
- 23 replies
- 2.9k views
-
-
ஒரு தூறல் மழை போலே என் நெஞ்சில் விழுந்தாயே என்நெஞ்சின் ஓரத்தில் ஏதோ ஞாபகம் பெண்ணே நீ போகாதே ஏக்கத்தில் தள்ளாதே உன்னால் என் நிமிடங்கள் வருடம் ஆனதே நெஞ்சுக்குழியினிலே பல்லாங்குழி ஆடுகிறாய் இதய அறைகளிலே ஏன் ஒளிந்து ஓடுகிறாய் சிலநேரத்தில் தொலைவில் போகின்றாய் சிலநேரத்தில் அருகில் வருகின்றாய் ஓரக்கண்ணாலே கோபங்கள் காட்டாதே உன் மௌனப்புன்னகையில் மௌனித்து கொள்ளாதே உன்பாத தடங்கள் இங்கே தேடுகிறேன் என்பாதைகள் மறந்து எங்கோ ஓடுகிறேன் மேகம் பொழியாமல் மழை வந்து வீழ்ந்திடுமோ உன்னைக்காணாமல் என் ஜீவன் வாழ்ந்திடுமோ http://www.youtube.com/watch?v=Lbx5zdgjgwA
-
- 23 replies
- 1.4k views
-
-
மழைத்துளியின் சோகங்கள் மண்ணுக்குத்தெரிவதில்லை மழலையின் இனிய மொழி மற்றவர்க்குப் புரிவதில்லை மலர்களின் வாசம் தன்னை மலர்க்கூந்தல் அறிவதில்லை மங்கையின் மன ஆழத்தை மன்மதனும் அறிந்ததில்லை இதயத்தின் உணர்வுகளை இதயங்கள் உணர்வதில்லை தந்தையின் சுமைகள் இளமையில் புரிவதில்லை தாயின் அன்புதன்னை தானிருக்கும்போது புரிவதில்லை கண்ணீரின் ஈர வலியது கண்களுக்குப்புரிவதில்லை வானவில்லின் வர்ண ஜாலம் சந்திரனுக்குத்தெரிவதில்லை உடலின் முடிவுதன்னை உணர்வுக்குப்புரிவதில்லை காலனின் வருகைதன்னை காலத்துக்கும் தெரிவவதில்லை காதலின் வலிகள் காமுகர்க்குப்புரிவதில்லை நட்பின் இலக்கனம் நயவஞ்சகர்க்குப்புரிவதிலை இலக்கியனின் உணர்வுகள் இங்கு உங்களுக்குப்பு…
-
- 23 replies
- 2.9k views
-
-
-
- 23 replies
- 3.9k views
-