Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நட்புக்கு எடுத்துகாட்டாய் -என் நண்பன் ....!!! காதல் ஒருவர் மீது வரும் ... ஒருவகை ஈர்ப்பு ... நட்பு எல்லோர் மீதும் ... பூக்கும் அழகான பூ ....!!! + நட்பு சிதறல்கள் கே இனியவன்

  2. Started by yakavi,

    நட்பு. . இருளின் முன் ஒளியாய் உறவின் முன் பாலமாய் து ன்பத்தின் முன் துணையாய் நோயின் முன் மருந்தாய் சோகத்தின் முன் சுகமாய் தாகத்தின்முன் நீராய் மரணம் வரை துணையாய் மரணித்த பின்னும் நினைவாய் வாழ்வதே நட்பாகும். .......... .

    • 6 replies
    • 1.8k views
  3. எல்லாருக்கும் வணக்கம், நட்பு என்று சகீரா அவர்கள் ஒரு கவிதையை எழுதி யாழில் இணைத்து அதுபல நீண்ட விவாதங்களை கண்டது. எமது தரப்பு நியாயத்தை வலுப்படுத்த நானும் ஒரு கவிதையை எழுதி இங்கு இறக்குகின்றேன். தமிழ்கூறும் நல்லுலகம் எனது கவிதையை - கருத்தை வரவேற்கும் என்று நினைக்கின்றேன். எழுத்துப்பிழைகள் ஏதாவது இருந்தால் திருத்தி படிக்கவும். நன்றி! உன்னையெனக்கு பிடிச்சிருக்கு! உடலாலும் மட்டுமல்ல உயிராலும் இணைவதற்கு கரங்கோப்பாய் என்தோழி! பூவே நான் உனக்கு பூச்சூடி மகிழ்வதற்கு தகுதியென்ன கேட்கின்றாய்? தயங்காது சொல்லு! சினேகிதனாய் இருப்பவன் காதலனாய் வருவதில் தடையென்ன கண்டாய்? தயவுசெய்து சொல்லு! அன்புடன் பழகியெந்தன் உள்ளத்தை கொள்ளையிட்ட நண்ப…

  4. நட்புக்கு இலக்கணம் நான் கண்டு கொண்டேன்.. பொல்லாதார்..யார் பொய்யரையார் யார்-இனம் கண்டு கொண்டேன்.. சிலர் மாசற்ற நட்பென்பார் காசென்றால் விற்றிடுவார் சிலர் காசுக்காய் நட்புறுவார் செல்வம் போக சென்றிடுவார் உள்ளத்தூய்மையில்லா மனதறிந்த ஊமையாய் இருக்கிறேன்.. பொய் பொய்யாய் உரைப்பார்..மற்றவரின் புத்திஎடை குறைப்பார்.. சிரிப்பாய் இருந்தாலும்.. சிந்திக்க வைத்துவிடுவார்.. நட்பாய் பழகு நம்பிப் பழகாதே.. அன்பாய் பழகு ஆதரவாய் நினைக்காதே.. தோள் கொடுக்கும் தோழமை தொலைந்த தேசத்தில்..முதுகில் வாள் ஏறும்வரை கைகட்டி நிற்காதே..

  5. நட்புக்கு இலக்கணம் நான் கண்டு கொண்டேன்... நங்கை அவளிடம்.. ஆணுக்கும் பெண்ணுக்கும்.. காதலும்.. காமமும்தான் பாலம் போடுமா.. இல்லை... நட்புப்பாலத்தில்.. நானும் அவளும்.. அவள் என் வாழ்வுக்கு ஒளி தந்த வெண்ணிலவு.. என் தாயைப்போல.. அவள்..என் துயருக்கு தோள் தந்த தோழி.. என் மனைவி போல.. அவள் என் சிரிப்புக்கு சேதி சொன்ன சினேகிதி ஆருயிரைப்போல.. அவள் என் துயிலுக்கு மடி தந்த நாயகி நான் மழலை போல... அவள் என் சோர்வுக்கு விடை தந்த தாதி என் தந்தை போல... அவள் கண்ணீரால்.. என்னைக் காயப்படுத்தியிருக்கிறாள்... என் கண்ணீரால் நான் அவளைக்குணப்படுத்தியிருக்கி

  6. இறைவா எனக்கு ஒரு வரம் தா ..? காதல் உணர்வை என்னில் இருந்து தயவு செய்து எடுத்துவிடு ....! அவனை உயிர் நண்பனாகவோ உயிர் காலம் வரை நினைக்க .......... விரும்புகிறேன் இடைக்கிடையே பாழாய்ப்போன மனம் காதலையும் எட்டிப்பார்க்கிறது ....! நட்பு ஒன்றில் விட்டுக்கொடுப்பு அதிகம்...... அவன் விட்டுக்கொடுத்துவிட்டான் -காதலை இறைவா ....... என் காதல் நரம்பை துண்டித்து விடு ...! & கவிப்புயல் இனியவன் நட்பும் காதலும் கவிதை

  7. நட்பெனப்படுவது யாதெனில்.... 3 ஆகஸ்டு 2014 இல் 11:53 AM தவறுகளைத் தைரியமாய்த் தவறென்று சுட்டிக் காட்டி அறிவைச் சுற்றிக் காட்டித் தட்டிக் கொடுக்கும், பெரிதாக ஒன்றுமே செய்யாமலே அரிதான விருது கொடுப்பது போலப் புகழும் , மூச்சு விட்டு முன்னுக்கு வர முன்னுதாரணம் காட்டிப் போட்டு பேச்சு மூச்சின்றி அடக்கமாக பின்னுக்கு நிற்கும், தெரிந்த நாலு தகவலை என் போலத் தெரியாத நாலு பேருக்கு தெளிவாகத் தெளித்துக் கொண்டிருக்கும்.. முன்னர் முதுகு சொரிஞ்சு விட்ட நன்றியாக பின்னர் முதுகுக்குப் பின்னால் சொறிந்துவிடும், தேவைக்கு மட்டுமே சாம்பிராணி போட்டு ஒரு சாதாரண பிராணியை அசாதாரண அப்பிராணியாக்கும், …

  8. நட்பு உலகின் தோற்றத்திலிருந்து .....படைத்தவனால் கிடைத்த அமிர்தம் ....!காவியங்கள் காப்பியங்கள் கதைகள் ....இலக்கியங்கள் புராணங்கள் மற்றும் ....மறை நூல்கள் ,சொல்லாத விடயத்தையா ....நான் சொல்லிவிடப்போகிறேன் ....?எல்லாம் அங்கிருந்தே எடுக்கிறோம் ....!!!புனித குர்ரானில் சொல்லாத நட்பா ....?புனித பைபிளில் சொல்லாத நட்பா ....?மறைநூல் திருக்குறளில் சொல்லாத நட்பா ....?இதுவரை எழுதிய கவிஞர்கள் சொல்லாததா...?நடித்து கலைத்த நாடகங்கள் சொல்லாததா...?சிந்தனையாளர் கொட்டி தீர்த்த சிந்தனையை ....விடவா நான் நட்பை விளக்கிடபோகிறேன்...?முடிந்தவரை நண்பா நட்பு என்றால் என்ன ....?பொறுக்கி எடுத்ததில் பெருக்கி சொல்கிறேன் ...!!!மனைவியிடம் எதையும் மறைக்காமல் .....பகிர்ந்தால் குடும்பம் பிரியும் என்று ....புரிந்…

  9. நட்போடு வாழ்தல் வ.ஐ.ச.ஜெயபாலன் இன்னும் தொடுவானில் கையசைக்கும் மணக்கோலச் சூரியன். கீழே படுக்கையில் பொறுமை இழந்த பூமிப் பெண் வெண்முல்லைப்பூ தூவிய நீல மெத்தைவிரிப்பை உதைக்கிறாள். எப்படியும் வந்துவிடுகிறது விடைபெறும் நேரம். என் இரு கண்களிவை என்ற துடுப்புகளை கரையில் வீசிவிட்டுச் செல்கின்றான் மாலுமியும். வழித்துணையை போற்றினும் புணரினும் எப்படியும் ஒருநாள் வந்துவிடுகிறது விடைபெறும் நேரம். தோழி உடன் இருக்கிற இன்பங்களும் பிரிகிற துன்பங்களும் அடுக்கிய நினைவு நிகழ்வு நூலகம் அல்லவா நம் வாழ்வு. பறவைகளாக உதிர்ந்து உதிர்ந்து ஆர்ப்பரித்த வானம் இனி வீதியோரப் பசும் மரங்களுள் அடைந்துவிடும். என் தலைக்குமேல் இன்று நிலா முளைக்குமா …

    • 6 replies
    • 1.9k views
  10. அன்பின் நண்பனே... பட்டாம்பூச்சி பெண் என்னை விழிகளுக்குள் சிறைபடுத்தி கொண்டாய் ... எப்போது விடுவிக்கப் போகிறாய்... உன் நெஞ்சை மஞ்சமாக்கி துயில் கொள்ள என் நெஞ்சம் கெஞ்சுகின்றதே... எப்போது என்னருகில் வரப்போகிறாய்... விழி மூடி தூங்க முயற்சித்தால் இமைகளுக்குள் வந்து இம்சிக்கிறாய்... எப்போது தூக்கம் தரப்போகிறாய்... மயக்கும் சிரிப்பிலும் வசீகர குரலிலும் உயிரை வசியம் செய்தவனே... எப்போது என்னுயிரை திருப்பி தரப்போகிறாய்... சிரிக்க வைத்து ரசிக்க வைத்த என் நண்பனே எப்போது என்னுள் நுழைந்தாய் காதலனாக... நண்பன் காதலனான கதை இருக்கட்டும் அன்புக்காதலா எப்போது மீண்டும் என் நண்பனாகப் போகிறாய்... அறுசுவை.- அனுதீபா

  11. உன்னுடன் நான்படித்த காலம் கண்ணில் தெரியுதடா என்னுயிர் நண்பாஉன் நட்பின் தீபம் எரியுதடா உன் மனம் என்னவென்று யாருக்குத்தான் புரியுமடா உன்மனம் அறிந்த உண்மை எனக்கு மட்டும் தெரியுமடா அன்னையுடன் வாழ்ந்த நாளில் ஆத்ம நண்பராயிருந்தோம் இன்னல் மறந்த தோழர்களாய் கல்விக்கூடம் சென்று வந்தோம் இன்சுவை வேண்டுமென்று ஐஸ்கிரீம்கள் பல சுவைத்தோம் முன்கூட்டியே முள்ளி வாய்க்கால் அழிவினை அறியாதிருந்தோம் தோழமைக்கு இலக்கணமாய் துடிப்புடனே நின்றவனே ஆளுமையின் அகல்விளக்காய் அன்னைக்காக சென்றவனே வேளத்தின் பலத்துடனே பகைக்கு முகம் கொடுத்தவனே வாழவேண்டும் நாடென்று வீரத்துடன் மொழிந்தவனே என்னினிய நண்பா இன்று நீ பிறந்த நன்னாள் உன்னை வாழ்த்திக் கவியெழுத எனக்கு வாய்த்த பொன்னாள் …

    • 8 replies
    • 725 views
  12. வாழும்வரை நேசிப்போம் காதலை மூச்சாய் சுவாசிப்போம் கனவிலே கூட காதலை யோசிப்போம் காதலை கவிதையாய் வாசிப்போம் காதல் மாறாதது என்பது உண்மை. ஆள் மாறினாலும் இல்லாள் மாறினாலும் காதல்மாறுவதில்லை கண்களில் காதல் வைத்து இதயத்தில் காதலியை தைத்து கனவில் காதல் கீதம் இசைத்து காலமெல்லாம் காதலோடு வாழத்துடிக்கும் காதலர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்...

    • 3 replies
    • 1.3k views
  13. நண்பர்களே நான்தேடும் பாடல் உங்களிடம் இருக்கிறதா அல்லது எங்கு தரவறக்கம் செய்யலாம். இன்று என்னிடம் ஒரு நண்பர் பாடல்கள் சிலவற்றை போட்டு காட்டினார் அவையனைத்தும் தமிழில் பிரசித்தி பெற்ற சினிமா பாடல்களின் உல்டா மிகவும் நகைச்சுவையாக இருந்தன நாதம்.கொம்மில் தரவிறக்கம் செய்ததாக கூறினார் ஆனால் இப்பாடல்கள் தற்போது அங்கு காணமுடியவில்லை உங்களில்யாருக்காவது தெரியுமா சுறுளியின் குரலில் கேட்கவே மிக நகைச்சுவையாகவிருக்ம்.

  14. ஊரில் இருக்கும் நண்பா நலமா? நீயும் “வெளிநாட்டுக்கு “ வரப்போகிறாய் என்று சொன்னாய்...!!! காசு கொடுத்து சந்தோசங்களை விலைக்கு வாங்கும் நான் சந்தோசங்களை விற்று காசை விலைக்கு வாங்க ஆசைப்படும் நீ இதுதாண்டா உனக்கும் எனக்கும் இப்போது வித்தியாசம்.. நான் நேரத்துக்கு நித்திரை கொண்டு நான்கு வருடங்கள் ... நிம்மதியாய் நித்திரை கொண்டு ஆறு வருடங்கள்...!!! இதையே வைரமுத்து பாட்டில் சொன்னால் மண்டையை மண்டையை ஆட்டிக் கேள் சங்கர் படமாய் எடுத்தால் விசிலடித்து கைதட்டு உன் ”நண்பன்” நான் சொன்னால் மட்டும் கொடுப்புக்குள் சிரித்து நக்கல் அடி..!!! கனவுகளை விற்று நித்திரைகளை விலைக்கு வாங்காதே விரல்களை அடைவு வைத்து தூரிகைகளை வட்டிக்கு வாங்காதே....!!!! …

  15. Started by Sembagan,

    நண்பா றெக்ஸ் இல்லம் தேடி நான் சென்றபோது இன்முகம்காட்டி எமை வரவேற்றான் எப்போ ஒருநாள் பழகிய பழக்கம் இன்றுவரை அதனை நினைவில் கொண்டான். உள்ளம் தளர்ந்து உவகையில் மிதக்க துள்ளிக் குதித்து தன் மகிழ்சியைச் சொன்னான் அன்பாய் என்னிடம் அருகே வந்து அணைத்து முத்தம் தந்து சென்றவன். தங்கிய நாட்கள் தன் கடமையை உணர்த்தி நட்பின் தன்மையை எனக்குக் காட்டி புறப்பட்ட நாளில் என்முகம் பார்த்து பிரிவுத்துயரைத் தன் கண்ணால் சொன்னான். ஏக்கப் பார்வை கண்ணில் தெரிந்தது ஏன்தான் இவன் இப்படிப் பார்க்கிறான் என்று எண்ண்ணியே நானும் அப்போ என்னைப் பிரியும் ஏக்கத்தினாலோ இப்படிப் பார்க்கிறான் என்றெண்ணி வந்தேன் வந்த சில நாட்களில் செய்தி வந்தது அதிர்ச்சியுடன் நானும் அவன் செயல்களை நினைத்தேன். பா…

    • 3 replies
    • 825 views
  16. நண்பா ஒரு நிமிடம்.... சட்டென திரும்பாதே வெட்டி விட வார்த்தைகளை தேடாதே இன்று மட்டும் தோல்வி உனக்கே........ குழப்பத்தில் ஆரம்பித்த நட்பினை.. நேசமாய் நீ மாற்றினாய்.. இல்லை மறைத்தாய்.... இந்த உறவிற்கு என்ன பெயர் வைத்தாயோ அறிந்ததில்லை நான், என்ன நினைத்திருந்தாயோ அதுவும் உணர்ந்ததில்லை... இப்போது உன் வார்த்தைகள் தெளிவுமில்லை..புரியவுமில்லை ஆனால் எங்கோ உனக்கு வலிப்பது புரிகின்றது! எனக்கும் தான்! நாடியில் கை வைத்து அமைதியாய் வாசித்த நீ நிமிர்ந்து உட்காருவாயே இப்போது... ஞாபகங்கள் மீட்கும் பழக்கம் உனக்கு இருக்கின்றதா? இல்லாவிடினும் எனக்காக ஒரு முறை... முயன்று பார் நண்பா! அர்த்தமறியாதது போல் உன…

  17. நண்பியின் டயரியில் இருந்து ...... நான் காதலித்த போது ..அம்மா படிப்பில் மட்டும் கவனம் செலுத்து என்றார்.(அப்போதும் காதல் தொடர்ந்தது ) படித்து முடித்து பணிக்கு சேர்ந்த போது சிக்கனமாய் செலவு செய் என்றார்.சில காலம் செல்ல திருமணத்துக்கு தயாராகு பையனை பார்க்கிறோம் என்றனர். அப்போதும் காதல் தொடர்ந்தது . முடியாது நான் காதலித்தவனையே செய்து கொள்வேன் என்றேன். எமது தகுதிக்கு அவன் சரியில்லை என்றனர். பதிவு திருமணம் செய்யப்போகிறேன் என்றேன்.எங்கள்வீட்டுக்கு வராதே என்றனர். அப்போதும் அவன் என்னைக் காதலித்தான். திருமணம் முடிந்தது யாரும் வரவில்லை ...காலம் ஓடியது ...முதல்குழந்தைக்கு தாயானேன். அம்மா ரகசியமாய் வந்து பார்த்தாள். வங்கிக்கு போய் வரும் வழியில் கண்ட அப்பா நல்லா இ…

  18. Started by வெண்ணிலா,

    நதி என்றோ? ஆரம்பித்து விட்டேன். என் பயணத்தை.. பல தேசங்களின் எல்லைகள் தாண்டி எங்கோ? சென்று கொண்டிருக்கின்றேன். எப்போது போவாய்? என்று ஏசுவோரை கடந்து.. எப்போது வருவாய்? என்று ஏங்குவோரின் வாசலில் இப்போது நான். என் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு கூட்டம் தெரிகின்றது. அதோ! அதில் ஒருத்தி உறவையெல்லாம் பிரிந்து வந்து உள்ளத்தில் கனவுகள் சுமந்தபடி வெற்றுக் குடத்தோடு வெயில் கொல்லும் காலப் பெரு வெளியில் கால் கடுக்க காத்து நிற்கின்றாள். என் வருகைக்காக.. இதோ! அவளின் காலடித் திடலில் இப்போது நான்.. நன்று உண்டு உடுத்து உறங்கி நாளாச்சு என்பது நன்றாய் தெரிகின்றது. என்னால் என்ன செய…

  19. முன்புபோல யாழிணையத்தில் கவிதை மற்றும் பதிவுகளை பிரசுரிப்பதே கருத்துக்கள் விவாதங்களில் இருந்து கற்றுக்கொள்ளவே, அந்த நாட்கள் சுவடுகளுமின்றி மலையேறிவிட்டது சோகம் ? எல்லோரும் மெல்ல மெல்ல விடுபட்டபடிக்கு. இது இன்னும் பிரசுரிக்கப் படாத கவிதை. . என்னுள் காதலாய் நிறைகிறது. . அக்கினி நட்சத்திர வெய்யிலை வீழ்த்திய தென்றல் மழை என்னை அன்புடன் தொட்டு உசுப்பிவிட்டது. சிலநாட்கள் சன்னலின் வெளியே அங்குமிங்குமாக ஊஞ்சல் ஆடி பார்த்த வேப்பமரம் ”டேய் கபோதி நான் பூப்படைந்துவிட்டேண்டா” என்றபடி சன்னல்வரை வந்து வெண் முத்துச் சாரமாடும் தன் பசிய கூந்தலை அசைத்துக் காட்டியது. எல்லாவற்றையும் மிஞ்சி இப்பகூட என்னை சுற்றிக் குயில்கள் பாடுகின்றன. . எனது குட்டித்தோழியும் பத்திரிகை…

    • 1 reply
    • 841 views
  20. வான்மகளின் துயரத்தில் கண்ணீராய் நீ துளி துளியாய் வழிந்து மழையாக நீ தூயவள் நீ துள்ளலுடன் குதித்து ஓடி நீரோடையில் தேங்காது நெகிழ்வாய் நடை பயின்று கள்ளங் கபடமில்லா உன் சிரிப்பில் கனவுகள் பல நெஞ்சில் சுமந்து காதலில் கரைகண்டு காவியங்கள் படைக்க எண்ணி தன்னலம் நீ கொண்டாயில்லை தார்மீக பொறுப்பை மறந்தாயில்லை கடந்து செல்லும் பாதை எங்கும் அன்பினால் நனைத்தாய் உலகை கருணை, நெஞ்சில் ஊற்றெடுக்க கதிர்களை வளர்த்தாய் தாயாய் ஆயிரம் இடர்கள் இடைமறித்தாலும் கவனத்தை மட்டும் சிதறடித்தாயில்லை பாறைகள் தடைக்கல்லாயின கற்கள் சேர்ந்து வலிகள் தந்தன காலபோக்கில் உன் சிரிப்பை மறந்தாய் கண்களில் சுமந்து வந்த உன் கனவை துறந்தாய் எத்தனை துன்பம் கொண்டாய் பெண்ணாக நீ பிறந…

  21. நத்தார் நாயகனே பரிசுத்த இளைஞனே.. குழந்தை ஜேசுவாய் அன்னை மேரியின் தவப்புதல்வனாய்... இறை தூது கொண்டு.. நீ வந்தாய் தூசிகள் படித்த மனித மனங்களை தூய்மைப்படுத்த..! அகிலத்தில் - முதலாய் அகிம்சை எனும் ஆயுதம் தூக்கிய இளைஞனே அப்பாவியாய் நீ உலகை வலம் வந்தாய். மனித மனங்களை மாண்பால் பண்படுத்த நீ முயன்றாய்..! ஆனால்... அடப்பாவிகள் உன் தலையில் முட்கிரீடம் இட்டு தோளில் சிலுவை வைத்தார் இறுதியில் அதில் உனை அறைந்தே வீரம் கொண்டார்..! அதர்மத்தின் வீரம் அகோரம் தர்மத்தின் வீரம் சாந்தம்..! இளைஞர் எம் முன்னோடியே விடுதலைப் போராளியே.. நாமும் வருவோம் உனது தடம்படித்தே..! தோழனே ஜேசுவே உன் பிறந்த நாளில் உனை அன்போடே நினைவுகூறுகிறோம்..! வொட்காவுக்கோ.. வைனுக்கோ அல்ல கேக்குக்கோ புடிங்குக்கோ அல்ல சாண்…

  22. நந்தவன நாட்கள் தந்தையுடன் வாழ்ந்த அந்த நந்தவன நாட்களின் சிந்தையுடன் என் பாசமுள்ள தந்தைக்கும் அனைத்து தந்தையர்க்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள் அன்னையெனும் ஆலயத்தின் அழகான கோபுரமாய் தன்னையே உருக்கி எமைத் தரணியிலே உருவாக்கி கண்ணிலே கனவு பொங்க காலமெல்லாம் எமைச் சுமந்து பண்புடன் பாசமதும் பரிவுடன் எமக்கூட்டி அன்புடன் அறிவூட்டி ஆசையாய்க் கதைபேசி உறுதியாய் நாம் நிற்க உறுதுணையாய்க் கல்வி அறிவுடன் அமுதூட்டி அறநெறிதனைக் காட்டி பிறர் நலம் பேணுவதைப் பெருமையாய் எடுத்தோதி வறுமையிலும் எம்மை வளமையாய்த் தினம் பேணி குடும்பமே கோவிலெனும் கொள்கையுடன் போராடி அடுத்தவர் நலம் பேணி அயலவர் துயர் போக்கி அறிவூட்டும் ஆசானாய் அகிலத்தில் தொழிலாற்றி மௌனமே வேதமதாய் மனது…

  23. வாழ்த்தொலிகள் கேட்கும் தூரத்தில் நீயிருந்தால் எம் தலைவா! கைகட்டி ... வாய்பொத்தி பார்த்திருப்பாயோ ஈழத்தில் எம்மினம் எதிர்கொள்ளும் இன்னல்களை சேய் தவிக்க தாய் விடுவதில்லை எம் தாயுமானவே! நாம் தவித்திருக்க நீ ஒழித்தி…

  24. நந்திக்கடல் – 2012 ஆவணி : நிலாந்தன் மிஞ்சியிருப்பது இரும்பும் சாம்பலுமே, மாமிசத்தாலானதும் சுவாசிப்பதுமாகிய அனைத்தையும் சுட்டெரித்த பின் தங்கத்தாலானதும் துருப்பிடிக்காததுமாகிய அனைத்தையும் கவர்ந்து சென்றுவிட்டார்கள். மாமிசத்தாலாகாததும் துருப்பிடிக்கக் கூடியதுமாகிய இரும்பையெல்லாம் சேகரித்து உப்புக்களியில்குவித்து வைத்திருக்கிறார்கள். உப்புக்களியில் இருபோக மழையில் துருவேறிக் கிடக்கிறது கனவு. காடுகளின் சூரியன் நந்திக் கடலில் உருகி வீழ்கிறான். கானாங்கோழி காணாமற்போனவரின் கடைசிச் சொற்களை அடைகாத்திருக்கிறது. நிலாந்தன், 2012 – ஆவணி, யாழ…

  25. காற்றின் சுழிகளில் திருகி வெற்றிட நிறையில் தோற்று நீரின் பாயத்தில் பயணிக்கும் உதிர்ந்த பழுப்பு நிறச்சருகின் புறப்பரப்பின் கீழே நிறப்பிரிகையடையும் சூரிய பிரவாகத்தின் ஒளிக் கீற்றில் மெல்லப் படரும் வைகறையின் நிறத்தில் நெளியும் மஞ்சள் நதியின் இரு கரைகளிலும் வானேகி வளர்ந்த தென்னைமரங்கள் கடந்து தொடுவா னளவு பச்சையம் விரித்துக் கிடந்த பூமியின் உழவு மாடுகளை விற்ற கோடை நாளொன்றில் அப்பாவின் முகத்தில் வழிந்த மூதாதையரின் கண்ணீரை கழுவிச் சென்ற மழையில் முதன் முதலாய் நனைய பிடிக்க வில்லை..... ~ராஜன் விசுவா 10.4.16

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.