Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நாங்களும் காதலில் நாங்களும் காதலில் நான் ஒரு பெண்னை காதலித்தேன் அவள் அம்மாக்கு என்னை பிடிக்கவில்லை மறந்து விட்டேன் அவளை என்னையும் ஒரு பெண் காதலித்தாள் என் அப்பனுக்கு அவளை பிடிக்கவில்லை மீண்டும் நினைப்பது இல்லை அவளை நான் நாணும் ஒரு பெண்ணும் காதலித்தோம் எங்களுக்கே எங்களை பிடிக்கவில்லை பிரிந்து விட்டோம் ஒரு முறை காமத்திடம் தோற்ற பின்

  2. இத்தழிந்து போய்விடவில்லை என் இனத்தின் நம்பிக்கை. கொழுந்தெறித்து கிளைபரப்பிய இனவிருட்சத்தின் வேர்களை கிளறியவனே பார்...... செத்துவிடவில்லை எங்கள் வேர்களில் இன்னும் நம்பிக்கை. என்ன செய்யப்போகிறாய் இனி.... எங்களை கொன்ற கதையை யார்யாருக்கோவெல்லாம் வென்ற கதையாக சொன்னாய்..... எங்கள் பிணங்களை புணர்ந்த பின்னான பொழுதை மாலை புனைந்து கொண்டாடினாய்..... எங்கள் மகவுகளின் நெஞ்சுகளில் நச்சுகுண்டுகளை விதைத்துவிட்டு மண் வணங்கி மகிழ்ந்தாய்..... உனக்கான காலமென்று ஒன்றிருந்தால் எமக்கான காலமொன்றும் வரும் ! மீண்டும் வரும் !! *********************** காலம் திரும்புகிறது. நாச்சியார் விழிநீர் துடைக்கிறாள் குருவிச்சியும் இனி வரக்கூடும் வன்னியன் குதி…

  3. தமிழர்களும் மனிதர்கள் தான்!!! அண்ணாவை காணவில்லை என அழுதாள் "தங்கச்சி" அவளும் காணாமல் போனாள்..!!! என்ர பிள்ளையை திருப்பித்தாங்கோ என கதறினாள் ஒரு "தாய்" அவளும் காணாமல் போனாள்..!!! இதயமே இல்லாத இரும்புமனிதர்கள் தேசத்தில் கண்ணீர் வடிப்பது தண்டனைக்குரிய "குற்றம்"! மனிதமே இல்லாத மிருகங்கள் தேசத்தில் விழி நீரின் "வலி" தெரியாது அழுபவனுக்கு மரண "தண்டனை"! நாக்குகள் அறுக்கப்படும் நரக பூமியில் கேள்வி கேட்பவன் "தீவிரவாதி" நீதியே இல்லாத "நிர்வாண" நாட்டில் கோமணத்தோடு திரிபவன் "குற்றவாளி"! கேட்க நாதியற்ற இனமாய் இருப்பதால் நாய் கூட துணிந்து காலைத்தூக்கும் "நரக தேசம்"! விசர் நாய்க்கு தண்ணீருக்குப் பயம் வெறிநாய்களுக்கு தமிழனின் கண்ணீ…

  4. நாங்களோ எம் போரைத் தொடர்ந்தோம்............. ------------------------------------------------------------------------------------------ சாவதெனினும் தன்மானத் தமிழராய் சாவதென்ற முடிவுடன் தொடர்ந்தார் தொடர்ந்ததால்தானே உரிமைப் போரை பிராந்தியம் கடந்து நகர்த்திட வைத்து அனைத்துலகிடம் கொண்டு சென்றதும் அதனையும் மீண்டும் நயவஞ்சகத்தாலே கர்ணனைக் கொன்ற கண்ணனைப்போன்று கைங்கரியத்தை அரங்கேற்றிய அசிங்கமான கிந்தியர் அரசது வங்கதேசத்திலும்காஸ்மீரிலும் கைக்கொண்ட கொடுமைகள் போன்று மீண்டும் வந்து எங்கள் தேசத்திலும் பேரழிவினை விதைத்து இனத்தினையழித்து ஈழத்தீவிலே தமிழினத்தை இல்லாதுசெய்யும் பொல்லாத பொழுதொன்றை வென்றிட வேண்டி மெளனம் காத்திட ம…

    • 5 replies
    • 1.3k views
  5. Started by analai theevaan,

    நாங்கள் தூக்கத்தில் விழித்து கொண்டு இருப்பவர்கள் நாங்கள் வாழ்வோடு செத்துகொண்டிருப்பவர்கள் நாங்கள் கந்தககாற்றில் கருகி போனவர்கள் நாங்கள் மருத்துவத்துக்காய் மயங்கி விழ்தவர்கள் நாங்கள் ஈழதாகம் கொண்டு தண்ணீர்தாகம் உற்றவர்கள் நாங்கள் ஈழம் எனும் கனவு கண்டவர்கள் நாங்கள் முள்ளிவாய்க்காலில் முடங்கி முட்கம்பி முடிச்சுக்குள் நாங்கள் எங்கள் மண்ணில் அகதியானவர்கள் நாங்கள் நாங்கள் வேறு யாருமல்ல நாங்கள் ஈழத்தமிழர்கள்

  6. நாங்கள் நீங்கள் அவர்கள் இவர்கள் உறவினர்கள் மற்றவர்கள் போனவர்கள் வந்தவர்கள் அவர் இவர் நீ நான் ஏதாவது இருக்குமோ இந்த வார்த்தைகளில்..? சங்கிலிக்கருப்பு

  7. நெல்லியடியில் நெத்தியடியாய் நெடுநாள் சிங்களப் பகை நொருக்கி வீழ்ந்த அந்த நெடும் வீரன் மில்லர் வழியில்… தமிழராம் எம் தாகமாம் தமிழீழம் விடியும் வரை பிச்சை கேட்டு அடிமைகளாய் வாழப் போவதில்லை…! விடியலின் கனவோடு கந்தக மூச்செடுத்து சாவினில் வாழும் மறப் புலிகளாய் கரும்புலிகளாய் எம் தேச விடியலை சிதைக்க நினைக்கும் தடைகள் முடிப்போம். விடியற் சூரியனை கூவி அழைத்து ஈழ வானில் சேர்த்து.. மின்னிடும் வான் தாரகைகளாய் நாமும் மிளிர்வோம். தலைவன் வழியில்.. விடியலின் வேளை வரை தமிழர் நாம் என்றும் கரும்புலிகளே…! (05.07.2009 கரும்புலிக…

  8. நெல்லியடியில் நெத்தியடியாய் நெடுநாள் சிங்களப் பகை நொருக்கி வீழ்ந்த அந்த நெடும் வீரன் மில்லர் வழியில்… தமிழராம் எம் தாகமாம் தமிழீழம் விடியும் வரை பிச்சை கேட்டு அடிமைகளாய் வாழப் போவதில்லை…! விடியலின் கனவோடு கந்தக மூச்செடுத்து சாவினில் வாழும் மறப் புலிகளாய் கரும்புலிகளாய் எம் தேச விடியலை சிதைக்க நினைக்கும் தடைகள் முடிப்போம். விடியற் சூரியனை கூவி அழைத்து ஈழ வானில் சேர்த்து.. மின்னிடும் வான் தாரகைகளாய் நாமும் மிளிர்வோம். தலைவன் வழியில்.. விடியலின் வேளை வரை தமிழர் நாம் என்றும் கரும்புலிகளே…! ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “ http://thesakkaatu.com/doc1704.html

  9. ஜூலை 5.. கரும்புலிகள் நாள் நினைவாக.. மீள்பிரசுரம்..!! எமது ஆக்கத்தையும்.. ஆவணப்படுத்தி நிற்கும்.. தேசக்காற்றுக்கும் நன்றி. நெல்லியடியில் நெத்தியடியாய் நெடுநாள் சிங்களப் பகை நொருக்கி வீழ்ந்த அந்த நெடும் வீரன் மில்லர் வழியில்… தமிழராம் எம் தாகமாம் தமிழீழம் விடியும் வரை பிச்சை கேட்டு அடிமைகளாய் வாழப் போவதில்லை…! விடியலின் கனவோடு கந்தக மூச்செடுத்து சாவினில் வாழும் மறப் புலிகளாய் கரும்புலிகளாய் எம் தேச விடியலை சிதைக்க நினைக்கும் தடைகள் முடிப்போம். விடியற் சூரியனை கூவி அழைத்து ஈழ வானில் சேர்த்து.. மின்னிடும் வான் தாரகைகளாய் நாமும் மிளிர்வோம். தலைவன் வழியில்.. விடியலின் வேளை வரை தமிழர் நாம் என்றும் கரும்புலிகளே…! http://thesakkaatu.co…

  10. நாங்கள் நடந்தது…….! நாங்கள் நடந்தது உங்கள் வாழ்வு தலைநிமிர தலைநிமிர்வுக்காகத் தலைதந்து களம் வீழ்ந்தோம் வீழ்ச்சியில் இருந்து மீண்டெழுந்து நிமிர்வதற்கே நிமிர்வதற்காய் நிமிருங்கள் நீதிக்காய் துணியுங்கள் துணிவுடைத்தோன் தலைவனவன் சொல்லியதை மறக்காதீர் மறக்காது மதிநுட்பம் தாங்கியோராய் மதிகொடெழுந்தலே எழுச்சியிலே பேரெழுச்சி காணுகின்ற நிலை தோன்றும் தோற்றத்தின் தொடராக மாற்றங்கள் நிகழ்ந்தேறும் ஏற்றமதை காண்பதற்கு எங்களுக்குள் எழுச்சிகொள்வோம் தன்னெழுச்சி கொள்ளாது மண்னெழுச்சி கொள்ளாது கொள்கையிலே உறுதிகொண்டோர் தோற்றதில்லை உலகினிலே …

    • 1 reply
    • 1.7k views
  11. நாங்கள் புலம்பெயராத தமிழர்கள்....... பிணங்களின் ஓலங்களையும் இழப்புக்களின் வலிகளையும் சகித்தபடி சிந்தனைகளைப் புதைத்து விட்டு தூங்கப் பழகியிருக்குறோம் வீட்டின் கோடியில் இற்றுப்போன உடல்களின் எஞ்சிய எலும்புகளின் நடுவே அமைதியாக இருந்து உணவருந்திக்கொள்கிறோம் கோப்பையில் இருந்து எழும் சொந்தங்களின் இரத்த வாடையை நினைவுபடுத்தாது தேநீரை சுவைத்துக்கொள்கிறோம் விடுதலைக்காய் வீழ்ந்தவர்களின் நினைவுகளை சுமந்த நாட்களில் கொடிகளைப் பிடித்தவாறு ஆக்கிரமிப்பாளர்களின் தேசிய கீதங்களைப் பாடிக்கொள்கிறோம் ஏசிய வாய்களால் யூதாஸ்களைப்பாடி எங்களின் மீட்பராய் துதித்துக்கொள்கிறோம் இடித்துக் கொட்டப்பட்ட கல்லற…

  12. நாங்கள் பயங்கரவாதிகளல்ல பாசமும் நேசமும் உள்ளவர்கள் நாங்கள் தீவிரவாதிகளல்ல தீரமுள்ள திராவிடர்கள் நாங்கள் நாடில்லா இனமல்ல இலங்கைத்தீவின் மூத்தகுடிகள் நாங்கள் இனத்துவேசம் உள்ளவர்களல்ல இனத்துவேசம் உள்ளவர்களால் இலிவாக நடத்தப்படுபவர்கள் நாங்கள் துஷ்டர்களல்ல துரத்தித் துரத்திக் கொல்லப்படுபவர்கள் நாங்கள் பேடிகளல்ல பெண்கள் மானம் காப்பவர்கள் நாங்கள் கொலைகாரர்களல்ல கடத்திக் கொலை செய்யப்படுபவர்கள் நாங்கள் சகோதரக்கொலை செய்பவர்களல்ல களை எடுப்பவர்கள் நாங்கள் பயந்து ஓடுபவர்களல்ல பதுங்கிப் பின் பாய்பவர்கள் நாங்கள் விடுதலைப்புலிகள்.

    • 2 replies
    • 1.5k views
  13. ஒழித்து விளையாடும் அம்மாவும் தெருவும் தேயிலை மலையும் மீண்டும் வருமெனக் காத்திருக்கும் குழந்தையின் முன்னால் குருதியை உறிஞ்சும் அட்டைகளும் வெறும் கூடைகளும் துளிர்த்திருக்கும் கொழுந்துகளும் அடர்ந்த செடிகளுமாயிருக்கும் தேயிலைத் தோட்டங்களும் உழைத்துழைத்துக் கூனிய முதுகளுடன் கொழுந்துப் பைகள் கொழுவிய தலைகளுடன் மலைக்கு வந்த நலிவுண்ட பரம்பரையின் புகைப்படங்களுடன் எல்லாவற்றையும் மூடியது மண் ஒவ்வொருவராய் தேயிலைச் செடிகளுக்குள் புதைக்கப்பட அதன்மீதேறி கொழுந்தெடுத்த சந்ததியை ஊரோடு மலை விழுங்கிற்று எவ்வளவெனிலும் சம்பளம் எத்தகைய குடிசைகளெனிலும் வாழ்வு மயானங்களுமற்றவர்களின்மீது சரிந்தது பெருமலை ஒடுங்கியிருக்கும் லயன்களிலிற்குள் வெளியில் வர முடியாதிருந்தவர்கள் ஒரு நாள் மலைகள…

  14. நாடிழத்தல். நான் பயணப்பட முடிவெடுத்த போது காலத்தின் துயரத்திற் பழுத்த மனங்கள் முதுவேனிற்கால மரங்களிற் தொங்கிக் கொண்டிருந்தன. வாழ்வென்னும் சுடர் அவிந்து விழுமியங்களின் சுவடுகள் அழிந்த வெளியினூடு செல்லும் போது வழிகாட்டுவதற்கு ஆட்காட்டி போதுமென்று நினைத்தேன். நானொரு நாடோடியாகக் கூடுமென்றும் தூரங்களைக் கடக்கும் போது எழுத்தாணியிற் கவிதை சுரக்குமென்றும் நினைப்பவர்கள் என்னை மன்னியுங்கள். இருந்த நாட்குறிப்புக்களையும் எரித்துவிட்டே பயணிக்கிறேன். நான் வழிப்பறிக்கு அஞ்சியவன். காலம் நெடுகிலும் தனித்தழும் மரங்களை மூடிக் கிடக்கும் புழுதியை அள்ளிப்பூசிக் கொள்கிறேன். உருவழிய, உதிர்ந்த இலைகளைத் தழுவும் …

    • 1 reply
    • 857 views
  15. கொடுப்பதற்கு ஏதுமின்றி கெடுப்பதற்காய் நம் உறவுமின்றி வாழ்வதற்காய் கட்டிவைத்த கல்வீடுமின்றி நடுத்தெருவில்நின்று நீ கத்தும்போதும் திறக்காது கண்கள் சர்வதேசத்தின் கண்கள் தூங்குபவனை எழுப்பலாம் தூங்குபவன் போல் நடிப்பவனை உசுப்பமுடியாது நடிக்கிறது ஐநா. நாவடக்கி, எம் குரலடக்கி வெடிக்கிறது எம்மவர் கத்திய தொண்டைகள்தான் இன்னும் ஏன் விலைக்கொடுப்பு இதுக்கும் மேல் ஏன் சர்வதேசம் எழும் கேள்விகள் நியாயமானதே அதிகாரவர்க்கத்தின் ஆட்சிபீடமல்லவா ஐநா. ஐக்கியநாட்டின் குறுங்கல் வடிவம் தமிழாங்கிலத்தில் நான் நா…….. நான் தான் இவ்வுலகின் சொல் என்றுரைக்கும் ஐ.நா… காசாவில் கொன்றபோது கொதித்ததே! ஈ…

  16. பத்தாடை போட்டும் பனி மறைக்கும் காரியத்தில் இத்தாலும் அடியேன் ஒருபொழுதும் வென்றதில்லை. செத்தாலும் தாயே உனதுமடி மண்ணில்தான் இக்கவியும் புதையவேண்டும் இதுவேயென் யாசகம். கண்ணுக்குள் நூறு வண்ணங்கள் கண்டபின்பும் எண்ணத்தில் இதுவரையில் உனதுமுகம் மறையவில்லை. - என் கண்ணொப்ப உன் முகத்தை காட்டிவிடு; இல்லையென்றால் சுண்ணப்பண் பாடியுந்தன் சுடுகாட்டு மடியிலிடு. பூபாளம் பாடியிங்கே புதுப்பொலிவு கொண்டாலும் நாமாள நமக்கென்றோர் நாடொன்று வேண்டும் காண். பேயாளவா எங்கள் தேசத்தை விட்டு வந்தோம். - நாளையெந்தன் சேய் வாழ வேண்டுமம்மா வேங்கையினம் ஆளும் மண்ணில். தாயே! உன்மானத்தை காக்கின்ற வீரர்கள் கால்படும் மண் மீது காலூன்றும் நிலை வ…

  17. இன்று கிருபன் அண்ணாவின் புளொக்கை வாசித்தேன்...அதில் உள்ள நாட்கள் எனும் கவிதை எனது நினைவுகளையும் தட்டிவிட்டது...போருக்குள் ஊரில் வாழ்ந்த தொலைபேசி இல்லாத நாட்களில் அப்பாவின் கடிதங்களுக்காக காத்திருந்த நாட்கள் கண்களில் நிழல் ஆடின..அந்தக் காலங்களில் அதற்க்கு சற்றும் குறையாத பரிதவிப்புடன் ஊரில் உள்ள உறவுகளின் கடிதங்களுக்காக புலம்பெயர்ந்த நாடுகளில் தனிமையில் உறவுகள் எவ்வளவு தவிப்புடன் இருந்திருப்பார்கள் என்பதை கிருபன் அண்ணாவின் இந்தக் கவிதை நெஞ்சைத்தொடும் வகையில் பேசுகிறது..... நாட்கள்.... கிருபன் குளிர் காலங்களிலும் கடும் கோடைகளிலும் உதிர்கின்றன நாட்கள். பிரசவிக்கும் காலைகளில் தூக்கக் கலக்கத்துடன் விழிகள் எதிர்பார்க்கும் தபாற்காரனை. கதவிடுக்…

  18. நாட்டுப் புதினம் - 1 நாலாண்டு(5) சமாதானம் நாவறண்டு நாசமாய் கிடக்குது- அரச அதிபர் அறைகூவல் விடுகிறார்- இது போர் அல்ல மக்காள் போர் அல்ல போர் என்று சொல்லாமலே தமிழ் மக்களை கொல்லுவம் சமாதானக் கதவுகளை இன்னும் திறந்து வைத்திருக்கிறதா சொல்லுவம் தமிழ் மக்களைக் கொல்வதால் எங்கட இலங்கையை பாதுகாக்கலாம் சிங்கள ராணுவத்தைக் இழப்பதால் அவங்கட புலிகளை வெல்லலாம் செஞ்சோலையில போய் குண்டுகளை கொட்டுவம் உலகத்துக் அங்க புலிகள் முகாம் எண்டு சொல்லுவம் திட்டம் தீட்டி படுகொலை செய்யவம் கண்ணை மூடிக்கொண்டு-அதை நியாயப் படுத்த நீங்க இருக்கீங்க தானே ரம்புக்வெல கண்காணிப்பு குழுவுக்கு மெல்ல காதில பூவை சுத்திட்டு ஐக்கிய நாடுகள் சபையில சொல்லுவம் …

    • 4 replies
    • 1.2k views
  19. நாண் மற்றும் யாழ் ஒரு வயர் கம்பியா நம்மை பிரித்தெடுப்பது..! எப்படி பார்த்தாலும் யார் அவர்கள் நானும் யார்..? தந்தையை கேள்வி கேட்கும் மகனும் அம்மாவை கணைகளால் துளைத்தெடுக்கும் மகளும் ஆயிரம் பதிவுகள் போடுங்கள் நீங்களும் எங்கள் குடும்பம் என்று யார் சொல்ல முடியும்.? மெய் சிலிர்க்க வைக்கிறது எந்த பின்னூட்டங்களும் மூன்றாம் தரமாக இல்லை... நானும் ஒருவேளை உங்கள் குடும்பத்தில் இணைந்து விடுவேனோ.. என்ற அச்சத்தில் மீள்சிறகு

  20. நானாக வரப்போவதில்லை... எல்லோரையும்விட உன்னையதிகம் நேசித்திருப்பினும், என்கைப்பிடித்தபடி கூடவே வரும் உரிமையை உனக்கு கொடுத்தபின்னும் மனமுறித்துப் போதலேன்பது நீ நிகழ்த்தியது. எனவே, நானாக வரப்போவதில்லை. உன் பிரிவையிட்டு நான் வருந்தியதைவிட, நம் பிரிவையிட்டு அதிகம் வருந்தியிருக்கும் காதல். உன்னோடினிப் பேசுவதில்லை என்கிற பொல்லாவிரதம் முறிக்க இந்த பின்னிரவுகள் பிரயத்தனப்படுவதை நீ அறியமாட்டாய். பரவாயில்லை.... வழமைபோல இப்போதும் நீ என்னை திமிர் பிடித்தவன் என்றே கடந்துபோகலாம். எனினும், நானாக வரப்போவதில்லை.

    • 11 replies
    • 983 views
  21. யன்னலால் எட்டிப்பார்த்து எக்கத்தொடு மெல்ல திரும்புமோ நிலவொளி, நிசப்தத்தால் நிலைகுலைந்து வெதும்பி வெளியேறுமோ மலர்தடவிய தென்றல், நிழல்கரங்களால் நிலம் தடவித் தவிக்குமோ தளர்ந்து கொம்பாய் கிடக்குமோ செம்பருத்தி, மேட்டுக்குள் கடக்கும் எலிகள் இறங்கி உலாவுமோ, மேசை லாச்சிகளில் குட்டிகளை ஈனுமோ, என்னதான் நிகழும் எனது அறையில் !! சுவரில் மாட்டிய அழகியின் படத்தில் கூடுகட்டிய வண்டு ஆணியடித்த தடத்தில் உறங்கிக்கிடக்கும் ஆடை கொழுவியில் அமைதியாய் கிடக்கும் வலைபின்னி சிலந்தி, கதவில் ஒட்டிய படம் மக்கிப்போயிருக்கும் -அந்த கதவும் கொஞ்சம் இறங்கிப் போயிருக்கும். மேசையும் கதிரையும் புத்தகங்களும் தூசுகளில் கிடக்கும். மையிறுகி பேனையும், தோல்வெடித்துக் காலணியும், சக்குப்பிடித்து எண்ணைப் போத்…

  22. நானும் அப்பா எனும் ஆணும் 01 திமிர் ஏறிக் களைத்த நரம்புகளுக்கிடையே இன்னும் மிச்சமிருக்கின்றது அப்பாவுக்காக அழும் சில கண்ணீர் துளிகள் வெப்பேறிய உணர்வுகளுக்கிடையே அப்பாவின் விரல் பற்றி இன்னொரு பயணம் செல்ல காத்து தவிக்கின்றன என் விரல்கள் அப்பா பற்றிய நினைவுகளில் எல்லாம் குரோதம் படரவிட்ட ஒரு மாலைப்பொழுதில் தான் அவரை இழந்திருந்தேன் ************************* 2. ஆண் உணர்வு புடைத்து நிமிர்ந்து தலை தெறிக்க ஓடும் போது அறுந்த முதல் முதல் நாடி என் அப்பாவுடனான நேசம் அவரது ஒவ்வொரு சொல்லிற்கும் எதிராக நீண்டு முழங்கி ஓங்காரமாக அறைந்தது என் ஆண் மெளனம் என் மெளனத்திற்கு பதில் சொன்ன அவரது ஒவ்வொரு விடைகளிலும்…

    • 20 replies
    • 2.2k views
  23. தொட்டுவிட்டவள் தொற்றிவிட்டவள் என்றிரண்டு பொண்டாட்டிங்க எனக்கு..! எங்களுக்க விவாகமுமில்ல விவாகரத்துமில்ல சண்டையுமில்ல சச்சரவுமில்ல கூவத் தெரிந்த நான் கூனியதுமில்ல.. கொண்டை வைச்ச நான் தலை சாய்த்ததுமில்ல..! இவ்வளவைய கட்டிமேய்க்கிறேன் கனகாலமாய்..! நானும் இரண்டு பொண்டாட்டிக்காரன் தான். Spoiler (இப்படிக்கு வெள்ளைக் கோழி.. சிவப்புக்கோழிகளின் கணவன் செஞ்சேவல்) படம்:முகநூல்

  24. சோற்றுக்கு வேண்டும் உலை சாப்பாட்டுக்கு வேண்டும் இலை உணவுண்பது ஒரு கலை காத்திருக்கிறது உனக்காக இலை இலையில் இருக்கின்றன இன்சுவைப்பதார்த்தங்கள் உலகினில் உயிர் வாழ உணவு முக்கயம் உணவு வேண்டுமெனும் உணர்வு முக்கியம் உணர்வென்பது உருவமற்றது உணவென்பது உருவமுள்ளது உருவமற்ற உணர்வின் தூண்டலால் உருவமுள்ள உணவையுண்டு உலகத்தில் உயிர் வாழ்வோழ்ம் இந்தக் கவிதைக்கு பாராட்டுக்கள் வரவேற்கப்படுகின்றன.

    • 7 replies
    • 1.4k views
  25. பிள்ளைகளின் மரணம் நடுரோட்டில் இரத்ததால் குதறப்படும் குடும்பங்கள் உலகம் கண்டுகளித்த இனப்படுகொலைகள் கொடூரர்களின் ஆட்சி முன்ஜென்ம பாவங்கள் ஏதுமறியா அகால மரணங்கள் போராளிகளின் வீழ்ச்சி விவசாயிகளின் கண்ணீர் ஏழைகளின் வயிற்றடுப்பு பணம் பணமென பேயாய் அலையும் பதர்கள் தீயின் நாக்குக்கு தவறாது பலியாகும் குடிசைகள்(மட்டும்) பிஞ்சுகளை சிதறடிக்கும் குண்டுகள் அப்பாவிகளை நோக்கியே நீளும் ஆயுதங்கள் காமத்திற்கு இரையாகும் பால்முகங்கள் கழுத்தறுக்கப்பட்ட கனவுகள் இவற்றைக் கண்டு நாணாதவன் கடவுளெனில் நானும் கடவுள். http://aazhkadal.blogspot.fr/2012/01/blog-post_28.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.