Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அர்த்தமற்ற விடியலிற்காய்..... மித்திரன் ----------------------------------------- தூரத்து விடியலுக்கய் இன்னமும் நாம் பயணித்துக்கொண்டிருக்கின்றோம் பாதையற்று... குந்தியிருக்க குடிநிலமின்றி கூப்பாடுபோடும் மந்தைக்கூட்டமாய் தொலைந்துபோனதாக நாம் நினைத்த நிம்மதியும் நிலவொளியும்..... கட்டிய கோவணமும் உருவ உனக்கு நாள் குறித்த பின்னர் எதற்கு அலங்காரமும் அபிசேகமும்... விதைநிலங்கள் எங்கும் விஷங்களின் விதைகள் இனி உனக்கெதற்கு விளைநிலங்கள்? உறவிழந்தபோதும் உன் விண்ணப்பங்கள் விடையறியாமலே விழுதொடிந்து போகிறது..... எனினும் உன்னுள் உறங்கிக் கிடக்கிறது விடுதலையின் வினாத்துளி..... தினம்தினமாய் நீ …

    • 3 replies
    • 892 views
  2. இனமான உணர்வோடு தன்னாட்சி வென்றெடுப்போம் 41 Views தொல்புவியில் நாமாண்ட வரலாறு மீண்டெழுத வல்லாண்மைத் திறத்தினொடு அதிவிவேக நுண்மதியால் பல்நாட்டு வல்லரசார் உள்ளத்தை ஊடுருவி சல்லடையாய் சிங்களத்தைத் துளைத்தெடுத்த வேந்தனெங்கே! கர்மவீரன், திடசித்தன், களங்கமில்லாத் தூயநெஞ்சன் தந்தை செல்வா முன்மொழிந்த தமிழ் ஈழம் உருவாக்கி தர்மநெறி தழுவியவர் நாற்படைகள் அரணமைக்க அதர்மத்தை வேரறுத்து இனம்காத்த செம்மலெங்கே! பதினெட்டு வயதினிலே விடுதலையின் கனல்மூண்டு கதியற்றுத் தடுமாறித் தவித்ததமிழ் மக்கள்துயர் பதியத்தன் னுள்ளத்தில் பகையொடுக்கும் ஆவேசம் …

  3. புறமுதுகிட்டு ஓடச் செய்தாய் பூரித்துப் போனேன். பொழுது புலர்ந்து விடும் – உன் புதுமை நிர்வாகம் உலகறியச் செய்யும். காத்திருந்த கணங்கள் அனைத்தும் தொடர்கதையாகி விடுகதையையும் சேர்த்து விட்டுச்சென்றுள்ளது? திசையெல்லாம் கூடிய ஆதரவில் திசை திரும்பாமலே பயணித்தாய். சேர, சோழ, பாண்டிய கதைகள் பழங்கதையாகி தேசமெங்கும் தேசியத் தலைவரானாய். நல்லவரா? கெட்டவரா? நாள்தோறும் முண்டியத்த நாக்குகளுக்கு மட்டுமே தெரிந்ததால் நகைப்பாய், நகைச்சுவையாய் நாள்தோறும் தலைப்புச் செய்தியானாய்? உன் ஓழுக்கம் குறித்து – இங்கு அக்கறையில்லை. ஊடக விற்பனையில் – நீ உரத்துச் சொன்ன அத்தனையும் உலகறியாது? உதிரம் கொடுத்து உள்ளே புதைந்தவர்கள் உறவை விடுத்…

  4. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான காதல்: இரண்டு பேருக்குள் ஒழுகும் தேன்..! மும்மூர்த்திகள் செய்யும் திருவிளையாடல்..! நாலு சுவருக்குள் அந்தரங்கம் ..! ஐம்புலனும் தறிகெட்டுப்போகும் அவசரம்...! அறுசுவைகள் அனைத்திலும் தெரியும்! ஏழு மலை ஏறி வந்த களைப்பிருக்கும்! எட்டில் சனி தொடங்கும்..! ஒன்பது கிரகங்களும் எதிரியாகும்! சுழியமாகிநின்ற... ஒரு ஆண்பூச்சியை, ஒரு பெண் சிலந்தி இரையாக்கும்! மீண்டும்... விரிகின்ற சிலந்தி வலைகளில், பூச்சிகள் விழ விழ... வளர்ந்துகொண்டே இருக்கின்றன... விழுதல்களும்!

  5. சிறு பொறி - தீபச்செல்வன் மதிற் கரைகளில் குருதி கசியும் நாட்களில் திரும்ப முடியாமற் போகலாம் என எண்ணுபவனின் கால் தடம் மரணம் சைக்கிளின் பின்கறியலில் ஏறியமர்ந்த தெருக்களில் உள் உறிஞ்சிய பெருமூச்சு நெஞ்சறைகளுக்குள் எழுதியெழுதி தனை அழித்த நாட்களில் நிராகரிக்கப்பட்டவனின் முனகல் தன் தாய் மண்ணில் இறங்கி விளையாட அடம்பிடிக்கும் குழந்தை போலோரு கவிஞனின் குரல் அதிகாரத்தை எதிர்த்தமையால் கொலைப்பட்டியலில் இடப்பட்டவனின் இரகசிய முகம் மூ…

  6. பெற்றால் தான் பிள்ளையின் பெருமை தெரியும் என்பார்கள் உண்மைதான் நாங்கள் எல்லாம் உனக்கு தெருவில் கிடந்து கரையை சேர்ந்தவர்கள் தானே அது தான் உயிர் வாழ உன் மீது வலை வீசிய எம் உயிர் பறிக்க அலை வீசினாய் அழித்த நீ எம்மை அடியோடு அளித்திருக்கலாம்,ஏன் அங்கொன்று இங்கொன்று விட்டு வைத்தாய் நீ அழியா வரம் பெற்றவள் என்ற திமிரிலையா எம்மை வதைக்கிறாய் தாயே ??? கொன்றுவிடு எம்மை மீதமின்றி கொன்றுவிடு,,, கொன்று விட்டு திரும்பி பார் உன்னை கண்டு கொள்ள ஒரு நாய் கூட வராது, அன்றாவது உணர்வாய் அர்த்தமற்ற உன் செயலின் விளைவால் நாம் பட்ட வேதனையை......... *எழுத்துப்பிழை திருத்தப்பட்டுள்ளது.

  7. கருகும் பிணங்களிலே புத்தக் கடவுளே உந்தன் கரிய நிறம் தோன்றுதையே யுத்தக் கடவுளே பட்ட மரங்களிலே புத்தக் கடவுளே உந்தன் பச்சை நிறம் தோன்றுதையே யுத்தக் கடவுளே விதவையின் புடவையிலே புத்தக் கடவுளே உந்தன் வெள்ளை நிறம் தோன்றுதையே யுத்தக் கடவுளே சிந்தும் குருதியிலே புத்தக் கடவுளே உந்தன் சிவப்பு நிறம் தோன்றுதையே யுத்தக் கடவுளே குண்டின் வலியினிலே புத்தக் கடவுளே உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதையே யுத்தக் கடவுளே கதறும் ஒலியினிலே புத்தக் கடவுளே உந்தன் கீதம் இசைக்குதையே யுத்தக் கடவுளே அலறும் ஒலியினிலே புத்தக் கடவுளே உந்தன் அகிம்சை வழி தெரியுதையே யுத்தக் கடவுளே http://gkanthan.wordpress.com/index/budha

  8. எம் மக்களுக்காய் ஓர் முயற்சி... கவிதை..... பலகாலம் தொடரும் தமிழரின் பேரவலம் இருந்தும் சிலவாரம் அதற்கெல்லாம் ஓர் சிகரம்..... கவிதை வடிக்கவென்று கணனிமுன் உட்கார்ந்தால்..... காணும் காட்சியெல்லாம் எங்கள் உறவுகளின் இரத்த வெள்ளம்.... ஐயோ..மனது பொறுக்கல்லையே மனமும் அதைப் பார்க்க மறுக்கிறதே இதை உலகுக்கு அறியவைக்க என் அறிவுக்கு யோசித்தேன்..... பெரும்பாலும் உங்களுக்கு தெரிந்திருக்கும் இருந்தும் சொல்லுகிறேன்.... ஏற்கனவே தெரிந்திருந்தால் என்னை மன்னித்திடுங்கள் தெரியாமல் இருந்திருந்தால் என் அறிவுரையை ஏற்றிடுங்கள்... நீங்கள் பார்க்கும் கொடூரக் காட்சிகலில் 'மவுசை' ரயிற் கிளிக் பண்ணிடுங்கள் அங்கே…

  9. விடுத்திடுக வீண் கவலை விழித்தெழுக புலத்தமிழா நிலத்தமிழன் அங்கு நிட்டூர பகைவனுடன் கலக்கம் சிறிதுமின்றி களமாடி வருகின்றான் வலக்கரமாய் நின்றவற்கு வலுவூட்டும் பொறுப்பில்லுள்ள புலத்தமிழர் நாம் புலம்பிச் சுருண்டிடவோ? ஈன தமிழர்களாய் இன்னமும் வாழாமல் மான தமிழர்களாய் மார் தட்டி எழுந்திடுவோம்! ஓயார்,உண்ணார்,உறங்கார் பகலிரவாய்ப் பேயாய் அலைவார்! பிணி நடுவும் களமாடி மடிந்தார் இருபத்தையாயிரம் மாவீரர்! விடுமோ, இத்தியாகம் வீழ்ந்திடநம் விடுதலைபோர்? ஒரு பாவம் அறியா ஒருலட்சம் தமிழ் மக்கள் மரணித்து காத்த அறம் மண்கவ்வ நேர்ந்திடுமோ? பரம்பரை தமிழர்மண் பறிபோகாமற் காக்கும் பெரும் தர்ம போராட்டம் பெற்றிடுமோ தோல்விதனை? மற்றவரின் மண்ணை வன்பறிப்புச் செய…

  10. புறப்படு புலியென!!! கொத்துக்கொத்தாய் செத்துவிழும் என் சொந்தங்கள் கண்டு மரணங்கள் மரத்திங்கே போயாச்சு! எத்தர் கூட்டமிங்கே எக்காளமிட்டுக் களித்திருக்க இன்னும் வலுப்பெற்று மனம் உறுதி ஆயாச்சு! ஆரா"றோ"போடும் பணத்துக்காய் பிணம் குவிக்க எம் இனத்துள்ளே எட்டப்பர் கூட்டங்கள்! வாலாட்டும் நாய்கூட தன் எஜமானர் இனத்திற்கே! இங்கோ உயிர் வளர்க்கும் காக்கை வன்னியர்கள்! எந்த நேரம் வந்து நாடுகள் தடை போட்டதோ அந்த நேரம் பொங்கியெழவில்லை அதனால் உயிரிழப்புகளே நாம் கொடுக்கும் விலை! இனியும் இங்கே பொறுத்திருந்தால் வரலாற்றில் எம் இனமே இல்லை! பங்கு போட்டால் பங்கம் வரும் தன் தேசம் துண்டாகும் என்றொரு பாசாங்கு நடத்துகின்ற கூட்டம்! நம்பி நம்பி நின்ற எம்…

  11. கடவுளே உனக்கு கண்ணில்லையோ? கடவுளுக்கும் கண்ணில்லையோ -அது கல்லாகிப்போய் கன காலமோ! குந்த ஒரு குடிநிலம் கேட்டது பிழையோ -அதுக்கு தமிழீழம் எண்டு பெயரிட்டதுதான் தவறோ? அடிச்சவனை திருப்பி அடிச்சால் குற்றமோ?-நாங்கள் அழுதுகொண்டே செத்துபோவதுதான் விதியோ? தமிழராய் பிறந்ததுதான் தவறோ?-தமிழன் கேக்குறதுக்கு நாதியற்ற இனமோ? இன்னும் எத்தின நாளுக்குதான் அழுவமோ?-இதை கேக்குறதுக்கு யாருமில்லா உலகமோ? நாடு நாடாய் அலைவதுதான் கதியோ? அகதியாய் செத்துப்போவதுதான் முடிவோ? நீதி என்ன ஒரு நிறத்துக்கு மட்டுமோ? -அது தமிழருக்கு ஒரு நாளும் கிடைக்காதோ? மனிதாபிமானம் செத்து கனகாலமோ? -அதை குழிதோண்டிப்புதைத்தவர்கள் தான் பெரிய ஆக்களோ? விடுதலை கேட்பது பயங்கர…

    • 6 replies
    • 890 views
  12. [size=5] காந்தள்கள் முகம் (ஹைக்கூக்கள் 3)[/size] [size=5] [/size] [size=5] மணி ஒலித்தோய்ந்த்து பனித்தன கண்கள் காத்திகை 27. [/size] [size=5]கலைந்தது மௌனம்[/size] [size=5]மலர்ந்தன தீபங்கள்[/size] [size=5]மாவீரர் நாள்.[/size] [size=5] காந்தள்கள் முகம் சிரித்தது கைகளில் கார்த்திகைத் தீபம்.[/size] [size=5] [/size] [size=5]கோபுரங்கள் இல்லையெனினும் கோயில்கள்[/size] [size=5]கல்லறைத் தெய்வங்கள்[/size] [size=5]துயிலுமில்லங்கள்.[/size] [size=5] [/size] [size=5]எதிரி கிளரியெறிந்ததால் மனதில் கிளர்ந்தெழுந்தது மாவீரர் தியாகங்கள்.…

  13. ஈழத் தமிழர்களின் அவலத்தை பற்றிய சிங்களக் கவிதைகள். தற்பொழுது ஐரோப்பிய நாடொன்றில் அகதியாக புலம்பெயர்ந்து வாழும் சிங்களக் கவிஞர் மஞ்சுள வெடிவர்த்தன எழுதியவை. "தமிழர்கள் ஒடுக்கப்படும் பொழுது சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை", என்று இன்னமும் நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இந்தக் கவிதைகளை சமர்ப்பிக்கிறேன். துவாரகா உந்துல, சந்திரமண்டலமெனத் தலை சாய்த்திருந்த சிறையில் ... தண்ணீர் மென்மையானதா நொந்ததா மனவெளி சுரங்கங்களில் கலகத்தின் அழிவுண்டான இரவொன்றில் தமிழ்ச் சகோதரியைப் பற்றி எதற்காக கலவரம்? கனவுகளின் முன்னணிக்கு உண்மையாகவே வெடி பட்ட நாளில் கண்ணீர் வரிசையிட்டதோ வழி நீளவும் பிக்குவின் காவியுடையைப் போல காத்திருந்த செங்கொடி யாருடைய குருதியால் சிவந்ததென்பது ம…

  14. அது ஒரு மாலைப் பொழுது மழைத் துறல்கள் காற்றின் மோதுகையால் சிதறி முகத்தை உரசிச் செல்லும்போது ஒரு வகையான உணர்வு மனதைக் கிள்ளத்தான் செய்கிறது. இரு பீர் போட்டில்கள் காலியாகியிருந்தன. அந்த நண்பன் சடுதியாகத்தான் கேட்டான், அப்படியொரு கேள்வியை நான் எதிர்பார்த்திருக்கவில்லை, இப்போதெல்லாம் நான் எதிர்பார்ப்பவைகள் எதுவும் நடப்பதுமில்லை. அந்த நண்பன்! யதி, நீ விடயஞானம் உள்ளவன் உன்பற்றி பலரும் அறிவாளி என்கின்றனர், இது விடயத்தில் எனக்கு உன்னால் உதவ முடியும். நான் ஒரு மார்க்ஸிஸ்ட் ஆவது எப்படி? நான்! என் குறித்த அவன் வர்ணனைகள் என்னை சங்கடப்படுத்தின. இதிலெல்லாம் நான் நாட்டம் கொள்வதில்லை, ஏனெனில் நான் என்னை அறிவேன். நான் சிரித்துக் கொண்டேன…

  15. ரோஜாக்கள் ஏனடி ரோஜாக்கள் முத்தமாய் தந்துவிடேன் என் மொத்த ஆயுளுக்குமான உந்தன் பரிசை. - தயா ஜிப்பரான் -

  16. mummy i want தண்ணி....!!!! ஆயிரம் மைல் கடந்து அன்னைதேசம் தனை பிரிந்து அனாதைகளாய் ஆனபோதும் அண்ணனாய் தம்பியாய் பிள்ளைகளாய் உற்ற உறவுகளாய் அன்போடு அரவணைக்கும் என் புலம் பெயர் சொந்தங்களே வணக்கம்! என் உயிரிலும் மேலான தமிழ்தாயின் உச்சிமுகர்ந்து அவள் தந்த தமிழ்ப்பாலின் பாசம் உணர்ந்து புதுவை அண்ணாவை என் நெஞ்சில் வைத்து காசி அண்ணாவின் கைபிடித்து கவிதை நான் எழுதி வந்தேன் காலம் அறிந்து! வீட்டிலே தமிழ்! தமிழா வீட்டிலே தமிழ் பேசு-இல்லையேல் தமிழ்மானம் போச்சு! தமிழனாய் பிறந்தோம் என்று பெருமை பேசு-இல்லையேல் தமிழினத்தின் அருமை போச்சு! தமிழினத்தின் உயிர் மூச்சுதானே எங்கள் செம்மொழி மூச்சையே நிறுத்திவிட்டால் இனம் வாழ ஏது வழி? படலை திறந்து வந்தோம் உடலை மட்டும் தானே கொண்டுவந்தோ…

  17. வேலைக்காய் ஓடாதே விடியலுக்கு நேரமாச்சு... கவிதை.... என் உறவுகளே நிறுத்துங்கள் நீங்கள் ஓடுவதை நிறுத்துங்கள்...... உலகெங்கும் மக்கள் வெள்ளம் இருந்தும் நீங்கள் கொஞ்சம் வேலைக்காய் ஓடுகிறீர்...! வேண்டுமென்றா ஓடுகிறீர்...? உன் பெற்றோர் வன்னியிலே இருந்துவிட்டால் ஓடுவீரா...? உன் உறவு உயிர்பிரிந்து உருக்குலைந்தால் ஓடுவீரா...! எழுபது விழுக்காடு எழுச்சிகொண்டு எழுந்திருக்க முப்பது விழுக்காடு முயற்சியற்று தூங்குகிறீர்...! உன் உறவின் பாதுகாப்பை உறுதிசெய்ததாய் நினைத்துவிட்டு பணம்சேர்க்கும் முயற்சியிலே தமிழில் பாசமற்று ஓடுகிறீர்..... ஆனால் ஒன்றுமட்டும் மறக்காதே நீர் எல்லோரும் தமிழென்று என்றைக்கு இருந்த…

  18. அளவுகள் தொடர்பான பிரச்னை! - கவிதை செல்வி ராமச்சந்திரன், ஓவியம்: ரமணன் உன்னை எனக்கு எவ்வளவு தெரியுமென்று நம்புகிறேனோ அவ்வளவு தெரியாமலும் இருக்கிறது முதல்முறையாக இன்று உனக்கு ஓர் ஆடை வாங்கச் சென்றபோது உன் அளவு எனக்குத் தெரியாமல் போய்விட்டது எதிர்பாராத ஒரு பரிசுக்கான அளவை உன்னிடமே எப்படிக்கேட்பது என்றும் எனக்குத் தெரியவில்லை இருளில் தழுவிக்கொண்டபோது உன் தோள்கள் எப்படி விரிந்திருந்தன என்றோ உன் மார்புகள் எப்படிப் பரந்திருந்தன என்றோ நான் அறிபவை எல்லாமே உத்தேசமான அளவுகளாக இருந்தன எனது ஒவ்வொரு மனநிலையிலும் அவை வேறு வேறு அளவுகளாக குறுகலாகவோ பரந்ததாகவோ இருக்கின்றன உன்னைப்போலவே இருந்த மாடல் பொம்மையின் முன் நி…

  19. கணமொன்றில் நிகழவிருப்பவை - கவிதை கவிதை:கார்த்தி, படம்: அருண் டைட்டன் யார் முதலில் சொல்வதெனும் காத்திருப்புகள் துயரம் கண்கட்டாத உறியடிபோல் உடைக்கத்தான் வேண்டும் சில மௌனங்களை. மழையினூடான தேநீர் உரையாடலில் கரைக்கவிருப்பது கெட்டிப்பட்டுப்போய் தேங்கிக்கிடக்கும் சில கசப்புகளை. எங்கோ தூரத்தில் யாரும் பார்த்திடாதபடி காட்டுப்பூக்கள் சேகரித்திருப்பது பிரியத்தின் அடைக்கான சில வாசனைகளை. பிம்பங்களற்ற தனிமையில் ரசம் குறையும் நிலைக்கண்ணாடி இன்னும் நினைத்துக்கொண்டிருப்பது நீங்கிடாத சில முகங்களை. சிவப்பின் எரிச்சலோடு பச்சைக்கான காத்திருப்பில் சில்லறை நீட்டி ஊக்கப்படுத்தாவிடினும் கண்ணாடி இறக்கி அள்ளிக்க…

  20. தமிழனே தமிழனுக்கெதிரி ஒற்றுமை ஓங்கின் உண்டு பலம்.! வேற்றுமை கொண்டது தமிழனின் மனம்! தன் சுகத்தை பார்ப்பவன் தன்னினத்தை வெறுப்பவன் தன்னையே நினைப்பவன் தரமற்ற தமிழனிவன்! வேற்றினம் இரங்கினாலும் விடமாட்டான் ஈனத்தான் மானத்தை ஈடுவைத்து மகிழ்ந்து நிற்பான் பாவத்தான்! கலை என்பான் கலாச்சாரம் என்பான் கற்புநெறி காத்தலென்பான். கைநிறைய காசுவந்தால் - தன் கற்பைக் கூட விற்றிடுவான்! இறைவனென்பான் இசையென்பான் இசையினூடே இறைவன் என்பான் தன்னினம் வாடிநின்றால் தனக்கேன் வம்பென்பான்! இறைவன்கூட பழித்திடுவான் இதுபோன்ற இழிவானை! தனக்கேன் தாய்நாடு இருக்கிறதே வெளிநாடு இனியேன் தமிழினம் இணைந்திடும் புதுவினம் பூண்டிடுவோம் புதுவேசம் போட…

  21. ஏன் கொன்றாய்....??? வீதியலே நின்றவரை வீனாக ஏன் சுட்டாய்....??? என்ன தவறிழைத்தார் என்றவரை நீ கொன்றாய்....??? அட உன் குற்றம் நீ மறைக்க ஊமையதை ஏன் கொன்றாய்...??? அவன் பார்த்து நின்றான் என்றா மா பாவி நீ கொன்றாய்....??? சாட்சியாகி நின்றிடுவான் என்றென்னியா நீ கொன்றாய்....??? பிறப்பினிலே வாய் கட்டி இறைவனவனை தான் படைத்தான்.... மொழிகளதை அறிந்தும் அவன் பேச முடியா அவன் துடித்தான்.... திங்கின்றி கிடந்தவனை தீண்டி வந்து ஏன் கொன்றாய்....??? உன் பீத்தல் நீ மறைக்க அந்த உத்தமனை ஏன் கொன்றாய்....??? என்ன கெடுதல் இழைத்தான் என்று இன்றவனை நீ கொன்…

  22. கனவிலே வந்தாய் பெண்ணே கனடாவில் நலமா நீதான் கண்மணி என்றே சொன்னேன் கண்களை கொள்ளை கொண்டாய். நெஞ்சத்தை காண வில்லை திருடிநீ என்ன செய்தாய்? வஞ்சத்தை விட்டுச் சொல்லு- என் வஞ்சத்தை விட்டுச் சொல்லு பஞ்சமாம் ஊரி லெல்லாம் - உன் நாணத்துக் கில்லை யாமோ? வெஞ்சமர் ஆடி யுன்னை சிறைமீட்க ராமன் நானோ? பொய்யடி உலக மெல்லாம் - உன் மெய்நெஞ்சை திறந்து காட்டு! அங்கும்நான் இல்லை யென்றால் மெய்யெந்தன், மெய்யைக் கொல்வேன். கவிதைக்கா காத லித்தேன் ?-என் கண்ணுறு நீதான் பெண்ணே! கவிஞனும் உண்மை சொல்வான் காதலீ! நம்பு வாயா? வாழ்வது நீண்ட தில்லை. - வா வாழ்வைச் சுவைத்துப் பார்ப்போம். வருகின்ற தலைமுறைக் கெங்கள் வாழ்வினில் ஏணி வைப்போம்.. கல்நெஞ்ச…

  23. வன்னிக் குழந்தைகளின் கதறல்கள்...... தொடர்ச்சி...... கவிதை.... வானத்தைக் குடையாக்கி மரங்களையே வீடாக்கி மண் நிலமே படுக்கையாக மறைந்திருந்தோம் எதிரியிடம்...... இந்தமுறை எதிரியுடன் இயற்கையும் சேர்ந்து எம்மை தாக்கத் தொடங்கியதை தாங்காமல் தவிக்கின்றோம்... மழை பெய்தால் மகிழுதற்கு இது மகிழ்ச்சியான ஆட்சியல்ல மகிந்தவின் ஆட்சியல்லா மரணம் தான் எமக்கு மிஞ்சும் கொடுங்கோல் ஆட்சியிலே கோபுரமா எமக்கு சொந்தம் குடிசைகள் தான் அன்று சொந்தம் கொடும் நோய்கள் தான் இன்று சொந்தம்...... பாலுக்காய் அழுகின்ற பச்சிழம் குழந்தைக்கு உணவாகக் கிடைப்பதெல்லாம் உடல் எரிக்கும் குண்டுகள்தான்..... ஏணையில் தவழ வேண்டும் எங்கள் இளங் குருத்துக்கும் …

    • 3 replies
    • 886 views
  24. குரலை கேட்க;நூராயிரம் ஆண்டுகள் தவம் இருக்க! பேச தயங்கினாலும்;கலங்கிப்போனேன் பார்க்காவிடில்! நிழலாக திகழ்ந்தாய்;உன் நினைவுகள் வருகையில்! கவிதையாக தோன்றினாய்;வரலாற்றில் அமர்ந்திட! -வருண் குமார்..

    • 2 replies
    • 885 views
  25. முன்பு பின்பு இப்போ இனிமேல் முன்பு அடித்தபோது வாங்கினோம் பாதுகாப்புத்தேடி ஓடினோம் பின்பு அடித்தபோதும் வாங்கினோம் திருப்பி அடித்தபோது நீ ஓடக்கண்டோம். இப்போ அடிக்கிறாய் அடிக்கடி அடிக்கிறய் தாங்கிக்கொண்டோம் அதனால் பலவீனரா? இனிமேல் அடிக்க நினைத்தாயோ! முடியாமற்போகும். அப்போதிருப்பாய் நீ பலவீனனாய்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.