கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
முன்னொரு வேளை முகத்துவாரம் தனில் முத்துப் பல்லக்கில் - சிங்களம் முதுகில் சுமக்க முடிந்தது "நற்காரியம்" சொல்லி.. முக்கியம் பெற்றனர் நம் தமிழர்..! மூடரிலும் கேடாய் மூத்தகுடி வாழ்ந்த மண்ணை மூதேவிகள் சிங்களர் ஆளத் தாரை வார்த்தனர்..! மண்ணின் மைந்தர்கள் என்றோர் மன்னர்களாகி சிங்களச் சகோதரத்துவம் பேசி மகிமை பெற்று சேர்.. பொன்களாகி மணிப் பல்லக்கில் பவனி வர.... மக்களோ இனக்கலவரங்களிடை மரணப் பாடையில் ஏறினர்..! அந்தவொரு வேளை அஞ்சா நெஞ்சன் அருமைத் தமிழ் மைந்தன் அன்னையாம் தமிழீழத் தாயின் இருப்புச் சொல்லி அவள் தலைநகராம் திருமலையில் அருமையாய் சிங்களம் போற்றும் அவர் தம் தேசியக் கொடியாம் அரிவாள் ஏந்திய சிங்கக் கொடி எரித்தான். அன்று அதை …
-
- 1 reply
- 821 views
-
-
எழுதியதெல்லாம் மொழிபெயர்ப்புத்தான். இளைஞர் விழிகளில் எரியும் சுடர்களையும், போராடுவோரின் நெற்றிச் சுழிப்புகளையும் இதுவரை கவிதையென்று மொழிபெயர்த்திருக்கிறேன்! ******* உயிர்ப்பின் முதல் நொடியை உணர முயல்கிறேன் மீண்டும் பொருளில் உணர்வு தோன்றிய கணம் ஓடுவரா முட்டையின் முதல் அசைவு வித்தின் மண்தேடும் ஆதி விழைவு நரைத்து ஒரு முடி உதிர்ந்த சமயம் உணர்ந்தேன் அது என் மறதியின் முதல் நொடி ****** மனுசங்கடா நாங்க மனுசங்கடா உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள மனுசங்கடா நாங்க மனுசங்கடா எங்களோட மானம் என்ன தெருவில கிடக…
-
- 0 replies
- 821 views
-
-
உடல் ஒடிந்து போகையிலும் உள்ளமது உடையலயே எங்கள் தமிழ் நீதிக்கு ஏன் குரல் கொடுக்கலயோ...?? செவிகள் உண்டு உந்தனுக்கு செவிடாக நீயெதற்கு....?? கலைஞர் என்ற மாமனிதா கருணையது காட்டிவிடு... உந்தன் தமிழ் நாட்டினிலே போட்ட தடை எடுத்துவிடு எங்கள் தமிழ் நீயென்றால் இன்றுயதை செய்து விடு... வேங்கைகள் உந்தனுக்கு வேடுவர் இல்லையின்று அச்சமில்லை உந்தனுக்கு அவையினிலே செப்பிவிடு... தொப்பிள் கொடி உறவு நாங்கள் தொல்லையிலே வாழயிலே பந்தியிலே உந்தனுக்கு பாயசம் இன்றெதுக்கு...??? நல்ல மனம் உந்தனக்கு இல்லையென்று சொல்லவில்லை ஆயினும் நெஞ்சத்திலே வடுக்கள் இன்னும் ஆறலயே... உன்னை நம்பி எம்தமிழர் உன்னணியில் நிற்கையிலே எங்கள் ஈழ தேசத்திற்கு …
-
- 1 reply
- 821 views
-
-
முத்தம்மா பெற்ற பிள்ளை மூன்று பேர் உயிரோடு இல்லை முத்தப்பன் வளர்த்த பிள்ளை உடம்பில கை கால் இல்லை பத்துமாத தமிழ்ப் பிள்ளை படுத்துறங்க மடியில்லை படைவேரியன் பிடியில அழக்கூட முடியல்ல நன்றி - முகநூல்
-
- 1 reply
- 821 views
-
-
நீயும் நானும் ஒன்றுதான் அங்கே மண்ணை நேசித்தவர்கள் மண்ணுக்குள் பிணம்களாய் இங்கே மண்ணை நேசித்தவர்கள் மண்ணின்மேல் பிணம்களாய் ஆராய்சி செய்வோம் இதயம் இல்லாதவர்களுக்கு எவ்வாறு ரத்த ஓட்டம்
-
- 3 replies
- 821 views
-
-
சங்கம் வளர்த்து தமிழ் வளர்த்த குடி ... சங்கள் தொடங்கி வயிறு வளர்க்கிறது .. மாதம் மாதம் கூடுகிறார் சேர்கிறார் .. டீயும் ..வடையும் ..ரோலும் கட்டியபடி .. ஒரு குடும்பம் அதில் நாலுபேர் நாங்களே .. எல்லாம் மாமன் மச்சான் சித்தப்பன் .. நீ இன்று தலைவர் நான் நாளைய தலைவர் .. எங்களுக்குள் எடுக்கும் தீர்மானம் இது .. கணக்கும் இல்லை வழக்கும் இல்லை .. கேள்விகேட்க பத்து ரூபா கொடுக்கணும் .. பதில் சொல்ல செக் கொடுக்கணும் போல .. சிட்டைகள் வந்து விழுகுது சிரமதான வேலையாம் .. சீரழிந்து கிடக்கும் உறவு பாணுக்கு காசில்லாமல் ஊரில் .. சீட்டு காசும் வட்டிகாசும் வெள்ளையா ஆகுது சங்கத்தில் .. சின்னவீடு எல்லாம் பெரியவீடு ஆகுது லோனில் .. சின்னக்கடை சூப்பர் மார்கெட் ஆனது ஊரான் காசில்…
-
- 3 replies
- 820 views
-
-
தூக்கமில்லாத இரவுகளோடு போராடித் தோற்றுப்போனபோதும் கனவுகளுக்கு ஏங்கிய இரவுகள் அதிகம்! நினைவுகளும் ஞாபகங்களும் ஒவ்வொரு இரவிலும் என்னைக் கொன்று போட்டாலும், உன் நினைப்புடன்தான் உயிர்க்கின்றேன் ... அதிகாலைகளில்...! இப்பொழுதெல்லாம்... அதிவிரைவுச் சாலைகள் எனக்கு , பழக்கப்பட்ட ஒழுங்கைகள் போல இருக்கிறது ! வேகங்கள் என்னைப் பயமுறுத்துவதில்லை! சதா ரணமுமாய் சாவதைவிட செத்துப்போனால் பரவாயில்லை என்று தோன்றும்போது, சில அசாதாரணங்கள் கூட.... சாதாரணமாய் மாறிவிடுகின்றனவோ ? நான்.... செத்துத் தொலைந்தால் நன்றாய் இருக்கும்!
-
- 2 replies
- 820 views
-
-
மனிதம் இறந்து கிடந்த போது கண்ணை மூடி இருந்தவர்களுக்கு ஏதோ காய் நகர்த்தல்களில் கணக்குப் பிழைத்து விட்டது கட்டிப் போட வருகிறார்கள் ஜனநாயகவாதிகள் இந்து சமுத்திரத்தில் வந்து குதித்த கம்யூனிச றகனை. பா.உதயன் ✍️
-
- 3 replies
- 820 views
-
-
இசைப்பிரியாவும் கார்த்திகைப் பூக்களும்...! -எஸ். ஹமீத்- *செந்தாமரைகள் சிலிர்த்துப் பூக்க வேண்டிய அந்த சேற்று நிலத்தில், பெண் தாமரையே உன்னைப் பிடித்துத் தள்ளியது யார்...? *மானமும் கானமும் வாழ்வெனக் கொண்ட மாதரசியே, உன் துகிலைக் கிழித்துத் துப்பிய அந்தத் துச்சாதனர்கள் யார்...? *வெறி பிடித்த நாய்களின் நடுவே- தாயே நீ, தனித்து விடப்பட்ட ஆட்டுக்குட்டியாய்... விஷம் கொண்ட பாம்புகள் நடுவே- அம்மா நீ ஆதரவற்ற அணிற் குஞ்சாய்...! *நீ அசைத்து வந்த வெள்ளைக் கொடியா அது...? அது, உன்னுடையதாகத்தானிருக்கும்! இல்லாவிட்டால், அந்த நேரத்தில் அவர்களுக்கேது அந்தத் துணி...??? *சரணடையச் சென்ற வேளையுந்தன் சமாதானக் கொடியைப் பறித்து வைத்துவிட்டு-தம் பாவக் கரங்களால்-கோர நகங்களால் அவ…
-
- 8 replies
- 820 views
-
-
சட்டைக்குள் புகுந்துதினம் சில்மிசம் செய்த _என் கிராமத்துக்காற்றே, அந்த ஆலமர மடத்தில் _உன் ஸ்பரிசம் தந்த சுகமும் விளையாடிக்களைத்த மம்மல்போழுதில் வந்தெனை ஆரத்தழுவி வியர்வைதுடைத்த பரவசமும் _இன்று நினைவுகளில் மட்டுமே ! எல்லைகளில் உயர்ந்த பனைகளோடு உரசி சிரித்தவள் நீ , முல்லையின் வாசத்தோடு முற்றத்து மண் அள்ளிக்கொட்டி ஆக்கினைசெய்தவள் நீ , நேற்கொழுவில் நேற்கதிகளோடு சல்லாபித்து நெஞ்சைத் தொட்டவள் நீ , ஏகாந்த இராத்திரியில் மஞ்சம் வந்து _கன்னம் கொஞ்சிப்போனவள் நீ , என் கிராமத்துப்பூங்கற்றே வேலிக்கிழுவையும் ஆடுதண்டுப்பூவரசும்_உன் தரவுகளின் ஆமொதிப்பாளர்களாக இ (த)லையாட்டிக்கொண்டிருக்கும் வரை மாற்றமில்லாமல் நீ வந்து…
-
- 3 replies
- 820 views
-
-
தாயகவிடுதலைக்கனவோடு சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்! சட்டென்று போனானே… சிறகு முளைக்கும் முன்னால்! பாடல்கள் பல தந்து நின்றவன் – மண்ணின் தேவைகள் சில முந்த… தன் காதலையும் தேடலையும், தனியாக ராகம் பாட விட்டவன், தான் காதலித்த மண்ணுக்காய்… சிட்டாய்ப் பறந்து போனானே பாடலோடு! வந்த பகை நின்று முறிக்க, இடையிடை புகுந்தவன்… தன் வாழ்வினை விடை கொடுத்து… வந்தானே பாடையோடு! நீ தந்த ராகங்களும் பாடல்களும்… சிறுநாக்காய்…. எம் தொண்டைக் குழியில் இன்னும், அவ்வப்போது அலறி இசைக்கும்! – ஆனால் உன்னினிமை ராகம் கேட்க... நீ வரணும் மீண்டும் சிட்டாய்! உறுதியாய் ஒன்றுமட்டும்…. எம் தாகம் தீரும்வரை… உன் ராகம் ஓயாது! உன் ராகமும் தாளமும் இன்ற…
-
- 4 replies
- 819 views
-
-
ஓய்ந்த மழை பட்சிகளின் அயர்ச்சிகளை ஒன்றுக்கொன்று சீண்டிக்களைத்த மேகங்கள் தன்னிலை மாற்றி ஒழிகிறது களைகூட்டி காடு செய்த வானம் முன்பொருபோதுமில்லாத சிறகுகளிழந்து வெறித்துக் கிடக்கின்றது இரவைக் காத்து புத்தகங்களுக்குள் மறைத்த புகைப்படங்கள் காட்டும் புன்னகையும் பொருத்தமில்லாது பொய்த்து விடுகையில் விடுபட்ட சுவர்களுக்கிடையே குடிகொண்ட்ட கரப்பான்களின் ஒழுக்கமற்ற சத்தங்களின் விதைகள் நிலமூர்கிறது அங்கொரு மழை ஓய்கிறது.. யாழினி பண்புடன் இணையத்திற்காக http://new.panbudan.com/archives/401#more
-
- 5 replies
- 819 views
-
-
[size=1] [size=4]தொழுவான் தமிழன்[/size][/size][size=1] [size=4]தொடர் தொல்லை கொடுத்தால் [/size][/size][size=1] [size=4]அழுவான் அடங்கியேயவன் [/size][/size][size=1] [size=4]விழுவான் காலிலேன்றே யார்ப்பரித்த தன்று பகை![/size][/size] [size=1] [size=4]ஆண்ட இனம், [/size][/size][size=1] [size=4]அரசுகொடி சுற்றமென்று வாழ்ந்த இனம்,[/size][/size][size=1] [size=4]கண்டமெல்லாம் கடந்து தமிழ் [/size][/size][size=1] [size=4]கொண்டுசென்று நிலைத்த இனம், [/size][/size][size=1] [size=4]பண்பாடிப்பாங்காய் பளுவின்றியொரு[/size][/size][size=1] [size=4]பகையின்றி வாழ நினைத்த இனம்,[/size][/size] [size=1] [size=4]இனங்கள் சமமென்று [/size][/size][size=1] [size=4]இதயத்தால் உரைத்…
-
- 7 replies
- 819 views
-
-
நிலவின் நிர்வானத்தால் கடல் தினவு கொள்ளும் இரவுகளில் உன்னிரு இதழ்களிலும் வழிகிறது சுயத்தை தின்றுவிடும் சூட்சுமம்.. நம் அன்பு தொலைந்துபோன எட்டாவது வர்ணம் மழைப்பொழுதில் விழுந்து தொலைக்கும் மின்னலின் கனம் புல்நுனிகளில் திரளும் நீர் யாருமறியாமல் எங்கிருந்தோ எழுகிறது மறைகிறது உனக்குள் தொலைந்து போதலும்.. அபத்தப் பொழுதொன்றில் இளக்காரம் சுமந்து நெளியும் உதடுகளில் நேசத்தைக் கொட்டிவிட முனைந்து தோற்றுவிடுதலுடன் நீள்கிறது நமக்கிடையிலான களவொழுக்கம்.. வியர்வை நாற்றம் அறிய பயணித்து இடைவெளிகளில் பலியாகிக் போகின்றன ஓசையிழந்த முத்தங்களும் தீண்டல் தவிப்புகளும் துப்பிவிட்ட நேசங்களும்.. எட்டாவது வர்ணம் கொள்ளுதல் முரண் முரண்களால்தான் வாழ்வு வீடுபெறடைகிறது நம் அன்ப…
-
- 6 replies
- 819 views
-
-
கண்ணீர்ப் பொங்கலை….. ------------------------------------------- கண்ணீர்ப் பொங்கலுமாய் செந்நீர்ப் பொங்கலுமாய் எம் தாயக தேசமன்றோ ! நகரும் மக்களை நரபலி எடுக்கின்றது சிங்களப் படைகளன்றோ ! நாங்கள் சர்க்கரை போட்ட பொங்கலைப் பொங்குவதா எம் தேசம் காத்திடப் பொங்கி எழுவதா ! பொங்கி எழுந்து நாம் எம் தேச மக்களின் துயரினை துடைப்போமா இல்லை இன்னும் கதைகள் பேசியே காலத்தை கழிப்போமா ! எங்களின் உறவுகள் ஏதிலியாகியே தங்கள் வாழ்வினை தொலைத்து விட்டாரே ! தங்கள் வாழ்வைத் தொலைத்தது ஏனோ தாயகம் மீட்டெழும் முடிவினில் தானே ! கண்ணீர்ப் பொங்கலும் செந்நீர்ப் பொங்கலும் கடக்கும் பலமென்றும் உலகத் தமிழர் கைகளில் தானே உலகெங்கும் எழுவோம் பொங்கி எழ…
-
- 0 replies
- 819 views
-
-
கணவன் இந்திய இராணுவத்தால் அல்லது கூட இருந்தவரால் காணாமல் போனவர் தம்பி கடற்தொழிலில் கடற்பீரங்கி சத்ததிற்கு பின் காணாமல் போனவன் மூத்தவன் செம்மனிக்காலத்தில் காணாமல் போனவன் இளையவன் முள்ளிவாய்க்காலுக்குப்பின் சரணடைந்து காணாமல் போனவன் மருமகளும்,பேரக்குஞ்சுகளும் அவுஸ்ரேலியாவிற்கான கடற்பயணத்தில் காணாமல் போனவர் இவள் வானத்தையும் கடலையும் மாறி மாறி பார்க்கிறாள்
-
- 12 replies
- 819 views
-
-
உன் மகன் தமிழீழ விடுதலைப் புலி வீரன்….. பார் முழுவதும் இவளைப் பார்ப்பதால் பார்வதியானாளா..? ஐயாயிரம் ஆண்டு தமிழன் வாழ்வை அழித்தெழுதிய ஆற்றல் வீரன் பிரபாகரனைப் பெற்றதால் பார்போற்ற நின்றாளா..? வீரத்தமிழன் வரலாறு செத்துப்போகா தியாகத்தை எழுதிய புலிகள் பாய்ந்தெழுந்த தாய் நிலமானதால் புகழ்பெற நின்றாளா… ? அன்று.. தாயிறந்த செய்தி கேட்டு துறவியாய் தொலைந்த பட்டினத்தாரே துடிதுடித்து ஓடிவந்தார் தாய் படுத்த சுடலைக்கு.. நீ பெற்ற பிள்ளை.. மானமுள்ள தமிழனுக்கெல்லாம் நீயே தாயென்று போற்றி.. இன்று உன் பிள்ளைகள் உலக முழுதும் உன் சவக்கட்டில் ஏந்தி ஊர்வலமாய் போகக் கண்டான் போய் வா தாயே.. தன்மானம் குலையா தலைமகன் வேலுப்பிள்ள…
-
- 0 replies
- 819 views
-
-
இதயத்தில் இருக்கை போட்டு அமர்ந்தவன் விரல்களின் நளினத்தில் வெட்கம் தொலைத்து சிணுங்கிக் குலுங்கி நாணி ஓடுகிறாள்..! அவள் சிணுங்களில் சித்தம் உந்த உணர்ச்சிக் கொப்பில் தாவிய இரண்டு உள்ளங்கள் உடல்கள் உரசி இதழ்கள் சுவைத்து கண் மூடிக்கிடக்கின்றன..! அட அசிங்கமே முகம் சுழிக்கும் ஆச்சியின் கையில் ஐபாட்... கதை விரிக்க அவள் விழிகள் விரிக்கிறாள் தொடர்கதை முடிக்க....! அந்த நிமிடத்தில் ஐபாட் மீது அவன் கண் வைக்க கைகள் தேட களவு ஒன்று அரங்கேறுது..! கூச்சலும் குழப்பமும்.. குலுங்கலும் சிணுங்கலும்.. ஓய்வுக்கு வர ரயில் பயணம் முடிக்கிறது...! விசாரணை தொடர்கிறது..!
-
- 11 replies
- 819 views
-
-
உலகத்தமிழா உணர்வுகொண்டு எழுடா.. ] எத்தனை காலம் செவிகள் கேட்டு கொண்டிருப்பது கண்கள் பார்த்து கொண்டிருப்பது அறியாமை மறந்து போன சிங்கள மனிதனின் யுத்தம் தன்நிலை மறந்து போன முட்டாள்களின் வெடிகுண்டு பெருக்கம்.. புவி அறிய பிறக்கும் பிறப்புகள் கூட பிறக்கமலே கருவறைக்குள் இறக்கும் அவலம்.. தப்பி தவறி பிறந்தாலும் வான்படை குண்டுகளின் குறிக்கு குதறப்படும் பரிதாபம்.. இன அழிப்பு அருவடைஎன்று ... எம்தமிழீழ கன்னிப்பெண்களின் கன்னித்திரை கிழித்தெறியும் சிங்கள காமுகனின் வெறிசெயல்.. போதுமடா உப்பிட்டு தின்பவனே காம உறுப்புகளை அறுத்தெறிய உணர்வுகொண்டு எழுடா.. சம உரிமை கேட்டதன் சன்மானம்தான் .. என் தமிழனின் உயிர் சிதைகப்படுகின்றது .. இதயமில்லா…
-
- 0 replies
- 818 views
-
-
என் வானமும் என் தரையும் கந்தக நெடிகளாகி ......... வாழ்வின் அர்தத்தையே அகலப்படுத்தின . தூரத்தே நாளை என்னும் நம்பிக்கைப் பொட்டுகள் கண்சிமிட்டும் நட்சத்திரமாய் கண்ணாம் மூஞ்சி காட்டும் எனக்கு . எட்டுப்பட்டிச் சுற்றமும் ஏறுதளநாருமாய் இருந்த " நாங்கள் " இன்று " நானாகி " போனதில் , இறுக்கமான வலி இறுகியே பாயும் என் மனதில் . இன்பமும் துன்பமும் காலதேவன் வகுத்த சுற்றில் என்கால் நாளையை நம்பி உரமாகவே நடைபயிலும் .
-
- 9 replies
- 818 views
-
-
காலம் தன் சுழலும் ஒவ்வொரு பற்களிடையேயும் பிணங்களையிழுத்துச் செல்லும் யுத்தகாலப்பொழுதில் இனி வடிகட்டிய செய்திகளை மட்டுமே அறிவதற்கென ஒரு சிறுவனை கனவினில் நெய்யத் தொடங்கினேன் அவன் நான் விடியலில் எழும்புவதற்குமுன் சமாதானத்து நிற திரைச்சீலைகளைத் தொங்கவிட்டான் குருதியை நினைவுபடுத்திவிடுமோ என்ற எச்சரிக்கையில் சிவப்பாய்ப் பூக்கும் செடிகளையெல்லாம் களைகளைப்போல அகற்றிவிட்டதில் அவனது அன்பு விளங்கியது செவ்வந்திகள் செம்மஞ்சளாய்ப் பூத்து 'மண்ணின்' நினைவுகளை வேரில் தேக்கிவைத்திருப்பதால் அகற்றுவதா இல்லை விடுவதாவென என் சுபீட்சத்தின் பொருட்டுச் சிறுவனுக்கு மிகப்பெரும் குழப்பம் உள்ளதும் நான…
-
- 0 replies
- 818 views
-
-
கறுப்பு ஆடியின் வலிகள் கருவிலே உரிமைக் குரல் கொடுத்து சாவிலும் வாழ்கிறோம் உலகத்தின் இதயத்தில் ஈழத் தீபம் ஏற்றுவோம்! திரும்பத் திரும்ப வந்து புன்னகைக்கும் துயரத்தில் உயிர் கொதிக்கவும் உதிரம் கொதிக்கவும் குளிர்க் கூட்டிலே வலிகள் சுடச் சுட வாழ்க்கை தொடர்கிறது! கண்ணீர்த் துளிகள் விழிகளில் வழிகிற காலம் போய்... கண்ணீர்க் கட்டிகளாய் உதிரம் கொட்டுகிற கலி காலமிது! கருவறையில் இருந்து கனத்த குரல் ஒலிக்கிறது. "அம்மா நான் தலையோடு பிறக்கவா? இல்லை... தலையில்லாமல் பிறக்கவா?" எப்படிப் பிறந்தாலும் என் இறப்பு என்னவோ தலையில்லா முண்டாமாகுமே! நான் வரவா கருவிலே கரைந்து போய்விடவா? இன்னும் இன்னும் மனிதக் குருதி நிரம்ப…
-
- 1 reply
- 818 views
-
-
-
- 1 reply
- 818 views
-
-
மழைபோல் வந்த குண்டுகளால் மண்ணோடு மண்ணாக மாண்டுபோன மக்களைத்தான் மறக்க முடியுமா! மானம் தான் வாழ்வில் மகத்தானெதென்று மண்ணுக்காக மாண்டுபோன மாவீரர்களை மறக்க முடியுமா! முள்ளீவாய்க்கலில்,முழுவதும் தொலைத்துவிட்டு வட்டுவாய்க்கால் பாலத்தால் வானரக் கூட்டத்தின் வாய்க்குள் நுழைந்ததை மறக்க முடியுமா! தண்ணீர்த் தாகத்தால் தண்ணீர் கேட்டபோது தண்ணீர் குழாயினால் நீரைப் பீச்சிஅடித்ததை மறக்க முடியுமா! தலையால் வடிந்த தண்ணீரை நாக்கால் நனைத்து தாகம் தீர்த்ததைத்தான் மறக்க முடியுமா! நீர்த் தாகம் தீர்ந்தது அன்று இன்னும் தீரவில்லை நாம்கேட்ட சுதந்திர தாகம்.
-
- 3 replies
- 817 views
-
-
தமிழ் மோகத்திலே செயல் வேகத்திலே கொண்ட நேசத்திலே நல்ல பாசத்திலே நெஞ்சின் ஈரத்திலே அன்பின் சாரத்திலே அகத்தின் இளமையிலே அறிவின் முதுமையிலே உள்ளத் தண்மையிலே பேசும் உண்மையிலே நாவின் வன்மையிலே செய்யும் நன்மையிலே உனக்கு நிகர் உலகில் உண்டோ ஈடு செய்ய ஏதும்வழி உண்டோ http://gkanthan.wordpress.com/index/nikar/
-
- 2 replies
- 817 views
-