Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. http://www.ijigg.com/songs/V2CC007PD

  2. வீட்டுக்கொரு வீரன் விளையாட வரவேண்டும் ஏட்டுக்கொரு புலிகளாய் எழுந்த எம் கூட்டங்கள் நாட்டுக்காக என்றும் கொஞ்ச நாள் குறித்துகொள்ளட்டும் பாட்டுக்கொரு புலவர்கள் பாடிநின்ற தேசத்தை மீட்டெடுக்க வீரர்கள் விரைவாக வரவேண்டும் கிழக்குபக்க சிகரத்திலே சிங்கக்கொடி ஏறினாலும் வடக்குபக்க வீதியாலே வெற்றிசேதி வரவேண்டும் எனவே வீட்டுக்கொரு வீரன் விளையாட வரவேண்டும் கிளித்தட்டோ கிறிக்கற்றோ நாட்டுக்காக நாமும் விளையாட வரவேண்டும்

  3. வெண்ணிலா நீ என் கண்ணிலா தொட்டுவிட்டாய் பெண்ணிலா வண்ணங்களில் பால் நிலா பார்வையிலே தேன்கனா சோகம் ஏன் உன் நெஞ்சிலா தாலாட்ட வா தென்றலா காதலில்லை இது வெண்புறா கட்டவிழ்ந்த கவியுலா

  4. பெட்டி நிறைய பணம் இருந்தும் பெருமூச்சு விட்டு காத்திருக்கிறாள் அக்கா.. அழகும் அறிவும் இருந்தும் கண்ணீரோடு காத்திருக்கிறாள் பக்கத்து வீட்டு தோழி.. 'தோசம்' எனும் மூடநம்பிக்கையும் 'சீதனம்' எனும் சம்பிரதாயமும் அழியும் வரை வீட்டுச் சிறையில் காத்திருக்கும் கன்னிப் பறவைகளாக பெண்கள்... http://pirashathas.blogspot.fr/

  5. சாளரத்தில் மோதி விழுகின்ற மழைத்துளிகள்-அட யார் இங்கு தடை போட்டது தூக்கப் பொழுதுகளில் தலை கோதும் என் தாயின் கரங்களுக்கு.

    • 0 replies
    • 1.6k views
  6. பதிவுகள் பத்திரமாய் பேணுங்கள் ......... தமிழ் ஈழத்தாயின் ,விடுதலை நோக்கிய தியாக பாதையின் சுவடுகளை ,பத்திரமாய் பதிவுப் பெட்டகத்தில் பாது காத்து வையுங்கள் நான் இறந்தால் என் மகனும் அவன் இறந்தால் அவன் மகனும் முழு தமிழ் ஈழ சந்ததியும் . படித்து மகிழவேண்டும் ,ஈழவிடுதலை வலியை எம் தலைவனின் ,வழி காட்டலை ,வீரத்தை பார் போற்றும் உத்தமனை ,கலங்காத நெஞ்சனை கருமமே கண் ஆனவனை ,ஒரு வழிக்காட்டியை என் குடும்பம் ,தப்பி வந்தது தன் சந்ததியை காக்க எனக்கு என்ன உரிமை என் தமிழ் ஈழத்தில் என் உடலிலும் தமிழ் ரத்தம் ஓடுவதாலா காட்டிலும் மேட்டிலும் கந்தக புகையிலும் கொட்டும் மழையிலும், கூடார நிழலிலும் என் சனம் துன்பப்பட ,ஓடி வந்த எனக்கு என்ன சொந்த…

    • 7 replies
    • 1.3k views
  7. முத்துக்குமரன் எனும் மாவீரன்..... கவிதை அஞ்சலி.... தமிழ் நாட்டின் செல்வமே நம் முத்துக்குமரனே முத்தான உன் உயிர்தந்து நம் மூச்சையே நிறுத்திவிட்டாய்.... காலையில் செய்திகேட்டோம் கண்ணீரால் நம் உடல் நனைந்தோம் உன் உடலைக் கருக்கிய உன் உறுதி கண்டு மனதளவில் உருக்குலைந்தோம் ..... உயிர்பிரியும் நேரத்திலும் பிரபாகரன் என்றாய் பின்னர் உயிரையே போக்கிவிட்டு தமிழன் பிரபஞ்சதையே நீ வென்றாய்... முத்துக் குழிக்கும் ஊரிலே பிறந்தவனே...... தமிழன் மனங்களிலே முத்தாக உன் உயிர் தந்தவனே..... தமிழ் நாட்டிலே விதையாகி தமிழர் மனங்களிலே முளைத்து விட்டாய்...... உன் மூச்சு அடங்கமுதல் உன் கொள்கைகளை எரியவைத்தாய்.... …

  8. மலையகத்துக்கு மலை முகடுகளின் தகரக் கொட்டைகளிடை மாடி வீட்டு மகன்.. கருங்கற் பாறைகள் துளைக்க நடக்கும் அந்தப் பாதணியற்ற கால்களிடை சொகுசுப் பாதணி போட்ட மகன்.. தேயிலை தடவி வரும் குளிர்காற்றில்.. அன்னைத் தமிழின் வாசனை மங்குமோ.. மறக்குமோ ஏக்கங்களிடை சிங்களமே என் மேன்மை..பேசிய மகன்.. நெடித்து நெளிந்து வீசிய சுழற் பந்துகளிடை கோணலின் கோணத்தில் வீசிய தூஸ்ரா மகன்... மகிந்த மாமாவின்.. கோத்தா அங்கிளின் சுறாக்களிடை வளர்ந்து நின்ற செல்லக் கிளி மகன்.. சொந்த அன்னை நித்தமும் தொழுது சென்ற செல்வ விநாயகன் முன்னிடை தொழாது பள்ளியும் பன்சலையும் தொழுத மகன்.. …

  9. பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும் நான் பிறந்த நாடு ,......இன்று நாதியற்ற நிலையில் பாலும் தேனும் பொழிந்து பார் புகழ்ந்த நாடு ஆண் பெண் பேதமின்றி குஞ்சு என்றும் குழந்தை என்றும் முதியவர் ,உடல் வலு இழந்தோர் என்றும் கிஞ்சித்தும் பாராமல் கொத்துக்கொத்தாய் கொன்று ஒழிக்கையில் தாய்க்கு நிகராம் என் தாய் நாடு தமிழ் ஈழத்திரு நாடு சிக்கி சின்னா பின்ன பட்டு கொடியவன் கோத்தபாயா கூட்டத்துடன் ராஜ பட்சே கூடுச்சேர்ந்து ,பிச்சையெடுத்த உதவிபணம் பீரங்கியாய் மாற , ஆட்லரியாய் மாற எக்காளமிட்டு ,தன் இளைய,சந்ததியை பலி கொடுத்து பலிகடாவாக்கி சீரழியும் தேசம் என்று தான் மாறும் ஆறாது மாறாது அழுதாலும் தீராது ஓயாத துயர் படும் என இனம் …

  10. கருத்தும் கவிதையும் - வ.ஐ.ச.ஜெயபாலன் . பெண்கவிஞர் ஒளவ்வையார் கற்பை உடலுடனோ மனசுடனோ இணைக்காமல் ”கற்பெனப் படுவது சொற் திறம்பாமை” என ’சொல்; சம்பந்தப் பட்டதாக வரையறை செய்கிறார். சொல் அடிபடையில் குழந்தை பெறுவது தொடர்பானதுதான். சொல் அடிப்படையில் உன்னோடு வாழும்வரை வேறு பெண்ணை/ஆணைச் சேரேன் என்பதுதான், இது இருவருக்கும் பொதுவானது. . இந்த வரைவிலக்கணத்தின்படி என் அனுபவத்தில் நோர்வீயிய ஆண்களும் பெண்களும் கற்புநிலையில் உச்சம் என்பேன். ஒரு சமயத்தில் ஒருவன் ஒருத்தியென தளம்பாமல் வாழ்வது, மனம் கசந்தால் நேரே பேசி விலகியபின் மட்டுமே வேறு துணை தேடுவது என அவர்கள் பண்பில் சுதந்திரமான கற்புநிலை. சிறக்கிறது. இதனால் உறவின் வெளியே தொடர்புகள் அக குறைந்த சூழல் அமைந்துள்ளத…

    • 1 reply
    • 826 views
  11. அளவுகள் தொடர்பான பிரச்னை! - கவிதை செல்வி ராமச்சந்திரன், ஓவியம்: ரமணன் உன்னை எனக்கு எவ்வளவு தெரியுமென்று நம்புகிறேனோ அவ்வளவு தெரியாமலும் இருக்கிறது முதல்முறையாக இன்று உனக்கு ஓர் ஆடை வாங்கச் சென்றபோது உன் அளவு எனக்குத் தெரியாமல் போய்விட்டது எதிர்பாராத ஒரு பரிசுக்கான அளவை உன்னிடமே எப்படிக்கேட்பது என்றும் எனக்குத் தெரியவில்லை இருளில் தழுவிக்கொண்டபோது உன் தோள்கள் எப்படி விரிந்திருந்தன என்றோ உன் மார்புகள் எப்படிப் பரந்திருந்தன என்றோ நான் அறிபவை எல்லாமே உத்தேசமான அளவுகளாக இருந்தன எனது ஒவ்வொரு மனநிலையிலும் அவை வேறு வேறு அளவுகளாக குறுகலாகவோ பரந்ததாகவோ இருக்கின்றன உன்னைப்போலவே இருந்த மாடல் பொம்மையின் முன் நி…

  12. மணிக்கூட்டுக் கோபுர வளைவில் மெதுவாக தலை நிமித்தும் என் சைக்கிள் உச்சி பிழக்கும் வெய்யில் நாற்பது நிமிடம் விடாமல் வலித்த‌ களைப்பு நாக்கு வறண்ட‌ ‌ தாகம் அத்தனையும் முற்ற வெளியில் பஞ்சாய் பறக்கிது உன் தரிசனம் கிடைக்கும் என்ற அந்த ஒரு நினைப்பில் மாத்திரம் விடுதியை விட்டு புறப்பட்டு சுப்பிரமணியம் பூங்காவை தாண்டிவிட்டாயா பொல்லாத பௌதிகம் என்று லைபிரரி வாசிப்பறையிலேயே படுத்துவிட்டாயா படித்தது பத்தாது என்று முனியப்பரின் சன்னதியில் வரம் கேட்டு நிற்கின்றாயா எல்லாம் முடித்தாச்சு என்று றீகலில் நண்பிகளுடன் ஆங்கில சினிமாவிலா என்ன நடந்தது இன்று வளைவில் வந்தவுடனே கண்ணுறும் உனை இன்று என் …

  13. உயிரடங்கிய சிறு பறவை - நல்ல சமாரியனின் நாட்குறிப்பு - கவிதைகள் உயிரடங்கிய சிறு பறவை கவிதை: பாப்பனப்பட்டு வ.முருகன், ஓவியங்கள்: ரமணன் அதிகாலை நடைப்பயிற்சியில் நெடுஞ்சாலையோரம் காணக்கிடைத்தது விரைந்த வாகனம் மோதி விழுந்துகிடந்த சிறு பறவையொன்று. இதயம் படபடக்க இரு கைகளிலும் அதை ஏந்திக்கொண்டேன். அதற்காகவே காத்திருந்ததைப்போல் அடங்கிப்போனது அதன் உயிர். கனத்த மனதோடு கைவிரல்களால் மண்பறித்து போதுமான அளவில் அகழ்ந்தெடுத்த குழிக்குள் அதைப் புதைத்துவிட்டு வீடு திரும்பினேன். செந்நிறப் பிசுபிசுப்புப் போக கைகளை நீரால் அலசிய பின் மென்சோகத்தையும் நுண்வலியையும் கடந்து வரவென்று சிவப்பு மசிப் பேனாவால் கவிதையொன்றை எழுதி முட…

  14. வெண் மணற் பரப்பில் கால் புதைய கனவுகள் சுமந்து நடக்கையில் காலில் இடறிய கல்லின் காயத்தில் கண்ணீர் கனதியானது காலங்கள் காத்திருக்கலாம் என் காயம் ஆற்ற - ஆனாலும் இழந்த நேரத்தின் இன்பங்கள் கணக்கில் வாராது கனவுகளாய் நீரில் போட்ட கோலம் நினைவில் அழிந்து போவதுபோல் காலத்தின் கணக்குகளும் - ஒருநாள் காலாவதி ஆகலாம் எண்ணற்ற எண்ணங்களின் குவியல் எப்போதும் என்நெஞ்சிருக்க போராடும் தெம்பின்றி போருக்கும் எதிரே யாருமின்றி பொங்கிடும் மனதின் பொழுதுகள் போக்கிடமின்றி போட்டிபோட ஏற்புடையது அல்லவெனினும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் எப்போதும் என்னுடனே இருக்கும் சிதைந்துபோன கனவுகளின் சேமிப்பின் நினைவுகள்

  15. அந்தப் புத்தகத்தின் பெயர்... ஒரு மிகப்பெரிய எழுத்தாளன் எழுதிய புத்தகத்தை இறுதியாய் எழுத படிக்க தெரிந்த ஒருவன்தான் வாங்க ஒப்புக்கொண்டான் எப்போதும் போல பெரிய நூலகத்தில் பலரும் படித்துப் பயன்பெற விரும்பிய புத்தகம் புத்தக அலமாரிக் கனவுகளுடன் புது மேசையின் மேல் குடியேறுகிறது. புத்தக வாசத்தை உணரும் நுட்பத்தை மறந்து போயிருந்தான்-அநேகமாய் புத்தகத்துடன் உரையாடும் கலையை அறியாதவனாயும்... இருந்தும் கோப்படும்போது தூக்கி எறியவும், மேசையின் மீது வைக்கப்படும் உணவு பண்டங்களின் மீது மூடி வைக்கவும், புழுக்கமான நேரத்தில் விசிறியாகவும், குழந்தை விளையாடிக் கிழித்தெறியும் காகித பொம்மையாகவும், ஏதாவது ஒரு வழியில் அந்த இல்ல உறுப்பினருக்கு புத்தகம் பயன்பட்டுக்கொ…

  16. முகநூலிலிருந்து...

  17. Started by Thamilthangai,

    ஈழ வேள்வி!.. சுதந்திரம் என்பது மஞ்சமா? -நாம் சிந்திய இரத்தங்கள் கொஞ்சமா? வீரர்க்கு எம்மிடை பஞ்சமா? நாம் வெகுண்டெழில் எதிரிகள் மிஞ்சுமா? சுதந்திரம் வேண்டிநாம் கூடினோம்-கையில் ஆயுதம் ஏந்தி ப்போராடினோம் சுடும் நெருப்பாகவே மாறினோம் நம்மை சூழ்ந்த பகைவரை சாடினோம்? வீரர்கள் சாவது இல்லையே -விழி நீரினை சிந்தாதே அன்னையே போரில் மடிவதை எண்ணியே -தமிழ் போராளி மகிழ்வது உண்மையே அன்னையே இன்னமும் கலக்கமா?-இனி மேலொரு துயரில்லை உனக்கம்மா அந்நியன் இனி இங்கு யாரம்மா? மகன் அரணாய் இருக்கிறான் பாரம்மா புலிகள் பசித்தாலும் புல்லையே -ஒரு போதும் புசிப்பது இல்லையே உலகினைத் தந்தாலும் அள்ளியே -நம் உரிமைகள் கைவிடார் உண்மையே!

    • 5 replies
    • 1.3k views
  18. Started by தமிழரசு,

    தொடாமல் பேசுவது காதலுக்கு நல்லது. தொட்டுப் பேசுவதுதான் நட்புக்கு நல்லது. தொடுதலின் வழியே கசியும் அர்த்தங்களை எந்த மொழி பேசிவிடும் அறிவுமதி. தமிழ் கூடல்.

  19. இணைந்தோம்! உலகத் தமிழராய் நாங்கள் இணைந்தோம்! நினைத்தோம்! எங்கள் தமிழ் உயிர் உயிரென நினைத்தோம்! (இணைந்தோம்) தமிழின் கலைகளும் தமிழின் பண்பாடும் தாங்கினோம் இன்பம் தாங்கினோம்! அமிழ்தமாய் எங்கள் நெஞ்சில் ஊறும் தமிழ் அன்பினால் உலகை வாங்கினோம்! (இணைந்தோம்) சிரித்த தமிழ் முகம் நிலைத்த வையகம் செய்வோம் என ஆணை ஏந்தினோம்! விரித்த சிறகோடும் தழைத்த புகழோடும் விடுதலை வானில் நீந்தினோம்! (இணைந்தோம்) மானமே வாழ்வாய் நின்றோம் மலைகளை மோதி வென்றோம்! இயற்றியவர்: உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்

  20. நமக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் வேண்டாம் நமக்குள் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்வோம் அப்படியென்றாலாவது சமாதான மீறல் புரிகிறாயா என்று பாப்பம் நான் குடிக்கவேயில்ல இருந்தபோதும் குடிகாரனாய் நடிக்கிறேன் உன்னை பேசவைக்க வேண்டுமே என்ன தவம் செய்ததோ என் வார்த்தைகள் உனக்காய் கவி எழுதுகையில் மெய் எழுதுக்களும் உயிர் பெற்று விடுகின்றது மழை விட்டது உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் இருந்தும் என் குடைக்குள் இன்னும் நீ கோவம் வரும் போது உன்னை நினைக்க சொன்னாய் வராத போதும் உன்னை நினைத்தேன் இப்ப என்னை நினைப்பாயோ -யாழ்_அகத்தியன்

  21. வெட்டடா வெட்டடா பகைவனே வெட்டடா பதுங்கிட நீயின்று பங்கரை வெட்டடா... நின்மதி தொலைத்து நித்திரை முழியடா- உன் கோட்டைகள் மீதிலே குண்டுகள் விழுமடா... ஆகயம் அதனையே அண்ணாந்து பாரடா புலியது பறவைகள் புயலென வருமடா... எண்ணெய் குதங்கள் எங்கினும் எரியுமே கடற் படை தளங்களும் கடுகதி சரியுமே... சட்டங்கள் போட்டா சாகவே அடித்தாய் வட்டீயும் முதலுமாய் வலிந்தே தருகிறோம்.... எத்தனை இன்னலை எமக்கது அழித்தாய் இந்தோ தருகிறோம் இன்னலை ஏரடா.... வல்ல அரசென்று வாயது அடித்தவா பிடரியில் கால் படா எங்கட ஓடினாய்...??? - வன்னி மைந்தன்

  22. வணக்கம் நண்பர்களே! இது ' வேங்கையன் பூங்கொடி" எனும் காவியம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யும் பகுதி.

  23. ஈழம் வரும் வேளையென்றே நினைத்திருந்தோம்..அண்ணா... பேரிடியாய்.. உன் பிரிவை உள்வாங்கிக்கொண்டோம்.. வேதனையில்.. விழுந்த நெஞ்சங்களை காணுகின்றோம்.. தமிழ்ச் செல்வன் அண்ணா உன்னை நினைந்து விழி ததும்புகிறோம்.. பூத்திருக்கும் புன்னகையில் ஒளி தருவாய்..நம் தலைவரவர் கரமிணைந்து செயல் புரிவாய்.. நெஞ்சமெல்லாம் வாடி நிற்க எங்கு சென்றாயோ.. நேசமெல்லாம் கண்டு கொள்ள ஒளிந்து கொண்டாயோ.. அழுதுவிடவேண்டாமென்று.. விழிகளிடம் சொன்னேன்.. இதயம் கிடந்து அழுகிறதே யாரிடம் சொல்வேன்.. புலிகள் பலம் குறையுமென்று. எதிரிகள் நகைப்பார்.... உன்னை விதைத்த இடம்.. செழிக்கும் அதை வீணர்கள் அறியார்.. வீரப்புலித் தலைவரரவர்.. சோர்வது இல்லை.. அவர் கரங்களிலே.. உறுதி சேர்ப்…

  24. தொலைந்து போன சுயங்கள் அங்கீகாரமே தேடலென்றாகி, மாற்றார் மதிப்பீட்டில் சுயத்தை அளப்பதால், மற்றவர் கணிப்பே தீர்ப்பென்றாகித், தொலைந்து போனது எத்தனை சுயங்கள்? அம்மா மகிழ வைத்தியராகி, அயலார் மதிக்க பட்டங்கள் அடுக்கி, மனையாள் மகிழ ஊதியம் கூட்டி, மனதுக்குள் புழுங்கி யாருக்கு லாபம்? "பத்திஞ்சி"யைப் பன்னிரண்டாக்கும், மின்னஞ்சல் விளம்பரம் மெய்யெண்டு நம்பி, இல்லாத காசைக் கடனாகப் புரட்டிக், களிம்பு தடவுவோர் உள்ளது எதனால்? சிலிக்கன் நிரப்பும் சில்லெடுப்புக்களும், "கன்னிமை"ப் பம்மாத்துச் சத்திர சிகிச்சையும், உதட்டுக்கும் மூக்கிற்கும் பிட்டத்துத் தசையிற்கும், வயிற்றிற்கும் தோலிற்கும் அறுப்புக்கள் எதனால்? நாலு பேரிற்கு நாலாயிரம் சதுரஅடி, …

    • 19 replies
    • 2.9k views
  25. Started by சுஜி,

    அன்பே விழியாக நான் இருக்க இமைகளாக நீ வர வேண்டும் மலராக நான் இருக்க மணமாக நீ வர வேண்டும் கடலாக நான் இருக்க புயலாக நீ வர வேண்டும் ஒவியமா நான் இருக்க ஒவியனாய் நீ வர வேண்டும் மேகம்களாய் நன் இருக்க மழயாக நீ வர வேண்டும் வானவில்லாய் நான் இருக்க நிறங்களாய் நீ வர வேண்டும் உன் நினைவகா நான் இருக்க உயிராக நீ வர வேண்டும் சுஜி நண்பி எழுதினது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.