கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
கட்டோடுவந்த கார்குழலாள் தளிர் நடையில் நெஞ்சம் பட்டோடுகின்றதுவே ! இதை எப்பாடு பட்டும் மட்டோடு வைக்க - மனம் விட்டோடுகின்றதுவே . முக்காலம் உணர்ந்த முனிவனவன் மனதுக்கும் மாறாது இந்தக் குறை. சித்தர் பாட்டுக்கும் முன்னாலே வந்தாச்சு அன்றே மாறாத துன்பக் கதை. தடை தட்டாத முகிலும் மண்ணை எட்டாதே மழையாய் துன்பம் பட்டாகவேண்டும் மனம். காதல் கிட்டாத நிலையில், முட்டாத வரையில், வீணாகும் வாழ்வு தினம். பருவச் சிட்டோடு வாழ கிட்டாதோ அந்த எட்டாத வானவெளி ? இனி .. வற்றாது ஊறும் முற்றாகும் வரையில் திகட்டாத காதல்க் கவி. ----------------------------------------------------- 1997 காலப்பகுதி நடுநிசி ஒன்றில்,சந்தத்தை மட்டுமே…
-
- 1 reply
- 801 views
-
-
சில கற்பனைகள் உன்னுடன், இது போன்றதொரு தருனம், இனி நிகழாதெனில், இன்றே என் வாழ்வின், இறுதி நாளாகட்டும்..!!! உனைப் பார்த்த அந்த சில நொடிகளிலேயே, பற்றிக் கொண்டது காதல் நெருப்பு...! காதல் நெருப்பிலே, நான் கருகுகிறேன்..... நீ... குளிர்காய்கிறாய்....!!!!!!!!!! suddathu....http://rajapattai.blogspot.com/2006/09/blog-post_115712824924957211.html
-
- 0 replies
- 800 views
-
-
உயிரை கொடுத்து உணர்வை வளர்த்தாய் நீ இட்ட தீ எரிந்து சமைக்கும் முத்துக்குமரா!! மாறாத புன்னகையே மாசற்ற முத்துக்குமரா ஆறாத காயங்களை தாங்கிநிற்கும் தமிழ்மண்ணின் சோகத்தைத் தாங்காமல் சோதனை தந்தாயோ பாகத்தின் நிலையுறுத்தி பாரெங்கும் தெளியவைத்து வீறாகி உன்னுயிரை சுடரேற்றி உரமிட்டாய் என்னருமைத் தமிழுக்கு வித்தான வெண்ணிலவே கண்களிலே நீரழைக்க கனலேற்றித் துடித்தாயே பித்தரைப் போலநாம் புலம்பெயர்ந்த நாட்டினிலே புத்தரையடி பேணும் புனிதரல்லாச் சிங்களனின் முத்திரை பதிக்கின்ற போலி முகங்களுடன் கிண்டலுடன் கேலிபண்ணும் தாயைப்பழி துணைகளுடன் ஏதுவழி யறியாமல் சட்டதிட்ட வகையுணர்ந்து பேசவழியறியாது அடக்கமது தான்மருவி இனமழிக்கும் ராஜபக்ஷ மகிந்தனெனும் மகாவசுரன் …
-
- 2 replies
- 800 views
-
-
விழியிரண்டும் குழிவிழுந்து மொழியிழந்து முகம்வாடி உடல் மெலிந்து தள்ளாடி நடைபோகும் பயணமிது… ஊரிழந்து உறவிழந்து ஊணுறக்கம் தானிழந்து உண்ணவழி ஏதுமின்றி கொடியதொரு பயணமிது… (விழியிரண்டும்……) சுற்றிவர நரிக்கூட்டம் நடுவில் நாமோர் ஆட்டு மந்தை வெட்டவெளிப் பூமியிலே வெறுங்கையாய் நடைப்பயணம்… முள்வேலி முகாம் நோக்கி யாதொன்றும் பிழைபுரியாப் பாவியரின் நடைப்பயணம்… பாவியரின் நடைப்பயணம்… (விழியிரண்டும்……) பூனைகளின் குகை நோக்கிச் சுண்டெலிகள் நாங்களிங்கே ஏதிலியாய்ப் பாவியராய் பயணிக்கும் நேரமித…
-
- 9 replies
- 800 views
-
-
-
புலம் பெயர்ந்த என் ஈழத்து நண்பர்களை இப்போது நான் சந்திப்பதில்லை அவர்களது மின்னஞ்சல்களை நான் திறப்பதில்லை கணினியின் உரையாடல் அறையில் அவர்களது வணக்கங்களுக்கு இப்போது நான் பதில் வணக்கம் சொல்வதில்லை வரலாற்றில் இதற்கு முன்பும் இது போல்தான் இருந்ததா அழிவின் மௌனங்கள்? நிறைய பார்த்தாகிவிட்டது சிதைக்கப்பட்ட உடல்களின் புகைப்படங்களை நிறைய காண்பித்தாகிவிட்டது படுகொலைகளின் படச்சுருள்களை நிறைய படித்தாகிவிட்டது கொரில்லா போர் முறையின் யுத்த தந்திரங்களை வரலாற்றில் இதற்கு முன்பும் இப்படித்தான் சொல்லப்பட்டதா விடுதலையின் கதைகள்? முப்பதாண்டுகளின் குருதிவெள்ளம் ஒவ்வொரு சதுரமைலாகச் சுருங்கி இப்போது ஒரு கண்ணீர்த்துளியாக எஞ்…
-
- 0 replies
- 800 views
-
-
நீ வந்து பேசுகையில் பூக்களுக்கு வருத்தம்தான். காற்றிலேயே தேன் குடித்து திரும்பி விடுகின்றனவாம் தேனீக்கள்!
-
- 0 replies
- 799 views
-
-
ஆழிக் கடலடி ஆட்டம் கண்டதால் ஆழப் பெருங்கடல் மேலெழுந்தது அதிர்வின்றி அமைதியாக ஆழ்கடல் அசைந்து வந்து ஓசையற்று ஒட்டுமொத்தமாய் ஒன்றுமிலாது கொண்டு போனது அன்னை மடியென ஆடிக் கழித்தவர் அலைகடலோடு கூடிக் கழித்தவர் ஆவலோடு உனைப் பார்த்திருந்தவர் அத்தனை போரையும் அரை நொடியுள் அள்ளிக் கொண்டு சென்று விட்டாய் அந்த நொடிவரை ஆயிரமாய் அகம் முழுதும் ஆசைகளோடு அடுத்தநாளின் கனவுகளோடு ஆடிப் பாடிக் களித்திருந்தார் அனைவர் மீதும் கோபமென்ன அடித்துக்கொண்டு சென்றுவிட்டாய் பத்து மாதம் சுமந்த பிள்ளையை பள்ளிக்கனுப்பிய பாலகனை கட்டிய கணவனை காதலனை அத்தனை உறவையும் அக்கணமே அகதியாக்கிச் சென்றுவிட்டாய் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்த வீடுகள் ஏகாந்தமாய்த் திரிந்த வீதிகள் எழில் பொங்கும் எங்களின் ஊர்கள் …
-
- 14 replies
- 799 views
-
-
நரம்பு நாடிகள் துடித்து இரத்தம் கசிந்து உறவுகளின் உயிர் பிரிந்தாலும் தளர்ந்து விடதே தமிழா... வருவான் புலி வீரன் பொங்கி எழுவான் உமை காக்க.. உம்மை கொன்ற சிங்கள காடையர்களை கொன்று குவிக்க... கண்ணீரை சிந்தாதே தமிழா உன் கண்ணில் மகிழ்ச்சியை உரு வாக்க புலி வீரன் இருப்பன் உன்னுடன் உன் இறுதி முடிவிலும் நம்பிக்கையை இழந்து விடாதே தமிழா.. உம் மக்களையும் நாட்டையும் காப்பாற்ற புலி வீரன் இருப்பான் தமிழிழம் ஒரு நாள் மலரும் சோகம் கொள்ளாதே தமிழா...
-
- 0 replies
- 799 views
-
-
கவிதையின் கவிதைகள் http://1.bp.blogspot...d-sad-poems.jpg என் அழுத விழிகளின் கண்ணீரிலும் ஓவியங்கள் தெரிகின்றதாய்... உணரும் மனதின், அப்பாவித்தனத்திற்குப் பெயர்தான்... "என்னைக் கடந்து சென்ற காதல் என்"பதா? இன்றுவரை விடைதெரியாத கேள்வி! அனுபவங்கள் பலவிதம்...!-அதில் இதுமட்டும் தனிரகம்! கவிதை அனுப்பிய கவிதை 03 ஐப் பார்க்க இங்கே அழுத்துங்கள் . http://www.yarl.com/forum3/index.php?showtopic=105542
-
- 0 replies
- 799 views
-
-
நேற்றிரவு நிறையப்பேர் நித்திரை கொள்ளவில்லையென சொல்லினர்... அவன் விழிகள் வேட்டை நாயைப்போல வேட்டையாட துரத்துவதாயும் கொடும் கனவொன்றில் பெரும்பாம்பொன்றின் வாயில் சிக்கியதாயும் துப்பாக்கி முனையில் நானே நிற்பதைபோலாயும் அத்துணை பயத்திலும் ஏதுமற்ற ஞானியைப்போல எப்படி இயன்றதென்றும் இன்னோரன்ன புகழ்தலும் பிதற்றலும்,இரங்கலும் எள்ளலுமாய் நேற்றிரவு நிறையப்பேர் நித்திரை கொள்ளவில்லையென சொல்லினர்... எனக்கு, ஒவ்வொரு இரவும் பல்லாயிரம் வன்னி இரவுகளை நினைந்தும்,கதைத்தும்,அழுதும்,அரற்றியும் புலர்கிற பொழுதெலாம் புத்திரர் நினைப்பில் இதுவும் இன்னோர் இரவே....
-
- 2 replies
- 798 views
-
-
கோவத்தின் பெறுமதி அறியாதவன் கண்ணீரின் கனதி அறியாதவன் அடிமைத்தனத்தை அழகென ஆரதிப்பவன் மானத்தின் மகத்துவம் புரியாதவன் அவன் யார்? நான் நான் இழவு வீட்டில் சண்டை பிடித்தேன் மயானத்துக்கு செல்ல முடியாத பிணங்கள் முற்றத்தில் நாறுகின்றது பாடை தூக்க நாலுபேரை ஒன்றாக நிற்க விடவில்லை ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற பழமொழியை ஊர் ரெண்டுபட்டால் கொன்றவனுக்கு கொண்டாட்டமென்று புதுமொழியாக்கியவன் பேரினவாதம் கோவணங்களை அவிட்டு கொடியாய் பறக்கவிட்டுள்ள நிலையில் உரிமையாளர்கள் என்கோவணம் பெரிது உன்கோவணம் பெரிது என போட்ட சண்டையில் முன் நிற்பவன் சாவு வீடு நோக்கி நட்பு பகை மறந்து செல்வார்கள…
-
- 6 replies
- 798 views
-
-
விதியுடன் அரங்கேறும் எம் விளையாட்டு வினையிது யார் செய்த பாவம்-கண்ணே உயிர்கள் பணயம் எம் உள்ளத்தில் உறங்காத பய அலைகள் நீயும் சேர்ந்து கொண்டாய் நீளும் எம் துயரங்களுடன் அனுபவித்துப்பார் இதுதான்-இந்த அந்தரங்க உலகில் எம் அவசர வாழ்வு அனாதைகளை காக்க இல்லங்கள் ஆயிரம் இன்னும் கட்டுவோம்-ஆம் அனாதைகளுக்கு எம்மிடம் பஞ்சமில்லை அங்கவீனர்கள் பாவம் அங்கே தனிமையிலே அவர்களுக்கு கதைபேசி மகிழ புதிய நண்பர்கள் விரைவில்... வெறுக்காதே இம்மண்ணுலக வாழ்வை வெறுத்திடு இம்மண்ணில் உன் பிறப்பை மட்டும்....
-
- 0 replies
- 798 views
-
-
தேவனுக்கு ஒரு திறந்த மடல் அன்பான பாலகனுக்கு , உலகமே உம் வரவை உற்சாகமாய் கொண்டாட என் மண் மட்டும் ஏன் ஐயா சிரிப்பைத் தொலைத்தது ??? ஆழிப் பேரலையாய் ஆவேசமாய் வந்தீரோ ? ஆரவாரமாய் என்மக்களை உம்மிடம் இழுத்தீரோ? பல வடுவை சுமந்த எமக்கு உம் வருகை உவப்பாய் இல்லை....... வெளியே நாம் சிரித்தாலும் உள்ளே நாம் உறைந்துதான் போனோம். வருடங்கள் பல பறக்கும் காலங்கள் கலகலக்கும் ஆனாலும் நீர் வைத்த ஆழ வடு ஆறவில்லை எங்களுக்கு. வாரும் பாலகனே வாரும் .. என்மக்கள் நிலையில் மற்றதை தாரும்.. கோமகன் மார்கழி 24 2013
-
- 6 replies
- 798 views
-
-
கண்ணீரில் கரையும் தலையணைகள் கண்ணீரில் கரையும் தலையணைகள் கணத்திற்குக்கணம் காந்தவலையுளே பதிந்து நீந்தும் கணக்கிலா இணையத் தகவல் மீன்களாய் எல்லைகாணா மனவெளி முழுதும் அழுந்தப் பதிந்த உன் குரலொலிகள் சொர்க்கமே! உனை பாலிக்க வேண்டிய பொழுதுகளில் ஏனெனக்கு இன்னுமோர் பணியும் அதற்கான பயில்வுகளும்? ஊட்டமுடியாத தொலைதூரமதில் ஒரு நெடுநாட்துயர்போலே இறுகிக்கிடக்குதென் கலங்களுள்ளே உனக்கேயான திருவமுது சொந்தங்களில்கூட எந்தப் பெண்மையுமே எனக்கீடாய் உனக்கில்லையென்றே உணர்ந்திருந்துங்கூட நாட்களாய்………! வாரங்களாய்………! மாதங்களாய்………! விலகியிருக்கின்றேனே இனிக்குமுந்தன் இதழ்முத்தமிழந்து. கற்பூரதீபமே! வேண்டுமானால் இக்கலாசாலை விடுதிக் கட்டில் தலையணை…
-
- 0 replies
- 798 views
-
-
எழில் பொங்கும் என்னூரின் ஏகோபித்த நினைவுகளோடு என் பயணம் தொடர்கிறது திருவிழாவின் தெருக்களில் தென்றலாய் வந்துபோனவைகளும் வீதியில் தேரோட நீரோட்டமாய் வந்து போனவைகளும் மனதில் மங்கலாக வந்து போகின்றன மார்கழி மாதத்து மரகதத் துகள்களாய் இன்னும் நெஞ்சத்து அடிப்பரப்பில் அடர்த்தியாய் ஒட்டிக்கொண்டபடி அணைத்து ஆறுதல் தருகின்றன வீட்டோரத்து வெடிப்புக்களின் இடைவெளிகளில் தவழும் எறும்புகளின் வரிசையின் கூட்டுப்போல் எல்லையற்று நீள்கின்றது நினைவு கால்கள் புதையும் கனவுகளோடு கண்விழித்த காட்சிகள் இன்னும் பசுமை குலையாத பச்சை வயலாய் பள்ளிகொள்ளும் போதில் வந்து போகின்றன எத்தனை கடந்தும் அத்தனையும் அசைக்க முடியா ஆணிவேராய் அடிமனத்தின் படிக்கட்டுகளில் ஆழப்பதிந்து அல்லல் செய்தபடியே
-
- 5 replies
- 797 views
-
-
படைப்போம் படைப்போம் புரட்சிகள் படைப்போம் உடைப்போம் உடைப்போம் இயலாமை உடைப்போம் எடுப்போம் எடுப்போம் அறிவாயுதம் எடுப்போம் தவிர்ப்போம் தவிர்ப்போம் அறியாமை தவிர்ப்போம் துறப்போம் துறப்போம் சுயநலம் துறப்போம் தடுப்போம் தடுப்போம் இருளினை தடுப்போம் மறப்போம் மறப்போம் வேற்றுமை மறப்போம் நிறைப்போம் நிறைப்போம் ஒற்றுமை நிறைப்போம் மறுப்போம் மறுப்போம் புறங்களை மறுப்போம் தெரியோம் தெரியோம் கறைகளாய்த் தெரியோம் அறிவோம் அறிவோம் தன்பலம் அறிவோம் புனைவோம் புனைவோம் புதியன புனைவோம் அழிப்போம் அழிப்போம் மடமையை அழிப்போம் வளர்ப்போம் வளர்ப்போம் இனமானம் வளர்ப்போம் பயில்வோம் பயில்வோம் சரித்திரம் பயில்வோம் முயல்வோம் முயல்வோம் …
-
- 2 replies
- 797 views
-
-
தாய் நிலமும் தனையர்களும் இந்துக் கடலில், முஷ்டி உயர்த்திய கையினைப் போன்ற என் அழகிய தேசமே என்னுடன் பேசு. நாவில் நீர் ஊற குட்டிகள் பின்னே அலையும் நாய்களைக் காட்டுக்குதிரைகள் உதைத்து நொறுக்கும் 'நெடுந்தீவின்' புல்வெளிகளை நாங்கள் இழந்து படுவோமா ..... 'அறுகம் குடாவில்' தோணிகள் மீது அலைகள் எறியும் கடலை அதட்டி, வலைகளை விரித்து நூறு நூறாண்டாய் முஸ்லிம் மீனவர் பாடும் பாடலை நாங்கள் இழப்பமோ? வரலாறொன்றின் திருப்பு முனையில் மார்புற எம்மை அணைத்த படிக்கு போர்க்குணத்தோடு நிற்குமெம் தாயே சொல்க எனக்கு! எலிகள் நிமிரவும் வளைகள் உண்டே. உண்டே உண்டே விலங்குகள் பறவைகள் மரங்கள் நிமிர்ந்திட சரணாலயங்களும் தேசிய வனங்களும். மனுகும…
-
- 0 replies
- 797 views
-
-
யுத்தம் தந்த பட்டம் - விதவை! சொந்தம் தந்த பட்டம் - தனிமை! கணவர் தந்த பட்டம் - கௌரவம்! குழந்தை தந்த பட்டம் - சொர்க்கம்! சமூகம் தந்த பட்டம் - சகுனம்! இனம் தந்த பட்டம் - பரிதாபம்! வரலாறு தந்த பட்டம் - அவலம்! வாழ்க்கை தந்த பட்டம் - வறுமை! தனிமை தந்தது - தயக்கம்! ஏக்கம் தந்தது - தாயகம்! நான் பெறாத பட்டம் - களங்கம்!
-
- 15 replies
- 797 views
-
-
என்னில் உன் விழியும் ... உன்னில் என் விழியும் .... இடம் மாறியதே -காதல் ...!!! நீ என்னை பார்க்கும் ... போதெல்லாம் என் ... கண் வலிக்கிறது ... என் விழி .... உன் விழியில் ...!!!
-
- 4 replies
- 796 views
-
-
கைகட்டி கதை கேட்டு உங்கள் புன்சிரிப்பின் மர்மம் தெரியாது ..நாம் திகைத்து நின்ற காலம் மறக்குமா ஆள் கூப்பிடுது வரட்டாம் என்றால் ... பல யோசனை வரும் நடக்கபோகுது எல்லாம் சரியா திரும்ப திரும்ப நாலுதரம் சரிபார்த்து பதட்டமா வந்து நின்றால் நீங்களே சொல்லும் ... கதை வெட்டையில் மாடு நிக்கு . போய் அடிச்சுட்டு வாங்கோடா இரவுக்கு கொத்து சாப்பிடுவம் போங்கோ நான் பின்னாடி வாரேன் வாகனத்தில் .. பயிற்ச்சியில் கவனமும் கடும் போக்கும் பாசத்தில் தோள்தட்டி தலை கோதி தட்டி கொடுத்து ஊக்கம் அளித்து கதை கேட்டு கேட்பதை செய்து கொடுத்து நிப்பியள் .... நிங்கள் வரிப்புலியுடன் மிடுக்கா நடக்கும் அழகே தனி எதிரிக்கி உங்களை கண்டால் பிடிக்கும் கிலி ஏழு பேரிச்சம்பழம் தந்தது எங்கடா ஆறு…
-
- 4 replies
- 796 views
-
-
வணக்கப்பாடலும் மாவீரர் வணக்கமும் எம் தலைவரின் சிந்தனையும் திருவள்ளுவர் ஆண்டும் மாதமும் திகதியும் நேரமும் கூடவே பண்பலை வானலையில் .. என்ன வேலை இருப்பினும் வானொலி அருகிருக்கும் மறவர் வீரம் பாடி அரசியல் அலசும் தாமரை தட்டாகம் பின்னர் ஒரு குறு நாடகம் ஒலிவடிவில் .. உண்மை வந்திடும் என்னும் பயத்தில் தேடி வந்து தாக்குவார் சிங்களம் கோபுரத்தில் சேதம் வரும் ஆனாலும் கொள்கையில் சிறிதும் வராது ... செய்திகள் இனிதே வரும் வெற்றிகள் சொல்லி எப்படி முடியும் என்பார் அதிர்ச்சியில் பலர் கோபுரம் சாய்ந்ததால் என்ன பற்றி எரிந்தால் என்ன பனையிலும் பாலை மரத்திலும் அண்டனா இருக்கும் .. தவபாலன் குரல் வருமா இனி எமக்கு புதுவையின் கவி வருமா வீரரை போற்றி அண்ணனின் உரைவருமா மாவீர…
-
- 10 replies
- 796 views
-
-
தடயமின்றி அழித்திடுவோம் அடிமைகளின் கூட்டம் கண்டேன் அகமகிழ்ந்து பேச கேட்டேன் ஆயாவை தலைவியாக்கிவிட்டு ஆனந்த கூத்தாட கண்டேன் வேட்டிக்கட்டிய ஆண்கள் எல்லாம் வெட்கத்தை தொலைக்க கண்டேன் மூத்தோரென்று சொல்லப்பட்டோர் முட்டாள்களாய் நிற்க கண்டேன் களவு செய்யும் வாய்ப்பிற்காக கைகூப்பி நிற்க கண்டேன் பெண்ணின் காலில் விழுவதனை பெருமையாக நினைக்க கண்டேன் பணமொன்றே நோக்கமென்று பல்லிளித்து சிரிக்க கண்டேன் பச்சோந்தியும் தோற்றுப்போகும் பகல்வேஷ நடிப்பு கண்டேன் காசு பணம் சுருட்டிடவே காலில் விழும் கூட்டத்திற்கு ஈனம் மானம் எதுவுமில்லை என்பதையும் அறிந்து கொண்டேன் எதிர்ப்பு சொல்ல ஒருவருக்கும் ஏன் தோன்றவில்லை என்றால் கைமாறிய பண கட்டிற்காக கட்ட…
-
- 5 replies
- 796 views
-
-
வாடா....வா... பெரியவரா பெரியவரா பெரகரா - நீங்க பெரிய அடி வேண்ட வேணும் பெரகரா.... ஓடி வந்து ஆட்சியில ஏற வாங்க ஓலமது கண்டு நீங்க ஓடணுங்க.......... எம் தமிழில் பாதியரை கொன்றவரே ஏறி குந்தி ஆட்சியிலே ஓட வாங்க.... நாட்டை விட்டு வேறு நாடு ஓடினாயோ....?? உன் உடலை நரியும் களுகும் கொத்த வேணும் ஓடி..வாடா.......... பண்டை கால புலி என்றா நீ நினைத்தாய்....??? அட உனக்கு பாடை கட்ட வேணுமின்று ஓடி வா.... அடுக்கடுக்காய் நெஞ்சுக்குள்ளே அடுக்கி வைத்தோம்- உன்னால் அழிந்தவரின் சோகங்களை தேக்கி வைத்தோம்..... இறக்கி வைக்க முடியாமால் தவித்து நின்றோம் இப்போ உன்னை இறக்க வைத்து நாங்களதை தணித்து வைப்போ…
-
- 0 replies
- 796 views
-
-
வான் மழை கழுவி வந்த வானவில்லின் வர்ணம் கொண்ட மலரே..... தென்றலிடம் கடன் வாங்கிய விசிறி கொண்டு திரவியமாய் பரப்பும் நறுமணம் கொண்டவளே.. மெல்லிதழ் தான் அசைத்து என்னை மெல்ல அழைத்திட்டாய் செவ்விதழ் விரித்து உன் தேனமுதம் பருகவிட்டாய்... எள்ளளவும் மனப் பயமின்றி நான் உன்னை தழுவி இன்புற்றேன் உன் பட்டுடல் பட்டு பக்குவமானேன்..! நான் மட்டும் உன் அன்புக்குக் காதலனாக மாலைக்குள் நீ வாடினாலும் உன் ஆயுள் முடிந்தாலும்... உன் சந்ததி பெருக்கும் மகரந்தம் தாங்கியவனாய்..! தியாகத்தின் செம்மல் நீ... உன்னை நாளும் ஆணை ஆடையாய் மாற்றிடும் மனிதப் பெண்ணுக்கு உவமை சொல்பவன் ஓர் மடையன்..! [size=2]Photo taken …
-
- 6 replies
- 796 views
-