Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வெந்நிப் பழசு கவிதை: தமிழச்சி தங்கபாண்டியன் - ஓவியம்: ஸ்யாம் அப்பாவிற்கு வெந்நிப் பழசு பிடிக்கும். அம்மா அருகிருக்க முன்னிரவுகளில் வெந்நிப் பழசும் சின்ன வெங்காயமும் நிலவும் நட்சத்திரங்களுமாய் எங்களுக்குக் கதை சொல்லும். கண்ணோரங்கள் சுருங்கி விரிய ருசிப்பின் சுவையை உதடு கடத்தும் அப்பொழுதில், ஒதப்பழம்போல் அப்பா கனிந்திருப்பார். எச்சிலூறப் பார்க்கும் என்னோடு கட்டெறும்புகளும் காத்துக்கிடக்கும் முழு நிலவொன்றில் சிந்திவிட்ட ஒரு சுடு பருக்கை நினைவின் குளிரிடுக்கில் உறைந்து போனது சுருங்கி விரியும் ஓதப்பழக் கண்களாய் இந்த இரவில் உணவு மேசையில் தனியொருத்தியாய்த் தட்டெடுக்கிறேன். மதியத்தின் எச்சமாய்ச் சுருங்கியதொரு பரு…

    • 1 reply
    • 2k views
  2. கண்கள் அழகிய காதலியைத் தேடியலைகிறது. அழகிய பெண் இவள் அழகியா காமக் காதலி. அவள் அழகென்பதற்கல்ல, அவளை பார்க்கின்றேன். அவள் என் காதலை ஏற்க்க மறுத்த காதலியை விட அழ்காய் இருப்ப்தால். இது இயற்கையாகவே இருக்கிறது. காதலியை மறப்பதற்கு அவைலை விட அழகிய காதலி தேவைப்படுகிறது. அவளுக்கு இளந்துவிட்டோமே என்ற உணர்வு உண்டாக்குவதற்கு. நினைவுகளை சரிசெய்து கொள்ள ஒரு சதி. இயற்க்கைக்கு அற்ப்பாட்ட மனஉறுதி தேவைபடுகிறது. கற்பனையின் நினைவை கொள்வத்ற்கு ஆயூதம் தா மனமே www.tamil4u.wordpress.com உன்னை மறப்பதற்கு முயற்சிகள் படுதோல்விகலாகுதடி உன்னை மறப்பதற்கு முயற்சிகள் படுதோல்விகலாகுதடி. மனம் துடிக்கிறது மறப்பதன்ற சிந்தை மூளையில் தோன்றமுன். உன்னை மீண்டும் சந்திக்க ஆர்வம் கொள்லுது…

  3. இனம் மதம் பணம் மொழி சாதகம் சாதி என்று இதுவரை அறியாத அந்த இதயம் மட்டும் உள்ள காதலுக்கு இறுதியில் கிடைப்பது என்ன????? இரக்கம் அற்ற முடிவு மட்டும் தானே?????

  4. என் உயிர் உறவுகளே செத்துக் கொண்டு இருக்கும் தேசத்தில் இருந்து ஒரு குரல் நான் துள்ளித் திரிந்த தெருக்களில் குருதி ஆறு கொப்பளித்துக் கொண்டு இருக்கிறது - எம் தேகத்தின் தோல்கள் உரிக்கப் பட்டு வத்தலுக்காய் வாட்டப் பட்டுக் கொண்டு இருக்கிறோம் கன்னியர்கள் ஆடைகள் களையப்பட்டு சூறையாடப் படுகிறது அவர்கள் கற்புக்கள் - எம் கண்களில் இருந்த கண்ணிர் வற்றி நடைப் பிணமாய் நாம் இப்போ........ ஜயகோ....! தமிழ்ச் சமுகமே தட்டிக்கேழுங்கள் செத்துக் கொண்டிருக்கும் தேசத்துக்கு - ஓர் சத்துணவு திட்டமாவது தரும் படி ஏன், எதற்கு எப்படி யானோம் -? நாம் இப்படி ................? கேளுங்கள் ஒவ்வொருவரிடமும் கேளுங்கள் - பதில் வராவிடின் தேடுங்கள் - அதற்கான பதிலைத் தேடு…

  5. Started by எஸ். ஹமீத்,

    வேஷம்...! -எஸ். ஹமீத் **சிங்கார வதனந்தான் சிலிர்ப்பூட்டும் சிரிப்புந்தான் சேலைக்குள் இருக்கிறது எயிட்சும் இறப்பும்...! **பளபளக்கும் பாம்புதான் வழுவழுக்கும் உடலும்தான்... பற்களில் இருக்கிறது விஷமும் சாவும்...! **அழகான ஏரிதான் அன்னப் பறவையும்தான்... அடியில் இருக்கிறது முதலையும் முடிவும்...! **அடர்ந்த காடுதான் அறுசுவைக் கனிகள்தான் கூடவே இருக்கிறது மிருகமும் மரணமும்...! **தகதகக்கும் நெருப்புத்தான் தங்கத்தின் வண்ணம்தான் இறங்கினால் இருக்கிறது சூடும் சுடலையும்...! **வெண்ணிற ஆடைதான் செந்நிற சால்வைதான் சேர்ந்தே இருக்கிறது குருதியும் கொலையும்...!

  6. எனக்காக நான் கடவுளைக் கும்பிட்டதில்லை உனக்காக தான் என்பதை ஏன் நீ உணரவில்லை எனக்காக நான் அழுததில்லை உனக்காக தான் அழுதேன் என்பதை ஏன் நீ அறியவில்லை எதற்காக நான் பிறந்தேன் என்று தெரியவில்லை ஆனால் உன்னைக் காதலிப்பதால் தான் உயிரோடு ஊசலாடுகிறேன் என்று மட்டும் தெரிகிறது

  7. இன்று மாவீரர் நாள் எமக்காக மரணத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாள் வருகிறாயா என நண்பரிடம் கேட்டேன் இல்லை என்று பதிலுடன் இன்று எனக்கு வேலை என்ற பொய்யும் வந்தது பின்புதான் அறிந்தேன் அன்றைய தினம் அவன் சாய் பாபா பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினான் என்று நண்பா, அந்த மாவீரன் மில்லர் எனக்கு மட்டுமா நண்பன் உனக்கும் தானே இறந்தவருக்காக happy birthday பாடும் நீ ஏன் எமக்காக மரணித்தவர்களுக்காக திவசம் செய்ய பின் நிக்கின்றாய்.

  8. [size=5]சிரித்தபடியெனை உற்றுப்பார்த்தான் எனை தாண்டிஎனக்குள் நின்றவன் தலைகுனிந்து முனுமுனுக்க தொடங்கினேன், நிறுத்து உன் புலம்பல்களை நிறையறிந்தவன் நிகழ்த்தியவுன் தரமறிந்தவன் நான் என்றான். மௌனமாக்கிக்கொண்டேன் எனை! கழற்றிஏறி மௌனசட்டை உனை குற்றவாளியாக்குகிறது என்றான். விழிகளால் கேள்வி தொடுத்தேன். கேள்வி கேட்காதே, உனக்கான கேள்வியை தேடு_நீ விடையாய் மாறாதே மற்றவர்களுக்கு என்றான். தப்பிக்க திரும்பிப்பார்த்தேன் தப்பு செய்கிறாய் நீ உனக்காக இல்லாமல் எதுக்காக இருக்கிறாய் உன்னில் இருந்து ஆரம்பி என்றான் பதிலுரைக்க வாயெடுத்தேன் காதுகளை போத்திக்கொண்டவன் கற்றுக்கொள் தன்னிடம், எதையும் பெற்றுக்கொள்ளாதே என்றான் …

  9. சொந்தம் என்று சொல்ல பலர் உண்டு இருந்தும் அவர்கள் எல்லாம் உன் சொந்தம் போல் வருமா????? அன்பாய் பழகிட நண்பர்கள் பலர் உண்டு ஆனால் உன் நட்பு போல் வருமா????? என்னை நேசிக்க பல சொந்தங்கள் உண்டு ஆனால் உன் நேசிப்புக்கு அவை ஈடாகுமா????? என்னைக் காதலித்தவர்கள் பல பேருடா ஆனால் உன்னைப் போல் எவரும் என்னைக் காதலித்ததில்லையாடா.......

  10. '' அஞ்சி வாழேன்..'' சிங்கள கூட்டு வைத்து சில காலம் வாழ வந்து சேர்த்து வைத்த பணமதையும் தெருவில் போட்ட கதை காணய்.... மாடாக இங்குழைத்து மாளிகைகள் வேண்டிவிட்டு தான் வாழ முடியாமல் தவிக்கின்ற நிலை பாராய்..... பகலிரவு தான் பாரா பட்டினிகள் தான்கிடந்து ஊன் உருகி உழைத்த பணம் யாருக்கு போகுது காண்... காட்டி கொடுப்பவர்கள் கரியாராய் இவராக்கி- இவர் வாய்க்கரிசியிட்டு - அவர் வாழ்கின்ற காலம் காண்... கொழும்பினில் வாழ்வதாய் கொழுப்பாக பேசிநின்ற எம் தமிழர் வாழ்வியலில் எறி வந்த இன்னல் கேள்... ஏறி வந்து வீதியிலே ஏற்றமுடன் உலவிடதான் முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கிய நிலை காணாய்.. முக மூடியணிந்தவர்கள் முன்னாடி தலையாட்டி …

    • 1 reply
    • 1.1k views
  11. துருவத்து வடலிகள் தாய்மடி தேடும் கன்றினைப்போல் தாய் மொழி தேடி அலைகின்றேன். ஏண்டியம்மா கருப்பாயி எனக்கு மட்டும் இந்த நிலை பட்டாம் பூச்சியாய் பறந்து திரிஞ்ச என்னை ஆட்டு மந்தையாய் இண்டைக்கு அங்கும் இங்கும் அலைய வைச்சாய் ஆத்தா மடியிலே அன்புச் சூட்டில் உறங்கியவன் பனிபடிஞ்ச தேசத்திலை பட்டினியிலை கிடக்கிறன் தாய்மொழியை காதலிச்சு தனி மரமாய் வாடுகிறன் அம்மாவை காதலிச்சா அகதிதான் பெயரெண்டால் பூமியிலை எல்லாமே பொய்யான வாழ்க்கையன்றோ ? விழிதிறந்து பார்க்க முன்னம் மொழிகேட்டு மகிழ்ந்தவன் விழிமூடிக் கிடந்தாலும் கனவில் மொழித்தாகம் வாட்டுதடி வளரும்............

  12. அம்மா, இனி நீ இறந்து விடு.. பயமும் பட்டினியும் நோயும் என இன்னமும் எத்தனை காலத்திற்கு நீ செத்துக் கொண்டேயிருக்கப் போகிறாய் ? ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவிற்கும் ஒரு நகரிலிருந்து இன்னொரு நகரிற்கும் ஒரு காட்டிலிருந்து இன்னொரு காட்டிற்கும் ஒரு நோயிலிருந்து இன்னொரு நோயிற்கும் ஒரு பசியிலிருந்து இன்னொரு பசியிற்குமென ஒரு பொதியையும் காவிக்கொண்டு இன்னமும்எத்தனை காலத்திற்கு அலையப் போகிறாய்? உன் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் கழுகுகள் காவிக்கொண்டு செல்வதையும் கண்டுவிட்டுத்தான் மடிவேன் என ஏன் அடம்பிடிக்கிறாய்? அம்மா, இனி நீ இறந்து விடு... அனைத்தும் பயனற்றுப் போய்விட்டது என்பதை அறிந்த பின்தான் போகவேண்டும் என நீ அட…

  13. உனதன்னையைத் தங்கையை காமவெறியினில் குதறியும் புணர்வாயோ? உடலத்தைத் தின்றபின உயிரென மதியாய் யோனி கிழித்துக் கொலைவெறி கொண்டவனே! நீயோர் அன்னையின் வயிற்றினில் பிறந்தனை தான் உன்னை வளர்த்தது நிச்சயம் அவள் இலை தான்! யாரோ யாரெவரோ? எங்கெங்கு திரும்பினும் பெண்களுக்கெதிராய் நடக்கிற கொடுமைகளுக்களவிலையோ? உனை வலியுடன் ஈன்று மகிழ்ந்த -தாயின் பிரசவ வேதனை புரிகுவையோ? நீயுன் தாய்க்கொரு சேய் தானோ ? கொடூரமாய் இரும்புக்குழலினை நுழைத்து அவள் யோனியைச் சிதைப்பாயோ? வேதனைப்படுத்தும் வெறியினில் ஆனந்தம் கொள்வதை உன் சிரசினில் ஏற்றியதார்? உனை உந்தித் தள்ளிய உளுத்தவர் ஆட்சியில் சட்டச் சூழ்ச்சிகள் செய்குவார் ஆள்சபை உறுப்பினரானகுவராம். காவற்படையென காசினி முழுவதும் பெண்களைப…

  14. சொந்த மண்ணில் அகதியாய் அவர்கள் வந்த மண்ணில் அகதியாய் நாங்கள் நாங்களும் அவர்களும் ஒன்றுதான் அங்கே தமிழன் அகதி இங்கே அகதித்தமிழன் இப்படிக்கு அகதித் தமிழன் அனலைதீவன்

  15. மூடிய கனவை இமையா பறிக்கும் சூரியப் பகலை முகிலா மறைக்கும் ஆடிய தெருவை சுவடா மறக்கும் ஆணவம் அதனை அறிவா மதிக்கும் நேரிய வழியை நிழலா தடுக்கும் நித்தியா தாமரையின் நிஜமா பொறுக்கும் மூழ்கிய படகை கரையான் அரிக்கும் முற்றிய பகையை மனமா சலிக்கும் நம்மை நாமே பழுது பார்க்கலாம் நாளை உண்டு சபதம் ஏற்கலாம் முகநூல்

  16. பாதச் சுவடுகளால் கலைந்திருந்த அழகிய முற்றத்தில்.. நிசப்தங்கள் நிறைந்துகிடக்கும்.. முல்லையும் பூவரசும் கருமை பூண்டு கனத்து நிற்கும் ஓணான்களும் அறணைகள் அமைதிக்குள் நகரும்.. குயில்களும் புலுனிக் குருவிகளும் அரைவிழியில் உறங்கிக் கிடக்கும்.. முழுதும் முழுதும் வற்றிப் போயிருக்கும், நேற்று நீ இருந்த முற்றம்... நேர காலமின்றி வரவுகளால் நிறைந்திருந்த முற்றம் அது.. தூணிலும் கதவிலும் படிந்த கருமை நிழல்களை தோற்றுவிக்கும் யாருக்காவது இப்போது... நீ பிரிந்தபின் மொழியின் இனிமை தொலைந்து போனது விழியின் வெளிச்சம் கலைந்து போனது வெளித்தெரியாத இறப்பொன்றுடன் கைகோர்த்து வளர்ந்து கொண்டிருக்கின்றன என் நினைவுகளும் கனவுகளும்... அந்த ம…

  17. அழகிய திருமுகம் பார்த்து சில நொடி சிரித்தேன் மறு நொடி இதயம் புகுந்தாய் …. தசைகள் சிரிக்க விடவில்லையோ? பெண்ணே நான் உன் இதயம் புகுந்தேன் என்று ஏற்க மறுக்கும் உன் பார்வை அர்த்தம் தெரியா அந்த ப்பார்வை. கற்பனைகளுக்குள் காலடி வைத்தது எந்தன் இதயம். …. ஒருநாள் பொறுக்க வைத்து மறுநாள் மலர்ந்த புன்னைகையில் இதய நாயகணாக வைத்தாய் கண்ணே. ….. தொலைதொடர்வில் பயத்தோடு கேட்டாய் சந்தோச என் அலர்ரலை. சில நொடியில் ராஜரீகம் ஏரினாய் என் ரானியாய். பல நெறி சொல்லி உன் உயிராக்கினாய் அழகிய ராஜ்யதியே ====================================================================== முதல் பார்வையில் வரும் காதல் பற்றி எழுத்து பிழைகளு…

    • 1 reply
    • 3.6k views
  18. அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை அங்கொரு காட்டிடை பொந்தினில் வைத்தேன் வெந்து தணிந்தது காடு தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ? தத்தரிகிட தத்தரிகிட தத்தோம். கவிதை: மகாகவி: படம்:முகநூல்: எல்லாத்தையும் கலந்தது தந்தது: நெடுக்ஸ்

  19. நீ காதலா....? நீ நட்பா....? --------- இலட்சியங்களை..... இலக்காக்கும் காதல்....!!! இலட்சியங்களை..... இயக்க வைக்கும் ... நட்பு....!!! கட்டுப்பாடுகளை..... கண்ணியமாக்கும் ... காதல்....!!! கட்டுப்பாடுகளை ... கற்று தரும் நட்பு.....!!! இதயத்தை.... பறி கொடுப்பது.... காதல்...!!! இதயத்தையே .... பரிசளிப்பது.... நட்பு...!!! கஷ்டங்களில்..... கைகொடுப்பது .... காதல்....!!! கஷ்டங்களில் தோள் கொடுப்பது ... நட்பு....!!! துயரங்களை தூக்கி எறியும் காதல்.....!!! துயரங்களில் .... பங்கெடுக்கும் ... நட்பு....!!! காதலின் வெற்றி..... இருவரும் இணைவது நட்பின் வெற்றி இருவரும் உயர்வது ....!!! காத்திரு…

  20. இசைப்பிரியாவுக்கு இதயத்திலிருந்து…. ஒரு மானுட வதை:- ஆதிலட்சுமி Tuesday, November 5, 2013 @ 11:50 PM இசைப்பிரியாவுக்கு இதயத்திலிருந்து…. ஒரு மானுட வதை மகளே……. பிறக்கும் போது யாருக்கும் பிறப்பின் அருமை தெரிவதில்லை நீ பிறந்த போதும் அப்படித்தான். நீ மட்டுமல்ல… லும்பினியில் மாயாவின் மடியில் சித்தார்த்தன் பிறந்தபோதும் அவன் பிறப்பை யாரும் உணரவில்லை…. மாட்டுத் தொழுவத்தில் மரியாளின் மடியில் உதித்தபோது… ஏசுவையும் எவரும் கண்டுகொள்ளவில்லை…. மக்காவில் நபிகள் பிறந்து 40 வயதாகும் வரை அவர் பெருமை யாருக்கும் புரியவில்லை… சரவணப் பொய்கையில் தாமரைப் பூக்களாய் தோன்றிய போது சூரனை வதம் செய்ய வந்தவன் என முருகனை யாரும் நினைக்கவில்லை அப்படித்தான்….. நீ பிறந்தபோதும் உலக…

  21. [size=5]மீண்டும் அ.கி.ம்.சை.[/size] [size=1][size=4]அன்று எடுத்தோம் அகிம்சை [/size][/size] [size=1][size=4]முடியவில்லை அந்த இம்சைகள் [/size][/size] [size=1][size=4]இன்றும் [/size][/size] [size=1][size=4]"கடவுள் தான் துணை" என்றான் [/size][/size] [size=1][size=4]அன்றைய தலைவன் தந்தை செல்வா [/size][/size] [size=1][size=4]ஒரு காந்தி ![/size][/size] [size=1][size=4]நாம் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என்று[/size] [size=4]எதிரி தான் முடிவு செய்கிறான் [/size] [size=4]அரச பயங்கரவாதம் [/size] [size=4]ஆயுதம் தரித்தான் தமிழன் முப்படையுடன் [/size] [size=4]தமிழன்னையை காத்தான் இறுதிவரை [/size] [size=4]தலைநிமிர்ந்தோம் [/size] [size=4]கைமாறும் வெற்…

  22. Naam TamilarGermany சுமார் ஒரு மணி நேரம் முன்பு · கரும்புலி அடிமுடி அறிய முடியாத அற்புதம்....! கரும்புலி சாவுக்கு தேதிகுறிக்கும் சரித்திரம். கந்தகத்தை மேனியிற் கட்டிய சந்தனம். வீதியுலாவுக்காக வெளியில் வராத விக்கிரம். உயிர்மூச்சை ஊதிவிடும் உன்னதம். அடிமுடியை அறியமுடியாத அற்புதம். தென்றலும், புயலும் சேர்ந்ததான கலவை. இவர்களை எழுதத் தொடங்கினால்… வார்த்தைகள் வறுமை அடையும். உளவியலாளர்கள் உள்ளே புகுந்தாலும் வெறும்கையோடுதான் வெளியே வருவார்கள். கற்பனைக்கவிஞர்கள் கவிதை எழுதினால் அற்புதம் என்பார்கள். அடுத்தவார்த்தை வராது. சித்திரக்காரர்க…

  23. இலங்கையில் புதையல் .. தமிழ் குழந்தைகளின் இளம் கைகள் கிடைத்தன ... ................................................................. காட்டுக்குள் கடுமையான போர் ... பறவைகள் பத்திரமாய் உள்ளன நல்லவேளை அவைகள் தமிழ் பேசவில்லை ...

  24. தை - திருமகளே வருக வருக .... தைரியம் சிறக்க வருக வருக .... தை பிறந்தால் வழி பிறக்க வருக வருக .... தைத்தியரை அழிக்க வருக வருக ....!!! முற்றத்தில் கோலமிட்டு ..... முக் - கல் அடுப்பு வைத்து .... முத்திரி விளக்கேற்றி ..... முக்குணத்தை அழிக்க ... முக்காலமும் சிறப்பாக அமைய .... கரம் கூப்பி அழைக்கிறேன் தை- திருமகளே வருக வருக ....!!! உன்னையே உயிராய் ..... உன்னையே தொழிலாய் .... உன்னையே மூச்சாய் வாழும் .... உன்னையே தெய்வமாய் ..... உழைத்து வாழும் உழவு விவசாயம்... செழித்து வாழ என் உயிர் தாயே .... தை- திருமகளே வருக வருக ....!!! ^ பொங்கல் கவிதை கவிப்புயல் இனியவன் 2018 . 01 .14

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.