கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
எங்களது தமிழ் கவிஞர்கள் பாடலாசிரியர்கள் எல்லோருமே பெண்களின் இடுப்பின் மடிப்புக்களை மட்டுமே வைத்து கவிதையும் பாடலும் எழுதியுள்ளார்கள். இவர்கள் இரனையை என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் நான் வீடு மாறியதில் வேலை அருகாமையில் இருந்ததால் அண்மையில் நான் வேலைக்கு போவதற்காக ஒரு ஸ்கூட்டர் வாங்கினேன். அதுவும் கோடைகாலம். இன்று வேலைக்கு போய்க்கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னே ஸகூட்டரில் போய்க்கொண்டிருந்த ஒரு பெண்ணை பார்த்தும் வந்து உதித்தது.. என் ஸ்கூட்டரின் முன் ஸ்கூட்டரில் முன்னமர்ந்து போகிறவளே மடிப்பேயில்லாத உன் இடுப்பில் வழுக்கி வழுக்கி விழும் என் மன அவதியில் சிக்னல் சிவப்பா பச்சையா என்கிற சிதறிப்போன பார்வையில் மஞ்சளாய் என்மனது அல்லாட அசையும்…
-
- 44 replies
- 4.4k views
- 1 follower
-
-
இதயம் அனலில் வேகுதடி- எந்தன் இருவிழி - தூக்கம் கொன்றதடி! செல்லமாய் என்னை கிள்ளு- உந்தன் சிரிப்பால் என்னை கொல்லு! சுட்டெரிக்கும் வெய்யில் கூட மழையென்றாச்செனக்கு! சுந்தரி நீ கள்ளி - பாரேன் உன் உதட்டு சிவப்பில் என் உயிர் ஒளிந்து கொண்டதடி! நெருப்பை நீர் அணைக்கும்! மழையை மண் அணைக்கும்! நான் கொண்ட காதலை நீ அணையேன்- மல்லிகை பூவென என் வாழ்வு மணக்கும்! ஆயிரம் பாஷை இங்காகலாம்! உந்தன் செல்ல அதட்டல் பேச்சே- தாய் மொழிடி எனக்கு! ஏய்டா என்பாய் குட்டிமா- என் ஜீவன் அர்த்தம் கொள்ளுமே! ஏது வாழ்வு ? அதுவல்லவோ ? என் இருகரங்களில் -தலை சாய்த்து குழந்தை என்றாகி நீ தூங்கு! நீ தூங்கும் அழகை நான் ரசிப்பேன் தந்தையென்றாகாமலே - உன்னை …
-
- 23 replies
- 3.7k views
-
-
மடியொன்று கண்டேன்! ஆழமறியா அண்ணன் அணியை-என்றும் பலம் சேர்த்துப் பகை முறிக்க- அண்ணன் திசை நோக்கித் திளைக்காமல் நடந்தனரே-எம் மாவீரச் செல்வங்கள், இவர்கள்பணி நீயேற்று-மக்கள் துயர்துடைக்க விரைந்து சென்று, அவர்களுள் ஒருவனாய்- இன்று மீளாத்துயில் கொள்வோனே! உன் திறனை நானறியேன்- அதை உன் நண்பர் சொல்லிடவே செவிமடுப்பேன்- ஆனால் உன்சுமையை நானறிவேன் எட்ட நின்று. ஊரவரில் முன்நின்று உறுதியுடன் பேசிடுவாய்- இருந்தும் வேதனைகள் உள்ளவரை வெறுமனவே விடமாட்டாய்- உன்னுடன் நெருங்கிப் பழகினதோ மூன்றே மூன்று மாதங்கள்தான்- அதனுள் புரிந்தவைகளோ ஏராளம் ஏராளம்!- ஒருபுறம் சிறியவர் கருத்தை ஆர்வமுடன் நீயேற்றுப் பணிவுடனே நடந்திடுவாய்- மறுபுறம் மூத்தோர்கள் வியந்திடவே நேர்மை…
-
- 13 replies
- 1.7k views
-
-
-
கடவுள்மார் எல்லோரும் பம்மல் கே சம்பந்தம் படம் பார்த்த பின் ஒன்றுகூடி பதிலாக இதை மணிவாசகனிடம் கொடுக்கும் படி என்னிடம் அனுப்பி வைத்தார்கள்........ எல்லாம் தெரிந்தவன் வல்லவன் செய்பவன் என்றது நானா அல்லது நீயா :?: அநியாயகாரனை உருவாக்கியது நானா அல்லது நீயா :?: என்னை பாரென்று சொன்னது நானா அல்லது நீயா :?: என்னுடன் பிரியமா இரு என்றது நானா அல்லது நீயா :?: மனிதராக பக்குவபடாதற்கு காரணம் நானா அல்லது நீயா :?: நடுநிலை தவறியதற்கு காரணம் நானா அல்லது நீயா :?: எல்லாம் கொடுத்தது பறித்தெடுத்தது நானா அல்லது நீயா :?: மனசடங்கை பணசடங்காக்கியது நானா அல்லது நீயா :?: எனக்கு கோபுரம் கட்டி குண்டு போட சொன்னது நானா அல்லது நீயா :?: தர்மாகர்த்தாவை உண்டாக்…
-
- 10 replies
- 1.6k views
-
-
வீர மறவனின் விழுதொன்று வேரறுந்து வீழ்ந்தது. தூர நிலத்தில் ஆழ்ந்து துயிலுகின்றது பாரெல்லாம் நாம் தமிழராய் அவன் பேர் சொல்லி விம்முகின்றது பாரதியின் சீடனாய் பல களங்கள் அன்று பாதையிலே பிரிந்து புதிய பாதையிலே சென்று பலமான இனமானக் கலைஞனாய் வென்று பலம் சேர்த்தாய் ஈழவிடுதலையே வழி என்று தமிழனாய் நாம் என்று தரணியெங்கும் தோழனாய் மார்க்சியவாதியாய் மானிலத்தில் வாழ்ந்து ஈழத்தவன் நான் இல்லையென்று ஏக்கமடைந்து வாழப்பிறந்தவன் தமிழன் என சீற்றம் கொண்டு ஈழத்தமிழன் கரங்கோர்த்து வீரப்போரில் தலைவன் வழியில் நேர்கண்டு அவன் தம்பியாகத் தனை வரிந்து கொண்டு நம்பியவன் நாளை எமக்கு நாடு என்று உயிரொன்று மட்டுமே என் சொத்து அதையும் பயிராக்குங்கள் ஈழத்தம…
-
- 6 replies
- 999 views
-
-
மண் காக்க தனை தந்த மாவீரரே மனங்களில் நாம் பூஜிக்கின்றோம் இந்நாளிலே சுதந்திர தாகத்தை நெஞ்சில் நிறுத்தியே சுகங்களை எல்லாம் உங்கள் நினைவிலிருந்து அகற்றினீரே உற்றம் சுற்றம் நம் மக்கள் என்றும் கொண்டீரே உயிரையும் துச்சமாக எண்ணிக் கொண்டீரே எதிரியை சூறையாட வெறி கொண்டீரே எமக்காக மண் மீட்க புறப்பட்டீரே தேசத்தின் கனவை சுமந்தபடியே தேகத்தை கொடுத்தீர்கள் ஒரு கணமும் தயங்காமலே வீழ்ந்தாலும் நீங்கள் விதைகளாகவே வீரத்துடன் மீண்டும் எழுவீர் விருட்சமாகவே நமக்காக நம் தேசம் மலரும் என்று நம்பிக்கையுடன் உங்களை போற்றுகின்றோம் இந்நாளிலே …
-
- 4 replies
- 3.3k views
-
-
மண் மணக்குதுகா....! ---------------------------------- சுத்திவர வேலி வேலி நிறையக் கள்ளி கரு நொச்சி சப்பாத்தி முள்ளு கிடசரியா ஆடாதோடை விண்ணாங்கு வேலிப் பருத்தி விஷ முருங்கை இடையிடையே இப்பிலி இன்னும் சொன்னால் இலவ மரம் மஞ்சோணா பூவரசு சுண்ணக்கொடி கோமரச மோதிரக்கண்ணி பேய்ப்பாவை குரங்கு வெற்றிலை கிளாக் கன்று எருக்கலை பூமுத்தை காசான்செடி பொண்டாட்டி மரம் முள் முருங்கை இப்படி இருந்த வேலிகள் எங்கே....? தோளில் துண்டு இடுப்பில் சிறுவால் பேருக்குச் சாரன் கொழுவிய சட்டை கூன் இல்லா முதுகு நேரான நடை ஊருக்கு உழைத்து யாருக்கும் அஞ்சா பேரோடு வாழ்ந்த பெருமக்கள் எங்கே....? குனிந்த தலை நிமிராத களவெட்டிக்குப் போனாலும் களையெடுக்கப் போனாலும் காட்டுக்கு விறகெடுக்க காவலின்றிப் ப…
-
- 2 replies
- 1.8k views
-
-
மண்குளிரச் செய்த முகில்கள் – கவிஞர் புதுவை இரத்தினதுரை மாரிமழை யாகி நீர்தெளித்து ஆடி மண்குளிரச் செய்த முகில்கள். மாதவங்கள் செய்த போதெமது பூமி மடியிலுரு வான உயிர்கள். போரில்விளை யாடும் வேளையுடல் வீழ்ந்த போதுமுயி ரான சிலைகள். பூங்குயில்கள் பாடும் ஈழமதை வாங்கப் போயெரிந்து போன புலிகள். மாலைமணி ஆறு ஆகும்பொழு தாக மாரிமழை கொஞ்சம் ஓயும். மாலைமலர் சாத்தித் தீபஒளி காட்டும் வேளைவிழி ஆறு பாயும். சாலை, கடை யோடு, வீடுஎன யாவும் சாமிதுயி லில்லம் கூடும். சாதிமத மென்று வேறுபட லின்றித் தேவநிலை கொண்டு பாடும். வாரியெடுத் தும்மை வாசல்தனில் வைத்து வாசமலர் தூவும் பொழுதில் வந்தெமது கண்ணில் நின்றுதெரி கின்ற வாறுவர வேண்டும் அருகில். தேரிலெழுந…
-
- 0 replies
- 632 views
-
-
[size=5]மண்டியிடாத வீரம் !![/size] [size=1] [size=4]நேற்று மாவீரர் நாள் [/size][/size][size=1] [size=4]உலகெங்கும் நாம் நினைவில் கொண்டோம் [/size][/size][size=1] [size=4]மாவீரர்கள் தியாகத்தை சுதந்திரமாக [/size][/size] [size=1] [size=4]நீங்கள் இன்னும் முடியாத தாகத்திற்குள் [/size][/size] [size=1] [size=4]தமிழீழமெல்லாம் அரக்கர்கள் இன்று[/size][/size][size=1] [size=4]ஒரு பெண் மானபங்கப்பட்டால் துடித்திடுவார்கள் [/size][/size][size=1] [size=4]எம் கவிஞர்கள் [/size][/size] [size=1] [size=4]நீங்கள் இன்னும் முடியாத தாகத்திற்குள் [/size][/size] [size=1] [size=4]அப்பெண்ணே முன்னாள் போராளி என்றால் [/size][/size][size=1] [size=4]கேட்டிடுவார்கள் கணக்குகளை …
-
- 24 replies
- 1.9k views
-
-
பச்சை பசுமை தனைக் காணுகையில் - என் தாய்நாட்டு நினைவு வந்து தாலாட்டிச் செல்லுதம்மா மாமர நிழலினிலே ஊஞ்சல் கட்டியாடி மனம் மகிழ்ந்த நாட்களெல்லாம் மனத்திரையில் வந்து மதி மயக்கி நிற்குதம்மா வேப்ப மர நிழலிலே பாய் விரித்துப் படுத்த நாட்கள் பசு மரத்து ஆணி போல பதிந்த நெஞ்சு விம்மி விம்மி அழுகுதம்மா பள்ளிப் பருவமதில் பகிடியாய் கடந்த நாட்கள் பாலர் வகுப்பினிலே பாட்டி வடை சுட்ட கதை படித்து பகுத்தறிய மறந்த நாட்கள் பக்கம் வந்து சீண்டுதம்மா புளியடிப் பள்ளியிலே புழுகத்தோடு பயின்ற நாட்கள் புட்டும் முட்டைப்பொரியலும் பிரட்டிக் குழைத்து தின்ற நாட்கள் புரையேறி நெஞ்சமெங்கும் புத்துணர்வாய் கிடக்குதம்மா அம்மன் கோவிலிலே அழகான வ…
-
- 0 replies
- 857 views
-
-
ஒரு கவித படிச்சேங்க . ரெம்பவே ஃபீலிங்கா இருந்திச்சு . உங்ககூட ஷேர் பண்ணிக்கிறேன் . நிலந் தொடாமல் மிதந்தேன் உலர்ந்த மணற் துகளால் உருவானவளாக மெதுமெதுவாக உடல் பாரமிழக்கிறது நான் லேசாகி உதிர்கிறேன் அலைகள் என்னை மோதுகின்றன யார் அவற்றை எனை நோக்கி வரச் செய்தது? திரும்பத் திரும்ப வெண்நுரைகளைத் என் தேகத்தில் பூசின எவர் அவற்றை என்னிடம் துரத்தியது? யார் கரையில் என்னை வீசியது? எவரது கைகளவை? காணாமல் போகிறேன் நீரோடு கலக்கிறேன் கண்கள் உற்றுப் பார்க்க முடியாத ஆழத்தில் உறைந்து கிடக்கிறேன் ஈரமண்ணாக. http://thoomai.wordpress.com/category/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
-
- 3 replies
- 636 views
-
-
-
மண்ணிறங்குகிற கால்கள் By தீபச்செல்வன் ____________________ பந்து எட்டாத தூரத்திலிருக்கிறது கால்கள் இறங்காமல் எப்பொழுதும் தூக்கி மடக்கி வைத்திருந்தபடி அவள் எல்லாருடைய கண்கள் வழியாகவும் நடந்து செல்லுகிறாள். பதுங்குகுழி உடைந்து மண் விழுகையில் தனது கால்கள் மேலும் நசிந்தன என்கிறாள். கால்களை ஷெல் கிழித்த பொழுது தனது கண்கள் குருதியில் நனைத்து கிடந்தன என்று கூறியபடி சக்கரத்தை உருட்டுகிறாள். எனது கால்கள் இல்லாததைப்போலிருக்கின்றன. நடப்பதற்கு ஆசைப்படுகிற கால்கள் எப்பொழுதுமே தொங்குகின்றன. மண்ணிறங்கும் கால்களுக்காக கனவு காணுகிற இராத்திரிகளில் அவளது மனம் நாற்காலியின் கீழாக தூங்குகிறது. எப்பொழுதும் எங்கும் உருள மறுக்கிற சக்கரங்…
-
- 3 replies
- 1.2k views
-
-
எங்களுக்காகத் தங்களை உதிர்த்து எம்மினம் காத்திடத் தம்மைத் தந்து உயிர் என்னும் கொடை தந்து தம் உணர்வுகள் துறந்து நின்றார் தாய் மண்ணின் தடையகற்ற மன ஓசை அடக்கி மகிழ்வாய் ஆசைகள் தாண்டி வந்தார் பருவ வயதில் பாசம் அடக்கி பசியடக்கிப் பலதும் அடக்கி எதிரி அடக்கும் ஆசை கொண்டார் எங்கள் நிலம் எமதேயாக தங்கள் நிலம் தான் துறந்து காடுமேடெல்லாம் கால் பதித்தார் எத்தனை உயிர்கள் எம்மினமானதில் அத்தனை பெரும் அவலம் தாங்கி எத்தனை ஈனமாய் எருக்களாயினர் எத்தனை தடைகள் எங்கு தாண்டியும் அத்தனை பேரையும் ஆண்டுகள் தோறும் ஓர்மத்துடன் நாம் எண்ணிடுவோம் தோல்வி கண்டு துவண்டோமாயினும் தோள்கள் துடிக்க திருக்களமாடிய துணிந்தவர் உம் புகழ் பாட மறந்திடோம் மண்ணை இழந்து மறுகினோமாயினும் உதிரமிழந்து …
-
- 2 replies
- 748 views
-
-
பிறந்தால் எங்கள் மண்ணில் பிறக்க வேண்டும்! இறந்தால் எங்கள் மண்ணில் இறக்க வேண்டும்! எரித்தால் என் ஊர் சுடலையுள் எரிய வேண்டும்! புதைத்தல் என் ஊர் மண்ணுள் புதைய வேண்டும்!
-
- 2 replies
- 822 views
-
-
-
சிறகு முளைக்கும் முன்னரே..., இறக்கை விரிக்க வைத்த நாள்! பொத்திப் பொத்திப்.., பிள்ளை வளர்த்தவர்கள்..., பெற்ற மனசுகளை இறுக்கிய நாள் ! எங்கு போனாலும் பரவாயில்லை.., இங்கு மட்டும் வேண்டாம் ராசாக்கள் ...! எங்காவது தூர தேசம் போய் விடுங்கள் ! நாங்கள் உயிரோடு இருந்தால்.... நாளைக்கு எங்களுக்கு..., கொள்ளி போட வந்து விடுங்கள்! காணியை விற்றார்கள், கழுத்தில் கிடந்ததை விற்றார்கள்! கைகளில் கிடந்ததை விற்றார்கள்! காதுகளில் கிடந்ததையும் விற்றார்கள்! நாளைய நம்பிக்கைகளை, எஜன்சிகளிடம் கையளித்தார்கள்! உலகப் படத்தையே காணாதவர்கள்.., சில நாட்களுக்குள்..., உலகம் …
-
- 5 replies
- 1.7k views
-
-
ஈழத்தின் கரவெட்டியில் இருபத்தேழு ஆண்டுகள் முன் இன்னுயிராய் வந்துதித்தான் ஈழமகன் முருகதாசனவன் பத்து மாதம் பக்குவமாய் பாதுகாத்துப் பெற்றுன்னை பட்டங்கள் பெறவைத்து பார்புகழ வைத்தார் உன் பெர்றோர் வன்னியிலே வஞ்சகர் வதைகளில் சிக்கி வாழ்விழந்து எம்மினம் வீழ்தல் கண்டு வெந்தழலாய் உன்மனது கோபம் கொண்டதனால் கொடியவர் கொட்டம் அடக்கிட ஐநா முற்றலிலே உன் உடல் எரித்து உயிர் நீக்கி உறங்கச் சென்றனையோ? உயிருக்காய் உடலுக்காய் உணவுக்காய் உறவுக்காய் உயிர் காக்கவென உழைத்திடுவோர் மத்தியிலே உன் தாயைத் தந்தையை ஓடிவிளையாடிய தங்கையை தம்பியை நீ மறந்து துடித்த எம் இனத்துக்காய் தீயினில் குளித்ததை எம் அகக் கண்ணால் கண்டு நாமும் துடிக்கிறோம் உன்னைப் போல் ஒருவனின் உத்தமனி…
-
- 14 replies
- 713 views
-
-
[size=5]மண்ணுக்காய் மரணித்த மாவீரரே மண்டியிடுகின்றோம் உங்கள் முன் மரணத்தை மகிழ்வாய் ஏற்று மார்பில் குண்டேந்தி மாவீரரானீர் தேசம் என்னும் தேனடைக்காய் தெருவெங்கும் நீர் தேரிழுத்தீர் பால்ப் பருவம் மாறாத பதினாறு வயதிலும் பட்டினி கிடந்து பதமாய் ஆனீர் பகைவர் கோட்டைகள் பாங்குடன் தகர்த்து பாரினில் எம்மக்கோர் பாதையானீர் பள்ளிசெல்லும் பருவத்தில் பட்டு மெத்தை சுகம் துறந்து பெண்ணும் ஆணும் சரிநிகராய் பெருமை கொள்ளச் செய்திட்டீர் பெற்றவள் முகம் மறந்து உற்றவர் தனைத் துறந்து உம் தேசம் காப்பதற்காய் உயிர் தந்த உத்தமரே உம்மை நாம் எப்படி வணங்கிடுவோம் பேதைமை கொண்டவர்கள் பேர் வாங்கப் பணம் கொடுப்பார் பொன் கொடுப்பார் பொருள் கொடுப்பார் …
-
- 14 replies
- 957 views
-
-
சிங்களவன் கால் கழுவவா? சிரித்துகொண்டே சரியென்பார் வெள்ளை சேலையுடுத்தி இவர் மகளைகூட அழகுபார்ப்பார் ........ மனசு என்பது ஏதடா?! இந்த மனிதனிடம் அது இருக்குமா- அது நீ கூறடா! சேற்றில் அமிழுதடா தீயில் எரியுதடா உனை தூக்கி வளர்த்தவொரு ஜீவனே! பார்த்து நிற்கிறாய் -பதுங்கி மறையுறாய் இது பாவமென்று சொல்வேன் அது நியாயமே! கூடு கலையுதடா குருவி தொலையுதடா கூடவிருந்த உயிர்யாவும் ஓடி மறையுதடா எண்ண மறுக்கிறாய் நீ எனக்கென்ன என்றே கிடக்கிறாய் திண்ணைவரை தீ வந்தபின்னும் தெய்வம் காப்பாத்தும் என்று நம்புறாய்! இருப்பு அழியுதே வாழ்வு கறுப்பு ஆகுதே வண்ணக்கிளிகளை வல்லூறுகள் கொன்று தின்னுதே வயல் கொண்டபயிர் வாடி நிக்குதே …
-
- 17 replies
- 2.5k views
-
-
27.8.15 ஆனந்தவிகடனில் சொல்வனம் பகுதியில் "மந்திரக்காரி" என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை, தளத்தின் தோழர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். மந்திரக்காரி! என்னை ஒரு நாய்க்குட்டியாக இருட்டில் உருட்டும் திருட்டுப் பூனையாக தலையணை மெத்தையாக கண்ணீர்த்துளிகளை ஒற்றி மூக்கைச் சிந்தும் கைக்குட்டையாக மாற்றிக்கொள்ளும் மந்திரக்கோல் அவளிடம் இருக்கிறது. பிறர் காணும்போது அவளை ஆட்டுவிக்கும் மந்திரவாதியாகவும் என்னை மாற்றிக்காட்டும் மாயவித்தைக்காரி அவள். வார நாட்களில் என்னை நானாக்கி வாசல் நிலையில் சாய்ந்து நின்று வழியனுப்பிவைப்பாள் மந்திரக்கோலை முதுகில் மறைத்து! - சேயோன் யாழ்வேந்தன் நன்றி: ஆனந்த விகடன்
-
- 17 replies
- 3k views
-
-
-
- 0 replies
- 507 views
-
-
மாடப்புறாவும் தெருப்புறாவும் காதல் கொண்டதாம் அதைக் கண்ட கொப்பர் கொட்டன் எடுத்தாரும் தெருப்புறாவும் கொடுக்கை கட்டிச்சுதாம் மாடப்புறாவும் மதிகெட்டிச்சுதாம் இருபுறாவும் இன்பமாய்ப் பறந்திதாம் காதல் வாழ்வுதொடங்க வில்லனும் வந்தானாம் வில்லங்கமாய் ஆமி வடிவிலே மாடப்பறாவும் சிதைந்தே போனதாம் தெருப்புறாவும் தன்ரை புத்தியைக் காட்டிச்சுதாம் வீ...........ர்...........ரென்று பறந்ததாம் வேறொரு புறா தேடி..............
-
- 7 replies
- 2.1k views
-
-
மனங்களிலே பல ......நிறம் ....கண்டேன் உதிரத்தை பால் ஆக்கி வளர்த்தது ஒரு உள்ளம் தோல் மீது போட்டு ,மார்பிலே அனைத்து உயர் கல்வி தந்தது ஒரு உள்ளம் முன்னும் பின்னும் காவலுக்கு ஒரு உள்ளம். அழகாய் அணிவித்து பார்த்து ஒரு உள்ளம் ... விழியில் நுழைந்தது ..உயிரில் கலந்தது ஒரு உள்ளம் . மழலை சிரிப்பால் உள்ளம் கவர்ந்தது ஒரு உள்ளம் , நடுக்கடலில் மூழ்கடித்தது ஒரு கல் நெஞ்சம் . .புண் ஆக்கி வெந்நீர் ஊற்றி கண்ணீர் பார்த்து ஒரு தலை கவிழ்த்தது ஒரு உறவு .... .இத்தனைக்கும் மத்தியில் போராடும் ஒரு உள்ளம் .அது கண்ணீரில் நீராடி .கரையாமல் காப்பது ஒரு மனது . போராடி போரராடி ...மண்ணடி சேர்வது எப்போது .
-
- 4 replies
- 1.4k views
-