கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
"வீரத் தமிழ் மகன்" ரவிச்சந்திரனே உனக்கு எம் வீர வணக்கங்கள்" ஈழ தமிழருக்காக சத்திய பிழம்பாய் சாவினை ஏந்திய மறத் தமிழ் மைந்தனே உந்தன் மேனி தழுவி மெய் மறந்து விம்மிட நெஞ்சம் கனக்கிறது கடல் தடுக்கிறது உன் தேகம் எரித்த காற்று இந்த துயர் சொல்லி போயிட்டு குண்டுக்கும் கருகாத எம் கானகங்கள் கூட இன்று சோபையிழந்து கிடக்கிறது வீர மகனே !!! வேங்கையின் பிறப்பே !!! ஈழ மண்ணின் விடிவில் உந்தனுக்கொர் நீண்ட இடமுண்டு. நிம்மதியாய் சென்றுவா மகனே-இன்று தலைவராய் காமராஜர்கள் எவருமில்லை இந்த காங்கிரசில் காந்தி இல்லை நேரு இல்லை ஏன் தமிழ் காக்க என்று பேச்சுக்கு தானும் ஒரு தலைவன் இல்லை மகிந்தவின் காசுக்காக ஒருவன் …
-
- 0 replies
- 608 views
-
-
இரும்புக்காட்டின் பூக்கள் வண்டிகள் எல்லாம் இரும்புக் குவியலாயிருக்க சக்கரங்களும் இல்லை ஓட்டமும் இல்லை துருப்பிடித்த பறவைகளின் நிழல் கவிந்த யாருமற்ற இடுகாட்டில் பிஞ்சுத் தலைகளின்மீது இரும்பு மூட்டைகளைச் சுமக்கின்றனர் சிறுவர்கள் இரும்பு படிந்த உடல்களிலிருந்து உதிர்கிறது துருவேறிய துகள்கள் மலிவான சிறுவர்கள் எவ்வளவு பாரமேனும் சுமப்பார்களென விலைக்கு வாங்கப்பட்டனர் வெடிக்காத குண்டுப் பொறிகளுக்குளிருக்கும் இரும்பை கொண்டு வருவார்களென இரும்புக்காட்டில் தொலைவுக்கு அனுபப்பட்டனர் அழுகிய இரும்பை நெறுக்கும் தராசுகளுக்குள் உறங்கி எழும் சிறுவர்களிடம் இருந்தவை இரும்புகளைவிட பாரமான கண்கள் கால்களுக்கு கீழேயும் தலைக்கு மேலேயும் வெடிகுண்டுகள் நிறைந்திரு…
-
- 0 replies
- 657 views
-
-
அவனில்லை இன்று எம்மோடு அவன் நினைவுகள் நீர்சூடி வழிகிறது விழியிரண்டும். அவனில்லா வனம் ஆளில்லா நிலம். அவனின்றி அனைத்துமே அனாதைப் பிணம். ஆனைகள் மிதித்து அடங்காத் துயர் மூடி அ (உ)லையும் காற்றும் ஊழித்தீயூறி அடைகாக்கும் தாயாகிறது. அவன் போலொருவன் பிறப்பான். பிரபாகரன் என்ற பெருந்தீயாய் இருப்பான். அவன் வருவான் ஆன்மபலம் தருவான். அனைத்துமே அவனாகி எமையுருக்கி ஒளிர வைப்பான். காலக் கணக்கிருப்பை கார்த்திகை ஈரம் காலவிதி கடத்திக் கரையேற்றும். கனவுகள் விதைத்துக் காத்திருக்கிறோம். சாந்தி நேசக்கரம் …
-
- 0 replies
- 1k views
-
-
மனுஷ்ய புத்திரன் இரங்கல் கூட்டம் இரங்கல் கூட்டத்தில் விளக்குகள் மிகவும் பிரகாசமாக இருந்தன சொல்வதற்கு ஏராளம் இருந்தன உண்மைகள் ஏராளம் இருந்தன பொய்கள் இரண்டுக்கும் இடையிலும் கொஞ்சம் இருந்தன இறந்தவனை எப்படித் தொட்டுப் பார்ப்பது என்று ஒருவருக்குமே தெரியவில்லை ஒவ்வொருவராக முன் வந்தார்கள் ஒருவர் அவனை தண்ணீராக மாற்றிக்காட்டினார் இன்னொருவர் அவனை ஒரு புகையாக மாற்றினார் வேறொருவர் ஒரு காலித் தொப்பியிலிருந்து அவனை ஒரு புறாவாக பறக்கச் செய்தார் யாரோ ஒருவர் சிகரெட் லைட்டரில் எரியும் கணநேர ஜுவாலையாக மாற்றினார் அவனுக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் வந்தார் மரணம் ஒரு மலரை காகித மலராக்கி அமரத்துவம் அடையச் செய்துவிட்டது என…
-
- 0 replies
- 14.3k views
-
-
விடிவு நோக்கி .......... .இயற்கை தன் சுழற்சியை தொடங்கி விட்டது , பசுமை மாறி ,பழுத்து மஞ்சளாகி சில இளம் சிவப்பாகி தன் ஆழ்மனதை காட்டும் பெண்போல, அணைய போகும் விளக்கின் பிரகாசமாய் காலமகள் தன் கோலம் காட்ட புறப்பட்டு விட்டாள் . குருவிகளும் அணில்களும் ஓடி யோடி பறந்தும் நடந்தும் இரை தேடுகின்றன . ஒரு சில மரங்கள் இலைகளை உதிர்க்கின்றன தென்றலும் சற்று வேகமாகி சுழன்றடிக்கிறது மங்கையர் ஆடை மாற்றுவது போல மரங்களும் இலைகளை நிறம் மாற்றுகின்றன . கிளைகள் மட்டும் துன்பத்தில் துணை நிற்கும் நண்பன் போல பூமித்தாய் இத்தகைய மாற்றங்களை சந்தித்தே ஆக வேண்டுமென்பது நியதி போல மனங்களும்.. .. மனித மனங்களும் ...... சுழல்கின்றன விடிவு நோக்கி …
-
- 0 replies
- 833 views
-
-
எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை உன் மீது எனக்குப் பொறாமை உன் பதவி மீதும் எனக்கு ஆசை நீ வாழும் மாளிகை எனக்கு வேண்டும் என உரைத்தான் ஒரு மானிடன் காது கொடுத்துக் கேட்டேன் கதைத்தது தமிழன்தான்.... எனக்குச் சுதந்திரம் வேண்டும் நீ அழிந்தால்தான் எனக்குக் கிடைக்கும் என்னுடைய உரிமை வெல்லுவேன் உன்னுடைய உரிமையைப் பறித்து இங்கும் ஒரு குரல், இவன் உரைப்பதெல்லாம் தன்னைக் கொன்றுவிட்டு, ஏனெனில் எமக்கென்று நினைக்க மாட்டா அவனும் தமிழனே.... தமிழனுடன் சேர்ந்திடின் சோர்வு எனக்கு ஒன்று சேர நினைப்பதெல்லாம் சிங்கம் ஈன்ற பரம்பரையுடனே செத்திடினும் சோறு போடுவர் அவர்கள் இந்தக் குரலுக்குரித்தவன் வ…
-
- 0 replies
- 704 views
-
-
''இவனுக்கு விடுதலை கொடு.....'' விடுதலை அறியா விடுகாலி எல்லாம் விடுதலைக்காய் இன்று போரிட போகுதாம்... நினைத்தால் சிரிப்பு ஆனால் வெட்கம்... அரசின் மடிக்குள் அவையின்று அணைப்பு.... தேசத்தை மீட்குமாம் இந்த தேச துரோகிகள்... தன் தமிழ் தலையை தானே அறுக்கின்றான்- இவன் விடுதலை என்றேன் விடுகதை விடுகின்றான்... யாருக்கு விடுதலை இவன் யாருக்காய் கேட்கின்றான்....??? தன்னை காத்திட தன்னாலே முடியல இவரா வந்தெம்மை இன்று காப்பார்....??? சிங்கள படைகள் சுற்றியே குவிந்து சுற்று மதிலாய்அவருக்கு காவல் இவரா வந்தின்று பேசிறார் விடுதலை....??? எத்தனை குண்டுகள் கட்டியே பாய்ந்தார் இருந்தும் பெற்றான் சாகவரம்தான்.... ஏ…
-
- 0 replies
- 749 views
-
-
ஈனர் மனம் கொழுத்தி நீதியை காத்திடம்மா! ஈனர் மனம் கொழுத்தி நீதியை காத்திடம்மா! நீதியின் தாயென நிமிர்ந்த தெய்வமே கண்ணகைத் தாயே! வரணியில் உன் சந்நிதியில் சாதிய திமிரை எப்படி அனுமதித்தாய்… ஊரெல்லாம் கூடி இழுக்கின்ற தேரை பாரமிழுக்கும் யந்திரத்தால் இழுப்பிக்க நீ எப்படி அதில் அமர்வாய். நிச்சயமாய் நீ அங்கு இல்லை என்பேன்! நீதி செத்த கோபத்தால் பாண்டியன் நாடெரித்து மனம் ஆறாமல் பாம்பாகி எங்கள் ஈழநிலம் அடைந்தாய் இங்கும் செட்டிச்சி பெண் தெய்வமாவது எப்படி என உருமாற்றியவர் நாண உருக்குலையாது நீ நிம…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
அன்னை கருவில் அழகான வாழ்வு அகிலம் கண்டும் ஆனந்தம் கொண்டு மனிதப்பிறவியாய் மண்ணில் ஆர்ப்பரித்து மனிதனாய் வாழ மறுக்கின்ற உலகம் செய்த பிழை எதுவென்று சொல்லாது தளம்பறித்து சிசுவாய் இருந்தாலும் சிதைத்து சுகம் கண்டு ஓடு மட்டும் துரத்தி ஓட்டாண்டியாக்கி ஒய்யாரமாய் படம் போட்டு ஒப்பாரியில் வாழ்கிறார்கள் எல்லார் வாழ்விலும் எட்டப்பர்களாய் எட்டி உதைத்து எரித்துப் போட்ட சுதந்திரம் அங்குமிங்குமாய் அலைமோதும் அகதியாய் அல்லல் படுத்தும் அறிவு கெட்ட உலகம் சுதந்திரம் என்ற சுவாசம் அடைந்து பெற்றவர்களும் அதனை அளிக்க மறுத்த ஆட்சியாளர்களாய்.... மரத்துப்போன வாழ்வுடன் மடிந்தொழிந்து போகுமுன் மனிதன் என்றாவது மறதியிலாவது ந…
-
- 0 replies
- 431 views
-
-
சூரியப்பேரொளியைச் சுற்றிக் காவியப்போராளிகள் வருவர் இயலாப்பொழுதின் புலர்வாய் ஒளிசொட்டிய சூரியக் கதிர்களுக்குள் இருள் முட்டி இதயம் முட்டி எதுவெனச்சொல்ல இயலாமல்…. எதை இழக்க எதை மறக்க ? எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை…. எல்லாம் முடிந்துவிட்டாற்போன பிரமை கண்ணுக்குள் வந்து மறையும் காட்சிகளாய் கடைசிக்கணங்களின் நுனியில் சாவின் நொடிகளை நுர்கின்றன…. சந்திப்புகள் சரித்திரக் கதைகள் சாதனைகளின் நீளமாய் ஒவ்வோர் நினைவும் முகமும் கலங்கிய விழிக்கனவோடு கரைந்து கரைந்து கடல் வற்றிக் காய்ந்து பாழங்கள் நிறையும் மயானக் காட்டின் நெடிலின் நுகர்வோடு கவிதையும் கடந்தகால நினைவுகளும் கசங்கிக் காற்றள்ள முன்னம் கடைசியாய் ஏவப்பட்ட …
-
- 0 replies
- 911 views
-
-
காணாமல் போன அண்ணன்! தீபச்செல்வன்… ஓர் நாள் கும்மிருட்டில் அண்ணனைக் கொண்டு செல்லும்பொழுது வாகனத்தின் பேரிரைச்சல் கேட்கையில் அண்ணன் எங்கே என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்கவில்லை தெருவில் அண்ணனைப் போன்றவர்களைப் பார்க்கும்போதும் அடுத்த வீட்டுப் பிள்ளைகளுடன் விளையாடச் செல்லும்போதும் அண்ணன் வந்துவிட்டானா? என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்வில்லை யாராவது திருவிழாவுக்கு செல்லும்போதும் கொண்டாட்டநாட்கள் வரும்போதும் அண்ணன் வரமாட்டானா? என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்கவில்லை தூங்கி எழும்பும்போதும் பள்ளிக்கூடம்செல்லும்போதும் அண்ண…
-
- 0 replies
- 1.1k views
-
-
எப்போது வாய் திறப்பாய் சம்பந்தா? [கீதன்][19 - 07 - 2016][சமூகம்] எல்லாம் அழிந்தும் இல்லாமல் போகாமல் இன்னும் இருக்கின்றோம் என்றெண்ணி பொல்லாதவன் நீயென பலபேர் பொங்கியபோதும் இல்லாத வீட்டில் இலுப்பைபூ சர்க்கரையாம் ஏதும் செய்யட்டும் சின்னன் எண்டாலும் ஏதோ செய்யட்டும் இப்பிடித்தான் ஏழு வருசங்கள் இல்லாமல் போனதடா? எல்லாம் வரும் எறும்பூர கற்குழியும் மின்னாமல் முழங்காமல் பம்மிக்கொண்டிருந்தா பாவப்பட்டு தருவாங்கள் வல்லரசையே வளைச்சுப்போட்ட எங்களுக்கு தமிழரசை மலரவைக்க தெரியாதோ? இப்பிடித்தானே அந்த எடுபட்டு போனவனும் சொல்லிவந்தான். கனநீளா அவனையும் காணலையே. அறுபது வருசமாக அரசியல் ச…
-
- 0 replies
- 874 views
-
-
வெளிநாட்டின் இன்பம் துன்பம் இங்கு இன்பமே துன்பம் ,துன்பமே இன்பம் முதல் முதலில் விமானப்பயணம் வாழ்நாளின் சாதனைப்பயணம் என தேன்றும் வந்த பிறகுதான் இது சாகவந்த பயணம் என்று தெரியும் இங்கு நான்கு சுவத்துக்குள் சிறை அது தான் எங்களின் அறை அது உள்ளவே சமையல் அறை சிக்கன்,மீனு எல்லா பொருளும் கிடைக்கும் குளிர்சாதன கிடங்குல அந்த ஏதிலிலும் சத்துயில்ல நாங்கள் உண்ணுவது தான் உணவு நாக்கு சுவைக்கு இல்லை என பழகு இது தான் எங்கள் முதல் மந்திரம் இங்கு ஜன்னல் என்ற ஒரு பெயருக்கு ஒன்று இருக்கு அதை திறந்தாள் புழுதிக்காற்று அடிக்கும் இதை யாருக்குத்தான் பிடிக்கும் சுவாசிக்க காற்று தேவை இங்கு சுவாசிக்கவே நல்ல ஒரு காற்று தேவை அனைத்து காய்ச்சலுக்கும் ஒருமாதிரி மாத்திரை கம்பெனிக்கு எங்கமேல இல்ல அக்கறையும் …
-
- 0 replies
- 1k views
-
-
இன்று வரைக்கும் அழுகின்றோம் எங்களுக்காக கொஞ்சம் பேசுங்களேன் எங்கள் முற்றங்களில் ஓடி விளையாடிய குழந்தைகள் இன்று உடல் சிதைந்த புகைப்படங்களாக பார்க்கின்றோம்... புள்ளிக் கோலமிட்டு பிட்டு அவித்து ஊட்டிய அம்மாவின் கையில்லை -இன்று தோளில் சுமந்து பள்ளிக்கு கொண்டு விடும் அப்பாவுமில்லை... கொடியேற்றி கொண்டாடினார்கள் நாங்கள் படங்குக்குடிசையில் திண்டாடிய போது சிரித்தார்கள் எங்கள் தேசம், நாங்கள் வாழ்ந்த சொர்க்க பூமி சுடுகாடாய் தெரிந்த போது மானமென்ற ஒன்றுக்காய் மடிந்த பெண்ணின் உடலை நிர்வாண படுத்தி புகைப்படங்கள் எடுத்து புன்னகைத்தார்கள்... உயிர் தப்பி வந்த பெண்களை தெரியாத பாசையில் ஏசினார்கள் அடித்தார்கள் , உதைத்தார்கள் தங்கி…
-
- 0 replies
- 591 views
-
-
கடுப்பில் இருக்கும் டி ராஜேந்தரிடமும் வாலியிடமும் டக்குவப்பற்றி கவிதை பாடச்சொன்னா எப்புடி இருக்கும்...ஒரு கற்பனை முதலில் டி ராஜேந்தர்... உன்முகத்தில் வளந்திருக்கு தாடி உங்கூட உள்ளதெல்லாம் கேடி மகிந்தயிடம் போயிடுவா ஓடி வாலாட்டி வாங்கிடுவா கோடி ஊரைச்சுத்தி உலையில் போடும் தாடி நீ மகிந்தைக்கு வாச்ச உலை மூடி சிங்களவன் கோடியினை தேடி பதுங்கிடும் நீ ஒரு பேடி பாடையில போகணும் உம் பாடி அதைப்பாக்கணும் நான் சந்தோசத்தில் ஆடி ஏய்..டண்டணக்கா..ஏய்..டணக்கணக்கா.... இப்ப வாலி.. சனியனே...சனியனே... சனிக்கே...சனியனே... எங்களைப்பிடிச்ச... ஏழரைச்சனியனே... மங்காச்சனியனே... மானங்கெட்ட சனியனே... எந்தக்கோயில் போய் எள்ளெண்ணெய் எரிச்சாலும் எங்களைத…
-
- 0 replies
- 1.2k views
-
-
அடிக்கடி உன் முகத்தின் முகவரியை அசைபோட்டுப் பார்க்கிறேன்! பார்ப்போர் எல்லோர் மீதும் பாசம் வருவதில்லை! கண்ணில் காண்போர் எல்லோர் மீதும் காதல் வருவதில்லை! ஆனால் எப்படி உன்மீது மட்டும் இப்படி ஒரு காதல்! என் இதயக் கோயிலில் காதல் வேதங்கள் ஓதப்பட… தென்றல் தெம்மாங்கு பாடி ஊருக்கு அஞ்சல் செய்கிறது! உன் வாசனைகள் எனைக் கடந்து செல்கிறது! ம்…! இதயத்தின் ஒவ்வொரு அறைகளிலும் உன் முகம் பதிகிறது! தாலாட்டும் பூங்காற்றாய் தழுவிச் செல்லும் உன் நினைவால்… என் அனுமதிகள் எதுவுமின்றி கற்பனை நான்கு திசைகளிலும் எட்டிப் பார்க்க… மௌனமாய் கருத்தரித்து விரல் வழி பிறந்து வழியும் கவிதைகளை வி…
-
- 0 replies
- 1.1k views
-
-
குண்டுமல்லி தோட்டத்திலே குவிந்திருக்கும் மல்லிகையே - உன் கூட்டாளி நானிருக்கேன் குவளைமலரே கண்ணுறங்கு!! கைகொட்டி சிரித்திருக்கும் பட்டுமேனி பெட்டகமே யார் கண்ணும் படுவதற்குள் காந்தள்மலரே கண்ணுறங்கு!! ஈசானி மூலையிலே உலையங்கே கொதிக்குதம்மா போயி நானும் பார்த்துவரேன் பூந்தளிரே கண்ணுறங்கு!! பசும்பால் வாங்கிடவே பணமிங்கே போதலியே உலைத்தண்ணி ஊத்திவாறேன் மாந்தளிரே கண்ணுறங்கு!! கட்டுமரக் கப்பலோட்டி கடலுக்கு போன அப்பா பொழுதடைய வந்திடுவார் பூச்சரமே கண்ணுறங்கு!! அயரை மீனும் ஆரமீனும் அள்ளிக்கொண்டு வருவாரடி அதுவரைக்கும் பொறுத்திருக்க ஆரவல்லி கண்ணுறங்கு!! வாளைமீனும் வழலை மீனும் வலைபோட்டு பிடித்தமீனும் வட்டியிலே போட்டுத்தாற…
-
- 0 replies
- 604 views
-
-
விழித்திடு பெண்ணே! விடியலைப் படைத்திடு சமுத்திரம் ஒன்றே இலக்கெனக்கொண்ட ஆறுகள் சோர்வது உண்டா? சரித்திரம் படைத்திட புறப்பட்ட பின்னால் தடைகளால் உடைந்திடல் நன்றா? வெளுத்தது எல்லாம் பாலென நம்பிய மனத்துக்கு இது ஒரு பாடம்! நீ குழந்தையல்ல குமரி ஆனாய் இனி விழித்திரு பெண்ணே எப்போதும்! இடையினில் தடை வரும் தடுக்கிடப் பார்த்திடும் தலைவலி உடன் வரும் கடு கடு சொல் வரும் களங்கமும் சேர்ந்திடும் நெருப்பென்று ஆனாய் பெண்ணே நெருப்பினை ஈக்கள் மொய்ப்பது இல்லை சளைக்காமல் நீ தொடு இலக்கினை! பொடி வைத்துப்பேசும் நாக்கு பொய் கூசாமல் சொல்வோர்க்கு விளக்கங்கள் கொடுத்திடல் நன்றோ?! சூரியன் மேற்கினில் உதிப்பது உண்டோ? தோல்விகள் வெற்றியின் படிகள் அன்றோ? இறைவனின் அருளொடு நல்லோர்கள…
-
- 0 replies
- 1.7k views
-
-
உதட்டில் ராக்கெட்டை வைக்கிறேன் அதன் புகை உள்ளே செல்லுதே நுரையீரலையும் தாக்குதே என் மூளைக்கு இது தெரிகிறது இதை வேண்டாம் என்கிறேன் ஆனால் மனம் ஏற்க மறக்குதே..... காற்றை கொண்டு அடைக்கப்ட்ட பையில் புகையை அடைகிறேன் காற்றை வெளியில் ஏற்றுகிறேன் கூடவே என் உயிரையும் ஏற்றுகிறேன் நீ மெதுவாய் கரைகிறாய் என்னையும் மெது மெதுவாய் கரைகிறாய் நீ முன்னாடி செல்கிறாய் என்னையும் பின்னாடி அலைகிறாய் ... நான் தீயால் உன்னை கொள்ளுகிறேன் நீ என்னை புகையால் கொள்ளுகிறாய் கடைசியில் நீயே வெல்லுகிறாய் ...... என் புகையில்லையே ............... எங்கள் உயிருக்கு இல்லை விலையே ...... மு.க.ஷாபி அக்தர்
-
- 0 replies
- 650 views
-
-
இழவுச் சங்கம் ! ஆர்.மணிகண்டன் ஆலமுண்ட சிவன் சூலத்தால் குத்திக் கொண்டு செத்துப் போனான் போதி மரத்தில் மேலங்கி சுற்றித் தூக்கிட்டுக் கொண்டான் சித்தார்த்தன் சிலுவையில் தொங்கிய தேவகுமாரனும் எழுந்திருக்கவில்லை உள்ளுக்குள் அழுததாய் ஊருக்காய்ப் பிதற்றியவனின் ஆசனவாய் ஆபத்து நீங்கிய இரண்டொரு பகலில் நான்காம் முறையாக இழவுச் சங்கம் இசைத்தார்கள் முத்துக்குமரனின் ஆவி அறிவு தப்பி அரற்றும் தென்வனத்தில் வலைப் பூக்களில் நெளியும் விரல்புழுக்களுக்கு இரையாகிறது எம் இரத்தம். 1/28/2010 5:04:57 PM நன்றி - பொங்குதமிழ் இணையம்
-
- 0 replies
- 802 views
-
-
களத்திற்கு வரும் பொது கவிதையுடன் வருவதென முடிவெடுத்து மாவீரர் கனவுகளை நினைவாக்க கருத்தியலால் கவிதை வடிக்க நடுங்கியது இரு கரமும் சொல்லுண்டா மாவீரர் தியாகத்தை கவிதையாக்க நிகருண்டா அவர்கள் தியாகத்திற்கு வெதும்பியது மனம் கல்லாக்கி மனத்தைக் கருங்கல்லாக்கி வித்தாகிப்போன மாவீரர் கவிதை எழுத சொல்லுண்டா என் மனம் துடித்தது மல்லுக்குக் கவிதைஎழுதி மாவீரர் வில்லுக்கு வினை சேர்ப்பதா நான் எல்லைக்கும் செல்லாதவன் எல்லை கடந்தவரை எழுதிப் பழி சேர்ப்பதா சூரியதேவன் குழந்தைகளின் கூரிய இலக்கினை ஆரியன் அடக்கினான் எனப் பேருக்குப் பொய் எழுதுவதா பாரினிலே ஈழம் பிறந்திட மாரினிலே தழும்புடன் பகைவன் பாசறை புக…
-
- 0 replies
- 910 views
-
-
அங்கோர் கூட்டம் தன்னில் அன்றொருநாள் பேசுகையில் ‘ஹல்துமுல்லை’ என்றாலும் ‘அழுத மலை’ இது என்றேன்.. ‘’கூனியடிச்ச மலை கோப்பிக் கன்னு போட்ட மலை அண்ணனை தோத்த மலை அந்தா தெரியுது பார்…’’ என்று அழுதமலை இதுவென்றேன். இன்று அழுதழுதே எழுதுகின்றேன்…. இன்னல் செய்ய பலருண்டு இன்செய்ய யாருமில்லை வன் செயல்கள் பல கண்டு நாம் வாடிய நாள் பலவுண்டு செயற் கைதானே எங்களை சீண்டி வந்தது இயற்கையே நீயுமா இன்று ஏம்மீது விழுந்தது.. வன்முறைகளலால் தானே பன்முறைகள் காவுகொண்டோம் இம்முறை இயற்கையும் கூட எங்களை விட்டுவைக்கவில்லையே.. ஏனிந்த விந்தை எதனால் இந்த சோதனை மலையே…! உன்னை உரமாக்கி, உரமாக்கி உயர்த்திய அண்ணனை.. உன்மீது வலம் வந்தே நிறம் மாறிய எங்கள் அன்னையை.. அள்ளிக் கொண்டு போக அத்தனை …
-
- 0 replies
- 1.2k views
-
-
காலை வந்தது காபி வந்தது நா இனிக்கவில்லை! சேதி கேட்டதும் உள்ளம் உடைந்தது யாருக்கும் புரியவில்லை! ஆதி முதல் தலைவன் கூட இருந்த ஒருவன் பாதி வழியில் போவான் என்று யார் அறிவான்? பாவி ஒருவன் செய்த செயல் ஆவி துடிக்க வைத்ததம்மா! சிரிக்கின்ற ஒரு புலி எரிகின்ற தீயில் வேகுதம்மா! தெரிகின்ற ஈழத்துவாசல் பார்க்குமுன் விரிகின்ற சிரிப்படக்கி பறந்தாயே செல்வா...! முதலில் ஒரு சிங்கம் போனது இப்போது ஒரு புலியும் போகுது வலியும் வஞ்சகமும் எம் ஈழப்பாதை எங்கும் விரிந்தே கிடக்குது! தமிழ்ச் செல்வா... வலிக்குது நெஞ்சம்... கோபத்தின் கொந்தளிப்பில் எரியுது உள்ளம்... ஏய்! பகையே அடாது செய்தாய் விடா…
-
- 0 replies
- 993 views
-
-
கவிதை ஜெயபாலன் விமர்சனமும்.- Na Ve Arul . . மா கவிதை ***************** ஒரு கவிதை நமக்குள் என்ன செய்கிறது அல்லது என்ன செய்ய வேண்டும் என்பது வாசகர்களாக இருக்கிற மிக முக்கியமான வரையறை, எது கலை என்கிற கேள்விக்கு கலை என்கிற தனது புத்தகத்தில் சொல்வார்… “ஒரு மனிதன் உள்ளுறைபவனை மற்றொரு மனிதனின் உள்ளத்துக்குக் காட்டுவதுதான் கலை. அது ஒருவனின் உண்மையான பரிச்சயத்தை மற்றவனுக்குக் கொடுக்கிறது. ஒருவனின் மௌனச் செய்தியை மற்றவனுக்குத் தெரிவிக்கிறது. ஒருவனுடைய சுய துக்கங்களின் அனுபவத்தை இன்னொருவன் பெறும்படி செய்கிறது. ஒருவனுக்குரிய செல்வத்தை மற்றவனும் அனுபவிக்க உதவுகிறது.” இது கவிதைக்கு…
-
- 0 replies
- 931 views
-