Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. என் மண்மேலே நின்று, என்மேலே இரத்தம் சிந்தி, யுத்தம் செய்த வித்தகரே, காத்த முடியாமல் சத்தம் போடாமல்-உங்களை நித்தம் தேடுகிறேன், தமிழீழ நாடு தமிழரின் தாய் வீடென்று என்மீது தாவி திரிந்த வீரர்களே, தனிமையாய் எல்லாம் வெறுமையாய் தவிக்கிறேன். என் கடல் மேலே ஏறி அலையோடு தாவி அற்புதங்கள் செய்தவரே-உங்கள் படகோசை கேட்காமல் படைவாசம் வீசாமல் பாவி மகளாய் பரிதவித்து வாழ்கிறேன். அலைகள் மட்டும் என்னை முட்டிப்போகுது, அன்று காடு மலைகள் எல்லாம்-உங்கள் பாதச்சுவடுகளால் பசுமையாக்கி சென்றீர் இன்று என்னை அழிப்பவர் கால்பதிக்க, கூடி அழ யாருமின்றி குமுறி அழும் என்குரல் கேட்காமல் போனதோ உங்களுக்கும். வாய் நிறைந்த சிரிப்போடு வானம் எரிய வான்புலியே காற்றிலும் புலி பறக்குமென…

  2. அறத்துப்பால்-கடவுள் வாழ்த்து -அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு (01)கே இனியவனின் திருக்குறள்-சென்ரியூ எழுத்தின் தாய் உலகின் தாய் -அகரம் - -

  3. மரணம் அல்ல ஜனனம் பூஜைக்கென்று பூத்த மலர் புயலடித்து சாய்ந்ததம்மா! கண்ணியிலே கால் இடறி கன்னிமயில் வீழ்ந்ததம்மா! செம்புழுதிக் காற்றே சொல்லு புங்கை நகர் தேவதை எங்கே! பள்ளிக்குப் போன எங்கள் பருவநிலா தொலைந்த தெங்கே! வன்கொடுமைத் தீயில் வீழ்ந்து வதைப்பட்ட போது நெஞ்சில் என்ன நினைத்தாளோ! ஐயோ!..... பெண்பிறப்பே கொடியதென்று சொல்ல நினைத்தளோ! வெறி புடிச்ச நாய் கடிச்சா யாரை தப்பு சொல்வது வெறிநாயை விட்டுவைச்ச சமூகத் தப்பு அல்லவா! மாநிலத்தில் தமிழ் ஆட்சி வெறும் காட்சி மாற்றம்தான் கண்ணகி சிலை மறைப்பில் காம வெறி ஆட்டம்தான்! கண்ணா!......கண்ணா!....என்று கத்தினாள் பாஞ்சாலி அண்ணா!.......அண்ணா!......என்று அலறித் துடித்தாயோ! …

  4. நீ சிரித்து பேசும் பொழுதுகளை விட விட்டு விலகும் பொழுதுகளில் தான் என் காதல் அழுது அடம் பிடித்து உன் பின்னேயே வருகிறது...

    • 2 replies
    • 727 views
  5. காகித எழுதி. தேர்ந்த கவி ஒருவனின் கைகளில் சிக்கிக்கொண்ட காகித எழுதி கன வேகமாக நிரப்பிக்கொண்டிருந்தது காகிதத்தின் வெற்றிடங்களை கனமான பொருளோடு... சிறந்த சிந்தனாச் சிப்பியின் கைகளில் சிக்கிய சிறிய தூரிகை கிறுக்கிய அகண்ட நெடிய ஓவியத்தைப்போல் நிறைத்து வழிந்தன கவிதைகள் வெற்றிடத்தில் இருந்து வெற்றிடத்தைப் பற்றியதாக... சூனியத்தில் இருந்து வெறுமையில் இருந்து பிறந்துகொண்டிருந்தது பெருமைகளின் சிந்தனை பிரசவிக்கும் தாயின் முக்கலும் முனகலும் இல்லாமலே பிரசவித்துக்கொண்டிருந்தது காகித எழுதி கவிதையை நியாங்களில் இருந்து நிஜங்களில் இருந்து வெறுமையை நிரம்பிக்கொண்டு பிறந்துகொண்டிருந்தது அந்தக் கவிதை தேன் நிறைந்த பூவின் வாசமாக கிறங்க வைத்தன வெற்றிடத்தைப் பற்றி …

  6. 'உனையிழந்தெம் தேசம் அழுகிறது..."" நேசத்து உறவாகி எம் தேசமதில் உலவியவன்... தேசத்துரோகிகளால் தெருவினிலே வீழத்தப்பட்டான்.... எம் தமிழர் துடிக்கையிலே பொங்கியவன் எழுந்தவனே.... உலகத்தை தட்டியவன் நீதிதனை கேட்டவனே.... சிங்க கோட்டையுள்ளே சீறி புலியாய் எழுந்தவனே.... அலரி மாளிகையிலும் ஆர்ப்பாட்டம் நடத்டதியவன்... மும்மொழியில் தேர்ச்சி பெற்றான்.... முன்னுதாரணம் பல சொல்வான்... அச்சம் இன்றியவன் அவலங்களை எடுத்து உரைப்பான்... துச்சமதாய் உயிர் மதித்து துனிந்து நின்று குரல் கொடுப்பான்.... எண்ணில்லா பணிகளதை எங்களுக்காய் அவன் அழித்தான்... கதிரவெளியினிலே எம் தமிழர்…

  7. உங்கள் வீட்டுப் பெண்களுக்கு மார்புகள் வெட்டப்படவில்லை உங்கள் பிள்ளைகள் எவரும் தொலைந்து போகவில்லை உங்கள் பிள்ளைகளை எவரும் வல்லுறவு செய்யவில்லை உங்கள் சொத்து சுகங்கள் எதையும் நீங்கள் இழக்கவில்லை பசி பட்டினியால் நீங்கள் எவரும் இறக்கவில்லை இழந்தது எல்லாம் நாங்கள் மட்டுமே ஒரு பொல் பொட்டையோ ஒரு ஹிட்லரையே ஒரு ஸ்டாலினையோ ஒரு முசோலினியையோ அந்த மக்களை மறக்கச் சொல்லுங்கள் நாமும் மறந்து விடுகிறோம். பா.உதயன் ✍️

  8. வாசித்ததில் மனதில் பதிந்த கவிதை இது - ச ச முத்து பிப் 23, 2013 சர்வதேசமே, உங்கள் குழந்தைகளுக்கு துப்பாக்கிகள் பொம்மைகள். எங்கள் குழந்தைகள் துப்பாக்கிகளுக்கு பொம்மைகள்!! http://www.sankathi24.com/news/27321/64//d,fullart.aspx

  9. Started by Ahasthiyan,

    "அப்பா கவனமா போய் வாங்கோ " பிள்ளை எல்லாம் எடுத்து வைச்சியே ? "ஓமப்பா " ஈச்சம் பத்தை தாண்டி சைக்கிள் உருண்டது. வடலியின் நடுவே நாப்பது மரம். தடம் காலில் போட்டேன் அவள் சலங்கையும் மெட்டியும் கேட்டிருந்தாள். விறு விறுவென்று ஏறினேன். பெண்பூ தேடிஅறுத்தேன். அவள் தாலிக்கு வீட்டில் தவம் இருந்தாள். பாளையில் சத்தகத்தால் சீவினேன் அவள் இப்போ தலை சீவிக் கொண்டிருப்பாள். வயிற்றில் சுண்ணாம்பு பூசியிருந்த புது முட்டியை பத்திரமாக கட்டினேன். பழைய முட்டியில் பனையின் கண்ணீர் நிரம்பி இருந்தது. அவளும் வீட்டில் அழுது கொண்டிருப்பாள். இடுப்பில் தொங்கிய முட்டியில் ஒவ்வொன்றாய் சேகரித்து இறங்கினேன். தவறணையில் கொடுத்து காசு வாங்கி திரும்புகையில். கள்ளுக்குடித்த கூட…

  10. இந்த கவிதை 2016ம் ஆண்டு வைரமுத்து முள்ளிவாய்க்கால் போய் வந்து கவிதை எழுதிய நேரம், அதற்கு சாட்டையடி பதிலாக சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது. மீண்டும் வைரமுத்துவுக்கு ஆதரவாக நமது மக்கள் கெம்பி திரியும் இந்நாட்களில் இதை மீள பதிவது சாலப்பொருத்தமாய் இருக்கும். எழுதியவர் யாரெனெத்தெரியவில்லை முள்ளிவாய்க்கால் போனவரே முள்ளிவாய்க்கால் போனவரே தமிழ் முத்து வைரக் கவியரசே இன்னல் நிறைந்த எம்வாழ்வை இரு கண் கொண்டு கண்டீராம் குலுக்கக் கையே இல்லையென கல்மனம் கலங்கி நிண்டீராம் தெள்ளுத் தமிழில் இனிதாக - நீர் தெளித்த கவிதை கண்ணுற்றேன். உம்மைப் பார்த்து ஒருவார்த்தை இளம் ஈழக்கவி நான் கேட்கின்றேன் கண்ணை மறைத்து இதுகாற…

    • 4 replies
    • 726 views
  11. பாலைவனத்தில் பந்தாடும் சிறுத்தைகளுக்கு... (05.06.2012 அன்று தமிழீழ தேசிய உதைபந்தாட்டஅணி முதன் முதலாக பாலைவனத்தில் பந்தாடியபோது வெளியிடப்பட்டது.) பாலைவன தேசத்தில் எங்கள் சிறுத்தைகளின் பந்தாட்டம் பக்கம் இருந்து பார்க்கின்ற கொடுப்பனவு எமக்கில்லை எட்ட நின்றாலும் பக்கம் வந்து உணர்வாலே உம்மை பாடி வைக்க தமிழ்தாய் வரம் தந்ததால் பாடுகின்றேன் உம்மை வெற்றித்திலகமிட்டு வாழ்த்துகின்றோம் வீரரே ! வென்று வாரும். சாவினிற்க்கு அஞ்சாதோர் மீது சாற்றிய கொடியொடு சென்றுள்ளீர் நிச்சயம் வென்றுதான் வருவீர்!!! குண்டடிபட்ட எம் தேசக்கொடி பந்தடிக்கும் வீரரே! உம்மால் பாரினில் பறக்குது இன்று காணொளியில் கண்டதுமே கை கூப்பித் தொழுகின்றோம் கதிரவன் உதிக்கும் திசை நோக்கி எத்தனை ஆயிரம் வீர…

    • 10 replies
    • 725 views
  12. கார்த்திகைப் பூக்கள் உங்களுக்காய் பூத்து நிற்கும்.... கவிதை- இளங்கவி எங்கள் மக்களின் அவலத்தில் எங்கள் வீரர்களை மறந்தோமா..? மாவீரர் ஆகி விட்ட எங்கள் புலிகளை மறந்தோமா...? ஆழிப்பேரலை போல் அழித்தவண்ணம் வந்தவனை சிறு மண்மேடாய் நின்று தடுத்தவரை மறந்தோமா..? சுற்றிவிழும் எறிகனைகள் நெருப்பு கக்கிவரும் பீரங்கிகள் காற்றுப் போல் சன்னங்கள் கழுகு போட்ட கொத்தணிகள் கருக்கிவிடும் வாயுக்கள் பொஸ்பரசின் பொசுக்கல்கள் இத்தனையும் தாங்கி எரிமலையில் நின்றுகொன்டு தன்னுயிர் போக முதல் ஒவ்வொரு தமிழரையும் காத்த எங்கள் கருங்கல்லு மலைகலை கனவிலும் நாம் மறப்போமா...? வேங்கைகள் பலருடனும் வீழ்ந்த பல விரத்தளபதிகள்... எங்கள் மக்களுக்காய் மடிந்த இ…

  13. அதிகாலை வேளை அந்தக் கோடை நடுவிலும் நனி குளிர் நடுக்கம்..! வந்த அழைப்பை... போர்வைக்குள் ஒளிந்திருக்கும் ஆசை முந்திக் கொள்ள அழைப்பு மிஸ்ஸானது. மீண்டும் சிணுங்கும் அந்தத் தொலைபேசி சினந்து எழுப்ப... "என்ன ரெடியோ வெண்புறா நிகழ்வு இருக்கு போகலாம்" மறுமுனைக் குரல் அழுத்த.. முடிவு... "காட்டாயம் அவைக்காகப் போகனும்.." மனது உறுதியானது. தமிழன் பரம்பரை பரம்பரையாய் நாற்று நட்ட வயல்கள் நடுவே சிங்களம் விதைத்த கண்ணிவெடிகள் கால் பிடுங்கி அழித்தது எம் மக்கள் வாழ்வு..!! அது கண்டு நெஞ்சுருகித் துணிவு கொண்டு புறப்பட்ட புறாக்களே இந்த வெண்புறாக்கள்..! சம்பிரதாயத்திற்கு ஒலிவ் கிளை ஒன்றை நுனிச் சொண்டில் உயரக் காவி வித்தை காட்டி.. வேட்டையாளர் வேடம் கலை…

  14. உன்னுடன் நான்படித்த காலம் கண்ணில் தெரியுதடா என்னுயிர் நண்பாஉன் நட்பின் தீபம் எரியுதடா உன் மனம் என்னவென்று யாருக்குத்தான் புரியுமடா உன்மனம் அறிந்த உண்மை எனக்கு மட்டும் தெரியுமடா அன்னையுடன் வாழ்ந்த நாளில் ஆத்ம நண்பராயிருந்தோம் இன்னல் மறந்த தோழர்களாய் கல்விக்கூடம் சென்று வந்தோம் இன்சுவை வேண்டுமென்று ஐஸ்கிரீம்கள் பல சுவைத்தோம் முன்கூட்டியே முள்ளி வாய்க்கால் அழிவினை அறியாதிருந்தோம் தோழமைக்கு இலக்கணமாய் துடிப்புடனே நின்றவனே ஆளுமையின் அகல்விளக்காய் அன்னைக்காக சென்றவனே வேளத்தின் பலத்துடனே பகைக்கு முகம் கொடுத்தவனே வாழவேண்டும் நாடென்று வீரத்துடன் மொழிந்தவனே என்னினிய நண்பா இன்று நீ பிறந்த நன்னாள் உன்னை வாழ்த்திக் கவியெழுத எனக்கு வாய்த்த பொன்னாள் …

    • 8 replies
    • 724 views
  15. Started by pakee,

    [size=4]கள்ளமில்லா உன் பார்வையால் என்னைக் கொள்ளை கொண்டு சென்று விட்டாய் திசை மறந்த பறவையாய் திகைக்கிறோம் நானும் என் காதலும் நாணயத்தை தடவிப்பார்த்து மதிப்பிடும் கண்ணில்லாக் கிழவி போல் உன் மனம் தடவி அறிந்து கொண்டேன் நீ சொல்லாத காதலை.. சாளரத்தின் வழியே உடல் நனைக்கும் மழைத்தூறலாய் என் மனதை நனைத்தது காதலுக்கு நம் பெற்றோரிடம் சம்மதம் கிடைத்த தருணங்கள் பூட்டிய கதவை இழுத்து சரிபார்ப்பதாய் ஒவ்வொரு முறையும் என்னிடம் செல்லச் சண்டையிட்டு உறுதி செய்து கொள்கிறாய் உன் மீதான என் காதலை செடி முழுக்க பூத்திருக்கும் ரோஜாவாய் நம் மனத்தோட்டத்தில் மலர்ந்திருக்கின்றன‌ என்றும் வாடாத காதல் பூக்கள்...[/size]

    • 0 replies
    • 724 views
  16. காலச்சிதைவின் துர்க்கனவிலிருந்து உயிர் பெற்றெழுமெனை மறுப்பின்றி இறந்தவன் எனக்கொள்க. ஒளிப்பொட்டில் கரைந்தழியும் இருளின் மறைப்பில் நீளுமெனது நிர்வாணம் காலத்தால் வாழ்ந்தவன் எனக்கொள்க, சாத்தியமேயில்லாத இரண்டாம் உயிர்த்தெழுகை நடுங்குமிந்த இரவுகளில் நிகழ்ந்துவிடக் கூடுமென்ற அச்சத்தில் விழிகளை திறந்து போட்டிருக்கிறேன். கபாலத்தைப் பிளப்பது போலொன்றும் இலகுவாயில்லை காலத்தைப் பிளப்பது. பெயரை அழித்துவிடுதலும் எனைக் கொன்றுவிடுதலும் வேறுவேறாயினும் ஒன்றென்பதுபோல எதுவுமே இலகுவாயில்லை. நேற்று நேற்றாயிருந்தது இன்று ந…

  17. காலமறியாக் கற்பூரங்களாய் காடுகளில் நடந்தவரே....! ஆளரவம் தொலைத்த அடர் வனங்கள் அன்றைக்கு மௌனித்து மயானம் பூண்டு ஆட்களற்றுப் போனது. ஆழகான புற்தரைகளின் பச்சையம் ஆட்களற்றுத் தனித்த பனித்துளியின் ஈரம் குருதித் துளியாகிக் காயத் தொடங்கியது. நீங்களும் வெடியாகி இடியாகி வெளியில் வராத ஒளியாகிப் போனீரென்றுதான் காலமழுதது. எனினும் போரின் கறைகள் காயாமல் கண்ணீரின் ஈரம் தோயாமல் நீங்களெல்லாம் வனமளப்பதான வதந்திகளையெல்லாம் மௌனங்கள் காடேற்றிக் கடந்தது காலநதி. உங்கள் நிழலைக் கூடத் தொட்டறியாத பேயெல்லாம் உங்களைப் பற்றி ஆய்வுகள் செய்தது அங்கென்றும் இங்கென்றும் அறிக்கைகள் கொடுத்தது. சொல்லியழ முடியாத் துயர் கண்ணில் நிறைந்தாலும் வ…

    • 2 replies
    • 724 views
  18. அப்பற்றை சைக்கிள் அருமந்த சைக்கிள் குப்பைக்குள் புரண்டு கோடிக்குள் கிடந்தது நாப்பது வருச காலம் நான்தானே சுமந்தனான் இப்பதான் தெரியுதோ என்று ஏக்கத்துடன் கேட்டது அப்பரோடு இருந்த காலம் அது என்ர வசந்தகாலம் எப்படியெல்லாம் வச்சிருந்தார் எங்கெல்லாமோ சுத்தி திரிஞ்சம் கொப்பரும் கொம்மாவும் கல்யாணம் கட்டின நேரத்தில எப்பவும் எல்லா இடமும் என்னைதான் கூட்டிப் போவினம் செக்கன்ட் சோ சினிமாவுக்கும் சாமத்தில் போய் வருவம் சொக்கன் கடை தேத்தண்ணிக்கும் சட்டென்று போய் வருவம் வாட்டப்பம் இழுப்பதுவும் …

  19. எப்போதும் நான் அப்படியே இருக்கிறேன் மற்றவரைப் புரியமுடியாது உற்றவரின் துயரம் அறியாது கற்பனை வானில் பறந்துகொண்டே கடிவாளமற்ற சிந்தனையோடு என்னைக் காயப்படுத்துவோரை கழற்றி எறிய முடியாதவளாய் மீண்டும் மீண்டும் மனதில் விழுப்புண் தாங்கியபடி விழுங்க முடியாதைதை எல்லாம் எப்படியோ விழுங்கியபடி ......... எப்படி மீண்டு வருவேன் நான் பீனிக்ஸ் பறவையாய் மீண்டும் எழ மனம் ஆசை கொள்கின்றது ஆனாலும் சூழ எரிந்து கொண்டிருக்கும் நெருப்பின் வீரியத்தில் கைகொடுக்க யாருமேயற்று காணும் இடம் எங்கும் தீ நாக்குச் சூழ செய்வதறியாது தவிக்கிறேன் நான்

  20. ஐம்பதில் வளையாது ஐம்பதிலும் வளைந்திருகிறது முதுகு @ கவிப்புயல் இனியவன் பழமொன்ரியு 01

  21. உள்ளிருந்து ஒரு குரல் 'உள்ளிருந்து ஒரு குரல்'நிகழ்ச்சியை கேட்ட இங்கே அழுத்துங்கள் 'உள்ளிருந்து ஒரு குரல்'நிகழ்ச்சியைத் தரவிறக்கிக் கேட்க இங்கே அழுத்துங்கள் (உள்ளிருந்து ஒரு குரல் என்ற கவிதையை நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். காலத்தை பிரதிபலிக்கும் இக் கவிதையை ஒலிவடிவில் தருகிறோம். எழுதியவரின் பெயர் குறிப்பிடப்படாமையால் கவிதைக்கு உரியவரின் பெயர் சேர்க்கப்படவில்லை. எழுதியவரின் பெயர் அறிந்தால் அஞ்சலிடுங்கள் சேர்த்துக் கொள்வோம்)

  22. மாவீர மனம் கொள் மலர்வாய் சிலிர்த்திட தேசியத் தலைவனை தோளிலே தாங்குவோம் தமிழ் தேசியக் கொடியினை பாரிலே தூக்குவோம்,அவன் சேனையின் யாகத்தை யாகித்து ஏந்துவோம்,பகை நோற்றிடும் தோல்வியின் சாரத்தை சாருவோம் தேச மீட்புப் போரை நேசமாய் பேணுவோம் வசமாகிடும் வீரத்தால் வளங்களை குவிப்போம், களம் வீச்சிடும் யோகத்தை வீச்சாக்கி நூற்போம்,எங்கள் பாக விடுதலை கீதத்தை ஏற்றியே சாற்றுவோம். வீம்பினின் பகை சாய்த்த மாவீரம் புனைவோம் வீசாத நகை கொள் நஞ்சினர் களைவோம், தமிழ் மூச்சினில் முகிழ்ந்திடும் முனைவனால் முகிழ்ந்தது தமிழீழ தேசமென இசைப்போம் கந்தக காற்றினி தேசத்தில் வீசாது, பல் குழல் எறிகணை சிந்த அகம் சீந்தாது. மந்தமாய் பகை சாயமும் சாயாது,அன்றி பூந்தளிர் பாலகர் …

    • 0 replies
    • 723 views
  23. தமிழனாய் பிறந்ததனால் தவிக்கின்றோம் பாரினிலிலே தடைநீக்கித் தழிழனுக்கு தரணியிலே – ஒரு தனியரசு வேண்டும். கழிகின்ற ஒரு கணமும் அழிகின்றான் ஒரு தமிழன் இருக்கின்ற இனம் வாழ எமக்கு ஒரு அரசு வேண்டும் பிறக்கின்ற குழந்தைக்கு பெயர் சூட்டத் தந்தை இல்லை பெற்றெடுத்த தாயும் பிணமாகக் கிடக்கின்றாள் பிரசவ வலிதீர்க்க மருத்துவம் எமக்கில்லை துடிக்கின்ற குழந்தைக்கு துயர்; துடைக்கும் ஆச்சிரமம் ஆகாயத் தாக்குதலில் அழிவுற்றுக் கிடக்கிறது நலிவுற்ற எம் மக்கள் நல்வாழ்வுதனைக் காண நல்லரசு ஒன்று நமக்கு வேண்டும். பரம்பரை பரம்பரையாய் பண்டுதொட்டு வாழ்ந்த மண்ணை பாதகச் சிங்களவன் பறித்து எம்மை அகதியாக்கி புதைக்கின்றான் புத்தர் சிலை பூர்வீ…

    • 0 replies
    • 722 views
  24. Started by துளசி,

    இதயம் பட படவென துடிக்கிறது பெண்ணே நெருங்கிடவேண்டும் உன் நிழலையாவது நான் பார்த்திட வேண்டும் .. காலம் கடந்து விட்டது காத்திருக்க நேரமில்லை கனவுகள் கலைந்து போனாலும் நினைவுகளை நிலைக்க விடமாட்டேன் என் சுவாசம் சிறைபடும்முன் உன் வாசத்தில் நானும் வசப்பட வேண்டும் உன் பார்வை கணைகளால் நான் ஊனமாக வேண்டும் ... உன் இதழ் தரும் தீண்டல்களே அதற்கு மருந்தாக வேண்டும் ... மஞ்சமாக மலர் நீயும் மடி தரவேண்டும் தஞ்சமாக நானும் அதில் தலை சாய்க்க வேண்டும் உன் மார்போடு முகம் புதைத்து நான் அழ வேண்டும் மலர் உந்தன் கைகள் எனைத் தழுவ வேண்டும் என்றுமே என்னவளாய் நீ இருக்க வேண்டும் ... உனை பிரியும் நாள் அன்…

  25. தேநீர் கவிதை: அலைகள் மாறுவதில்லை! மு.மேத்தா காகிதம் பணம் ஆனது... பணம் மீண்டும் காகிதமாகிவிட்டது! பணத்தை என்ன செய்வதென்ற கவலை - அதிபர்களுக்கும் அதிகாரங்களுக்கும்! பணத்திற்கு என்ன செய்வதென்ற கவலை - அப்பாவிகளுக்கும் அபலைகளுக்கும்! கொள்ளை நோட்டுகளும் கள்ள நோட்டுகளும் குளிர் சாதன அறைகளில் கூடிப்பேசுகின்றன... பாவம் - நல்ல நோட்டுகள்தான் அலைகின்றன நடுத்தெருவில்! வங்கி வங்கியாய் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.