கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
கவிப்புயலின் பலரசக்கவிதைகள் --------------- நகைச்சுவை --------------- ஆறடி பனை போல் வளர்ந்திருக்கும் பெண்ணே யாரடி சொன்னது ஓரடி குட்டை பாவாடை போடச்சொல்லி .....? குதிக்கால் செருப்பணிந்து குதிரைபோல்போனவளே குதி இருக்குது உன் கால் எங்கே ...? கை பைக்குள் காசை தவிர கண்டதையும்வைதிருந்தவளே கை இருக்குது உன்கைப்பை எங்கே ...? கண்டதையும் ........ பூசி அழகு காட்டியவளே.... பூசுவதற்கு வர்ணங்கள் இருக்கு ... முகம் இருக்குது உன் அழகு எங்கே ..? ^^^ கவிப்புயல் இனியவன் கானா நகைச்சுவை கவிதை
-
- 9 replies
- 1.4k views
-
-
பசிவந்து உணவு உண்டால் முடிவு இன்பம் தரலாம் உணவைக் கண்டு பசிவந்தால் முடிவு துன்பம் தரலாம் உணர்ச்சி வந்து உறவு கொண்டால் முடிவு இன்பம் தரலாம் உறவுக்காக உணர்ச்சி கொண்டால் முடிவு துன்பம் தரலாம் காதல் வந்து அழகைக் கண்டால் முடிவு இன்பம் தரலாம் அழகைக் கண்டு காதல் வந்தால் முடிவு துன்பம் தரலாம் வாழ்வதற்குப் பொருள் தேடினால் முடிவு இன்பம் தரலாம் பொருள் தேடுவதே வாழ்க்கையானால் முடிவு துன்பம் தரலாம் பாஞ்சின் கவி படிப்போருக்கு கவியா..? கிறுக்கலா...?
-
- 17 replies
- 1.8k views
-
-
அம்மாவுக்கு - வ,ஐ,ச,ஜெயபாலன் (1985) . அம்மா தங்கக் கனவுகளை இழந்த என் அம்மா. எனக்கென வரலாற்று நதியின் படுக்கையில் நீ கட்டிய அரண்மனை யாவும் நீருடன் போனது. . இன்று கோவில்கள் தோறும் கைகளைக் கூப்பி "பிச்சை வேண்டாம் நாயைப் பிடி" என இறைவனை வேண்டும் என்னுடைய அம்மா. .. யாழ்ப்பாணத்து செம்மண் தெருக்களில் வன்னிக் காட்டின் வயல்வெளிப் புறங்களில் கீழ் மாகாணத்து ஏரிக்கரைகளில் முகம் அழிந்த பாதி எரிந்த பிணங்களைப் புரட்டி தங்கள் தங்கள் பிள்ளையைத் தேடும் அன்னையர் நடுவில் . தமிழகத்தில் இன்றுநான் உயிருடன் இருப்பதை அறிந்து பாக்கியம் செய்தவள் என மனசு நிறையும் என்னுடைய அம்மா! . இப்படியுமொரு காலம் வந்ததே நம்முடைய மண்ணில் . இன்று உனக்கு நான் கதைகள் சொல்வேன் மரணம் பற்றிய கதை…
-
- 0 replies
- 916 views
-
-
2017 ஆண்டு சித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் - ஏவிளம்பி வருடம் ----------------------------------------- வருக வருக புத்தாண்டே வருக ...... தருக தருக இன்பவாழ்க்கை தருக...... பொழிக பொழிக வளம் பொழிக ..... வாழ்க வாழ்க உயிரினங்கள் வாழ்க ......!!! போ போ பழைய ஆண்டே போ ..... ஓடு ஓடு துன்பங்களோடு ஓடு ..... போதும் போதும் துன்பங்கள் போதும் .... மேலும் மேலும் தாங்க முடியவில்லை....! அணு அணுவாய் பெற்றோம் இன்பம் ..... வண்ண வண்ண கனவுகள் கண்டோம் .... விடிய விடிய கண் விழித்து உழைத்தோம் .... ஓட ஓட நினைக்க வைத்தது காலம் .......!!! இனிக்க இனிக்க வாழ்கையை தா புத்தாண்டே .... அன்பான அன்பான உறவுகளை தா புத்தாண்டே... உழைக்க உழைக்க உடல் உறுதியை தா …
-
- 3 replies
- 2.6k views
-
-
ஈழப்போர் முறிந்தபின் வந்த 2010 வசந்த காலத்தில் கண்ணீரோடு எழுதிய கவிதை. * முதல் வசந்தப் பாடல் வ.ஐ.ச.ஜெயபாலன் * சுனாமிக்குச் பிந்திய வசந்தத்தில் மீனவ குப்பங்களில். பூத்த மரங்களின் எச்சங்களில் குயில்கள் பாட மாலைசூடிய குழந்தைகள் எசப்பாட்டுப் பாடியதை கண்ணீரூடு பார்த்தது போல இன்றும் கரைந்தபடி.. . மனிதனின் வாழும் ஆசையை எந்தக் கொம்பனாலும் கொம்பியாலும் பறித்து விட முடியாது என்றபடி வருடந் தோறும் கீரோசீமா நாகசாக்கியில் செறிகள் மலர்கிறதுபோல என் மண்ணிலும் முறிந்த வேம்புகள் மலர்கின்றன.. . . இற்றை வசந்த இப்பூந்…
-
- 0 replies
- 619 views
-
-
தேநீர் கவிதை: சுடரின் நெருப்பொன்று... ஒரு தீபத் திரியிலிருந்து இன்னொரு திரியை சுடர்விக்கும் நெருப்பென்பது வளர்கின்றதா... தேய்தலடைகிறதா? தீயைப் பயிரிட்டு வெளிச்ச அறுவடை. முதல் சுடரின் பிள்ளைகளெனலாமா மற்றவற்றை இல்லை நகல்களா... ஒற்றைச் நெருப்பில் ஏற்றிய ஆயிரம் சுடர்களின் தீ ஒன்றா பலவா இன்னொரு விளக்கை உயிர்வித்த சுடரின் நெருப்பு அடையும் மரணமென்பதும் மரணமாயிருப்பதில்லை... ஒதுங்க …
-
- 0 replies
- 926 views
-
-
கெரிலா போர் உதிகளைக் காடுகளைக் கைவிட்டு வெளிகளிலே முடிசூடி எழுந்த கதை எங்கள் கதை எங்களது காடெல்லாம் எதிரி ஆழ ஊடுருவ, பெரு வெளியின் பொறிக்குள்ளே, வீரமுடன் படை நடத்தி வீழ்ந்த கதை எங்கள் கதை.
-
- 2 replies
- 822 views
-
-
இரோம் சர்மிலா பிறந்தநாள் இன்று. அவர் குறித்து எழுதிய கவிதை ஒன்று கூப்ரூ மலையின் மகள் மரட்சியுடன் திரியும் மான்கள் நிறைந்திருக்க செம் மல்லிகை பூத்திருக்கும் கூப்ரூ மலையின் மகளே நெடிய விரத்தினை முடித்து உணவருந்து! துப்பாக்கிகளின் விற்பனைக்கான பூமியில் இனியும் பசியோடிராதே! உருகிய உன்னுடலருகே நின்றவுன் சனங்கள் ஒவ்வொரு உணவு வேளையிலும் கோப்பைகளைத் தூக்கும்போதடைந்த குற்ற மனம் இனியேனும் தணியட்டும் வற்புறுத்தப்பட்ட உணவுத் தண்டணையும் மூக்கில் சொருகப்பட்ட உணவுக் குழாய்ச் சிறையும் இத்தோடு முடிந்துபோக நெடுநாளாய் மறந்த உணவைக் கையிலெடு நிர்வாணங்களினால் போரிட்ட …
-
- 2 replies
- 967 views
-
-
அமரர் அசோகமித்திரன் அவர்களுக்கு என் அஞ்சலிகளும் பிரிய பிரியாவிடையும் * 1976 அல்லது 1977ம் வருடத்தில் யாழ் பல்கலைக்கழக முதல்வர் கலாநிதி கைலாசபதியின் அழைப்பின்பேரில் எழுத்தாளரும் அப்போதைய கணயாழி ஆசிரியருமான அசோக மித்திரன் இலங்கைக்கு வருகை தந்தார். யாழ் பல்கலைக்கழக மாணவர் தலைவன் என்கிற முறையில் நானும் அமரர் அசோகமித்திரன் அவர்களது வரவேற்பிலும் நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றினேன். அவர் தமிழ் நாடு திரும்புகையில் எனதும் சேரனதும் கவிதைகள் உட்பட ஈழத்து எழுத்துகள் சிலவற்றை எடுத்துச் சென்றார். * அமரர் அசோகமிதிரன் கணையாழி இதழில் ”பாலி ஆறு நகர்கிறது” என்ற எனது கவிதையை வெளியிட்டதன்மூலம் தமிழகத்துக்கு என்னை அறிமுகம் செய்தார். சேரன் கவிதைகளையும் அவர்தான் முதலில் வெளியிட்டிருக்கக் கூ…
-
- 1 reply
- 1.1k views
-
-
பூமி கேட்டினால் மேவிப் பெருகிய பாலியாற்றைப்போல பேராராய்ப் பெருக்கெடுத்த நம் குருதி உதுமானியப் பேரரசின் சிறைகளுக்குள் சிந்தப்பட்ட ஆர்மீனியரின் குருதி வற்றி வறண்ட நெடிய சமுத்திரம்போல் புழுதியாய் கிளம்பி நமக்கெடுத்த தாகம் பாலைவனங்களில் கருகிய தார்பூரரின் தாகம் தணல் மூண்ட பெருங்காடுபோல் தீயாய் நாம்மை துவட்டிய பசி பட்டினியோடு மூச்சடங்கிய கம்போடிய வியட்நாயிமரின் பசி தலை அறுக்கப்பட்ட பறவைபோல் அனல் படரத் துடித்த நம் வயிறு பசியால் மடிந்த உக்கிரேனியரின் ஒட்டிச்சுருங்கிய வயிறு விசமேற்றி இறந்த மீன்களின் மூடா விழிகள்போல் நஞ்சுறைந்து வாட…
-
- 1 reply
- 1.1k views
-
-
வர்ணப் பட்டதாரி சிலந்திகள் கூடு கட்டி கரப்பொத்தான்கள் குடியிருக்கின்றன பட்டத் தொப்பியில் தூசி பிடித்துக் கிடக்கிறது பட்டச்சான்றிதழ் பிரதியெடுத்து களைத்துப்போய்க்கிடக்கிறது பெறுபேற்றுப் பத்திரங்கள் வாசிக்கப்படாதிருக்கும் சுயவிபரத்துடன் இனி சேர்த்துக்கொள்ளலாம் சுவருக்கு வர்ணம் பூசும் அனுபவத்தையும் நாட்கூலி செய்து பல்கலைக்கழகம் அனுப்பிய பிள்ளை நாட்கூலியுடன் வீடு திரும்புவதை பார்திருக்கும் வயதான தந்தைக்கு அதிகரித்தது நெஞ்சுவலி தோய்த்து அயன் செய்து மடிப்புக்குலையாமலருக்கும் மேற்சட்டையை …
-
- 0 replies
- 751 views
-
-
இந்த வார ஆனந்த விகடன் (18.1.17) இதழில் தனிப்பக்கத்தில் வெளியாகியுள்ள எனது இரண்டு கவிதைகளை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு இரண்டு ஷிப்ட் வேலைக்குப் பின் நள்ளிரவில் வீடு சேர்பவன் சூரியனை குண்டு பல்புக்குள் உதிக்கவிடுகிறான். தன்னை மலடாக்கிய உணவை இல்லாளுடன் கதை பேசியபடி உண்கிறான். ஆடு மாடுகளின் மேவு ஆத்தா அப்பனின் அன்றைய பிரச்சனைகளை அலைக்கற்றைவழி விசாரித்து அறிகிறான். டிஜிட்டல் இந்தியாவின் வல்லசுரக் கனவோடு போட்டியிட முடியாமல் பின்தங்கும் கனவோடு உறங்கப் போகிறான் சூரியனை அணைத்துவிட்டு…
-
- 6 replies
- 2.6k views
-
-
வற்றாப்பளை கண்ணகி வழக்குரை காதை வண்டில் பூட்டி வந்து வயல் வெளியிலிருந்து கோவில் முற்றத்தில் பானை வைத்து பாற்பொங்கலிட்டு விடியும் பொழுதுவரை கடல் நீரில் எரியுமுன் விளக்கின் ஒளியில் முகம் பரப்பியிருக்க ஏழு கன்னியரிலொருத்திபோலான என் தோழி இம்முறையும் திரும்பவில்லை குருதியூறி ஓலங்களால் நிரம்பிய இதேபோலொரு வைகாசியில் அவள் காணாமற் போனதும் இவ்வெளியிற்தான் சுடுமணல்போல் இருதயம் தகித்துக் கிடக்க இருண்ட தாழைமரங்களுக்குள் கேட்கும் ஒற்றைக்குரல்…
-
- 0 replies
- 763 views
-
-
வீச மனமின்றி வைத்திருந்த உருப்படாத பழைய கவிதை ஒன்றை எடுத்து மீழப் புனைந்துள்ளேன். எப்படி இருக்கு? * கிறிஸ்மஸ் விடுமுறை நாள் வ.ஐ.ச.ஜெயபாலன் * விடுமுறைத் தூக்கத்தைமதியப் பசி கலைக்கசோம்பேறி நான் எழுந்தேன்.வீடு சா அமைதியில். * மூலையில் மினுக் மினுக்கென தனித்த கிறிஸ்மஸ் மரம் ஒளிரும். இன்று இரட்டிப்புக் கூலியென வேலைக்கு ஓடிவிட்டாள் மனைவி. குளிர்ப்பெட்டி நிறையப் பழசிருக்கு சூடாக்கித் தின்னலாம். வெளியே வெண்பனிப் பெயலின் இரைச்சல் அமுக்கி ஓங்குதே என் பசிமறந்த பிள்ளைகளின் கும்மாளம். * சன்னலுக்கு வந்த…
-
- 3 replies
- 793 views
-
-
ஆனந்த விகடன் (15.2.17) இதழில் வெளியான எனது "நகரத்தின் புதிய தந்தை" கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! நகரத்தின் புதிய தந்தை எல்லாவற்றையும் மாற்றப்போவதாக வாக்களித்து நாற்காலியைக் கைப்பற்றிய நகரத்தின் புதிய தந்தைக்கு அவர் பராமரிக்கவேண்டிய பிள்ளைகளின் கணக்கு கொடுக்கப்பட்டது. சாதுவானவர்கள், அடங்காதவர்கள், ஊதாரிகள், அயோக்கியர்களென அனைவரின் புள்ளிவிவரம் அவரிடமிருந்தது. அடங்காதவர்களை அவர் கலாச்சாரக் காவலர்களாக்கினார். ஊதாரிகளுக்கு வெகுமதிகள் கொடுத்தார். சாதுவானவர்களுக்கு வேலைகளைப் பகிர்ந்தளித்தார். …
-
- 6 replies
- 2.4k views
-
-
தேநீர் கவிதை: எவராவது வந்து... எவராவது வந்து சூட்டிவிட்டுப் போங்கள் மகுடத்தை.. என் தலை காலியாய்த்தான் இருக்கிறது வெளியேயும் உள்ளேயும். எவராவது வந்து மாலையிட்டுப் போங்கள் நாறிக்கிடக்கிறது என் புறமும் அகமும். எவராவது புகழ்ச்சிகளைப் பிசைந்துவைத்த சொற்களைப் போட்டுவிட்டுப் போங்கள் என் பிச்சைப்பாத்திரத்தில். சோறில்லை என்றாலும் பரவாயில்லை. பேரில்லாமல் எப்படித் திரிவது? எவராவது வந்து அப்பாவிகளை …
-
- 1 reply
- 851 views
-
-
தேநீர் கவிதை: பகையொன்றுமில்லை பறவைகளே! எனக்கும் என் குடியிருப்புப் பகுதியின் பறவைகளுக்கும் பல ஆண்டுகளாகவே பகை நிலவுகிறது! மின் தடையால் ஊர் இருண்ட ஒரு முன் இரவு நேரத்தில் நெருப்பு விளக்கேந்தி - நான் தெருப் பக்கம் வந்தபோது குபீரெனப் பறந்த - என் வாசல் மரத்துப் பறவைகள், அந்த சம்பவத்திற்குப் பிறகு ஏனைய பறவைகளையும் எனக்கெதிராகத் தூண்டி வருகின்றன! அலைபேசியைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வெளியே - நான் ஓடிவரும் நேரங்…
-
- 0 replies
- 734 views
-
-
‘இருக்கிறானா ? இல்லையா ?’ – பார்வதியம்மாள் மறைவுக்கு கவிஞர் வாலி எழுதிய கண்ணீர் கவிதை ஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப் பெருமாட்டியைப் பாடுதலின்றி வேறு வேறுண்டோ எனது வாய்க்கு? ★★★★★ மாமனிதனின் மாதாவே ! – நீ மணமுடித்தது வேலுப்பிள்ளை ; மடி சுமந்தது நாலு பிள்ளை ! நாலில் ஒன்று – உன் சூலில் நின்று – அன்றே தமிழ் ஈழம் தமிழ் ஈழம் என்றது ; உன் – பன்னீர்க் குடம் உடைத்துவந்த பிள்ளை – ஈழத்தமிழரின் கண்ணீர்க் குடம் உடைத்துக் காட்டுவேன் என்று… சூளுரைத்து – சின்னஞ்சிறு …
-
- 0 replies
- 860 views
-
-
கேப்பாபுலவு கவிதைகள் – தீபச்செல்வன் கேப்பாபுலவு – 1 முன்பொருகாலத்தில் எனது தேசம் கடலாலானது இப்போது இராணுவத்தினாலானது எனது தொன்மங்களின்மீதெழுப்பட்ட இராணுவமுகாங்கள் எனது வீட்டின் தளபாடங்களிலானது எப்போழுதும் வீழா நந்திக்கடலருகே பூவரசம் தடிகளில் செய்த வில்லினால் இராணுவமுகாமை நோக்கி அம்பெய்கிறான் கேப்பாபுலவுச் சிறுவன். பனியும் வெயிலும் தின்றது குழந்தையரின் புன்னகையை எனினும், வாடிய மலரைப்போல மரங்களின் கீழே தூங்கும் தொட்டில்களில் அவர்களுமை சுற்றி வளைத்தே உறங்குகின்றனர் துப்பாக்கிகளுக்கு அஞ்சாது வெஞ்சினத்துடன் கொதித்தெழுகின்ற…
-
- 0 replies
- 860 views
-
-
தடயமின்றி அழித்திடுவோம் அடிமைகளின் கூட்டம் கண்டேன் அகமகிழ்ந்து பேச கேட்டேன் ஆயாவை தலைவியாக்கிவிட்டு ஆனந்த கூத்தாட கண்டேன் வேட்டிக்கட்டிய ஆண்கள் எல்லாம் வெட்கத்தை தொலைக்க கண்டேன் மூத்தோரென்று சொல்லப்பட்டோர் முட்டாள்களாய் நிற்க கண்டேன் களவு செய்யும் வாய்ப்பிற்காக கைகூப்பி நிற்க கண்டேன் பெண்ணின் காலில் விழுவதனை பெருமையாக நினைக்க கண்டேன் பணமொன்றே நோக்கமென்று பல்லிளித்து சிரிக்க கண்டேன் பச்சோந்தியும் தோற்றுப்போகும் பகல்வேஷ நடிப்பு கண்டேன் காசு பணம் சுருட்டிடவே காலில் விழும் கூட்டத்திற்கு ஈனம் மானம் எதுவுமில்லை என்பதையும் அறிந்து கொண்டேன் எதிர்ப்பு சொல்ல ஒருவருக்கும் ஏன் தோன்றவில்லை என்றால் கைமாறிய பண கட்டிற்காக கட்ட…
-
- 5 replies
- 789 views
-
-
அம்மா சமாதி பன்னீர் வடிக்கும் கண்ணீரில் அம்மா சமாதியே அரை அடி உயரும். சசி துடைக்கும் கைக்குட்டையில் காவிரி டெல்டா ஒருபோகம் விளையும். அம்மாவை நினைத்தாலே அழத்தான் முடியும். அவர்களுக்கோ, அழுகை சிரிப்பின் முக்காடு சிரிப்பு அழுகையின் வேக்காடு. அழுகைப் போட்டியில் யாருக்கு முதல் பரிசு?. தடுமாறுது தமிழகம் அழுகாச்சி காவியத்தில் அமுக்கி எடுக்குது ஊடகம். சிரித்ததனால் நான் மனிதன் என்பது பன்னீரு சிரித்ததனாலேயே நீ மனிதனில்லை என்பது வெந்நீரு. நீ பெரிய குளமென்றால் நான் மன்னார் குடி! அம்மாவுக்கே நான்தான் ஆன்மா அடைக்கலம் தருமோ அம்மா ஆன்மா? மெரினா தியானத்தை கலைக்கும் சின்னம்மா! பேயைப் பற்…
-
- 5 replies
- 2.3k views
-
-
ஈகத்தின் சுடரே! மக்களுக்காக எரிதனலேந்தி மண்ணிலே சாய்ந்த மைந்தனே முருகா துன்பமே சூழ்ந்த தமிழ் மக்களின் வாழ்வினை மாற்ற தீயினைச் சூடிப் போரினைத் தொடுத்து பொன்னெழுத்துகள் சூடி மண்ணிலே சாய்ந்தாய்! தாய் மண்ணிலே இன்றும் துன்பங்கள் சூழத் துயரங்கள் ஆளத் துடிக்கிறார் மக்கள் வடிக்கிறார் உதிரம் உதிரத்தால் உறைந்த உயிரெனும் தாய்நிலம் அடிமையாய் இன்னும் அழிகின்ற நிலையாய் தொடர்வதும் ஏனோ! ஈகங்களாலே ஈன்ற எம் தேசம் வேடங்களாலே வேற்றவராள மாற்றான் போன்று மகுடிக்கு ஆடும் பாம்புகளான தலைமைகளாலே விடையென்று வருமென்று வானகம் இருந்தே முருகதாசனோ தவிக்கின்றான்! ஈகத்தின் சுடரே தலைகுனிகிறோம் தம்பி அங்கிங்கொன்றாய் எழுகின்ற தமிழனம் …
-
- 1 reply
- 710 views
-
-
கிளிசரின் வெட்கப்படுகிறது ! அழகின் உயிர்ப்பு கண் என்றால் உணர்ச்சியின் துடிப்பு கண்ணீர்… கண்ணீர் எனப்படுவது இரண்டு வகைப்படும். செந்நீரை பறிகொடுத்தும் கண்ணீரை பரிதவித்தும் சோகத்தில் குடியிருக்கும் மாந்தருக்கு காலந்தோறும் உடனோடும் ஜீவநதி கண்ணீர்… வேடிக்கை பார்ப்போர் அழுதாலொழிய வேஷம் கட்டியோருக்கு வயிறு நிரம்பாது! அந்தக் கூத்தாடிகள் பிதுக்கும் கண்ணீர் ஒரு நடிப்புக் கலை! சினிமாவில் கண்ணீர் அருவியை திறக்கும் மந்திரப் பொருள் கிளிசரின். பிகினி காலத்து மாடல் பொம்மைகளுக்கு கிளிசரின்கள் டன் கணக்கில் தேவைப்படும். கிளிசிரினுக்கு செலவு வைக்காமல் கண்ணை குழாயென திறந்து விட…
-
- 0 replies
- 772 views
-
-
எழுக தமிழ்- பூவரசம் பூ! தீபச்செல்வன் குருதி நிணம் தீரா மண் பிணங்களும் எஞ்சாத தேசம் சிதைமேடுகள் மீதும்குருதி சிதலுறூம் காயம் இராணுவ சப்பாத்துக்களின் கீழ் எல்லாமும் ஆனாலும் எழுந்தது தேசம் அதனாலும் எழுந்தது தேசம் சிறகுடைத்து வீசப்பட்ட ஒரு பறவையின் சிறகசைப்பைப்போல கால்களற்றவரும் நடந்தனர் கைகளற்றவரும் ஏந்தினர் கொடியை விழிகளற்றவரும் ஏற்றினர் சுடரை சொற்களற்றவரும் எழுதினர் பதாகையை இல்லாதவர்களின் இருதயங்களைச் சுமந்து தொண்டைக் குழிகளில் நெடுநாளுறைந்த பெருங்குரல் காட்டாற்றைப்போலப்…
-
- 1 reply
- 896 views
-
-
மல்லுக் கட்டி நிற்கின்றோம் ஜல்லி கட்டை நடத்திவிட கொள்ளிக் கட்டை கொண்டு வந்து தமிழ் குல தொன்மம் அழித்துவிட மல்லுக் கட்டும் உலகமயமாக்கலோடு நாமும் மல்லுக்கட்டி நிற்கின்றோம். புல்லுக் கட்டு போல எங்கள் புராதன தொன்மைகளை புதைத்துவிட்டு பல்லுக்காட்டி நிற்கச் சொல்லி பாடம் சொல்லும் கயவரோடு மல்லுக்கட்டி நிற்கின்றோம் #ஈழத்துப்பித்தன் 19.01.2017
-
- 0 replies
- 817 views
-