கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
இனிய இளகிய காலை ஒன்றில் மனவெளியில் மட்டற்று மயக்கங்கள் நீண்டு தெரியும் நெடுமரங்களோடு நட்பாய் நடக்கையில் நிமிர்வற்ற மரங்களின் உதிர்ப்பில் நிலம் முழுதும் நிறைந்து கிடக்கும் நிழல் தந்த இலைகள் நெஞ்சமதை நெகிழ்க்கின்றன உதிர்ந்த மரக்கிளைகளில் கொஞ்சலும் கொற்றலும் கூச்சலுமாய்க் கூடியிருந்த புலுனிகள் கூட்டம் கூடி ஒன்றாய் புல்லமர்ந்து கொற்றித் தின்றன எதையோ பின் கூடி எழுந்து கோலமிட்டபடி கண்ணிமை மூடித் திறக்குமுன்னே காணாமலும் போயின மீண்டும் அவை வந்து போகலாம் மிடுக்காய் அமர்ந்து மின்னலாய்ப் பறந்து மாயங்கள் செய்யலாம் காலம் மாறிக் கடும்பனி போனபின் குனிந்த மரங்கள் மீண்டும் குளிர் விரட்டி தளிர் கொள்ளலாம் நாம் மட்டும் தொலைந்த எம் இருப்பை எண்ணி தொலைவிலும் தெரியா துள…
-
- 10 replies
- 734 views
-
-
அம்மா தடுத்தாள்! சின்னப் பிள்ளைகள் தீக்குச்சிகளை கையில் எடுக்கக் கூடாதாம்! அம்மா, உனக்கு தெரியாதா?! எனைப் போல ஒரு பிஞ்சுக்கரம்தானே இவைகளையெல்லாம் அடுக்கியது என்று! நகரத்துக் குழந்தை, தீக்குச்சியை தொட்டால் திட்டு விழும்! கிராமத்துக் குழந்தை, தீக்குச்சியை தொட்டால்தான் சோறே விழும்! குழந்தையும் தெய்வமும் ஒன்றாமே! ஒரு தெய்வம் ஓட்டலில் துடைக்கிறது! ஒரு தெய்வம் தீக்குச்சி அடுக்குகிறது! ஒரு தெய்வம் ஸ்பேனரால் அடிவாங்குகிறது! ஒரு தெய்வம் பிச்சை எடுக்க வைக்கப்படுகிறது ஆம்! கீழே தெய்வங்கள் குழந்தைகளாய் வேலை செய்துகொண்டிருக்கின்றன! மேலே குழந்தைகள் தெய்வங்களாய் பார்த்துக்கொண்டிருக்கின்றன!!
-
- 17 replies
- 3.5k views
-
-
ஒன்பதாவது அகவையில் யாழ் இணையம்! சிறப்பு நிகழ்வு! ***யாழ் கள கவிஞர்கள் வழங்கும் கவியரங்கு 02*** தலைப்பு: யாழ் கீதம்! - யாழ் இணையத்திற்கான ஒரு கீதம்! கவியரங்கின் நடுவர்கள் பண்டிதர் தமிழ்தங்கை குறிப்பு1: யாழ் கள கவியரங்கில் எவரும் எத்தனை முறையும் பங்குபற்றமுடியும். ஆனால், மற்றைய யாழ் கள உறவுகளை தாக்காத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கவிதைகளை பாடவும்! குறிப்பு2: கவியரங்கின் நடுவர்களிற்கு கவியரங்கில் இருந்து ஏதாவது பொருத்தமற்ற கவிதைகளை அல்லது கருத்துக்களை அகற்றுவதற்கு அல்லது செல்லுபடியற்றதாக்குவதற்கு முழு உரிமையும் உண்டு! குறிப்பு3: கவியரங்கம் நிறைவு: மார்ச் 30, 2007 மாண்புமிகு யாழ் கள கவிஞர் பெருமக்கள் கவியரங்கை ஆரம்பித்து வழி…
-
- 36 replies
- 6.7k views
-
-
வர்ணத்தின் நிறம் -சேயோன் யாழ்வேந்தன் முதலில் நிறத்தில் வர்ணம் தெரிகிறதாவெனத் தேடுகிறோம் நெற்றியில் தெரியவில்லையெனில் சட்டைக்குள் தெரியலாம் சில பெயர்களிலும் வர்ணம் பூசியிருக்கலாம் வார்த்தையிலும் சில நேரம் வர்ணத்தைத் தெரிந்துகொள்கிறோம் நான்கு மூலைகளில் மஞ்சள் தடவிய திருமண அழைப்பிதழ்களில் முந்தைய தலைமுறையின் வால்களில் வர்ணங்கள் தெரிகின்றன சிவப்பு பச்சை நீலம் அடிப்படை வர்ணங்கள் மூன்றென்கிறது அறிவியல் நான்காவது கறுப்பாக இருக்கலாம்.
-
- 8 replies
- 900 views
-
-
அனுமதி யாழ்கவிகளே இந்தவெள்ளைரோஜாவின் சின்னமொட்டுக்கள் உங்கள்கவிதைப்பூக்களுடன் அனுமதியின்றி பூக்கலானது உலகெங்கும் மனித நேயங்கள் அழிந்து போனதால் பறிபோன உணர்வால் வலிகொண்ட இதயங்களின் கவிதைத் தோட்டத்தை நான் ரசித்திட்டதால் இங்கே அனுமதியின்றி பூவானேன் யுத்தத்தின் கொடுமைகள் தென்றலெங்கும் இரத்ததை வீசியதால் அதை சுவாசித்த இதயங்கள் கல்லாய் மாறியதால் பாசங்கள் எங்கே காணமல் போனதால் வலிகொண்டு இங்கே அனுமதியின்றி பூவானேன் அழிவுகளை ரசித்திடும் மனிதன் என் க ண்களில் அரக்கனாய் தோன்றியதால் வெறுந்திடும் உலகை மறந்திடும் நிமிடங்கள் இந்தகவிதைத் தோட்டத்தில் அனுமதியின்றி பூவானேன்
-
- 8 replies
- 1.4k views
-
-
* காதலும் வாழைபோல் வெட்ட வெட்ட வளரும். **திருமணம் நாணயங்களால் தீர்மானிக்கப்படுவதால் நாணயமான காதல்கூட செல்லாதகாசாகி விடுகிறது. ***நேற்று மலைமேல் கண்களால் பேசினோம் மறுநாள் மாதா கோவிலில் மனங்களால் பேசினோம் பின்பு கடற்கரை மணலில் கைகோர்த்து பேசினோம் இன்று தனித்தனியாய் வாழ்கிறோம் ஊமைகளாய். இதுதான் காதலா?
-
- 12 replies
- 1.7k views
-
-
வள்ளி திருமணம். வள்ளி திருமணம் (பாலபாடம்) எங்கள் புராணக் கதைகள் பலவற்றுள் எங்கள் முன்னோர்களின் கிராமியக் கதைகள் பொதிந்துள்ளன என்று கருதுகிறேன். முருகன் வள்ளி காதல் எனக்கு பிடித்த கதை. பின்னர் வட இந்திதிய ஸ்கந்தரையும் முருகனையும் இணைத்தபோது தெய்வஞானி வருகிறதாக கருத்துள்ளது. ஸ்கந்தர் கிரேக்க மன்னன் அலக்ஸ்சாந்தர்தான் என்றும் சொல்கிறார்கள். வசதியின்மையால் இந்த இசை நாடகத்தை ஒலிவட்டடாக்கும் /மேடை ஏற்றும் வாசுகியின் முயற்ச்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை. நானனும் அக்கறைகாட்டவில்லை. ஏனேனில் அது எனது பணியல்ல. எனினும் தமிழ் நாட்டு மேடைகளில் பாடப் பட்டபோது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. வள்ளி திருமணம் ஒலிவடிவம். http://tamil.sify.com/audio/fullstory.php?id=14213814 வள்ள…
-
- 9 replies
- 5k views
-
-
வாடிய முகத்தோடு பூங்காவின் வாங்கினில் அவள்... அன்பின் அடையாளமாக இல்லை.. ஆட்களுக்கு அடையாளம் காட்ட தேடிப் பிடித்தவனின் வலன்ரைன் பரிசுக்காக.. உள்ளத்தில் ஏக்கங்களோடு..! நேரம் ஆகுது காத்திருப்பாளே...??! பதட்டத்தோடு தெருவோர உண்டியலில் மணிக்கு ஒரு பவுண் தாரைவார்த்து பெற்ற அந்த கார் தரிப்புச் சீட்டைக் கூட சரியாக ஒட்டாமல்.. ஓட்டமும் நடையுமாய் வந்தான் அவளிடம் அவன்..! வந்தவன் நெருங்கி பொக்கேயை நீட்டினன்..! ஆத்திரத்தில் ஆழ்ந்திருந்த வனிதையின் கரங்களில் வன்முறை..! பொக்கே வானில் பறந்து ஈர்ப்பில் கவர்ந்து பூமியில் வீழ்ந்தது..! அவன் காதலும் நொருங்கிச் சிதறியதாய் நல்ல பாடம் படித்திட்டான்.. உள்ளூர அவள்... தன் செயலில் சாதன…
-
- 20 replies
- 1.5k views
-
-
காதல் பரம்பரை சொத்துமல்ல பரம்பரை கடத்தியுமல்ல ^ ---- நான் காதலாக இருந்து பயனில்லை நாம் காதலாய் இருக்க வேண்டும் ^ ----- காதல் - இரு - வாசகங்கள் கவிப்புயல் இனியவன்
-
- 3 replies
- 2.5k views
-
-
நெருப்பு நதிகள் நிலம் தடவி நடக்கின்றன. பொறுத்திருப்பீர். பொறுப்பற்ற நா நுனியில் ஏளனத்தைப் பூட்டாதீர். இருப்பிற்கான எல்லாம் இனிவரும் காலத்தில் தெளிவுறும். உரம் அள்ளிச் செறிவோம். உற்சாக வார்த்தை தன்னும் உடன் அள்ளித் தருவோம் கரத்திற்கும், நாவிற்கும் பணியுள்ள காலமிது. இயங்காப் புலனிருப்பின்... எம் இன்னுயிர்க்கு மதிப்பில்லை. அது.... இருந்தென்ன ? செத்தென்ன? என்றைக்கோ ஒரு நாள்... சாவெமைத் தின்னும். எதற்குமே பயனற்றா... எம்கட்டை வேகும்?
-
- 7 replies
- 1.4k views
-
-
a ஓ ! பிரபாகரனே ! கதிர்க் கையனே ! நீ எங்கே இருக்கிறாய் ? ````````````````````````````````` ஓ ! பிரபாகரனே ! கதிர்க் கையனே! தமிழீழத்தின் அடிமையிருள் ... போக்க வந்த வீரத்திருச்சுடரே! தமிழினத்தின் தன்மான ஒளிவிளக்கே! இந்திய நாய்களின் வேட்டை மானே! நீஎங்கே இருக்கிறாய்? உன்னைச் சுட்டுக் கொல்லப் போவதாய் உன் ஆர்த்த அரியணை மேனிக்குக் குறி வைத்திருப்பதாய்ச் சொல்லிச் சொல்லி எள்ளி நகையாடுகிறார்களே, இராசீவின் வஞ்சக வேடர்கள்! தஞ்சம் கோராத தமிழனே! அஞ்சாமையின் தொகுப்பே! நீ,எங்கே இருக்கிறாய்? கனிவுக்குக் கைகொடுத்து, கல்போன்ற நின்தோளை நீவீ,-உன் கழுத்துக்குக் கத்திவைக்கும் எத்தர்கள், உன்னைச் சுட்டுப் பொசுக்கக் குறிவைத்துத் திரிகிரார்களாமே! மறம் மாண்ட தோற்றமே! அறம் மா…
-
- 1 reply
- 1.1k views
-
-
பல்லாயிரம் ஆண்டுகளாம் புகழ்பூத்த முற்குடியாம் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தின் நற்குடியாம் தொல்தோன்றி மண்கண்டு மன்கண்டும் பயனில்லை சொல்கொண்டு இணைவர்தம் சிரமெடுப்பர் காலமிதில் ஒருவிரல் வெளிச்சுட்டி மூவிரல் தனைச்சுட்டி தரையினிலே உடல்பரப்பி உமிழ்கிறார் சிரம்நிமிர்த்தி வருவதுவும் பெயரல்ல தருவதுவும் புகழல்ல திரும்புவது உமிழதுவே மூவிரலும் குறிப்பதுவே களமதனில் உரையாடல் கனிகின்றார் தினம்தானும் தளம்மாறித் தடம்மாறிப் புனைவாரே வசையாடல் களவுதட்டில் ஒருபேச்சு கருத்தியலில் மறுபோக்கு உளமுரையார் சொல்லதுவும் அம்பலம்தான் ஏறிடுமோ எண்ணத்தில் வந்தவுடன் கிண்ணத்தில் தந்துவிட்டார் உண்மைநிலை உணர்வின்றி வசைபாடிச் சென்றுவிட்டார் திண்ணையதன்…
-
- 38 replies
- 3.1k views
-
-
ஹைகூக்கள் பொருமி தவித்தன ஏதிலியாகா ஏதிலிகள் சாவகாசமாக செருமிக்கொண்டிருக்கிறது சர்வதேசம் எட்டி எட்டி பறிக்கின்றாள் கனியை எட்டவில்லை ஏங்கியது கன்னிக்காய் மனது. கொடுத்துக்கொண்டிருக்கிறேன் தீரவில்லை திகட்டவில்லை முத்தங்கள். வைக்கோல் கன்று காட்டி ஏமாற்றிய பால்க்காரனுக்கு நிஜக் குழந்தை காட்டப்பட்டது சிக்னல் பிச்சைக்காரி. பிடியின் வழி வளைந்து வளர்கின்றன பானைகளும் குழந்தைகளும். பிடியின் வழி வளைந்து வளர்கின்றன பானைகளும் குழந்தைகளும். கிளறுகின்றது கோழி குப்பையோடு குடலையும் - பசி மனிதாபிமானம் அற்றவர்களெனப்பட்டவர்களுக்கு(???!!!) மனிதாபிமானம் உள்ளவர்களெனப்பட்டவர்கள்(???!!!) வழங்குவது மரணம்!!!. இடைவிடாத அடை மழை சுக…
-
- 2 replies
- 840 views
-
-
ஈழமும் சுகாதாரமும் உடல் நலம் சுகாதாரமாக இருந்தால் மன பலம் வலுவாக இருக்கும் நோயானது ஒரு சில நொடியில் பல வடிவத்தில் எம்மை ஆண்டு எம் வாழ்க்கைப் பயணத்தை குறிகிய கட்டத்தில் நிறுத்திவிடும் சிங்களவன் சில தசாப்த காலங்களாக பாரம்பரிய தமிழினத்தை பரிதவிக்க வைக்கின்றான் இரசாயனக் குண்டுகளால் முத்தான ஈழத்தின் இயற்கைக் காட்சிகளை நாசமாக்கி அசுத்தமான வாயுக்களை எம்மினம் சுவாசித்து பலவகை சுவாச நோய்களால் பரிதவிக்கின்றனர் இயற்கையான காற்றோட்டத்தில் சுதந்திரமாக சுய தொழிலில் வாழ்ந்த தமிழினம் செயற்கையான காற்றோட்டத்தில் மூச்சுத்திணறி செய்வதறியாது தவிக்கின்றது நோய்களால் திலீபன் நடமாடும் மருத்துவமனை- தன் சேவையைச் சிறப்பாகச் செய்தாலும் போதிய தமிழ் மருத்து…
-
- 11 replies
- 1.8k views
-
-
-
This is the middle way, this is the eightfold path This is the way to the end of suffering. Right view Right view is the forerunner of the entire path. Right view provides the right practice. Right view leads to a virtuous life. Right view comes at the end of the path. Right view requires you to know that the dying always look up to the sky and therefore get ready to shell hospitals. Right intention Birth is suffering, aging is suffering, Sickness is suffering, death is suffering, Sorrow, lamentation, pain, grief and despair are suffering, Association with the unpleasant is suffering, Separation from the pleasant is sufferin…
-
- 0 replies
- 669 views
-
-
நாளைய உதயம் அதிகாலை வேளை அதன் கண்கள் இந்தக் குளிர்காற்றில் அழகாய் தெரிந்தன ஆழகிய வண்ணமாய் சிவப்பு,கறுப்பு,மஞ்சள் இயல்பாய் வந்து பதுங்கு குழியில் அரை குறை தூக்கத்தில் விழித்து இருக்கும் என் தாய்த்து வைக்கப்பட்ட துப்பாக்கி முனையில் அமர்ந்து சிறகசைத்து……………… அதன் வண்ணம் கொள்ளை அழகு என்னை என் குழந்தை பருவத்தையும் என் குடும்பத்தையும் கண்முன்னே கொண்டுவந்தது இன்னும் சூரியன் சுட்டெரிக்கவில்லை காய்ந்து போன புளுதி பூமியில் இன்னும் பனிச்சிவலைகள்;……………. நேற்றைய சண்டையில் என் தோழன் ஒருவன் வயிற்று காயத்துடன் கள மருத்துவமனையில் இன்னும் அந்த இரத்தம் புளுதியை கல்லாக்கி இருந்தது எங்களின் மனதை போல……………… தூரத்தே ஒரு முழக்கம்-நான் தளர்த்த…
-
- 0 replies
- 562 views
-
-
-
-
நமக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் வேண்டாம் நமக்குள் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்வோம் அப்படியென்றாலாவது சமாதான மீறல் புரிகிறாயா என்று பாப்பம் நான் குடிக்கவேயில்ல இருந்தபோதும் குடிகாரனாய் நடிக்கிறேன் உன்னை பேசவைக்க வேண்டுமே என்ன தவம் செய்ததோ என் வார்த்தைகள் உனக்காய் கவி எழுதுகையில் மெய் எழுதுக்களும் உயிர் பெற்று விடுகின்றது மழை விட்டது உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் இருந்தும் என் குடைக்குள் இன்னும் நீ கோவம் வரும் போது உன்னை நினைக்க சொன்னாய் வராத போதும் உன்னை நினைத்தேன் இப்ப என்னை நினைப்பாயோ -யாழ்_அகத்தியன்
-
- 3 replies
- 1.2k views
-
-
சிறு துளி பெருவெள்ளம் உன் கூந்தல் துவட்டிய பின்னும் தூறும் துளிகள் எனக்கு * உன்னைக் காதலித்ததால் அல்ல நீ என்னை காதலிக்காததால்தான் ஆனேன் கவிஞனாய்.... * விரும்பித்தான் காதலித்தேன் உன்னை விரும்பாமல் காதலிதுக்கொண்டே இருக்கிறது கவிதைகள் மட்டும் என்னை * நீ சூடும் பூவுக்கு எப்படி கற்றுக்கொடுத்தாய் நீ சிரிக்காத போதும் சிரிக்க * உன் கண்களில் படித்துவிட்டுத்தான் வெளியிடுகிறேன் என் ஒவ்வொரு கவிதைகளையும் பல கண்களுக்காய் * உன்னைக் காதலித்ததால் தலைக்கனம் எனக்கு நீ காதலிக்காததால் தலைக்கனம் என் கவிதைகளுக்கு -யாழ்_அகத்தியன்
-
- 4 replies
- 1.3k views
-
-
வேதியியலும் காதலும் --------------------------ஐதரசனின் இரண்டு பங்கும் .... ஒட்சிசனின் ஒருபங்கும் .... சேர்ந்த கலவையே நீர் -H2O .....!!! என்னுடைய நினைவுகளையும் ..... உன்னுடைய நினைவுகளையும் .... வேதனையுடன் சுமந்து கொண்டு .... இருக்கும் நம் காதல் ... வேதியல் சூத்திரம் தான் ....!!! வேதியல் வகுப்பறையில் .... வேதியல் படித்தானோ .... தெரியவில்லை .... வேளை தவறாமல் ... உன் வேடிக்கைகளை ரசித்திருக்கிறேன் .....!!! வேதியலில் ... ரேடியத்தை கண்டு பிடித்த .... மேரி கியூரி குடும்பம் .... வேதனையான மரணத்தை .... அடைந்தார்கள் .... புற்றுநோய் ......!!! காதலும் .... ஒரு புற்றுநோய் .... உன் நினைவுகளால் நானும் ... என் நினைவுகளால் நீயும் .... கொஞ்சம் கொஞ்சமாக .... இறந்து கொண்டிருக்கிறோம் ....!!!
-
- 1 reply
- 647 views
-
-
பின் மண்டையில் சுடுபட்டு... நான் வீழ்ந்தபோது, என் மூளைநரம்புகளின் அதிர்வுகளை... நீங்கள் புரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான்!!! வெறும் செய்தியாகத்தான்.... அதுவும் உங்களுக்கு இருந்திருக்கலாம்!!! சாகப் போகின்றோம்.... எனும்போது, "கடைசி ஆசை" என்றொன்று..... எனக்கும் இருந்தது! இயலாமையுடன் எதிர்ப்பட்ட எண்ணங்களில்... யாரேனும் எம்மை காப்பாற்ற வரமாட்டார்களா? எனக் கூட, எண்ணத் தோன்றவில்லை! அனாதையாகி நிற்கும் தாய்மண்ணில்.... நாங்களும் நாதியற்றுத்தான் நின்றோம்!!! பிரடி மயிரைத் தொட்டு... கனலாய் வந்த தோட்டா.... விரைவாகத் துளைபோட்டு... மெதுவாகச் சுழன்று, என் மூளை திருவி... வலக்கண் வழியே, வெளியே வர.... பீறிட்ட இரத்தம்... தொடர்ந்தோடியும், எனக்கு வலிக்கவேயில்…
-
- 42 replies
- 4.7k views
-
-
இது......... இந்தப் பாலகனது இரண்டாவது பா . எனது சகபடைப்பாளிக்குப் பதிவாகப் போட்டாலும் , பாணர்கள் வரிசையில் இடம்பிடிக்க ஓர் உந்தல் . பாலகனைத் தூக்குவீர்களா உறவுகளே??????????? நிறுத்திடுவோம் இன்னுமோர் நினைவை எம்மனதில் ஊடறுத்து ஆழமாகவே பார் எங்கும் பாங்காகக் களிப்புற்றார் பாலகனின் வருகையை வந்தான் பாலகன் எல்லோருக்கும் மகிழ்சியாக!!!!! எமக்கு மட்டும் ஆழிப் பேரலையாக ஏனேனில் நாம் சபிக்கப்பட்ட ஈனப்பிறவிகளாம்!!!!!!!!!!!
-
- 7 replies
- 1.2k views
-
-