கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
வாடிய முகத்தோடு பூங்காவின் வாங்கினில் அவள்... அன்பின் அடையாளமாக இல்லை.. ஆட்களுக்கு அடையாளம் காட்ட தேடிப் பிடித்தவனின் வலன்ரைன் பரிசுக்காக.. உள்ளத்தில் ஏக்கங்களோடு..! நேரம் ஆகுது காத்திருப்பாளே...??! பதட்டத்தோடு தெருவோர உண்டியலில் மணிக்கு ஒரு பவுண் தாரைவார்த்து பெற்ற அந்த கார் தரிப்புச் சீட்டைக் கூட சரியாக ஒட்டாமல்.. ஓட்டமும் நடையுமாய் வந்தான் அவளிடம் அவன்..! வந்தவன் நெருங்கி பொக்கேயை நீட்டினன்..! ஆத்திரத்தில் ஆழ்ந்திருந்த வனிதையின் கரங்களில் வன்முறை..! பொக்கே வானில் பறந்து ஈர்ப்பில் கவர்ந்து பூமியில் வீழ்ந்தது..! அவன் காதலும் நொருங்கிச் சிதறியதாய் நல்ல பாடம் படித்திட்டான்.. உள்ளூர அவள்... தன் செயலில் சாதன…
-
- 20 replies
- 1.5k views
-
-
கனவினைக் கொடுத்து தூக்கத்தைக் கெடுத்து பாதியில் செல்வாள் பாவை! பாதையைத் தொலைத்து பேதையை நினைத்து வீதியில் விழுவான் கோழை! சேலைகள் நினைத்தால்... சோலைகள் காய்ந்து பாலைகள் தோன்றும் வேலைகள் செய்திடும்! காலைகள் இருண்டு காரிருள் படிந்து வாழ்க்கையும் உருண்டிடும் கவனம்!!! ***எழுத்துப்பிழை திருத்தப்பட்டுள்ளது***
-
- 20 replies
- 1.7k views
-
-
ரொம்பக் குளிருதடி... கொஞ்சம் பாரேன்டி! தேகம் நடுங்குதடி... பக்கம் வாயேன்டி! வெள்ளை நிறத் தேவதையே... வண்ண முலாம் பூசுறியே! கிட்ட வந்து முட்டுறியே... தட்டி விட்டுப் போகிறியே! தொட்டுப் பார்க்க முன்னால... கட்டிப் போடுறாய் கண்ணால! ஓரங்கட்டுறாய் தன்னால... ஒண்ணும் முடியல என்னால! கண்ணைச் சிமிட்டாதே... கடித்துக் குதறுதடி! என்னை மிரட்டாதே... எண்ணம் சேர்ந்து மிரளுதடி! என்னைத் தூண்டி இழுக்கிறாய்... எல்லை தாண்ட அழைக்கிறாய்! இன்பத் தொல்லை தருகிறாய்... தீண்டும் முன்பே மறைகிறாய்! வண்ணம் தந்த வானவில்லே... எங்கேயுன்னைக் காணவில்லை! கனவில் வந்து போறவளே! -உன் நினைவில் நொந்து போகிறேன்டி!
-
- 20 replies
- 1.7k views
-
-
இயலாமையின் மடிப்புகளில்.. ஒரு புழுவினும் கீழாய் என்னை நிறுத்தி நகர்கின்றது காலம் எனது நிலங்களை பேய்கள் அபகரிக்கும் செய்திகளிலெல்லாம் வந்தமருகின்றது என் இயலாமையின் தருணங்கள் முகம் எங்கும் அப்பி கிடக்கிறது போராட சென்ற தோழர்களின் சாவு. அங்கு அவர்கள் சாகும் பொழுதுகளிலும் குளிருகின்ற இரவில் மனைவியுடன் கலவி கொண்டு களித்து இருந்தேன் நானிங்கு வீட்டின் முன் இலைகளற்றும் மண்ணின் பிடிப்புடன் நிமிர்ந்து நிற்கின்றது ஒரு மரம் மண்ணற்ற என்னை பார்பதும் இல்லை தன் கிளையில் வந்தமரும் குருவியிடம் சொல்லி வைத்திருந்தது என்னிடம் பேச வேண்டாமென துணிவற்றவனுடன் கதையெதுக்கு என்று கேட்டது அது வீட்டிற்குள் சென்று உடலினை…
-
- 20 replies
- 2.8k views
-
-
கார்த்திகை ஒளிர்கிறது மலரும் மலர்கிறது கண்ணீர் அரும்பிட கண்களில் படர்ந்தவர் நினைவுகள் மனதில் பெருகிட… மரணம் மண்டியிட மண்ணில் வீழ்ந்தோம் அன்னை மடிமீது அந்நிய ஆதிக்கம்… உயிர் மூச்சு நெருப்பாக்கி உற்ற கடமை செய்தோம்..! உறவுகள் எமக்கு உலகெங்கும்.. உணர்வுகள் எமக்குள்ளும் உயிர் வாழ… உங்கள் உரிமைக்காய் உயிர் கொடுத்தோம்…! உறங்கும் நாள் குறித்தோம் எங்கள் வாழ்வுக்காய் அல்ல… உங்கள் பிஞ்சுகள் உரிமை கொண்டாட தமிழன் நான் "தனித்துவமானவன்" எண்ணங்கள் காத்திடுங்கள்…! இன்னும்… உற்ற அன்னை உள்ளுக்குள் அழுகிறாள்... உருவில்லை என்றாலும் எங்கள் மூச்சுகள் உணருது..! உங்கள் மூச்சொடு இறுதி இலட்சியம் வென்றிடுங்கள் வீணடிக்காது விரைந்து வீர வரலாறு இறுதி அத்தியாயம் எழுத…
-
- 20 replies
- 2.2k views
-
-
யாழ் களக் கவிஞர்களுக்கு வணக்கம். வாரமொரு தலைப்பிலே கவிவடிக்க வாருங்கள் என்று அழைக்கிறேன். இது குறித்த தலைப்பில் கவி வடிக்கும் திறனை வளர்ப்பதற்கும் ஒரே விடயத்தை பல கோணத்திலும் அணுகும் அழகை ரசிக்கவும் உதவும் என்று நினைக்கிறேன். இந்தப் பகுதியில் இணைக்கப்படும் கவிதைகளில் சிறந்தவை வேறு வெகுசனத் தொடர்பு ஊடகங்கள் வாயிலாக வெளிவரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த வகையில் முதல் தலைப்பாய் அவனியிலே நாம்சிறக்க அனுதினமும் கனவு காணும் அன்னையின் பெருமையைக் கவியாக்குவோமா? இத்தலைப்பிலே ஏற்கனவே நீங்கள் எழுதியிருந்த கவிதைகளையும் இணைக்கலாம். 10 - 09 - 2007 வரை இந்தத் தலைப்பிலான கவிதைகளை இங்கே இணைப்போம். எங்கே கவிதைகளை எதிர்பார்க்கிறேன்
-
- 19 replies
- 2.9k views
-
-
1996ல் சரிநிகரில் வெளிவந்தபோது பெண்போராளிகளதும் சமூக ஆர்வலர்களதும் பாரட்டைப் பெற்ற இக் கவிதை மறு வாசிப்புக்காக பூவால் குருவி நெஞ்சுக்குள் தொலையாதிருந்து ஒரு சிற்றாறாய் ஊருகின்ற என் முதல் காதல் பெட்டை ஒரு வழியாய் உன்சேதி அறிந்தேனடி. பேய்கள் கிழித்தெரிக்கும் எம்முடைய தேசத்தில் வன்னிக் கிராமத் தெருவொன்றில் வெள்ளிச் சருகை மினுங்கும் தலையும் பொன் சருகை கலையா முகமும் இன்னும் ஓயாமல் முந்தானை திருத்த எழும் கையுமாய் போனாயாம் உந்தன் பூப்படைந்த பெண்ணோடு போட்டிச் சிறு நடையில். அது என்ன போட்டி. காவலிலே உன் அன்னை தோற்றதறிவாய். அவளிடத்தில் உன்பாட்டி தோற்றதையும் நீ அறிவாய். என்றாலும் வாழ்வின் சுழற் தடத்தில் இன்று நீ அன்னை. நீ தோற்க்க வாழ்வு மேலும் ஒர…
-
- 19 replies
- 1.7k views
-
-
கண்டதும் காதல் கொண்டு கொண்டது கோலம் என்று கோதையர் மேல் காதல் கொண்டால் காயும் நிலைதான் காளையர்க்கு கொடியிடை வேண்டுமென்றும் கொள்ளை அழகு வேண்டுமென்றும் குருடராகிக் குனிந்து நின்றால் கோட்டான் கூட உமைக் குதறிடும் நல்லதும் கெட்டதும் நாலுவிதம் நம்மெதிரே உள்ளவைதான் நகல் நிகர்த்து நல்லது காண் நன்மை நீயும் பெற்றிடுவாய் கண் காணும் கவர்வின்றி உண்மைக் காதல் தான் வேண்டுமென்றால் கால்களில் வீழாது காதல் செய்வீர் கம்பீரமாய் நின்று காதல் செய்வீர் உள்ளளகைக் கண்டு காதல் செய்வீர் உத்தமி ஒருத்தி வந்திடுவாள் உண்மைக் காதல் தந்திடுவாள் உம்மை உய்யவும் வைத்திடுவாள் உணர்ந்து காதல் செய்திடுவீர் உண்மை அன்பைப் பெற்றிடுவீர் உன்மத்தராய் ஆகாமல் உயிர் ஒன்றி வாழ்ந்திடுவீர்
-
- 19 replies
- 1.7k views
-
-
பூவனமே பொன்மலரே மறந்தாயா என்னை? புருவமதில் என் உருவமதில் இருக்கின்றாய் பெண்ணே! சிறு கவியாய் பெரும் கனவாய் சிதைக்கின்றாய் என்னை -போ வழி விடவா வரம் தரவா? வாடுதடி நெஞ்சு! காதலனாய் உன் கால் கொலுசாய் இருந்தேனே ஒரு பொழுது காலமெலாம் போனதடி என் கண்களை இனி சுட்டு தள்ளு! இருப்பேன் டா உனக்காய் இருப்பேன் டா என்றாயப்பொழுது இருக்கேன்மா இருக்கேன்மா நீதான் எங்கே இப்பொழுது? சிறுமலரே -பனிமழையே செண்பகமே - நான் பாவமா இல்லையா சொல்லு? உன் பார்வையதால் இந்த பாவியெனை- அன்று ஏன் கொன்றாய் சொல்லு! கேளடியோ-மயிலழகே என் வாசலதை மண்மூடி போனாச்சு -ஏனடியோ வண்ண கோலம் இனி அது எதுக்கு சொல்லு! :wink:
-
- 19 replies
- 3.2k views
-
-
வரிப் புலிகள் வாழ்ந்த காலம்.. விறகு வெட்டி கட்டி கண்டி வீதி வழி நடுச்சாமம் தாண்டியும் பெண்டிர் கூட மிதித்து வைக்க ஓடிய வண்டிகள்.. யாழ் நகர் வந்து சேர செம்மணிப் பேய்கள் கூட அமைதி காத்தன...! வானரப் படைகள் வாழும் காலம்.. விறகுவெட்டியும் தூக்கில் தொங்குகிறான் மாற்றான் மனையாளொடு கட்டியணைத்தபடி. பெண்டிர் மிதிக்கா வண்டிகள் பெற்றோலில் ஓட பெற்றோர் ஓடுகிறார் அவர் பின் பிள்ளை ஓடிப் போயிடுவாளோ என்றே பதறியடித்தபடி. செம்மணிப் பேய்களை விஞ்சி.. கோத்தாவின் ஏவல் பிசாசுகள்.. கிறீஸ் பூதங்களாய் மகளிரை மட்டும் குறிவைத்து கருவறுக்கும் நிலை..! தமிழினம் ஈழத்தில் வேரறும் நிலை...! புட்டுக்கு தேங்காய்ப் பூவாய் இருந்த ச…
-
- 19 replies
- 2.5k views
-
-
இங்கே தொடராக இந்து மதத்தை இழிவு படுத்துவதன் நோக்கமாக திட்டமிட்டு இவர்களுடைய பரப்புரை தொடர்கிறது... இலங்கையில் உள்ள இந்து மதம் ஆட்சி செய்யவில்லை இந்துவாதம் ஆளவில்லை...இதனை தெளிவாக பலர் சுட்டி காட்டீயும் இந்த நாஸ்தீக வாதிகள் அல்லது அரைகுறை பண்டிதர்கள் புரிய முணையவில்லை... இந்தியா இந்துவாத அரசியலை இலங்கை அரசியலுடன் ஒப்பிடுவதானது ஏற்பபுடையதல்ல... எமது ஈழத்தமிர் ஆட்சியல் இந்துவாதம் தலை தூக்கவில்லை..ஆளவும் இல்லை... நீங்கள் மதங்களை இழியுங்கள் அது உங்கள் மடமை இந்த மதங்களை இழிப்வர்கள் அவர்களுடைய குடும்ப உறவுகள் எந்த மதத்தை சர்ந்திருக்கின்றன என்பதை புரிதல் வேண்டும்...ஒரு மதத்தில் உள்ள தவறுகளை சுட்டி கட்டுவது தவறல்ல மாறாக கடவுளே இல்லை மனிதனின் மேலொரு சக்த்தியி…
-
- 19 replies
- 2.9k views
-
-
காதலும் நட்பும் என் விரல் நகம் கூட என் காதலியின் உடல் மீது படாமல் எவ்வளவு கண்ணியமாகக் காதலிக்கிறேன் என்பதை என் தோழியிடம் கூறிக் கொண்டிருந்தேன் அவளது தோளில் சாய்ந்தபடி.
-
- 19 replies
- 4.3k views
-
-
என்வலி ஒரு பேப்பருக்காக கோமகன் சொல்லிச் சொல்லி சொல்லால் அடித்தாயே அடியே சொல்லால் அடித்தாயே பொட்டுப் பொட்டாய் உடைந்ததுவே என் இதயம் சொட்டுச் சொட்டாய் வடிந்ததே வலியாய் ரத்தம் நீயும் நானும் கூடிய வாழ்க்கை ஒருவரை ஒருவர் உயர்த்திய வாழ்க்கை தெளிந்த ஓடைபோல் நகர்ந்த எம் வாழ்வில் கல்லை எறிந்தது யார் சொல் விழுந்த கல் தந்தது அலையை மட்டுமா எம் வாழ்வின் வேரையே ஆட்டியதை நீ அறியாயோ அடி கிளியே நீ அறியாயோ என் மூச்சிருக்கும் வரை உன் பேச்சு இருக்கும் என் இதயத்தின் ஓரத்தில் உன் பேச்சு இருக்கும் என்னதான் நீ என்னை சொல்லால் சுட்டாலும் என் இதயத்து சிம்மாசனத்தில் நீதானே நித்திய கல்யாணியடி நித்தம் நான் காணும் உன் முகம் வாடவும் விடு…
-
- 19 replies
- 1.8k views
-
-
ஜூலை மாதம் வந்தால் . . . . . ஆடிமாதம் எம்தமிழர் ஆடிப்போன மாதம் கூடிவாழ்ந்த வீட்டைவிட்டு ஓடிப்போன மாதம் மாடிவீடும் குடிசைவீடும் வீதிவந்த மாதம் கோடிகோடி யாகச்சொத்தை தாரைவார்த்த மாதம் இறையும்கூடத் தேரிலேறி தெருவில்நின்ற மாதம் சிறையில்கூடச் சிங்களவன் பலியெடுத்த மாதம் மறையின்வழி நின்றவர்கள் பதைபதைத்த மாதம் குறைவிலாமல் தமிழன்நிலை உலகறிந்த மாதம் ஆண்டுபல போனபோதும் மறந்திடாத மாதம் மாண்டுபோன உறவினைநாம் நினைத்துநிற்கும் மாதம் கூண்டுவிட்டு அகதியாகப் பெயரவைத்த மாதம் சீண்டிவிட்ட சிங்களத்தின் அமைதிசெத்த மாதம் புத்தன்சொல்லே வேதமென்றோர் புலையரான மாதம் சித்தம்தன்னில் ஈரமிலார் கொடுமைசெய்த மாதம் சொத்துசுகம் பேணநாட்டின் தேவைகண்ட மாதம் சத்தமின்றித் …
-
- 19 replies
- 3k views
-
-
அப்பாவின் ஈர நினைவுகள்.... வேர்களில் இருந்து கசியும் நீராய் அப்பாவின் நினைவுகள் எனக்குள்.. ஐந்து வயது வரை நடக்கமுடியாது தவிக்கும் போது தோள்களில் தூக்கி திரிந்த காலங்கள்... பனைவெளிகளின் ஊடாக சைக்கிள் பாரில் எனை வைத்து கதை சொல்லிய பொழுதுகள்.... பெரும் குளக்கட்டின் ஓரம் தடுக்கி விழாமல் இருக்க விரல்கள் இறுக்கி நடந்த நேரங்கள்... பெரும் மழை சோ என்று கொட்ட நனைதலின் சுகம் சொல்லித் தந்த தருணங்கள்... இப்பதான் நடந்ததாய் தெரியும் பொழுதுகளெல்லாம் எப்பவும் தொட முடியாத திக்கில் உறைந்து விட்ட சித்திரங்களாய்... ஆற்றாத் துயர் அணை மேவினும் நெருங்க முடியாத தூரங்களாய்.... பசிய இலையொன்றின் அந்திம காலத்து உதிரும் தவிப்பில் அப்பாவை கண்ட இறுதிப் பொழுத…
-
- 19 replies
- 128.4k views
-
-
எதற்காகப் பிறந்தேன் என்று தெரியவில்லை அன்பு செலுத்த மறுக்கும் உனக்கு அன்பு செலுத்தவா? நம்பிக்கையில்லாத உன் வாழ்வில் நம்பிக்கை தான் வாழ்க்கை என்று வாழ்ந்து காட்டவா? யாருக்காகவும் இதுவரை கண்ணீர் வடித்ததில்லை கல்மனம் கொண்ட உனக்காக கண்ணீர் வடிக்கவா? என் எதிர்காலத்திற்காக கடவுளை வணங்கியதில்லை உன் எதிர்காலம் நன்றாக அமைய கடவுளை வணங்கவா? ஏனடா நான் இப்படி? இது என் காதலின் ஆரம்பமா? இல்லை என் அன்பின் இறுதியா? ஒலிவடிவில்..
-
- 19 replies
- 3.8k views
-
-
வேற ஒன்றை தேடும் போது இன்று நான் 1996 இல் 22 வயதில் எழுதிய ஒரு கவிதையை Google ஆண்டவர் கொண்டு வந்து காட்டினார்.
-
- 19 replies
- 3.4k views
-
-
கார் கூந்தல் "டை"களின் இரசாயனத்தில் விளைவு காட்டி செம்மை அடிக்க.. காற்றில் பறக்கும் ஒற்றை முடியும் ஸ்ரெயிட்னர் சூட்டில் நிமிர்ந்து கம்பியாகிக் குத்த நிற்க.. கயல்கள் கண்ட விழிகள் பென்சில் மைகளின் படையெடுப்பால் கரிக்கட்டைகளாகி பயங்காட்டி நிற்க.. அப்பிள் கன்னங்கள் அள்ளிப் பூசும் வர்ணப் பவுடர்களின் சூறாவளியில் சிக்கி சிதைந்து சிவந்து நிற்க.. கொவ்வை இதழில் சுரந்த அமிர்தமும் லிப்ஸ்டிக் கலந்து அமிலமாகி அரித்து வடிய.. சந்திர நகங்கள் மின்னல் இழந்து ஸ்ரிக்கர் ஒட்டி குட்டை கண்ட உடலாய் அலங்கோலம் காட்ட.. வெள்ளிக் கொலுசு சிணுங்கிய இடத்தில் சிறைச்சாலை "ரக்"காய் ஏதோ இரத்தம் கண்டக் கட்டி இருக்க.. பிறை நுதல் தன்னில் முட்டி விழும்…
-
- 19 replies
- 1.4k views
-
-
மணமற்ற மலர்கள் மரமற்ற வெளிகள் மனிதரற்ற மனைகள் மகிழ்ச்சியற்ற மனங்கள் ஒளியற்ற கண்கள் ஒலியற்ற ஓலம் மட்டற்ற துயரம் பற்றற்ற உலகம் திலகமற்ற நுதல்கள் திங்களற்ற வானம் நிழலற்ற பகல்கள் நீரற்ற ஊற்று உயிரற்ற உடல்கள் உணர்வற்ற உறவுகள் அருளற்ற இறைவன் இருளுற்ற வாழ்வு
-
- 19 replies
- 1.2k views
-
-
என் செல்லமே செல்லமாக நான் வளர்த்த நாய்க்குட்டியே சொல்லாமல் எங்கு சென்றாய் இன்று நீ கடுங்கோவங்கொண்டு பிறர் உனை கடி நாய் என அழைத்த போதிலும் ரொம்ப பாசத்தோடு நான் உனை ரொம்மி என நாமமிட்டு அழைக்கையில் செல்லமாக வாலை ஆட்டி வேகமாக வந்து மெல்ல என் காலடியில் இருக்கும் என்குட்டியே காலை மாலை என தவறாமல் பாலை நான் தட்டில் ஊற்றுகையில் நன்றியோடு என நோக்கி நாவால் வருடும் நான் வளர்த்த செல்ல நாய்க்குட்டியே எங்கு நான் வெளியில் சென்றிடினும் என் வழித்துணையாக வந்த உனை எவர் கடத்தி சென்றனர் இன்று எப்படி இருக்கின்றாய் அங்கு நீ நான் உறங்கிய போதில் என்னருகில் விழித்திருந்து காவல் செய்வாயே நீ இன்று இல்லாத இந்த நாட்களில் விழிகள் …
-
- 19 replies
- 3.4k views
-
-
உயர்ந்த மரம் அடியோடு -சாய குஞ்சுக் காகம் தொடர்ந்து -கரைய தோகை மயில் அழகாய்- ஆட ஆனால் இந்த ரோஜா மலரே எப்போது பூப் பூத்தது ? ரோஜாக்குள் அந்த முள் - அந்த முள்ளுக்குள் - நீ உனக்குள் நான் எதற்குள் நாம் ?
-
- 19 replies
- 2.2k views
-
-
இதற்காகவா நீ பெற்றாய்.....???? பெண்ணவளை தெய்வமாக போற்றும் இந்த உலகினிலே... பெண்ணே உன்னை கேவலமாய் வந்தொருவன் இழிக்கின்றானே..... படுக்கையதை நீ விரித்து பத்து மாதம் சுமந்து பெற்றாய்.... அடி உன்னை வந்து இன்றவனே ஊனமதாய் இழிக்கின்றானே.... கண்ணயரா நீ அன்று கண்மணி போல் காத்தவனை பெற்றெடுத்த பெருந்தகையே.... உன்னையின்று இழிக்கின்றானே உன் மனசில் உதைகின்றானே.... இத்தனையும் கேட்டிடவா இன்றவனை நீ பெற்றாய்....??? -வன்னி மைந்தன் -
-
- 19 replies
- 2.8k views
-
-
பத்தினிகளும் பதிவிரதைகளும் புராணங்களில்... பால பாடங்களில்... பக்கம் பக்கமாய் படித்த மண்ணில் படி தாண்டிய பத்தினிகளும் மாதவிகளும் பெருகி விட்ட நிலை..! மாங்கல்யம் இன்றி மண மேடையின்றி கன்னிகள் வாழ்வு...! விலாசமின்றிய விந்துகளின் சேமிப்பிடங்களாய் அவர் தம் தேகம் இன்று..! சராசரி பாலியல் அறிவு கூடவா இல்லை... ஆண்டு ஒன்பதில் கற்றது கூடவா நினைவில் இல்லை.... தனி மனித ஒழுக்கம் என்ன பல்கலைக்கழகப் பாடமா வாத்தியார் கற்றுத்தர..?! முளைக்க முதல் பொத்திப் பிடிக்கும் கூட்டம் இன்று சந்தி தோறும் முந்தி விரித்துக் கிடக்கிறது.. ஏனிந்த அவலம்..???! பெண்கள்... புலிகளாய் வாழ்ந்த மண்ணில் வீரம் விதைத்து வீழ்ந்த இடத்தில் …
-
- 19 replies
- 2.2k views
-
-
அவர் வருவாரா எனது உடைந்து போன நாட்டை ஒட்ட வைக்க அவர் வருவாரா பள்ளத்தில் உள்ள என் ரட்ட(நாடு) சர்வதேசத்தில் உடட்ட(மேலே)வர அவர் வருவாரா தொப்பியை கண்டவுடன் கண்ணில் இல்லை உறக்கம் என் அமைச்சர் உன் அமைச்சர் சண்டை பிடிக்கும் அரசியலில் இது பரம்பரை பழக்கம் ஸ்டிவாய் யிருக்கும் அவர் மூஞ்சி ஸ்மூத்தாய் செய்வார் சாணாக்கியம் என்னை விட அவருக்கே என் நாட்டில் அதிக நாட்டம் ஆகவே அவர் வருவார் போகப் போக பார் இன்னும் புயல் அடிக்கும் அவர் வந்து போன பின் வட மாகாண சபை இருக்காது மாகாணசபை பொலிஸ் பிடிக்காது தமிழனையே பிடிக்காது அவர் வருவார் பூமி மீது நான் பிறந்ததற்க்கு பொருளிருக்கு பொருளிருக்கு......
-
- 19 replies
- 1.1k views
-
-
இதுவும் ஒரு காதல் நானும் அவனும் சஞ்சரிக்கும் பொழுதுகளே கால நீட்சியாய் தொடர்கிறது. பிரம்மனே காணமுடியாத முடி அவன் அடி நான் ஈர்ப்பு என்பதை அறிமுகம் செய்தது நாங்கள் தான் நானும் அவனும் சஞ்சரிக்கும் பொழுதுகள் மணித்துளிகளாய் தொடங்கி மணிக்கணக்காய் மாறி யுகங்களாய் தொடர்கிறது. ஒரு மாலைப் பொழுது.. அவனைப்பார்த்தபடி நானும் என்னைப் பார்த்தபடி அவனும் பொழுது இரவை அழைக்க காற்று குளிரை நிறைக்க மரங்கள் இலைகளை உதிர்க்க அவன் என்னை நெருங்கி வருவதாய் உணர்ந்தேன் நெற்றி வியர்த்திட சத்தமிட்டுப் பல முத்தங்கள் பொழிந்தான் என் நிலவு காய்ந்த முற்றத்தில். குளிர்ந்து போய் நானும் ஒரு குட்டி நிலவ…
-
- 19 replies
- 2.7k views
-