கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
-
- 12 replies
- 5k views
-
-
வசந்தத்தைத் தருவாயா காலக் களத்தினிலே கடுங்காயம் பட்டவனாய் உடலெல்லாம் புண்ணாகி உயிர்போகக் கிடந்தவனை பத்திரமாய் அணைத்தெடுத்துப் பாச மருந்திட்டுக் காதற் துணிகொண்டு காயத்தைக் களைந்தவளே அழகிழந்த சித்திரமாய் அடிவளவில் கிடந்தவனை கனிவுடனே கரமெடுத்துக் கறையானைத் தட்டி அன்பு நீர்கொண்டு அழுக்கெல்லாம் களைந்தகற்றி அழகாய் முன்னறையில் அமர்ந்திருக்கச் செய்தவளே வாழ்க்கைப் படகிழுக்க வழியெதுவும் தெரியாமல் துன்பப் பெருங்கடலில் துடுப்பிழந்து நின்றவனை மூர்ச்சித்து மெல்லமெல்ல மூச்சிழந்து போனவனை கைப்பற்றி மெல்லமெல்ல கரையிழுத்து வந்தவளே வெறுமைக் கோடையெனும் வெந்தணலில் சிக்கியதால் வெந்து தினங்கருகி வெளிறிப் போகையிலே நட்பென்னும் ந…
-
- 7 replies
- 1.7k views
-
-
வசந்தன் மில்லராகி....! ----------------------------------- வசந்தன் மில்லராகி வரைந்தான் ஈழம்தேசம் தொலைத்தான் தாயின் வாசம் சுமந்தான் தாய்நாட்டின் வாசம் ஏற்றான் வெடிகுண்டின் பாரம்! விடியல் படைக்கும் முடிவாய் வெடித்தான் தமிழர் மனதுள் தடுத்தான் பெரும் அழிவின் வரவை பதித்தான் வீரச் சுவட்டை பார்த்தோம் வாழ் நாளிலன்று! வியந்தோம் விழிகள் உயர தொடர்ந்தார் களங்கள் சரிய நிலைத்தார் மனங்கள்தோறும் நிமிர்வோம் அவரீகத்தாலே!
-
- 2 replies
- 623 views
-
-
-
வசந்தம் வந்தது வண்ணக் கதிரவன் ஒளியொடு வான் உயர்ந்த மரமெல்லாம் வான் மறைந்துத் துளிர்த்து நிற்ப வசந்தம் வந்தது வண்ணக் கதிரவன் ஒளியொடு பூ மகள் மேனிதனை பூக்கள் மறைத்து நிற்க பாரே அழகில் மிதக்குது பகலவன் சிந்தும் புன்னகையில் இத்தனையும் பார்க்கையிலே மனசெல்லாம் ஒரு தவிப்பு - எம் தாய்மண்ணின் பிறந்ததற்காய் தம் வசந்தம் தொலைத்து வாழும் - எம் தொப்புள் கொடி உறவுகள் வாழ்வில் தொலைந்த வசந்தம் வீசும் நாள் எந்நாளோ??? http://inuvaijurmayuran.blogspot.ch/2014/03/blog-post_20.html .
-
- 3 replies
- 1.4k views
-
-
-
மண்ணில் நாம் வந்து பிறந்துவிட்டோம் வாழ்வு எது என்றும் அறிந்துவிட்டோம் எண்ணிலாத ஏக்கங்களை எம்மைச் சூழ ஏற்றிவிடோம் பொன்னின் ஆசைகள் போதையாகிட பொருள் மட்டுமே வாழ்வுமாகிட பேரவா கொண்டு பேதைமை கொண்டு போட்டிகள் கொண்டிங்கு போதையிலேயே வாழுகிறார் மண்ணின் ஆசைகள் மனதெங்கும் மாய்த்திட மானமிழந்து மதிகெட்டலைந்து சுற்றமிழந்து சுறுசுறுப்பிழந்து சொந்தமிழந்து சொத்துமிழந்து செக்குமாடுகளாய் வாழுகிறார் பெண்ணின் ஆசையில் கண்ணும் குருடாகிட பேரிடர் பல தாங்கியே நிதம் பெண்டிர் மறந்து பெருமை மறந்து பித்தராய்ப் பலர் வாழுகிறார் உயிர் காக்க உணவே இன்றி உடல் காக்க உடையும் இன்றி உறவேதும் உதவிட இன்றி உணர்வு கொன்று உயிர் காவ உள்ளம் வென்று உணர்வு காக்கும் உருக்குலைந்த உண்…
-
- 6 replies
- 639 views
-
-
பல்லாயிரம் ஆண்டுகளாம் புகழ்பூத்த முற்குடியாம் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தின் நற்குடியாம் தொல்தோன்றி மண்கண்டு மன்கண்டும் பயனில்லை சொல்கொண்டு இணைவர்தம் சிரமெடுப்பர் காலமிதில் ஒருவிரல் வெளிச்சுட்டி மூவிரல் தனைச்சுட்டி தரையினிலே உடல்பரப்பி உமிழ்கிறார் சிரம்நிமிர்த்தி வருவதுவும் பெயரல்ல தருவதுவும் புகழல்ல திரும்புவது உமிழதுவே மூவிரலும் குறிப்பதுவே களமதனில் உரையாடல் கனிகின்றார் தினம்தானும் தளம்மாறித் தடம்மாறிப் புனைவாரே வசையாடல் களவுதட்டில் ஒருபேச்சு கருத்தியலில் மறுபோக்கு உளமுரையார் சொல்லதுவும் அம்பலம்தான் ஏறிடுமோ எண்ணத்தில் வந்தவுடன் கிண்ணத்தில் தந்துவிட்டார் உண்மைநிலை உணர்வின்றி வசைபாடிச் சென்றுவிட்டார் திண்ணையதன்…
-
- 38 replies
- 3k views
-
-
கனவிலே வந்தாய் பெண்ணே கனடாவில் நலமா நீதான் கண்மணி என்றே சொன்னேன் கண்களை கொள்ளை கொண்டாய். நெஞ்சத்தை காண வில்லை திருடிநீ என்ன செய்தாய்? வஞ்சத்தை விட்டுச் சொல்லு- என் வஞ்சத்தை விட்டுச் சொல்லு பஞ்சமாம் ஊரி லெல்லாம் - உன் நாணத்துக் கில்லை யாமோ? வெஞ்சமர் ஆடி யுன்னை சிறைமீட்க ராமன் நானோ? பொய்யடி உலக மெல்லாம் - உன் மெய்நெஞ்சை திறந்து காட்டு! அங்கும்நான் இல்லை யென்றால் மெய்யெந்தன், மெய்யைக் கொல்வேன். கவிதைக்கா காத லித்தேன் ?-என் கண்ணுறு நீதான் பெண்ணே! கவிஞனும் உண்மை சொல்வான் காதலீ! நம்பு வாயா? வாழ்வது நீண்ட தில்லை. - வா வாழ்வைச் சுவைத்துப் பார்ப்போம். வருகின்ற தலைமுறைக் கெங்கள் வாழ்வினில் ஏணி வைப்போம்.. கல்நெஞ்ச…
-
- 2 replies
- 875 views
-
-
பனி படர்ந்த வயல்களும் பசுமாட்டுத் தொழுவமும் பனம்பழம் பொறுக்கிய பனங்கூடலும் பசிமறந்து பட்டாம் பூச்சியாய் திரிந்த பள்ளிக்கூடக் காலமும்_இன்று பகலின்றி இரவின்றி பாதகனின் கொடுஞ்சிறையில் பசி போக்க வழியின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் பரிதவிக்கிறோம் அநாதைகளாய்... குண்டுமழை நடுவினிலும் குருதிமழை நடுவினிலும்_நின்று வெஞ்சமராடிய வேங்கைகளை வஞ்சகத்தால் கொன்றுவிட்டு நெஞ்சுரத்தோடு பேசுகிறான் வடக்கின் வசந்தமென்று..... பி.கு_ எனக்கு கவிதை என்ன என்பதே தெரியாது. இளங்கவி அண்ணாவின் கவிதைகள் ரொம்ப பிடிக்கும். அவருடன் கேட்கும் போது அவர்தான் கவிதை பற்றி சொல்லி எழுத ஊக்கம் தந்தார். எனது முதல் கவிதை இளங்கவி அண்ணாக்கே.
-
- 13 replies
- 1.9k views
-
-
சவுக்கு மரக் காடுகளின் கூவலையும் தாண்டி நரிகளின் ஊளைச் சத்தம் காதைப்பிளக்கிறது...! கருமுகில்களுக்குள் ஓடியொளிந்து விளையாடும் பால்நிலவைப் பார்த்து தெருநாய்களெல்லாம் குரைக்கின்றன...! பசித்து பாலுக்கழும் குழந்தை அழுவது காற்றடிக்கும் போக்கில் இங்குவரை கேட்கிறது...! நேற்று இங்கு நடந்ததை எத்தனை தடவைதான் நினைத்து நோவது...?! அப்படியே தூங்கிவிட்டேன்...! எனக்குத் தெரியும்... நான் தூங்குகின்றேன்... அதை உணர முடிகிறது என்னால்! கனவுகள் என் தூக்கத்தை ஆக்கிரமிக்கின்றன... குதிரைகளின் குளம்பொலிச் சத்தம்... இந்த நேரத்தில் யாராயிருக்கும்...!? நிலவொளியின் வெளிச்சத்தில் நன்கு தெரிகிறது... ஆம் அவர்களேதான்! சவுக்கு மரக்காடுகளின் நடுவே... சிதைந்துபோன கல்லறைக்குள்ளிருந்த…
-
- 8 replies
- 1.2k views
-
-
வடலி சி.சிவசேகரம் இந்தக் கருப்பனைகள் இங்கேதான் முளைக்கும் இடம்பெயரச் சொல்லி எவர் வேரோடு கல்லி வெளியே எறிந்தாலும் வடலி வளரமுதல் வெட்டிச் சரித்தாலும் கிழங்கு முளைவிடுமுன் கீறி எடுத்தாலும் இந்தக் கரும்பனைகள் எப்போதோ என்றோ இங்கேதான் முளைக்கும் எத்தனையோ பெரும் புயல்கள், இடிமழைகள், சுடுவேனில் எல்லாமே எத்தனையோ நூற்றாண்டாய்க் கண்டவைதாம். பொன்னில் முடி புனைந்து ஆண்ட பரம்பரையார் போயழிந்தார். ஆனாலும் எங்கள் கரும் பனைகள் எங்கள் வெளிகளிலே ஓலையிலே முடி புனைந்து ஓங்கி அரசாளும் எனவேதான் எத்தனை நாட்போனாலும் எத்தனை தான் கடிதாய் நீவிர் முயன்றாலும் எங்கள் கரும்பனைகள் இங்கேதான் முளைக்கும். பனைவடலி அல்லவே எங்களது பாலகர்கள் என…
-
- 15 replies
- 2.3k views
-
-
வணக்கம் பிள்ளைகள், வயசுபோன நேரத்திலை இந்தக் குளிருக்குள்ளை நானும் என்னத்தைத் தான் செய்யுறது. ஊரிலை மாதிரிக் காத்தாட வெளியிலை போகேலுமோ அல்லது நாலு பேர் சேந்து விடுப்புக் கதைக்கேலுமோ அல்லது பேரப் பிள்ளைகளைப் பிடிச்சு வைச்சுப் பாட்டி வடை சுட்ட கதையைச் சொல்லிப் பேக்காட்ட ஏலுமோ. சரி உந்த ரீவீப் பெட்டியிலை எங்கடை நாடகப் பெண்டுகள் அழுதுகொண்டு இருப்பாளவை. அதைப் பாக்கலாமெண்டால் உந்தச் சின்னவன் தான் காட்டூன் பாக்கவேணும் எண்டு போட்டு தூரத்திலை இருந்து ரீவீ போடுற கட்டையைப் பறிச்சுக்கொண்டுபோய் வைச்சுக் கொண்டு இருக்கிறான். பின்னை இந்தக் கட்டிலிலை வந்து கூரையைப் பாத்துக் கொண்டு கிடக்கேக்கை தான் அந்தக் கால ஞாபகம் வந்துது. அதுதான் எழுதி உங்களிட்டைக் காட்டுறன். நீங்களும் வாசிச்சுப் போட…
-
- 15 replies
- 3.3k views
-
-
வணிகம் பேசினாலே மனிதம் பேசுவார்களா? இற்றைக்கு இரண்டு ஆண்டுகள் முன்புவரை ஒரு “தேசத்தின் குரல்” சர்வதேசத்தின் செவிப்பரைகளில் மோதி மோதி இந்து சமுத்திரத்தில், ஈழத்தமிழினத்தின் விழிகரித்த உப்புகடலில் குருதி கொப்பளித்துக் கிடக்கும் ஈழத்தின் இருப்பை உரைத்துரைத்து ஓய்ந்து போனது. கண் மறைந்து போன கால நீட்சியில் கற்றுக் கொண்டதும், கண்ணீர் விட்டதும், கனக்கும் இதயக்கூட்டின் கணக்கில் அடங்காமல் நீண்டநெடும் பயணத்தில் இன்னும் தொடர்கிறது. வேர் மடியின் தாகம் கொண்டு எத்தனையோ உன்னதங்களை, வேதனையைச் சுமந்து சுமந்து உலகிற்குக் காட்டியாயிற்று. தர்மத்தின் தலையில் சூது இல்லை என்பதையும் உணர்த்தியாயிற்று. நீறிட்டுக் கிடக்கின்றன நெருப்பின் முகவரிகள் …
-
- 4 replies
- 913 views
-
-
வண்ண முகம் கொண்டவளே வடிவழகு யாழ்களமே கண்ணழகு கொண்டவளே கருத்தூன்றிப் பார்ப்பவளே பன்முகம் கொண்டவளே பவளவாய்ச் சொல்லமுதே பாடல் புனைகின்றேன் பாராட்ட உன்னையடி பதினாறு வயதில் பாவைநீ பார்த்து மயங்கிடும் அழகோடு பருவ எழில் பொங்க பார்ப்பவரை உன்பின்னே அலைய வைக்கின்றாய் கோல மயில் உன்னழகைக் கண் குளிரக் காணவென்றே கோடி மக்கள் நாடித் தினம் காலநேரமின்றி கண் விழித்து வருகின்றார் கருத்தூண்றி உன்னைக் கவனித்தும் வருகின்றார் தம் திறமை காட்டி உன்னைக் கவர்ந்திட தம்மால் முடிந்த வரை உன் தாள்களில் வரைகின்றார் ஆசை மனம் காட்டி ஆவலொடு நிதமும் ஆர்பரிக்க நிற்கின்றார் ஆனாலும் நீயோ பகட்டில்லாப் பாவை அனைவரையும் அரவணைத்து ஆசைமுகம் காட்டாது அன்பு மனம் காட்டி ஆண் பெண் பேதமின்றி அணைத்த…
-
- 9 replies
- 665 views
-
-
வண்ணத் தமிழுக்கு வளைகாப்புப் போடவந்த வாலிபப் பீரங்கிக் குண்டுகளே..! ******************************************** மு.வே.யோகேஸ்வரன் ********************************* எரிமலையின் தீப் பிளம்பை எமது உறவுகளின் கண்களில் கண்டேன்.. கல்லூரி மாணவர்களா இவர்கள்..? இல்லை வல்லூறாம் சிங்களவரை விரட்ட வந்த நம்மூரின் நாயகர்கள்..தமிழ்ச் சொல்லூறும் எம்மினத்தின் போர்க் குயில்கள்! சின்னத் தளிருடல் வாடுதையா-உங்கள் சோர்வில் எம்மீழம் தோன்றுமையா..! உண்ணா விடுதலை நோன்பில் உங்களை ஆகுதி ஆக்கிக்கொண்ட எங்கள் திலீபர்களே..! வண்ணத் தமிழுக்கு வளைகாப்புப் போடவந்த வாலிபப் பீரங்கிக் குண்டுகளே.. நாளை மலரும் எம்மீழ வரலாற்று நூலில் தோளை நிமிர்த்தி நிர்ப்பீர்கள் ...திண்ணம் இது!…
-
- 3 replies
- 822 views
-
-
விடைபெறும் ஆண்டே விதைத்து விட்டு போகிறாய் பலவற்றை எம் வயல்களில்... அறுவடைக் காலத்திற்காய் காத்திருக்கும் வலிமையையும் விளைவுகளை சாதகமாக்கும் திண்மையையும் தந்துவிட்டு போ.... கண்ணீரின் கனதி சுமந்த காற்றும் கலைந்த கனவுகளின் ஓலங்களும் பேரிருள் ஏறிய உறைவிடங்களில் நிறைந்துபோக, ஏக்கங்களும் ஏமாற்றங்களும் யுகாந்திர காத்திருப்புக்களும் மௌனமாக வாழ்விடங்களில் நிலைத்துப்போக, இயலாமை சுமந்து விடை கொடுக்கிறோம். கருவழிந்த காலத்தின் குறியீடே... உயிர்ப்பினை ஒளித்துவிட்டு சாம்பல் பூசி அடங்கிக்கிடக்கும் கிளைகள் மீதினில் மோதட்டுமுன் ஊழியின் பெருங்காற்று. மக்கிப்போகாத எலும்புகள் மீதும் மண்தின்ற தசைத் துண்டங்கள் மீதும் இறங்கட்டுமுன் பிரளயம். இனி பகை கொண…
-
- 2 replies
- 599 views
-
-
வதை முகாமில் ஓர் ஆச்சியின் ஒப்பாரி கவிதை - இளங்கவி ஐந்து சந்தி வீதியிலே ஆளுயரப் பனையின் கீழ் பனம்பழம் எடுத்து வந்து பாதி தந்த மகராசா...! என்னை பாதியாய் தவிக்கவிட்டு பாடையிலே சென்றீரோ.... பச்சைப் புல்வெலியில் பாதணியும் போடாமல் உன் பங்குக்கும் புல்லுவெட்டி என் பசுவின் பசிதீர்த்த மகராசா...! பட்டினியால் உன் உயிரை பறித்து தான் சென்றனரோ...! புலியின் ஆட்சியிலே நாம் பசியை கண்டதில்லை... கிளி நொச்சி விட்டோடி; கடைசியிலே வதை முகாமுக்குள் வந்திருந்தோம்.... இங்க என் ராசா நீ பசிதாங்க மாட்டயென்று என் பாதிக்கஞ்சி தந்திருந்தேன் இங்கே பிணிதாங்க முடியாமல் என்னை பிரிந்துதான் சென்றீரோ...! பாவியவன் குண்டு போட்ட; நாமும் படுகைய…
-
- 18 replies
- 2.6k views
-
-
வதை முகாமில் வாடும் நம் உயிர்கள்..... கவிதை - இளங்கவி அம்மா இந்த இடம் வேண்டாம் நாங்கள் போவம் வாங்கோ.... சிணுங்கிறது ஓர் சிட்டு... மலராத அம் மொட்டு..... உன் அண்ணாவை காணவில்லை அவன் சென்ற இடமும் தெரியவில்லை.... அவனின்றி நாம் மட்டும் எங்குமே செல்வதில்லை........ ............................................... பெரும் முற்றுகையில் நடுவினிலும் பெற்றோரின் முகம்பார்த்து சில காலம்.... சிரித்திட்ட மழலைகள்; இன்று சிந்திய முத்துக்களாய்..... பல முகங்களை பார்க்கவில்லை தம்மை பார்ப்போரையும் கண்டதில்லை... பாதியாய் பட்டினி வாழ்க்கையிலே வழியின்றி தவிக்கின்றன....... ................................................... குளித்திடும் வேளையிலே …
-
- 14 replies
- 1.7k views
-
-
வதை முகாம் -------------- சதி, திமிருடன் கைக்கோர்த்து - எங்கள் விதியுடன் விளையாடியதால்..... இன்று எம் அம்மையும், அப்பனும் ஆளுக்கொரு முகாமில் அழுகையும், ஆத்திரமுமாய்........ முட்கம்பிவேலி முழங்காலிட்டு நுழையும் கொட்டகை எலும்பும், தோலோடு - என் அண்ணன்களும், தங்கைகளும் ஆடும், மாடுமாய்........ குளிர்ப்பனியோ... கும்மிருட்டோ... சுடுவெயிலோ... கொடும் விடமோ... கடினமல்ல - எம் மக்களுக்கு காட்டிக்கொடுக்கும் கயவனின் கடும் செயலைவிட! சிங்கமுக சொறிநாய்... செருக்குற்ற வெறிநாய்... பிஞ்சையும் புணர்ந்து பேராண்மைப்பேசும் ஓநாய்... துப்பாக்கிமுனையில் துகிலுரிக்கும் கயவனே! உன் அக்காளாய், தங்கையாய் தமிழ்ப்பெண் உனக்குத் தெரியாதோ? அஞ்ச…
-
- 1 reply
- 619 views
-
-
வதையின் மொழி வதை என்பது ஈழத்தமிழனின் வாழ் வென்றானது -இன்று உயிர்த் தமிழுக்கும் தமிழனுக்கும் அதுவே மொழியானது சிறை என்றும்,சித்திரவதை என்றும்- அது இலக்கணம் சொன்னது கொலை என்றும்,கொடும் அவலம் என்றும் நா கூசாமல் பேசியது என்ன இது ? பெண்னென்றும் ஆணென்றும் அது பேதமற்று வதைத்தது.. தெருவில் வாழும் உயிருக்கும் கருவில் வளரும் உயிருக்கும் மனித உரிமைகள் மறுக்கப்பட்டன ... ஏன் என்றார்கள் மக்கள் ...?நீ தமிழன் ! அதனால் என்றது வதைமொழி .. தமிழ்த் தாயின் கருவறையில் உயிர் பெற்றதால் -தனக்கென கல்லறை கூட இல்லாது போனான் தமிழன் ...! கலங்கி தவிக்கின்றன- ஈழத்தில் கருவறைகளும் கல்லறைகளும் ...! உயிர் தாங்க கருவறைகளும், உடல் தாங்க கல்லறைகளும் மௌனமாய் மறுக்கின்றன- இருந்து வாழ்வ…
-
- 1 reply
- 1k views
-
-
வந்தது கடிதம் முத்தான எழுத்துக்கள் கொண்டு முத்தங்கள் பல இட்டு சுருக்கமாக நீ எழுதிய மடல் சுணக்கமாக கிடைத்தது இன்று விரித்து வாசித்த வேளை சிரித்தது என் உதடு சின்ன சின்ன சொல்லெடுத்து செதுக்கிய அழகிய காதலை உன் கடிதத்தில் கண்டதும் கண்கள் சந்தோசமாக கண்ணீரை உதிர்த்து நன்றி சொன்னேன் மனசுக்குள் நான் உனக்கு எத்தனை தடவைகள் அன்பான உன் மடலை வாசித்தேனோ நானறியேன்... என் மென்மையான நெஞ்சத்தில் அவ்வரிகள் ஆழமாக பதிந்தன "அன்பே என் நிலா உன் காதல் விண்ணப்பத்தை இன்று நான் ஏற்றுக்கொண்ட்டென் உன்னையே என் இதயவீட்டில் குடியேற்றிவிட்டேன் ஆதலால் ஓடி வா என்னிடம் நீ.. முத்தங்கள் பல தந்து முடிக்கின்றேன் இம்மடலை. என்றும் உன்னவன் ...........…
-
- 24 replies
- 4.4k views
-
-
வந்தால் போவாய் அடி வேண்டி.....!!! கடலிலே நடக்குது தொடரடி பகை கலமது வாங்குது தொடர் இடி..... எண்ணில பகையது பல அழி பிறக்குது தழிழுக்கு புது வழி.... பகையது இது கண்டு முழி பிழி எங்கள் பலமது கண்டது அது விழி..... தொடராய் வாங்குது அது அடி இனி தொடரவே போகுது இவ்வடி..... நாலு ''பிப்ரி'' நம்மடி இனி நாளுமே போடுமே அது வெடி.... கூடவே படை நாலு உயிர் பிடி இது கடலில நடந்த முதல் பிடி.... வாங்குமே பகை கலம் தொடர் இடி இது விடுதலை விடியலின் முதல் படி.... இது கடலிலே நடக்கிற காவியம் புலிப்படை வரைகிர ஓவியம்.... வருவாயா எம் கடல் மேவியே....??? வந்தால் அடி …
-
- 3 replies
- 1k views
-
-
நெஞ்சு (உ)ரசிய பூவே... --------------- செவ்வானச் சிவப்புக் கன்னம் சிந்தாகும் முல்லைச் சிரிப்பு முன்னாடும் இரண்டு கண்கள் முத்தாடும் செவ் விதழ்கள் தள்ளாடும் வாழைக் கால்கள் தடுமாறும் அந்த நினைவு பந்தாடும் உந்தன் அங்கம் பஞ்சாகும் எந்தன் இதயம் முகம் துடைக்கும் காற்றில் முந்தானை அது சரிய தீ வளர்த்த மெழுகாய் தீப்பிடித்து நான் உருக கண் மூடி ரசிப்பதேன் காதல் நோயை வளர்ப்பதேன் மனம் அமிழ்ந்து போகுமட்டும் மது நிரப்பி வைப்பதேன் சொல் ஆடும் சுந்தரம் செதுக்கி வைத்த சிற்பமிது வில் ஆடும் புருவம் விளை யாடும் பருவமிது கொன்று கொன்று போகிறாய் கொஞ்சம் மீதி வைக்கிறாய் நெஞ்சு (உ) ரசிய பூவே கொஞ்சி இருக்க வந்துவிடு -எல்…
-
- 11 replies
- 1.9k views
-
-
வந்துவிடு வரைவில் ! தூக்கம் என் கண்களுக்கு தூரமாகிறது..... இரவுகளும் நீளமாகின்றன.. நிமிடங்கள் யுகங்கள் ஆகின்றன... தனிமை தரும் தாளாத துயரத்தை அணு அணுவாக அனுபவிக்குது உள்ளம் அழுதபடியே... வயிற்றில் பசியில்லை உணவில் பிடிப்பில்லை மனதுக்கு நிம்மதியில்லை எப்போது மீண்டும் உன்னுடன் கதைப்பேன்?... அதுவும் தெரியவில்லை... வெளியே சிரித்து உள்ளுக்குள் ஓயாது அழுகிறேன் செழிப்பிழந்த வதனத்துடன். நெஞ்சமே நீதானடி.....அதற்காகவேனும் வந்து விடு விரைவில்..
-
- 17 replies
- 2.2k views
-