கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
துயர் காவிகளாய் இருண்டு கிடக்கின்றன வான்முகில்கள் முகம் மழுங்கிச் சிதைந்து எழுகிறது ஒளிமுதல் விதை விழுந்த நிலத்தில் கிளையெறிந்த பெருமரங்கள் இயலாமையோடு மௌனித்துக் கிடக்கின்றன, நீண்ட வீதிகள் இனங்களை இணைத்துவிடவென்று மக்கிப்போகாத உடலங்கள் மீதேறிப் போகின்றன, முள்வேலிகட்டிய பகை, நெஞ்சுக்கூட்டில் பட்டுக்கம்பளம் விரித்து வரவேற்புரை நிகழ்த்துகிறது. காற்றினில் கந்தகநெடி இல்லை வானில் மிகையொலி விமானங்கள் இல்லை கடலினில் செங்குருதி மிதக்கவில்லை தீசூழ்ந்து எம்மூர்மனைகள் அழியவுமில்லை இருந்துமொரு, தீபம் ஏற்றிட வழியில்லை மணியொலித்துக் காந்தள் தொடுத்து, கல்லறை தொழுதிடவொரு களமும் இல்லை. மண்சுமந்த வேழங்கள் நடந்த தடத்தில் கண்ணீர் சொரிந்த…
-
- 1 reply
- 588 views
-
-
மேதினியில் உயிர்களது மேன்மை பற்றிப் பேசுகின்ற மேற்பூச்சுப் பூசிய மேலான நாடெல்லாம், காதிருந்தும் செவிடனாக கண்முன்னே இனஅழிவை வாய்மூடிப் பார்த்திருந்த வரலாற்றுத் துயரநாள். பூர்வீக நிலம்தனிலே பூச்சரம் போல்வாழ்ந்த மக்கள் தார்மீக நெறிகளற்று தரக்குறைவாய் அழித்தநாள். கோணிகளை அவிழ்த்துக் குப்பைகளைக்கொட்டுதல்போல் வானிருந்தும் நிலமிருந்தும் வளம் கொழிக்கும்கடலிருந்தும் குண்டுகளைக் கொட்டிக் கொலை புரிந்த கரிநாள் குஞ்சென்றும் கிழவியென்றும் கொஞ்சுமிள நங்கையென்றும் இஞ்சித்தும் இரக்கமின்றி வஞ்சம் கொண்டு அழித்தநாள் மே பதினெட்டு மேதினியில்…
-
- 0 replies
- 588 views
-
-
[size=4]பொப் டிலானின் “When the Deal Goes Down” என்ற கவிதை. எப்போது கவிதை எழுத போனாலும், இப்படி சில கவிதைகள் ஞாபகத்துக்கு வந்து “ஏன் உனக்கு வேண்டாத வேலை?” என்று ஏசும். படிமம் தான். வாசிக்கும்போது முகத்தில் பளாரெண்டு அடிக்கும் படிமம். நீங்களும் வாங்குங்களேன்.[/size] [size=3] [/size] [size=4] The moon gives light and it shines by night Well, I scarcely feel the glow We learn to live and then we forgive O’er the road we’re bound to go More frailer than the flowers, these precious hours That keep us so tightly bound You come to my eyes like a vision from the skies And I’ll be with you when the deal goes down [/size] [size=4]கேதாவின் கவித…
-
- 1 reply
- 588 views
-
-
உன்னை நீயுணர் உயர்வினைக் காணுவாய் முள்ளி வாய்க்காலெம் முடிவல்ல அறிந்திடு பள்ளிகொள்ள இது படியல்ல புரிந்திடு எள்ளி நகைப்போரை புறந்தள்ளி நடந்திடு துள்ளி எழுந்துமே தடைகளைக் கடந்திடு வெண்ணை திரண்டுமே தாழியில் வரும்கணம் கண்ணை மூடியே கரமதை விடுவதோ? மண்ணை காத்திட மடிந்தவர் சந்ததி திண்ணை குந்தியே தினங்களைப் போக்குமோ? விழுந்து எழுந்திடா மழலையும் உள்ளதோ? உயர்வு தாழ்விலா சாலையும் செல்லுமோ? அலைகள் ஓய்ந்ததோர் ஆழியும் உள்ளதோ? விலைகள் இன்றியே விடுதலை வெல்லுமோ? எந்தக் கையது உடைந்திடும் போதிலும் நம்பிக் கையது வா…
-
- 0 replies
- 588 views
-
-
மூதாட்டி: பெற்றெடுத்த முத்துக்களை காணவில்லை பெயர்காக்க ஒரு மலரும் பூக்கவில்லை தள்ளாடும் வயதில் ஒரு தடியும் இல்லை தளராமல் இருக்கும் மனம் எனக்குமில்லை..! முதியவர்: வாடுவதும் ஏனோ என் கண்ணே... தேடுவதும் எதையோ என் பெண்ணே... உன் மணவாளன் நானிருக்கேன் மணியே.. உன் மகனை மறந்து வா தனியே.. மூதாட்டி: பெற்ற மனம் என்றுமே பித்தத்தான் பெற்ற வலி என்றுமே எனக்குத்தான் விட்டுவர கூவுதிங்கே இதழ்தான் விம்மியழ ஏங்குமிங்கே மனம்தான் ! முதியவர்: மணமுடித்த நாளே முடிவெடுத்தேன் மரணம்வரை நான் உடனிருப்பேன்.. மாதரசி உன்னில் நான் கலந்திருப்பேன் மார்போடு உன்னையே அணைத்திருப்பேன் மூதாட்டி: நரைத்த முடியும் நடுங்கும் உடலும் நடவா காலும் நகைப்பது தெரியலையோ? கிழடு தட்டியும் கிண்டலா …
-
- 1 reply
- 587 views
-
-
நேற்று கனடாவில் கிரவுண்ட் ஹாக் டே அது குழியில் இருந்து வெளியே தலையை நீட்டி தனது சுதந்திர நாளை எண்ணி போனது குழிக்குள் இன்று நவீன துட்ட கெமுனு தமிழீழ தலைநகரில் அறுபத்தி ஐந்து வருட அவலத்தை தொடருவேன் பண்டைய மன்னர்கள் புறாக்களை பறக்கவிட்டனர் சுதந்திரமாக அந்த பறவை போல நாமும் பறந்திடவேண்டும் எமது மண்ணில்..
-
- 4 replies
- 587 views
-
-
https://www.youtube.com/watch?v=LaINo30pO8o&feature=youtu.be
-
- 0 replies
- 586 views
-
-
படித்ததில் பிடித்தது Invictus Out of the night that covers me, Black as the pit from pole to pole, I thank whatever gods may be For my unconquerable soul. In the fell clutch of circumstance I have not winced nor cried aloud. Under the bludgeonings of chance My head is bloody, but unbowed. Beyond this place of wrath and tears Looms but the Horror of the shade, And yet the menace of the years Finds and shall find me unafraid. It matters not how strait the gate, How charged with punishments the scroll, I am the master of my fate: I am the captain of my soul. கவிதை William Ernest Henley எனும் ஆங்கிலக் கவிஞரால் 187…
-
- 0 replies
- 585 views
-
-
நான் கொடுக்கும் துண்டித்த அழைப்புகளை கண்டிக்கும் உன் கோபத்தின் மீதும் கொள்ளை பிரியம் எனக்கு...... சண்டையிட்டு சரணடையும் சலனமற்ற உன் அன்பின் மீதும் கொள்ளை பிரியம் எனக்கு.... மடிகணினியோடு மல்லுக்கட்டி போராடி என்னோடு அரட்டை அடிக்கும் உன் சேட்டைகள் மீதும் கொள்ளை பிரியம் எனக்கு.... கோபத்தினை மறைத்த தருணங்களில் இம் என்ற ஒற்றை சொல்லோடு உரையாடும் பித்தனே உன் பித்தத்தின் மீதும் கொள்ளை பிரியம் ... அன்றாடம் நான் கேட்கும் கேள்விகளுக்கு சில்லரிக்கும் புன்னகையோடு சம்மந்தமில்லா விடையளிக்கும் உன் சலிப்புகள் மீதும் கொள்ளை பிரியமே..... பேசிக்கொண்டிருக்கும் போதே சொல்லாமலே தூங்கிடும் உன் தூக்கத்தின் மீதும் கொள்ளை பிரியமே..... காதருகே கண்ண…
-
- 1 reply
- 585 views
-
-
நண்டலையும் கடற்கரையில் அன்று நாம் நின்று கதறியதை வேவு வண்டு விமானம் படமெடுக்க கண்ட பின்னும் சிங்கள தேசம் குண்டுகள் ஏவியெம்மைக் குதறியது. உலக நாடுகளின் தாராள மனசு அள்ளிக் கொடுத்த ஆயுதத்தை முள்ளிவாய்க்கால் நிலம் மீது சொல்லியழித்தார் தமிழினத்தை சிங்களதேசக் கொலைஞர்கள். சிதறிய சதைத்துண்டுகளுள் சிக்கிக் கிடந்த அடையாள அட்டை அது அப்பாவை அடையாளம் காட்டியது. ஐயோவென்று கதறிய அம்மா கையிலிருந்த அடையாள அட்டையோடு – அவள் கையும் பறந்தது. அருகிருந்த தங்கையோ அனுங்கியனுங்கிக் குனிந்து கொண்டே அவள் கிழிந்த வயிற்றுக்குள் குடலை அனுப்பினாள். நான்கு நிமிடத் துளிகள் கடந்து நான் கண்டேன் பேரவலம் அம்மாவும் தங்கையும் சதைத்துண்டங்களாய் ந…
-
- 0 replies
- 584 views
-
-
-
அலை கடலாய் ஆர்பரிக்கும் அப்பப்போ அமைதி கொள்ளும் எட்டாத எல்லையெல்லாம் எப்படியோ கடந்துவிடும் ஏட்டிக்குப் போட்டியாக எதுவும் செய்துவிடும் ஏக்கம் கொண்டு பின்னர் எதை எதையோ எண்ணிவிடும் மார்க்கம் கண்டபின்னர் மட்டிலா மகிழ்ச்சி கொள்ளும் முந்தை வினைப்பயனை முழுதுமாய் நம்பிவிடும் அன்பு கொண்டு ஆட்படும் அகந்தை கொன்று அகப்படும் சிந்தை நிறைந்து சிரிக்கவைக்கும் செம்மை கொண்டு சிலிர்க்கும் சொந்தங்கள் தேடி சொர்கங்கள் கூட சந்தங்களாகி சத்தங்கள் ஓய நித்தமும் ஓய்வின்றி நித்தியக் கடனாகி நினைவின்றி ஓடும் மனம்
-
- 1 reply
- 583 views
-
-
தலைவனது துணையிவர்கள்… பெரும் வெடியோடு ஆரம்பம்.. பேரிடியாக ஆனதுவே-நெல்லியடி மில்லரடி பகைக்கு நெற்றியடி ஆனதங்கே…! கந்தக வண்டி நிரப்பி-மில்லர் காற்றோடு கலந்த சேதி வீச்சோடு பாய்ந்துவர-சிங்களம் தோற்றோடிப் போனதங்கே…! எம் தலைவன் தொடக்கிவைத்த கந்தகவெடியதுவே.. கயவன் களம் பலவும் வென்றுதர பாதையொன்றுபுதிதாய் பிறப்பெடுத்ததன்று.. மில்லர் தடம் தொடர்ந்த பலவீரர் கதையுண்டு போர்க்கண்ணாவெடிசுமந்து புலிக்கொடிநாட்டினான் மாங்குளத்தில் அன்று தலைமன்னார் சிலாபத்தில் டாம்போவெடியாகி வெற்றியைஎமதாக்க பலநூறுவீரர்கள் படைமுகாம்கள் தகர்த்தெறிந்தார்… தரைதாண்டிகடலேறி காந்தரூபன் கொலின்சுடன் வினோத்தும் இணைந்துகொள்ள அலைமீதுவெடியதிர்வு எதிரிபடகோடு தகர்த்தெறிந்தார்…. அலையடித்துஓயவில்லை அங்கயற்கன்னிஅனலாகி அதி…
-
- 3 replies
- 582 views
-
-
வானம் வைகறை ஏறும் என்றவன் காணும் போதினில் சாகும் என்சனம், ஏறும் கிபிர்கூட ஏகும் குண்டினால் வேகும் உடல்கூட வெந்தணலாடும் வேளையில் என்மனம் வேகும் போதிலே சாகும் போதிலும் காக்க எமனா வருவான் இனி நாமே போகும் இடம் தேடி நாடும் போதினில் கிடைத்திடும் தனித்தமிழீழம் www.nilavan.tk
-
- 0 replies
- 582 views
-
-
[size=4] [/size] [size=6][size=5] மலமும் உமிழ்நீரும் கூட அழகாய் தெரிகிறது மகிந்தா உன் மானங்கெட்ட முகத்தை காணும் போது[/size][/size] [size=5][size=6] [/size] பக்கத்துக்கு பேய்களும் சீனத்து நாய்களும் வக்கத்த உனக்கு வலுவேத்த இல்லை எனில் திக்கத்து போயிருப்பாய் திறனி இன்றி வாடி இருப்பாய் தமிழனின் வீரத்தில் தறிகெட்டு ஓடி இருப்பாய் தன்மானமற்றவனாய் மண் மூடி போயிருப்பாய் ஆண்மையை வித்து நீ ஆயுதம் வாங்கினாய் எங்கள் ஆண்மகன் நினைவிலே தினம் அச்சத்தில் தூங்கினாய் இருளிலே விளக்கேற்றி இல்லத்தை மெருகேற்றி தெருவிலே கோலமிட அவளை சுற்றி தேனிக்கள் ரீங்காரமிட சிரிப்பிலே குழந்தையாய் சிந்தையி…
-
- 1 reply
- 581 views
-
-
பாவேந்தரின் 131 பிறந்தநாள் இன்று 60 Views பாவேந்தரின் 131 பிறந்தநாள் இன்று ************** கம்பீர தோற்றம், கர்வமில்லா போர்குணம், எழுத்தின் வீச்சு, எரிமலையாய் வெடிக்கும், பகுத்தறிவு பாதையில் சாதிகளை நொறுக்கும், பெண்ணடிமை வேரறுத்து பேரருமையின் உச்சம், பேச்சில் இடி முழக்கம், சமத்துவ பாதையில் கர்ஜித்தக் குரல், விதவை மனம் ஏற்பு, மனுதர்ம கழுத்தறுப்பு, ஏற்றத்தாழ்வு இடிப்பு, சமத்துவமே இவரின் உயிர்த்துடிப்பு, அடிமை விலங்கை உடைத்தெரிந்த ஆயுத நெருப்பு, ஆரியத்தின் தோலை உரித்த …
-
- 0 replies
- 581 views
-
-
யுத்தக்கல் சுமக்கும் சிறுவன் தீபச்செல்வன் ஒற்றைக்காலுடன் இழுத்துச் செல்லும் சிறுவனுக்காய் திறக்கப்பட்டிருக்கிறது குண்டுகள் கொட்டப்பட்டு குழிகள் வீழ்ந்த நகரம் செல்துளைத்த ஓட்டைக்குள்ளால் பள்ளியிலிருந்து பார்த்த பொழுது அழிவில் முழுநகரும் தோய்ந்திருந்தது வலிக்காத கால்களுடன் நகரத்தில் திரிகையில் ஒரு கையில் அம்மாவும் மறுகையில் அப்பாவும் இருந்தனர் யாருமற்ற நகரில் ஊன்றுகோல்களை அவன் பிடித்திருந்தான் கால்களற்ற சிறுவர்கள் தவழ்ந்தலையும் கனவு நகரில் விளையாடும் குழந்தைகளில்லை குழந்தைகளின் பூங்காவில் யுத்தக் கல் நிறுத்தப்பட்டிருந்தது கால்கள் முதல் எல்லாவற்றையும் இழந்த குழந்தைகளுக்கு தோல்வியை நினைவுப…
-
- 2 replies
- 581 views
-
-
விளக்கெரியும் பொழுது எப்பாடலுமற்று யாரும் வாய்திறக்கா நள்ளிரவுகளின் காலத்தில் இருண்ட தேசத்தில் ... சூரியனுக்காய் காத்திருக்க சிதை மண்ணிலிருந்து கற்கள் முளைக்க கைகளால் மூட முடியாத மழை இடியோடு பெய்கிறது. வீழும் பொழுது அழுது மீளும் பொழுது தொழுது கனவுகள் முட்டும் கல்லறைகள் பெருகிய தேசத்தில் தாய்மார்களின் அடி வயிறுகளில் கார்த்திகைப் பூக்கள் மலர்கின்றன. வீட்டு மூலையில் விளக்கெரியும் கார்த்திகை மாலைப் பொழுதில் விளக்குகளை தூக்கி வந்து மழையில் நீர் சொட்டும் தென்னங் கீற்றுக்களில் ஒளிரும் உங்கள் முகங்கள் கண்போம். மூட முடியா மழை கொல்ல முடியா மரங்களில் பெய்ய அழியா முகங்கள் மனங்களில் தெரியும் அணைக்க முடியா விளக்குகள் தேசத்தை ந…
-
- 2 replies
- 581 views
-
-
ஆக்கிரமிப்பு நிலங்கள் .... மீளளிப்பு செய்யப்படுகின்றன .... ஆவலுடன் சென்ற மக்களின் ... திகைப்பும் திண்டாட்டமும் ..!!! எது என் குடியிருப்பு ...? எது எங்கள் சுடுகாடு ...?
-
- 1 reply
- 581 views
-
-
[size=4]உன் நினைவுகள் வரும் போது அழத்தான் நினைக்கிறேன் முடியவில்லை அதை கவிதைகளாக எழுதுகிறேன்...[/size]
-
- 2 replies
- 581 views
-
-
CMR கலைச் சங்கமம் நிகழ்ச்சியில் நாடகக் கலைஞர்/கவிஞர் ஒளவை விக்னேஸ்வரன்
-
- 0 replies
- 581 views
-
-
உன்னைப் பற்றி எழுதியே கவிதையாகி விடுகிறது என் கிறுக்கல்கள் ஒவ்வொன்றும் * என் முதல் கவியை நினைக்கும்போதெல்லாம் நான் மறப்பதில்லை உன் முதல் முத்ததை * என்னை கிறுக்கனாக்கிக் கொண்டிருக்கிறது உன்னை பார்த்த என் கவிதைகள் * நீ மிக அழகானவள் என்பதற்கு உன் மேல் பொறாமைப்படும் என் கிறுக்கல் ஒன்று போதாதா * எனக்கான உன்னை எப்படியாவது மிஞ்ச வேண்டும் என்பதே என் கவியின் தவம் -யாழ்_அகத்தியன்
-
- 0 replies
- 580 views
-
-
ஒருவன்.... இருளுக்கு நடுவில் எப்படி உன்னால் சிரிக்க முடிகிறது? இன்னொருவன்.... உன் வாழ்வின் ஒவ்வொரு சொட்டும் வசீகரம் மிக்கது. மற்றொருவன்.... இன்றும் போல என்றும் இருந்தால் எப்படி இருக்கும்? நான்.... ஆற்று வெள்ளம் அள்ளிப்போகும் கிளிஞ்சல் வாழ்வு. வாழ்வின் கோப்பையை நிறைப்பது இரவு. இரவின் கோப்பையை நிறைப்பது நிலவு. ஆனால் அதிகாலை வேளைகளில் நீ புற்களில் அழுதுவிட்டுப்போவதை நான் மட்டுமே அறிகின்றேன். என்னிரு விழிகள் போதவில்லை உன்னுடன் சேர்ந்து அழுவதற்கு நான் கவிஞன் என்பதால் என்னிடம் வர்ணம் பூசாத வார்த்தைகள் கூட இல்லை. நீ ஏன் அழுகின்றாய் என்பதை இந்த உலகிற்கு சொல்லிப்போவதற்கு.
-
- 0 replies
- 580 views
-
-
-
வெறிச் சிங்களத்தின் கண்டிச் சிறையகம் வீழ்ந்த என் உடன்பிறப்புக்காள்! தெறிக்கும் விழிக்கனல் பறக்கும் புலிகளே! தெய்வம் உண்டு நம்புங்கள்! பொறிச்சிறை நம்மை என்செயும் பார்ப்போம்! போர்க்களம் எமக்கென்ன புதிதோ? குறிக்கோள் இனியது கொண்டோம் தம்பிகாள்! கூத்தாடுவோம்! இது பொன்னாள்! எந்தமிழ் ஈழம் ஒளிபெற நாங்கள் இருட்சிறை ஆடுதல் இன்பம்! வெந்தழல் ஆடி விழிமழை தோய்ந்து வெல்லுதல் விடுதலை கண்டீர்! சிந்துக முறுவல்! மெய்சிலிர்த் திருங்கள்! செந்தமிழ் மூச்சென்ன சிறிதோ? வந்தெதிர் கொள்ளும் துயரெலாம் ஏற்போம்! வைர நெஞ்சங்களோ வாழி! ஆழமா கடலின் அலைகளே இருங்கள்! அறம் காத்தல் நம்கடன் அன்றோ? கோழைகள் அல்லோம்! கொடுஞ்சிறைக் கோட்டம் குளிர்மலர்த் தோட்டம் என்றார்ப்போம்! ஈழ…
-
- 0 replies
- 580 views
-