Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. போர் கண்டு பொலிவிழந்த தேசம் எமது பேரல்லல் கொண்டு இன்றும் இருக்கிறது பெருமைகள் சொல்லி ஆற்றிட முடியா பேரவலம் கண்டேதான் பேசாது நிற்கிறது எத்தனை ஆண்டுகள் எம் காலில் நின்றோம் நாம் அத்தனையும் அழிந்து ஆவியாகிப் போனது கொத்தளங்கள் சுமந்து கொடிகட்டி ஆண்டவர் நாம் கேடுகள் சுமந்து கேட்பாரற்றுக் கிடக்கின்றோம் வீதிகள் எங்கும் விளக்கொடிந்து வழக்கொழிந்து வீடுகள் எங்கணும் விலையற்ற மனிதராய் கூடைகள் நிறைக்கும் குப்பைகளாய் நாங்கள் கூடுகளின்றிக் கூனர்களாய்க் கிடக்கின்றோம் பண்பாடு காத்து பார் புகழ வாழ்ந்தவர் நாம் பட்டினிகொண்டு பரிதவித்து நிற்கின்றோம் மானமிழக்கா மாண்பு மிக்கவர் நாம் மாசுபட மடையரிடம் மண்டியிட்டு நிற்கின்றோம் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து மூத்தகுடி காலூன்ற நிலை…

  2. தமிழீழத்தை காதல் செய்து ஈகத்தால் உயர்ந்துவிட்ட ஈகியரை வணங்குதற்காய் வருகின்ற நாட்களிலே அவர் விட்டுச் சென்ற கடமைக்காய் நாமெல்லாம் கரம்கோர்த்து ஒன்றானால் தமிழீழ மண் விடியும் தரணியெங்கும் கொடி பறக்கும் தமிழினத்தின் தலை நிமிரும் தமிழரது தாகமென்ற தாயகத்தைக் காத்து நின்ற தாயகத்து நாயகரை வணக்குமிந்தக் காலத்திலே ஓரணியாய் ஒன்றிணைந்தே வாருங்கள் அணி அணியாய் ஓடிடுவான் எதிரியவன் ஒன்றிணைந்தே சேருங்கள்!

    • 0 replies
    • 568 views
  3. சனங்கள் புத்தகங்களைப் போட்டு விட்டு ஓடித் தப்புகிறார்கள். எங்கும் தீவிரமாய் பரவுகிறது இலக்கிய வித்துவக் காய்ச்சல்கள். மாறி மாறி முட்டுப்படுகின்றன எழுத்தாளர்களின் கொம்பு முளைத்த பேனாக்கள். மேடைக்கு அலையும் வசனங்களோடு இடம் தேடித் திரிகின்றன வசைபாட ஆசைப்படும் வாய்கள். அதிகார ஆசனங்களின் கால்களைத் தடவத் தொடங்குகின்றன விருதுக்காய் உழைக்கத் தொடங்கியிருக்கும் விரல்கள். பார்த்துக் கொண்டிருக்க கண்முன்னே வாடிக் கொண்டிருக்கிறது எழுதப்படாத வரலாற்றுப் பூ. தீபிகா தீப .பேஸ்புக் .

  4. Started by தமிழரசு,

    தொடாமல் பேசுவது காதலுக்கு நல்லது. தொட்டுப் பேசுவதுதான் நட்புக்கு நல்லது. தொடுதலின் வழியே கசியும் அர்த்தங்களை எந்த மொழி பேசிவிடும் அறிவுமதி. தமிழ் கூடல்.

  5. பசியாறல் அரிசி நன்றாக பூத்திருந்தது முன் விரிக்கப்பட்ட இலையில் பக்கத்தில் துணையாக காய்கறிகள் கரண்டியின் அளவைக் காட்டிச் சிரித்தது அரைத்தும் நிறம் மாறா பருப்புகள் நிறைந்த பிளாஷ்டிக்குள்ளிருந்து நீர் விளாவி உண்ணச் செல்ல மணம் ஈர்த்தது மதுவாகினி மழையாய் நைய் பொழிந்தாள் பசியடங்குதல் பரிமாறப்படும் பதார்த்தங்களால் மட்டுமல்ல… ந . பெரியசாமி பண்புடன் இணயதிற்காக http://new.panbudan.com/archives/11

  6. ஏமாற்றி அணிவிக்கப்பட்ட சங்கிலியுடன் வறட்டு ஓலமிடும் நாய் எப்போதேனும் எலும்புத்துண்டுகள் அவ்வப்போது மிச்ச சோறும்... சில அடிகளும் ஏமாந்த வெறியுடன் பகைத்துக் குரைக்கும் நாய் சுதந்திரமாய் விடப்படும் சில நாழிகையில் மூளைச்சலவையில் எஜமானனுக்கு வாலாட்டியபடி அவனது பின்புறம் பம்மிப் பதுங்கும் சங்கிலி மாட்டிய த்ருணத்தில் இழந்த சுதந்திரமெண்ணி வெற்றாய் முனகும் மீண்டும் அடுத்த எலும்புத்துண்டுக்காய்க் காத்திருக்கும் வாலாட்டி. * தி. பரமேசுவரி

  7. வெள்ளைப் புறாவுடன் வந்து... "சமாதானம்" வந்துவிட்டது என்றார்கள்!? சிவப்புப் பறவைகளாய்... சிதறிப் போயின அவை! அதன்பின்புதான் பார்த்தோம்... நம் மண்ணில், புறாக்களும் பிணந்தின்னும் என்று!

  8. Started by Kavian,

    நிதம் என் விழிகள் உன்னருகே விழுகிறதே, திசை தெரியா என் மனது உனக்காக ஏங்குகிறதே, சொற்களால் வரைய இது வாழ்க்கைக் குறிப்பா வார்த்தைகளால் வளைக்க இது வீரத் தழும்புகளா வானத்திற்கு வளையல் போடும் செயல், எளிதல்ல ஆனாலும் எண்ணம் ஏற்றமுடையது சிந்தித்து அடைகாக்க இது அவையுமல்ல, கைகள் பேச நிதம் பதில்கூறவேண்டும்.... திங்கள் மடிந்து ஞாயிறு மலராது, உன்னை பிரிந்து நானும் வாழமுடியாது.... கற்பது காதலாயினும் கற்பிப்பது என் தேவதையே.... அடிப்பது எதிர் நீச்சலாயினும் நீந்துவது அவள் மனதிலே.

  9. கண்கள் பார்த்தால் காதல் வரும் கண்கள் பார்க்காமலும் காதல் வரும் காலத்தின் கோலம் கணணிக் காலம் இனிக்கும் மணக்கும் இதமாய் இருக்கும் இதுவல்லவோ உலகமென்று இவ்வுலகமும் மறக்கும் தடைபோட்டு தடைபோட்டு தாய் தந்தை தடுத்தாலும் முளைவிட்டு கிளைவிட்டு காதல் பூ பூக்கும் சுற்றமெல்லாம் குற்றம் சொல்வார் குறை சொல்வார் குறையெல்லாம் கறையாய் துடைத்து காறி உமிழ்ந்துவிட்டு முத்தம் இடும்போது கிடைக்கும் சுகம்பெரிதா இட்ட முத்தத்தை நினைக்கும் சுகம்பெரிதா காத்திருப்பது சுகமா காக்க வைப்பது சுகமா பேசிகொண்டிருப்பது சுகமா பேசியதை அசை போட்டு பொறும் இன்பம் சுகமா தொடமுடியுமா என தவிப்பது சுகமா தொடதொட சுகமா பாதி இரவில் பட்டிமன்றம் பாவ…

    • 2 replies
    • 564 views
  10. சர்வதேச மனித உரிமைகள் தினம் -விடையதைச் சொல்லு…! 76 Views விடையதைச் சொல்லு…! ********** சர்வதேசம் சொல்லுது இன்று மனித உரிமைகள் நாளாம் எமக்கு…அட இல்லாத ஒன்றை இருக்கெனச் சொல்ல இந்த நாளும் இருக்குது இப்போ… மனிதரின் உரிமை என்ன என்று எழுதி வைச்சவர் ஆரப்பா சொல்லு…? விடுதலைப் போரில் செத்தவர் யாரு…? நினைச்சுப் பார்க்க உரிமை இருக்கா….? கைதியாய் பிடிச்ச உறவுகள் எங்கே…? அவர்களின் நிலையதை அறிய உரிமை இருக்கா….? புனர்வாழ்வு பெற்ற எம்மவர் எல்லாம் நல்வாழ்வு வாழ உரிமை இருக்கா…? ஈழ மண்ணில் வாழும் எங்கள் இனத்துக்கு என்ன அடிப்படை …

  11. தூக்கத்தில் நடப்பவை தூக்கத்தில் கனவுகள் நிகழ்கின்றன கனவுகள் பெரும்பாலும் நினைவிலிருப்பதில்லை தூங்குவதுபோல் கனவு கண்டு விழிப்பவர்களுக்கு தூக்கமே கனவாகப் போய்விடுகிறது தூக்கத்தில் மரணங்கள் நிகழ்கின்றன தூக்கத்தில் சாவது நல்ல சாவென்று செத்தவனைத் தவிர்த்து எல்லோரும் சொல்லுவார்கள் தூக்கத்தில் விபத்துகள் நிகழ்கின்றன இறந்து போன பயணிகளும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்ததாக யூகங்களினடிப்படையில் ஊடகங்கள் தெரிவிக்கின்றன சாவதற்கு சற்றுமுன் அவர்கள் விழித்திருப்பதற்கு சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளன. தூக்கத்தில் நிகழ்கின்ற விபத்துகளில் பெண்களின் தூக்கத்தில் அதிகார்ப்பூர்வ கணவர்களால் நிகழ்த்தப்படும் விபத்துகள் சேர்க்கப்படக் கூடாதென உச்ச நீதிமன்றமே தீர்ப்ப…

  12. தியாகத்தின் திரு விளக்குகளே தமிழீழத்தின் குல விளக்குகளே நியாய தேவைதையின் நீதியரசர்களே நீர் எமக்காய் மரணித்த முத்துக்களே தாயின் கை விலங் குடைக்கத் தானைத் தலைவ னொடிணைந்தவரே வாழும் வரை நாமுமை நினைந்து உம் கனவு பலித்திட கருமம் செய்வோம் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

  13. காணாமல் போனதாகவே முடிவு கட்டிவிட்டார்கள் காணவில்லையென்று விளம்பரமும் கொடுத்து விட்டார்கள் (காணாமல் போக அவனென்ன ஆடா மாடா பாலுசார்) சூழல் சரியில்லையெனக் கொஞ்ச காலம் சும்மா இருந்தான் நிலவரம் மோசமென நிரம்பக் காலம் ஒதுங்கிப் போயிருந்தான் சந்தை இரைச்சல் ஓயட்டுமென்று சம்மதமின்றித்தான் அஞ்ஞாதவாசம் மேற்கொண்டிருந்தான் அதற்காக ஓய்ந்து விட்டானென்று அர்த்தமில்லை சரிந்து விட்டானென்று கருதி விட முடியாது அருகிப் போனாலும் காணமற்போவதில்லை புலிகள். விக்ரமாதித்யன் நம்பி (via fb) ‘குமுதம் - தீராநதி’ 2012 மார்ச்

  14. முகநூலிலிருந்து...

  15. பெரியதொரு குங்குமச் சிமிழும் சிறியதொரு சாம்பல் பொட்டலமும் போதுமானது... எம் இனத்தை அழிக்க! புரியாத மந்திரமும், அறியாத சடங்குகளும் போதுமானது... எம் சனத்தை கவிழ்க்க!! பால், பழம், தேன், வெண்ணை, சக்கரையென சகலத்தையும் புனிதக் குளியலுக்கு விரையமாக்கும் இடத்தை திருத்தலம் என்கிறார்கள்... திருந்தாத சென்மங்கள்!! பால் வடியும் முகங்கள், பாசத்திற்காக ஏங்கும்போது... "பாவம்" என்று ஒதுங்கி நின்று, பத்து காசை மட்டும் பாத்திரத்தில் போட்டுவிட்டு பாவம் கழிந்ததென பாரினில் பிதற்றிக்கொள்ளும் பாழாய்ப்போன நெஞ்சங்கள்!! வேண்டுதல் எனும் பெயரில்.. வேண்டாத அணுகல்கள்! கூரான ஆயுதத்தால் குருதியின் குவியல்களங்கே.. தானம் செய்ய வேண்டும்போது வானம் அளவிற் வாய்ப்பிளக்கும் பிறவிகள்! தேவையில்லா இடத்தில் விர…

  16. பட்டு தெளியாத பாதையில் .. பாடையை கட்டிவைத்து .. இதில் வந்து படுங்கள் என்று .. நான் மட்டும் கூவி அழைக்கையில் .. தெட்ட தெளிவா தெரிந்த பின்னும் .. சீவன் போன ஜீவன் கூட வராது .. ஆவிகளை மீண்டும் போருக்கு அழைக்கும் .. ஆற்றல் மிகு விசுவாசங்கள் ஒருநாளும் .. போரறியாது அதன் வலி அறியாது .. காவி காவி சென்று மாறி மாறி .. புற்றுகள் மேல் கொட்டில் போடும் .. தவளைகள் நிலையறியாது .. பாம்புகளிடம் இருந்து உமக்கு விடுதலை .. வாங்கலாம் அதுவரை அதிலே படும் .. உறக்கம் இன்றி அவர்கள் விழித்திருக்க .. நாம் உண்டுவிட்டு ஏப்பம் விடும் சத்தம் .. பாம்புகள் சீறும் சத்தமாவே காதுகளில் கேட்கும் .. ஒவ்வெரு நாளும் மேட்டில் இருந்து .. நொந்து சாவதை விட தண்ணியில் .. ஊறி திளைக்கலாம் என்று நினைக்கிற…

  17. 1. எதிர் திசைப் பயணி ஒரு பாதாளத்தின் மேடையில் பிரிந்தவள் சொர்க்கத்தில் சந்திக்கலாம் எனக் கூறிச் சென்றாள். என் பயணப் பையும், கால்களும் நினைவின் பள்ளத்தாக்கில் கீழ் நோக்கி இழுத்துச் செல்லுகின்றன ஒவ்வொரு பறவைக்கும் தெரிகின்றது மாலையில் அதனதன் கூடு அவற்றின் மரக் கிளைகள்... சாபத்தின் சின்னமாய் நின்றபடியே துயிலும் குதிரையாக்கி நடுக்காட்டில் விட்டுச் சென்றிருந்தாள் ஆளுயரப் புல்வெளியில் என் வகிடு எதுவென்று தேடுகின்றேன்... எந்தப் படகும் தென்படாத இரவின் நதியைக் கடக்கு முன் நிற்க ஓர் இடம்.. வெறித்துப் பார்த்தபடி படுத்திருக்க ஒரு கூரை ஏதுமின்றி இருக்கிறேன்... மழைத் தூறலும் குளிர் காற்றும் ஏந்தி வரும் ஒரு தேவாலயத்தின் மணியோசை... அங்கே ஒளி நடனம் புரியும…

  18. நாளைய உதயம் அதிகாலை வேளை அதன் கண்கள் இந்தக் குளிர்காற்றில் அழகாய் தெரிந்தன ஆழகிய வண்ணமாய் சிவப்பு,கறுப்பு,மஞ்சள் இயல்பாய் வந்து பதுங்கு குழியில் அரை குறை தூக்கத்தில் விழித்து இருக்கும் என் தாய்த்து வைக்கப்பட்ட துப்பாக்கி முனையில் அமர்ந்து சிறகசைத்து……………… அதன் வண்ணம் கொள்ளை அழகு என்னை என் குழந்தை பருவத்தையும் என் குடும்பத்தையும் கண்முன்னே கொண்டுவந்தது இன்னும் சூரியன் சுட்டெரிக்கவில்லை காய்ந்து போன புளுதி பூமியில் இன்னும் பனிச்சிவலைகள்;……………. நேற்றைய சண்டையில் என் தோழன் ஒருவன் வயிற்று காயத்துடன் கள மருத்துவமனையில் இன்னும் அந்த இரத்தம் புளுதியை கல்லாக்கி இருந்தது எங்களின் மனதை போல……………… தூரத்தே ஒரு முழக்கம்-நான் தளர்த்த…

  19. உச்சந்தலையைச் சுற்றி 'ஒளிவட்டம்' தோன்றும்... உலகமே உன்னை வெறித்துப் பார்க்கும்... ராத்திரியின் நீளம் குறையும்... அதிகாலையின் கொடூரம் புரியும்.. உனக்கும் சமைக்க வரும்... சமையலறை உனதாகும்.. ஷாட்ஸ் பனியன் அழுக்காகும்.. பழைய சாம்பார் கூட அமிர்தமாகும்.. ஃபிரிட்ஜ் ,வாசிங் மெசின், கிரைண்டர், மிக்சி கண்டுபிடித்தவன் தெய்வமாவான். கையிரண்டும் வலிகொள்ளும்... கண்ணிரண்டும் பீதி கொள்ளும்... கல்யாணம் பண்ணிப்பார்... தினமும் துணி துவைப்பாய்... மூன்று வேளை பாத்திரம் துலக்குவாய்.. . காத்திருந்தால். ...'வரட்டும்... இன்னிக்கி வச்சிருக்கேன்' என்பாய்... வந்துவிட்டால்.... 'வந்திட்டியா செல்லம் போலாமா' என்பாய்.... வீட்டு வேலைக்காரி கூட உன்னை மதிக்காது - ஆனால் வீடே …

    • 0 replies
    • 562 views
  20. தியாக தீபம் அன்னை பூபதி – மாரீசன் 80 Views இன்று தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 33ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இக்கவிதை பிரசுரமாகின்றது. சிங்களப் படைகள் கொடுமைகள் கண்டனள் அங்கம் நெகிழ்ந்திட வெகுண்டு எழுந்தனள் எங்கும் எழும்பிய அவலக் குரல்களால் பொங்கியெழுந்திடும் எரிமலையாகினள் அகிம்சை வழியைக் காட்டிய பாரதம் அனுப்பிய படைகள் இம்சைகள் கண்டனள் புலிகளைத் தேடி அழித்திட அலைந்ததை வாலிபர், இளைஞரைக் கொன்று குவித்ததை கண்டனள், அன்னையின் விழிகள் சொரிந்தன இதயம் குமுறிட எரிமலை வெடித்தது சிலையெனப் பிள்ளையார் முன்றலில் அமர்ந்தனள் முந்…

  21. தேனீர் கவிதைகள்: தொலைந்து போன நாட்கள் ஓவியம்: வெங்கி எப்படி இழந்தோம் என்பது தெரியாமலேயே தொலைந்து போய்விட்டன அந்த இனிய நாட்கள். கணக்கன் தோட்டத்து உப்புநீரில் குளித்தால் மேனி கருக்குமென்ற அம்மாவின் அதட்டலுக்கு அஞ்சி வியாபாரி தோட்டத்து நன்னீர் கிணறு அதிர குதித்தாடிய ஈர நாட்கள்... ஓடைநீர் ஊற்றில் சிக்கிய உறுமீனுக்காய்த் துள்ளி விலாங்கு மீன் வேட்டைக்காரனாய்ப் பீற்றிக்கொண்ட நாட்கள்... கவட்டைக் கொம்பொடிய நுங்கு மட்டை வண்டியு…

  22. வரலாற்றின் மகள் - கவிஞர் தீபச்செல்வன் தந்தையே.! வரலாறு முழுவதும் இப்படித்தான் இருந்ததா ? நாங்கள் எப்போதும் அடிமையாகவே இருந்தோமா ? என் சிறு குழந்தையே.! நீ ஆக்கிரமிப்பாளர்களையும் அறிவாய் .. பாதுகாவலர்களையும் அறிவாய்.. நம்முடைய மூதாதையர் தம்மைத் தாமே ஆண்டனர்.. எம் நிலத்தின் அரசுகளை அந்நியர்கள் விழுங்கிக் கொண்டனர்.. தந்தையே! போர்த்துக்கீசர்கள் போய்விட்டனர்.. ஒல்லாந்தர்கள் வெளியேறிவிட்டனர்.. பிரித்தானியர்களும் புறப்பட்டு விட்டனர்.. ஆனாலும் இன்னும் ஏன் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறோம் ? அவர்கள் வெளியேற இவர்கள் ஆக்கிரமித்துக்கொண்டனர்.. அவர்கள் திருப்பித் தந்ததை பின்னர் இவர்கள் பறித்துக்கொண்டனர்.. இவர்களின் விடுதலை…

  23. Started by SUNDHAL,

    இருப்பதற்கான ஆதாரம் இல்லை என்பதால் வரமாட்டார் என்கிறார்கள் இல்லை என்பதற்கான ஆதாரம் இல்லை என்பதால் வருவார் என்கிறோம் எதுவானாலும் சரி அந்த வார்த்தையை சொனால் தான் எம்மினத்திற்கு உயிரோட்டமும் எதிர் இனத்திற்கு வயிரோட்டமும் ஏற்ப்ப்படுமானால் உரக்க சொல்வோம் வருவார் Fb

  24. Started by pakee,

    [size=4]மனிதா நான் யாரு நீ யாரு சொந்த ஊர் ஏது அத எல்லாம் தூக்கி போடு பண்போடு நல்ல அன்போடு நீ முன்னேறு நீதான் ஸ்டார் வாழ்க்கை ஒரு புதிர் போல எது எப்ப நடக்கும் தெரியாது கடவுள் தந்த அழகிய வாழ்க்கையில் நல்லது நடக்கும் நம்புங்கள் முயற்சி இல்லாமல் பலன் ஏது? குறைகளை சொல்வதினால் தடுமாற்றம் உனக்குள் ஒருவன் யார் அதை தேடு அதை நீ அறிந்தால் தான் வரலாறு போட்டி இல்லாமல் வெற்றி ஏது? பொறமை கொள்வதால்தான் தகறாரு நமக்கு தெரியாது பல உண்டு கற்றது கையளவு நீ என்னும் தேடு வா நண்பா மர்மமான வாழ்க்கையில் வாழ்த்துதான் பார்க்கலாம்...[/size]

    • 0 replies
    • 559 views
  25. சிட்டு 15ம் வருட நினைவுகளோடு ‘சிட்டு’ சிரிப்பு நிறைந்த மகிழ்ச்சியின் உறைவிடம் நீ. நீயழைந்த காற்றும் நீ நடந்த நிலமும் நினது நினைவுகள் நிறைந்து மௌனித்துக் கிடக்கிறது. கனவுகளோடும் கலையாத நினைவுகளோடும் நீ நிறைந்த இசையும் பாடல்களும் உயிர்ப்பின் இருப்பாய் ஈரமாய்…… இசை நிறையும் திசையெல்லாம் உன்னை ஏந்தியிருக்கிறது ஒலிக்கதிர்கள்….. தீயின் சுவடுகள் மீதேறிய உனது கால்களும் மூச்சும் 01.08.1997அன்று ஓய்வெடுத்து உறங்கிய நாள் கடந்து இன்றுன் நினைவுகள் 15ம் ஆண்டைத் தொட்டு நிற்கிறது. ஆற்ற முடியாச் சோகத்தை இந்த நூற்றாண்டு தந்துவிட்டுச் சலனமின்றி நகர்கிற இந்நாட்கள் பற்றிச் சொல்வதானால்…….???? நீயுறங்கிய நிலம் மீது பேயுலவித் திரிகிறது….. அம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.