Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஒரு வேளை எனக்கு முன்... என் மனைவி இறந்தால்... அவளுக்காக உலகிலையே ... கோயில் ஒன்றைக்கட்டுவேன் .... .இதுவே மனைவிக்கு கட்டிய .... மனைவி மஹாலாகஇருக்கும்... அந்த கோயிலை நான் தான்... நான் தான் அதன் அமைப்பை வடிவமைப்பேன்...! நான் தான் கல் உடைப்பேன் ... நான் தான் மண் சுமப்பேன் ... நான்தான் கட்டி முடிப்பேன்... நானே அழகு பார்ப்பேன்... அந்த கோவிலில் என்குடும்ப... உறுப்பினரை யாரையும் ... வணங்க விடமாட்டேன் ....!!! அவர்கள் கோவிலாக பார்ப்பார்கள் ... நான் கடவுளாக பார்க்கிறேன் ... !!!! என் மீதிக்காலத்தை அங்கேயே .. உண்ணா நோன்பிருந்து ...... இறந்து விடுவேன் ... !!! ^ மனைவிக்கு ஒரு கவிதை கவிப்புயல் இனியவன் அன்னையை ....நினைக…

  2. ஆடியமாவாசை… பிண்டமாய் போன அப்பாவுக்கு கண்ணீரில் எள்ளுத் தண்ணி இறைத்த என் இடம் நிரப்ப வருவான் ஒரு பாலன்…. அப்பா பெயர், நட்சத்திரம் மழலையாய் உதிரும் இந்த வயதில் இவனுக்கு ஆடியமாவாசை எந்தன் கண்ணீரும் உறையும் ‘தகப்பனைத் தின்னி’ பிள்ளையின் எள்ளுத் தண்ணீராய் கண்ணீரைத் தந்தபடி கூட இருந்த தாய் விளக்கம்... ‘அவர் காணாமல் போகையில் இவன் வயிற்றில்… தேடுறம் தேடுறமெண்டு… இனித் தேட ஏலாதெண்டு’ திண்டவனைக் காப்பாற்றும் ஆணைக் குழுக்கள் முடிவாக்கும் இன்னும் எத்தனை வருஷங்கள் இவன் நோன்பு… இவன் போல் இன்னும் எத்தனை எத்தனை தகப்பன் தின்னிகளோ!... ஆடி …

  3. பணத்துக்காக .... திருமணம் செய்தேன்.... என்னை விட பணத்தை .... வட்டிக்கு கொடுப்பவன்..... சந்தோசமாய் ..... இருக்கிறான் .....!!! திருமணத்தை ...... மணவாழ்கையாக ..... செய்யாமல் .... பணவாழ்கையாய் ....... செய்தால் வாழ்க்கையும் .... சந்தை பொருள்தான் ....!!! ^ நினைத்து பார்த்தால் வலிக்கிறது கவிப்புயல் இனியவன்

  4. கபாலிக்காக மண் சோறுண்ணும் மடையர்களை நினைந்து தமிழன்னை புலம்புகிறாள். புளிய மிலாறு வெட்டி புறமுதுகில் சாத்தியிந்தக் கழிசடைகள் ஓடுதற்கு மக்காள் - நல்ல காரியங்கள் செய்யீரோ மக்காள். குண்டாந்தடியெடுத்துக் குண்டியிலே போட்டு நன்றாய் பென்ட நிமிர்த்த வேணும் மக்காள் - இந்த பேயர் திருந்துதற்கு மக்காள் ஆத்திர மெல்லாம் சேர்த்து அழகான கேட்டி வெட்டி சூ—தில் கொடுத்தாற்தான் மக்காள் – இந்த சோமாறிகள் விழிப்பார் மக்காள் கொட்டன் எடுத்ததிலே குத்தும் சிராய் செதுக்கி விட்டால் முதுகினிலே மக்காள் – இந்த வீணர் திருந்திடுவார் மக்காள் தக்கார் இலாதென்றன் தாழ்வுகளைப் போக்குதற்கு மிக்க மனங்கவன்றேன் மக்காள் – நான் மீள்வதினியெக்காலம் மக்காள்.

    • 1 reply
    • 2.6k views
  5. பச்சை பசுமை தனைக் காணுகையில் - என் தாய்நாட்டு நினைவு வந்து தாலாட்டிச் செல்லுதம்மா மாமர நிழலினிலே ஊஞ்சல் கட்டியாடி மனம் மகிழ்ந்த நாட்களெல்லாம் மனத்திரையில் வந்து மதி மயக்கி நிற்குதம்மா வேப்ப மர நிழலிலே பாய் விரித்துப் படுத்த நாட்கள் பசு மரத்து ஆணி போல பதிந்த நெஞ்சு விம்மி விம்மி அழுகுதம்மா பள்ளிப் பருவமதில் பகிடியாய் கடந்த நாட்கள் பாலர் வகுப்பினிலே பாட்டி வடை சுட்ட கதை படித்து பகுத்தறிய மறந்த நாட்கள் பக்கம் வந்து சீண்டுதம்மா புளியடிப் பள்ளியிலே புழுகத்தோடு பயின்ற நாட்கள் புட்டும் முட்டைப்பொரியலும் பிரட்டிக் குழைத்து தின்ற நாட்கள் புரையேறி நெஞ்சமெங்கும் புத்துணர்வாய் கிடக்குதம்மா அம்மன் கோவிலிலே அழகான வ…

    • 0 replies
    • 854 views
  6. வசந்தகாலம் ......... பச்சையம் விரிந்த புல்வெளியும் பல வா்ண அழகு மலா்களும் வீதியின் இருமருங்கும் வியாபித்திருக்க பள்ளி விடுமுறையில் மழலைகள் துள்ளி விளையாடும் பூங்காவை நோக்கி நான் என் பேரனுடன் நடைபயில இரண்டாவது படிக்கும் அவனது கையிலும் ஜ போன் வீதியில் ஓடிஓடி மூலைக்கு மூலை எதையோ தேடி அலைந்தான் அன்று தும்பி பொன்வண்டுதேடி மாட்டு வால் தடத்துடன் ஓடி விளையாடிய என் அண்ணன் தம்பிகளின் இளமைப் பருவம் நினைவில் ஊசலாட இவனென்ன தேடுகிறான் என்று எண்ணித் திகைத்து வீதியில் கவனமாக நடத்கும்படி எச்சாித்தபடி நான் அவன் சொன்னான் போக்கிமான் பிடிக்கிறானாம் காலமும் தேசமும் மாறினாலும் தேடல் ஒன்றுதான் என்று என் நினைவில் நிழலாட அவனைத்தவிர மூலைக்கு மூலை …

  7. மரத்திலிருந்து விழும் ... பழுத்த இலை சொன்னது ...!!! நான் எத்தனையோ முறை .. வானத்தை தோட முயற்சித்தேன் .. முடியவில்லை -என்றாலும் .. கலங்கவில்லை என் அடுத்த .. வாரிசு நிச்சயம் தொடும் ...!!! என் குழந்தை துளிர் .. நிச்சயம் எட்டுவான் ... தந்தை செய்து முடிக்காத .. நாற்காரியத்தை -மகன் நிறைவேற்றியே ..... ஆகவேண்டும் .....!!! & கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை

  8. எப்போது வாய் திறப்பாய் சம்பந்தா? [கீதன்][19 - 07 - 2016][சமூகம்] எல்லாம் அழிந்தும் இல்லாமல் போகாமல் இன்னும் இருக்கின்றோம் என்றெண்ணி பொல்லாதவன் நீயென பலபேர் பொங்கியபோதும் இல்லாத வீட்டில் இலுப்பைபூ சர்க்கரையாம் ஏதும் செய்யட்டும் சின்னன் எண்டாலும் ஏதோ செய்யட்டும் இப்பிடித்தான் ஏழு வருசங்கள் இல்லாமல் போனதடா? எல்லாம் வரும் எறும்பூர கற்குழியும் மின்னாமல் முழங்காமல் பம்மிக்கொண்டிருந்தா பாவப்பட்டு தருவாங்கள் வல்லரசையே வளைச்சுப்போட்ட எங்களுக்கு தமிழரசை மலரவைக்க தெரியாதோ? இப்பிடித்தானே அந்த எடுபட்டு போனவனும் சொல்லிவந்தான். கனநீளா அவனையும் காணலையே. அறுபது வருசமாக அரசியல் ச…

  9. 2009 மஏ 17,18ம் திகதிகள் மனசுடைந்து தொடர்ந்து சிந்தியும் சினந்தும் சிவந்த கண்களோடு 2009 மே மாத இறுதி ஜூன்மாத ஆரம்பங்களில் எழுதி முடித்த கவிதை. 1000 வருடங்களுக்குப் பிறகும் வாசிக்கப் படப்போகிற எனது கவிதைகளுள் இக்கவிதை முக்கியமானதாக இருக்கும். தோற்றுப் போனவர்களின் பாடல் - வ.ஐ.ச.ஜெயபாலன் * எல்லா திசைகளில் இருந்தும் எழுந்து அறைகிறது வெற்றி பெற்றவர்களின் பாடல். பாடலின் உச்சம் எச்சிலாய் எங்கள் முகத்தில் உமிழ் படுகிறபோதும் அவர்கள் அஞ்சவே செய்வார்கள். ஏனெனா? அவர்களிடம் தர்மத்தின் கவசம் இல்லையே.. எரிந்த மேச்சல் நிலத்தின் சாம்பரில் துளிர்க்கும் புற்களின் பாடலைப்போல தோற்றுப் போன எங்களுக்கும் பாடல்கள் உ…

    • 0 replies
    • 1.3k views
  10. இதயமாக இருப்பவளே ....... இதயத்துடிப்பு வலிக்கிறதா ...? துடிப்பையே நிறுத்துகிறேன் ....!!! ^ கவிப்புயல் இனியவன் ^ கல்லை செதுக்கினேன் உருவம் கண்ணால் செதுக்கினேன் காதல் இதயம் வலியால் துடிக்கிறது ....!!! ^ கவிப்புயல் இனியவன்

  11. நாங்கள் நடந்தது…….! நாங்கள் நடந்தது உங்கள் வாழ்வு தலைநிமிர தலைநிமிர்வுக்காகத் தலைதந்து களம் வீழ்ந்தோம் வீழ்ச்சியில் இருந்து மீண்டெழுந்து நிமிர்வதற்கே நிமிர்வதற்காய் நிமிருங்கள் நீதிக்காய் துணியுங்கள் துணிவுடைத்தோன் தலைவனவன் சொல்லியதை மறக்காதீர் மறக்காது மதிநுட்பம் தாங்கியோராய் மதிகொடெழுந்தலே எழுச்சியிலே பேரெழுச்சி காணுகின்ற நிலை தோன்றும் தோற்றத்தின் தொடராக மாற்றங்கள் நிகழ்ந்தேறும் ஏற்றமதை காண்பதற்கு எங்களுக்குள் எழுச்சிகொள்வோம் தன்னெழுச்சி கொள்ளாது மண்னெழுச்சி கொள்ளாது கொள்கையிலே உறுதிகொண்டோர் தோற்றதில்லை உலகினிலே …

    • 1 reply
    • 1.7k views
  12. தணல்ச்செடி, அலைமகன் - தீபச்செல்வனின் இரு கவிதைகள்:- 05 ஜூலை 2016 தணல்ச் செடி சமூத்திரத்தில் மண்டிய மையிருள் போல மறைந்திருந்த முகத்தில் அடுக்கியிருந்த இரகசியங்கள் சொல்லாத எண்ணற்ற கதைகள் கலந்தன தீயில் கருணைமிகு உன் புன்னகை கரைந்த கடலில் எழும் ஒரு பறவையின் சிறகுகளில் ஒழுகுகிறது தணல் நெருப்பை தின்று காற்றில் உறங்குகின்றனர் கரிய வீரர் கரு மேககங்கள் மண்ணில் கரைந்துருக வெடிக்கின்றன விதைகள் கந்தகம் சுமந்து வெடித்துருகிய இடத்தில் தளைத்தது தணல் மலர்களுடன் ஒரு செடி அனல் கமழுமுன் சமுத்திர மௌனத்தால் கோணிற்று உலகு இப் பூமி …

  13. என்னுடன் பேச .... துடிக்கும் இதயங்கள் .... ஆயிரம் ஆயிரம் .....!!! உன்னோடு மட்டும்... பேசத்துடிக்கும் என் .... மனசை ஒருமுறை .... நேசித்துப்பார் ....!!! என்னை விட உன்னை ... அப்படி நேசிக்க யாரும் .... இருக்கமாட்டார்கள் .... உனக்காக பலர் வாழலாம் .... நானோ ..... உனக்காகவே உயிர்..... வாழ்கிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன்

  14. நான் ஸ்ரீலங்கன் இல்லை ஒரு பறவையையும் விட்டுவைக்காத படுகொலையாளிகள் எமை அழைத்தனர் பயங்கரவாதிகளென ஆஷா,ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களை பயங்கரவாதிகள் என்றுதான் அழைப்பார்களா? வேற்றினம் என்பதனால்தானே நமது சந்ததிகள் அழிக்கப்படுகின்றனர் ஒரு கல்லறையையும் விட்டு வைக்காத அபகரிப்பாளர்கள் எமை அழைத்தனர் பிரிவினைவாதிகளென ஆஷா,அபகரிக்கப்பட்ட நாட்டிற்காய் போராடுபவர்களை பிரிவினைவாதிகள் என்றுதான்அழைப்பார்களா? வேற்று நாட்டவர்கள் என்பதினால்தானே நமது நாடு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது …

    • 0 replies
    • 1.9k views
  15. மலர் ஒன்று மலர்களுக்கு விளக்குப் பிடிக்கிறது.. காதலுக்கு காவலுக்கு அல்ல.. காவாலிகள் அவற்றை சிதைத்திடக் கூடாதின்னு. !!! (அப்பப்ப இங்கால சில கிறுக்கல்களோடு வந்து போவம்... நீங்களும் வந்து பார்த்து ரசிச்சுப் போங்க. ) வெண்ணிற மேகங்களுக்கு சிவப்பு வர்ணம் தீட்டும் மலர்கள்.. தமக்குள் பேசிக் கொள்வது தீட்டுன்னு இதை உலகம் வெறுக்கக் கூடாதுன்னு..! பெண்ணுக்குள் நிலவை புதைக்கும் உலகம் தன்னை முழுக்காட்ட நினைத்தது மறந்து நிலவு மூழ்கி எழுகிறது என்ன கொடுமை இதுன்னு...!

  16. இந்த வார ஆனந்தவிகடனில் (6.7.16) வெளியாகியுள்ள "சே குவேரா, இறுதியில் விடுதலையாகிறார்!" என்ற எனது கவிதையை யாழ் களத் தோழர்களுடன்பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.. யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! சே குவேரா இறுதியில் விடுதலையாகிறார்…! பொலிவியக் காடுகளில் மறைந்துவாழ்ந்த சே குவேரா இப்போதெல்லாம் சர்வசாதாரணமாக எம் மாநகரத்தில் தென்படுகிறார். மதுபானக் கடையிலிருந்து வெளியே வரும்போது வியர்வையில் நசநசத்துத் தள்ளாடியபடி வரும் அவர் “ஏய்… ரெட் டீ ஷர்ட் நாயே, சொல்லிட்டு வந்துட்டியா?” எனும் தன்னைக் குறித்த காரோட்டியின் வசவுகளை வழக்கமான புன்னகையுடன் கடந்துசெல்கிறார். பெட்டிக்கடையில் நின்று அவன் புகைக்கையில…

  17. சிறு பொறி - தீபச்செல்வன் மதிற் கரைகளில் குருதி கசியும் நாட்களில் திரும்ப முடியாமற் போகலாம் என எண்ணுபவனின் கால் தடம் மரணம் சைக்கிளின் பின்கறியலில் ஏறியமர்ந்த தெருக்களில் உள் உறிஞ்சிய பெருமூச்சு நெஞ்சறைகளுக்குள் எழுதியெழுதி தனை அழித்த நாட்களில் நிராகரிக்கப்பட்டவனின் முனகல் தன் தாய் மண்ணில் இறங்கி விளையாட அடம்பிடிக்கும் குழந்தை போலோரு கவிஞனின் குரல் அதிகாரத்தை எதிர்த்தமையால் கொலைப்பட்டியலில் இடப்பட்டவனின் இரகசிய முகம் மூ…

  18. அன்று ........!!! நீ பேசவரும் வார்த்தை சொல்லுகிறது நீ பேசாமல் இருக்கும் காரணத்தை ...!!! இன்று .....!!! நீ பேசாமல் இருக்கும் ... காரணத்தை -நீ பேசிய வார்த்தைகளே .... காரணம் .....!!! & காதல் நேற்றும் இன்றும் கவிப்புயல் இனியவன்

  19. நாடிழத்தல். நான் பயணப்பட முடிவெடுத்த போது காலத்தின் துயரத்திற் பழுத்த மனங்கள் முதுவேனிற்கால மரங்களிற் தொங்கிக் கொண்டிருந்தன. வாழ்வென்னும் சுடர் அவிந்து விழுமியங்களின் சுவடுகள் அழிந்த வெளியினூடு செல்லும் போது வழிகாட்டுவதற்கு ஆட்காட்டி போதுமென்று நினைத்தேன். நானொரு நாடோடியாகக் கூடுமென்றும் தூரங்களைக் கடக்கும் போது எழுத்தாணியிற் கவிதை சுரக்குமென்றும் நினைப்பவர்கள் என்னை மன்னியுங்கள். இருந்த நாட்குறிப்புக்களையும் எரித்துவிட்டே பயணிக்கிறேன். நான் வழிப்பறிக்கு அஞ்சியவன். காலம் நெடுகிலும் தனித்தழும் மரங்களை மூடிக் கிடக்கும் புழுதியை அள்ளிப்பூசிக் கொள்கிறேன். உருவழிய, உதிர்ந்த இலைகளைத் தழுவும் …

    • 1 reply
    • 851 views
  20. வைரமுத்துவின் உதவியாளர் ஆர். அபிலாஷ் - எனக்கு பன்னிரெண்டு வயதிருக்கும் போது நான் கவிதை வெறியனாக இருந்தேன். அக்கட்டத்தில் நான் கல்கி, அகிலன் போன்றோரின் தலையணை நாவல்கள் வாசித்திருந்தாலும் கவிதை மட்டுமே என்னை உன்மத்தம் கொள்ள செய்தது. துரதிஷ்டவசமாய் என் வீட்டில் அவ்வளவாய் கவிதை நூல்கள் இல்லை. ஊரில் நல்ல நூலகங்கள் இல்லை. ஒரே புத்தகக் கடை நாகர்கோயிலில் இருந்தது. என்னால் அவ்வளவு தூரம் பயணிக்க முடியாது. பள்ளி முடிந்த வந்த பின் கணிசமான நேரம் இருக்கும். தனியாக கையில் கிடைத்த ஏதாவது காகிதங்களை திரும்ப திரும்ப வாசித்தபடி இருப்பேன். என் பிறந்த நாள் ஒன்றுக்கு அக்கா எனக்கு பாரதியார் கவிதைகள் தொகுப்பு வாங்கித் தந்தார். அதை நான் விவிலியம் போல மனனம் செய்தே…

  21. காதலை தருவாய் .... என்றால் எத்தனை .... வலிகளையும் .... தந்து விடு .... இழவுகாத்த கிளி .... ஆக்கிவிடாதே ....!!! & விழிகளால் வலிதந்தாய் காதல் சோகக்கவிதை கவிப்புயல் இனியவன்

  22. Started by karu,

    கில்லாடி நாடு கெட்டுப் போனாலும் நமக்கென்ன என்றே தன் வீடு மட்டும் வாழ விதிவகுத்த கில்லாடி தொண்ணூறைத் தாண்டி தொண்டு கிழமானாலும் மண்ணாசை மாறாதெம் வாழ்வழிக்கும் கில்லாடி ஈழத்தமிழர்களை இனக்கொலைக்கு ஆளாக்கி வாழத்தன் சொந்தம், வழிவகுத்த கில்லாடி. மந்திரிகளாக்க மகள் மகன்மார் பேரர்களை செந்தமிழ் ஈழத்தைச் சிதைத்திட்ட கில்லாடி ஐயா வருவார் அரவணைப்பார் என்றிருக்க பொய்யாயுண்ணாவிரதப் புரளி செய்த கில்லாடி

    • 4 replies
    • 2.3k views
  23. காமினியின் குழந்தைகளே.....! கந்தக வாசனை கசக்கிறதா? பராக்கிரமபாகுவின் பாலகர்களே... பொட்டாசிய நாற்றம் பொறுக்கமுடியலையா? கொஞ்சம் முகர்ந்துதான் பாருங்களேன்.... உயிரைக் கொல்லாது என்று உத்தரவாதம் சொல்கிறேன்.. ஒரு கால நீட்சியில்-எங்கள் ஒட்சிசனே இதுதானே.... சேதப்பட்டதற்கே உடனடி வீட்டுத்திட்டம்? நச்சுக் காற்றென்று நாலுநாள் விடுமுறை? தானாக வெடித்ததற்கே தார்மீக விசாரணை? எண்ணி ஏழு ஆண்டுகள்.... என்னதான் நடந்து கண்டோம்.......! முள்ளிவாய்க்காலைப் பார்த்ததுண்டா...? கொஸ்கமவை ஆயிரம் மடங்காக்கிப் பாருங்கள் அங்கே சிதறிக்கிடக்கும் உலோகத் துண்டங்கள்தான் இங்கே உடலங்களாக சிதைக்கப்பட்டவை அங்கே எரிந்து கரிந்த மரங்கள்தான்…

  24. உலகை வளைத்து உள்ளே நாட்டை துளைத்து நுரைத்து பொங்கும் நாலு பெருங்கடல்!! பவளப்பாறைகள் அதை உண்ணும் மீன்கள் மீன் பிடிக்கும் மீனவன் என ஒரு சங்கிலி தொடருக்கு ஆதாராம்!! கட்டுமரம் முதல் கப்பல் வரை கட்டிக் காத்திடும் கடல்ராஜா இந்த பெருங்கடல்கள்!! நீலத்திமிங்கலம் நீந்தி பழகிடும் பென்குவின்களும் நடந்து சென்றிடும் டிஸ்கவரி காட்டாத இன்னும் பல உயிரினங்களை உள்ளே வைத்து ஆச்சர்யம் காட்டும் ஆழி பெருங்கடல்!! தண்ணீர் கொண்டு நாட்டை பிரிக்கும் எல்லை என்றனர் சிலர்!! ஆனால் தண்ணீர் கொண்டு நாட்டை இணைக்கும் பாலம் என்றனர் பலர்!! கடலின் அழகை ரசிக்க நினைத்தால் மகிழ்ச்சி பொங்கிடும்!! மாசுபடுத்தி அழிக்க நினைத்தால் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.