Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. யார் வீட்டுப் பிள்ளை இவள்? அடி பெருத்து... இடை சிறுத்து... வளர்ந்து நிற்பவளின்.... அழகு மேனியில் தெரிகிறது, பருவ வளர்ச்சியின் படிமங்கள்! அவளின் பருவக் குலையைப் பார்க்கப் பார்க்க... தாகம் எடுக்கிறது தானாக...! தேகச்சூடு அடங்கும்வரை பருகவேண்டும் அவளின் இள நீரை! வீசுகின்ற காற்றிலே அழகாய் மெல்ல மெல்ல அசைகிறது அவள் பச்சைக் கூந்தல்..! இளங்குருத்தின் வாசம் வந்து வெட்கத்தோடு அழைக்கிறது ஏறி வா என்று...! அவள் இடை அணைத்து... அவளுடல் மீதேறி... யாரோ கட்டியதை திருட்டுத்தனமாய்... மெல்ல அவிழ்த்திறக்கி சத்தமின்றி மொத்தத்தையும் ரசித்து...குடித்து...வெறித்து.... திகட்டும் போதையில் திளைத்து, பின் களைத்துப் போக..... அவள் தோப்பில் அவளோடு, கொஞ்ச நேரம் தூங்கினாலும்…

  2. எல்லோரையும் போல அவனுக்கும் வாழ்வு மீதான பிரியங்களும் தனக்கான வாழ்க்கை மீதான பிடிமானங்களும் இருந்தன….. பருவவயதின் காதலும் பள்ளிக்கூடக் கனவுகளும் அவனையும் ஒரு சினிமாக் கதாநாயகனாக்கியது ஒருகாலம்…… கால இடைவெளி நதியாய் ஓடிய குடும்ப நிம்மதியைப் பேரலையொன்று விழுங்குமாப்போல குடும்பத்தின் நம்பிக்கையொன்று இடையில் தொலைந்து போக அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எல்லாமுமாகியிருந்தான்…… ஒற்றைப்பிள்ளையாய் ஒருகோடி நம்பிக்கையாய் ஒளி நிறைந்த சூரியனாய் அவனே அனைத்துமாய்….. காதலும் கல்வியும் நிறைந்த நாட்களுக்குள் போரும் அவலமும் புகுந்து கொண்ட போது போராளியாதலே யாவற்றுக்குமான முடிவென்றவன் சொல்லாமல் கொள்ளாமல் காடேகிக் கையில் இயந்திரத்தோடு வீட்டுப் ப…

    • 7 replies
    • 1.2k views
  3. இனிமையான அந்த நாட்கள் இருண்டுவிட்டதோ உங்கள் இளமை துள்ளும் இனிய இதயம் நோந்துவிட்டதோ இனிமையான அந்தவார்த்தைகள் இன்று அவனுக்கு புளித்துவிட்டதோ உன் வாழ்க்கை இன்று இருண்ட மேகமாகிவிட்டதோ தென்றலான உன் நினைவு இன்று மழை வெள்ளமாகிவிட்டதோ நீயும் தத்தளித்து தேம்புறாய கவிதை வெள்ளத்தில் உன்காதலனும் இங்கு கைகோடான இந்த நேரத்தில் அலைபாயும் மனம்தானா ஆண்கள் இதயங்கள் அதில் உன் நினைவுவர வில்லையா அந்த இதயத்தில்

  4. உனக்காய் காத்திருந்து நிலவுகூட பகலில் வந்து விட்டது பகல் நிலவாய் இன்னும் நீதான் வரவில்லை காக்க வைப்பதில் உனக்கு அவ்வளவு சுகமா அதைவிட சுகம் உனக்காய் காத்திருப்பதில் உன் வருவுக்காய் எதிர் பார்த்திருந்தால் நீ வரும் பாதைகூட உன்னை போல் அழகாக வெக்கப்படுகிறது உனக்காய் காத்திருந்து இறந்துபோக ஆசைதான் உனக்காக கவிதைகள் பிறக்காமல் போகுமென்றால் உனக்காய் காத்திருந்து நான் வாடிப் போகவில்லை என் கவிதைகளுக்குத்தான் தாடி முளைக்கிறது நீ தாமதமாய் வரும்வரை எப்படி சமாளிபேன் என் கவிக்குழந்தைகளை ஒவ்வொன்றும் அம்மா வேணும் என்கிறது என்னைக் காக்க வைக்க வேண்டும் என்பதற்காக தயவு செய்து வராமல் விட்டு விட்டாதே என் பேனா ஒரே நாளிளே இறந்…

    • 4 replies
    • 1.5k views
  5. Started by yaal_ahaththiyan,

    எழுத்துக்களை சிறைப்பிடித்து உனக்கு கவிதை எழுதினேன் அதைக் கிழித்தெறிந்து தண்டனையை எனக்கு கொடுத்தாய்- யாழ்_அகத்தியன்

  6. குடும்பி மலையொன்றும் கொடியவரின் சொத்தல்ல. கனடாவிலிருந்து பவித்திரா- குடும்பி மலையொன்றும் கொடியவரின் சொத்தல்ல. கும்மாள மிட்டுக் கூக்குரலி டுதல்தான் வடுவினை மறைக்க வலுவற்றோர் புரிகின்ற வஞ்சனைச் செயல்களே வருத்தம் வேண்டாம் படுகுழியிற் தாம்வீழ்ந்த பரிதாப நிலைதனை பாரறியும் இழிவினை மறைத்திட வேண்டியே சடுதியாய் வகுத்த சூழ்ச்சியில் நின்றுமே தலைமைச் சிங்களம் தடுமாறி நிற்கிறது! மலைகள் பாறைகள் மருவிய நீர்நிலைகள் மலர்கள் மணம்வீசும் அடர்ந்த காடுகள் கலைகள் கழனிகள் கலப்பை பிடித்துழும் கண்ணியம் நிறைமாந்தர் கனிவுறை உழவர் தலைவன் கொள்கையே தமக்கெனக் கொண்ட தண்மைமிகு உளம்கொள் திராவிட மக்கள் நிலைபெற்ற…

    • 10 replies
    • 1.2k views
  7. 2 Poems on Canada ஒரு பயணியின் வாழ்வு பற்றிய பாடல் - வ.ஐ.ச.ஜெயபாலன் சீஎன் கோபுரத்தை அண்ணார்ந்து பார்க்கையில் கண்ணாடிக் கோபுரத் தொடரின் மீது வசந்தத்தின் வருகையை எழுதியபடி ஒளிரும் காற்றுப் படிகளில் ஏறிச் சென்றது ஒரு தனித்த காட்டு வாத்து. சிறகுகளால் என் கண்ணீர் துடைத்தபடி. அம்மாவின் மரணத் துயரோடு வெண்பனியையும் உருக்கிவிட்ட காலம் வலியது. ரொறன்ரோ அடி நகரின் இடுக்குகளில் குனிந்துவந்த சூரியன் ஒளி விரல்களால் மிலாறுகளை வருடிவிடுகிறது. மொட்டை மரங்களின்மீது பசிய அறோரா துருவ ஒளியையும் வானவில்லையும் உலுப்பி விடுகிறது சூரியன். எங்கும் பசுமையும் பூக்களும் பட்டாம் பூச்சியுமாய் வண்ண உயிர்ப்பும் வாழ்வின் சிரிப்பும். உலகம் சிருஸ்டி …

    • 7 replies
    • 3k views
  8. இன்று கருணாகரனின் புல்வெளி இணையத்தில் உள்ள கவிதைகளைப் படித்தேன்...நினைவுகளை துளைத்தெடுக்கும் வார்த்தைகளை கொண்டு வடித்தெடுத்த கவிதைகளை ஒரே தடவையில் நீண்ட பெருமூச்சுடன் வாசித்து முடித்தேன்...அதில் உள்ள "காதலும் கனவும் நிரம்பிய நகரம்" என்ற கவிதையின் தாக்கத்தில் என்னை நானே குற்றவாளியாக்கி கேள்வி கேட்டபோது பிறந்தது இது.... சபிக்கப்பட்ட சந்ததி... தன்னைக் கடந்து போன தலைமுறைகளின் இளமைகள் தொலைந்து போன கதைகளை சுமந்தபடி தொடர்ந்தும் இருக்கிறது அந்த நகரம்... என் பாட்டி தன் பருவ காலங்களை என் பாட்டன் தன் இளமைகளை என் தந்தை தன் பால்யகாலங்களை தொலைத்துக் கொண்டது அந்த நகரத்தின் நிழலில்தான்.. நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது அது சிறுவயதுகளில் …

  9. மறுத்ததேன்....? பலமுறை தொலைவில் பார்த்தேன் பார்வைகளால் ரசித்தேன் ஆர்வத்தில் தொடர்ந்தேன் தினம் உன்னையே சிந்தித்தேன் காதலை வளர்த்தேன் ஆதலால் சிலிர்த்தேன் ஆசையோடு இருந்தேன் திசை எங்கும் நடந்தேன் கற்பனையில் மிதந்தேன் பற்பல கவிதைகள் வடித்தேன் வானளவு உயரந்தேன் கானம் பாடி திரிந்தேன் கனவுகளில் உன்னோடு பறந்தேன் நினைவுகளை எனக்குள் சுமந்தேன் ஊன் சுவைதனை மறந்தேன் உறக்கத்தையும் துறந்தேன் உன் உருவை வரைந்தேன் கண்களுக்குள் காத்தேன் வெட்கத்தில் சிவந்தேன் துக்கத்திலும் சிரித்தேன் இன்றுனை சந்தித்தேன் தெத்திப்பல் தெரிய சிரித்தேன் காதல்மனசை திறந்தேன் அன்பே நீ மறுத்ததேன் என்னையும் வெறுத்ததேன்..?

    • 25 replies
    • 3.5k views
  10. கிழிந்தது முகத்திரை குனிந்தது பாரதம் ! முதுகினிலே குத்துகின்றாள் பாரதத்தாய் வெட்கித்துக் குனிகிறது எம் தலையும் வேடமிட்டு ஆடுவது போதும் போதும் வெட்கமற்ற பாரதமாய் போனதும் ஏனோ ! பக்கத்தில் இருந்தபடி எமை அழிக்க படைக் கருவி முதலோடு ஆளணியும் கொடுத்தல்லோ கொல்கின்றாய் எம்மை நீயும் தடுப்பதற்கு விண்ணப்பம் உன்னிடமா ! கொலைக் கருவி பணமென்று கொடுத்தவாறு எமைக் கொல்வதற்காய் உன் படைகளையும் அனுப்பிவிட்டு அமர்ந்திருக்கும் பாரதத்தின் வஞ்கமே உருவான நரியின் அழகே அழகு ! வார்த்தையிலே நஞ்சமர்ந்த வடிவம் கொண்டே பேச்சிலேதான் தீர்வென்று ஏனோ நீயும் பசப்புவதேன் பாரதத்தின் ஆட்சியரே கிழிந்ததுன் முகத்திரையும் குனிந்தாய் நீயே ! பெருமைகொள் பாரதத்தின் பெருமை …

  11. ஒரு தூறல் மழை போலே என் நெஞ்சில் விழுந்தாயே என்நெஞ்சின் ஓரத்தில் ஏதோ ஞாபகம் பெண்ணே நீ போகாதே ஏக்கத்தில் தள்ளாதே உன்னால் என் நிமிடங்கள் வருடம் ஆனதே நெஞ்சுக்குழியினிலே பல்லாங்குழி ஆடுகிறாய் இதய அறைகளிலே ஏன் ஒளிந்து ஓடுகிறாய் சிலநேரத்தில் தொலைவில் போகின்றாய் சிலநேரத்தில் அருகில் வருகின்றாய் ஓரக்கண்ணாலே கோபங்கள் காட்டாதே உன் மௌனப்புன்னகையில் மௌனித்து கொள்ளாதே உன்பாத தடங்கள் இங்கே தேடுகிறேன் என்பாதைகள் மறந்து எங்கோ ஓடுகிறேன் மேகம் பொழியாமல் மழை வந்து வீழ்ந்திடுமோ உன்னைக்காணாமல் என் ஜீவன் வாழ்ந்திடுமோ http://www.youtube.com/watch?v=Lbx5zdgjgwA

  12. இன்னும் இருக்கிறது காதல் கடிதம் காதல் ......................!!! *********** முன்னிரவுகளில் தூவிய நட்சத்திரங்களை அடித்து சென்றுவிட்டது ஆதவக்கரங்கள். ********* மெல்லியதாய் எங்கோ ஒலிக்கிறது சோகப்பாடல், சோர்ந்து போய் உச்சரிக்கிறது உதடு. ************ இதே நிலா அன்று, நீயும் நானும். அதோ நிலா .................!!! *********** மலர்தாவிய வண்டை திட்டினாய். வியந்தேன்............. மனம் மாறி திட்டினாய். சிதைந்தேன். ******* உன்னை சந்திக்கும் அந்த நேரம் கடக்கையில் நரகம் தெரிகிறது. கடந்தபின்....... மரணம் புரிகிறது. *********** கைதவறி பட்டபோது தடுமாறிய மனது நீ கரம்பற்றிப்போனபோது அனாதையாய் போனது ............ ************* உன்னை பார்த்தத…

  13. மீண்டும் கலர் கலராய் தோரணங்கள் வடக்கு வீதியில் சின்ன மேளம் கிழக்கே மேளச் சமா தெற்கே காவடி மேற்கே கச்சான் கடைகளென தேர்தல் திருவிழா அரிதாரம் பூசியவர்களின் அணிவகுப்பு வானத்தை வில்லாய் வளைப்பவர்களாகவும் விடுதலையை வென்று தருபவராகவும் சிலர் ஒருபடி மேலே போய் தாயகத்தை தோண்டி பெருவாழ்வு பெற்றுத் தருவதாகவும் ஆளுக்கொரு மூடையுடன் அவர்கள் மூடைகளின் அளவுகளில் வேறுபாடிருந்தாலும் எல்லாம் புளுகுமூடைகள்தான் தொடுத்த வில்லிற்கும் கொடுத்த விலைக்கும் ஈடுதான் என்ன மாகாண சபைதானா ஆளுனர் தலையசைத்தால்தான் மூத்திரமே பெய்யலாம் கோவணம் இறுக்குவதற்கும் கொழும்பில்தான் அனுமதியாம் போக்கறுந்த சபைக்கு பொலீஸ் அதிகாரமும் இல்லை கந்தறுந்த ஆட்சியால் காணியும் இல்லை நீதிமான் சொல்கிறார் ம…

    • 3 replies
    • 1k views
  14. பறவைகள் குறித்த கவிதை உவமையை யாரும் புரிந்து கொள்ளவில்லை தச்சனே! - கவிதை வெய்யில் கவிதை: வெய்யில், ஓவியம்: ரமணன் “உழைப்பாளர்கள் சிலையிலிருப்பவர்கள் உழைப்பாளர்களே அல்ல ஒரு சிற்பியின் விருப்பத்திற்காக வெறுமனே அவர்கள் பாறையைப் புரட்டுகிறார்கள்” -கலைவிமர்சகருக்கு வணக்கம் சொல்லிவிட்டு நகர்ந்தேன். “பொன்னுலகுக்குச் செல்லும் வாயிலின் அடைப்பைத் திறக்கிறார்கள் வெகுகாலமாய்” -சரிதான். அவருக்கும் வணக்கம் தெரிவித்தேன். “புரட்சி என்பது காலாவதியாகிப்போன இருமல் மருந்து” -ஓ...உங்களுக்கும் நன்றி. கீழே இறங்குங்கள் இதற்காகவா நண்பர்களே நாம் மெரினாவுக்கு வந்தோம் போதும் அந்த நீள மரத்துண்டங்களைக் கைவிடுங்கள் உங்கள் தசை முறுக்…

  15. எமது தாயகப்பாடலான 'ஒர் இரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள்" பாடலினுடைய வரிகள் யாருக்காவது தெரியுமா? அந்த பாடலை இணையத்தில் எங்கு கேட்கலாம் என்று கூறமுடியுமா?

    • 9 replies
    • 1.7k views
  16. உன்னை நினைத்து எழுதிப்பார்த்தேன்... வார்த்தை வரவில்லை இன்னும்- முயன்று பார்த்தேன்... முடிவாய் ஒரு வரி - அது என் தேவதை ! ஆம்..... அழகுக் கவிதை அது.... உன் பெயர்தானடி! .................................................

    • 34 replies
    • 5.3k views
  17. Started by sathiri,

    விரல் இடுக்கில் வீழ்ந்து கிடக்கிறது உயிரும் உலகமும் .. கடைசித் துளியினை இரசித்து விட்டு இறந்து போகலாம் நா . தேடுகிறது ... பொங்கி வழியும் சம்பெயின் விம்மி நிக்கும் நீ ..

    • 5 replies
    • 743 views
  18. சாவுக்கு ஒரு தூது! சாவே சட்டென வந்தென்னை அணைத்துக் கொள் சகதி வாழ்க்கையில் தொலைந்திட விருப்பமில்லை மொட்டுக்களே உங்கள் குவிந்த உதடுகளை விரித்துப் புன்னகையுங்கள் பூப்பெய்திய பெண்களைப் பார்த்ததில்லையா? துடுப்பென இருசிறகு கக்கத்தில் கட்டிய பறவைகாள்! ஆகாய வீதியில் ஒன்று கூடுங்கள் மரணத்தின் முன்னால் ஒரு மகிழ்ச்சிக் கீதம் கேட்க வேண்டும் ஆங்காங்கே நரைத்த முடிகளை காட்டாது ஓடி மறையும் மேகங்களே... கறுப்புச் சாயம் பூசிக் கொள்ளுங்கள் மண்ணின் மார்புச் சேலை நனைக்க மழைவேண்டாமோ? அருமை நண்பர்களே அஞ்சலிக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யுங்கள்! உங்களில் ஒருவன் பிரியப் போகின்றான்! கனவுப் பயிர் வளர்த்தவன் க…

  19. ஊர்கள் இழந்து உறவுகள் மறந்து உயிர்கள் சுமந்த உடல்கள் முகங்கள் அழிந்து தமிழை மறந்து கால்கள் போன தேசம் கண்கள் கலங்கி நெஞ்சம் உருகி வெடிக்குது ஈர இதயம் பந்தம் அறுந்து சொந்தம் விலகி கிளைகள் விழ்ந்த விருட்சம் இறக்கைகளின்றி பறக்க துடிக்கும் பாசம் என்னும் வேகம் உள்ளம் உருகி வெள்ளம் பெருகி ஓடட்டும் ஊற்றாய் நினைவுகள் யாவும் நிழலாய்த் தொடரும் நீங்கிடது உங்கள் உறவு

  20. மஞ்சள் வெயிலாய் சிரித்தாய் , கொஞ்சும் குயிலாய் சிலிர்த்தாய் நெஞ்சில் புயலாய் அடித்தாய் மிஞ்சும் செயலை தடுத்தாய் . அடடா உன்னை பார்த்ததும் மனசெல்லாம் பறக்குதே அடியே ஒன்னும் புரியல என் அழகெல்லாம் மறக்குதே வள்ளுவன் சொன்னதை போல கண்களும் கண்களும் பார்க்க சொற்களில் சொற்களில் பேச அர்த்தமும் அர்த்தமும் ஏதோ .... உன் பேரில் என் பேரும் சேரத்தான் வேணும் தமிழ் மொழி கொஞ்ச கவிதைகள் மிஞ்ச ஆகாயம் தூளாகும் நீ பார்த்தால் என்காயம் இங்கு ஆறாதே நீ சிரித்தாலே என்ன மாயம் தனை செய்தாய் ஏ பெண்ணே கானலாய் மிதக்கிறேன் உன்னாலே உடைகிறேன் ஆலென்று இருக்கிறாய் வேராக துடிக்கிறேன் . வள்ளுவன் சொன்னதை போல கண்களும் கண்களும் பார்க்க சொற்களில் சொற்களில் பேச அர்த்தமும் அர்த்தமும் ஏதோ .... …

  21. Started by yaal_ahaththiyan,

    உன்னை நாளையும் சந்திக்கலாம் என்ற சந்தோசத்தைவிட இன்றும் உன்னைப் பிரிவதே கொடிது * நம் முதல் சந்திப்பை பற்றி யாரிடமாவது பேச நினைக்கும் போதெல்லாம் வாயடைத்துவிடுகிறது நம் முதல் பிரிவு * ராஜ்மகாலில் கூட கடைசியாக நின்றாலும் நுழைந்துவிடலாம் யாருமே காத்திராத உன் வீடுதான் என்னை நுழைய விடாது உலக அதிசயமாய் தெரிகிறது * எப்பதான் எனை உன் வீட்டுக்கு கூட்டிச் செல்லப் போகிறாய் நான் முதல் முதலாய் வாங்கிக் கொடுத்த பொம்மை கிழவியான பிறகா..? * உன்னைப் பார்த்தால் யாருக்கும் அலுக்காதுதான் அதற்காக உன்னை உன் வீட்டிலே வைத்திருந்தா என் கண்கள் சும்மாவிடுமா..? -யாழ்_அகத்தியன்

  22. Started by கிருபன்,

    சைவப்பற்று -பாவேந்தர் பாரதிதாசன்- இரும்புப் பெட்டியிலே - இருக்கும் எண்பது லக்ஷத்தையும், கரும்புத் தோட்டத்திலே - வருஷம் காணும் கணக்கினையும், அருந்துணையாக - இருக்கும் ஆயிரம் வேலியையும் பெருகும் வருமானம் - கொடுக்கும் பிறசொத்துக்களையும், ஆடை வகைகளையும் - பசும்பொன் ஆபரணங்களையும் மாடு கறந்தவுடன் - குடங்கள் வந்து நிறைவதையும், நீடு களஞ்சியம்கள் - விளைந்த நெல்லில் நிறைவதையும், வாடிக்கைக் காரர்தரும் - கொழுத்த வட்டித் தொகையினையும், எண்ணிஎண்ணி மகிழ்ந்தே - ஒருநாள் எங்கள் மடாதிபதி வெண்ணிறப் பட்டுடுத்திச் - சந்தனம் மேனியெலாம் பூசிக் கண்கவர் பூஷணங்கள் - அணிந்து கட்டில் அறைநோக்கிப் பெண்கள் பலபேர்கள் - குலவிப் பின்வர முன்நடந்தா…

  23. இன்று காதலர் தினம். காதலர் தினம் என்ன அவர்களுக்கு மட்டும்தானா நமக்கில்லையா? வாழ்வில் இணைந்து கொண்ட தம்பதிகளுக்கும் காதலுண்டல்லவா! ஆனால் அதன் இயல்புதான் சற்று வேறாயிருக்கும். அந்த வேறுபட்ட இயல்பைச் சில வருடங்களுக்கு முன் கவிதையாக்கினேன். அதனைக் கீழே தருகிறேன். தாய்க்குப்பின் வந்த தாரம் வாய்க்குச் சுவைதருவாள் என்றும் வாழ்விற் துணைவருவாள் - காம நோய்க்கு மருந்தாவாள் துயர் போக்கும் அருள் தருவாள் அள்ளி அணைக்கையிலே மனம் ஆறும் பரிசத்திலே உள்ள நிறைவினிலே துன்பம் ஓடிடும் தூரத்திலே அன்னையிருந்த இடம் இன்று அவள் அரியணையாம் என்னைக் கலந்துவிட்டாள் இன்று எனதென்றொன்றுமில்லை வட்ட நிலாவொளிரும் அவள் வதனப் புன் சிரிப்பில் கெட்டதெல்லாமழியும் அவள் கிட்டநிற்கும்…

    • 0 replies
    • 2.3k views
  24. என் காதல் ...............................தோற்கவேண்டும் நினைத்து கிடைத்து விட்டால் ,கிடைத்ததற்கு மதிப்பு இல்லை தேடியது கிடைத்து விட்டால் சற்று நேர சந்தோசம் மனச்சிறையில் பூட்டி வைத்து கோவில் கட்டி வாழ்ந்து இருந்தேன் கண் திறந்து பார்த்த போது கண்ட சுகம் கொஞ்சம் கொஞ்சம் வேண்டாப் பெண்டாடி கால் படால் குட்டம் கை பட்டால் குற்றம் நினைத்து நடந்தது கேட்டது கிடைத்தது போட்டது வந்தது அருமை தெரியவில்லை ,நினைத்து ,கேட்டு , கிடைத்தபோது காதல் தோற்க வேண்டும் ,வாழ்வில் விளங்கும் வலியும் ,வழியும் குன்றில் ஏறி வைத்து இருந்தால் குத்து விளக்கும் ஒளி வீசும் குடத்துள் விளக்காக கூனி குறுகி ,எரிகிறது எண்ணையின்றி அருமை பெருமை தெரியவில்லை கண் கெட்ட சூரியன…

    • 8 replies
    • 2k views
  25. [size=3][size=4]ஈழத்தின் மூச்சே என்றன்[/size] [size=4]எண்ணத்தின் கருவே - தங்கம் கீழிடை பணிந்துபோக கிளம்பிய புகழே வாழி! மானமே மகுடம் என்று மலையென எம்மில் மீண்டு காலத்தால் உருவாய் வந்த கதிரவன் வாழ்க வாழ்க!. உலகத்தில் உயர்வு நீதான் உண்மைக்கு உரைகல் நீதான் கலங்கரை விளக்கம் நீதான் கடுமையும் நீதான் என்பர். விடுதலை வேள்வி மூட்டி விண்ணதிர் களங்கள் கண்டு சாவினை மீண்ட தங்க தலைவனே வாழி வாழி! ஒப்புக்கும் பயந்ததில்லை -உன் உருவத்தில் கடுமையில்லை தப்புடன் ஒருநாள் கூட - நீ தன்நிலை பகிர்ந்ததில்லை நிச்சியம் உங்கள் எண்ணம் நிமிர்ந்திடும் நாளை என்போம் அத்துணை காட்சி காண்போம் ஆதவன் நீவிர் வாழ்க! மூட்டிய பயணம் மீழும் முடிவது நன்றே சேரும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.