கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
மகிந்தவின் கழுத்தில் தொங்குவது சிங்களவரின் கோவணம் இடியமீன் சிரிக்கிறான்
-
- 1 reply
- 868 views
-
-
இடுகாட்டு இருட்டில் சிதைக்கு மூட்டும் தீயில் வெளிச்சம் பிறக்கும் என்று மாண்டார்கள் அடிமைகள் ஆழுக்கொரு கொள்ளிக்கட்டையை எடுத்து காலடி வெளிச்சம் பிடித்து எஜமான் வீடு நோக்கி நடந்தார்கள் நெஞ்சாங்கட்டையையும் பங்குபோட்ட அடிமைகளைப் பார்த்து சிதைகள் எழுந்து அழுது மீண்டும் மடிந்தது. எஜமானின் கோடிக்குள் திவசம் கொண்டாடவும் முடியாத அடிமைகள் காக்காவுக்கு சோறு வைக்க கரைகின்றார்கள். சீமைப்பசுவின் கோமயத்தில் முகம்கழுவி முக்தி பெற்ற பெருமக்கள் ஆங்காங்கே திவசம் கொண்டாடுகின்றார்கள். வடையும் வாய்பனும் கூடவே டோனற்றும் படைக்கின்றார்கள். காரிருளை கலைத்த சிதைகளின் தீயையும் சூறையாடிய அடிமைகள் மேற்கில் வெண்மேகம் மோதி மின்னல் பாய்ந்து தேசம் விடியும் என்ற கனவில் மிதக்கின்றார்கள். கதிரவன் …
-
- 1 reply
- 621 views
-
-
அன்பிற்கு புது பல அர்த்தங்கள் தேடி அகங்காரத்துடன் காதலையும் அலர்ச்சியம் செய்து தெரிந்தே நான் அவனுடன் புரிந்த சண்டைகள் தெளிவு தரும் என்று ஏதோ ஓர் நினைப்பில் வர்ணங்களில் வானவில்லை காண்பது போல் வாட்டும் ஏக்கங்களில் அன்புக்கு விளக்கங்கள் தந்தாலும் நெடுந்தூரத்தில் அவன் உருவம் என் விழிப்பார்வை கைது செய்தால் நெஞ்சில் சுமந்த சுமைகள் யாவும் நெகிழ்ச்சியில் உருகுதே கதிரவனின் வருகையில் மலரும் தாமரையாய் கண்களின் இரு கருமணிகள் விண்மீன்களானது ஏனோ ? சொற்களுக்கு எட்டாத உணர்வுகள் யாவும் உடனே விழித்துக்கொள்ளும் சொப்பனத்தில் கூட அழியா சுவடாய் மனதினுள் பதிந்து கொள்ளும் ஆன…
-
- 0 replies
- 822 views
-
-
இடைத்தங்கல் முகாங்கள்...... கவிதை..... இடைத்தங்கல் முகாங்களில் எங்கள் துன்பங்களும் தெரியாமல் தம் வாழ்வு அங்கே ஏனென்றும் புரியாமல் தீராத பசியினிலும் மணல்வீடு கட்டும் ; நம் மழலைகளின் முகம் பார்த்தேன்...! அனைத்து உணர்வுகளும் அடங்கும் நிலை மரணம்....! அங்கேயும் அதே நிலைதான் அதைப் பார்ப்போர்க்கும் அதே நிலைதான்..... உயிர்காக்க ஓடிவந்து உயிர்மட்டும் காத்துவிட்டு உணர்வெல்லாம் செத்து உறவெல்லாம் பறிகொடுத்து உறக்கம் ஏதுமின்றி ஒவ்வோர் மூலையிலும் ஒதுங்கிவிட்ட நம் உறவு கண்டேன்...! கோத்தபாய வாசகமாய் தமிழீழ குமரிகளின் பருவத்தின் அழகுதனை பார்த்து அனுபவித்து படுகொலை செய்வதற்கு பத்திரமாய் முகாமொன்று அதன் பெயரோ விச…
-
- 15 replies
- 1.5k views
-
-
இணங்கி வாழ்வதிலும் இன்றே இறந்து போ Jun 27, 2013 நான்கு ஆண்டுகள் கழிந்துவிட்டது. பாய்ந்து செல்லும் காலத்திற்குத்தான் எத்தனை வேகம் வைகாசி மாதமென்றால் தார் ரோட்டில் நெருப்பெரியும் நிலவும் சுடும் காற்றில் தேகம் தகிக்கும் இன்றும் தேசக்காற்றில் வெம்மை சொரிகிறது நாலாண்டாய் தவிக்கும் நினைவுகளும் பெருமூச்சுகளும் புழுங்கித் தவிக்கிறது கார்ப்பெற் வீதிகளால் எமது கனவுகளை புதைக்கமுடியவில்லை கைத்தொலைபேசி மணியோசைகளால் கதறல்களை மறைக்கமுடியவில்லை மலைகள் இல்லையென்றோ ஆறுகள் இல்லையென்றோ அந்திரிக்காமல் ஆழக்கிணறு தோண்டி அமிர்தம் உண்ட இனம் இன்று மினரல் வாட்டர் பருகி மீளா உவகை கொண்டோம் அக்கிரமங்கண்டு ஆர்ப்பரிந்த காலம் மலையேறிவிட்டது. உன் அயல் வீட்டில் களவா …
-
- 2 replies
- 879 views
-
-
chating ( தமிழ் ஆக்கம் தெரியாது ) முகங்கள் புதைத்து முகவரி கள் தொலைத்து வயதுகள் மறைத்து உணர்ச்சி விளையாட்டில் பறிபோனது இங்கே இதயங்கள் பண்பாடு தொலைத்து காதல் மொழி பேசி உணர்ச்சி விளையாட்டில் பிரிந்தது குடும்பங்கள் நிஜத்தை தொலைத்துவிட்டு போலி வாழ்க்கைக்காய் வழக்காடு மன்றத்தில் பிரிவுக்காய் தவிக்க குழந்தையோ வீதியில் அனாதையாக தத்தளிக்குது. நாகரிக வளர்ச்சியால் தமிழ் பண்பாடு அகதியாய் அலைகின்றது எம்மைப் போல். தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 30 replies
- 3.9k views
-
-
இணைய உறவு இனிய உறவு இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு இருபத்தோராம் திகதி இதே சித்திரை மாதத்தில் இதோ பசுமையாக அவ்நினைவுகள் இன்றும் என் நெஞ்சில்; இனிமையான காலைப்பொழுதில் இயக்கினேன் கணனியை இணைந்தேன் அரட்டைக்குள் இயற்பெயர் வெண்ணிலாவாக இவளுக்காகவே காத்திருப்பதுபோல்; இன்முகத்துடன் அரட்டைக்குள் இளங்கவிக்குயிலாக நீயிருந்தாய் இதமாக கதைக்க நினைத்து இதழ்விரித்துக் கேட்டேன் இருக்கின்றீர்களா நலமா என்று இதயத்தை தொடுவது போல் இயம்பினாய் ஆம் நலமே என இலங்கையில் வசிக்கின்றேன் நான் இங்கிலாந்தில் வசிக்கின்றாய் நீ இவ்வாறாக தொடர்ந்த அரட்டையில் இருநாடுகளில் வாழ்ந்தாலும் இணைபிரியாது வாழ எண்ணி இருவரும் கலந்தாலோசித்…
-
- 15 replies
- 3.8k views
-
-
இணையம் கண்டெடுத்த இதயம் (சும்மா ஒரு எதுகை மோனைக்காக!) எப்போதோ சந்தித்த ஒருவர் உலகத்தின் இன்னொரு மூலையில் வந்தபின் மீண்டும் ஹலோ சொல்வதால் வரும் சந்தோசம் பெரிது! கணினித் திரை வழி கைகள் சொடுக்கி இணையத்தில் தேடினேன் சந்தை நிலவரம் முதற்கொண்டு சாதிக் கலவரம் வரை உலகத்தின் வினையத்தனையும் விபரமாய்த் தரும் இணையத்தில் முந்தை ஒரு நாள் வீதியில் புன்னகைத்துச் சென்றவளும் சேதிகள் பலகொண்டு தேடியே வருவாள் என்று என்றேனும் நினைத்தேனா? விந்தையிது வென்று கூத்தாடி நான் மகிழேன்... இணையத்தின் அகன்ற கைகளில் உலகம் வெறும் எள்ளுருண்டை! http://kaviruban.spaces.live.com/blog/cns&...B!170.entry அண்ணா சும்ம…
-
- 0 replies
- 722 views
-
-
தடுமாற்றங்களும் குழப்பங்களும் நிறைந்த மன நிலை நாம் என்ன செய்ய 2009 உலகமே சேர்ந்து குழப்பியது எம்மை குவிந்தது தாயகத்தில் பிணங்களின் குவியல் கந்தக புகை நிறைந்தது எங்கும் நச்சு புகையும் சேர்ந்தே இருந்தது இலங்கையில் ஓரினம் இன்னோரினத்தின் முகவரி பறித்தது பார்த்தது சர்வதேசம் சதியில் ஐநாவும் பங்கெடுத்தது உரிமைக் குடி ஒன்றின் உரிமை மறுப்பை உலகம் பார்த்தது உரத்து அறிக்கை விட்டன சில நாடுகள் சிறிலங்கா செய்ததை சரி என்று!!! துன்னாலைப் பிறந்தவன் லண்டன் நகர் வசித்தவன் மூவொன்பதாண்டு வயதுளான் முருகதாசெனும் பெயருளான் மூண்ட சினம் கொண்டான் உலகுக்கு உண்மை நிலை புகன்றிட வந்தான். ஏழு பக்கத்தில் எழுதி முடித்தான் மரண சாசனம் உண்மைக்…
-
- 9 replies
- 704 views
-
-
என் தோளில் சாய்ந்து சிரிப்பாள், என் நெஞ்சில் முகம் புதைத்து அழுவாள், பலமுறை அவளைச் சுமந்திருக்கிறேன்! அப்பொழுதெல்லாம் சுமையாகத் தெரியாதாவள்... இப்பொழுது தன் நினைவுகளாலேயே பாரமாக்குகிறாள்! கனத்துத் தொங்கும் என் இதயம்... அறுந்துவிழத் துடிக்கிறது...! என் இதயத் துடிப்புகளின் கடைசி ஏக்கங்கள்கூட... அவளுக்குத் தெரியாமலே அடங்கிப் போகலாம்! ஊசலாடிக்கொண்டிருக்கும் என்னுயிரின் வலிகள், ஊஞ்சலாடி மகிழும் அந்த தேவதைக்கு... தெரியாமலேயே போகட்டும்! ஆடி முடிந்து வரும்போது... எல்லாமே அடங்கிப் போயிருக்கும்! பல காதல்களின் சரித்திரங்களைப் போலவே... என் காதலின் ஆத்மாவும்... கல்லறைக்குள்ளேயே முடங்கட்டும்!
-
- 4 replies
- 658 views
-
-
மெல்லிசையின் இனிமை மறந்தேன் இயற்கை எழில்மேல் ரசனை இழந்தேன் செயற்கைகள் நிறை வாழ்கை முறை அதனால் நானும் இங்கோர் எந்திரனானேன் உள்ளத்தின் ஓசையின் ஏவல் கேளாமல் உலகின் ஓட்டத்தில் ஓட விளைந்தேன் மனிதனின் மனிதத்தை மதிக்க மறந்து - கொண்ட பொருளினால் அவன் மதிப்பைக் கணித்தேன் பொருளோடு, கல்வியும் தேட வந்து வாழ்வு தந்த தேசத்தில் வாசம் கொண்டு தவழ்ந்து வளர்ந்த தேசத்தின் வாசம் மறந்து விழுமியங்கள் மறந்தேன், என் சுயத்தை இழந்தேன் (27 August 2010)
-
- 9 replies
- 1k views
-
-
உயிரே நீ என்னை விட்டு சென்ற பின்பு நாம் இருவரும் பேசிக் கொண்டதை நினைத்து இரவில் போர்வைக்குள் அழுகிறேன் வேறு என்ன நான் செய்ய முடியும் உன்னை நோக அடிக்கவா முடியும் உன் இதயம் நொந்தால் என் இதயத்துக்குதானே வலி என் என்றால் உன் இதயம் என்னுடையது அல்லவா?
-
- 0 replies
- 743 views
-
-
நட்பாய் என்னில் அமர்ந்து காதலாய் என்னில் உறங்கி இன்று கானலான எனது நாட்குறிப்பின் நனைந்து போன பக்கங்கள் கண்ணீரில்.... கடந்த காலத்தின் கசப்பில் மனப்புண்களால் முடமாகித்தானே முதலில் வந்தாய் என் முன்னில்.... எத்தனை இன்னல்களை எனதாக்கி உயிர்பித்தேன் உன்னை ,.. ஆழமாய் காதல்செய் பிரிந்து போனாலும் அவள் அடையும் அளவிலா தண்டனை அது மட்டுமே .. பொன்மொழியாய் உலகிற்கு நீயும் சொல்லி... என் உயிரதனை சிறகாக்கி பறந்து சென்றாய்.... புனிதமான நட்புக்கு கூட ஆண்வர்க்கத்தையே அணுக விடாமல் என் மனதை கல்லாக்கி விட்டு நீயும் காணாமல் போன மாயம் தான் என்னடா ... என் இதயத்தில் நெருடும் புழுக்களாய் …
-
- 27 replies
- 9.4k views
-
-
காதலித்தால் இதயங்கள் இடம் மாறுமாமே வா இதயங்களை மாற்றிவிட்டு காதலித்து பார்ப்போம் * நான் வார்த்தை தேடி அலைந்தபோது வந்து கிடைத்த கவிதை நீ * பயந்து பயந்துதான் உன்னை என் அம்மாவுக்கு அறிமுகப்படுத்தினேன் அவா உன்னை ஆலாத்தி எடுத்து வரவேற்பா என்று தெரியாமல் * வறண்ட பூமியை விட நீ வைத்திருக்கும் குடைதான் மழைக்காக தவிக்கிறது * உலகம் அழியும் நாளில் நான் உயிரோடிருந்தால் தற்கொலையாளியாய் உன் மேல் பாய்ந்துதான் என்னை அளித்துக் கொள்வேன் -யாழ்_அகத்தியன்
-
- 3 replies
- 1.1k views
-
-
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு அரசியல் எண்ணம் இதில் வாழும் தெய்வம் மைத்திரி நீ(நீங்கள்) உயிரில் கலந்து பேசும் பொழுது எதுவும் அரசியலே அரசியல் பேச்சுக்கள் எதுவும் புதிதல்ல ஒப்பந்தங்கள் கோடி கோடி அதுவும் புதிதல்ல எனது இதயம் ஒன்றுதான் புதிது நீயும் நானும் போவது அரசியல் என்ற பாதையில் சேரும் நேரம் வந்ததும் தமிழன் வாக்கு போட்டு கவுத்தானே ஒற்றையாட்சியில் ஒரு தீர்வை சிங்களவன் தடுத்தானே சிங்களவனின் நாடு சிங்களவர்க்கே எனதாருயிர் ஜீவன் என்னை ஆண்டாயே வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே எந்த தலைவனிடமும் இல்லாத ஒன்று உன்னிடம் உள்ளது அது எதோ அதை அறியாமல் விட மாட்டேன்....
-
- 1 reply
- 772 views
-
-
ஈழம் வரும் வேளையென்றே நினைத்திருந்தோம்..அண்ணா... பேரிடியாய்.. உன் பிரிவை உள்வாங்கிக்கொண்டோம்.. வேதனையில்.. விழுந்த நெஞ்சங்களை காணுகின்றோம்.. தமிழ்ச் செல்வன் அண்ணா உன்னை நினைந்து விழி ததும்புகிறோம்.. பூத்திருக்கும் புன்னகையில் ஒளி தருவாய்..நம் தலைவரவர் கரமிணைந்து செயல் புரிவாய்.. நெஞ்சமெல்லாம் வாடி நிற்க எங்கு சென்றாயோ.. நேசமெல்லாம் கண்டு கொள்ள ஒளிந்து கொண்டாயோ.. அழுதுவிடவேண்டாமென்று.. விழிகளிடம் சொன்னேன்.. இதயம் கிடந்து அழுகிறதே யாரிடம் சொல்வேன்.. புலிகள் பலம் குறையுமென்று. எதிரிகள் நகைப்பார்.... உன்னை விதைத்த இடம்.. செழிக்கும் அதை வீணர்கள் அறியார்.. வீரப்புலித் தலைவரரவர்.. சோர்வது இல்லை.. அவர் கரங்களிலே.. உறுதி சேர்ப்…
-
- 4 replies
- 2.4k views
-
-
படித்ததில் பிடித்த ஒரு கைக்கூ...! இடியொடு மின்னல் உன் நினைவுகளுடன் என் இதயம் பேசும் இரவு நேரக் கவிதைகளாகின.....! நன்றி மீண்டும் சந்திப்போம்...!
-
- 2 replies
- 2.1k views
-
-
இதயம் மட்டும் பேசட்டும் இசை மழைதனில் இன்பமாய் நனைந்து பசை கொண்ட மனிதருடன் பாங்காய் அசைந்து ஆடும் ஆட்டத்தின் உச்சம் இசைந்திடும் மனதின் ஆதாரம் என்றிருந்தேன் இதழுடன் இதழ் ஒன்றாய் இணைந்து பின்னிக் கொள்வதில் அந்த இன்பமான பிணைப்பே இணைப்பாய் அதுவே பேரின்பம் தரும் போதை என்றிருந்தேன் புண்பட்ட மனம் இங்கே நிதம் நிதம் புண்ணாகிப் போனதால் நாளாருபொழுதாய் புகைவிட்டு ஆற்றுகின்றேன் ஆஹா இதுவே புத்துயிர் தரும் டொனிக் என்றிருந்தேன் இத்தனை ஆனந்தம் எனக்குள்ளிருந்து இதுவே வாழ்வின் சொர்க்கம் என்றே நனைந்தவேளை இடப்பெயர்வு இன்னல்கள் சுமந்திடும் இதயங்களின் கதை கேட்டுணர்ந்தபோது இதயத்து சுகங்கள் இமைவழி மறைந்தோடிட இடையறா பங்களிப்பு இரட்டிப்ப…
-
- 9 replies
- 2.1k views
-
-
-
இதற்காகவா நீ பெற்றாய்.....???? பெண்ணவளை தெய்வமாக போற்றும் இந்த உலகினிலே... பெண்ணே உன்னை கேவலமாய் வந்தொருவன் இழிக்கின்றானே..... படுக்கையதை நீ விரித்து பத்து மாதம் சுமந்து பெற்றாய்.... அடி உன்னை வந்து இன்றவனே ஊனமதாய் இழிக்கின்றானே.... கண்ணயரா நீ அன்று கண்மணி போல் காத்தவனை பெற்றெடுத்த பெருந்தகையே.... உன்னையின்று இழிக்கின்றானே உன் மனசில் உதைகின்றானே.... இத்தனையும் கேட்டிடவா இன்றவனை நீ பெற்றாய்....??? -வன்னி மைந்தன் -
-
- 19 replies
- 2.8k views
-
-
இதழில் மட்டுமல்ல உன் இறப்பிலும் மொழியுண்டு. "தீபன்" என்ற பெயர் ஓராயிரம் தீப்பொறிகளின் அடையாளம். தளபதியாய் தலைவனின் பெறுமதியாய் எல்லாமுமாய் எங்கள் வல்லமை நீ. பலங்கொண்டு வந்தவர்கள் எவரெனினும் பலம் திரட்டிப் படைநடத்திப் படைத்தவை விரல்களுக்குள் எண்ணி முடித்திட முடியாத வரலாறு நீ. களமாடி வெல்ல முடியாப் பலம் நீங்கள் என்பதறிந்தோர் நச்சுக்காற்றனுப்பிக் களக்கொலை புரிதலில் வெல்வதே வென்றியென்று முழக்கமிட்டுப் புலம்புகின்றார். வீரங்களே எங்கள் விடுதலையின் ஆழங்களே....! இது வீழ்ச்சியல்ல எழுச்சி. வண்ணப்படங்கள் காட்சியிட்ட உங்கள் முகம் இன்றும் எங்களுக்கு வரலாற்றுக் காட்சிகள் தான். புலிவீழ்ச்சி புலிவீழ்ச்சியென விட்டத்தை அ…
-
- 2 replies
- 923 views
-
-
ஆதாம், ஏவாளாய் வாழ்ந்த காலத்தில், ஆண்டவன் உனக்குக் கட்டளையிட்டானாம்! அந்தக் கனியை மட்டும் புசித்து விடாதே, என்று! ஆசை உன்னை விட்டுவிடவில்லை, கனியிலேயே உன் கண்ணிருந்தது, கடவுள் மறைந்ததும் கனி உன்னிடமிருந்தது! இராமன் ஒரு சிறு குழந்தை, மண்ணுருட்டி விளையாடுகிறான்,, உன் கூனல் முதுகில் பட்டு விட்டது! உலகமா அழிந்துபோய் விட்டது? ஓடோடிப்போய் கைகேயிக்கு உருவேற்றினாய்! காடேகினான் ராமபிரான், மாயமானாகி மாரீசன் வந்தான், மயங்கிப் போய் நின்றாள் சீதாதேவி, மணாளா, எனக்கு அந்த மான் வேண்டும், மானைத் தேடிப்போனவனைக் காணவில்லை,, காவலிருந்த இலக்குவனைக் கலைத்தாள, அண்ணன் திரும்பி வருவான், கவலை விடு, அண்ணன் இறந்து போன பின்னர், என்னை அடைய நினைக்கிறாயா, இலக்குமணா? பேதலித்துப்ப…
-
- 16 replies
- 2.1k views
-
-
இது எம் காலம்.. காலம் கனிந்தது.-கார்த்திகை மலர்ந்தது - மனங்கொள்வோம் எம் உயிர் உரையும் மாவீரர் மலர் குடில் கொள்ளும் காலம் மனதார பாவிசைப்போம் -அவர்தம் புகழ் இசை கொன்டு..... நெஞசுருகிப்போவோம் நேசங்களின் வழியுணர்ந்து....... தேசம் பல கண்ட தமிழரே நிஜ தேசிய தினம் - உமக்கிது.... நம் தேசம் தந்த வேந்தர் புகழ் தேசம் எங்கும் உரைப்போம்- வாரும் உயிரில் உணர்வோம் உயிரீந்த- எம் உறவை
-
- 1 reply
- 711 views
-
-
நட்பு கடல்... பல நதிகளின் சந்தோச சங்கமம் நட்பு... பல மனச் சுடர்களின் சங்கம சந்தோசம்... கடல் என்றுமே எதிர்பார்த்ததில்லை நதிகளின் குலாவலையோ... அல்லது தழுவலையோ....! நட்பும் அப்படித்தான்... மனங்கள் உரசினாலும் சரி மனங்கள் மணந்தாலும் சரி மரணிக்காத சொந்தங்களின் மறுக்காத உரசல்கள்.... அலைக்களின் ஆர்ப்பரிப்பும் நட்பின் சிதறல்களும் ஒன்றென்பேன்...! அவை என்றுமே தாமாக நிகழ்வதில்லை காற்றின் உந்துதல் அலைகளின் பிறப்பு என்றால் காலத்தின் கட்டாயம் நட்பின் சிதறலாகின்றது... சுனாமிப் பேரலையாய் கடல் வெடித்துத் தெறித்தாலும் மீண்டும் கடல் சேர்வதில்லையா...??? அப்படித்தான் - நட்பின் சிதறலும் ஆனாலும் என்ன சுனா…
-
- 10 replies
- 1.9k views
-
-
இலங்கை சிறு தீவில் சூழ்ந்தது போர் மேகங்கள் அணி வகுத்தது இரு தரப்புக்கள் ஆதிக்கவெறி இன வெறி கொண்ட ஒரு தரப்பும் சுதந்திரத்துக்காய் விடுதலைக்காய் மறுதரப்பும் உள்நாட்டு பிரச்சினை என உலகம் கண்ணை மூடிக்கொண்டிருக்க கொலை கொள்ளை பலாத்காரம் என இன அழிப்பில் கொக்காளம் இட்டது சிங்கள தரப்பு வீரம் கொண்ட தமிழ் இனம் தனது சொந்தக்காலிலே நின்று பதிலடி கொடுக்கத்தொடங்கியபோது விழித்துக் கொண்டது உலகம் மூன்றாம் தரப்பு இணைத்தலைமை அமைதிப்படை சமாதானத்தூதுவர் இன்னும் என்னவோ பெயர்களிலெல்லாம் போதும் போதும் இவர்களெல்லாம் மத்தியஸ்தம் செய்வதுக்கு நாங்கள் நடத்துவது விடுதலைப் போரா இல்லை குறுக்கெழுத்துப் போட்டியா?
-
- 5 replies
- 1.5k views
-