கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
கடவுளே, நாம் பறந்தால் எம்மை கழுகாக்கு, நாம் நீந்தினால் எம்மை சுறாவாக்கு, நாம் கடித்தால் எம்மை முதலையாக்கு, நாம் பிராண்டினால் எம்மை கரடியாக்கு, நாம் சிந்தித்தால் எம்மை நரியாக்கு, நாம் ஓடினால் எம்மை சிறுத்தையாக்கு, நாம் சீறினால் எம்மை புலியாக்கு, நாம் கொத்தினால் எம்மை நாகமாக்கு, நாம் மிதித்தால் எம்மை யானையாக்கு, நாம் முட்டினால் எம்மை எருமையாக்கு, நாம் பிறந்தால் எம்மை தமிழராக்காதே! நன்றி, விடை பெறுகிறேன். குளவி பி. கு: யாழ் கள உறவுகளுக்கு, குளவி கலைந்தாலும், யாழ் கூட்டை சுற்றி சுற்றி பார்க்க வரும். பி.பி.கு: குளவி குழவியாக குலவி வைத்து கலையவில்லை. தமிழக வார இதழில் ஆறு வருடங்கள் ஈசனாக இருந்து, ம…
-
- 29 replies
- 2.8k views
-
-
காதலின் வலி நீண்டிருந்த கடற்கரை மணல் வந்து கரையை தொட்டு விட்டு மீளும் அலை கடலை அள்ளி தின்று ஏப்பம் விடத் துடிக்கும் வானம் கடலுடன் கைகோர்த்தபடி கட்டித் தழுவியது நடுக்கடலில் தவிக்குது துடுப்பிழந்த ஒரு படகு கரைசேரும் ஆவலுடன் காதலில் விழுந்த என் இதயம் போல - தியா -
-
- 11 replies
- 2.8k views
-
-
தாயின் மடி போல் தலையணை வேண்டும் தூங்கும் நிலையில் மனநிலை இல்லை வந்து போகுது வரவும் செலவும் நொந்து போகுது மானிட இதயம் உழைத்து உழைத்து உருக்குலைந்த பின் எஞ்சி இருப்பது நோயும் நொடியும் குருவித் தலையில் பனம் பழம் போலே ஏழை உழைப்பில் எத்தனை செலவு காற்றும் கூட காசாய் போனதால் வாழ்வில் எப்படி வசந்தம் வீசும் சுரண்டிய மீதியே ஊதியம் ஆகையில் உயர்வது எப்படி? வாழ்வு மலர்வதெப்போ? மனசு நிறைந்து கனவுத் தூக்கம் கண்டு மகிழ்வதெப்போ? தாயின் மடி போல் தலையணை வேண்டும் நோயில் படுக்கினும் தாயின் மடியே தலையணையாய் வேண்டும்.
-
- 6 replies
- 2.8k views
-
-
ஒரே வயிற்றில் பிறந்தோம் ஒரே உடுப்பை போட்டோம் ஒரே கோப்பையில் சாப்பிட்டோம் ஒரே படுக்கையில் படுத்தோம் ஒன்றாய் வளர்ந்தோம் ஒன்றாய் படித்தோம் எச்சில் கடி கடித்து ஏப்பம் விட்டு சாப்பிட்டோம் இவ்வளவும் எமக்கு அறியாப் பருவத்தில் வாழ்க்கையை புரியத்தொடங்கினோம் - தனி வழி போக தொடங்கினோம் காலிற்கு கட்டு போடும் வயதும் வந்தது தனி குடித்தனம் போனோம் அத்துடன் எல்லை சண்டையும் பக்கென்று வந்தது உன் மகளின் கலியாண கோலத்தை என் மகள் மதிலால் ஏட்டி பார்க்கும் அவலம் அக்கா என்று ஆசையுடன் அழைக்க வேண்டியவர்கள் கோபக்காரார் என்று எரிசலுடன் பார்க்கிறார்கள் இன்று நீ யாரோ நான் யாரோ வீதியில் போகும் போது முகம் பாராத நாங்கள் கோட்டில் ப…
-
- 18 replies
- 2.8k views
-
-
கருணாநிதியின் 'அவாள்' கவிதையால் சலசலப்பு புதன்கிழமை, ஆகஸ்ட் 20, 2008 சென்னை: முதல்வர் கருணாநிதி பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் குறித்து பூடகமாக எழுதியுள்ள கவிதை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதி தனது கவிதையில் சாடியிருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வரதராஜனைத்தான் என்ற கருத்தும் எழுந்துள்ளது. முதல்வர் கருணாநிதியின் கவிதைகள் அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்துவதுண்டு. ஆனால் நேற்று அவர் வெளியிட்டுள்ள கவிதை ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், அந்தக் கவிதையில் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் குறித்து கருணாநிதி பூடகமாக சாடியுள்ளார். யார் அந்தத் தலைவர் என்பது யாருக்குமே புரியவில்லை. இதனால் இந்தக் கவிதை பரபரப்பை ஏற்…
-
- 7 replies
- 2.8k views
-
-
தண்ணீர் தேசம் -I கவிஞர் வைரமுத்து கடல்... உலகின் முதல் அதிசயம். சத்தமிடும் ரகசியம். காலவெள்ளம் தேங்கிநிற்கும் நீலப் பள்ளம். வாசிக்கக் கிடைக்காத வரலாறுகளைத் தின்றுசெரித்து நின்றுசிரிக்கும் நிஜம். கடல்... ஒருவகையில் நம்பிக்கை. ஒருவகையில் எச்சரிக்கை. கடல்குடித்துக் கொண்டிருந்த கலைவண்ணன் மடியில்கிடந்த தமிழ்ரோஜாவை மறந்துபோனான். அவள் அழகின் நவீனம். சிறகுகளைந்து சுடிதார்கொண்ட சொப்பனதேவதை. ரத்தஓட்டம் பாயும் தங்கம் அவள் தேகம். பொறுக்கி எடுத்த உலக அழகுகளை நெருக்கித் தொடுத்த நேர்த்தியான சித்திரம். குமரி வயதுகொண்ட குமரி அவள். அவன் அழகன். இளைய அறிஞன். காதலிக்கும்போதும் கம்பீரம் குறையாதவன். என்ன யோசனை? என்றா…
-
- 12 replies
- 2.8k views
-
-
மீளும் எம் நிலங்கள். வீரம் உடுத்த மண் விடுதலையைப் பெற்ற மண் தீரம் மிகக்கொண்டு திக்கெட்டும் முரசறைந்து - சந்ததிக்காய் போரை ஏற்று போர்க்களத்தில் வாழ்வமைத்து பாரம் சுமக்கும் மண் பரம பிதா வாழும் மண் - நாம் மானமிழக்க மாட்டோம் ஒருபோதும் மண்டியிடோம் ஒதுங்க இடமின்றி ஒரு கோடி இடப்பெயர்வு நெருங்கி நின்று - எம் நெஞ்சை உதைத்தாலும் மருந்து மாத்திரைகள் மண்ணெண்ணெய்த்தடை இருந்து வருத்தும் இயற்கையின் சீற்றங்கள் வாட்டி வதைத்தெம்மை வாழ்விழக்கச்செய்தாலும் எண்ணத்தில் விடுதலையை எப்போதும் இழக்கமாட்டோம் வண்ணத்தில் மண்ணெடுத்து வரலாற்றைக் குழைத்து எண்ணற்ற வியர்வை சிந்தி எழுப்பிய விடுதலையை எம்மின மண்பற்றை சன்னத்தால் சரிக்கேலா சர…
-
- 3 replies
- 2.8k views
-
-
காகம் இருந்தும் கற்றுக்கொள்ள கிளிகளுக்கு கர்வம் அதிகம் நிறம் சரியில்லை என்றது ஆந்தைக்கு முழி சரியில்லை என்றது பிலக்கொட்டை குருவிக்கு துள்ளல் துடிப்பு அதிகம் என்றது உன் சத்தம் மெத்தக் கூடிப்போச்சு என்று செண்பகம் சொன்ன போது உனக்கு சோர்வு அதிகம் என்றது அடக்கி வாசி என்று அடைக்கலக் குருவி சொன்ன போது உடைத்து விடுவேன் மூக்கை என்று பேச்சுரிமை பேசியது பொந்துக்குள் கிளிகள் பத்திரமாக தனித்தனியே குந்தியிருக்கின்றது பொழுது சாயும் நேரத்தில் மட்டும் கூட்டம் கூட்டமாக தென்னோலைகளை கிழித்து விடுவதுடன் அடங்கி விடுகின்றது அது மார்கழியின் கெற்போட்டம் இல்லை கார்த்திகையின் கனமழை காற்றும் வேகமாக வீசி முன் வேலி முருங்கை முறிந்து விழ…
-
- 9 replies
- 2.8k views
-
-
இல்லறம் -வ.ஐ.ச.ஜெயபாலன். ஆற்றம் கரையில் இன்னும் தோற்றுப்போகாத மரம் நான். இன்று தெளிந்துபோய் புல்லும் சிலும்பாமல் நடக்கிறது காட்டாறு. விடியலில் இருந்தே ஒளியைக் கசக்கி ஹோலிப் பண்டிகைக் குறும்போடு வண்ணங்கள் வீசி தொட்டுத் தொட்டுச் செல்கிறது அது. நேற்று வெறிகொண்டாடியது தானல்ல என்பதுபோல. எனது கன்றுகள் முளைத் தெழுகிற நாள்வரையேனும் கைவிட்டகலும் வேர்மண் பற்றி பிழைத்திருக்கிற போராட்டத்தில் நேற்று அடைந்த விரக்தியை மறந்தேன் அது நானல்ல என்பதுபோல. நேற்றைய துன்பமும் உண்மை நாளைய பயமோ அதனிலும் உண்மை. எனினும் இன்றில் மொட்டவிழ்கிறதே வாழ்வு. சிறகசைக்கிறதே வண்ணத்துப் பூச்சிகள். துள்ளி மகிழுதே பொன்மீன்கள். நமது அன்றாட மறதிக்குப் பரிசுத…
-
- 11 replies
- 2.8k views
-
-
கடவுளின் பெயரினால் கட்சிகள் கூட்டுகின்றார் சாமியாரின் வேடத்தில் காம லீலை புரிகின்றார் கடவுள் என்று போற்றியவர் இன்று கம்பி எண்ணுகின்றார் நடமாடும் தெய்வம் என்று நல்லா நாடகம் ஆடுகின்றார் மூடநம்பிக்கையில் எம்மவர் மூழ்கிப்போய் இருக்கின்றார் கற்கள் பால் குடிப்பதாக பாலும் ஊத்துகின்றார் உலகில் சைவத்தை கேவலப் படுத்துகின்றார் இறைவனைத் தேடுவதாய் தாவிக் குதிக்கின்றார் அறியாமையினால் தம்மைத் தாமே ஏமாற்றுகின்றார் உனக்குள் இறைவன் உண்டு அதை ஏன் ஏற்க மறுக்கின்றாய்???
-
- 18 replies
- 2.8k views
-
-
போரடிக்கும் கருவி. எல்லாமே முடிந்து போனதாக இறுகிப்போனது மனசு. இருப்பினும் ஏதோவொரு தொடக்கத்தை நோக்கியே சஞ்சரிக்கிறது சிந்தனை. ஒவ்வொன்றிற்கும் ஒரு காலமுண்டு மௌனமாயிருக்கவும், பேசவும், பகைக்கவும், சிநேகிக்கவும். அதினதன் காலத்தில் அத்தனையையும் நேர்த்தியாக நகர்த்திச் செல்கிறது காலம். முந்தினதும் பிந்தினதுமாக சுழலும் காலத்தின் கைகளில் நானும் ஒரு போரடிக்கும் கருவிதான். 01.08.2015. தமிழினி ஜெயக்குமரன்
-
- 0 replies
- 2.8k views
-
-
யாழ்கள உறவுகளுக்காக மீண்டும் காதல் மொழி இசைத்தொகுப்பில் இருந்து ஓர் புதிய பாடல் உங்களுக்காக... http://vaseeharan.blogspot.com/ இங்கே அழுத்துங்கள் பாடலைக் கேட்கலாம் பல்லவி பேசு பேசு பேசு நீ காதல் மொழியை பேசு காலையிலும் தினம் மாலையிலும் நீ காதல் மொழியைப் பேசு (2) மலர்களின் மேலே மனம் மோதும் மௌனம் கூட கவிபாடும் பேசு பேசு பேசு நீ காதல் மொழியை பேசு இதயக் காதல் மொழியில் கொஞ்சம் கொஞ்சும் இசை கலந்தால் நெஞ்சம் குளிருமடி உலகம் இனிக்குமடி சரணம் 1 காதல் மொழியைப் பேசும் இதயம் கோடி முறை பிறக்கும் உள்ளத்தின் கூட்டில் உலகத்தை சேர்த்து புத்தம் புது உயிர் வளர்க்கும்(2) எழுத்தின் வடிவம் உணரும் முன்பே எழுந்தது காதல் மொழி …
-
- 22 replies
- 2.8k views
-
-
இதற்காகவா நீ பெற்றாய்.....???? பெண்ணவளை தெய்வமாக போற்றும் இந்த உலகினிலே... பெண்ணே உன்னை கேவலமாய் வந்தொருவன் இழிக்கின்றானே..... படுக்கையதை நீ விரித்து பத்து மாதம் சுமந்து பெற்றாய்.... அடி உன்னை வந்து இன்றவனே ஊனமதாய் இழிக்கின்றானே.... கண்ணயரா நீ அன்று கண்மணி போல் காத்தவனை பெற்றெடுத்த பெருந்தகையே.... உன்னையின்று இழிக்கின்றானே உன் மனசில் உதைகின்றானே.... இத்தனையும் கேட்டிடவா இன்றவனை நீ பெற்றாய்....??? -வன்னி மைந்தன் -
-
- 19 replies
- 2.8k views
-
-
மழை வரும்போதுதான் குடையை தேடுவான்! மூச்சு முட்டும்போதுதான் யன்னல் இருப்பதை நினைப்பான்! நாளை எப்பிடி- சிரிக்க வழியென்று எண்ணி இன்றைய பொழுதை அழுதே- தொலைப்பான்! உழைக்கும் காலத்தில் சேமிக்க நினையான்! உதிரம் செத்து போனதொரு காலத்தில்- காசை எண்ணி தேம்பி தேம்பி அழுவான்! படிக்கும் காலத்தில் சீ என்ன வாழ்க்கை என்று சினப்பான்! காலம் முடிந்தால் ஐயோ இனி என்னாகுமோ என் வாழ்க்கை என்று அழுவான்! அடை மழை பெய்யும் நாளில் - நீரை சேர்த்து வைக்க நினைக்கான்! அனல் வீசும் கோடை வந்தால் குடத்தை தூக்கி கொண்டு ஊர் ஊராய் திரிவான்! போர் செய்யும் வீரருக்கு ஐந்து சதம் கொடுக்கான்! ஊரெலாம் - குண்டுவீச்சில் ஒருமூலை சென்றொதுங்கினால் தமி…
-
- 16 replies
- 2.8k views
-
-
ஊனத்தின் வலியறியா மானிடா ஓரே ஒரு பொழுது உன் காலையோ கையையோ கட்டிப் போட்டு கிடந்து பார் . ஊனத்தின் வலியறிவாய்....
-
- 38 replies
- 2.8k views
-
-
நன்றி முகநூல்.
-
- 22 replies
- 2.8k views
-
-
கட்டிளம் காளை இது... தலைக்கனம் இருந்தது நேற்று வரை..!! கண்கள் செய்த சதியால் சித்தம் குழம்பிய காளை.. காலை ஒன்றில் சுபமுகூர்த்த வேளையொன்றில் கறவை ஒன்றின் கழுத்தில் ஏற்றியது நாண்.!! அடுத்த நொடியே காளையது... நான் எனும்.. திமிரிழந்தது. அடுத்த மணியில் காளை எனும் உணர்விழந்தது. அடுத்த நாளில் அடிமாடாய் போனது அதன் நிலை..! காலக் கழிவினில் அடிமாடு நிலையும் கழிய பூம்பூம் மாடாக.. கூடிப் பெருத்த கறவைக் கூட்டம் கூட்டமாகிப் பெருகி நின்று துரத்துது..!! தனித்துவிட்ட நேற்றைய காளை.. கிழடாகி தோலுக்கும் தசைக்கும் பெறுமதியற்று சுடலை ஏகுது..! இதுவே கலியுகத்தில் காளைகளாய் திமிரெடுத்த உயிர்களின் வாழ்க்கை எனும் வட்டமாகும்..!!! வேண்டுமா எனியும் இந்த நிலை.. புதிதாய் ஓர் விதி செய்…
-
- 33 replies
- 2.8k views
-
-
சிறு பருவத்தில் பார்த்து வியக்க வைத்தது - உன் நட்பு வாலிபப் பருவத்தில் பேசி ரசிக்க வைத்தது - உன் நட்பு துன்பத்தின் போது கண்ணீர் துடைத்தது - உன் நட்பு மகிழ்ந்த போது மனம் மகிழ வைத்தது - உன் நட்பு முதிர்ந்த பின்னும் என்றும் தொடருமடி - நம் நட்பு நட்புடன் இனியவள்
-
- 20 replies
- 2.8k views
-
-
-
தாய் மீது கொண்ட அன்பினால் தமிழ் வார்த்தைகள் என்னைக் கண்டு ஒழிந்திட துளியாய்க் கிடைத்த ஓர் துளியாம் தமிழ் எடுத்து கவிப்படையலுடன் கவியஞ்சலி செலுத்த வந்திருப்பது கோயிலும் சுனையும் கூடவே பனையும் தென்னையும் கடலோரக்காற்றிற்கு கவிதை பாடி நிற்கும் மேலல்வை பதி வாழ் வள்ளிப்பிள்ளை பெற்றெடுத்த பிள்ளை, உயிர் கொடுத்த தந்தையே உன் பணி ஓர் நாளில் உருக்கொடுத்த அன்னையே நீ என்னைக் கருவறையில் அமைதியாகத் து}ங்க வைத்து விளையும் காலம் வரும் வரை வரும் துன்பம் என்னும் வெய்யிலைத் தாங்கி உன் அன்பு என்னும் குடைக்குள் என்னைத் தாங்கி நிற்பாய் இயற்கையில் காலங்கள் மாறி மாறி வரலாம் இலத்திரனியல் நு}ற்றாண்டுகள் பல வந்தாலும் அணுவளவு கூட அன்னையே உன் அன்பு சிதைவதில்லை வ…
-
- 18 replies
- 2.8k views
-
-
சாந்த முகமதியாள் - அவள் சந்தண மணத்தழகாள் காந்தள் மலர் விரலாள்- என் கவிதைக்கு கருப்பொருளாள் கவரி மானொத்த மானத்தாள் கனிரசக் குரலழகாள் பாவலனாய் என்னைக் கவி படைக்க வழி சமைத்தாள் சின்ன இடை ஒடிந்து விழும் - அவள் சிங்கார நடையழகாள் அன்பொழுக பேசுவதில் -என் அன்னையையே வெண்றுவிட்டாள் சின்னக் குடைபோல் விரியம் செம்பவள வாய் திறந்தால் மின்னுகின்ற நட்சத்திரப் பல்லழகு கவிபடைக்கும் விம்மித் ததும்புகின்ற பொன் வண்ண அழகு அவள் தீபம் அவள் பெயரில் - எனக்கு அளவுக்கு மேல் ஆசை பட்டுத் தளிர் மேனி அவள் பாதம் செந்தாமரை -வெண் பட்டுத் துகில் உடுத்து நான் கவிஎழுத வைத்தவள் தான் என் கவிக்கு நாயகியாள் கற்பனைக்கு கருப்பொருளாள் ஆனால் இன்னும்…
-
- 18 replies
- 2.8k views
-
-
வலிமிகு கணங்கள் சுற்றிலும் ஒளிவெள்ளம் சுடர்விட இதயங்கள் மட்டும் இருள் மண்டிக்கிடந்த அந்த அந்தகார இருளின் நடுவே அலைகடலாய் குமுறி அனலாய் கொதிக்கும் அடங்காத வலிகள் வலிகளும் வாதைகளும் மருந்தின் வாடைகளும் மௌனமாய் ஓலமிடும் ஏக்கங்களுமாய் ஏகாந்தமாய் அந்த இரவுப் பொழுது நகர என் உயிரின் இறுதி ஊசலாட்டம் புன்னகை சிந்தும் வதனம் புதர் மண்டிக்கிடக்க நெற்றியிலோ முத்துமுத்தாய் வியர்வைத் துளிகள் சொர்க்கத்தின் கதவுகளாய் சொக்கவைத்த உதடுகளோ பாலைவனமாய்… உள்ளும் வெளியும் ஓடிக்கொண்டிருக்கும் உயிரோட்டம் ஒட்சிசன் குழாய்களினூடே… பக்கத்தில் இருந்த எலக்ரோனிக் இயந்திரம் சுவாசத்தை வாசித்துக்கொண்டிருந்தது ஒழுங்கற்ற முறையில் ஓடிக்கொண்டிருந்த அந்த ஒப்புதல் அறிக…
-
- 14 replies
- 2.8k views
- 1 follower
-
-
நீயிருந்த கருவறையில் நானும் இருந்தேன் பெருமை அண்ணா.... கல்லறையில் நீ உறங்க கண்ணீரில் நானும் இங்கே தாய் மண் காத்திடவே தலைவரின் வழியில் நின்றாய் தாய் தந்தை வாழ்வுக்காய் அகதியாக நானும் இங்கே கல்லறையில் நீயும் அன்பே நிம்மதி உறக்கமா அண்ணா??? நாலுசுவர் வீட்டினிலே இங்கே நரகப்பட்ட வாழ்க்கையடா நானும் வந்து இணைந்திடவே நாளங்கள் துடிக்குதடா நான் வந்து உனைக்கான காத்திருந்த வேளை அண்ணா..... வீரச்சாவு செய்தி கேட்டு என்னை நான் இழந்தேன என் குரல் கேட்காமல் எப்படி நீயும் உறங்குகின்றாய்? உன் இனிய குரல் ஓலி இன்னும் என் காதில் ஒலித்து ..... என் கண்களில் நீராய் கரையுது அண்ணா........ என்…
-
- 20 replies
- 2.8k views
-
-
கொடும் குளிர் கொஞ்சம் மழை கடும் வேலை களைப்பில் நான். கடுப்பில் வீடுவந்து. கொஞ்சம் விஸ்கி கொஞ்சம் ஜஸ் கஞ்சியைப்போல் கலக்கி கண்ணை மூடி உஸ்... அழைப்பு மணி டிங்...டிங்.. எனக்குள் எரிச்சல். கதவை திறந்தால் மேல் வீட்டு மரியா.. என்ன வேணும் என்னவர் வீட்டில் இல்லை என் மனதில் டண்ணணக்கா டணக்க்கு ணக்கா கொஞ்ச(ம்) வர முடியுமா?? தாராளமாய்.. ஈ..கி...கி.. மாடிப்படிகளில் மான் போல .அவள் குட்டைப்பாவாடை. அண்ணாந்து பார்த்தபடி அவசரமாய் . பின்னால் நான். அவள் வீடு அரை குறையிருட்டு அவசரப் போர்வழியாய் இருப்பாளோ ?? இப்பதான் போயிட்டுது மாற்றி விடுங்கள் என் கையில் பல்ப்பு. சும்மா ஒரு கற்பனை தான் ..
-
- 28 replies
- 2.8k views
-
-
அம்மாவாணை எனக்கொரு ஆசை அம்மாணை எனக்கொரு ஆசை ஊரில படுக்கவேணும் என்ர மண்ணுக்கு மேல... ஒப்பனுக்கெண்டாலும் நிம்மதியா நித்திரை கொள்ள.. எத்தனை நாளைக்கு இங்க குளிரில கிடந்து சாக இஞ்சை ஒரு கோதாரியும் இல்லை காசைத் தவிர.! சில்லம்பல்லமாய் சிதறிப்போச்சு எங்கட வாழ்க்கை மக்கரிப்பாங்கள் எங்கட ஊருக்குள்ள வந்ததால.! கடல் தண்ணி குண்டி நனைக்க கக்காவுக்கு இருந்த சுகம் "ஏசிக்" கக்கூசுக்குள்ள ஒப்பனுக்கும் இல்லை. கரவலை மீனில ஒரு சொதியும்.. கறுத்தப்பச்சையரிசி சோறும்... கறுமொறெண்டு அப்பளப்பொரியலும்... சுட்ட பத்தாம்பட்டி கருவாடும்... உந்த "சைனீஸ்" காரண்ட "பிறைட் றைஸ்" பிச்சை வாங்கும். சாதுவா கோப்பிறேசன் கள்ளைப்போட்டு தென்னை மர நிழலில சாரத்தை…
-
- 21 replies
- 2.8k views
-