Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இரக்கப்பட்டு கவிதை எழுதவில்லை ..... அவர்கள் என்னை விட எம்மை விட .... இரக்கமானவர்கள்.......!!! உணர்ச்சிவசப்பட்டும் எழுதவில்லை ..... அவர்கள் உணர்ச்சிகளை அடக்குவதில் .... என்னை விட எம்மை விட ..... உன்னதமானவர்கள் ......!!! தியாக உணர்விலும் எழுதவில்லை ..... அவர்கள் என்னை விட எம்மை விட .... தியாகத்தின் உச்சமானவர்கள் .......!!! காதல் வயப்பட்டும் எழுதவில்லை .... அவர்கள் என்னை விட எம்மை விட .... காதல் உள்ளம் நிறைந்தவர்கள் .....!!! உடன் பிறப்புகளோடு பிறந்து ..... உண்மையான இரக்கத்தை பகிர்ந்து ..... பருவவயது வரும்போது உடலில் .... பருவமாற்றம் சிறிது மாறும்போது .... தாம் விரும்பும் பருவத்தை விரும்பி .... வாழமுடியாமல் தவிர்க்கும் .... உணர்வுகளை உணர்ச்சிகளை ..... அடக்கி அடக்கி வாழும் ...…

  2. இரு வேறுபட்ட இல்லத்தில் .... பிறந்து ஒரு வேறுபாடும் .... தெரியாமல் வாழ்வது ... நல் இல்லறம் ....!!! ஆயிரம் கிளைநதிகள் .... சங்கமிப்பது சமுத்திரத்தில் .... ஆயிரம் எண்ணங்கள் .... சங்கமிப்பது , வாழ்வது.... நல் இல்லறம் ....!!! + கே இனியவன் இல்லறக்கவிதைகள்

  3. Started by putthan,

    Let us discuss The problem Faced by Tamil of the nation. Nation ... தமிழ் மக்களே தமிழ் மக்களே தேர்தல் வ‌ருதே திட்டும் சோங்கா வ‌ருதே உங்கள் பின்னே வோட்டும் வருதே வாக்குறுதிகள் பொய் பொய்யா வருதே ஐ.நா.விசாரணை வருதே உள்நாட்டு விசாரணை வருதே தீர்வும் ஸ்ரோங்கா வருதே Yeah, wow What a music ..!! Aaaaahhhhhh வி ஆர் so cool.. மறததமிழர்களே ,ஆண்ட தமிழர்களே நீங்க அழுவதை நாங்கள் இனி பார்க்கமாட்டோம் மறதமிழர்களே ,ஆண்ட தமிழர்களே வோட்டு போட்டுத்தான் மாட்டி விட்டிட்டீங்கள் சொக்கி தவிக்கிறோம் நாங்கள் வோட்டு கேட்டுத்தான் நைசா பேசுறோம் காக்க பிடிக்கிறோம் நாங்கள் வி ஆர் சோ கூல்

  4. அவர்கள் பேனைகள் எடுத்தனர் ...நாங்கள் ஆயுதம் எடுத்தோம் ..அவர்கள் வாட்டாரி எடுத்தனர் ...நாங்கள் ஏகே துடைத்து கொண்டு இருந்தோம் ..அவர்கள் திசைகாட்டி எடுத்தனர் ... நாங்கள் மோட்டாருக்கு பாகை பிடித்தோம் ... அவர்கள் வரைபடம் பார்த்தனர் .. நாங்கள் ஜிபிஸ் இல் இலக்கு வகுத்தோம் .. அவர்கள் கட்டிடம் கட்டினர் அழகா ... நாங்கள் அவைகளுக்கு குண்டு வைத்தோம் ... அவர்கள் அரசியலை படித்தனர் .. நாங்கள் அரசியல் படிப்பித்தோம் .... அவர்கள் நல்லுறவு பற்றி பேசினார் .. நாங்கள் நாலுபேரை போட்டா சரி என்றோம் .. அவர்கள் நாடுகளை அணைத்து வந்தனர் ... நாங்கள் உள்ளவன் எல்லாம் துரோகி என்றோம் .. அவர்கள் எம்மை அழிக்க வேண்டியவர்கள் என்றனர் .. நாங்கள் முடிந்தா செய்யேன சவால் விட்டோம் .. அவர்கள் முன் நகர முன் நகர .. நாங…

  5. படுவான்கரைக் குறிப்புகள் – (நீள்கவிதை)-கருணாகரன் (Remarks Of Paduvankarai) கைவிடப்பட்ட போராளியின் குறிப்பு (01) முள் குத்திய கால் சிந்திய ரத்தத்தில் படுவான்கரைப் புழுதி சிந்திய ரத்தம் மட்டுமல்ல, எழுந்த அழுகையொலியும் படுவான்கரையின் காய்ந்த குரல்தான். அங்கிருந்து நானூற்றுக்கு மேல் சின்னப்பெடியனுவள் வடக்கு நோக்கி நடந்தம். அது விடுதலைப்பயணம் என்றார்கள் எந்த நட்சத்திரமும் வழிகாட்டவில்லை கூடிப் பழகியவரும் கூட்டிச் சென்றவரும் பிறத்தியாராகினர் அறிந்திராத திசையில் விரும்பிச் செல்லாத பயணத்திற்கு வழிகாட்டிகள் உண்டென்றார். நிகழ்ந்த பயணத்தில் வழிநடத்தும் கட்டளைக்குக் கீழ்ப்படிந்த தலைகளின் கீழ் இதயம் மறுத்துரைத்தது அதுவல்லத் திசை அதுவல்ல வழியென்று. காலடியில் நாறிக்கிட…

  6. முகப்புத்தகத்தில் கிறுக்கும் வரிகளை இங்கும் பதிவிடலாம் என்று... ------------------------------------------------------------------------------------------------------------------------ நாசித்துவாரங்களை நனைத்த மரணத்தின்வாசனை இன்னும் நீங்கவில்லை... காவுகொடுத்த குட்டித்தீவு காய்ந்து கிடக்கிறது குருதிச்சுவடுகள் அழிக்கப்பட்டு... வெறிகொண்ட காற்றை சாடுவதற்கு நட்பின் வாசத்தை தம் வேரிலும் துயரத்தின் கதையை தம் ஆன்மாவிலும் சுமந்து நிற்கின்றன சிறுமரங்கள்.. நண்பர்கள் கேள்விகள் அற்று பெருந்தெருவில் சுடப்பட்ட வண்ணாத்துப்பூச்சிகள்... 31/10/2013

  7. கருணாகரன் கவிதைகள் ஓவிய உதவி தா. சனாதனன் சொல் 01 ‘தம்பியென்றால் சகோதரன்’ என்றான் அண்ணன் ‘தம்பி என்றால் குகன்’ என்றான் ராமன் ‘தம்பியென்றால் எங்கள் வீட்டின் வேலைக்காரப் பையன்’ என்றாள் பெரிய வீட்டுப் பெண். ‘தம்பி என்றால் இளையவன்’ என்றார் ஆசிரியர் ‘தம்பி என்றால் பிரபாகரன்’ என்கிறார் வைகோ. ‘தம்பி என்றால் என் படைத்தளபதி’ என்றான் மன்னன் தம்பி என்றால் யாரென்று நீங்கள் சொல்லுங்கள்? 02 ‘அம்மா என்றால் உயிரின் வேர்’ என்றாள் அக்கா. ‘அம்மா என்றால் அன்னை, தாய், பெற்றவள், பாசம் நிறைந்தவள்...’ என்றெல்லாம் விழித்துரைத்தார் ஆசிரியை ‘அம்மா என்றால் இரக்கம் நிறைந்தவள்’ என்றான் பிச்சைக்காரன் ‘அம்மா என்றால் உயிரின் வாசம்’ என்றான் மகன் ‘அம்மா என்றால் எங்கள் அம்மா தான்’ என்கிறார் அதிமுக …

  8. விழிமூடிய அந்த செந்தமிழ் வீரர்கள் By திலீபன் on May 23, 2015No Comment ஆண்ட தமிழினத்தின் இழிவு நிலை கண்டு மீண்டும் தமிழர் நிலை இவ்வுலகில் உயரவெனக் களமாடத் தானைத் தலைவனின் வழி சென்று எங்கள் தலைவனின் எண்ணமதை நிறைவேற்ற மகிழ்வோடு புன்னகைத்து தம்முயிரை தந்து விழி மூடியவர்களே அந்தச் செந்தமிழ் வீரர்கள்! எம் செந்தமிழ் வீரர்கள் விழிமூடிய மண்ணிலே நரிகளும் பேய்களும் ஆட்சி புரிகையிலே அவர்கள் கல்லறைகளைக் கூடக் காணமுடியாத அவல நிலைக்குள்ளே எம் தேசம் அழுகின்ற சூழலை எண்ணுகையில் என் இதயம் வெடிக்கிறது இணைந்தெழுவோம் நாமிங்கு தேசம் மீட்பதற்காய்! நாம் மடிந்தாலும் எமது புலம்பெயர் உறவுகள் எம் விடுதலைப் பணியை முன்னெடுப்பாரென்றே விழி மூடினார்களே அந்தச் செந்தமிழ் வீரர்கள் அவர்களின் கனவை ந…

    • 0 replies
    • 655 views
  9. வானவில்லின் நிறங்களாய் உன்னில் பல வர்ணம் நேரத்துக்கொன்றாய் நாளுக்கொன்றாய் நிறம்மாறிக்கொண்டிருக்கிறாய் நீ உன்மீது கொண்ட நம்பிக்கைகள் இன்னும் வெள்ளை நிறமாகவே என்னுள் இருக்கின்றன காற்றடிக்கும் போதும் கடும் மலையின்போதும் கூட அவை நிறம்மாறும் நிலையற்று நிற்கின்றன ஆனாலும் மனம் என்னும் மாயக்கண்ணாடி சூறைக் காற்றின் வாடையில் மெலிந்து சுழல் காற்றில் சிக்கித் தவித்து இழப்பை எதிர் நோக்கும் வலுவற்று ஓடி ஒளிந்துகொள்ள இடம்தேடி ஒற்றைக்காலில் நின்றுகொண்டிருக்கிறது மீட்க முடிந்தவன் நீ மட்டுமே எனினும் பிடிப்பு எதுவுமற்று பேரன்பு சிறிதுமற்று பருவம் தப்பிக் காய்க்கும் மரமாய் பார்த்துக்கொண்டிருக்கிறாய் நீ என்ன சொல்லி என்ன இயல்பே அற்ற உனக்கு ஏற்புரை எது சொல்லினும் எள்விளையா நிலமாய் உன்மனம்…

  10. புலிகளைச் சீண்டிப்பார்க்கும் சில ”கழுதைகளுக்கு” ..... ஒருநாள் என் நாட்டு அரசியல் சாரா அறிவு ஜீவிகள் எளிமையான எம் மக்களால் குறுக்கு விசாரணை செய்யப்படுவர். தன்னைச் சிறுகச் சிறுக இழந்து கொண்டிருந்த தீச்சுடரென மெதுவாக அவர்கள் தேசம் செத்துக் கொண்டிருந்தபோது அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று விசாரிக்கப்படுவார்கள். ஒருவரும் அவர்களிடம் அவர்கள் உடைகளைப் பற்றியோ அவர்களின் மதிய உணவையடுத்த நீண்ட உறக்கத்தைப் பற்றியோ கேட்கப் போவதில்லை. அவர்களின் ‘உலகலாவிய’ கருத்துக் கொண்ட மலட்டுப் புரட்சியைப் பற்றிக்கூட அறிய எவரும் ஆவலாக இல்லை. அவர்கள் தங்கள் நீதியை எப்படிப் பெற்றார்கள் என்று ஒருவருமே கவலைப்படவில்லை. கிரேக்கப் புராணங்களைப் பற்றியோ ஒரு சுய மாறுதலை அவர்கள் உணர்…

  11. தரிசனத்தின் சூக்குமப்பொழுதொன்றில் கண்ணீர் ரேகைளை அழித்து பிரியத்தின் கோடுகளை வரையத் தொடங்குகிறாய். பொன்னி, ஆராதனைக்குரியவளே, பிரபஞ்சப் பெருங்கோடுகளடியில் சிதறுண்டு கிடக்குமென் கனவுகளை பார். துருவ நிரலை மீறி நுழைந்த வலசைப்பறவையாய் அத்துவானவெளியில் ஒற்றறுத்துப் பாடுமென் குரலைக்கேள். துளைகளைத் தீண்டும் காற்றின் துயரங்களை நானறிவேன். பிரியமே, ஒரு பின்பனிக்கால குளிர் சுமந்துவரும் உன் பிரியத்தை எப்படி இழப்பேன். "உயிரே உயிரில் வலி எப்போதும் முடியாதென்றுரைக்கும் நீ" எந்தப் பருவத்தில் வந்தடையப்போகிறாய் ? உன்னிருத்தல் அன்பாலானது அன்பாலனதெல்லாம் பெருந்துயரானது. அன்பின் துயரப்புள்ளிகளில் மிதந்தலையும் சரீரம் நிர்மலமானது. நான் மிதந்தலைகிறேன். …

  12. மறவர் படை தான் புலிப் படை அதில் தனிப் படை தான் கரும்படை..! பாடை ஏகும் நாள் கணித்து மணித்துளியும் செத்தே வாழும் மனிதருள்.. சாவுக்கு மணி சமைத்து இனம் மண் காத்த படை தான் கரும் படை..! கந்தகப் புகைக்குள் உயிர் மூச்சு வாங்கி உடலை காற்றாக்கி சுழன்றடித்த புயல்கள் எதிரி படைகள் சிதறடித்த வெற்றிப் படை தான் எங்கள் கரும் படை..! பூமியில் வாழத் துடிக்கும் மானுட மனங்களிடை இன மானம் காக்க சாகத் துடித்த அர்ப்புதங்கள் நிறை அந்தப் படை தான் மில்லர் வழியில் வந்த கரும் படை..! தமிழர் படை தான் புலிப் படை அதில் தனிப் படை தான் கரும்புலிகள் படை..! யூலை 5 இல் உதித்த கரும் படை..! ஆக்கம்- ஜூலை-05,2015

  13. அம்மா....!!!நடை பழகும்போது ...கை கொடுத்தாயம்மா .....இடறி விழும்போது ...இடுப்பில் சுமந்தாயம்மா ....பள்ளி செல்லும் போது ....கால் வலிக்க நடந்தாயம்மா ....புத்தகப்பையுடன் என்னையும் ...தோள் சுமந்தாயம்மா ....!!!அம்மா ....!!!கருவறை சுமைமட்டும் ....நீ சுமக்கவில்லை ....உன் உடலின் அத்தனை ....உறுப்புகளிலும் என்னை ....சுமந்தாய் ...........!!!அம்மா .....!!!மடியில் வைத்து பாடம் ....தந்தாய் இப்போ நான்....பலபடிகள் தாண்டி பலநாடு ....சென்றேன் - புரிந்தேன் ...அன்னையின் மடியைவிட ....எந்த ஒரு பல்கலை கழகமும் ...இல்லவே இல்லை ......!!!அம்மா ....!!!கவிதை எழுத முனைவேன் ....வார்த்தைகள் வந்து தடுக்கும் ....அம்மா என்றவுடன் அத்துணை ...சிந்தனையும் வெற்றிடமாய் ....மாறிவிடும் - தாயே உம்மை ...எதனோடு ஒப்பிட…

  14. மண்ணின் அந்தரங்க இருளில் புணர்ந்திருக்கும் மரத்தின் வேர்களைப்போல் ஆட்சிப்பீடம் சேர்ந்தே இருக்க காற்றின் உதைப்பில் முட்டுண்டு தான் முறிந்ததென்றால் மரம் அழியும் என எண்ணி தன்னை தானே முறிக்கும் கிளைகளைப் போல் மண்தின்னும் மலமாகுறான் தொண்டன்

  15. தூவனம் தூவத் தூவ மழைத்துளிகளில் உன்னை கண்டேன் என் மேலே ஈரம் ஆக உயிர் கரைவதை நானே கண்டேன் கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன் அவரே வரமாய் வருவதை இங்கு பார்த்தேன் வேறு என்ன வேண்டும் வாழ்வில் குயில் என மனம் கூவும் மயிலென தரை தாவும் என்னோடு நீ நிற்கும் வேளையில் புழுதியும் பளிங்காகும் புழுக்களும் புழுகாகும் கால் வைத்து நீ செல்லும் சாலையில் யார் தீங்கு செய்தாலும் மன்னிக்கத் தோன்றும் நீ தந்த என் மாற்றம் என் வெட்கம் தூண்டும் காதல் வந்தால் கோபம் எல்லாமே காற்றோடு காற்றாக போகின்றதே . இரவுகள் துணை நாடும் கனவுகள் கடை போடும் நீ இல்லை என்றால் நான் காகிதம் விரல்களில் விரல் கோர்க்க உதட்டினை முகம் பார்க்க நீ வந்தால் நான் வண்ண ஓவியம் நெஞ்சுக்குள் பொல்லாத ஆறேழு வீணை ரீங…

    • 1 reply
    • 1.3k views
  16. இனியவளே... தளர்நடை பாதங்களுக்கு உனது கரங்களின் தேவையை பூர்த்தி செய்யும் இந்த குடை தான் இப்போது துணையாயுள்ளது குடைக்கார ஐயாவிற்கு சாப்பாடு போடு குடைக்கார கிழவனை திண்ணையில் துங்க விடாதே குடைக்கார தாத்தாவிற்கு லூசு பிடிச்சுருக்கு என ஒற்றை அடையாளமுமாய், வாழ்தலின் சான்றாயுமுள்ளது அடைமழை நாளில் நனைந்து வருமென்னை துவட்டியபடி வரும் உனது வசவுகளை போலல்லாது மௌனமாய் நின்று காக்கிறது பெருமழைகளில் முன்னெப்போதையும் விட பலவீனமாய் இருந்தாலும் இந்த குடையை விரிக்குமளவு திரானியோடிருப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சி எனக்கு பிராயத்தின் நினைவுகள் அலையோடும் பொழுதுகளில் குடையை விரித்து சுற்றியபடி இருப்பேன் கானல் வெளியில் நாமிருவரும் குடைக்குள் நடந்து போ…

  17. வேதியியலும் காதலும் --------------------------ஐதரசனின் இரண்டு பங்கும் .... ஒட்சிசனின் ஒருபங்கும் .... சேர்ந்த கலவையே நீர் -H2O .....!!! என்னுடைய நினைவுகளையும் ..... உன்னுடைய நினைவுகளையும் .... வேதனையுடன் சுமந்து கொண்டு .... இருக்கும் நம் காதல் ... வேதியல் சூத்திரம் தான் ....!!! வேதியல் வகுப்பறையில் .... வேதியல் படித்தானோ .... தெரியவில்லை .... வேளை தவறாமல் ... உன் வேடிக்கைகளை ரசித்திருக்கிறேன் .....!!! வேதியலில் ... ரேடியத்தை கண்டு பிடித்த .... மேரி கியூரி குடும்பம் .... வேதனையான மரணத்தை .... அடைந்தார்கள் .... புற்றுநோய் ......!!! காதலும் .... ஒரு புற்றுநோய் .... உன் நினைவுகளால் நானும் ... என் நினைவுகளால் நீயும் .... கொஞ்சம் கொஞ்சமாக .... இறந்து கொண்டிருக்கிறோம் ....!!!

  18. எப்போதும் நான் அப்படியே இருக்கிறேன் மற்றவரைப் புரியமுடியாது உற்றவரின் துயரம் அறியாது கற்பனை வானில் பறந்துகொண்டே கடிவாளமற்ற சிந்தனையோடு என்னைக் காயப்படுத்துவோரை கழற்றி எறிய முடியாதவளாய் மீண்டும் மீண்டும் மனதில் விழுப்புண் தாங்கியபடி விழுங்க முடியாதைதை எல்லாம் எப்படியோ விழுங்கியபடி ......... எப்படி மீண்டு வருவேன் நான் பீனிக்ஸ் பறவையாய் மீண்டும் எழ மனம் ஆசை கொள்கின்றது ஆனாலும் சூழ எரிந்து கொண்டிருக்கும் நெருப்பின் வீரியத்தில் கைகொடுக்க யாருமேயற்று காணும் இடம் எங்கும் தீ நாக்குச் சூழ செய்வதறியாது தவிக்கிறேன் நான்

  19. இது 2006 இல் யாழ் களத்தில் நான் பதிந்த கவிதை. கனவுகள் பொய்த்துப்போனாலும் உணர்வுகள் மனதின் ஆழத்தில் இன்னும் ஏக்கத்தின் அலைகளை எழுப்பியவாறே............ இது , நாம் தொலைத்த ஒரு பெருமை மிகு சகாப்தத்தின் மீட்டல் இன்றைய சூழலுடன் பொருத்தி, தியாகங்களைக் காயம் செய்யாதீர்கள். இன்னுயிதன்னை நெய்யெனச்சொரிந்து இலட்சியத்தீச்சுடர் காத்தவரே -உங்கள் புகழுடல் உறங்கும் பூமியில் -வெற்றி மலைர்கலைத்தூவி நாம் வணங்கிடுவோம் . விதையென மண்ணில் வீழ்ந்தவரே -உங்கள் விதை குழிகளில் வேர்பாய்ச்சி ..... வான்வெளி எங்கும் கிளைபரப்பி.... விழுதெறிந்து வளர்வோம் இனி என்றும் வீழமாட்டோம் காலக்கிண்ணமதில் -இன…

    • 0 replies
    • 1.1k views
  20. மண்ணில் நாம் வந்து பிறந்துவிட்டோம் வாழ்வு எது என்றும் அறிந்துவிட்டோம் எண்ணிலாத ஏக்கங்களை எம்மைச் சூழ ஏற்றிவிடோம் பொன்னின் ஆசைகள் போதையாகிட பொருள் மட்டுமே வாழ்வுமாகிட பேரவா கொண்டு பேதைமை கொண்டு போட்டிகள் கொண்டிங்கு போதையிலேயே வாழுகிறார் மண்ணின் ஆசைகள் மனதெங்கும் மாய்த்திட மானமிழந்து மதிகெட்டலைந்து சுற்றமிழந்து சுறுசுறுப்பிழந்து சொந்தமிழந்து சொத்துமிழந்து செக்குமாடுகளாய் வாழுகிறார் பெண்ணின் ஆசையில் கண்ணும் குருடாகிட பேரிடர் பல தாங்கியே நிதம் பெண்டிர் மறந்து பெருமை மறந்து பித்தராய்ப் பலர் வாழுகிறார் உயிர் காக்க உணவே இன்றி உடல் காக்க உடையும் இன்றி உறவேதும் உதவிட இன்றி உணர்வு கொன்று உயிர் காவ உள்ளம் வென்று உணர்வு காக்கும் உருக்குலைந்த உண்…

  21. மஞ்சள் வெயிலாய் சிரித்தாய் , கொஞ்சும் குயிலாய் சிலிர்த்தாய் நெஞ்சில் புயலாய் அடித்தாய் மிஞ்சும் செயலை தடுத்தாய் . அடடா உன்னை பார்த்ததும் மனசெல்லாம் பறக்குதே அடியே ஒன்னும் புரியல என் அழகெல்லாம் மறக்குதே வள்ளுவன் சொன்னதை போல கண்களும் கண்களும் பார்க்க சொற்களில் சொற்களில் பேச அர்த்தமும் அர்த்தமும் ஏதோ .... உன் பேரில் என் பேரும் சேரத்தான் வேணும் தமிழ் மொழி கொஞ்ச கவிதைகள் மிஞ்ச ஆகாயம் தூளாகும் நீ பார்த்தால் என்காயம் இங்கு ஆறாதே நீ சிரித்தாலே என்ன மாயம் தனை செய்தாய் ஏ பெண்ணே கானலாய் மிதக்கிறேன் உன்னாலே உடைகிறேன் ஆலென்று இருக்கிறாய் வேராக துடிக்கிறேன் . வள்ளுவன் சொன்னதை போல கண்களும் கண்களும் பார்க்க சொற்களில் சொற்களில் பேச அர்த்தமும் அர்த்தமும் ஏதோ .... …

  22. காதல் பிரிவுகள் பலவகை .....!!! காதல் புரிந்துவிட்டு பல்வேறு காரணங்களுக்காக உயிரை துறக்காமல் காதலை துறப்பது ....!!! ----------------- கவிதை 01 ----------------- இரண்டு ரோஜாக்கள் அழகாக பூத்து ... உதிர்ந்து விழுவது .... காம்பு என்னும் பகுதி ... நினைவுகளோடு ... இருந்து கொண்டே இருக்கும் ...!!! +++++++ உயிராய் காதலித்து கொண்டிருக்கும் போது ஒரு உயிர் உலகை விட்டு பிரிவது ஆனால் தற்கொலையில்லை ....!!! ------------- கவிதை 02 ------------- இரண்டு ரோஜாக்கள் .... அழகாக பூத்து .... ஒரு ரோஜா கருகிவிட .... மற்றைய ரோஜா .... வாடிக்கொண்டிருப்பது....!!! +++++++++++++ உயிராய் காதலித்த உள்ளத்தில் ஒன்று எங்கே சென்றது...? எப்படி பிரிந்தது ....? மீண்டும் வருமா ..? ------------- கவிதை 03…

  23. வள்ளுவன் காதல் - 2 காம்பரிந்த மலர் சொரிந்த மஞ்சம் - அங்கே கட்டழகி வாசுகிக்கோ காதல் நெஞ்சம். தாம்பத்ய சுகம் தேடிச் செந் நாப்போதன் தாவுகிறான் மருவுதற்கு அவள் மறுத்தாள். தேம்புகிறாள் "சீ! தூரப் போம்!" என்கின்றாள் திகைத்தவனோ "ஏனடி நீ பிணங்குகின்றாய்? நான் புரிந்த கொடுமையென்ன? சொல்!" என்கின்றான் நங்கையவள் "தும்மிய(து) ஏன்?" என்று கேட்டாள். "தும்முதற்கும் விம்முதற்கும் தொடர்புண்டோடி? துரோகமென்ன நான் புரிந்தேன்?" என்றான் காளை. "உம் மனதில் என்னைவிட யாரோ உள்ளார், உதனாற்தான் அவள் நினைவாற் தும்மல்." என்றாள். "வழுத்தினாள் தும்மினேனாக - அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீரென்று (திருக்குறள்-காமம்)" "அடி போடி பைத்தியமே! எனக்கு உன்றன் அழகைவிட …

  24. சொல்லடுக்குகளில் பின்னிக்கிடக்கும் எது நீயென்று அறியமுடியவில்லை எப்படி நிராகரிப்பது. அலையும் நரம்புகளில் எந்த நரம்பில் நீ எப்படித்தான் நிறுத்துவது. சகி இந்தக் கவிதையில் எந்த இடத்தில் நிறைகிறாய். எந்த வார்த்தைகளில் வெளியேறுகிறாய் புரியவில்லை. முகிலிடை வெட்டும் மின்னல் மிதந்தலைந்துவரும் வாசம் பெருந்துயரொன்றின் மெல்லிய நீட்சி எதிர்பாராமல் மனதுக்குள் அவிழும் பாடலின் மெட்டு எழுதென்று கலைக்குமுணர்வு மீறி நிற்கும் சோம்பல் நீயும் இவைப்போல அல்லது இவையும் உன்னைப்போல. பேரன்பே, யுகஅழிவின் இறுதிக் கணத்தில் கிடைத்த பேழை நீ. ஆதியிலிருந்து சுமந்திருந்த பிரியத்தை இறக்கிவைத்து இளைப்பாறுகிறாய். வா ஓய்வெடு. யுகமீட்சியின் பரிபூரணத்துவம் அன்பாலே நிகழு…

  25. ஆழ்கடலின் அலை அயத்தமானது அது புரியாது நானும் அதன் அழகில் மயங்கி அலையின் சீற்றம் புரியாது கடலின் ஆழம் தெரியாது கரையின் ஓரமாய் நின்று ஆர்ப்பரிக்கும் அலை கண்டு அகமகிழ்ந்தே காத்திருந்தேன் அலை உயந்து பின் தணிந்தது சுழன்ற காற்றின் திசையெங்கும் சுழற்றி வாரி நீரை இறைத்தது என்மேல் தெறித்து விழுந்த நீர்த்துளிகள் மேனி நனைக்க அலையின் மகிழ்வில் நானும் ஆர்ப்பரித்து நின்றேன் எழுந்தது எதிரியாய்ப் பேரலை என் அங்கம் அத்தனையும் சுருட்டி ஆத்மாவின் மூச்சை நிறுத்தி சிந்தனை எல்லாம் அழித்து சிகரங்கள் எல்லாம் தொட்டவளை தன்னை நம்பியே நின்றவளை ஆழ்கடலின் இருண்ட அறையில் எழுந்திடமுடியாப் பாறைகள் நடுவே எதிரியாய்த் தள்ளி எக்காளமிட்டது என்ன செய்வேன் நான் எழுந்துவர முடியவில்லை எ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.