கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
உனக்காக காத்திருக்கையில் என்னைக் கடப்பவர்கள் மட்டும் ராசியானவர்கள் உன் முகத்தை அவர்களில் தேடுகிறேனே * அந்த சூரியனுக்கு யார் என்னைக் காட்டிக்கொடுத்தது பாருங்கள் நிலாவுக்காக காத்திருக்கிறேன் என்ற கோவத்தில் என்னை கறுப்பாக்கி கொண்டிருக்கிறது * உனக்காய் காத்திருந்த இடத்தில் கொஞ்ச நேரம் நி ன் று பார் உன்னைப் பெற என்னை நான் இழந்த வலி புரியும் * தாமதமாய் வருவதையே பழக்கமாய் கொண்டவள் நீ தெரிந்தும் உனக்காய் காத்திருக்க பழக்கப்பட்டவன் நான் * " நிலா" என்று யார் உனக்கு பெயர் வைத்தது உனக்காய் என்னை தேய வைத்துக் கொண்டிருக்கிறாய் -யாழ்_அகத்தியன்
-
- 3 replies
- 1.3k views
-
-
இயந்திர வயல் வெண்நாரைகளின் இயந்திரவயல்களில் கறுப்புக்காகங்கள் உருக்குலைய கரிய மை உதிர்க்கும் எழுதுகோல் உறைத்துப்போனது. மூன்றாந்தர உலகநாடுகளில் போரை வளர்க்கும் முதல்தர வல்லாண்மைகளின் பிடியில் சிக்கி மீளமுடியா வலிக்குள் புதைகிறது மனிதம் கந்தகப் பரீட்சிப்பு வளங்களைத் தின்ன, உயிருக்காய் அஞ்சிப் புகலிடம் தேடும் மனித வளங்களைத் தின்று கொழுத்தன வலியவை. நூற்றாண்டுகளின் கடப்பில் தொடர்ந்தபடி.. மனுநீதி வல்லரசுகளின் காலடியில் நசியுண்டு கிடக்க, போலி வெண்புறாக்கள் பூரித்துப் பறப்பது மூன்றாந்தர நாடுகள்மேல் திணிக்கப்பட்ட சாபம் எண்ணச் சூடேற்றலில் மனிதம் கொதிக்க இயந்திர வயல்களின் அழைப்பு.. உறைய வைத்தது.
-
- 5 replies
- 1.9k views
-
-
இயற்கை எம்மை இயன்றவரை விட்டு வைத்திருக்கின்றது எதோ தன்னாலான இரக்கத்தோடு எல்லோரையும் இட்டு நிரப்பியபடி தூயனவாய்க் காற்று துகள்களற்று தலைவிரித்தாடாததால் நாம் தப்பிப் பிழைக்கிறோம் தரையில் நடக்கிறோம் கோபத்தின் உச்சியில் ஆழ்கடல் கொந்தளிக்காததால் கூரைகளின் கீழ் நாம் குதூகலங்கள் சுமந்தபடி குளிர் காய்கிறோம் தீயின் நாக்குகள் தீவிரமற்று திசைமாறி இருப்பதனால் தீங்குகள் அற்று நாம் தில்லுமுல்லுகள் செய்தபடி தினாவெட்டாய்த் திரிகிறோம் பயிரிடா நிலங்கள் பரிதவிப்பின்றி பக்குவமாய் இருப்பதனால் பசுமை குன்றினும் பாறைகளாகி பயன்பெறா மாந்தனின் போலி முகம் கண்டும் தாம் பொறுமை கொண்டு நிற்கின்றன வானப்பெருவெளி வீழ்ந்துவிடாது வெடிப் பிளம்புகள் சூழ்ந்துவிடாது வெட்ட…
-
- 3 replies
- 635 views
-
-
[size=5] இயற்கை அழகி [/size] காட்டுக்குப் போனாலும் அவள் நினைவு கடலுக்குப் போனாலும் அவள் நினைவு தோட்டத்துக்குப் போனாலும் அவள் நினைவு துரத்துதே எப்போதும் அவள் நினைவு துள்ளிவரும் மானில் அவள் கண்கள். தோகைமயில் நடக்கயிலே அவள் சாயல் பேசும் கிளிமொழியில் அவளின் குரல் பேதையாய் அலைக்குதே என மனதை. மூழ்கி முத்தெடுத்தால் அவள் பற்கள் முன் கிடக்கும் சங்கோ அவள் கழுத்து புடர்ந்து நிற்கும் பவளத்தில் அவள் உதடு பார் மோதும் அலைபோலே என் நெஞ்சு. வெண்டைக்காய் தொடுகையிலே அவள் விரல்கள் வெண் புடலங்காய் பார்த்தாலே அவள் உருவம் பூசணியும் செவ்விழநீரும் பின்முன் அழகுசொல்ல பூரிப்பால் துள்ளுதே என் உள்ளம் நான் மட்டும் அவள் நினைவில் மிதக்கின்றேன். அவள…
-
- 0 replies
- 926 views
-
-
மனிதன் காட்டுக்குள் ..... நுழையும் போது...! குரங்குகள் தாவும் ...! நரிகள் ஊளையிடும் ...! குருவிகள் ஓலமிடும் ..! இத்தனையும் அவை சந்தோசத்தால் .. பயத்தால் செய்யவில்லை.... மரங்களுக்கு அவை .... கொடுக்கும் -சமிஞ்சை... மனிதர்கள் வருகிறார்கள்... மரங்களே விழிப்பாக ..... இருங்கள் எச்சரிக்கின்றன ....!!! & இயற்கை வள கவிதை கவிப்புயல் இனியவன்
-
- 3 replies
- 1.1k views
-
-
ஒரு அழகான காலைப்பொழுது !சூரியன் மலைகளில் பட்டுத் தெறித்ததில் பூமியெங்கும் பரவசம் ! மலை விட்டு இறங்கிய அருவி மெதுவே தரை தட்டி நதியானது. பார்வை பட்ட இடமெல்லாம் திரும்ப மனமின்றி பதிந்து நின்றது. நதி நிலை அருகே தனி வழி நடந்தேன். கண் முன்னே கடவுளின் உலகம் போல் கரும் கல் மலை! நிமிர்ந்து பார்க்கும் போதெல்லாம் அந்த இயற்கை கட்டிய சுவரின் பின்னே இன்னுமோர் உலகமும், மனிதர்களும் இருக்கிறார்கள் என்கிற பிரமை எழுவதை தவிர்க்க முடியவில்லை. உயர்ந்து நின்ற அந்த மலை மௌனத்தின் பரிமானம் எனக்கு உணர் த்தி நின்றது. அடிவாரத்தில் போய் அப்படியே தங்கி விடலாமா, மனம் கேட்டது..! உற்றுப் பார்த்த போதெல்லாம் என்னை வாவென்று அழைக்கிறதோ, என்ணத் தோன்றியது. ' உனக்கும் எனக்கும் அதி…
-
- 10 replies
- 11.2k views
-
-
பச்சை புல்வெளி-------பச்சை புல் வெளியில் .....உச்சி வெய்யிலில் நின்றாலும் ....உச்சி குளிரும் மனிதனே ....உச்சி குளிரும் .....!!!கண் ......எரிச்சல் உள்ளவர்கள் ....கண் கூச்சம் உள்ளவர்கள் ....பச்சை புல் வெளியை ....உற்று பார்த்துவந்தால்.....கண்ணின் நோய்கள் தீரும் ....மனிதா கண்ணின் நோய்தீரும் ....!!!அதிகாலை வேளையில்....பனித்துளி பன்னீர் துளிபோல் ...சுமர்ந்துகொண்டு அழகை ...காட்டும் பச்சை புல்வெளியில் ....ஒருமுறை கை நனைத்துப்பார் ....குளிர்வது கை மட்டுமல்ல ....மனமும்தான் மனிதா....!!!பூமிக்கு இயற்கை கொடுத்த .....பச்சை கம்பளம் புல்வெளி ....துணிப்புல் மேயும் முயல் ....அடிப்புல் வரை மேயும் மாடு ....பறந்து திரியும் பட்டாம் பூச்சி ....பச்சைப்புல் வெளியின் கதகளிகள் ....!!! மரம் வளர்…
-
- 2 replies
- 12.4k views
-
-
இயலாமையின் மடிப்புகளில்.. ஒரு புழுவினும் கீழாய் என்னை நிறுத்தி நகர்கின்றது காலம் எனது நிலங்களை பேய்கள் அபகரிக்கும் செய்திகளிலெல்லாம் வந்தமருகின்றது என் இயலாமையின் தருணங்கள் முகம் எங்கும் அப்பி கிடக்கிறது போராட சென்ற தோழர்களின் சாவு. அங்கு அவர்கள் சாகும் பொழுதுகளிலும் குளிருகின்ற இரவில் மனைவியுடன் கலவி கொண்டு களித்து இருந்தேன் நானிங்கு வீட்டின் முன் இலைகளற்றும் மண்ணின் பிடிப்புடன் நிமிர்ந்து நிற்கின்றது ஒரு மரம் மண்ணற்ற என்னை பார்பதும் இல்லை தன் கிளையில் வந்தமரும் குருவியிடம் சொல்லி வைத்திருந்தது என்னிடம் பேச வேண்டாமென துணிவற்றவனுடன் கதையெதுக்கு என்று கேட்டது அது வீட்டிற்குள் சென்று உடலினை…
-
- 20 replies
- 2.8k views
-
-
இரக்கப்பட்டு கவிதை எழுதவில்லை ..... அவர்கள் என்னை விட எம்மை விட .... இரக்கமானவர்கள்.......!!! உணர்ச்சிவசப்பட்டும் எழுதவில்லை ..... அவர்கள் உணர்ச்சிகளை அடக்குவதில் .... என்னை விட எம்மை விட ..... உன்னதமானவர்கள் ......!!! தியாக உணர்விலும் எழுதவில்லை ..... அவர்கள் என்னை விட எம்மை விட .... தியாகத்தின் உச்சமானவர்கள் .......!!! காதல் வயப்பட்டும் எழுதவில்லை .... அவர்கள் என்னை விட எம்மை விட .... காதல் உள்ளம் நிறைந்தவர்கள் .....!!! உடன் பிறப்புகளோடு பிறந்து ..... உண்மையான இரக்கத்தை பகிர்ந்து ..... பருவவயது வரும்போது உடலில் .... பருவமாற்றம் சிறிது மாறும்போது .... தாம் விரும்பும் பருவத்தை விரும்பி .... வாழமுடியாமல் தவிர்க்கும் .... உணர்வுகளை உணர்ச்சிகளை ..... அடக்கி அடக்கி வாழும் ...…
-
- 2 replies
- 516 views
-
-
தும்மலுக்கு மருந்தெடுக்க போனவன் குண்டுமழையில் நனைந்தபடி வீடு வந்து சேர்ந்தான் பிணமாக * கொள்ளி வைக்க யாரும் மிஞ்சவில்லை ஒரே குண்டில் குடும்பமே பலி * குழந்தையில் வீட்டில் ஊர்ந்து பழகியது உதவி செய்கிறது குண்டுவிமானம் வருகையில் தெருக்களில் ஊர * பத்து மாதம் சுமந்தவளும் இறந்து போகிறாள் பதினைந்து நிமிடம் சுமக்க முடியாத விமானத்தின் குண்டுகளால் * எனக்கும் யோதிடம் தெரியும் என் சாவும் குண்டுகளால்தான் எந்த குண்டால் என்பதைத்தான் கணிக்கமுடியவில்லை * குண்டுகளை தயாரிப்பவர்களே நீங்கள் அக்கா,அண்ணா,தம்பி, தங்கையோடு பிறந்ததில்லையா...? -யாழ்_அகத்தியன்
-
- 3 replies
- 1.4k views
-
-
-
- 1 reply
- 814 views
-
-
முன் சிரித்து உள்ளத்தில் ஒன்றை வைத்து உண்மையில்லா வார்த்தைகளை பேசுகின்ற மனிதர்களோ நாமெல்லாம் ஓரே இனம் ஆனால் என் குலம் தான் உயர்ந்தது நாமேல்லாம் இறைவனின் பிள்ளைகள் ஆனால் எங்கள் கடவுள் உயர்ந்தவர் அன்பென்றும் பண்பென்றும் செல்லிக்கொண்டு வேஷம் போடும் சுயநலவாதிகளோ எது உண்மை ? எது பொய்? இதைவிட எது நன்மை என்று பார்க்கும் மனிதர்களோ துன்பங்களையும் , துரோகங்களையும் அவமானங்களையும் கண்டு வாடிப்போகாதே மனமே
-
- 21 replies
- 5.3k views
-
-
இரணைமடுத்தாயே ஏனம்மா? ------------------------------------------------- ஏனம்மா தாயே நீரோடு ஏனின்று நிலம் பிரிந்து நிற்கிறது யாரோடு யாருக்குப் புரிதலற்ற புதிதான புயலொன்றை உருவாக்கி யாழென்றும் வன்னியென்றும் ஏனையா கதைக்கின்றீர் போதாதா பெற்ற வலி தீராத துயரமுடன் மாறாத எங்கள் நிலை மாற்றிடத்தான் வேண்டாமோ! தேசியமாய் ஒன்றிணைந்து தாயகமாய் வாழ்ந்தோரை நீர்கொண்டு பிரிக்கின்ற நிலைமைதனை உணராமல் வாதங்கள் புரிந்திங்கு வளர்க்கின்றார் வேற்றுமையை யாரையா அது யாரையா! தமிழினத்தின் குருதியாற்றில் குளிர்காய நினைப்போரை சரியாக இனங்கண்டு எம் சந்ததிகள் தழைத்தோங்கச் சிந்திக்க வேண்டமோ! மோடையன் என்று சொல்லி விண்ணனர்கள் அடிபட்டு பலகூறாய் நின்பதொன்றே சிங்களத்தின் பெருவெற்றி சிரிப்பினிலே தெரிகிறது வேண்டா…
-
- 2 replies
- 693 views
-
-
இரண்டடிக்குள் இரண்டரை கோடி! நேற்றுத்தான் அவன் வீடு கட்ட கண்டேன்..... குடும்பத்தோடு வந்து இன்று குடிபுகுந்து விட்டான்! அவனும் கறுப்பு ..அவளும் கறுப்பு.. மகனும் கறுப்பு..மகளும் கறுப்பு... ஆடம்பரம் ஏதுமற்ற வீடு... அருகில் நடப்பதை பற்றி எந்த அக்கறையும் அங்கில்லை... மின்சாரம் இல்லையென்ற கவலை இல்லை.. மேதாவி தனமான பேச்சுகளும் அங்கில்லை... பசி என்று வந்துவிட்டால்- காதலுடன்.. அவன் இதழால் அவளுக்கு ஊட்டிவிட.. தான் பெற்றதை பிஞ்சுகளுக்கும்- இதழாலேயே பரிமாற ஒரு அள்ளு உணவுக்குள் நான்கு உயிர்கள் பசியாறுமா? அழகில்லைத்தான்..அசிங்கம்தான் .. ஒளித்திருந்து பிறர் வாழ்வை பார்ப்பது.. உதவாத பழக்கம் தான்... இருந்தும் மனம் ஏங்கியது........... …
-
- 39 replies
- 6.2k views
-
-
இரண்டு கோடிகள் கொடுத்து ஒரு ஜோடி நாய்கள் வாங்கும் எங்கள் தேசத்தில்...!! இருபது கோடிகள் கொடுத்து ஒருவர் மட்டுமே பயணிக்க கார் வாங்கும் எங்கள் தேசத்தில்..!! இருநூறு கோடிகள் கொடுத்து கிரிக்கெட் அணியை ஏலமெடுக்கும் எங்கள் தேசத்தில்..!! இரண்டாயிரம் கோடிகளை கடன் சுமையாய் தள்ளுபடி செய்யும் எங்கள் தேசத்தில்...!! இருபதாயிரம் கோடிகளை பொழுதுபோக்க ஒதுக்கும் எங்கள் தேசத்தில்...!! இரண்டு இலட்சம் கோடிகளுக்கு அலைக்கற்றை ஏலமெடுக்கும் எங்கள் தேசத்தில்...!! எங்களையோ அல்லது நாங்கள் விளைவிக்கும் பொருளையோ ஏலமெடுக்கத்தான் எவருமில்லை....!! விளைவித்தவன் பிச்சைக்கா…
-
- 1 reply
- 456 views
-
-
உதட்டில் ராக்கெட்டை வைக்கிறேன் அதன் புகை உள்ளே செல்லுதே நுரையீரலையும் தாக்குதே என் மூளைக்கு இது தெரிகிறது இதை வேண்டாம் என்கிறேன் ஆனால் மனம் ஏற்க மறக்குதே..... காற்றை கொண்டு அடைக்கப்ட்ட பையில் புகையை அடைகிறேன் காற்றை வெளியில் ஏற்றுகிறேன் கூடவே என் உயிரையும் ஏற்றுகிறேன் நீ மெதுவாய் கரைகிறாய் என்னையும் மெது மெதுவாய் கரைகிறாய் நீ முன்னாடி செல்கிறாய் என்னையும் பின்னாடி அலைகிறாய் ... நான் தீயால் உன்னை கொள்ளுகிறேன் நீ என்னை புகையால் கொள்ளுகிறாய் கடைசியில் நீயே வெல்லுகிறாய் ...... என் புகையில்லையே ............... எங்கள் உயிருக்கு இல்லை விலையே ...... மு.க.ஷாபி அக்தர்
-
- 0 replies
- 650 views
-
-
இரத்தத்தில் தோய்ந்த இளம் மல்லிகைகள் கவிதை - இளங்கவி அதிகாலைச் சூரியனின் அழகு வெளிச்சத்திலே பனித்துளிகள் தாங்கி பூத்திருந்த மல்லிகைகள் இன்று அதே சூரியன் அதே ஒளிக்கீற்று ஆனால் பனித்துளிகள் இல்லை மலர்ந்திடும் மல்லிகையும் செங்குருதித் துளிதாங்கி சிவந்து மலர்கிறது..... ஆனாலும் கார்த்திகைப் பூ மட்டும் கலங்காது நிற்கிறது...! மனதெல்லாம் மகிழ்விக்கும் நம் மண்ணின் செல்வங்கள் சிதறிவிட்ட முத்துக்களாய் தெருக்களிலே கிடக்கிறது தாங்கள் சிந்திவிட்ட இரத்தத்திலே தம் வாய்மூடி கிடக்கிறது...! எமது பிய்ந்த மழலைகளின் பிணக்கோலம் காட்டி போரை நிறுத்தச் சொன்னால் மேற்குலகுலகின் பதில் நமக்கு காட்டாதே ..! காட்டாதே...! மேற்குலகுச் சிறு…
-
- 4 replies
- 1.2k views
-
-
இரத்தத்தில் தோய்ந்த நிலா....... கவிதை..... ஓர் அம்மாவின் அழுகுரல் அவளருகே தலையிழந்த அத்தாயின் மகனின் சிதறுண்ட ஓர் உடல்..... அந்த அம்மாவைத் தேற்ற நம் போராளிகள் சிலர் எதற்கும் தேறாத மரணத்தின் அழுகுரல்..... நான் கண்டது கனவல்ல காணொளியில் அது நிஜம்.... இது ஓர் நாளின் ஒரு நிமிடக் காட்சி.... வன்னியில் என் நாளும் எத்தனை நிமிடங்கள் அங்கே என் நாளும் கொலையின் பின் கொலையாக எத்தனை மரணங்கள்.... காட்சிகளை காண முடியாமல் மூச்சு முட்டிடவும் முன் எழுந்து சென்று ஜன்னலின் திரையை விலக்குகிறேன்..... நிலாக் கூட நிறம்மாறி சிவப்பாகத் தெரிகிறது... வன்னியில் இரத்தத்தில் குளித்துவிட்டு எங்கள் பார்வைக்கு …
-
- 5 replies
- 1.1k views
-
-
இரத்தம் எழுதிய கவிதை மே பதினைந்தில் இந்துமா கடலில் வானம் அதிர ஓலமிட்டது புயல் தீண்டிய கருங்கடலல்ல. என்னரும் தீவின் மக்கள் அறிவீர்! அன்று என் கரைகளில் சிவப்பாய்ச் சுடர்ந்தது மேதினத் தன்றென் தோழர்கள் கட்டிய தோரணங்களும் கொடிகளுமல்ல. உருண்ட நம் தலைகள் சிந்திய குருதி! கண்கள் அகன்று பிதுங்கிய முகங்களில் கடித்துக் கிடந்த நாவுகள் தோறும் இரத்தம் எழுதிய கவிதையைச் சொல்வேன். போர்த்துக்கீசரை எதிர்த்து வீழ்ந்த என் மூதாதையரின் கிராமியப் பாடலில் முன்னரும் இதுபோற் கவிதைகள் கேட்டுளேன். கொதித்து எழுந்த நம் இளைஞரைப்போல வெண்மணல் போர்த்த முருகைக் கற்களில் தலைவிரித்தடின கறுத்த பனைகள். நெடுந்தீவின் பசும்புல் வெளியெலாம் காட்டுக் குதிரைகள் கனைத்த…
-
- 3 replies
- 1.5k views
-
-
இரத்தம் வெவ்வேறு நிறம் அங்கே பிணங்கள் விழுந்து கொண்டிருக்கின்றன நாம் “எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன?” என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம்! அங்கே குண்டுகள் வெடித்துக் கொண்டிருகின்றன நாம் பட்டாசு வெடித்துப் பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறோம்! அவர்கள் வேட்டையாடப்பட்டுக் கதறிக் கொண்டிருக்கிறார்கள் நாம் வெள்ளித் திரைகளுக்கு முன் விசிலடித்துக் கொண்டிருக்கிறோம்! அவர்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் நாம் “கற்பில் சிறந்தவள் கண்ணகியா? சீதையா?” என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறோம்! அவர்கள் வெளிச்சத்தின் விளைச்சலுக்கு இரத்தம் சொரிந்துக் கொண்டிருக்கிறார்கள் நாம் இருட்டுக்காடுகளுக்கு வேர்வை வார்த்துக…
-
- 1 reply
- 784 views
-
-
இரவல் உணர்வுக் கவிஞனின் கண்ணீர்..... கவிதை - இளங்கவி.... இரவல் உணர்வுக் கவிஞனின் இதயத்து வலிகள் சில வரிகளாய்....... சுமங்களாவின் தங்கையின் சோகத்தில்... அமங்களமான எங்கள் தங்கைகளைப் பார்க்கிறேன்..... மாலைச் சூரியன் மறையும் நேரம் நம் தங்கைகளின் இதயங்களோ இடைவிடாமல் படபடக்கும்.... மரணத்தின் வாசலில் கழியப்போகும் பல மணி நேரங்கள் வந்து நிற்கும்..... நிமிடங்கள் செல்லச் செல்ல அவள் நிழலே தன்னைப் பயமுறுத்தும்.... நீண்ட ஓர் இரவுக்காய் அவள் நெற்றியோ வியர்த்து நிற்கும்..... எம் தங்கைகளின் அம்மணக் கிடக்கைகள்.... அவன் மதுவெறியில் கிடக்கும் சந்தனப் படுக்கைகள்.... தற்காலிக விடுதலையின் பின் அவள் உடையெல்லாம் இரத்தங்கள்...... போருக்கு…
-
- 0 replies
- 604 views
-
-
"இரவாகிவிடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை" என்ற ஆதவன் தீட்சண்யாவின் சிறுகதை ஒன்றில் இருந்த கவிதை.. இரவாகிவிடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை உங்களுக்கானதொரு சூரியன் பால்வெளியில் தகதகத்து வந்துகொண்டிருக்கிறது அதிகாலையில் அதன் முதல் கிரணங்கள் உங்களைத் தீண்டக்கூடும் தூங்குகிறவர்களே விழித்துக் கொள்ளுங்கள் விகசிக்கும் அந்த ஒளியெடுத்து கண்களுக்குள் பாய்ச்சிக்கொள்வோம் நூறாண்டுகள் தடித்த இருட்சுவரை கடக்க வேண்டியவரன்றோ நாம்... சிறுகதையைப் படிக்க: http://www.uyirmei.com/2009/08/blog-post_3304.html
-
- 0 replies
- 627 views
-
-
அடயாளத்தேடலுக்காக நிதானத்தை சாகடிக்கும் வித்தை தெரிந்தவர்கள் வித்துவான்கள் முடுக்கிக் கொண்டுவரும் மூத்திரம்போல் எதோ ஒரு திசையை சுட்டிக்காட்டுகின்றார்கள் சுட்டிக்காட்டுதலே இங்கு அனைத்திலும் பிரதானம் காட்டும் திசையில் பயணிக்கப் பாதைகள் இல்லையென்பதை சுட்டிக்காட்டினால் அது துரோகம். சிறுபோகமோ பொரும்போகமோ எதுவும் இங்கு சாத்தியமில்லை தற்போதைக்கு சாவை மட்டுமே யதார்த்தம் உணர்த்துகின்றது இருந்தும் பாடைகட்ட கொஞ்சப்பேர் பாடைக்கு குஞ்சம் கட்ட கொஞ்சப்பேர் தெளிவுதண்ணி கொடுப்பது குறித்துப்பேசினால் அது துரோகம் கேள்விக்குறிகளில் ஊஞ்சல்கட்டி ஆடிக்கொண்டிருப்பதில் எப்போதும் பெருமை செய்திகளும் புத்தகங்களும் தரும் அரசியலை விட போர் தந…
-
- 11 replies
- 1.5k views
-
-
நட்சத்திரங்கள் உதிர்த்த கண்ணீர்த்துளிகள் காற்றினை நடுக்கமுற வைத்த இரவொன்றில் தனிமையின் பயத்தால் உனைப் பற்றிப் பேசத்தொடங்குகிறேன். பிரிய தோழி, நீ யன்னல் சீலைகளில் இருந்து இறங்கி அறியப்படாத வர்ணமொன்றாகி அறையெங்கும் நிறைகிறாய். வெட்கமகற்றிக் கூந்தல் கலைத்து இயல்பாயென் போர்வைக்குள் நுழைகிறாய். பரவும் வெப்பம் பெருமூச்சினை நினைவூட்ட என் தனிமை நிர்வாணத்துள் ஒளிந்து கொள்கிறது. குறிப்புணரா பொழுதொன்றில் நிறைகாமம் அழிந்துபோக ஆழியின் பெருமௌனத்துடன் அடங்கி விழித்துக்கிடக்கிறேன். அன்றொருநாள் உன், இதழ்களிலிருந்து இறங்கிய சாத்தான் மூன்றாம் இரவிலும் உயிர்த்தெழ, எதிர்கொள்ளத் துணிகிறேன் தற்கொலை ஒன்றுக்கு முன்னான அமைதியுடன்.
-
- 9 replies
- 873 views
-
-
நான் பங்குபற்றிய , சிங்களவருடன் மோதி தோற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ஒரு கணத்தில , சிறந்த வீரன் ஒருவனால் ஏற்பட்ட எதிர்பாராத முடிவால் வியந்த ஒரு யுத்தம் பற்றிய கதைதான் இது... இது நடந்தது கிபி2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம்... எங்கட கொம்ப்யூட்டர் லாப் இல... கோபப்படாதீங்க... ஒரு உண்மைச்சம்பவத்த அடிப்படயா வச்சு சாத்தியமான ஒரு முடிவத்தான் சொல்லவாறன்... அதுக்காக இத வாசிச்சு ஓவரா எதிர்பார்ப்ப கிறியேட் பண்ணிடாதீங்க... எங்கும் மரண ஓலம்.... வெட்ட ப்பட்டு வீழந்த தலைகள் குதிரைகளின் குளம்புகளில் அகப்பட்டு நொருங்கும் ஓசையும் கேடயங்களில் வாள்கள்மோதித்தெறிக்கும் ஓசையும் கலந்து நாலாபக்கமும் எதிரொலித்துக்கொண்டிருந்தது.. . விழ விழ அலை அலையென வந்து கொண்டிருந்த குதிரைப்படைகள் எதிரி மா…
-
- 0 replies
- 524 views
-