கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
நான் இராட்சதன்.... பூப்பொன்ற மனங்களை புரியாததாலா நான் இராடசதன்... புரிந்த மனங்களை வெளி மொழியாததாலா நான் இராட்சதன்.. கறந்த பாலாய் கண்ணுற்ற உன் காதலை காப்பாற்ற முடிந்தும் கல்லாக இருந்ததாலா நான் இராட்சதன்.. கல்லறை புகும் முட்டாள் காதலென காதலை இகழ்ந்து மென்மை அறியாததாலா நான் இராட்சதன்.. நண்பா.. உன் காதலை ..உலகுக்கு உணர்த்த உயிர்விட்ட நீயும் உன் காதலியும் இழந்தபோது உலகம் சொல்கிறது.. முட்டாள் காதலர்கள் என்று.. இல்லை இப்போது இராட்சதன் நான் சொல்கிறேன்.. காதல் அற்புதமானது.. காக்கப்படவேண்டியது சேர்த்துவைக்கப்படவேண்டியது.. இரக்கப்படவேண்டியது.. உதவவேண்டியது.. உணரவேண்டியது..ஆனால் உயிர்விட வேண்டியது அல்ல …
-
- 7 replies
- 1.3k views
-
-
என் கவியால் கம்பனை சுடும் நோக்கம் இல்லையடா இராமாயனக் கம்மனும் நானும் இல்லையடா கூனியை போல சூழ்ச்சி செய்பவன் நானும் இல்லையடா கைகேகி போல இராமனைக்காட்டுக்கு அனுப்புபவன் நானும் இல்லையடா பத்துதலை இராவணணும் இங்கே கெட்டவன் இல்லையடா கம்பன் தன் கவிதையிலே ஈழத்தமிழனுக்கு துரோகம் செய்து விட்டானேடா இராமனும் உத்தம புத்திரன் இல்லையடா அவரும் கற்பை சோதிக்க தீக்குளிக்க சொன்னவர் தானேடா இராமயனத்து குரங்குப் படைகள் தமிழன் இல்லையடா இராமாயனம் ஈழத்தமிழனுக்கு ஒரு மாகாவம்சம் தானோடா
-
- 5 replies
- 2.1k views
-
-
இரண்டு ஈர உதடுகள் என்னை முத்தமிட்டு நீங்கின ஒன்றில் பொத்தி வைத்த காதலும் வெளிப்படுத்தி வெளிப்படுத்தி அடங்கா(த) காமமும் நிறைந்து இருந்தன இன்னொன்றில் வெள்ளை நிறத்தில் அன்பு இருந்தது "இவன் என் அப்பா" என கட்டிப் பிடித்து இறுக்கி சிரிக்கும் சின்னச் சிறுக்கியின் பாசம் இருந்தது இரண்டு முத்தங்களிலும் என் வாழ்வு தொங்கி நின்றது ******** அவர்களை அனுப்பிவிட்டு வீடு செல்கின்றேன் வாசல் திறக்கும் போது சூனியம் அப்பிக் கொள்கின்றது கட்டிலும், தொட்டிலும் சோபாவும், சட்டியும் முட்டியும், முட்டை பொரித்த பின் எஞ்சிப் போன தாச்சியும் சிந்தப் பட்ட ஒரு சொட்டு எண்ணெயும், என்னவள் கழட்டிப் போட்ட பனிச் சப்பாத்தும் என்…
-
- 77 replies
- 18.4k views
-
-
இரு கவிதைகள் – தீபச்செல்வன்… தணல்ச் செடி சமுத்திரத்தில் மண்டிய மையிருள் போல மறைந்திருந்த முகத்தில் அடுக்கியிருந்த இரகசியங்கள் சொல்லாத எண்ணற்ற கதைகள் கலந்தன தீயில் கருணைமிகு உன் புன்னகை கரைந்த கடலில் எழும் ஒரு பறவையின் சிறகுகளில் ஒழுகுகிறது தணல் நெருப்பை தின்று காற்றில் உறங்குகின்றனர் கரிய வீரர் கரு மேககங்கள் மண்ணில் கரைந்துருக வெடிக்கின்றன விதைகள் கந்தகம் சுமந்து வெடித்துருகிய இடத்தில் …
-
- 0 replies
- 1.1k views
-
-
இரு கவிதைகள்: தீபச்செல்வன் தணல்ச் செடி சமுத்திரத்தில் மண்டிய மையிருள் போல மறைந்திருந்த முகத்தில் அடுக்கியிருந்த இரகசியங்கள் சொல்லாத எண்ணற்ற கதைகள் கலந்தன தீயில் கருணைமிகு உன் புன்னகை கரைந்த கடலில் எழும் ஒரு பறவையின் சிறகுகளில் ஒழுகுகிறது தணல் நெருப்பை தின்று காற்றில் உறங்குகின்றனர் கரிய வீரர் கரு மேககங்கள் மண்ணில் கரைந்துருக வெடிக்கின்றன விதைகள் கந்தகம் சுமந்து வெடித்துருகிய இடத்தில் …
-
- 1 reply
- 1.1k views
-
-
காலத்தால் மறைந்திடுமோ அம்மா பாலமு தூட்டடிட நீ காட்டிய வெண்நிலவு பாட்டில் கதைகளில் நீ பாங்குடன் ஊட்டிய சோற்றினிலே நாற்றில் பயிரெனவே நல்லறிவோடு நான் செழித்து விட்டேன். எத்தனை கற்பனைகள் அங்கே எத்தனை சுடர்கின்ற நம்பிக்கைகள் முத்தேன நெஞ்சில் வைத்தாய் என் முழுமையின் வேரேன மறைந்து நின்றாய். ஒலிவடிவம் http://tamil.sify.com/audio/fullstory.php?id=14465321 கண்ணம்மா இந்த பனி கொட்டும் இரவினீலே இலையற்ற தனி மரமாய் உன்னையே நினைத்திருந்தேன். என்று உன் பூவிரல்கள் தீண்டிடுமோ என்று ஏங்கிடும் வீணையைப்போல் துயருறுதே நெஞ்சம். பூத்திடும் கனவினில் கானகங்கள் எங்கும் புலர்ந்திடும் வச்சந்ததின் கற்பனைககள் தேற்றுமுன் காதலில் பாரதியி…
-
- 17 replies
- 2.9k views
-
-
-
‘இருக்கிறானா ? இல்லையா ?’ – பார்வதியம்மாள் மறைவுக்கு கவிஞர் வாலி எழுதிய கண்ணீர் கவிதை ஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப் பெருமாட்டியைப் பாடுதலின்றி வேறு வேறுண்டோ எனது வாய்க்கு? ★★★★★ மாமனிதனின் மாதாவே ! – நீ மணமுடித்தது வேலுப்பிள்ளை ; மடி சுமந்தது நாலு பிள்ளை ! நாலில் ஒன்று – உன் சூலில் நின்று – அன்றே தமிழ் ஈழம் தமிழ் ஈழம் என்றது ; உன் – பன்னீர்க் குடம் உடைத்துவந்த பிள்ளை – ஈழத்தமிழரின் கண்ணீர்க் குடம் உடைத்துக் காட்டுவேன் என்று… சூளுரைத்து – சின்னஞ்சிறு …
-
- 0 replies
- 861 views
-
-
இருக்கிறானா? இல்லையா? வாலி வெடித்த வெந்நீர் கவிதை சொல்லைக் கல்லாக்கி... கவிதையைக் கவண் ஆக்கி... வாணியம்பாடி மேடையைக் களம் ஆக்கி கடந்த சனிக்கிழமை அன்று வாலி வாசித்தது கவிதை... இல்லை... வெடித்துக் கிளம்பிய வெந்நீர் ஊற்று. அது இது... கவியரங்கம் தொடங்குமுன் - ஒரு கண்ணீர் அஞ்சலி... ஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப் பெருமாட்டியைப் பாடுதலின்றி பேறு வேறுண்டோ எனது வாய்க்கு? ... மாமனிதனின் மாதாவே! - நீ மணமுடித்தது வேலுப்பிள்ளை; மடி சுமந்தது நாலு பிள்ளை! நாலில் ஒன்று - உன் சூலில் நின்று - அன்றே தமிழ் ஈழம் தமிழ் ஈழம் என்றது; உன் - பன்னீர்க் குடம் உடைத்து…
-
- 3 replies
- 2.1k views
-
-
இவள் முகம் பார்த்தால் இவனுக்குள் காதல் இல்லையேன்று மறுத்திட இதயமில்லை என்னிடம் இனியவளின் வார்த்தை இதமாய் தானிருக்கும் இடிகள் விழும் காலமும் இனியாய் தானிக்கும் இது என் காதலின் ஆரம்பம் இவள் முடிவின் இறுதியாகுமோ? இமை மூடி திறந்தால் -என் இமைகளை தாண்டி நீர் சொறியும் இசையதை கேட்டால்- அதில் இனிமையின்றி இருக்கும் இப்படியேன் ஆகிவிட்டேன் இறைவனிடம் கேட்டேன் இன்று வரை பதில்லை -அருகில் இருப்பவரிடம் கேட்டேன் இது என்ன கேள்வி என்றார் இப்படியேன்னை சாகவிட இனியவளே நான் என் செய்தேன் இதயமதை கேட்டதற்க்கு இறக்கும் வரம் தருவதா? இதிலுனக்கென்ன ஆனந்தம் இன்றும் நம்புகின்றேன் இறுதிவரை பார்க்கமாட்டேன் இன்னோருவள் முகமதை இருக்கிறேன் உனக்காக இவ்வ…
-
- 12 replies
- 2.6k views
-
-
இருண்டகாலத்தின் பதுங்குழி சொங்களற்றவர்களின் அசையா முகங்களில் சங்கீதம் பாடி ஆடுகின்றன ஈக்கள் இரவுக்கும் பகலுக்கும் இடையில் மாபெரும் யுத்தப்படை ஒன்று என் கிராமத்தை கடந்து போயிருக்கையில் காணவில்லை விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை சாட்சிகளற்றவர்களின் நிலத்தில் கைது செய்யப்பட்ட குழந்தை ஒன்றை ஏற்றுக்கொள்ளவும் யாருமில்லை மீண்டுமொரு இருண்ட காலத்தில் பதுங்குகின்றனர் குழந்தைகள் வானத்தில் விமானங்கள் இல்லை எத்திசைகளிலிருந்தும் செல்கள் வரவில்லை வானத்தையும் திசைகளையும் கண்டு அஞ்சுகின்றன குழந்தைகள் இப்போது எங்களிடம் துப்பாக்கிகள் இல்லை பீரங்கிகள் எதுவும் இல்லை விமானங்களும் இல்லை போர்க்களங்களைத் துறந்துவிட்டோம் பாசறைகள் யாவற்றையும் மூடிவ…
-
- 1 reply
- 585 views
-
-
இருக்கும் இருத்தலை நேசிக்காத இருத்தல் முரண் _இருந்தும் இருந்துகொண்டிருக்கும் இருப்பை இழந்துவிடும் துணிவுமில்லை , இருப்பதால் நுகரப்படுவது இருப்பின் மீதான வெறுப்பாக இருந்துகொண்டேயிருக்க , இருக்கிறேன் என்றே இயல்பாக இயம்புதல் வழக்காயிற்று . இப்படி இருத்தல் இருத்தலுகாகாது என்று அன்பில் இருக்கும் எல்லோரும் சொல்லியும் இருத்தல் அப்படியே .................! இருக்கிறது இன்னும் இருந்துவிடலாம் என்ற அவா . என்ன, இவர்களைப்போல் எப்படியும் இருந்திட துணிந்திடில் இருந்திடலாம் _உள் இருந்தொரு குரல் யாருக்கும்கேளாமல் , யார்சொல்லியும் கேளாமல், இருந்து மிரட்டுகிறது _இந்த இருப்பெல்லாம் இருப்பா என்று ?
-
- 6 replies
- 1.5k views
-
-
இருத்தல் பெருந்தொகையில் இடம் பெற்ற கவிதைகளில் ஒன்று. பெருந்தொகை பற்றி விமர்ச்சகர் பேராசிரியர் மு.நிதியானந்தன் நிகழ்த்தும் விமர்சன உரை தீபம் தொலைக் காட்சியில் வெள்ளிக்கிளமை இடம் பெறுகின்றது. நேரம் இங்கிலாந்து 8.30 - 9.30, கண்ட ஐரோப்பா 9.30 - 10.30. வருகிற சனிக்கிளமை 13.10.2007 இருந்து 18.10 வரை பரிசில் இருப்பேன். இலக்கிய நண்பர்களைச் சந்திக்க விருப்பம். ஜெயபாலன் இருத்தல் வாலாட்டி வாலாட்டி நீருள் இரத்தினங்களாக வெயில் சிதைய மகிழ்ந்திருக்கும் சிறுமீன்கள். காற்றில் முளைத்து தாழை மடலில் தரை இறங்கும் மீன்கொத்தி. மீண்டும் அமர்ந்தேன். தென்னங் கீற்றுத் தோகைக்குள் இசைத்த சிறு குருவி சிறகை விரித்தாச்சு. இனி வானத்துச் சிப்பி வயிற்றுள் மிழிருகின்ற …
-
- 5 replies
- 1.5k views
-
-
இருமை - வ.ஐ.ச.ஜெயபாலன் நான் சிறுசாய் இருக்கையில் உலகம் தட்டையாய் இருந்தது. எங்க பாட்டிக்குத் தெரிந்த ஒர் அரக்கன் ஒருமுறை உலகைப் பாயாய்ச் சுருட்டி ஒளித்து விட்டானாம். அப்போதெல்லாம் பகல்தொறும் பகல்தொறும் ஏழு வண்ணக் குதிரைத் தேரில் சூரியன் வருகிற வழி பார்த்திருந்து பாட்டி தொழுவாள் நானும் தொடர்வேன். ஒரு நாள் வகுப்பறையில் என் அழகான ஆசிரியை உலகை உருண்டையாய் வனைந்து பிரபஞ்சத்தில் பம்பரம் விட்டாள். சூரியனை தேரினால் இறக்கி பிரபஞ்சத்தின் அச்சாய் நிறுத்தினாள். பின்னர் கல்லூரியிலோ ஆசிரியர்கள் பிரபஞ்சத்துள் கோடி கோடி சூரியன் வைத்தார். இப்படியாக என் பாட்டியின் மானச உலகில் வாழ்வு மனசிலாகியது. கற்ற உலகிலோ எனது அறிவு கவசம் …
-
- 15 replies
- 2.2k views
-
-
இரும்புக்காட்டின் பூக்கள் வண்டிகள் எல்லாம் இரும்புக் குவியலாயிருக்க சக்கரங்களும் இல்லை ஓட்டமும் இல்லை துருப்பிடித்த பறவைகளின் நிழல் கவிந்த யாருமற்ற இடுகாட்டில் பிஞ்சுத் தலைகளின்மீது இரும்பு மூட்டைகளைச் சுமக்கின்றனர் சிறுவர்கள் இரும்பு படிந்த உடல்களிலிருந்து உதிர்கிறது துருவேறிய துகள்கள் மலிவான சிறுவர்கள் எவ்வளவு பாரமேனும் சுமப்பார்களென விலைக்கு வாங்கப்பட்டனர் வெடிக்காத குண்டுப் பொறிகளுக்குளிருக்கும் இரும்பை கொண்டு வருவார்களென இரும்புக்காட்டில் தொலைவுக்கு அனுபப்பட்டனர் அழுகிய இரும்பை நெறுக்கும் தராசுகளுக்குள் உறங்கி எழும் சிறுவர்களிடம் இருந்தவை இரும்புகளைவிட பாரமான கண்கள் கால்களுக்கு கீழேயும் தலைக்கு மேலேயும் வெடிகுண்டுகள் நிறைந்திரு…
-
- 0 replies
- 657 views
-
-
மணமற்ற மலர்கள் மரமற்ற வெளிகள் மனிதரற்ற மனைகள் மகிழ்ச்சியற்ற மனங்கள் ஒளியற்ற கண்கள் ஒலியற்ற ஓலம் மட்டற்ற துயரம் பற்றற்ற உலகம் திலகமற்ற நுதல்கள் திங்களற்ற வானம் நிழலற்ற பகல்கள் நீரற்ற ஊற்று உயிரற்ற உடல்கள் உணர்வற்ற உறவுகள் அருளற்ற இறைவன் இருளுற்ற வாழ்வு
-
- 19 replies
- 1.2k views
-
-
ஆதவனின் கட்டில் இமைகளின் கொட்டகை இரவின் விழி கால வழிப்போக்கன் ஞால சித்தன் நேர ஈடாளன் இருள் அவன் இருள் அரசன் இருள் அற்றவன் என் உயிர் கள்வன் என் துயர் துலக்கி என் தோழன் நின் முகத்தை கண்டவர் இலர் நான் காண்கிறேன் உன் பாதம் என் பள்ளியறை கண் அயர்ந்திட நய வஞ்சகர் பிறழ் சூழ்ச்சியர் எதிரில் கண்டிலேன் துப்பாக்கி ஓய்ந்திடும் தோட்டாக்க.ள் உறங்கிடும் புதை அறையில் உன்னில் இணைவேன் அன்புடன் அமைதியுடன் வாங்கிக் கொள் விடியும் முன் உன் இமை உறங்கும் முன் என்னை!
-
- 0 replies
- 539 views
-
-
சோலையில் பூத்த மலர்களே நீங்கள் கண்மூடி உறங்குங்கள் எங்கள் நிலை பார்த்தால் காலையிலையே நீங்கள் வாடிவிடுவீர்கள் ஆடை தரித்த எங்களூர் இன்று குட்டி கிரோஷிமாவாகிவிட்டது எங்கள் நிலை கண்டு கூவிக் கூவியே நம்மூர் குயில்களின் குரல்களும் தேய்ந்து விட்டன கரைந்த காகங்களும் காலமாகிப் போய்விட்டன அமாவாசை இரவில் பூரணைச் சந்திரனை எதிர் பார்த்து ஏமாந்து போனவர்களாக நாம்! விடிகின்றது தினமும், நமக்கில்லை........ இன்று வரையில் இருட்டிற்குள்தான் நம் விடிவும்...! நாளை போர் தீர்ந்து கண்ணீர் குறையுமா நம் கண்ணில்..........?
-
- 8 replies
- 1.5k views
-
-
Seelan Ithayachandran கைபேசி மூலமாக 5 மணி நேரம் முன்பு: · இருள் கொஞ்சம் அதிகம்தான் : ச.நித்தியானந்தன் நோவேதுமில்லாத மூன்றாம் கட்ட பயணம் போவோமா புதையுண்டு சாவோமா…! மீண்டும் கலர் கலராய் தோரணங்கள் வடக்கு வீதியில் சின்ன மேளம் கிழக்கே மேளச் சமா தெற்கே காவடி மேற்கே கச்சான் கடைகளென தேர்தல் திருவிழா அரிதாரம் பூசியவர்களின் அணிவகுப்பு வானத்தை வில்லாய் வளைப்பவர்களாகவும் விடுதலையை வென்று தருபவராகவும் சிலர் ஒருபடி மேலே போய் தாயகத்தை தோண்டி பெருவாழ்வு பெற்றுத் தருவதாகவும் ஆளுக்கொரு மூடையுடன் அவர்கள் மூடைகளின் அளவுகளில் வேறுபாடிருந்தாலும் எல்லாம் புளுகுமூடைகள்தான் தொடுத்த வில்லிற்கும் கொடுத்த விலைக்கும் ஈடுதான் என்ன மாகாண சபைதானா …
-
- 0 replies
- 550 views
-
-
இரோம் சர்மிலா பிறந்தநாள் இன்று. அவர் குறித்து எழுதிய கவிதை ஒன்று கூப்ரூ மலையின் மகள் மரட்சியுடன் திரியும் மான்கள் நிறைந்திருக்க செம் மல்லிகை பூத்திருக்கும் கூப்ரூ மலையின் மகளே நெடிய விரத்தினை முடித்து உணவருந்து! துப்பாக்கிகளின் விற்பனைக்கான பூமியில் இனியும் பசியோடிராதே! உருகிய உன்னுடலருகே நின்றவுன் சனங்கள் ஒவ்வொரு உணவு வேளையிலும் கோப்பைகளைத் தூக்கும்போதடைந்த குற்ற மனம் இனியேனும் தணியட்டும் வற்புறுத்தப்பட்ட உணவுத் தண்டணையும் மூக்கில் சொருகப்பட்ட உணவுக் குழாய்ச் சிறையும் இத்தோடு முடிந்துபோக நெடுநாளாய் மறந்த உணவைக் கையிலெடு நிர்வாணங்களினால் போரிட்ட …
-
- 2 replies
- 969 views
-
-
இறந்த காலத்தை மறப்பதற்கான கருவி கவிதை: தமிழ்நதி - ஓவியம்: ரமணன் அரசே, நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை! உங்கள் கட்டளைப்படி கைகளை உயர்த்தியபடி அம்மணமாக வெளியேறிய பாதை செப்பனிடப்பட்டுவிட்டது துருத்தி நின்ற எலும்புகளை சதை வளர்ந்து மூடிவிட்டது மண்மேடுகளினுள்ளிருந்து `வா’வெனக் கை அசைத்த உடுப்புகளும் உக்கிப்போயின துருப்பிடித்த தகரத்தால் தொப்பூள்கொடி அறுக்கப்பட்ட குழந்தை ஒன்பது வயதுச் சிறுவனாகி மீண்டும் பள்ளிக்கூடமாகிவிட்ட அகதி முகாமில் படிக்கச் செல்கிறான் ‘உலகின் மிக நீண்ட கழிப்பறை’யாகவிருந்த கடற்கரையில் சூள்விளக்குகள் மினுமினுக்க மீன்பிடி வள்ளங்கள் தளும்பித் திரிகின்றன இன்னமும் செப்பனிடப்படாத வீடுகளுள் தங்கள் …
-
- 0 replies
- 979 views
-
-
காதலி வார்த்தைகளுக்கு வாள் வீசக் கற்றுக் கொடுத்தாய்! என் இதயச் சுவரில் எத்தனை கீறல்கள்... கீறல்கள் மேல் இதழ் தேடல்கள் நடத்து... என் வாலிப வானம் விடியட்டும்! குரலில் எதைக் குழைத்தாய்...? என் இதய நாளங்களில் குளுக்கோஸ் ஏறுகிறதே...! விழிகளில் சொருகிய வேல்களைக் கழற்று எத்தனை தடவை நான் இறப்பது?
-
- 5 replies
- 1.4k views
-
-
காலச்சிதைவின் துர்க்கனவிலிருந்து உயிர் பெற்றெழுமெனை மறுப்பின்றி இறந்தவன் எனக்கொள்க. ஒளிப்பொட்டில் கரைந்தழியும் இருளின் மறைப்பில் நீளுமெனது நிர்வாணம் காலத்தால் வாழ்ந்தவன் எனக்கொள்க, சாத்தியமேயில்லாத இரண்டாம் உயிர்த்தெழுகை நடுங்குமிந்த இரவுகளில் நிகழ்ந்துவிடக் கூடுமென்ற அச்சத்தில் விழிகளை திறந்து போட்டிருக்கிறேன். கபாலத்தைப் பிளப்பது போலொன்றும் இலகுவாயில்லை காலத்தைப் பிளப்பது. பெயரை அழித்துவிடுதலும் எனைக் கொன்றுவிடுதலும் வேறுவேறாயினும் ஒன்றென்பதுபோல எதுவுமே இலகுவாயில்லை. நேற்று நேற்றாயிருந்தது இன்று ந…
-
- 1 reply
- 716 views
-
-
மெதுவாகப் பேசலாம்... அரசியல் பேசினால்.. அடுத்த அறைச்சுவரும் கேட்குமாம்..ஏன்.. நமக்கு வம்பு... மௌனிகளாயிருப்போம்... யாரங்கே.. பேசவே பயப்படும் பேடிகள்.. இவர்கள்.. என்ற உண்மைகளை சத்தமாய்.. உள்ளே உறைப்பது.. வேறென்ன் செய்ய.. சத்தமாய் பேசிவிட்டால்.. கூட இருப்பவன்தான்.. குழி பறிக்கிறான் என்பது.. மரணத்தருவாயில் மனதறியும்.. தமிழன் காப்பியங்களிலும்.. இலக்கியங்களிலும்தான்.. உயர்வாகப் பேசப்பட்டிருக்கிறான்.. இன்றோ இழிநிலை நோக்கியல்லவா நடக்கிறான்... ஒப்பற்ற வீரன்.. தலைவனாய்க் கிடைத்தும்.. உருப்படத் தெரியாமல்.. கஞ்சாக்கும் காசுக்கும்.. சோரம் போன துரோகிகள் பாதி பதவிக்கும் பட்டத்திற்கும் பல்லிளித்த பாவிகள் பாதி.. …
-
- 5 replies
- 1.5k views
-
-
இறுதியாய் ஒரு யுத்தம் இறுதியாய் ஒரு யுத்தம் இனமானம் காக்க ஈனர்களை விரட்ட இழந்தவை யாவும் மீட்ட இனிவரும் பிள்ளைக்கு சுதந்திரத்தின் சுகம் காட்ட இறுதியாய் ஒரு யுத்தம். அடிமைகளாய் , அகதிகளாய் அவமான வாழ்வு போதும் ஏதிலியாய் எங்கேயோ அழுகிச் சாகும் நிலை போதும் அடியோடு வீழ்ந்தாலும் அன்னை பூமிக்கே, உரமாகும் மரணமேற்போம்... மாக்களுக்கு மனமஞ்சி மறைந்தொளியும் மானக்கேடு மண்ணோடு மண்ணாக்கி ஈழன்னை புகழ் தாங்கி புலிக்கொடியால் புயல் கிளப்பி புறப்படுவோம் பெரும் படையாய்.. நாய்கள் தான் வாழும் நரிகளுக்கு பயந்தொதுங்கி நாடாண்ட குடிகள் நாம் நடுக்கிடுவோம்.. படை நடத்தி. கோடிப்பேர் வரட்டுமே !! கூலிக்கு மாரடிக்கும் கூர்மையற்ற கூ…
-
- 1 reply
- 828 views
-