கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
கித்தாளம் சின்னையா என்பது என் மாமன்.... 60 வயது இருக்கும் அவருக்கு....ஒரு மனைவி மூன்று பிள்ளைகள் என்பது official அறிக்கை. படலை பாய்ந்து, வேலி பாய்ந்து வாரிசை உருவாக்கியதில் அவர் தான் ஊரில் மன்னன் என்பது ஊர் பேச்சு இப்போ எல்லா மனுசியும் விட்டுப் போய், ஒரு கருத்த 35 வயது பெண்ணை வைத்திருக்கின்றார் என்பதும் ஊர் பேச்சுதான்...ஆனால் இடைக்கிடை இன்னும் வேலி பாய்கிறார் என அவரின் 35 வயது கடைசி மனுசி பக்கத்து வீட்டுக்காரனுக்கு சொன்ன செய்தி (சொல்லும் போது இரவு 11:30) அவருக்கு நான் "எழுதுவது" பற்றி பெரிய சந்தோசம்...திடீர் திடீரென தன்னுடைய சில கவிதைகளை அனுப்புவார்....எங்கே அனுப்பினாலும் உடனே திரும்பி வரும் அவரின் கவிதைகளை தரவேற்ற வேறு இடம் கிடைக்கவில்லை.....ஆகவே யாழை தேர்ந்தெட…
-
- 8 replies
- 1.2k views
-
-
1987 செப்ரம்பர் 15 அன்று நல்லூர் வீதியில் தியாக தீபம் திலீபனின் நீரேந்தும் அருந்தாத உண்ணாவிரதம், இந்திய வல்லாதிக்கத்திடம் ஈழத் தமிழ் மக்களின் 5 அம்சக் கோரிக்களை நிறைவேற்றக் கோரி ஆரம்பமானது. (திலீபன் தமிழீழ விடுதலைப்புலிகளின் யாழ் மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளராக இருந்தவர். யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவன். யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவாகி இருந்த மாணவன்.) ----- நினைவுப் பதிவு----- தியாக தீபமே விடுதலைத் தீயே.... அன்னை மடியில் நீ கிடந்த நினைவுகள் அழியவில்லை..! தமிழீழ மண்ணில் நீ பதித்த பாதச் சுவடுகள் கருவறைகளாய் சாதனைகளைப் பிரசவிக்கின்றன...! அண்ணா.. உன் உயிர் தந்து தமிழீழ விடுதலைக்கு நீ.. உயிர் கொடுத்தாய்..! உன் தியாகம…
-
- 6 replies
- 3.3k views
-
-
வானம் வஞ்சகமின்றி வெள்ளைப் பூக்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றது! நானும் இந்த கடுங்குளிர் தேசத்தில் என் மவுனச் சாளரங்களினூடே அந்த அழகியை ரசித்துக் கொண்டிருக்கின்றேன்! அவளும் மெல்ல என்னை நோக்கித் தன் காதல் தேசத்தின் பாரிய படையெடுப்பொன்றை தன் மலர்விழிகளால் மட்டுமே நடத்திக்கொண்டிருக்கின்றாள்! என் இதயக் கோட்டையின் மதில்கள் எல்லாம் ஒவ்வொன்றாய் சரிந்து விழுந்துகொண்டிருக்கின்றன! இன்னும் சில நொடிகளுக்குள் அவை முற்றாகவே தகர்ந்து விழுந்துவிடப் போகின்றன! நான் தோற்றுவிடுவேனோவென்று மெல்லக்கூறி பட்சி நகைத்துக் கொண்டிருக்கின்றது! இல்லை நடுங்கிக்கொண்டிருக்கின்றது! தோற்றேதான் போய்விட்டேன்!!! இப்போது என் இதயப் பேரரசின் முடிசூடா ராணி அவள்!!!!!! என் மனைவியின் …
-
- 9 replies
- 907 views
-
-
இந்தப்பாடல் கடந்த வருடம் முள்ளிவாய்க்காலில் இன அழிப்பில் கொல்லப்பட்ட எமது மக்களுக்கும் சண்டையிட்டு மடிந்துபோன எமது மாவீரச் செல்வங்களுக்குமாக அஞ்ச்சலி செலுததுவதற்காக உருவாக்கியிருந்தேன்.... என்னிடமிருக்கும் மிகச்சிறிய வளங்களை வைத்தே உருவாக்கியிருக்கிறேன். அதனால் sound quality யில் சரியான தரம் கிடைக்கவில்லை. ஆனாலும் இசையமைப்பு, பாடல் வரிகள் பாடலைப்பாடியது அனைத்தும் நான்தான். எனது குரலில் நிறையக்குறைகள் இருக்கும், குரலைப் பார்க்காதீர்கள், பாடலில் நான் சொல்லிய வலிகளும் வைராய்க்கியமும் தான் உங்களுக்கும் இருக்குமென்று நம்பி இதை இணைக்கிறேன். மிக முக்கியமாக இதை இணைப்பதில் ஏற்பட்ட சிரமதில் எனக்கு உதவிசெய்து இதை இணைக்க உதவிய மச்சானுக்கு மிக்க நன்றிகள்... http://k…
-
- 20 replies
- 3.3k views
-
-
உனக்கென்று - ஒரு கொள்கை உள்ளவரை உன்னை யாரும் கொல்ல முடியாது! தரிசாய் கிடந்தாலும் எரிந்து போக துணியும் ! அடுத்தவன் வந்து........ எம் நிலத்தில் ஆர்பாட்டமாய் ......... ஏதும் செய்ய நினைத்தால் ....... மொத்தமாய் வெறுக்கும்! முடியாமல் போனாலும்.. மோதி முக்கி தன்னை அழிக்கும்....... தாயை விற்று பிழைக்க நினைக்காது! கோவம் கொள்வாய் நீ முடக்கிய விரல்களில் கோவம் - நீளம்.. கொன்றுதான் ஆகணும்......... யாரை -? தெளிவில்லை! அது இருக்கட்டும்- அண்ணாக்கு திவசம் கொடுக்கணுமே இன்று- முடிந்ததா? கவனம் - சடங்கு என்று ஏதோ செய்கிறாய் உன் சமையல் அறையில் சிங்களன் ஏவிய செல்- விழகூடும்! மொத்தமாய் - உன் சந்தத…
-
- 1 reply
- 961 views
-
-
-
கடவுளின் பெயரினால் கட்சிகள் கூட்டுகின்றார் சாமியாரின் வேடத்தில் காம லீலை புரிகின்றார் கடவுள் என்று போற்றியவர் இன்று கம்பி எண்ணுகின்றார் நடமாடும் தெய்வம் என்று நல்லா நாடகம் ஆடுகின்றார் மூடநம்பிக்கையில் எம்மவர் மூழ்கிப்போய் இருக்கின்றார் கற்கள் பால் குடிப்பதாக பாலும் ஊத்துகின்றார் உலகில் சைவத்தை கேவலப் படுத்துகின்றார் இறைவனைத் தேடுவதாய் தாவிக் குதிக்கின்றார் அறியாமையினால் தம்மைத் தாமே ஏமாற்றுகின்றார் உனக்குள் இறைவன் உண்டு அதை ஏன் ஏற்க மறுக்கின்றாய்???
-
- 18 replies
- 2.8k views
-
-
இது எம் காலம்.. காலம் கனிந்தது.-கார்த்திகை மலர்ந்தது - மனங்கொள்வோம் எம் உயிர் உரையும் மாவீரர் மலர் குடில் கொள்ளும் காலம் மனதார பாவிசைப்போம் -அவர்தம் புகழ் இசை கொன்டு..... நெஞசுருகிப்போவோம் நேசங்களின் வழியுணர்ந்து....... தேசம் பல கண்ட தமிழரே நிஜ தேசிய தினம் - உமக்கிது.... நம் தேசம் தந்த வேந்தர் புகழ் தேசம் எங்கும் உரைப்போம்- வாரும் உயிரில் உணர்வோம் உயிரீந்த- எம் உறவை
-
- 1 reply
- 714 views
-
-
திருமணவாழ்த்து, அரங்கேற்ற விழா வாழ்த்து எங்காவது தமிழில் வாழத்து மடலாக எடுக்க முடியுமா? யாழ் இணைய கவிஞர்களே தமிழில் பொதுவான திருமணவாழ்த்துப்பா எழுதி இணையுங்களேன் இணைப்பவர்களுக்கு நன்றி.
-
- 3 replies
- 7.3k views
-
-
கருணாகரன் கவிதைகள் ஓவிய உதவி தா. சனாதனன் சொல் 01 ‘தம்பியென்றால் சகோதரன்’ என்றான் அண்ணன் ‘தம்பி என்றால் குகன்’ என்றான் ராமன் ‘தம்பியென்றால் எங்கள் வீட்டின் வேலைக்காரப் பையன்’ என்றாள் பெரிய வீட்டுப் பெண். ‘தம்பி என்றால் இளையவன்’ என்றார் ஆசிரியர் ‘தம்பி என்றால் பிரபாகரன்’ என்கிறார் வைகோ. ‘தம்பி என்றால் என் படைத்தளபதி’ என்றான் மன்னன் தம்பி என்றால் யாரென்று நீங்கள் சொல்லுங்கள்? 02 ‘அம்மா என்றால் உயிரின் வேர்’ என்றாள் அக்கா. ‘அம்மா என்றால் அன்னை, தாய், பெற்றவள், பாசம் நிறைந்தவள்...’ என்றெல்லாம் விழித்துரைத்தார் ஆசிரியை ‘அம்மா என்றால் இரக்கம் நிறைந்தவள்’ என்றான் பிச்சைக்காரன் ‘அம்மா என்றால் உயிரின் வாசம்’ என்றான் மகன் ‘அம்மா என்றால் எங்கள் அம்மா தான்’ என்கிறார் அதிமுக …
-
- 0 replies
- 1.4k views
-
-
நிலா அக்காவின் கவிதைகள் நேக்கு மிகவும் பிடிக்கும் நேரம் கிடைக்கிற நேரம் பழையகளம் யாழ்களத்தில் போய் படித்தேன் அதில் பல கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தன சோ அங்கே இருந்து தூக்கி கொண்டு வந்துட்டேன் ................நிலா அக்கா ஏசமாட்டீங்க தானே (அது தானே போட்சாச்சு பிறகு என்ன என்று கேட்கிற மாதிரி இருக்கு ) வெண்ணிலா அக்கா யாழ்களம் 2 யில் எழுதிய கவிதைகளிள் சில!! காத்திருக்கிறேன் வாழ்வின் தேடுதலுக்காக நகர்ந்த நாட்களில் என்னை நீதான் அடையாளப்படுத்தினாய் உன் மௌனத்தின் வேர்களில் பூத்திருக்கிறது என் காதல் பூ பனித்துளியை பேட்டி காணும் மேகங்கள் விண்மீனைப் பிடிக்கும் மூங்கில்களில் அவசரம்.. இப்படியான என் கனவுகளின் தொடர்ச…
-
- 5 replies
- 3.9k views
-
-
காந்தீயம் (அக்டோபர் 2 காந்தி ஜெயந்திக்காக.) இமயத்தின் முன் ஓர் சிறுவனாய் அண்ணாந்து நிற்கிறேன் பிரமாண்டம்! அது ஒன்றுதான் புரிகின்றது. கலப்பு, பிறப்பு, இளமை, ஒழுக்கம், கல்வி, குடும்பம், வாழ்வில் எளிமை சமூகம், பண்பு, சமயம். சேவை, தர்மம், சத்தியம,பக்தி அகிம்சை அரசியல், தொழிலில் அறம் எனப் பலவாய் பாறைகள் அடுக்கிப் பார்க்கவே எட்டா உச்சமாய்த் திகழும் தியாகப் பாறை எட்டிப் பிடிக்க முடியாத் தெலைவில் எங்கோ முடியாய் இருக்க நானோ பிரமாண்டத்தின் வைர மலைகளை யானையைப் பார்த்த குருடனைப்போல ஒன்றொன்றாகத் தொட்டுத்தடவி... ... கூழாங்கற்களாய் உணர்ந்து மயங்கும் முட்டாள்தனத்தில் மூழ்க முடியுமா? ஏனோ எனக்கு எதுவும் புரியவி;லை கலப்புப் பற்றி காந்தீயம் சொல்கிறது: இயற்கை உனக்குக் காமக் கிளர…
-
- 4 replies
- 1.1k views
-
-
அக்கினி குஞ்சுகள் காலத்தை வென்ற கதாநாயகர்கள் நம் தமிழினத்தை காக்கும் காவல் தெய்வங்கள்; கப்டன் ------- எனும் முதல் விதையில் முளைத்த அரும்புகள் இன்று எதிரியின் மூச்சையே திணறடிக்கும் முழு விருட்சங்கள். பெரும் கடலையே விழுங்கிவிடும் கருப்புச் சூரியர்கள் பெரும் தணலில் கூட உயிர்வாழும் ஃபீனிக்ஸ் பறவைகள் உங்கள் கண் முன்னே ஒர் தெரிவு மரணமா எதிரியா? மரணத்தை வென்று எதிரியை அழித்திடும் இரும்பின் உறுதிகொண்ட இரும்பு பாறைகள். புற்றீசலாய் புறப்படும் எதிரியின் படைகளை பூண்டோடு அழித்திடும் புயல் காற்று நீங்கள் எதிரிகளை நடுங்கவைக்கும் தமிழ் ஈழத்தின் பிரம்மாஸ்திரம் தமிழ் மக்களின் உயிர்காக்கும் மார்புக்கவசங்கள். ஐம்பது…
-
- 5 replies
- 1.3k views
-
-
உங்கள் கனவில் மீனா வந்தால் நீங்கள் வாழ்வில் வீணா போவீர்கள்.., சிம்ரன் வந்தால் சீரழிந்து போவீர்கள்.., சினேகா வந்தால் செத்து போவீர்கள்.., அசின் வந்தால் அழிந்து போவீர்கள்.., ஆகையால், கனவு காணுங்கள் காதலில் தவிக்கும் சந்தியாவைப் பற்றி அல்ல... கஷ்டத்தில் தவிக்கும் ஈழத்தைப் பற்றி...
-
- 5 replies
- 1.4k views
-
-
நண்பனுக்கு திருமண வாழ்த்து மடல் -------- என் .... உயிர் நண்பனுக்கு இன்று .... திருமணநாள் .....! வாழ்க்கையின் அனுபவத்தை ..... அணுஅணுவாய் பங்கேற்ற .... என் இனிய நண்பனுக்கு ..... இன்று திருமண நாள் .....!!! நான் வாழ்த்தாமல் அவனை ..... யார்வாழ்த்தினாலும் அவன் .... திருப்தியடைய மாட்டான் ..... அவனை வாழ்த்தும் உரிமையும் .... கடமையும் எனக்கே உண்டு .....!!! சாத்திரங்கள் படி வாழ்வதை .... காட்டிலும் சாதித்து காட்டும் .... மனிதனாக வாழ்ந்திட வாழ்த்துகிறேன் ..... பஞ்சாங்கப்படி வாழ்வதை காட்டிலும் .... பஞ்ச அங்கங்களோடு வாழ்நாள் .... முழுவதும் வாழ்ந்திட வாழ்த்துகிறேன் .....!!! உறவுகளை அரவணைத்து வாழ்ந்து ..... உற்றாரை உள்ளத்தால் நேசித்து ..…
-
- 0 replies
- 7k views
-
-
என் உற்ற; என் துயரங்களில் பங்குகொண்ட, எனக்கு பிரச்சனை என்றால் தானும் கலங்கும் என் இனிய நண்பனின் எம் நிலமை பற்றிய பாடல் பாடல் ""யாருக்கும் அடி பணியாது....ஈழமே எம் நாடு"...
-
- 2 replies
- 1k views
-
-
கோபம் கொண்டு எழு தமிழா.. கொலை வெறி கொண்ட சிங்களவர்களை கடல் வந்து நம் இனத்தவரை அள்ளி சென்றது போல்.. நாம் அவர்களை அள்ளி செல்ல வா தமிழழா.. நம் தமிழ் மண் காக்க சென்ற நம் மாவீரர் வழியில்.. நாமும் செல்வோம் எழுந்து வா தமிழா.. நம் மண் காக்க போராடும் நம் போரளிகளுக்காக எழுந்து வா தமிழா.. நம் இனத்தவரின் அலறல் ஓசை உன் காதில் கேட்கவில்லையா? எழுந்து வா தமிழா.. நம்மை கண்டு அஞ்சி நடுங்கும் சிங்கள படைகளை அடித்து விரட்டுவோம் எழுந்து வா தமிழா.. நம் இனத்தவரின் வீரத்தை கண்டு இந்த உலகம் வியப்பில் ஆளட்டும் எழுந்து வா தமிழா.. நம் தலைவன் வழியில் நாமும் செல்வோம் எழுந்து வா தமிழா.. . அன்புடன் சுஜி
-
- 0 replies
- 1.2k views
-
-
பூமி கேட்டினால் மேவிப் பெருகிய பாலியாற்றைப்போல பேராராய்ப் பெருக்கெடுத்த நம் குருதி உதுமானியப் பேரரசின் சிறைகளுக்குள் சிந்தப்பட்ட ஆர்மீனியரின் குருதி வற்றி வறண்ட நெடிய சமுத்திரம்போல் புழுதியாய் கிளம்பி நமக்கெடுத்த தாகம் பாலைவனங்களில் கருகிய தார்பூரரின் தாகம் தணல் மூண்ட பெருங்காடுபோல் தீயாய் நாம்மை துவட்டிய பசி பட்டினியோடு மூச்சடங்கிய கம்போடிய வியட்நாயிமரின் பசி தலை அறுக்கப்பட்ட பறவைபோல் அனல் படரத் துடித்த நம் வயிறு பசியால் மடிந்த உக்கிரேனியரின் ஒட்டிச்சுருங்கிய வயிறு விசமேற்றி இறந்த மீன்களின் மூடா விழிகள்போல் நஞ்சுறைந்து வாட…
-
- 1 reply
- 1.1k views
-
-
-
கரும்புலி வேங்கைகளுக்கு என் கண்ணின் நீர்த்துளிகள்.... கவிதை - இளங்கவி தமிழன் சரித்திரம் தெரிவித்த நாம் உரிமைகோரும் வீரம்.... தம் உயிர் நீர்த்து நம் இனம்காத்து நம் முகவரியின் மானம்...... ''முடியாது'' எனும் சொல்லை அகராதியில் முடக்கி வைத்தவர்கள்...... ''முடியும்'' எனும் சொல்லை சரித்திரத்தில் முதன்மையாய் இட்டவர்கள்..... தலைவன் வேண்டியதை கொடுக்க தன்னுயிரை ஆகுதியாக்கிடுவர்...... எதிரி வேண்டாத இடங்களிலே அவனை நெருப்பாகி எரித்திடுவார்...... கப்டன் மில்லரில் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை நீண்ட...... எங்கள் முடிவிலா சரித்திரம் அவர்கள் முடிவறியா என் சித்தம்...? முடிவில்லா எண்ணிக்கையில் முன்னேறி வந்த எதிரியின் மூளைக்குள் புகுந்த …
-
- 5 replies
- 1.1k views
-
-
உன்னைப் பற்றி எழுதியே கவிதையாகி விடுகிறது என் கிறுக்கல்கள் ஒவ்வொன்றும் * என் முதல் கவியை நினைக்கும்போதெல்லாம் நான் மறப்பதில்லை உன் முதல் முத்ததை * என்னை கிறுக்கனாக்கிக் கொண்டிருக்கிறது உன்னை பார்த்த என் கவிதைகள் * நீ மிக அழகானவள் என்பதற்கு உன் மேல் பொறாமைப்படும் என் கிறுக்கல் ஒன்று போதாதா * எனக்கான உன்னை எப்படியாவது மிஞ்ச வேண்டும் என்பதே என் கவியின் தவம் -யாழ்_அகத்தியன்
-
- 0 replies
- 580 views
-
-
கவிதைகள் ----------------------------------------------- எனக்கு வந்த கடிதம்---------------------------------- அன்பானவளே நீ நலமாக இருக்கின்றாயா---- நீ எப்பவும் படிப்புபடிப்பு என்று செல்கின்றாய்- நான் நீ போகுமிடமெல்லாம் வருகின்றேன் அது உனக்குத் தெரியாது ஆனால் நீ நல்ல பெண் ஏதோ உன் அழகு என்னை மயக்கியது? உன் நல்ல குணம் நடைகள் எனக்குப் படித்தது எவ்வளவோ பணம் இருந்தும் நீ ஒரு சராசரி மனிதர் போல இருப்பாய் --- என் காதலை என்னிடம் நேரில் சொல்ல எனக்குப் பயமாக இருக்கின்றது என் காதலை நீ ஏற்றுக் கொள்ள மாட்டாய் என எனக்குத் தெரியும் இருந்தாலும் நான் நேரில் சொல்லாட்டியும் கடிதம் முலமாக எழுதி அனுப்புகின்றேன் நீ அத…
-
- 141 replies
- 17.8k views
-
-
என் மண்மேலே நின்று, என்மேலே இரத்தம் சிந்தி, யுத்தம் செய்த வித்தகரே, காத்த முடியாமல் சத்தம் போடாமல்-உங்களை நித்தம் தேடுகிறேன், தமிழீழ நாடு தமிழரின் தாய் வீடென்று என்மீது தாவி திரிந்த வீரர்களே, தனிமையாய் எல்லாம் வெறுமையாய் தவிக்கிறேன். என் கடல் மேலே ஏறி அலையோடு தாவி அற்புதங்கள் செய்தவரே-உங்கள் படகோசை கேட்காமல் படைவாசம் வீசாமல் பாவி மகளாய் பரிதவித்து வாழ்கிறேன். அலைகள் மட்டும் என்னை முட்டிப்போகுது, அன்று காடு மலைகள் எல்லாம்-உங்கள் பாதச்சுவடுகளால் பசுமையாக்கி சென்றீர் இன்று என்னை அழிப்பவர் கால்பதிக்க, கூடி அழ யாருமின்றி குமுறி அழும் என்குரல் கேட்காமல் போனதோ உங்களுக்கும். வாய் நிறைந்த சிரிப்போடு வானம் எரிய வான்புலியே காற்றிலும் புலி பறக்குமென…
-
- 6 replies
- 728 views
-
-
மழை வரும்போதுதான் குடையை தேடுவான்! மூச்சு முட்டும்போதுதான் யன்னல் இருப்பதை நினைப்பான்! நாளை எப்பிடி- சிரிக்க வழியென்று எண்ணி இன்றைய பொழுதை அழுதே- தொலைப்பான்! உழைக்கும் காலத்தில் சேமிக்க நினையான்! உதிரம் செத்து போனதொரு காலத்தில்- காசை எண்ணி தேம்பி தேம்பி அழுவான்! படிக்கும் காலத்தில் சீ என்ன வாழ்க்கை என்று சினப்பான்! காலம் முடிந்தால் ஐயோ இனி என்னாகுமோ என் வாழ்க்கை என்று அழுவான்! அடை மழை பெய்யும் நாளில் - நீரை சேர்த்து வைக்க நினைக்கான்! அனல் வீசும் கோடை வந்தால் குடத்தை தூக்கி கொண்டு ஊர் ஊராய் திரிவான்! போர் செய்யும் வீரருக்கு ஐந்து சதம் கொடுக்கான்! ஊரெலாம் - குண்டுவீச்சில் ஒருமூலை சென்றொதுங்கினால் தமி…
-
- 16 replies
- 2.8k views
-
-
கரை தேடும் அலை மீண்டு(ம்) கடல் சேர்கிறது இலைஉ திரும் மரம் மீண்டும் துளிர் விடுகிறது மண் வீழும் நீரும் ஆவியாய் விண் மீள்கிறது என்ன தான் விசித்திரமோ? பிரிந்து போன நம் காதல் மட்டும் இன்னும் உயிர்ப்படைய வில்லை தரித்து நிற்கும் புகைவண்டி மீண்டும் பயணிக்கிறது இடைவேளைக்குப் பின்னரும் திரைப்படம் தொடர்கிறது நின்று போன யுத்தம் மீண்டும் நிகழ்கிறது என்ன தான் விசித்திரமோ? நின்று போன நம் காதல் மட்டும் மறுபடி தொடரவே யில்லை :wink:
-
- 41 replies
- 4.5k views
-