கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
உனது ஆட்சிக்கான சாவுமணியை நீயே அடிக்கிறாய்.. நாமென்ன செய்ய..? உன் அழிவுக்கான குழியினை நீயே வெட்டுகிறாய்… யார் என்ன செய்ய..? உனது அகங்காரங்கள் உனக்கான பாடையை அலங்காரம் செய்து கொண்டிருப்பதை நீ அறிய மாட்டாய்… உனது கொடுங்கோலின் நுனி உனக்கான கல்லறையைச் செதுக்கும் உளியென்பதை நீ உணர மாட்டாய்… மனிதத்தையும் மனிதர்களையும் எரித்துக் குளிர் காய்பவனே… பிணங்களின் மீதமர்ந்து பிறைச் சோறுண்பவனே… உன் அரசாசனத்தை அக்கினி சூழ அதிக நாட்களில்லை…! ஆமாம்… உனது ஆணவ நடை ஓயும்.. உன் அகம்பாவக் குடை சாயும்…! உனது மாட மாளிகைகள் மண்ணோடு புதையும்; கூட கோபுரங்கள் குப்பை மேடாகும்! எங்களின் தயவாலும் நீ சூடிக் கொண்ட மகுடம் இன்னும் சில மாதங்களில் எரி…
-
- 1 reply
- 778 views
-
-
ஒரு கிறுக்கல் ஒன்று: எது நடக்கின்றதோ அதுவும் அநீதியாகவே நடக்கின்றது எது நடக்க இருக்கின்றதோ அது அறம் மீறியே நடக்க இருக்கின்றது உன்னுடையதை எல்லாவற்றையும் எல்லாவுமாய் இழந்தாய், ஆயினும் ஏன் ஆனந்தப்படுகின்றாய் எதை நீ பிறப்பிலிருந்து கொண்டு வந்தாயோ அவை அனைத்தும் பறிக்கப்படுகின்றன எதை உனக்காக படைத்தாயோ அதை அவர்கள் அவர்களுக்காக எடுத்துக் கொண்டனர் எதை அவர்கள் எடுத்தார்களோ அவை அனைத்தும் உன்னிடம் இருந்து பறித்துக் கொண்டவை எதை நீ அவர்களிடம் இழந்தாயோ அவை அனைத்தும் மீண்டும் உன்னாள் பெறப்பட வேண்டியவை பறித்த எதை அவர்கள் தமதென்று கொண்டாடுகின்றனரோ அவை அனைத்தும் உனக்கும் உன் சந்ததிக்குமானவை பிறிதொரு நாளில் உன் தெருவில் தோரோட்டி போகும் போது உனக்கான கீதையாக உன் சுதந்திரத்…
-
- 6 replies
- 1k views
-
-
காலியில் எங்கள் கழுத்து வெட்டப்பட்ட பொழுது நீங்கள் கைகட்டி வேடிக்கை பார்த்தீர்கள். ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்! கொழும்பில் குற்றுயிரும் குலையுயிருமாய் நாம் எரிக்கப்பட்ட பொழுது நீங்கள் வாய்புதைத்து பேசா மடந்தைகளாய் இருந்தீர்கள். ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்! அடங்கிக் கிடந்த நாங்கள் ஆயுதம் ஏந்திக் களம் புகுந்த பொழுது உங்களில் எல்லோரும் எங்களுக்குக் கைகொடுக்க வரவில்லை. ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்! ஆனால்... ஆனால், மூதூரிலும், ஆரையம்பதியிலும், வீரமுனையிலும் தமிழ்க் குருதி வடிந்த பொழுது... தமிழ்க் குருதியில் சிங்களம் நனைந்து திழைத்த பொழுது நீங்கள் கைகட்டி, வாய்புதைத்து நிற்கவில்லை. எரியும் வீட்டில் பற்றியெரிந…
-
- 2 replies
- 931 views
-
-
எரியுது எங்கள் தேசம் நாங்கள் உழைத்தது அனைத்தும் நாசம் அரசியல் வாதிகள் கோசம் அரைநொடியிலே கலைந்திடும் வேசம் மீனுக்கு தலையினை காட்டி-தினம் பாம்புக்கு வாலினை ஆட்டி கொடுக்கிறார் அரசுக்குக்கூட்டி அதை சொல்லுது ‘அஸ்வரின்’ பேட்டி ‘அதாவுல்லா’ காக்கா மறைந்தார்-நாம் அழிந்தபின் அலுத்கம விரைந்தார் பாராளுமன்றத்தில் கொதித்தார்-பின் பகைவனின் சேலைக்குள் ஒளித்தார். ‘ரிஸாத்தின்று’ நடிக்கின்ற நடிப்பு-அட சிவாஜியும் தோற்கிற நடிப்பு ‘அரசுக்கு தூக்குறார் செருப்பு’-அதை நினைக்கையில் வருகுது சிரிப்பு…! மாமி செருப்பால அடிச்சும் மாமா ‘ரவுசர’ உரிஞ்சும் மருமகன் தலைவர் ‘ஹக்கீம்’-அவ மகள்ட மடியிலே படுக்கார். கழுதைகள் எம்மை நெருக்க எம் கடைகளை அடித்து நொறுக்க உலகமே அதனை வெறுக்…
-
- 6 replies
- 1.2k views
-
-
"நீயும்" பிழை செய்தாய் "நானும்" பிழை செய்தேன் இனி..!!! "நாங்கள்" பிழை செய்யவேண்டாம்!!!! காத்தான்குடிக்கும் காங்கேசன்துறைக்கும் "உறவும்பாலம்" கட்ட நான் "ரெடி" உன் கைகளில் இருக்கும் "வெண்பொங்கலையும்" "பொல்" சம்பலையும் களுவி விட்டு வா!!! ஒற்றுமையாய் கரம் பிடிப்போம்!!!!
-
- 4 replies
- 877 views
-
-
நேற்றெமது ஊரை அழிக்கவும் இன்று உமது ஊருக்கு தீ வைக்கவும் எங்கிருந்து புறப்பட்டனர்? விமானங்கள் அன்றெம் நிலத்தில் கொட்டிய அதே பதற்றம் இன்று உம் ஊர்களில் நண்பனே உனக்காய் நான் குரல் கொடுப்பேன் ஏனெனில் நான் அறிவேன் இழப்புகளின் வலியை ரிஷான், நேற்றெம் வீடுகளை சிதைத்து இன்று உம் வீடுகளை எரிப்பது ஏன்? நண்பனே உனக்காய் நான் அவதியுறுவேன் ஏனெனில் நான் அறிவேன் வீடற்ற பொழுதுகளை நேற்றெம்மீது குண்டுகளை எறிந்து இன்று உம்மீது வாள்களை வீசுகின்றவர் யார்? நேற்றெமை கொன்ற குண்டுகளில் படிந்திருந்த அதே வெறியே இன்று உமை வெட்டும் வாள்களில் நண்பனே உனக்காய் நான் துடிப்பேன் ஏனெனில் நான் அறிவேன் காயங்களின் நிணத்தை ரிஷான், எம் கோவில்களை உடைத்து உம் பள்ளிவாசல்களையும் இடிப்பது ஏன்? நண்பனே உன…
-
- 5 replies
- 873 views
-
-
மறுக்கப்படுதல் நான் அழுவேன் உங்களுக்காக உங்களது துயரங்களை காயங்களை வலிகளை எனது மொழியால் சுமப்பேன் உங்கள் குருதி கண்டு எனக்கு உயிரலையும் எல்லாமே சிவந்த குருதி துயரப்பட்டவர்களின் குருதி கையாலாகதவர்களின் குருதி என்பார்கள் அவர்கள் நீங்கள் என்னை ஒதுக்குவீர்கள் உங்களுக்காய் ஒரு கண்ணீர் விழுவதை விரும்பமாட்டீர்கள் எங்களது பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்ள தயங்குவீர்கள் ஏன் எப்படி எதற்கென்ற கேள்வியெழும் உங்களிடம் எப்படியும் இருந்து விட்டுப்போகலாம் உயிரில்லா பிணங்கள் முன் கூச்சலிடுவதை விரும்புகிறவள் நானில்லை உங்களை போல தான் எங்களுக்கும் அழுவதற்கு கூட சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்தது அந்நாட்களில் இருந்தும் நான் ஒரு உணர்வுள்ள மனுஷி என்பதாலே நான் அழுவேன் உங்களு…
-
- 0 replies
- 655 views
-
-
அப்பா ஒரு அழகிய சிற்பி.. என்னை செதுக்கிய போது வலித்தது .. செதுக்கிய பின் என்னை பார்த்தா .. எனக்கே ஆச்சரியம் அவ்வளவு அழகு .. பல முரணுக்கு செந்தக்காரர் அப்பா .. என் பார்வையில் அப்படியே ஆனால் .. உள்ளாத்தம் என்னை சீர்படுத்தல் என்று .. எனக்கு அப்பொழுது தெரிய வாய்ப்பில்லை .. இளமையும் வேகமும் கேட்கும் நிலையில் .. எனக்கு இருக்கவில்லை அறிவுரை வதையே .. பொய்சொல்லி பணம் கேட்கும் போதும் .. சொல்வது பொய் என தெரிந்தும் கண்டுக்காமல் .. மேலதிகமா தந்துவிட்டு வேளைக்கு வா என .. சொல்லிவிடும் அற்புத ஜீவன் அப்பா .. என்ன செய்கிறாய் என்று இன்றுவரை என்னை .. கேட்டது இல்லை என்னுள் தான் இருப்பதா .. பலமுறை அம்மாவிடம் சொல்லி இருந்தார் .. அவன் என்னைபோல எங்கு போனாலும் .. தன்னை காத்து கொள…
-
- 18 replies
- 3.2k views
-
-
யாரைத் தேடுகிறாய்? நான் யேசுவைத் தேடுகிறேன். எனக்கு நடை பழக்கிய யேசுவைத் தேடுகிறேன். கள்ள முதலாளிகளை சாட்டையால் சவட்டிய அந்த மனிதரைத் தேடுகிறேன். ஏதற்கு? நடுவழியில் என்னை தொலைத்துவிட்டு தலைமறைவாகி விட்டார். எனது கையில் துவக்கைத் தந்து தனது மந்தைகளை மேய்ச்சல் தறையில் விடும்படி பணித்து அவர் மட்டும் தலைமறைவாகி விட்டார். இப்போ அவரது சிலுவைகளையும் நானே சுமக்கிறேன். மந்தைகள் என்னவாயிற்று? அவை அந்த மனிதரின் கோத்திரத்தாருக்கு உணவாயிற்று. இப்போ எதற்கு யேசுவைத் தேடுகிறாய்? இந்தச் சிலுவைகளில் இரண்டை அவர் தோளில் சுமத்த. -தமயந்தி http://www.piraththiyaal.com/
-
- 3 replies
- 1.1k views
-
-
எழில் பொங்கும் என்னூரின் ஏகோபித்த நினைவுகளோடு என் பயணம் தொடர்கிறது திருவிழாவின் தெருக்களில் தென்றலாய் வந்துபோனவைகளும் வீதியில் தேரோட நீரோட்டமாய் வந்து போனவைகளும் மனதில் மங்கலாக வந்து போகின்றன மார்கழி மாதத்து மரகதத் துகள்களாய் இன்னும் நெஞ்சத்து அடிப்பரப்பில் அடர்த்தியாய் ஒட்டிக்கொண்டபடி அணைத்து ஆறுதல் தருகின்றன வீட்டோரத்து வெடிப்புக்களின் இடைவெளிகளில் தவழும் எறும்புகளின் வரிசையின் கூட்டுப்போல் எல்லையற்று நீள்கின்றது நினைவு கால்கள் புதையும் கனவுகளோடு கண்விழித்த காட்சிகள் இன்னும் பசுமை குலையாத பச்சை வயலாய் பள்ளிகொள்ளும் போதில் வந்து போகின்றன எத்தனை கடந்தும் அத்தனையும் அசைக்க முடியா ஆணிவேராய் அடிமனத்தின் படிக்கட்டுகளில் ஆழப்பதிந்து அல்லல் செய்தபடியே
-
- 5 replies
- 790 views
-
-
நான் ஸ்ரீலங்கன் இல்லை ஒரு பறவையையும் விட்டுவைக்காத படுகொலையாளிகள் எமை பயங்கரவாதிகளென அழைக்கின்றனர் ஆஷா,ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களை பயங்கரவாதிகள் என்றுதான் அழைப்பார்களா? வேற்றினம் என்பதனால்தானே நமது சந்ததிகள் அழிக்கப்படுகின்றனர் ஒரு கல்லறையையும் விட்டு வைக்காத அபகரிப்பாளர்கள் எமை பிரிவினைவாதிகளென அழைக்கின்றனர் ஆஷா,அபகரிக்கப்பட்ட நாட்டிற்காய் போராடுபவர்களை பிரிவினைவாதிகள் என்றுதான்அழைப்பார்களா? வேற்று நாட்டவர்கள் என்பதினால்தானே நமது நாடு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது நாமொரு இனம் எமக்கொரு மொழி எமக்கென நிலம் அதிலொரு வாழ்வு வீர நிலத்தில் புதையுண்டிருக்கும் என் தோழியே! உறிஞ்சப்பட்ட குருதியும் மனிதப்படுகொலைகளும் அழித்துவிடுமா ஓரினத்தின் சரித்திரத்தை…
-
- 6 replies
- 1.1k views
-
-
காலங்கள் கடந்தன தான் எனினும் கடந்து வந்த பாதைகளின் கால்த்தடங்களின் வடுக்கள் இன்னும் மனதில் அடையாளமாய் எத்தனையோ எண்ணங்கள் சுமந்து எதிர்க்க முடியாத எதிர்பார்ப்புக்களுடன் இறுமாப்புக்களும் கடந்து கடத்த முடியாத நாட்களுடன் கனவுகளின் கட்டவிழ்ப்புக்களும் கரை காணா மொட்டவிழ்தல்களுமாய் முகைவெடித்து மணம் பரப்பி முற்றிலும் முடிவற்றதாய் வாழ்வு வானம் அளாவி வால்நட்சத்திரங்களாய் எதிர்காலத்தின் எண்ணிக்கையோடு ஏகாந்தத்தின் எல்லைகளற்று எப்போதும் எதிர்வு கூறல்களோடாய் எப்படியோ கடந்து வந்த காலத்தின் கருப்பும் வெள்ளையுமான பக்கங்கள் கண்ணில் அப்பப்போ தெரிகின்றது காட்சிப் பிழைகளின்றி கனவுகளில் எதிர்க்க முடியா ஏக்கங்கள் இன்னும் இருக்கின்றன என்னுடனே எப்போதாகில…
-
- 2 replies
- 588 views
-
-
ஆட்களை இழந்த வெளி வானம் நேற்றுக் காலைவரை உறைந்திருந்தது இப்பொழுது சிதறி கொட்டிக்கொண்டிருக்கிறது வானம் அழுகிறதென யாரோ சொல்லிக்கொண்டு போகிறார்கள் இப்பொழுதுவரை எந்தத் தகவலும் இல்லை சனம் தகர்ந்து அடங்கிப்போயிறுக்கின்றனர் குடி எரிந்து முடிகிறது. ஹெலிஹொப்டர்கள் அலைந்து கூடாரங்களின் சிதைவுகளை படம் பிடிக்கிறது எரிந்த வாகனங்களை மீட்டுக் கொண்டு போகிறது ஐ.நா எல்லாம் நசிந்துபோக அடங்கிக் கிடக்கிறது ஆட்களை இழந்த வெளி. கைப்பற்றப்பட்டவர்களாக குழந்தைகளை தொலைக் காட்சிகள் நாள் முழுவதும் தின்று கொண்டிருந்தன நான் தேடிக்கொண்டிருக்கிறேன். நந்திக்கடலில் பறவை விழுந்து மிதக்கிறது பறவைதான் சனங்களை தின்றது என்றனர் படைகள் நந்திக்கடல் உனத…
-
- 0 replies
- 532 views
-
-
இது கம்பன் பாடாத கவிதை.. தீக்குளிக்க சந்தர்ப்பம் இல்லாமலே தீயோடும்.. புதை குழியோடும் தீர்ந்துவிட்ட சீதைகளின் துயர் மறந்தோர் கவிதை இது. வேதனையின்.. கூக்குரல்..! இதுவும் ஒரு வதை தனக்குத் தானே செதுக்கிய.. சிம்மாசனத்தில் இவர்..! சிங்கள அமைச்சரவையில் அவர்...!! குத்தியரின் காசோலை அம்பு பாய்கிறது குடும்பிக்கார மறைவில் இருந்து. வாலி அங்கும் வீழ்கிறான்.. இராமன் இங்கும் வெல்கிறான்..!! அதர்மம் அழித்து தர்மம் வென்றதாய் காட்ட ஒரு காசோலை மட்டும் பரிமாறப்படுகிறது.. மீண்டும் வரலாறு திரித்து எழுதப்படுகிறது...! கம்பனுக்கு அன்று.. வாலி புகழ் திரித்து இராம புகழ் பாட கவி... பாட கள்ளிருந்தது தான் பெருங் கவி எனும் புகழ் விருப்பிருந்தது கூட அகத்தே …
-
- 1 reply
- 899 views
-
-
உனக்கும் எனக்குமான இறுமாப்பு ஏகாந்த வெளிதனில் எல்லைகளற்று விரிந்திருந்தது அதுவே இன்று நிட்சயம் அற்றதாய் நம்பிக்கையற்றதாய் நாளும் நடுவானில் நூலறுந்த பட்டமாய் நரகமாகிக் கொண்டிருக்கிறது எந்நேரமும் உச்சரிக்கும் இரகசிய மந்திரமாய் மனம் ஏக்கங்கள் கண்டு இன்றும் வாழ்கிறது ஏதிலியாய் எதுவுமற்று வாழ்தலற்ற வகையின்றி வரம்புகள் கடந்தோம் தான் வகை தெரியா மூடர்களாய் வெற்று வெளியில் நாமின்று வேலிகள் எதுவும் இன்றி விழுதுகள் கூட இன்றி வேடர்களின் வில்லாய் நாம் வசமானோம் வரப்புகள் இன்றி விதியின் சதிதானா வீழ்ந்தது மதியின் தவறிய கணக்காய் மனிதம் தொலைத்த மனம் மிச்சத்தின் எச்சங்களாக எங்கும் எண்ணக் கணக்குகள் தவற எதிரிகள் எண்ணற்றுப் போக எதுமற்றவர்களாய் நாங்கள்…
-
- 5 replies
- 600 views
-
-
அலை கடலாய் ஆர்பரிக்கும் அப்பப்போ அமைதி கொள்ளும் எட்டாத எல்லையெல்லாம் எப்படியோ கடந்துவிடும் ஏட்டிக்குப் போட்டியாக எதுவும் செய்துவிடும் ஏக்கம் கொண்டு பின்னர் எதை எதையோ எண்ணிவிடும் மார்க்கம் கண்டபின்னர் மட்டிலா மகிழ்ச்சி கொள்ளும் முந்தை வினைப்பயனை முழுதுமாய் நம்பிவிடும் அன்பு கொண்டு ஆட்படும் அகந்தை கொன்று அகப்படும் சிந்தை நிறைந்து சிரிக்கவைக்கும் செம்மை கொண்டு சிலிர்க்கும் சொந்தங்கள் தேடி சொர்கங்கள் கூட சந்தங்களாகி சத்தங்கள் ஓய நித்தமும் ஓய்வின்றி நித்தியக் கடனாகி நினைவின்றி ஓடும் மனம்
-
- 1 reply
- 577 views
-
-
இயற்கை எம்மை இயன்றவரை விட்டு வைத்திருக்கின்றது எதோ தன்னாலான இரக்கத்தோடு எல்லோரையும் இட்டு நிரப்பியபடி தூயனவாய்க் காற்று துகள்களற்று தலைவிரித்தாடாததால் நாம் தப்பிப் பிழைக்கிறோம் தரையில் நடக்கிறோம் கோபத்தின் உச்சியில் ஆழ்கடல் கொந்தளிக்காததால் கூரைகளின் கீழ் நாம் குதூகலங்கள் சுமந்தபடி குளிர் காய்கிறோம் தீயின் நாக்குகள் தீவிரமற்று திசைமாறி இருப்பதனால் தீங்குகள் அற்று நாம் தில்லுமுல்லுகள் செய்தபடி தினாவெட்டாய்த் திரிகிறோம் பயிரிடா நிலங்கள் பரிதவிப்பின்றி பக்குவமாய் இருப்பதனால் பசுமை குன்றினும் பாறைகளாகி பயன்பெறா மாந்தனின் போலி முகம் கண்டும் தாம் பொறுமை கொண்டு நிற்கின்றன வானப்பெருவெளி வீழ்ந்துவிடாது வெடிப் பிளம்புகள் சூழ்ந்துவிடாது வெட்ட…
-
- 3 replies
- 635 views
-
-
எண்ணங்கள் எப்போதும் எதிரொலிகளாய் நிரப்பப்பட்டிருக்கின்றன எல்லையற்ற வெற்றிடங்களின் ஏகாந்தத்தில் கற்பனைகள் கண்டபடி பாய்கின்றன மனதின் விருப்பத்துக்கும் ஆசைகளில் அலைதலுக்கும் அங்கீகரிக்காதவை கூட அகலக்கால் வைத்தபடி எத்தனை தூரமும் எத்தனை வேகமும் கொண்டதாய் எந்திரங்கள் போலன்றி எதிர்ப்பற்று எங்கெங்கோ அலைகின்றன ஏன்தான் இத்தனை ஆசைகளோ எவரோடும் ஒப்பிட்டு ஒப்பற்று எதிரிகளாகின்றன எண்ணங்கள் எப்போதும் எம் மனதுக்கு ஏற்ராற்போல் எம்மை மட்டும் நினைவில் கொண்டபடி
-
- 2 replies
- 493 views
-
-
ஏய் அப்பு! ஏன் உனக்கு மப்பு? நானொரு வப்பு! ஆடாத எங்கூட தப்பு! பத்திரமா ஓடித் தப்பு! போட்டிடுவன் ஆட்டுக்காலு சூப்பு! அந்தாபாரு லொலி பப்பு! வச்சிடுவன் உனக்கு ஆப்பு! சும்மா சும்மா பம்பலுக்கு!
-
- 2 replies
- 651 views
-
-
எங்களை நாமே கேட்டுக் கொள்வோம்? நிலம் பறிபோகிறது ஆத்திரப்பட்டு அழுகின்றார்கள் அவர்கள் எமக்கென்ன எதுவும் நடக்கட்டுமே புpள்ளைகள் கடத்தப்படுகின்றார்கள் என அலைந்து உலைந்து அரற்றுகின்றார்கள் அவர்கள் நாம் ஏன் கவலைப்படவேண்டும்? பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு படு மோசமான சித்திரவதைக்குள்ளாகின்றார்கள் எமது பிள்ளைகளுக்கு ஒன்றும் நடக்காதுதானே நாங்கள் ஏன் கவலைப்படவேண்டும் வலுக்கட்டாயமாக பிள்ளைகளை இராணுவத்தில் இணைக்க பிடித்துச் செல்கின்றார்கள் என வெந்து நொந்து அவர்கள் அழுகின்றார்கள் எங்களுக்கு என்ன நாங்கள் இங்கே வெளிநாட்டுக்குடியுரிமை பெற்று வசதிகள் எல்லாம் பெற்று வளமாக வாழ்கின்றோம் நாங்களும் அழுகின்றோம்தான் சின்னத்திரைகளில் வெள்ளித்திரைகளில் கதாநாயகனும் கதாநாயகிய…
-
- 0 replies
- 728 views
-
-
என் வீடும் அயலும் என் நினைவில் வந்து போனது பக்கத்து வீட்டு பாட்டியும் பாட்டனும் பொக்குவாய் கொண்டு சிரிக்கும் சிரிப்பும் பாக்கு வெற்றிலை இடிக்கும் சத்தமும் பழைய நினைவாய் வந்து போனது எதிர் வீட்டு அக்காள் எமக்குத் தெரியாமல் எம்வீட்டுப் பூக்களை பறித்து வந்ததும் எதுவும் கூறாமல் கொடுப்புள் சிரித்து எதிரி வேறென எமக்கே சொன்னதும் இன்று நினைப்பினும் சிரிப்பு வருகுது எங்கள் துலாவில் ஏக்கங்கள் அற்று எவ்வளவு தண்ணியும் அள்ள முடித்ததும் வாக்கால் வழிந்தோட கால்கள் நனைத்து வரம்புடைந்து வளவு நனைந்ததும் வீட்டுக்காரரின் வசைகள் கடந்து வசந்தமாய் சிரித்ததும் நினைவில் நிக்குது கிட்டிப் புள்ளும் கிளித்தட்டும் கீரைக் கறியும் கிழங்குகளும் பக்கத்து வீட்டில் பறித்த மாங்காய் பருவம் …
-
- 12 replies
- 1.1k views
-
-
கண்கள் மேய விரல்கள் தடவ வெளிச்சத்தில் இது நடக்க.. அவள் வேண்டும். பக்கம் பக்கமாய் பாகம் பாகமாய் பிரித்துப் படிக்க.. காரியம் முடிக்க சித்தி பெற அவள் வேண்டும். சிந்தனைக்கு ஓர் புத்துணர்ச்சி இரத்த நாளங்களுக்கு ஓர் கிளர்ச்சி..! அவள் சேவை தேவை வாழ்க்கை எங்கும்..! சோம்பல் போக்க படுக்கையில் கூட எனக்கு அவள் வேண்டும். இன்றேல் பைத்தியம் தான் பிடிக்கும்..! இத்தோடு சிந்தனைக்கு சிறையிடுங்கள் அவள் வேறு யாருமல்ல.. நான் படிக்கும் பாடப் புத்தகம்..! Spoiler படுத்திருந்து புத்தகம் படிப்பதே எனக்கும் பிடிக்கும். இதில் பல இலாபம் அதில் ஒன்று.. அப்படியே நித்தாக்குப் போயிடலாம்.
-
- 21 replies
- 1.4k views
-
-
சம்பவம் – இலங்கை, எல்பிடிய பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி செல்வி.டிமாஷா கயனகி, தனது கல்வி நடவடிக்கைகளுக்காக கொழும்பு செல்வதற்காக 24.05.2014 அன்று விடிகாலை 3.30 மணிக்கு, எல்பிடிய பஸ் நிலையத்துக்கு வந்தவேளை, அங்கு நின்றிருந்த இராணுவ வீரனொருவனால் அருகிலிருந்த பாழடைந்த கட்டிடமொன்றுக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். மாணவி அங்கிருந்து தப்பிக்க முற்பட்ட வேளையில் இராணுவ வீரனால் கத்தியால் பல தடவை குத்தப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். மோப்பநாயின் உதவி கொண்டு தப்பித்துச் சென்ற குற்றவாளியைக் கைது செய்துள்ள போதிலும், குற்றவாளி இராணுவத்தினன் என்பதால் ‘இராணுவ வீரனது காதலை மறுத்ததால் அவனுக்கு ஏற்பட்ட சடுதியான கோபத்தின் காரணமாகவே கொலை நிகழ்ந்துள்ளது. திட்டமிட்டுச் செய்ததல்ல’ என இ…
-
- 6 replies
- 1.3k views
-
-
மரங்களும் மனிதர்கள் போலவே தாம் செய்த வினைப்பயனில் வேண்டுவது போல் வளராது விதைத்தலுடனும் விடைபெறுதலுடனும் மனிதர்கள் மரங்கள் மட்டுமல்ல அத்தனை உயிர்க்குமானது தாம் விதைத்த வினையின் வடிவில் வினையறுக்க நாதியற்று விடியலை நோக்கியபடி அழகாய் நீண்டு நெடிதுயர்ந்து கொள்ளை அழகுடன் கிளை பரப்பி காண்போரை வசீகரிக்கும் அழகற்ற இலைகளும் வளர்வதர்க்கை வளர்ந்தபடி முட்களோடு முசுட்டை இலைகளுடன் வண்ண மலர் கொண்டு மயக்கும் மனம் கொண்டு காய்கள் கனிகள் என கவர்ந்திழுக்க கவனிப்பும் அதற்கானதாய் காலங்கள் முழுதும் காட்சிகளாய் காண்போரை மயக்கிடும் நெட்டையாய் குட்டையாய் நிறையவே காண்கின்றேன் தினமும் ஆனாலும் மனிதர் போல் அவை மற்றவரைப் பார்த்து ஏங்கித் தவிப்பதில்லை பொறாமை கொண்டு பொழுதைக் …
-
- 3 replies
- 1k views
-
-
அறம் -வ.ஐ.ச.ஜெயபாலன் கண்ணகி உயர்த்திய ஒற்றைச் சிலம்புக்கே மதுரையோடு மன்னனும் அழிந்தான். முள்ளிவாய்க்கால் ஊழியின்போது குருதி சிந்தச் சிந்த உயர்ந்த ஆயிரம் ஆயிரம் ஒற்றைச் சிலம்பால் கொடுங்கோல் மன்னனின் தோழ தோழியர்கள் முடியிழந்தின்று தெருவினில் அலைகிறார்.. சிலம்பே சிலம்பே ஒற்றைச் சிலம்பே இசைப்பிரியாவும் தோழ தோழியரும் உயர்த்திப் பிடித்தத தர்மச் சக்கரமே கடலில் வீழ்ந்த தமிழக மீனவன் கைகளில் உயரும் ஒற்றைச் சிலம்பே தமிழன் குருதியைச் செங்கம்பளமாய் இன்னும் எத்தனை நாட்கள் விரிப்பரோ தர்மம் நசியக் கொடுங்கோல் விருந்து இன்னும் எத்தனை நாட்க்கள் வருவரோ
-
- 6 replies
- 1.3k views
-