Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by Mayuran,

    வசந்தம் வந்தது வண்ணக் கதிரவன் ஒளியொடு வான் உயர்ந்த மரமெல்லாம் வான் மறைந்துத் துளிர்த்து நிற்ப வசந்தம் வந்தது வண்ணக் கதிரவன் ஒளியொடு பூ மகள் மேனிதனை பூக்கள் மறைத்து நிற்க பாரே அழகில் மிதக்குது பகலவன் சிந்தும் புன்னகையில் இத்தனையும் பார்க்கையிலே மனசெல்லாம் ஒரு தவிப்பு - எம் தாய்மண்ணின் பிறந்ததற்காய் தம் வசந்தம் தொலைத்து வாழும் - எம் தொப்புள் கொடி உறவுகள் வாழ்வில் தொலைந்த வசந்தம் வீசும் நாள் எந்நாளோ??? http://inuvaijurmayuran.blogspot.ch/2014/03/blog-post_20.html .

    • 3 replies
    • 1.4k views
  2. Started by எஸ். ஹமீத்,

    வேஷம்...! -எஸ். ஹமீத் **சிங்கார வதனந்தான் சிலிர்ப்பூட்டும் சிரிப்புந்தான் சேலைக்குள் இருக்கிறது எயிட்சும் இறப்பும்...! **பளபளக்கும் பாம்புதான் வழுவழுக்கும் உடலும்தான்... பற்களில் இருக்கிறது விஷமும் சாவும்...! **அழகான ஏரிதான் அன்னப் பறவையும்தான்... அடியில் இருக்கிறது முதலையும் முடிவும்...! **அடர்ந்த காடுதான் அறுசுவைக் கனிகள்தான் கூடவே இருக்கிறது மிருகமும் மரணமும்...! **தகதகக்கும் நெருப்புத்தான் தங்கத்தின் வண்ணம்தான் இறங்கினால் இருக்கிறது சூடும் சுடலையும்...! **வெண்ணிற ஆடைதான் செந்நிற சால்வைதான் சேர்ந்தே இருக்கிறது குருதியும் கொலையும்...!

  3. GijFopapypUe;J xU Fuy;… cwNt cwNt cwNt - vd; Fuy; cdf;Ff; Nfl;fpwjh? vd;id ahnud;W cdf;Fg; Ghpfpwjh? GijFopapypUe;J Gyk;GfpNwd;. GOtha; vd;Dly; nespfpwJ. vYk;Gfs;jhd; vd; milahsk; vg;gbf; fhz;gha; ehd; ahnud;W ve;jd; Fuy;Nghy; gy Fuy;fs; vk; Njrj;jpd; kz;zpy; vOfpd;wd. cuj;j Fuypy; xd;wpize;J cyfk;Nfl;f eP nrt;tPuh? chpik Nfl;L ehd; Nghuhltpy;iy cwTf;fhfTk; Fuy; nfhLf;ftpy;iy njUtpNy jdpikaha; epd;wNghJ njUehiar; Rl;lJNghy; Rl;Ltpl;lhh;. Fowpg; ghhj;Njd; Kbatpy;iy Fk;gpl;Lk; mONjd; Nfl;ftpy;iy njUNthuk; vd;id ,Oj;Jr;nrd;W jpkpwj; jpkpwj; jho;j;Jtpl;lhh;. vd;Dld; Nrh;e;j gyNgiu vhpj;jhh; joypy; Ftpj;Jitj;J vQ;rpa rpyhpd; vYk;Gfis miuj;J…

    • 8 replies
    • 712 views
  4. லண்டன் வீதியிலே மின் விளக்குகளில் அவள் அழகு வதனம் பள பளக்கிறது.. காதுத் தூக்கங்கள் மின்னி மிளிர்கின்றன.. நட்ட நடு நிசியில் தவிப்புடன் அவள்.. முகமெங்கும் ஏக்க ரேகைகள்.. நகப்பூச்சுக்களால் அழகு பெற்ற கைவிரல்கள் தொடுகை அலைபேசியை நோண்டியபடி.. எதற்கோ அவசரப்படுகிறாள் பாவம் என்று இரங்குகிறது இந்தப் பாவி மனம்..! அடுத்த சில வினாடிகளில்.. பறந்து வருகிறது ஒரு பி எம் டபிள்யு.. சாலை ஓரம் அவள் பாதத்தின் அருகே அமைதியாகி நிற்கிறது.. நாலு வார்த்தையில் பேரம் முடிகிறது.. எட்டிப் பாய்த்தே காரில் ஏறிப் பறக்கிறாள்.. பாவம் என்று ஏங்கிய மனம் இப்போ கொஞ்சம் பதறுகிறது... அடுத்த சில வினாடிகளில்.. சைரன் ஒலிக்க ஓடுகின்றன பொலிஸ்கார்கள்.. விரட்டிச் சென்று விராண்டிப் ப…

  5. விதைகளை தின்னும் தேசத்தில் முகிழ்த்தவளே, கனவுகளை கருவறுக்கும் கொலைவாள்களிடையே எழுந்தவளே.. இழப்பின் வலிகளை மொழிகளால் இறக்க முனைந்தவளே இழிகாலதில் இறங்கிய ஊழியின் மகளே.. குருதி குடிக்கும் பேரினத்தின் குரல்வளையில் விலங்கு பூட்டவா நீ எழுந்தாய் ... இல்லையே.. அண்ணன்களோடு ஆனந்தவாழ்வு கேட்டுதானே நீ அமர்ந்தாய் வீதியில்... விபூசிகா... வலி முடிவொன்றின் வழக்குரைத்தவளே உன் குரலணுக்களின் தீண்டலால் தீப்பற்றியெரிந்த வெளிகளிலும் கருகி நைந்துபோன திடல்களிலும் ஆயிரமாயிரம் விழிகள் திறந்து கண்ணீர் வடிகின்றன.. வேரீரமிழந்து இலையுருத்திக் கிளைசிதைந்து போன பெருமரத்தில் கூடுகள் அழுகின்றன. உடல்சுமந்த குற்றவுணர்வோடு குனித்து நிற்கின்றோம்.. எட்டப்பர்கள் நாங்க…

    • 6 replies
    • 701 views
  6. தாயே உனக்காயும் விபூசிக்காகவும். அம்மா அம்மா என - நீ அழைத்துச் சொல்லும் துயரத்தின் ஈரம் நெஞ்சுக்குள் நெருப்பாய் மூண்ட நாட்கள் இன்று போல.....! உன்னைக் கைவிடோமென நம்பிய உனது பிள்ளைகளின் கனவுகள் மீது உனது நம்பிக்கைகள் து(த)ளிர்த்துக் கொண்டன. உனது கண்ணீரை உனது துயரங்களை நீ சொல்லியழுகிற போதெல்லாம் மறுமுனையில் உனக்காய் உனது குழந்தைகளுக்காய் அழுத நாட்கள் அதிகம் தாயே....! நிலம் மீட்கும் போரில் பிள்ளைகள் விதையாகிப்போன பின்னும் வீரத்தின் அடையாளமாய் அவர்கள் விட்டுச் சென்ற கனவுகள் வாழும் நிலத்தில் வாழும் கனவோடுதானே வன்னியைப் பிரியாமல் அங்கேயே வாழ விரும்பினாய்....! ஏன்றாவது திரும்புவான் கடைக்குட்டியென்ற கனவைத் தானே தாயே என்றென்றும் புலம்புவாய் அவனது வரவைத் தானே நீ தினமும் ஏ…

    • 6 replies
    • 898 views
  7. உயிரில் உள்ள ஒவ்வோர் அணுவும் வலியால் துடிக்க வாடும் எனக்கு- உதவிட இந்த உலகினில் யாருளர்...? நெஞ்சம் முழுதும் நிறைந்த சோகம்... கொஞ்ச மேனும் கருணை கொண்டு- உதவிட இந்த உலகினில் யாருளர்...? பெற்றார் இன்றிப் பிள்ளைகள் இன்றி உற்றார் இன்றி உழலும் எனக்கு- உதவிட இந்த உலகினில் யாருளர்...? நாளும் பட்டினி.. நாளையும் பட்டினி.. வீழும் கண்துளி விரல்கொண்டு துடைத்தினி- உதவிட இந்த உலகினில் யாருளர்...? எண்ணற்ற துக்கம்... இடையற்ற துயரம்... கண்ணுற்றுக் கலங்கிக் கடுகியே வந்து- உதவிட இந்த உலகினில் யாருளர்...?

  8. புலவன் என்று பொய்புரைத்து மணந்துகொண்டவன் தன் மனைவி படிப்பறிவற்றவள் என அறிந்து ஆறுதல் அடைந்தான். அவன் சொல்லும் சொற்களை அவள் கவிதை என நம்பினாள். அந்நிலையில் அவள் கணவனுக்குச் சோதனை வந்தது. கவிதைக்குப் பரிசளிப்பதாக அரசனின் அறிவிப்பை செவிமடுத்த அவள், அவனைக் கவிதை எழுதி அரசனிடம் பரிசு பெற்று வருமாறு வேண்டிணாள். அன்புடடையாள் வேண்டுதலை மறுக்கமுடியாது விதியே! என்று அவன் அரசவைக்குப் புறப்பட, அவள் கட்டுச்சோறும் கட்டிக் கொடுத்தாள். என்ன எழுதுவது! எதை எழுதுவது! புரியாத அவன் போகும் வழியில் எலியொன்று மண்தோண்டுவதைக் கண்டான். உடனே மண்ணுண்ணி மாப்பிள்ளையே! என்று எழுதினான். சற்றுத் தூரம் செல்ல அவன் கட்டுச் சோற்றை முகர்ந்த காகம் ஒன்று கா! கா! என்று கத்தியது. கத்தலைக் கேட்டு காவிறையே! என்ற…

    • 0 replies
    • 1k views
  9. தமிழர்களும் மனிதர்கள் தான்!!! அண்ணாவை காணவில்லை என அழுதாள் "தங்கச்சி" அவளும் காணாமல் போனாள்..!!! என்ர பிள்ளையை திருப்பித்தாங்கோ என கதறினாள் ஒரு "தாய்" அவளும் காணாமல் போனாள்..!!! இதயமே இல்லாத இரும்புமனிதர்கள் தேசத்தில் கண்ணீர் வடிப்பது தண்டனைக்குரிய "குற்றம்"! மனிதமே இல்லாத மிருகங்கள் தேசத்தில் விழி நீரின் "வலி" தெரியாது அழுபவனுக்கு மரண "தண்டனை"! நாக்குகள் அறுக்கப்படும் நரக பூமியில் கேள்வி கேட்பவன் "தீவிரவாதி" நீதியே இல்லாத "நிர்வாண" நாட்டில் கோமணத்தோடு திரிபவன் "குற்றவாளி"! கேட்க நாதியற்ற இனமாய் இருப்பதால் நாய் கூட துணிந்து காலைத்தூக்கும் "நரக தேசம்"! விசர் நாய்க்கு தண்ணீருக்குப் பயம் வெறிநாய்களுக்கு தமிழனின் கண்ணீ…

  10. சாம்பல் மேட்டில் போட்ட .. பூசணி விதை முளைத்து ... கொடிவிட்டு அடர்த்து பரந்து.. நாலு திக்கும் அகல விரிந்து .. தனக்கென ஒரு ராஜ்ஜியம் இட்டு .. பச்சை பசேலென கண்குளிர இருந்த்தது .. அதில் பூத்த பூக்களில் காய்யாகி வந்த .. ஒரு பிஞ்ச்சு மண்ணுக்கு தன்னை கொடுக்க .. மிகுதி இரண்டு எவனோ களவாடி போக .. தேடிய தோட்டக்காரி கிடைக்காது ஏங்க.. கூட இருந்த இளம் பிஞ்ச்சும் சேர்த்து போக .. பார்த்து இருந்த திருடர் தாம் பிடிபடுவம் .... என்னும் பயத்தில் சூழ்ச்சி செய்தனர் ... காணியும் தோட்டமும் உன்னது இல்லை .. அதில் பூசணி கொடியே இருக்க வில்லை .. என்று புரளி கிளப்பி பொய்யர் ஆக்கி .. கொடியை மண்ணுடன் பிஞ்ச்சுடன் சேர்த்து .. பிடிங்கி ஒளித்து வைக்கிறார்கள் அவர்கள் .. அவர்களுக்கு தெரியாது …

  11. என்னாங்க நம்ம தமிழ்நாட்டில பாட்டெழுதுறவங்க நம்மூரில உள்ள எதையாவது கோத்து பாட்டாக்கிடுவாங்க.. ஏங்க ஈழத்துல இப்பிடி எழுத மாட்டாங்களா? இது நாட்டுப்புறப்பாட்டுங்க புடிச்சிச்சு கொண்டாந்து போடறேன்... ஆக்கம் :- கொ. பெ. பிச்சையா முத்தமிழாய் தோணுதடி முத்துப்போல பல்லழகி முறுவலாய் சொல்லழகி கொத்துக்குலை கனியழகி கோவைப்பழ இதழழகி செப்புச்சிலை சீரழகி – உன்னை சேர்த்தணைக்கத் தோணுதடி திருவாரூர் தேரழகி தென்மதுரை ஊரழகி திருச்செந்தூர் அலையழகி தஞ்சாவூர் கலையழகி ஶ்ரீரங்கக் கோபுரமே – உன்னை சேவிக்கத் தோணுதடி தேனியூர் செங்கரும்பே திருவண்ணைக் கற்கண்டே வேம்பூறுக் கருப்பட்டியே வெள்ளியணை அ…

    • 16 replies
    • 1.2k views
  12. தீபச்செல்வனின் கவிதை :- விபூசிகா கடத்தப்பட்டாள்! இன்று வெளியான (13.03.2014) ஆனந்த விகடனில் வெளியான இரண்டு கவிதைகளில் ஒன்று விபூசிகாவைப் பற்றியது. "காணாமல் போன அண்ணன்" என்பது அக் கவிதை. அந்தக் கவிதை இன்று வெளியாகியிருக்கிறது என்று நான் அறியும்போது அந்த விபூசிகாவும் கடத்தப்பட்டிருக்கிறாள் என்று செய்தியையும் அறிகிறேன். குழந்தைகள் காணாமல் போகும் தேசத்தில் என்னதான் இருக்கும்? காணாமல் போன அண்ணன் ஓர் நாள் கும்மிருட்டில் அண்ணனைக் கொண்டு செல்லும்பொழுது வாகனத்தின் பேரிரைச்சல் கேட்கையில் அண்ணன் எங்கே என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்கவில்லை தெருவில் அண்ணனைப் போன்றவர்களைப் பார்க்கும்போதும் அடுத்த வீட்டுப் பிள்ளைகளுடன் விளையாடச் செல்லும்போதும் அண்ணன் வந்துவிட்டானா? என…

    • 0 replies
    • 914 views
  13. Started by nedukkalapoovan,

    வகை வகையாய் வடிவடிவான கோபியரொடு கொண்டாடினும் கொள்கையோடு இருந்தான் இந்த நவீன கண்ணன். அந்த வேளையில்... இணையத்தில் வந்தாள் கண்ணா என்றாள் கண்ணடித்தாள் கருத்தைக் கவர்ந்தாள் காகித ரோஜாவால் காதல் செப்பினாள். காளை இவன் களிப்படைந்தேன் கதைகள் பல பேசி களைப்பும் அடைந்தேன். கடைசியில்.. போன் சிம்மை கழற்றி வீசினாள் கண்ணனோடு மீராவின் காதல் முடிந்தது என்றாள்..!! அந்த மீராவுக்கோ ஒரு தம்புரா துணை இந்தக் கண்ணனுக்கோ தனிமை துணை..!!!

  14. Started by Ahasthiyan,

    "அப்பா கவனமா போய் வாங்கோ " பிள்ளை எல்லாம் எடுத்து வைச்சியே ? "ஓமப்பா " ஈச்சம் பத்தை தாண்டி சைக்கிள் உருண்டது. வடலியின் நடுவே நாப்பது மரம். தடம் காலில் போட்டேன் அவள் சலங்கையும் மெட்டியும் கேட்டிருந்தாள். விறு விறுவென்று ஏறினேன். பெண்பூ தேடிஅறுத்தேன். அவள் தாலிக்கு வீட்டில் தவம் இருந்தாள். பாளையில் சத்தகத்தால் சீவினேன் அவள் இப்போ தலை சீவிக் கொண்டிருப்பாள். வயிற்றில் சுண்ணாம்பு பூசியிருந்த புது முட்டியை பத்திரமாக கட்டினேன். பழைய முட்டியில் பனையின் கண்ணீர் நிரம்பி இருந்தது. அவளும் வீட்டில் அழுது கொண்டிருப்பாள். இடுப்பில் தொங்கிய முட்டியில் ஒவ்வொன்றாய் சேகரித்து இறங்கினேன். தவறணையில் கொடுத்து காசு வாங்கி திரும்புகையில். கள்ளுக்குடித்த கூட…

  15. பதின்மங்களின் படிமக்கனவுகள்; புதினங்களாய் பேசிக்கொள்ளும் இரகசிய வார்த்தைகள்; இளசுகளின் சுத்தல்களில் பெருசுகளுக்குப் புரியாத தலைமுறை வளர்ச்சியின் வழக்கமான அதே காதல்! எப்போதும் புத்தம் புதிதாய் மின்னும் எண்ணங்களுடன் தோன்றும் மின்னல்கள்! மின்சாரம் இல்லாத ஊரில் மனசுக்குள் விளக்கெரியும்! இரு ஜோடி இதழின் அழுத்தத்தில் பலகோடி 'வோல்ற் ' மின்னழுத்தம் பிறக்கும்! முதல் முத்தம் எப்பொழுதும் தலைக்கேற்றும் பித்தம்! முதன்முதற் காதல்.... காலத்தால் அழியாத இதயத்தின் மோதல்! சூரிய உதயங்கள் வரை வண்ணக் கனவுகள் ஆக்கிரமித்த வாலிப பருவத்தின் வலிந்த போர்க்காலங்கள் ! கருவேப்பிலை மரத்தைக்கூட பெருவிருப்போடு பார்த்து ரசிக்க வைத்து நெருப்பாக தேகம் கொதிக்க வைத்து பார்வையாலே …

  16. ஊருக்கு நான் போகவேணும் ஊருக்கு நான் போகவேணும் என்ர கடலில காலை நனைக்கவேணும் வெள்ளை மணலில படுத்து கிடக்கவேணும் அம்மான்ர மடியில நித்திரை கொள்ளவேணும் தம்பியை தோளில தூக்கவேணும் தங்கச்சியை கைபிடிச்சு நடக்கவேணும் மாமியின்ர வீட்டையும் போகவேணும் என்ர மச்சாளையும் ஒருக்கா பாக்கவேணும் முருகன் கோயிலுக்கு திருவிழா செய்யவேணும் கடலைக்கொட்டை சோளம் வாங்கி தின்னவேணும் சைக்கிள்ள சுத்தி திரியவேணும் ஊரில கனபேரை சந்திக்கோணும் எங்கட பொடியளோட கும்மாளம் அடிக்கவேணும் எங்கினையும் அவங்களை கூட்டிக்கொண்டும் போகவேணும் பள்ளிக்கூடத்துக்கும் ஒருக்கா போகவேணும் எனக்கு படிப்பிச்ச ரீச்சரையும் சந்திக்கோணும் கொக்குப்பட்டம் கட்டி ஏத்தவேணும் நார் க…

    • 12 replies
    • 1.2k views
  17. எண்ணுக்கணக்குக்கு அப்பால் எங்கள் உணர்வினை புரிந்து கொள்ள முயலுங்கள் எங்களைத் தெரிகிறதா? எம் நிலை புரிகிறதா எங்களின் எண்ணிக்கை அடிக்கடி கூறப்படும் எண்ணிக்கைகள் மாற்றப்பட்டு கருத்துக்கள் பரிமாறப்படும் ஆனால் எங்களை எவருக்கும் தெரியாது எங்கள் வாழ்நிலையும் எவருக்கும் புரியாது இப்போதாவது எம்மைத் தெரிகின்றதா? குடும்பத்தலைவர்களை இழந்தவர்கள் என சுட்டிச்சொல்லப்படுபவர்கள் நாங்கள். எண்ணுக்கணக்குக்கு அப்பால் எங்கள் உணர்வினை புரிந்து கொள்ள முயலுங்கள் எத்துணை இடர்களுக்குள் எம் வாழ்வு தொடர்கின்றது என பாருங்கள் வாழ இடம், வசிக்க வீடு உழைப்புக்கு வழி உண்பதற்கு உணவு உடுக்க உடை இப்படி எதற்குமே வழியின்றி தனித்து விடப்பட்டு மெல்ல செத்துக்கொண்டிருக்கின்றோம் பசித்து அழும் குழந்தையை ஆ…

    • 4 replies
    • 737 views
  18. பெண்ணின் பெருமை பேசி பெண்ணை அடிமை கொள்வார் பெண்ணைப் புகழ்ந்து பாடி பேதைமை கொள்ள வைப்பார் பொன்னே மணியே என்றும் பூவின் வாசமென்றும் பேசிப் பேசிப் பெண்ணைப் பேச்சிழக்க வைத்திடுவார் பூரணை நிலவுபோல் புகுந்தவீடு வருபவள் பத்தும் தேய்த்து தான் தேய்ந்து பழையதாய் ஆகியபின் பெண்ணா நீ என்று பேசியே கொன்றிடுவர் பாலைவனத்தின் பசுந்தளிரே போதை கொள்ள வைக்கும் பணக்கள்ளே பவளமே பென்னரங்கே பொன்மணியே போற்றி உனைத் தொழுவேன் பவளமே எனக் கூறிப் பத்திரமாய்ப் பூட்டிவைப்பார் பாவையரை வீட்டினுள்ளே பாழாய்ப் போன பெண்கள் பூட்டியது தெரியாது பெண்ணென்றால் இதுவென்று பெருமை மிகக் கொண்டிடுவார் பண்பாடு இதுவென்று பட்டிகள் போல் நடத்துவதை பெருமிதமாய் எண்ணி பொங்கும் மனதடங்க புத்தகமாய் ஆகிடுவார் பேதைப் பெண்ணே …

  19. நான் இறந்தே போனேன் ஆனால் ... என் இதயம் துடி துடிக்க. நான் பேச்சு அற்று கிடந்தேன் ஆனால் ... எனக்குள் குரல் ஒலிக்க நான் பார்வை இன்றி கிடந்தேன் ஆனால் ... வெளி உலகை உள்ளூரப் பார்த்து நான் அசைவின்றி கிடந்தேன் ஆனால் ... கனவு என்னை தொலை தூரம் கொண்டு செல்ல நான் இறந்தே போனேன் ஆனால் ... உயிராய் ... உயிராய் இறந்தேன்.

    • 5 replies
    • 949 views
  20. பட்டினியில் ஓர் உலகம் பகட்டினில் இன்னோர் உலகம். இரண்டிலும்.. மனிதர்களே ஆட்சி. இப்பிரபஞ்சத்தில் இப் பஞ்சத்தை வேறு எங்கினும் காண முடியுமோ..??! தெரியவில்லை..!! சட்டங்களில் எழுத்துக்களில் கோட்டு சூட்டுப் போட்ட மனிதர்கள் எழுதி வைச்ச மனித உரிமைகள் பத்திரமாக... மனித உயிர்களோ.. இப்படிக் கேவலமாக..!

  21. உவகை கொ(ல்)ள் மனம் உன்னை நினைத்து .. உயிரில் கலந்து நீரில் கலந்த உப்புபோல் .. என்னுள் என்றும் உறைத்து இருக்கும் பனி நீ .. என் வெப்பம் தாங்காமல் .. விலக கூடாது பெண்ணே .. யான் நேசிப்பது உன் இதய அறையில் ஒரு இடம் .. கிடைக்குமா என் கல்லறை கட்ட அங்கு என்றே .. இறுதிவரை உன் மூச்சுப்பட்டவது சிலவேளை நான் .. உயிர்தெழகூடும் உறங்கிய ஒரு சிறு விதையாய் .. நீ சிந்தும் கண்ணீரில் இருந்து நான் மெதுவா வளர ... உன்னுடன் வாழ்த்த காலத்தை நிழலா உனக்கு தர ... இருவரும் அடிக்கடி சந்தித்த குளத்தடி ஆலமரம் போல் .. நான் மட்டும் போரில் மரணிக்காமல் இருந்திருந்தால் .. காதல் வாழ்த்து இருக்கும் மங்கலமா .. நீனு ஏன் இப்பொழுது வாழவேண்டும் அமங்கலமா .. நல்லவர்கள் நாலுபேர் வாழ்த்த…

  22. Started by Kavian,

    நிதம் என் விழிகள் உன்னருகே விழுகிறதே, திசை தெரியா என் மனது உனக்காக ஏங்குகிறதே, சொற்களால் வரைய இது வாழ்க்கைக் குறிப்பா வார்த்தைகளால் வளைக்க இது வீரத் தழும்புகளா வானத்திற்கு வளையல் போடும் செயல், எளிதல்ல ஆனாலும் எண்ணம் ஏற்றமுடையது சிந்தித்து அடைகாக்க இது அவையுமல்ல, கைகள் பேச நிதம் பதில்கூறவேண்டும்.... திங்கள் மடிந்து ஞாயிறு மலராது, உன்னை பிரிந்து நானும் வாழமுடியாது.... கற்பது காதலாயினும் கற்பிப்பது என் தேவதையே.... அடிப்பது எதிர் நீச்சலாயினும் நீந்துவது அவள் மனதிலே.

  23. Started by Kavian,

    நெஞ்சில் உறுதிகொண்ட நேரிய பாவை அஞ்சி ஒழியாத அறிவாற்றல் கோவை வஞ்சி என அழைப்பேன் நான்மட்டும் முறைத்து முறுவல் தந்து மறைவாள்! தழும்பாத நடை தணலான குறி கொண்ட நேரான வழி இதுவே அவள்.

  24. குறுக்குக் கட்டி நீ குளிக்கையிலே குறுக்கு மறுக்காய் அலையுதடி மனசு! குறும்புக்காரன் மனசுக்குள்ளே குறுகுறுக்குதடி வயசு! தலைக்கு சீயாக்காய் தேய்ச்சு சிகைக்கு சாம்பிராணி காட்டி நீ குளிச்சு முடிந்தபின்னும், எனக்கு முடியவில்லை! என் இதயம் படியவில்லை!! புது உடையுடுத்தி வந்த பின்னும் என் படையெடுப்பு அடங்கவில்லை! மடையுடைத்த எண்ணத்தில்... தடையுடைக்கும் திட்டத்தில் என் கவனமெல்லாம் உன்னிடத்தில் உன் கவளம் போன்ற கன்னத்தில்! சமயலறைக் கட்டில் நீ சமைக்கையிலே, சமைந்தவள் உனைப் பார்க்கையிலே... என் சிந்தனையும் சமையுதடி! எண்ணெய் ஊற்றாதே...! என் எண்ணமெல்லாம் வழுக்குதடி!! சாமி சிலை முன்னாடி சாந்தமாய்த்தான் தெரிகிறாய்! திரைச்சீலை பின்னாடி காந்தமாய் ஏன் இழுக்கிறாய்…

  25. பெருமழைக்கான பிரார்த்தனைகளுடன்... -எஸ். ஹமீத் *இன்னும் எரிகிறது நெருப்பு... போதாதைக்குப் பெருங் காற்று வேறு; தீக் கங்குகள் எட்டுத் திசைகளிலும் எழுந்து பறக்கின்றன *பற்ற வைத்தவன் தூரத்தில் பத்திரமாய் ஒரு மாளிகைக்குள்; பாழும் நெருப்புக்கது தெரிந்துதான் பற்றி எரிகிறது...! *தொடங்கியவன் அவன் தொடங்குவதற்கும் தொடர்வதற்கும் உதவியது காற்று! *எல்லாவற்றையும் எரித்துவிடும் பொல்லாத ஆவேசம் நெருப்புக்கு; காற்று நன்றாகவே போட்டுக் கொடுத்தது..! *பைத்தியக்கார நெருப்புக்குப் பச்சை மரங்கள் கூடப் பலியாகிக் கொண்டிருக்கின்றன நேற்றந்தப் பசுங் கிளைகளைத் தழுவிய அதே காற்றின் உபயத்தில்..! *காட்டிக் கொடுத்தலே தொழிலாயான பின்னர் காற்றுக்கு வளர்ந்த மரமென்ன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.