கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
செவ்வந்திப்பூ! பூத்திருக்கும் பூக்களெல்லாம் சந்தோசக் கவிதை சொல்லும்! பார்த்திருக்கும் பொழுதெல்லாம் புன்னகைகள் மின்னலிடும்! இறைவா உன் படைப்பினிலே இத்தனை இனிமைகளா? பூரித்து நிற்கின்றேன் பொன்மனதும் மலர்கிறது! விதியின் முடிவுகள்! மகிழ்ந்து மலர்ந்திருக்கும் வசந்தங்கள் வாழ்வில் இல்லை! என்றாலும்… மனமது மரத்து விடவில்லை! கூடிக் குலாவித் திரிந்து அணைபோட முடியாத அன்பையெல்லாம் அர்ச்சித்து போற்றுதற்கு ஜோடி என்று ஒன்றுமில்லை! என்றாலும்… கண்ணிலும் கருத்திலும் கனிவிற்கு குறைச்சலில்லை! கண்டதும் இருட்டு! காண்பதும் இருட்டு! காணப்போவதும் இருட்டாகலாம்! என்றாலும்… மென்மையான மெளனங்களில் துளியான நிம்மதியில் வாழ்க்கை கழிந்தே தீ…
-
- 9 replies
- 2.1k views
-
-
எண்ணுவது எல்லாமே எனக்கு தவறென்று புரிந்தும் என் எண்ணங்களை அப்பால் எறிந்து விட முடியவில்லை நினைப்பவை யாவுமே நினைவாகவே போய்விடுமோ - என் நினைவுகளுக்கு சமாதி கட்ட நிஜமாகவே முடியவில்லை மறக்க நினைப்பவை மறைக்க நினைப்பவை மனதை விட்டு என்றும் மறைய மறுக்கின்றன கல்லான என் மனம் கனியாமல் இருந்ததேடா கண்ணில் இருந்த காந்தம் கொண்டு அன்று கவர்ந்து விட்டயே என்னை இன்று
-
- 12 replies
- 2.1k views
-
-
படித்ததில் பிடித்த ஒரு கைக்கூ...! இடியொடு மின்னல் உன் நினைவுகளுடன் என் இதயம் பேசும் இரவு நேரக் கவிதைகளாகின.....! நன்றி மீண்டும் சந்திப்போம்...!
-
- 2 replies
- 2.1k views
-
-
கொக்கு பற பற............ ஊப்ஸ் ........... மக்கு நீ பற பற!! கூட்டில் - வாழும் ஜீவன் பெயர் கொண்டால். நீயும் குருவியா என்ன? பாம்புக்கும் ஒரு கூடு ....... புற்று என்ற பெயரிலிருக்குமே!! நாயுண்ணியாய்........... ஒட்டி கிட கிட.... வாழ நினைப்பவர் பக்கம் வராதே - வாலை............. ஆட்டிக்கொண்டே பிறர் பக்கம் திரி திரி! பெயரை பார் - பறவையாம்........... தங்காலையில் தமிழன் உறவை......... தங்கம் போல் நிறம் கொண்ட மலரை.. கட்டி தூக்கியபின்னும். கவலை எனக்கு இல்லையென்றே சொல்லி திரிகிறான்.. கருத்துதான் முக்கியம் .............. என்றே கிடக்கிறான்! சொந்த ஒளி இல்லாத - மதியே ............. என் வாழ்வென்று ................. இவன் ச…
-
- 12 replies
- 2.1k views
-
-
இன்னும் வ.ஐ.ச.ஜெயபாலன் இயற்க்கையின் மயானமாய் விரியும் சென்னை நடுகற் காட்டில் அணில்களின் ஒப்பாரியும் பெருகிக் கொழுத்த காக்கைகளின் பாடலும் நிறைகிற மாலைப் பொழுது. இன்னும் பூந் தென்றல் பெற்றோல் புகை அமுங்க கமழவது மகிழ்ச்சி.. இன்னும் வங்கக் கடலிருந்து ஒரு தாய் ஆமை சென்னையில் கரை எறுவது நம்பிக்கை... . . இன்னும் எஞ்சியிருந்த அணில்கள் காகத்திடம் தங்கள் கடைசிக் குஞ்சையும் இழக்கும் அச்சத்தில் ஓலமிட்டுக் கொண்டிருக்கிற நாட்களில் ஒரு கையாலாகாத கவிஞனாய் தவிக்கிறேன். காதல் இழப்புமட்டுமே சோகமல்ல என்பதை உணர்ந்தபடி.. மொட்டைக் கூரைகளில் சுவர் நசித்த மரங்களில் குப்பை மேடுகள் வளரும் தெருக்களில் கோடா கோடிக் கருஞ் சிலந்திகளாய் நூல் இறங்கி ஊர ஆ…
-
- 6 replies
- 2.1k views
-
-
கண்ணே என்றேன் கண்ணில் நீர் தந்தாய் பொன்னே என்றேன் பொன்னாய் வாங்க வைத்தாய் என்னே உன் அன்பு அன்பாலே துவைத் தெடுத்தாய் பெண்ணே ஓடிவிடு பித்தனாக மாற முதல். அடுத்த வீட்டை காட்டி நீ என்னையே மாற்றினாயே கொடுத்த தெல்லாம் போதாமல் விதம்விதமாய் சொன்னாயே தடுக்கும் போதெல்லாம் கதறி அழுது ஓடினாயே - எனை ஒடுக்கும் உன் செயல்களாலே நானும் இப்போ தெருநாயே! முட்டை பொரிச்சுத் தந்து முட்டைக் கண்ணீர் விட்டாயே கெட்ட கேட்டுக்குள் கார் ஒன்றும் கேட்டாயே கட்டையிலே போனாலும் போகாத கடனாளி ஆக்கினாயே குட்டையிலே நாறிய மட்டையாகிப் போனேனே! தொலைக்காட்சி சீரியலில் என்னையும் மறந்தாயே மலைப்போடு காட்சிகளில் மனமுருகி நின்றாயே தொலைக்காட்சி படங்களுக்காய் மனமிரங்கி அழும்…
-
- 14 replies
- 2.1k views
-
-
தியாகம்.. கார்த்திகை பூ எடுத்து வாடா.! கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...! இனம் வாழ இவர் செய்தார் தியாகம்.! இவர் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்.! உறவுகளுக்காய் உயிர் கொடுத்த உத்தமரே..! உங்கள் 'உயிர்விலைக்கு' எது இங்கே ஈடாகும்? உமைக்கருவில் சுமந்த தாய் வயிற்றில் நெருப்பெரியும்..! அந்த நெருப்பினில் விடுதலைத்தீ மூண்டெரியும். ஆறடிக்குள் துயிலும் அற்புதங்களே-எங்கள் ஆணிவேரான ஆலமரங்களே..! வாழ்ந்தாலும் ம(வ)ரமாக... வீழ்ந்தாலும் விதையாக மாவீரன் மறைவதில்லை மாவீரம் அழிவதில்லை ஆண்டுக்கொருமுறையா உமை நினைக்கிறோம் இல்லை தீயெரியும் தேசத்தில் தினம் தினம் உம் நினைவும் சேர்ந்தெரியும். கல்லறைக்கு வருக…
-
- 0 replies
- 2.1k views
-
-
கோழியின் கால்களை பிடித்து தலையை சுவற்றில் ஓங்கி அடித்து பின் சுருக்கில் தொங்கவிட்டு உரித்து குழம்புவைப்பார்கள் அப்படித்தான் அவ்வப்போது ஆட்களையும் அடித்து தொங்கவிடுகின்றார்கள் ஆனால் ஏன் என்று தெரியவில்லை திருவிழாக்களில் பறவைக் காவடிகள் குறைந்துவிட்டதால் கடவுளின் கோபம் என்றும் பேசிக்கொள்கின்றார்கள் கடவுளை குளிப்பாட்டி பவுடர் போட்டு மசாஜ் செய்துவிட்டாலும் கோபம் குறைவதாக தெரியவில்லை கடவுளின் பொண்டாட்டிமார்களுக்கு மேக்கப்செய்து திருக்கலியாணம் நடத்தி முதலிரவுக்கு அனுப்பி வைத்தாலும் கோபம் குறைவதாக தெரியவில்லை கடவுளுக்கும் சரி காவடி தூக்கும் பக்தனுக்கும் சரி கோபம் ஒரு மார்க்கமாகத்தான் எப்போதும் வருகின்றது கண்ணகியம்மன் கோயில்க் கோடி…
-
- 13 replies
- 2.1k views
-
-
''சுவிஸ் மாப்பிள்ளை....'' கட்டை பாவாடையுடன் ரெட்டை பின்னலும் ஒட்டுப் பொட்டும்வைத்து ஒய்யாரமாய் சைக்கிளில் உல்லாசமாய் திரிந்தேன்! சனியன் போல வந்தான் ஒருவன் அவன்தன் கல்யாணதரகன் சுவிஸ் மாப்ப்pள்ளையாம் சுவீற்றான பெண் என்றால் பொன் ஒன்றும் வேண்டாமாம்! வாயை பிளந்து கொண்டு வீட்டிலும் சம்மதம் சொல்ல நடந்தது கலியாணம் தெருவெல்லாம் ஊhர் கோலம்! ஆசை கனவுகளில் சுவிசில் கால் பதித்தேன் வெளிநாட்டு மாப்பிள்ளை குடித்து விடடு; நடுறோட்டில்கிடக்கின்றான்! சுற்றியது தலை மட்டுமல்ல வருடமும் தான் கையிலும் காசின்றி மனதிலும் திடமின்றி செல்லவும் வழியின்றி கண்ணீரில் தவிக்கின்றேன்! கண்ணீரில் கரைந்தது கண்மை மட்டுமல்ல என் இளமையும் தான…
-
- 12 replies
- 2.1k views
-
-
வெல்ல வையுங்கள் வெட்டி வீழ்த்துகிறோம் வீர வசனம் பேசி இரத்தத் திலமிட்டு வீடுகள் தோறும் தன்னாட்சிக்கு உரிமை கேட்டு உரிமையோடு வர.. மக்களோ அள்ளிக் கொடுத்து நம்பிக் கெட்ட காலம் ஒன்று.. 70 களில் வந்து போனது..! மீள அது மீளாதிருக்க தம்பி வழியில் போர்த் தரையில் இட்ட விதை.. மக்கள் இரத்தம் சொரிந்து மாவீரர் தியாகத்தால் உரமிட்டு வளர்த்து விட்டது தமிழ் தேசிய விருட்சமாகி இன்று.. ஊர் கூடி தேர் இழுக்கும் தேரடியாகி நிற்குது. மீண்டும் “மக்கள் புரட்சி வெடிக்கட்டும்” அண்ணல் திலீபனின் நோன்பிரு நாளில் ஓர் வெற்றிச் செய்தி “கோட்டை வீழ்ந்ததாம்” என்றது போல் ஆனது செவிகள் இனிக்க கடந்து போன துயரங்கள் நினைவில் ஆட..! பிபிசி.. ராய்டர் எல்லாம் உற்று நோக்க நடந்து முடிந்திருக்கு தேரோட்டம். “தன்னாட்சிய…
-
- 14 replies
- 2.1k views
-
-
புலம் பெயர்ந்து பிரான்சில் வாழும் சிங்கள கவிஞரான மஞ்சுள வெடிவர்த்தன பாலச்சந்திரன் நினைவாக எழுதிய கவிதை.. பாலச்சந்திரன் சிறு நிலா சிறு நிலாவா? அதைச் சொல்லவும்கூடுமோ? பத்துத் திக்கும் சுடரொளி வீசிய சூரியனைக் கொன்றது சிங்கம் தாய்நிலத்தைச் சூழ்ந்த குருதியால் சுவரோவியங்கள் வரையப்படுகின்றன சினத்துடன் சிங்கம் சிறிய நிலாவையும் கொன்றபோது முகில்களின் திரையைக் கிழித்து உள்ளே ஒளிந்தது நிலா பயத்தில் ஒடுங்கின நட்சத்திரங்கள் இருளின் சஞ்சாரம் நிலா சூரியனாக மாறுகிற ஒரு நாள் வரும் அப்போது எங்களுக்கு ஒளிவதற்கும் இடம் கிடையாது. நன்றி : காலச்சுவடு நீ சாகவில்லையடா என் தம்பி... எம்மைப்போல் ஆயிரம் ஆயிரம் அண்ணண்களின் இதயங்களில்…
-
- 13 replies
- 2.1k views
-
-
அகதியானவர்கள்... சுதந்திரமடையா இந்தியாவின் தண்டகாரன்யக்காடுகளிலும் பாலஸ்த்தீனத்தின் இடிந்தகட்டிடங்களிலும் குர்தீஸின் குக்கிராமங்களிலும் ஈராக்கின் வீதிகளிலும் விடுதலைக்காக வீழ்ந்தவர்களின் ஆன்மாக்கள் வீடுகளை விட்டு புழுதித்தெருக்களை விட்டு சுதந்திரமாக ஊளையிடும் தெருநாய்களை விட்டு ஞாபகங்களை மட்டும் எடுத்துச்செல்லும்படி விரட்டப்பட்டவர்களின் முகாம்களில் தங்கியிருக்கின்றன ஈராக்கின் எண்ணெய் ஊற்றுக்கள் இல்லாதுபோகும்படியும் வன்னியின் வனங்கள் வாடிப்போகும்படியும் ஆப்கானின் மலைகள் பொடியாகும்படியும் காக்ஷ்மீரின் வீதிகள் பிளந்துபோகும்படியும் ஆகியிருக்கிறது அகதியாக்கப்பட்டவர்களின் துயர்ச்சுமையால் விரட்டப்பட்டவர்களின் …
-
- 6 replies
- 2.1k views
-
-
என்னை மன்னித்து விடு குவேனி மேலுதட்டில் வியர்வைத் துளிகளரும்பிய கருத்து ஒல்லியான இளம்யுவதிகளைக் காண்கையில் இப்பொழுதும்… அதிர்ந்து போகிறதென் உள்மனது தவறொன்று நிகழ்ந்தது உண்மைதான் நினைவிருக்கிறதா அந் நாட்களில் தாங்கிக்கொள்ள முடியாத குளிர் விசாலமாக உதித்த நிலா பொன் நிற மேனியழகுடன் எனதே சாதியைச் சேர்ந்த எனது அரசி எமதிரட்டைப் படுக்கையில் ஆழ்ந்த உறக்கத்தில் தனியாக குழந்தையொன்றை அணைத்தபடி அரண்மனை மாடியில் நின்று கீழுள்ள காட்சிகளைப் பார்க்கின்ற கனவொன்றில் அவள் திளைத்திருக்கக்கூடும் இருந்திருந்து இப்பொழுதும் உதிக்கிறது அம் மோசமான நிலா மண்டபத்திலிருந்து மயானத்தின் பாழ்தனிமையை அறைக்குக் காவி வருகிறது - இஸுரு சாமர சோமவீர தமிழில் – எம்.ரிஷான் ஷெர…
-
- 3 replies
- 2.1k views
-
-
காலக் கலண்டரில் ஒருநாள் கிழிக்கப்பட ஓராண்டு ஓடிப் போனது! வெளிநாட்டிலிருந்து வரும் அப்பாவை எதிர்பார்க்கும் குழந்தை போல நானும் புதுவருட எதிர்பார்புடன்... வழக்கப் போல "இந்த வருஷத்திலாவது செய்யவேண்டியவை" என ஒரு பட்டியல் ரெடி... கண்மடலில் காதல் எழுதி வருவாள் ஒரு வஞ்சி... நேர்த்திக்கடன் செய்தவைபோல மொட்டத்தலையோடு முணுமுணுக்கும் என்னூர் மரங்கள் துளிர்க்கும்... இரத்தத்தில் உடல் நனைந்து... வெட்க்கத்தில் முகம் மறைத்து... ஏக்கத்தில் வாடும் வெண்புறா... சிறகு கழுவி உலர்த்தும்... புண்பட்ட ஈழ மண்ணின் காயங்கள் ஆறும்! "Gun" இல் பூக்காது சமாதானம் "கண்"கள்…
-
- 12 replies
- 2.1k views
-
-
காதல் என்றால் என்ன என்று காகிதத்தில் எழுதிவைத்து- நீயும் காத்திருந்தால் காதல் வந்திடுமோ? காலம்தான் பதில் சொல்லிடுமோ? காதல் கன்னி அவளைக் கண்டு காதல் நீயும் கொண்டுவிட்டால் காத்திராமல் சொல்லிவிடு-அன்பே காதல் என்னும் கனி இரசத்தை காதல் கொண்டு நீயும்-உன் காதல் சொல்லாவிட்டால்-நண்பா காலம்முழுவதும் அவள் நினைவாகி காற்றோடு பறந்திடும் உன் அன்பு :wink:
-
- 13 replies
- 2.1k views
-
-
தமிழீழம் எங்கள் தேசம் தமிழீழம் எங்கள் தேசம் தமிழரென்று சொல்லி நாங்கள் தலை நிமிர்ந்த தேசம் தங்கத் தமிழன் தம்பி தன்னை தந்து நின்ற தேசம் தலைவன் வழியில் தமிழர் சென்று தலை நிமிர்ந்த தேசம் வித்தாகிய வேங்கைகளின் விளைநிலம் இத்தேசம் வரிப்புலியின் வீரமதில் பெருமை கொண்ட தேசம் (தமிழீழம் எங்கள் தேசம்) அன்னவயல் தானியங்கள் அருங்கனிமம் கொண்டு அலைகடலின் தாலாட்டில் அமைதிகொண்ட தேசம் இந்துமகா கடல்நடுவே இயற்கையன்னை பெற்ற இனியதிரு கோணமலை துறைமுகத்தின் தேசம் (தமிழீழம் எங்கள் தேசம்) எவ்வினமும் நம்மினமே எங்கள் மண்ணிலே! எம்மதமும் சம்மதமே எங்கள் நெஞ்சிலே! எங்கும்தமிழ் ஈழம் பெறும் வெற்றியென்பதே! என்றும் பெறும் தமிழீழம் வெற்றிவெற்றியே! (தமிழீழம் …
-
- 7 replies
- 2.1k views
-
-
மாடப்புறாவும் தெருப்புறாவும் காதல் கொண்டதாம் அதைக் கண்ட கொப்பர் கொட்டன் எடுத்தாரும் தெருப்புறாவும் கொடுக்கை கட்டிச்சுதாம் மாடப்புறாவும் மதிகெட்டிச்சுதாம் இருபுறாவும் இன்பமாய்ப் பறந்திதாம் காதல் வாழ்வுதொடங்க வில்லனும் வந்தானாம் வில்லங்கமாய் ஆமி வடிவிலே மாடப்பறாவும் சிதைந்தே போனதாம் தெருப்புறாவும் தன்ரை புத்தியைக் காட்டிச்சுதாம் வீ...........ர்...........ரென்று பறந்ததாம் வேறொரு புறா தேடி..............
-
- 7 replies
- 2.1k views
-
-
விமான தாக்குதலில் உயிர் நீத்த குழந்தை செல்வங்களுக்கு கொடிய காடையர்களே உங்களுக்கு என்ன வேண்டும் அப்பாவி சிறுவர்கள் உங்களுக்கு என்ன பாவம் செய்தார்கள் பாவிகளே பாவிகளே கொஞ்சம் நில்லுங்கள் பாலர்கள் மனதை தான் கொஞ்சம் பாருங்கள் இன்று இறப்போம் என்றா சீருடையில் சென்றனர் உங்களுக்கும் குழந்தைகள் இருக்கின்றன அல்லாவா இதே நிலை உங்களுக்கு வராதென்ற திமிரா..... பொறுத்திருங்கள் மிருகங்களே உங்களுக்கும் அழிவுகள் நடக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை பாவம் பாலகர்கள் ஆயிரம் கனவோடு பள்ளி செல்ல பாவி நீ இந்த வேலை செய்தாய் உன்னையும் தாய் தானெ பெற்றெடுத்தாள் ஒரு தாய் வயிற்றில் பிறக்கவில்லை என்று நினைப்பா நாயே உனக்கு சிங்களவன…
-
- 9 replies
- 2.1k views
-
-
-
- 13 replies
- 2.1k views
-
-
காதலியே... காதலியே... கண்களுக்கு இன்று வரை தென்படாத காதலியே.. என்று வருவாய் என் வாழ்கையில் வசந்தம் வீச.. அதிகம் பேசியவன் அல்ல நான் பெண்களிட்ம். அது குறித்து கவலையும் இல்லை என்னிடம்.. அனால் என்னை நம்பி வந்த என்னுடைய உயிர் என்று காக்கும் திற்மை உள்ளது என்னிடம்... குடும்பம என்ற கூடாரத்துக்குள் வர.. உனக்க்காக என்ன செய்யவேண்டும் உனக்க்காக என்ன செய்ய கூடாது.. அன்பே நீ வெங்காயத்தையும் நறுக்கவேண்டாம்.. வெள்ளை பூண்டையும் உரிக்கவேண்டாம் அனைத்தையும் நான் பார்த்து கொள்வன். கடவுளை நம்புபவனில்லை நான்.. இயற்கையை நம்புபவன்.. எகிறிய பந்து மீண்டும் வரும் என்ற புவியீர்ப்பு விசை உண்மையெனில்... இந்த உலகத்தில் நியமிக்கபட்ட பிறப்ப…
-
- 12 replies
- 2.1k views
-
-
உலா - வ.ஐ.ச.ஜெயபாலன் நீலப் பாவாடையில் குங்குமமாய் எழுஞாயிறு கசிய பூத்தது விடலை வானம். வாழ்த்துடன் நிறைந்தன வலசைப் பறவைகள். எனினும் அன்பே உலாவுக்கான உன் செல்பேசி அழைப்புத்தான் இந்த வசந்த நாளை அழகாக்கியது, வண்ணத்துப் பூச்சிகளாய் காற்றும்பூத்துக் குலுங்கும் வழி நெடுக. காவியம் ஒன்றின் இறை வணக்கம்போல கைகளும் படாத வெகு நாகரீகத்தோடுதான் உலாவை ஆரம்பித்தோம். காடு வருக என கதவுகளாய்த் திறந்தது. சிருஸ்டி வேட்கையில் உருவிப்போட்ட கூறைச்சேலையாய் வண்டாடும் மரங்களின்கீழ் உதிரிப்பூ கம்பளங்கள். என் அன்பே முகமறைப்பில் இருளில் இணையத்தில் கண்காணா தொலைவில்தான் இன்னும் தமிழ்பெண் சிறகசைக்க ம…
-
- 18 replies
- 2.1k views
-
-
தாய் பிடிக்கும் என்மேல் பாசத்தை பொழிவதால் அண்ணன் பிடிக்கும் எனக்கு குடும்பதை வழி நடத்துவதால் அக்கா பிடிக்கும் எனக்கு தாய்க்கு ஆறுதலாய் இருப்பதால் தம்பி பிடிக்கும் எனக்கு சிறுவனாய் இருந்தும் என் தங்கையை படிப்பிப்பதால் தங்கை பிடிக்கும் எனக்கு என உயிர் தோழியாய் இருப்பதால் நட்பு பிடிகும் எனக்கு வழி நடத்தி செல்வதால் காதல் பிடிக்கும் எனக்கு காயங்களை கற்பித்ததால் மௌனம் பிடிக்கும் எனக்கு அது உன்னிடம் நிறையவே இருக்கின்றதனால்... காத்திருப்பு பிடிக்கும் எனக்கு உனக்காகவே காலம் பூராகவும் காத்திருக்க போவதால்.
-
- 8 replies
- 2.1k views
-
-
என்றென்றும் நன்றியுடன்..... முப்பாலுக்கு அப்பாலும் முதற்பாலாய் தாய்ப்பாலுடன் தமிழ்ப்பாலும் ஊட்டி நோய் ஏதும் அணுகாது நோன்பிருந்து சேயாய் எமை எல்லாம் செம்மையாய் வளர்த்தெடுத்த தாயே உனை வாழ்த்த தமிழில் வார்த்தையில்லை நீ தண்ணீர் ஊற்றி வளர்த்திருந்தால் நாம் தறுதலையாய் வளர்ந்திருப்போம் நீயோ கண்ணீர் ஊற்றி எம்மைக் கண்ணியமாய் வளர்த்ததனால் உன் கண்ணின் நீரெல்லாம் ஆனந்தக் கண்ணீராய் மாறியது கண்ணீரோடு விதை விதைப்போர் கம்பீரத்தோடு அறுத்திடுவார் என்று சொன்ன வேதமொழி என்றும் பொய்ப்பதில்லை எத்தனை இரவுகள் நீ உறக்கத்தைத் தொலைத்து விட்டு எம் இரவுகளைப் பகலாக்க உன் இரவுகளை இழந்திருந்தாய் எத்தனை தடவைகள் நீ உன் கனவுகளைத் தொலைத்து விட்டு எம் எதிர் க…
-
- 9 replies
- 2.1k views
-
-
என்றேனும் நினைத்ததுண்டா? புலம்பெயர்ந்து வந்திங்கே புதுவாழ்வு பெற்றாலும் பிறந்தஎம் மண்நினைவாய் என்றென்றும் வாழ்கின்றோம். எல்லோர் முன்னாலும் எடுப்பாகப் பேசும்பலர் எமமண்ணின் குறைகளைய எதனையுமே செய்ததில்லை பசியெடுக்க வில்லையெந்தன் பிள்ளைக்கு எனச்சொல்லி பரிகாரம் செய்வதற்காய்ப் பகலிரவாய் அலைபவர்கள் பசியெடுத்த போதெல்லாம் பச்சைத் தண்ணீரால் பசிமாற்றும் எம்மீழக் குழந்தைகளை நினைப்பதில்லை கிழங்குப் பொரியலுடன் குளிர்பானம் கொடுத்துத்தம் குழந்தை இடையுணவுத் தேவையினைப் போக்கும்பலர் கிழங்கை அவித்துத்தம் முழுநேர உணவாக்கும் கண்மணிகள் பசியகற்ற உருப்படியாய்ச் செய்ததில்லை பிறந்த நாளென்றும் பிறவென்றும் கொண்டாடிப் புகைப்படப் பெட்டிமுன்னால் புன்னகைத்து நிற…
-
- 15 replies
- 2.1k views
-
-
அம்மா வெளிநாட்டில் உன்பிள்ளை என்று உனக்கு மகிழ்ச்சி. என் வாழ்க்கை எது என்று நீ அறிந்து கொண்டால் அம்மா நீயும் அழுவாய். வானை முட்டும் கட்டடங்கள், வடிவான வீதிகள் உழைத்து கழைப்பில்திரியும் எமக்காகவோ என்னவோ வீதியெல்லாம் இளைப்பாற ஆசனங்கள், வண்ணமான பூங்காக்கள் எல்லாம் கண்ணைக்கவரும்-ஆனால் அம்மா-என் நெஞ்சமோ உங்களைத்தேடும் நித்திரைக்கு போவேன். தலையருகே உன் படம்-என் தலை நீ கோதுவதாய் கற்பனை செய்வேன், கண்ணீர் சொட்டும்-என் தலையணை நனைந்தே போகும் வாய் விட்டு அழத்தோன்றும் அடக்கிவிடுவேன், தலையணையை கடித்துக்கொண்டு லேசாக கண்கள் மூட அலாரம் எழுப்பிவிடும் வேலைக்கு போ என்று அவசரமாய் எழுந்து ஓடுவேன் காலையில் காப்பியும் …
-
- 11 replies
- 2.1k views
-