கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
போய்விடு! அடேய் கருணா துரோகியே! தமிழீழத்தை விட்டு விரைவில் ஓடிவிடு! கருணையின் பொருள் தெரியாத உனக்கு யாரடா கருணா என்று பெயர் வைத்தது? சொறி நாயயென நானுனை நாமமிடுவேன்! மனிதனுக்கே மனிதாபிமானம்! மனுதர்மம்! உனைப் போன்ற மிருகங்களிற்கு சட்டத்தில் கிடைப்பது சாட்டையடிகளே! பாரினில் நீயொரு படு பாதகனென்று ஹியூமன்ரைட்ஸ் வோட்சும் சொல்லுது! இனியும் உனக்கேனிந்த கேணல்பட்டம்? "கோணல் சொறிநாய்" நீயென்றறிந்திடு! நேற்றுவரை வாய்மூடிப்பால் குடித்தநீயுன் அன்னைக்கே எதிராகவா மார்தட்டுகிறாய்? இரத்தவாந்தி நீ எடுக்குமுன்னர் இலங்கையைவிட்டு வேறிடம் ஓடிடு! பற்றைக்குள் கக்கூசு இருந்த உன்னை பிளேனில் ஏற்றி பேச்சுக்கு அனுப்பிட ஒற்றர் கூட்டத்து பிச…
-
- 10 replies
- 2k views
-
-
இலைகளை உதிர்த்து நிர்வாணாமாய் நின்று கொண்டிருக்கும் மரங்கள் துளிர்க்க ஆரம்பித்து விட்டன ஒன்றும் செய்யாமல் அமைதியாக காத்திருந்த புல் தானாக முளைக்க தொடங்கிவிட்டது நான்காயிரம் மைல்கள் கடந்து வந்த மெக்சிகோ ஆண் ஹம்மிங் பறவையொன்று இணைதேடி ரீங்கார ஒலியெழுப்பிக் கொண்டிருக்கிறது பனிக்காலம் முழுதும் தூங்கிக் கழித்த பாண்டா குட்டியொன்று தன் முதல் மூங்கில் குருத்தை ருசிக்க தாயாராகி விட்டது இரையை பிடிக்க முடியாதவாறு ஊர்ந்து செல்லும் ஒசையை வெளிப்படுத்தும் பைன்மர சருகுகளை பாம்புகள் வெறுத்துக் கொண்டிருக்கின்றன 'களவு' எனும் உயிர்ப்பித்தலுக்கான முதல் பாடத்தை ஒநாய் தன் குட்டிகளுக்கு கற்பித்துவிட்டிருந்தது கலவி முடிந்தும் மூர்க்கம் குறையாத காடா மான் க…
-
- 10 replies
- 1.7k views
-
-
ஜப்பானியத் தயாரிப்பு என்றாலே அந்தப் பொருளுக்கு ஏகக் கிராக்கி தான்.. ஹைக்கூ கவிதைக்கு மட்டும் இருக்காதா என்ன ஹைக்கூ என்ற மூன்று வரிக் குறுங்கவிதை கருக்கொண்டது ஜப்பானிய மண்ணில் தான். 1. ஹைக்கூவின் தோற்றம் சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட மொழிகள் இரண்டு அதில் ஒன்று நமது தமிழ், மற்றொன்று ப்ரெஞ்ச். தமிழ் இலக்கிய வரலாற்றை சங்கத்தின் அடிப்படையில் முதல் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் எனப் பிரிக்கிறார்கள். ஜப்பானிய இலக்கிய வரலாற்றை அதன் தலை நகர் மாற்றத்தின் அடிப்படையில் ஆறு பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். பிரிவு 1 : நாராக் காலம் (கி.பி 700 முதல் 794 வரை) இக்காலத்தில் சோக்கா என்ற கவிதை வடிவம் வழக்கத்தில் இருந்தது. அடுத்தடுத்த அடிகள் 5,7 என்ற அச…
-
- 10 replies
- 8.4k views
-
-
தொலைபேசி என்னைத் தொட்ட சோகங்கள் யாரையும் தொட்டதில்லை இதுவரையில் கண்ணீரில் கரைகின்ற பல கதைகள் கேட்டுக் கேட்டு என்னை நானே நொந்துகொண்டேன் ஏக்கங்கள் கொண்டதால் தேடிடும் உறவுகள் பாசத்தைத்தேடித்தேடி அடைக்கலமான குழந்தைகள் பிரிவின் துயரால் துடியாய்துடிக்கும் காதல்நெஞ்சங்கள் இவர்கள் வலிதனை என்னவேன்று சொல்ல இங்கே இயந்திர வாழ்கைதனில் தொலைத்துவிட்ட மகிழ்ச்சிக்காய் கணவனும் மனைவியும் எனையே அணைத்துக் கொள்ளும் சோகங்களை நான் எப்படி சொல்வேன் இத்தனை சோகங்கள் என்னேடு தானிருக்க என்னையும் வம்பிலுக்கும் வாலிப நெஞ்சங்கலே உங்களை என்ன சொல்லி நான்திட்ட எப்போது திருந்துவீர்கள் பிரான்ஸ் நாட்டில்…
-
- 10 replies
- 5k views
-
-
கவிதை :P நீ கடல் நான் கரை நீ வானம் நான் முகில் நீ வீதி நான் கார் நீ பெற்றோல் நான் எஞ்சின் நீ சந்திரிக்கா நான் லக்ஸ்மன் கதிர்காமர் நீ அசின் நான் விஜய் நீ அமேரிக்கா நான் இஸ்ரேல் நீ ஜ நா சபை நான் கோவி அன்னன் நீ பின்லேடன் நான் அவர் தாடி நீ கீட்லர் நான் நாஸி நீ யாழ்ப்பாணம் நான் கொழும்பு நீ திருநல்வேலி நான் அல்வ நீ கரவெட்டி நான் டங்ளஸ் தேவனந்தா நீ ஆனந்தசங்கரி நான் குழந்தபிள்ளைகள் நீ முதலாளி நான் கடன்காரன் நீ யாழ்கவிதை பகுதி வடகைக்கு எடுத்தவள் நான் யாழ்கவிதை பகுதியைசொந்தமாக வாங்கியவன்
-
- 10 replies
- 1.9k views
-
-
கனவில் வரும் தேவதை ... எனக்கு அந்த தேவதை தேவைப்படாதவள் அவளுக்கும் அப்படித் தான் இருக்கும் வரம் கொடுப்பதற்காய் அவள் வரமாட்டாள் என்பதும் தெரிந்ததே அப்படி இருந்தும் எப்படி அனுமதித்தேன்.. இளங்குவளை இதழ்களில் சொரிந்திருக்கும் பனிரசமருந்தியே - கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை போல உறைதலும் உய்குவதுமாய் கார அமிலக் கலப்பின் களைப்பு முடிந்து கண்ணயர்ந்தாலும் கனவில் வந்து விடுகிறாள்.. அனுமதியின்றி வந்து தட்சணை தராமலே சென்றுவிடுகிறாள் தேவதை கனவு முறிந்து எழுந்ததும் கல்லெறிகள் கலாச்சாரக் காவலர்களால் ... ........................ ஜீவா 25.08.2013 22.35pm (எத்தனை நாளுக்குத் தான் சீரியஸாவே எழுதிறது? ஒரு சேஞ்சுக்கு தான்) :lol: திருத்தம…
-
- 10 replies
- 1.3k views
-
-
முயற்சி இல்லாமல் இருப்பதும் .... வைத்திய சாலையில் கோமாவில் .... இருப்பதும் ஒன்றுதான் ..!!! *********************** முதுகில் வெறும் கையால் குத்துவதை விட .... கண்முன் கத்தியோடு நின்று ..... மிரட்டுபவன் எவ்வளவோ மேல் ...!!!
-
- 10 replies
- 760 views
-
-
என்னை அழித்து விடுவாயா? முதல் வார்த்தையில் என் இதயத்தை துடி துடிக்க வைத்தாய்!!! ஒவ்வரு நாளும் உன் பேச்சால் என்னை சாகடித்தாய்!!!! தென்றல் காற்றாக என் மனதுக்குள் நுழைந்து விட்டாய்!!!!! உன் சுவாசமே என் மூச்சுக் காற்றில் கலந்துள்ளது!!! உன்னில் ஒன்றாக நான் கலந்துவிட்டேன்!!! நீ தொலைது}ரம் இருந்தாலும் என் பக்கத்தில் இருப்பதாகவே உணர்கின்றேன்...!!! உன்னுடன் பேசிய ஒரு நொடி போதும் எனக்கு.. கேட்கும் ஓசையெல்லாம் உன் குரலாகவே கேட்கின்றது!!! பிரியமானவளே.........!!!! என்னை ஏற்றுக் கொள்வாயா? இல்லை என்னை அழித்து விடுவாயா? >>>>>>என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்…
-
- 10 replies
- 2.4k views
-
-
சிங்களர் அறியாப் பூ சகிப்பு சோனியா பறித்த பூ வெறுப்பு மகிந்த கொண்ட பூ கொழுப்பு பொன்சேகா வளர்த்த பூ கடுப்பு இராணுவம் செய்த பூ இனஅழிப்பு அரசாங்கம் காத்த பூ மூடிமறைப்பு ஈழத்தில் மலர்ந்த பூ தவிப்பு வீணாய் போன பூ எம் உழைப்பு மருத்துவர் பெற்ற பூ தடுப்பு பத்திரிகை கண்ட பூ மறுப்பு ஐநா மறந்த பூ பொறுப்பு அமெரிக்கா வாங்கிய பூ செருப்பு வெளிநாடு பார்த்த பூ விடுப்பு கலைஞர் தந்த பூ சலிப்பு எம்வாழ்வில் பூத்த பூ கசப்பு எம்வயிற்றில் எரியும் பூ நெருப்பு http://gkanthan.wordpress.com/index/pookkal/
-
- 10 replies
- 1.3k views
-
-
[size=5]விழியோரங்களில் மலரும் துளிப்பூக்களின் வாசங்களை நுகர்ந்துமகிழ்ந்த யந்தொன்றின், தேடிக்களைத்த கேவலச்சிறகுகளை, மொய்த்துரீங்காரமிட்ட நோக்கல்களை, கணநேர ஈனப்பிதற்றல்களை, பொய்நாக்குகளின் வீணிகளை, விலக்கி சீராக்கமுடிகிறது படுக்கையொன்றை இலகுவாக அவளால். இது திணிக்கப்பட்டதா என்றாலும் தவிர்க்கமுடியாதா என்றாலும் தெரியாதென்பதே பதிலாகுகிறது. வகையறியும் பார்வைகளை தகையுரியும் நாவுரைகளை முகைகருக்கும் வசவுகளை பகைபெருக்குமோர் பல்லவிகளை நகைத்தேவிலக்கி யுள்யெரிதலவள் வழக்காயிற்று. தினவெடுத்த மிருகங்களின் நாவுகளில் படிந்திருக்கும் அழுக்குவேர்களின் அடிநுனியறிந்தவள், தினப்பொழுதுகளின் பின்னான ஒதுங்குதலில் இழிந்த கௌரவவிம்பம் உடைத்தவள்…
-
- 10 replies
- 1.4k views
-
-
நாவீரமாய், விலக்கவோ இழக்கவோ முடியவில்லை நினைவுகளை ............. கள்,கள்ளகசிப்பு ௬ட தந்ததில்லை வெடித்தெழும் போதை _உன் விழி மடிக்கையில் விழுதுப்பாலாய் ஒட்டிவிட்டது வெண்சிரிப்பு _இனி அழுது முடியுமோவென் பிழைப்பு . பாடை மேளம் எல்லாம் தயாராக, ஊர்வலம் பிந்துகிறது . அட நான் இன்னும் சாகவில்லையே ............! வத்தாக்கிணற்றடியில் முத்தாதகொவ்வை பளபளப்பு , பாவற்காய் மினுமினுப்பு , என்னவோ செய்யுது , சரம் தூக்கி நடப்பது , றோட்டில் நாயை துரத்தி ஓடி மகிழ்வது _என் மட்டுமிருந்த எனை தாடி சொறிந்து வானம் பார்க்க வைத்த கொடுமை ....... காத்தடிக்க நீவர சைக்கிள் கடையிலிருந்த எனக்கல்லவா வேர்த்தது ? எப்பவோ …
-
- 10 replies
- 1.6k views
-
-
புற்றில் நுழையும் பாம்புபோல மென்மையாக இறங்குகிறாய் இரைதேடியோ அன்றில் உறைவிடம் நாடியோ ? இழக்காத அந்தரங்கவேர்கள் மீதும் சொல்லெறிகிறாய் இடம்மாற்றவோ அன்றில் பிரட்டிப்போடவோ ? மௌனங்களை வென்றுபோக சலனமில்லாத விழிச்சுழற்சியை அனுப்புகிறாய்... என்னை கொள்ளவா கொல்லவா? எதுவென்றாலும் செய்துவிட்டுப்போ.. அதற்குமுன் வா .. இந்த குளிரைப்போக்க ஒரு தேநீர் அருந்தலாம்.. பின்பொரு முத்தத்தை பகிரலாம்.
-
- 10 replies
- 1.1k views
-
-
தன்னை ஈய்ந்த (கொடுத்த )தாய்மை தன் முதற் பேறாய் என்னைக் கருவுற்ற வேளை உமிழ் நீரால் வாய் நிறைந்திருந்த காலை மாமியார் வீட்டு மாங்காய் ருசித்தது பால் பழமும் கசந்தது ,புளியங்காய் சுவைத்தது காலப்போக்கில் உதரம் சற்றே பருத்து அயலவர்க்கு அடையாளம் காட்டியது முன் வீட்டு மாமியின் புளிக்கஞ்சி தேனானது மாசம் ஆக புரண்டு படுக்க இடைஞ்சலானது முருங்கைக் கீரை சத்துணவானது எட்டி நடக்கையிலே இளைப்பு தோன்றியது இளம் வெந்நீர்க் குளியலில் உடல் சிலிர்க்கையில் குழந்தை நான் உள்ளிருந்து உதைத்த போது என் தந்தை என்னே தாய்மை என்றார் எண்ணி ஒன்பதாம் மாதம் முடிவில் நாட்கள் எண்ணும் வேளை தன்னில் இடுப்பு வலியும் சேர்ந்து அடி வயிறு வலியெடுக்க அரசினர் வைத்திய சால…
-
- 10 replies
- 2.5k views
-
-
யார் வீட்டுப் பிள்ளைகளோ தம்முடலில் வெடிகொழுத்த... பட்டாசு கொழுத்தி மிட்டாசு கொடுத்து வெற்றிவிழாக் கொண்டாடிய தமிழ்ப் பெருமக்களே! எவர் வீட்டுப் பிள்ளைகளோ காற்றோடு கரைய, உங்கள் வீட்டு வாரிசுகளை அக்கரைச் சீமைக்கு... அக்கறையாய் அனுப்பிவைத்த அருமைத் தமிழ் மக்களே! 'எரியும் வீட்டில் பிடுங்கியது இலாபம்' என... தன்மானமில்லாமல் இனமானம் விற்று, சாக்கடைக் குழிக்குள் சந்தணக் குளியல் போடும்... தமிழ் அரசியல் பெருந்தகைகளே! ஊர்பேர் தெரியாமல் உறவுகளும் அறியாமல் சிதறிப்போன தலைகளுக்கும் உங்களுக்கும், என்ன உறவென்று சிந்தித்தும் பார்க்காத... சிங்கார தேசங்களின் நிரந்தரக் குடிமக்களே! நீங்கள் உண்ணும் சோற்றில்... அவர்களின் தசைத்துண்டங்களும் சேர்ந்திருக்கும் ! நீங்க…
-
- 10 replies
- 1.1k views
-
-
எனக்காக நீதான் உனக்காக நான் தான் இது தானே நீ சொன்ன முதல் வாக்கியம் இப்போது எங்கே உன் சொல் ஓவியம் கவி எழுத மறந்தேன் - உன் கதை தனை யாசித்தேன் -இப்போ காணாமல் நானும் பூஜித்தேன் ஆனாலும் உனக்காக காத்திருப்பேன்
-
- 10 replies
- 2.4k views
-
-
இணைய பரந்தவெளியில் .. பல்லாயிரம் முகவரியில் .. பாமரன் முதல் பண்பாளன் வரை .. தேடி அலையும் தேடலில் ... கூகுளில் மூழ்கி யாழில் மிதந்தேன் .. என்ன ஆச்சரியம் அதிசய தீவா.. அல்லது மூழ்கிய குமரிகண்டமா.. எங்கும் தமிழ் ..எதிலும் தமிழ் .. நெஞ்சம் நிறைந்த தமிழ் என்னை ... நிலை குலைய வைத்த தமிழ் .. நானே என்னை தேடிய தமிழ் .. என்னை நானே வளர்க்க உதவிய தமிழ் .. எல்லாம் ஒருங்கே கண்டேன் உலவி யாழில் .. வணக்கம் வைத்து அழைப்பதில் இருந்து .. அழகா விருந்தினரை சுற்றி காட்டி .. எங்கு நீங்கள் என்ன தமிழ் படிக்கலாம் .. என்று அறைகள் பிரித்து அடுக்கடுக்கா .. பல சுவை தமிழ் படைத்து நிறைந்திருக்கு .. யாழ் உலாவி ... தமிழ் தோன்றல் முதல் தேசியம் வரை .. தமிழை அழகா செதுக்கி வைக்க உளிகள் பல ..…
-
- 10 replies
- 1.1k views
-
-
தலைப்பின்றி ஒரு கவிதை அவள் பெயர் * வார்த்தைகள் வற்றிவிட்டது கலந்து பேச வரச் சொல்லுங்கள் என்னை ஏமாற்றியவளை ஆணையிட்டான் கவிஞன் * காதலியின் பெயரை வைக்க சம்மதித்தாள் என்னால் தாயான மனசை புரிந்த மனைவி * தாரம் தாயானதில் புரிந்து கொண்டேன் ஏன் தாரத்துக்கு முன் தாய் என்பதை * இருந்த இடத்தில் இருந்து உலகம் சுற்றுகிறாள் என் கவிதையில் அவள் * கவிஞனின் கல்யாணவீட்டில் கவலைப்பட்டாள் கவிஞனாக்கியவள் * கவனமாக இருக்கிறான் காதலிக்கு கவிதை எழுதுபவன் ஆயுத எழுத்தை பாவிக்கக் கூடாது என்பதில் * காதலிக்கே மிஞ்சவில்லை எப்படித் தானம் செய்வேன் என் கவிதைகளை அன்னைக்கு சொன்னான் கவிமகன் …
-
- 10 replies
- 1.6k views
-
-
தேடுகிறேன் என் செந்தமிழை தேசம் விட்டு தேசம் வந்து தேடுகிறேன் என் செந்தமிழை செல்லுகின்ற தெருவெல்லாம் கேட்பதெல்லாம் செந்தமிழா...? என்னுடன் படிப்பவர் கதைப்பதெல்லாம் செந்தமிழா...? தமிழ் வகுப்பு மாணவர்கள் கதைப்பதெல்லாம் செந்தமிழா...? குழந்தை இன்று தாய்தன்னை அழைப்பதுதான் செந்தமிழா...? நம்மவர் கடை என்று நாம் சென்றால் அவர் கதைப்பதெல்லாம் செந்தமிழா...? நம்மை விட மூத்தவர் கதைக்கிறார் செந்தமிழா...? அன்றவர் எம்மண்ணில் ஆங்கிலேயம் அடிமை வந்த எம் இரத்தம் இன்று என்ன சும்மாவா விட்டு வைக்கும் ...? உடம்பெல்லாம் ஓடுது எம்மவர்கள் உடம்பெல்லாம்!! அம்மாவும் கதைக்கி…
-
- 10 replies
- 2.2k views
-
-
பட்டும் படாமல் இருப்போரை எல்லாம் தட்டிக் கொடுத்து தன் பக்கம் ஈர்க்காமல் - தலைகனத்து கொட்டிடும் தேல் எனவே கொட்டி கொட்டி வெட்டி விடுவதுதான் விடுதலைக்கு பங்களிப்பா? பெயருக்கு தலைவராக இருப்போரெல்லாம் பெரிய தலைவர்களை எல்லாம் சரியாக பகைத்து கொண்டே இருந்தால் யார் பக்கம் சாய்வார் அவர்? பட்ட மரமென்று ஒன்று இருந்தால் விட்டு வெட்டினால், வேர் விட்டு வெட்டினால் சட்டெனெ பெய்யும் மழையில் சடுதியில் துளிர்த்துவிடும் ஒட்ட வெட்டினால் நட்டம் நமக்கல்லவா? உயிர் காக்கும் பிரச்சனைகள் இருக்கும் போது மயிர் காட்டி கட்டுரை வரைவதும் - பதிலுக்கு வயிற்று பிழைப்பிற்க்கெ வக்காலத்து வாங்குகிறார் என்பதும் உயிர் காக்குமா? நம் தமிழர் உயிர் காக்குமா? எலி கூட்டமல்ல க…
-
- 10 replies
- 2.9k views
-
-
நெய்தல் பாடல் - வ.ஐ.ச.ஜெயபாலன் வாழிய தோழி கடலின்மேல் அடிவானில் கரும்புள்ளியாய் எழுதப்படும் புயற் சின்னம்போல உன் முகத்தில் பொற்கோலமாய் தாய்மை எழுதப்பட்டு விட்டது. உனக்கு நான் இருக்கிறேனடி. இனியுமுன் ஆம்பல் கேணிக் கண்களை உப்புக் கடலாக்காதே. புராதன பட்டினங்களையே மூடிய மணல் மேடுதான் ஆனாலும் தேர்ந்த கள்ளியான ஆமையால்க்கூட இங்கு தன் முட்டைகள நெடுநாள் மறைக்க முடியாதடி. விரைவில் எல்லாம் அறியபடா திருந்த திமிங்கிலம் கரை ஒதுங்கியநாள் போலாகிவிடும் அதனால் என்னடி இது நம் முதுகரைக்குப் புதிசல்லவே. அஞ்சாதே தோழி முன்பு நாம் நொந்தழ மணல் வீடுகளை ச் சிதைத்த பயல்தான். ஆனாலும் காதல் அவனை உன் காலில் விழ வைத்ததல்லவா. ஆளரவ…
-
- 10 replies
- 1.4k views
-
-
எனக்குள் ஒரு பட்டாம் பூச்சி இருந்தது குளக்கரைகளில் மிதக்கும் தாழம் பூவிலும் குதித்து விளையாடும் குளப்படி வாண்டுகளிலும் லயித்து மகிழும் பட்டாம் பூச்சி அது கடந்து போகும் ஒரு துளி இசையை நூல் பிடிச்சு அதில் தொங்கி கூத்தாடும் பின் தூரத்தே கேட்கும் பறையொலியிலும் தன் சிறகுகளை விரித்து நடனமாடும் செங்கறுப்பு பெண்களின் கருத்த முலைக் காம்புகளின் மீது தீராக் காதல் கொண்டு கவி பாடும் சிலவேளைகளில் சரசமாடும் பெரும் வனம் புகும் இருள் விரும்பும் சிறுகாடு ஒன்றில் தனித்து இருக்கும் மழை நாளில் மழை நீரில் தன் குஞ்சுகளுடன் நடனமாடும் இலக்கியம் அருந்தும் மதுக் கோப்பைகளின் மிதக்கும் நுரையில் தாளம் போடும் யாருமற்ற கடற்கரை ஒன்றில் துணைவியுடன் க…
-
- 10 replies
- 3.2k views
-
-
வாடிய பூ மீது ..விழுந்த இலையின் மீது . தேடிய காதல் மீது ..பாடிய பாடல் மீது .. கூடிய உறவுகள் மீது ..நாடிய சொந்தங்கள் மீது .. மறையும் சூரியன் மீது ..கரையும் சந்திரன் மீது .. துளிர் விடும் விதை மீது ..தூவும் மலர் மீது .. அதிகாலை கனவு மீது ...கம்பனின் கவி மீது .. முகம் மறைக்கும் கன்னி மீது ..முடியாத கடல் மீது .. வராத பணம் மீது ..வாங்கிய முத்தம் மீது .. பாட்டியின் கதை மீது ...பாட்டனின் கைதடி மீது .. மழலை அழுகை மீது ..மடிந்தவர் புன்னகை மீது .. அதீத ஆசைகள் மீது ...ஆர்ருயிர் நண்பி மீது .. என்னுள் தொலைத்தவள் மீது ..எழுதா கவி மீது .. கண்ணாடி பொட்டின் மீது ..மருதாணி கைகள் மீது .. தேய்த்து போன செருப்பின் மீது ..சுவர் படங்கள் மீது .. காய்த்த கருவாட்டின் மீது ..கடைசி வார்…
-
- 10 replies
- 1.2k views
-
-
மழையை என்றால் குடையும் கூடவே .. வானம் என்றால் முகிலும் கூடவே ... மரம் என்றால் காற்றும் கூடவே .. நிலா என்றால் நட்சத்திரம் கூடவே .. ஒன்றை விட்டு இன்னொன்று தேடலில் .. என்னை விட்டு உன்னை தேடலில் .. உன் கண் கண்டபின் காதல் தேடலில் .. இருவரும் சேர்கையில் காமம் தேடலில் .. எல்லோரும் போல் உன்னை ரசிக்க .. எல்லோரும் போல் உனக்கு பொய் சொல்ல .. எல்லோரும் போல் உன்னை வர்ணிக்க ... எல்லோரும் போல் நான் புலவன் இல்லை .. என்னுள் மறைந்து இருந்து பார்க்கும் .. என்னுள் என்னை தேடும் காதல் .. உன்னில் மட்டும் வராமால் போகுமோ .. எம்மை நாம் ஆக்கும் காலம் வரும் .. அதுவரை நம் காதல் கவிதையில் .. வாழட்டும் ரசனையில் இருக்கட்டும் .. எம் குடில் நாம் அமைக்கு…
-
- 10 replies
- 826 views
-
-
மரண நாடொன்றில் மாநாடு வைக்கப்போகும் மான்புமிகு நாடுகளின் மாபெரும் மனிதர்களே!! கட்டுநாயக்கா உங்களை கட்டுக்கடங்கா மகிழ்ச்சியோடு வரவேற்கும்! அங்கு வீசும் காற்றில் சுற்றும் வண்ணக் காற்றாடிகளின் வண்ணத்தில் உங்கள் எண்ணமெல்லாம் வண்ணமாகும்! அக்காற்றோடு கலந்து வரும் கந்தகவாடையும் வெந்தக வாடையும் உங்களுக்குப் புரியாது! அலங்கார மண்டபத்தில் சிங்கார மங்கைகளின் ஆரவார வரவேற்பில் எங்களின் அவலக்குரல் உங்களுக்குக் கேட்காது!! வரும் வழியில் பாருங்கள் தமிழனின் மண்டையோடுகள் உங்கள் கண்களிலும் தென்படலாம்! நீங்கள் உட்காரும் நாற்காலிகளின் அடியில்கூட தமிழனின் எலும்புக்கூடுகள் உக்கிக்கொண்டிருக்கும்! சர்வாதிகாரி வீட்டில் சர்வதேச விருந்து...! சிங்களம் படைக்கும் சிங்…
-
- 10 replies
- 873 views
-
-
மனிதம் மறந்த தேசத்தில் மன வக்கிரம் கொண்டவனின் கண்களில் பட்ட குழந்தைகள் குதறி சாகடிக்க படுகின்றன மனிதம் மறந்த தேசத்தில் அவன் வீட்டு ஜன்னலுக்கு அழகான திரைச்சீலை அகதியின் குழந்தை அம்மணமாய் புழுதியில்
-
- 10 replies
- 1.3k views
-