கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
""""குழி வெட்டும் மகிந்தா..."""" ஏய்... மகிந்தா ஏன் நீ மரணத்தை கண்டு மிரண்டோடுகிறாய்....??? உயிர் மீது உனக்கித்தனை ஆசையா...??? பாவி உயிர்களை பகலிரவாய் பறித்தாயே அது மறந்தா நீ பதுங்கு குழி வெட்டுகின்றாய்...?? வெட்டு நல்லாய் வெட்டு ஆழ கிடங்கெடுத்து அழகாய் நீ கட்டு.... அட முட்டாளே உனக்கு தெரியாதா அது தானே உனக்கு புதை குழி... இப்போ எங்கு ஓடுவாய்...??? - வன்னி மைந்தன் -
-
- 1 reply
- 942 views
-
-
வெள்ளைப் புறாவுடன் வந்து... "சமாதானம்" வந்துவிட்டது என்றார்கள்!? சிவப்புப் பறவைகளாய்... சிதறிப் போயின அவை! அதன்பின்புதான் பார்த்தோம்... நம் மண்ணில், புறாக்களும் பிணந்தின்னும் என்று!
-
- 0 replies
- 565 views
-
-
ஞாலம் தமிழை எவண் வைத்தாலும், ஞாயம் என்னவிதி செய்தாலும், காலம் என்னவிடை சொன்னாலும், கனிய வேண்டியது தமிழீழம்! தமிழன் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும், தாங்கொணாத் துயரம் சூழ்ந்தாலும், குமுறி அழுதபடி வீழ்ந்தாலும், கொள்ள வேண்டியது தமிழீழம்! கத்து கடலில் உயிர் கரைந்தாலும், காடையோர் கொடுமை தொடர்ந்தாலும், (இ)ரத்த நாளங்கள் வறண்டாலும், எய்த வேண்டியது தமிழீழம்! குடிசை யாங்கெணும் எரிந்தாலும், குருதி எத்தனை சொரிந்தாலும், வெடிமுழக்கம் இனி விரிந்தாலும், வெல்ல வேண்டியது தமிழீழம்! பகைமை பேயரசு புரிந்தாலும், பரத தேசம் அதை அறிந்தாலும், அகதி ஆயிரவர் குவிந்தாலும், அடைய வேண்டியது தமிழீழம்! …
-
- 5 replies
- 1.6k views
-
-
இருத்தல் பெருந்தொகையில் இடம் பெற்ற கவிதைகளில் ஒன்று. பெருந்தொகை பற்றி விமர்ச்சகர் பேராசிரியர் மு.நிதியானந்தன் நிகழ்த்தும் விமர்சன உரை தீபம் தொலைக் காட்சியில் வெள்ளிக்கிளமை இடம் பெறுகின்றது. நேரம் இங்கிலாந்து 8.30 - 9.30, கண்ட ஐரோப்பா 9.30 - 10.30. வருகிற சனிக்கிளமை 13.10.2007 இருந்து 18.10 வரை பரிசில் இருப்பேன். இலக்கிய நண்பர்களைச் சந்திக்க விருப்பம். ஜெயபாலன் இருத்தல் வாலாட்டி வாலாட்டி நீருள் இரத்தினங்களாக வெயில் சிதைய மகிழ்ந்திருக்கும் சிறுமீன்கள். காற்றில் முளைத்து தாழை மடலில் தரை இறங்கும் மீன்கொத்தி. மீண்டும் அமர்ந்தேன். தென்னங் கீற்றுத் தோகைக்குள் இசைத்த சிறு குருவி சிறகை விரித்தாச்சு. இனி வானத்துச் சிப்பி வயிற்றுள் மிழிருகின்ற …
-
- 5 replies
- 1.5k views
-
-
உன்னோடு ஓடிக்கொண்டிருந்த நதியாக நான் இருந்த போது ஒவ்வொன்றும் புதிதாய் இருந்தது ஏனோ குளமாக தேங்கிவிட்டேன் ஆனாலும் என்னைச் சுற்றி உன் நினைவென்னும் குளக்கட்டுகளே உன்னோடு ஓடியதும் நானே உன்னோடு உருண்டதும் நானே உன்னோடு விழுந்ததும் நானே உன்னோடு கலந்ததும் நானே ஆனாலும் நீ நானில்லாமலே சேர்ந்துவிட்டாய் வாழ்க்கை எனும் கடலில் நான்தான் உன்னை நினைத்தே தேங்விட்டேன் குளமாய் இருந்தாலும் யார் வீட்டு குழம்பிலாவது நீயும் ஒரு நாள் உப்பாகலாம் நானும் ஒரு நாள் நீராகலாம் அப்போதாவது உண்மை சொல்வாயா..? ஏன் என்னை விட்டு சென்றாயென்று -யாழ்_அகத்தியன்
-
- 2 replies
- 1k views
-
-
நீ சிரித்து பேசும் பொழுதுகளை விட விட்டு விலகும் பொழுதுகளில் தான் என் காதல் அழுது அடம் பிடித்து உன் பின்னேயே வருகிறது...
-
- 2 replies
- 727 views
-
-
வணக்கம், இது கவிதைப் பகுதியில் நான் பதிந்தாலும் இது நிச்சயம் கவிதை அல்ல. பொங்கல் எனக்கு பல வழிகளில் முக்கிய தினம் ஆகின்றது. பொங்கலுடனான என் நினைவுகளை ஒரு கட்டுரையில் சொல்வதை விட கவிதை போன்ற ஒரு மொழியில் உடைத்து சொன்னால் சரியாக இருக்கும் என்று இதை எழுதுகின்றேன்.... எனக்கு இன்னும் என் நினைவுகளில் ஊரில் பொங்கிய பொங்கலின் வாசம் மிச்சம் இருக்கின்றது நாக்கின் ஓரத்தில் இனிப்பின் இறுதி சொட்டுகளை கவனமாக காக்கின்றேன் இன்னும் முன்னொரு காலத்தில் பொங்கல் பொங்கிய என் பாட்டியின் தொலைந்து போன வடையின் ருசியும், அதைக் காவு கொண்ட காக்காவின் பசியும், அதையும் (கூட) சூறையாடிய நரியின் தந்திரமும் இன்னும் என்னுடனே வருகின்றன *************** …
-
- 6 replies
- 1.3k views
-
-
-
- 5 replies
- 1.8k views
-
-
புறப்பட்ட இடத்திற்கு "மீளவரல்" பற்றிய கவிதையை வாசித்தவர்க்கும்இ அபிப்பிராயம் தெரிவித்தவர்க்கும் எனது மனமாரந்த நன்றிகள். ஒரு கவிதையின் விளக்கம் அல்லது புரிந்துணர்வு இன்னொரு கவிதைக்குள் பொதிந்து கிடக்கக்கூடும், புலப்படாது தப்பித்துச் செல்லவும் கூடும். ஒரு கவிதையிலிருந்து இன்னொரு கவிதைக்கு அழைத்துச் செல்லும் பாலத்தின் கீழ் படந்தோடிக்கொண்டிருக்ககிற
-
- 5 replies
- 1.6k views
-
-
காவல் தெய்வங்களே சாவை தழுவி சந்தண மாலை சூடியோரே இமைக்கும் பொழுதினில் எரிமலையாய் வெடித்தீரோ ஈழத்தின் விடியலிற்காய் எமக்காய் எரிந்தீரோ எங்கே சென்று மறைந்தீரோ கடலில் கரைந்தீரோ களத்தில் எரிந்தீரோ விண்ணேறி விடியல் தேடி சென்றீரோ கண் முன்னே வாரும் கனவு தேசம் நாளை கைகொட்டி மகிழ்வோம் கனவு சுமந்து களம் வென்றவரே கடலெல்லை காத்து மீண்டவரே எங்கே சென்றீரோ எப்போது வருவீரோ விழியில் ஓளி ஏற்றி உம் விரல் தொடுகைக்காய் விரதம் இருக்கின்றோம் எம் ஈழத்தின் அரசிற்காய் உம் இதயத்தில் இடம் தந்தீரோ தாயை காப்பதற்காய் தவிப்பெல்லாம் எமக்களித்தீரோ புலியாகி சென்றீரே எம் புகழதை வென்றீரோ வெற்றிக் கிண்ணம் நம்கையில் கொட்டி மகிழ்வோம் ஒடி வாரு…
-
- 1 reply
- 780 views
-
-
புத்தாண்டில் உறுதியுடன்.... ------------------------ தேசம் கடந்து வாழ்ந்தாலும் தாய் மண் பாசம் கொண்டு நேசம் கொள்ளும் தமிழினமே நாம் ஓயும் நேரம் இதுவல்ல ! புதிய ஆண்டில் புதுமைகள் படைத்து நிமிரும் தமிழினமாக என்றும் எழுவோம் நீதியைக் காண நிமிர்வோம் நாமே விடியலுக்காக அடிமை விலங்கைத் தகர்த்தே எங்கள் விடியலைப் படைக்கும் புதிய ஆண்டாய் மாற்றிடுவோமே ! அவ்வண்ணம் நொச்சியான்.
-
- 0 replies
- 652 views
-
-
மீண்டும் உயிர் பெறும் மாவீரம் மீண்டும் உயிர் பெறும் மாவீரம் “”””””””””””””””,,,”””””””””””””””” உறங்கிக் கிடந்த உறவுகளே உங்கள் வீரம் ஓய்ந்து போகவில்லை உயிர்பெறத் துடிக்கின்றது “”” எங்கள் கண்மணிகள் கல்லறை எங்கும் பகைவன் பாதங்களின் சிதைவு கண்டு முட்புதர்கள் கூட மூடிக்கொண்டது ” கல்லறை எங்கோ ஓரமாய் விழியிளந்து விசும்பும் சத்தங்கள் உறவுகளின் உள்மனதை உரமூட்டியதோ,, வீரம் மெருகேறிய கைகளில் வீச்சருவாள், புனிதம் கொள்கின்றது மாவீரர் துயிலும் இல்லம் ” இன்று மிளிரும் மாவீரர் நாள் மிடுக்குடன் எழுந்து கொள்ளட்டும் ” கார்த்திகை 27 கண்மணிகளின் புனித நாள் ” மாற…
-
- 1 reply
- 3.7k views
-
-
பதினைந்து வயது வாலைக் குமரியடி பார்ப்போரை மயக்கும் பருவ மங்கையடி அதனாலோ அத்தனை பேர் உன் அழகில் கண்மயங்கி உனைக் காண உச்சிப் பொழுதிலும் உனைத்தேடி வருகின்றார்???? ஒரு முறை உனைக் கண்டார் உன்மத்தம் கொண்டு உன் பின்னே வருகின்றார் ஊனின்றி உறக்கமின்றி உன்னில் மதிமயங்கி உன்னைப் பார்த்திருப்பார் உள்ளத்தெழும் உணர்வை உரைத்திட அனைவரும் முத்தமிழால் உனக்கு முத்தாரம் சூட்டிடுவார் சொக்குப் பொடிபோட்டு சொக்க வைப்பதில் நீ சுந்தரி சொல்லாடல் செய்து சூரர்களைக் கூட சுணங்க வைப்பதில் சூத்திரி சோலை மலர்விழியாள் உன் சோபை கண்டதனால் சொற்களால் உனைச் செம்மையாக்கிச் சுற்றி வருகின்றோம் கதைக்கள், கட்டுரைகள், கவிதைகளாக்கி கண்குளிரக் காண்கின்றோம் பதினைந்து ஆண்டுகள் முன் உ…
-
- 25 replies
- 2.3k views
-
-
என் இனமே..!! என் சனமே...!!! காற்றில் வரும் எங்கள் அழு குரல் உங்களுக்கு கேட்கிறதா..?? எங்கள் உடல் இரத்தம் கருகி வரும் வாசம் வருகிறதா..?? உங்களை விட்டால் எங்களுக்கு யார் இருக்குறார்கள்..?? அழுவதற்கு திராணியும் இல்லை.. தொண்டை குழியில் ஒரு சொட்டு தண்ணீரும் இல்லை.. உங்களை விட்டால் எங்களுக்கு யார் இருக்குறார்கள்..?? அருகிலே இறந்த என் பச்சை பாலகன் மனதிலே இறந்து போன என் கணவன் தூரத்திலே இறந்து போன என் உறவுகளின் சாம்பல் உங்களை விட்டால் எங்களுக்கு யார் இருக்குறார்கள்..?? கண்ணருகில் சிறு துளி கண்ணீர் மூக்கருகில் துளிர் விடும் இரத்தம் அதிகரிக்கும் என் இதய துடிப்பு எனக்கு கேட்கிறது நான் சாக போகுறேனா.. ஒரு சிறு துக்கம் என் இனம் கூண்டோடு அழ…
-
- 0 replies
- 1.1k views
-
-
இனி எம் கல்லறைகளுடன் பேசுக! எம் இருதயத்தை பிளந்த யுத்தக் கல்லை பார்த்ததுபோதும் எமை கொன்று வீசிவிட்டு வெற்றிக் கூச்சலிடும் உம் படைவீரரின் சிலையை பார்த்ததுபோதும் எம் தேசமழித்து அழிக்கப்பட்ட எம் உடல்களின்மேலே ஒற்றை நாடென நடனமாடும் வரைபட கல்லைப் பார்த்ததுபோதும். எம் வீரர்கள் விதைக்கப்பட்ட நிலத்திற்கு வருகவெம் சிங்களச் சகோதரர்களே! வந்தெம் முகங்களின் காயங்களைப் பார்க்கவும் நூற்றாண்டாய் எம் தலைகளை அழுத்திய பெரும் பாதங்களின் வீரத்தைப் பார்க்கவும் மனிதம் தலைகுனிய கல்லறைகளுடன் போர் புரிந்த உம் படைகளின் தீரத்தைப் பார்க்கவும் மாண்டவர்களின் துயில் கலைத்து உறங்க இடமறுத்…
-
- 1 reply
- 1.3k views
-
-
16 வயசில் பல ஆசை வருமே- இனம்மேலொரு ஆசை எவருக்கும் வருமா? திசைக்கொன்றாய் பறக்கும் சிட்டு குருவி வெடிகுண்டை தன் மடியில் - காவி வீணே தன்னை கொல்ல நினைக்குமா? எப்படி ஆச்சு? ஆலயத்தில் போய் அழுவதில் - பயனில்லை ஆட்லறிதான் - இனி எங்கள் பேச்சு- ! இப்படி நினைத்தாரே ஒருவர் -! உன்னால்-என்னால்-எவரால் எண்ணி பார்த்திருக்க முடியுமா? -ஆகியிருந்ததே! இப்படி இப்படி -பாருங்களேன்! எவர் நினைத்திருப்பார் - இந்த இரும்பு மகன் எங்களை ஆள்வான் என்று? ஒவ்வொரு வயதிலும் - ஒவ்வொரு ஆசை வரும்- மனிதன்-மாறுவான் - அப்பிடிதான் என்கிறார்-! பத்துகளிலிருந்து - ஐம்பதுகள்வரை - நீர் அசைந்ததே இல்லையே- எப்படி எப்படி ? எப்படி எப்படி - உம் பாட்டன் வயசுள்…
-
- 13 replies
- 2.3k views
-
-
-
- 23 replies
- 3.9k views
-
-
-
தமிழ் ஈழம் தாரீர்!.. கடலிடைக் கிடந்த தீவின் கவின்மிகு கரைகள் எங்கும் படர்ந்துநல் வாழ்வு கொள்ளும் பைந்தமிழ் வம்சம் காண்மோ! இடரிடைப் படுமோ? எங்கள் ஈழமண் இழப்ப தாமோ? மடமதிக் காடையோர் முன் மறத்தமிழ் தோற்ப தாமோ? இலங்கையின் ஏறத் தாழ இரண்டிலோர் பகுதி யான நிலங்களை உடைமை கொண்டு நிமிர்ந்துவாழ் தமிழர் தம்மைக் கலங்கிட வைக்கும் நீதிக் கயவர்கள் நம்கண் முன்னே விலங்கினம் என்ப தல்லால் வேறெது சொல்வ தற்கே? இந்திய நாடே! மற்றும் ஏனைய நாட்டோரே! நீர் தந்திட வாரீர், உங்கள் தார்மிகக் கருணை எம்மேல்! மந்திகள் மேயும் எங்கள் மண்ணினை மீட்டுத் தாரீர்! சிந்நிய குருதி போதும்: செந்தமிழ் ஈழம் தாரீர்!.. செந்தமிழா, நம் தமிழீழம்…
-
- 2 replies
- 1.2k views
-
-
காதல் மலர்ந்து இன்பம் கனிந்து கவிதை தவழ்கின்ற இந்நேரம் என்னை சேரமுடியாமல் பிரிந்தாய் -நீ என்ன பாவம் செய்தாய்? நீ சுவாசித்த மந்திரத்தை தினம் கேட்க கோவிலுக்கு சென்றாய் இன்று பூசைகளில் நிம்மதியை நாடுகின்றாய் அப்படி நீ என்ன பாவம் செய்தாய்? இலவசமாக கூட குடிபூற மறக்கும் உன் உள்ளத்தில் தீபத்தை கையில் ஏந்தியபடி உன் வாசல் வந்தவளை- நீ இழந்ததேன்?? தாய்க்கு தாயாக தோழிக்கு தோழியாக காதலிக்கு காதலியாக அவள் மடியில் தவழ்ந்த உன் வாழ்க்கை இன்று கேள்விக் குறியானதேன்??! ஒலிவடிவில்....
-
- 15 replies
- 2.6k views
-
-
தாயின் மடி போல் தலையணை வேண்டும் தூங்கும் நிலையில் மனநிலை இல்லை வந்து போகுது வரவும் செலவும் நொந்து போகுது மானிட இதயம் உழைத்து உழைத்து உருக்குலைந்த பின் எஞ்சி இருப்பது நோயும் நொடியும் குருவித் தலையில் பனம் பழம் போலே ஏழை உழைப்பில் எத்தனை செலவு காற்றும் கூட காசாய் போனதால் வாழ்வில் எப்படி வசந்தம் வீசும் சுரண்டிய மீதியே ஊதியம் ஆகையில் உயர்வது எப்படி? வாழ்வு மலர்வதெப்போ? மனசு நிறைந்து கனவுத் தூக்கம் கண்டு மகிழ்வதெப்போ? தாயின் மடி போல் தலையணை வேண்டும் நோயில் படுக்கினும் தாயின் மடியே தலையணையாய் வேண்டும்.
-
- 6 replies
- 3k views
-
-
உன்னை தேவதை ஆக்கியது உன்னை ...நான் காதலியாக.... மட்டும் நினைக்கவில்லை..... வழிபடும் தெய்வமாகாவும் கருதுகிறேன் ......சில வேலை நீ கூட ......சிரிப்பாக எடுக்கலாம் ......!!!. நீ இருந்துபார் நீயே ,,,,,உனக்கு கடவுளாக தெரிவாய் ....உன்னை தேவதை ஆக்கியது என் "நினைவு அலை" தான் இந்த உலகில் எண்ணத்தை விட ஒரு கருவி இல்லை....!!!
-
- 7 replies
- 851 views
-
-
[size=4]வாழ்க்கை ஒருமுறைதான் வாழ்வதும் இம்முறைதான்... எதையும் இழக்காத இதயங்களும் இல்லை ஏமாற்றம் பெறாத எதிர்பார்ப்புகளும் இல்லை உன்னுடைய நட்பு இன்னொருவரின் இழப்பு அடைகின்ற மகிழ்ச்சியில் அறியாதொருவரின் சோகம் பெறுகின்ற வெற்றியின் பின்புலமாயிரம் வடுக்கள் வேதனைகள் இல்லாத சோதனைகள் இல்லை சோதனைகள் இல்லாத சாதனைகளும் இல்லை வீழ்ச்சிகள் ஒவ்வொன்றும் தாழ்ச்சிகள் இல்லை வாழ்ந்து பார் வடுக்களும் வசந்தங்களாகும் வாழ்க்கை ஒருமுறைதான் வாழ்வதும் இம்முறைதான்...[/size]
-
- 4 replies
- 1k views
-
-
இது நான் அறிந்த சம்பவம். ஒரு பெண்ணாய் என்னால் உணரமுடிந்தது. உதவ முடியவில்லை வலிக்காமல்..... துள்ளித் திரிந்தவள் மெல்லப் பிடித்திருத்தப்பட்டாள் காயப்படுத்தப்படாமலேயே இறக்கைகள் கத்தரிக்கப்பபட்டன. பேதை, போதை என்பதற்கான கருக்கூட்டலே கதைப்படுத்தப்பட்டது. பதின்மவயதில் பதுமை நிலை திணிக்கப்பட்டது. எதிர்கால மேதை ஒருத்தியின் பாதை சம்பிரதாயச் சடங்குகளால் சத்தமில்லாமலே பூட்டப்பட்டது.
-
- 5 replies
- 1.5k views
-
-
அப்பாவின் ஈர நினைவுகள்.... வேர்களில் இருந்து கசியும் நீராய் அப்பாவின் நினைவுகள் எனக்குள்.. ஐந்து வயது வரை நடக்கமுடியாது தவிக்கும் போது தோள்களில் தூக்கி திரிந்த காலங்கள்... பனைவெளிகளின் ஊடாக சைக்கிள் பாரில் எனை வைத்து கதை சொல்லிய பொழுதுகள்.... பெரும் குளக்கட்டின் ஓரம் தடுக்கி விழாமல் இருக்க விரல்கள் இறுக்கி நடந்த நேரங்கள்... பெரும் மழை சோ என்று கொட்ட நனைதலின் சுகம் சொல்லித் தந்த தருணங்கள்... இப்பதான் நடந்ததாய் தெரியும் பொழுதுகளெல்லாம் எப்பவும் தொட முடியாத திக்கில் உறைந்து விட்ட சித்திரங்களாய்... ஆற்றாத் துயர் அணை மேவினும் நெருங்க முடியாத தூரங்களாய்.... பசிய இலையொன்றின் அந்திம காலத்து உதிரும் தவிப்பில் அப்பாவை கண்ட இறுதிப் பொழுத…
-
- 19 replies
- 134.7k views
-