Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. http://youtu.be/bKy6lO-TJvw உடல் இரசாயனங்களின் உந்துதலில் உன்னைக் கண்டேன். உன்னதமாய் தோன்றிய உன்னால் பைத்தியமும் ஆனேன் - கூடி உலவவும் செய்தேன்..! உயிர்மெய்யென உன்னில் நானே உளறியும் கொட்டினேன். உன்னை நீயே உத்தமன் இவனென்று எனக்குத் தந்தாய்...! உறவுகள் விரிந்தது உண்மைகள் என்பதாய் வளர்ந்தது. உடலும் உறவு கொண்டது உயிர்களும் தோற்றம் பெற்றன. உடைக்க முடியாத பந்தம் உன் - என் உறவென்று உறுதியாய் நம்பி இருந்தேன் உன் அன்பை உண்மை அன்பெனக் கண்டதால்.! உறுத்தலாய் உருண்டது ஓர் நாள்..!! உன் முன்னவன் என்று உதிரியாய் ஒருத்தனை உதாரணம் காட்டினாய். உள்ளதில் படர்ந்தது உதவாக்கரை எண்ணம். உன்னை அது உறவால் வெறுக்க வைத்தது. உறவுகள் விரிசல் காண... உயிர்கள் அந்நிய…

  2. கரும்புலிகள்..... கரும்புலிகள் நினைவுக் கவிதை.... கவிதை - இளங்கவி தமிழீழக் கடலின் ஒவ்வோர் நீர்த்துளியும் தன்னில் எரிந்த கரும்புலியின் கதை சொல்லக் காத்திருக்கு........ எதிரியிடம் சிக்கி மானம் இழந்ததனால் அது விடும் கண்ணீர்த்துளிகள் சேர்ந்து ஆழிப்பேரலையாகக் காத்திருக்கு...... நீரிலே அக்கினிக்குண்டம் வளர்த்து அதிலே எதிரியைப் பலிகொடுத்து எங்கள் கடலை எதிரி தொடாமல் எங்களுக்காய் வைத்திருந்த இரும்பு மனிதர்கள் எங்கள் கரும்புலிகள்........ பிரயாணம் தொடங்கிவிட்டால் அவனுக்கு புரிவதெல்லாம் ஈழ விடுதலை...... தெரிவதெல்லாம் எதிரியின் இலக்கு....... அவன் இலட்சியம் தான் எரிந்து எதிரியை எரிப்பது..... தன் வாழ்வுக்காய்…

  3. தோல்வி எனைத் தொடும் முன்னே தோழமையுடன் தோள் கொடுப்பாயடி. கவலைகள், மனதை காயப்படுத்தும் முன்னே காயத்தை ஆற்றும், மருந்தாக, வருவாயடி,,,! ஒரு நாள் பேசாவிட்டால் ஒரு ஜென்மம் போனதடி - என நீ துடிப்பதை நான் நன்கு அறிவேனடி! நினைவினில் நிஜமானவளே - என் கனவிலும் கரைந்தாயடி.. என் தோழி என்ற உரிமையுடனே உன் தோளில் சாய்வேனடி.. உன் சிநேகிதி என்ற உரிமையுடனே உனை நான் அதிகாரமும் செய்வேனடி! என் ஒற்றை விழியாக என் தோழி ,- நீ என்னில், என்றுமே வாழ்வாயாடி.. !

  4. Started by gowrybalan,

    பூட்டிய வீட்டுக்குள் புளுங்கிக் கொண்டிருந்தேன்..... காற்றினைத்தேடி கதவினைத் திறந்தேன்...... வந்தது காற்று ! ஒரு முறை..... பூஞ் சோலையில்- புகுந்து பூக்களில் புரண்டு புதுத் தென்றலாய்- மிதந்து (பூ) வாசனையோடு... வாசலில்- வந்தது ! மறுமுறை....... சாக்கடையில்- புகுந்து சகதிகளில் நனைந்து நாற்றத்தைச் சுமந்தபடி.... வாசலில்- வந்தது ! மறுமுறை...... கோவிலில்- புகுந்து தீபத்தில் எரிந்து தூபத்துள் புகைந்து தெய்வீக வாசனையாய்..... வாசலில்- வந்தது ! ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாய் ஒவ்வொரு காற்று...... ஒவ்வொரு காற்றைப் போல் ஒவ்வொரு விதமாய் ஒவ்வொரு மனிதர்..! ம்..... ஒவ்வொரு காற்றையும் சுவாசிக்கப் ப…

    • 14 replies
    • 2.6k views
  5. சென்று வாருங்கள்! உமக்காய் எம்மிடம் எதுவும் இரந்ததில்லை........ வாசல் வந்து ஒளிதர.......... வைகறை கலைக்கும் சூரியன் ........ வரி கேட்குமா என்ன? காலம் ஒன்று எமக்காய் விழி திறக்க........... கந்தக அதிர்வில் .......... விழி மூடியவர்களே.... ஊரினைதான் பிரிந்து வந்தோம்... உணர்வினை தொலைத்து அல்ல.......... அலை ஓய்ந்ததென்று கனவாம் பலருக்கு....... அலை ஓய்வதுண்டா...? கடல் இருக்கும்வரை அலை காணாமல் போகுமா? கரிகாலன் படை - இருக்கும்வரை.. கூலிகள் கருத்து தமிழனை ஆளுமா? சாய்ந்துபோன விருட்சங்களே. உம் வேர்களை சுமந்தவர் வாழ . என்றுமே நீர் தருவோம். நிம்மதியாய் - உறங்கும்!! (மூதூரில் - எமக்காய் கனவுகாண- விழிமூடியவர்களிற்கு)

  6. இரோம் சர்மிலா பிறந்தநாள் இன்று. அவர் குறித்து எழுதிய கவிதை ஒன்று கூப்ரூ மலையின் மகள் மரட்சியுடன் திரியும் மான்கள் நிறைந்திருக்க செம் மல்லிகை பூத்திருக்கும் கூப்ரூ மலையின் மகளே நெடிய விரத்தினை முடித்து உணவருந்து! துப்பாக்கிகளின் விற்பனைக்கான பூமியில் இனியும் பசியோடிராதே! உருகிய உன்னுடலருகே நின்றவுன் சனங்கள் ஒவ்வொரு உணவு வேளையிலும் கோப்பைகளைத் தூக்கும்போதடைந்த குற்ற மனம் இனியேனும் தணியட்டும் வற்புறுத்தப்பட்ட உணவுத் தண்டணையும் மூக்கில் சொருகப்பட்ட உணவுக் குழாய்ச் சிறையும் இத்தோடு முடிந்துபோக நெடுநாளாய் மறந்த உணவைக் கையிலெடு நிர்வாண…

    • 0 replies
    • 1.1k views
  7. முதல் வெடியோசையில் பிறக்கிறது காதல் .. பக்கத்துக்கு கூடாரம் யாராக இருக்கும் .. எண்ணிய வேளையத்தில் பிள்ளை வேகமா வா .. என் அழைக்கும் அவள் அம்மாவின் சத்தம் .. நிலா ஒளியில் அவள் நிலா முகம் பார்க்கிறேன் .. ஓடி சென்று மாமர அருகில் இருந்தவாறு .. ஒன்னை பெத்து வைத்திருக்கிறேன் .. கட்டிகாக்க நான் படும் பாடு பெரும்பாடு . . என்னும் ஏக்க பெரும்மூச்சு விடும் அவள் அம்மா .. கற்பூர வள்ளி போல வாடாமல் இருக்கிறாள் .. கண்களில் மட்டும் சிறு நீர் நிரம்பி இருக்கு .. அது ஒரு வயது பார்த்தவுடன் வாழ்க்கை கொடுக்கும் .. கட்டினால் இப்படி ஒரு பிள்ளையைத்தான் .. என்னும் மன ஓட்டத்தில் இயங்கும் நிலை .. எம்மை பற்றி சிந்தித்ததை விட அவளை பற்றி அதிம் .. அடிக்கடி பவுடர் போடும் …

  8. ]''இப்போ...விட்டிடு....'' புலம்பெயர் நாட்டினில் புலமையோடிருந்தவன் புரட்சியாய் எழுந்த புலி வீரன் கண்டான்... தலைவனை கண்டவன் தன்னிலை உரைத்தான் தன்னையும் விடுதலை வேட்கையோடிணைந்தான்... திறமைகள் கொண்டவன் திருப்பங்கள் கொடுத்தான் விடுதலை விருட்சமாக விருட்சங்கள் விதைத்தான்..... மறைவிடம் தன்னில் மறைவாய் இருந்தவன் மதியுரை உரைத்தவன் மக்களை ஈர்த்தான்... விடுதலைக்காய் வந்த விடயங்கள் சொன்னான் அரசியல் நுட்பங்கள் வித்தையாய் கற்றவன்.... ஆட்சி பீடங்களை ஆடவே வைத்தான் நூலகம் என்ன- இவனே நூலகம்.... வந்தே குந்தியார் வாய்விட்டு கதறுவார் வரலாற்றை புரட்டியே வகுப்புகள் கொடுப்பான்... பட்டறை போட்டு பயிற்சிகள் எடுத்தவர…

  9. மாவீரம் குறள்: 1 மண்ணின் கண் மகிமை கொண்டோர் மாட்சிமை மேலுயிர் துறந்தவத்தார். (தொடர்ந்து நீங்களும் ஆக்குங்கள். ஆளுக்கு ஓர் குறள் மட்டுமே ஆக்கலாம்.) இக்குறள் மாவீரர்களின் வீரம்.. ஈகை.. கொடை.. தன்னலமற்ற பண்பு.. இலட்சிய வேட்கை.. வாழ்க்கை.. சாதனைகள்.. இனப் பற்று.. மண் பற்று.. அவர் தம் மக்கள் பற்று.. சக போராளிகள் மீதான பற்று.. மக்கள்.. மாவீரர் மீது கொண்ட மகிமை.. என்ற கருத்துக்கள் பட அமைவது நன்று. இந்த தன்னமலற்ற தியாகிகள் மீதான அவதூறுகள் வரவேற்கப்பட மாட்டாது. கள நிர்வாகம் அப்படியான ஆக்கல்களை அகற்றி உதவுதல் வேண்டும். திருத்தம்: ஆளுக்கு ஒரு குறள் மட்டுமே ஆக்கலாம் என்பது கீழ் வருமாறு தளர்வு செய்யப்பட்டுள்ளது.

  10. அன்னை மண் சிந்திய கண்ணீர் .. அணையாது காக்கப்படும் தீபம் .... அண்ணனவன் ஆளும் காலம் .. அனைவரும் இணைவோம் பலமா .. ஆளான ஆலமரங்கள் .. ஆழியில் அகப்பட்ட துரும்பு போல் .. ஆழமா உள் இழுக்ப்படும் மூச்சு .. ஆணிதரமா முகத்தில் அறைந்தது .. இலை என்று நினைத்தவர் எல்லாம் .. இல்லை இது இமயம் என்று வியக்க .. இன்னொருவன் வருவான் எமக்கு .. இனத்தின் இருளை போக்க .. ஈ ஆக பறந்து போகாது .. ஈட்டி போல பாய்வோம் நாம் .. ஈனர் செயல் அறுத்து வீழ்த்த .. ஈன்றவள் பெரு மகிழ்வு கொள்ள .. உலகம் ஒருநாள் புரியும் எம்மை .. உண்மை அறிந்து தலைகள் குனியும் .. உன்னத இலட்சியம் வெல்லும் காலம் .. உணர்வுடன் நாம் மாவீரம் போற்றுவோம் .

  11. ஜாதிகளும்.... மதங்களும்..... தூக்கிப் பிடிக்கும் கொடிகளாகிவிட்ட பின்னர், "ஜனநாயகம்" என்ற போலிச்சாயம் பூசிய அழுக்குத் துணிகளுக்கு, ஏன் வெள்ளைச் சிறகுகள்....???????

  12. கடல் கடந்தபோதும் - எம் இனம் கனம் குறையவில்லை சாதி மதபேதத்தில் நாம் இன்னும் சபலத்துடன் அலைகின்றோம் விரிசல்பட்டு இனம் வீதியிலானபோதும் வீரியம் குறையவில்லை இன்னொருவன் எமை ஏன் அழிப்பான் எம்iமையே நாம் இன்றே அழித்திடுவோம்

  13. பிறரிடம் வருந்தாதே .... உன்னை வருத்து வெற்றி ... நிச்சயம் ....!!! தன்னை வருத்தாதவன் ... வருத்ததோடுதான் .... வாழ்வான் ....!!! + கே இனியவனின் தத்துவ சிதறல்கள்

  14. எதற்காகப் பிறந்தேன் என்று தெரியவில்லை அன்பு செலுத்த மறுக்கும் உனக்கு அன்பு செலுத்தவா? நம்பிக்கையில்லாத உன் வாழ்வில் நம்பிக்கை தான் வாழ்க்கை என்று வாழ்ந்து காட்டவா? யாருக்காகவும் இதுவரை கண்ணீர் வடித்ததில்லை கல்மனம் கொண்ட உனக்காக கண்ணீர் வடிக்கவா? என் எதிர்காலத்திற்காக கடவுளை வணங்கியதில்லை உன் எதிர்காலம் நன்றாக அமைய கடவுளை வணங்கவா? ஏனடா நான் இப்படி? இது என் காதலின் ஆரம்பமா? இல்லை என் அன்பின் இறுதியா? ஒலிவடிவில்..

  15. "கருப்பு பூனை குறுக்கே பாய" "கருப்பு பூனை குறுக்கே பாய கருப்பாயி கலங்கி பயணம் நிறுத்த மருண்டு அருண்டு எலி பதுங்க வெருண்டு வெறுத்து பூனை பார்க்குது!" "கருப்பு காகம் முற்றத்தில் கரைய கருப்பாயி வாசல் கதவு பார்க்க கருப்பன் வரும் நம்பிக்கை துளிர நெருப்பு மனது எரியுது தவிக்குது !" "கருப்பு விழிக்கு விக்கல் வர கருப்பன் இவள் நினைவோ என வருடி அழுத்தி நெஞ்சை இளக்க இருந்த விக்கல் மறையுது போகுது!" "கருப்பு பல்லி தலையில் விழ கருப்பாயி நெஞ்சம் பதைத்து துடித்து கருப்பன் என்ன ஏதோ என ஒரு தீபம் கொளுத்துது காட்டுது!" "கருப்பு இருட்டில் சென்ற கருப்பன் வெருண்டு அலைந்து வீடு திரும்ப குருட்டு பிசாசு ப…

  16. உனக்காக இருக்கவா..? உன்னோடு இருக்கவா..? என்றால் உனக்கா எழுதிக் கொண்டு உன்னோடு இருக்கவே விரும்புகிறது மனசு * நியமாக உன்னோடு வரமுடியாமல் போனாலும் என் நிறமாவது வருகிறதே உன் நிழலாக * நீ பயத்தோடு வருவதைக் கண்டாலே நான் தனியா பேச வந்ததை மறந்து விடுகிறேன் * நீ படபடப்பதை யாரும் பார்த்தால் பயத்தை விரும்பும் கோழை என என்னை நினைக்கப் போறார்கள் * நீ என்னைக் காதலிக்கிறாய் என்பதை என்னால் நம்பமுடியாமல் இருக்கிறது பொறுக்கியை எப்பிடி தேவதை காதலிக்கும்..? -யாழ்_அகத்தியன்

  17. அறத்துப்பால்-கடவுள் வாழ்த்து -அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு (01)கே இனியவனின் திருக்குறள்-சென்ரியூ எழுத்தின் தாய் உலகின் தாய் -அகரம் - -

  18. Started by kavi_ruban,

    இவன் ஒரு சிவன் புலியாடை அணிந்தவன்! சூலம் சிவனது ஆயுதம் சுடுகலன் இவனது ஆயுதம் பூதகணங்கள் புடை சூழ வருபவன் சிவன் சேனைத் தலைவர்கள் தனைச் சூழ வருபவன் இவன்! நஞ்சுண்ட கண்டன் அவன் நஞ்சைக் கழுத்திலே கட்டிய வீரன் இவன்! சுடுகாடு சிவன் நடமாடும் வீடு பலநாடு இவன் புகழ்பாடும் பாரு! சிவன் பாத தொழ அறுபடும் பிறவித் தளை பிரபாகரன் பாதம் தொடர நமதாகும் நாளை விடுதலை!

  19. கார்த்திகைப் பூச்சுமந்து கல்லறை நோக்கி நடப்போம் ஈழ காவியம் எழுத தம் உயிர் தந்த கண்மணிகள் நினைவு சுமந்து போரியல் வரலாற்றில் புதிய சரிதம் எழுதி பூமிப் பந்தில் தமிழீpழம் வரைய புயலெனக் களமாடி மண்ணுள் புதைந்த மா வீரர்களே! உங்கள் மலரடி தொழுதோம் இக் கார்;த்திகை நாளிலே

  20. ஈழத்தின் போர்க்கோலம் வண்டியில் பூட்டிய மாடுகள் முதுகு நிமிர்த்தி நம்பிக்கையோடுதான் நடக்கிறது அகப்பட்டதை ஏற்றிய கைகளும் கால்களும் வலிகளோடுதான் மிதக்கிறது குண்டு சுமந்து வரும் வானூர்தி நெஞ்சைக் கிழிக்கிறது நெடுநாள் எரியும் நெருப்பில் பிஞ்சைப் புதைக்கிறது பதினைந்தைக் கடக்காத பருவத்தின் கனவுகள் பறித்து வன்னிக் காட்டின் நடுவிலே வான் குண்டு குருதிக் கோலம் போடும் ஆசை ஆசையாய்க் கட்டிய வீடுகள் எல்லாம் முகமிழந்து... முகவரியிழந்து... அழிந்து போய்க் கிடக்க ஆச்சியின் புலம்பல் கேட்கும் பாடசாலைக்குப் போன பிள்ளை பாதி வழியிலே... தாய்மண்ணை அணைத்தபடி இரத்தச் சகதிக்குள் விழிகள் திறந்தபடி இழவு வீட்டின் குரல்கள்கூட இல…

  21. உச்சியில் வட்டம் ஒன்று வரைந்து நடிவில்.. வடிவாய் ஓர் கோடிழுந்தேன். பின்.. ஆங்கே கோளங்கள் இரண்டு சரியாய் பொருத்தினேன். கோடும் வளைய வளையிகள் கொண்டு சரி செய்தேன். ஈர்ப்பு மையம் மாறிப் போக பிறை ஒன்று உச்சத்தில் வைத்தேன் சமநிலை குழம்ப முக்கோணம் ஒன்று கூடச் சேர்த்தேன்..! கோடுகள் சேர்ந்து ஓவியமாக.. உயிரற்று நின்றது. கணிதத்தில் வகையீடு தொகையீடு சமன்பாடுகள் பல போட்டு திரிகோண கணிதமும் கேத்திர கணிதமும் எல்லாம் கலந்து அட்சர கணிதத்தில் ஒருபடி.. இருபடி எல்லாம் தாண்டியும்.. பயனில்லை..! அலுப்புத்தட்ட கட்டிலில் சாய்ந்தேன் நித்திரை வெளியில் கோடுகளின் எண்ணத்தில் உயிர் பெற்றது ஓவியம். வார்த்தைகள் தேடினேன் முந்திக் கொண்டு.. ஓவியம் பேசியது "உன்னவள…

  22. சமாதானத்தின் பெயரால்.. முந்தியெல்லாம் நாங்கள் விழிநீர் சிந்தியதே இல்லை தந்தனத்தோம் பாடி கெந்தித்தொட்டு ஆடி தெரு மந்திகளைப் போல வாழ்ந்திருந்தோம் முந்திய வாழ்க்கை எல்லாம் நாம் சந்தித்த எதிரியாலே பந்தி விட்டு ஓடியது சந்தி கூடிச் சிரித்தது... வந்தவன் ஆட்டி வைக்க சொந்த மண் விட்டு வெந்த புண் மனத்தோடு சொந்த பந்தமதைப் பிரிந்து குந்தியிருந்த நிலத்தையும் இழந்து மரம் விட்டு மரம் தாவும் மந்திகளைப் போல ஊர் விட்டு ஊரோடினோம் கூடு பிரிந்த வாழ்க்கையது தேடி வந்தது எம்மை கேடென்று நினைக்கலாமோ நாமதனை..? நாடற்ற நமக்கு வீடெதற்கு ? வீண் வம்பெதற்கென பாடித் திரிந்த பண்பட்ட குயிலொன்…

    • 3 replies
    • 1.1k views
  23. ஈழத்திரு நாட்டில்.. பூர்வீகமாக வாழ்ந்த மண்ணில்.. அடிமைப்பட்ட மந்தைக் கூட்டம் ஒன்றின் விடுதலைக்காய் புலி ஒன்று சொந்த வாழ்வை சொத்தாக்கி உழைத்தது. கூட இருந்த குள்ள நரிகளும் எட்ட நின்ற ஓநாய்களும் மந்தைகளின் வளர்ச்சி கண்டு வாயூறி நின்றன. சில கறுப்பாடுகளும் பட்டியில் காட்டிக்கொடுக்க தயாராகி நின்றன. அப்பப்ப திருடித் தின்றதை விட... ஒட்டுமொத்தமாய் தின்று தீர்க்க தீனியாக்கிட கூட்டுச் சேர்ந்து கும்மாளம் அடிக்க ஓநாய்கள்.. சிங்கத்தின் குகையதில் கழுகுகளின் காலடியில் தவம் கிடந்தன. கால நேரம் வாய்ப்பாகிப் போக சிங்கம் ஒன்றின் பேரினக் கோரப் பசிக்கு மந்தைகள் இரையாகின. சுற்றித் திரிந்த காகம்..கழுகுகள் மிச்சம் தூக்க.. ஓநாய்கள் எலும்பி பொறுக்கி …

  24. சுதந்திரத்தைத் தேடி….ஓடி….டயானா!........ மனிதநேயங்கள் உன்னுள் நிறைய இருந்தன -உன் மலர்ச்சிரிப்பினால் அவை உலகை மயக்கின!..... பிரபலங்களோ என்றும் உன்னை பின்தொடர்ந்தன உன்பிரிவினிற்கும் ஏனோ அவை துணையாய்ப் போயின!...... தாய்மை கொண்ட பெண்மையாலே பலர் பெருமை கொண்டனர் தாரமாகி உலகை நீயும் உன்பால் கொண்டனை! கோடி கொடுக்கும் அரண்மனையில் கூடி வாழந்;தனை-இரு குழந்தைகளைப் பெற்றுநீயும் அந்த தாய்மை கண்டனை! ஆண்இனத்தின் உரிமைகளோ ஆதிகமானவை-அதிலும் அரண்மனையில் வாழ்ந்துவிட்டால் அவை புனிதமானவை! பெண்மையிலும் உணர்வுகள் தான் பள்ளிகொள்வதால்-அதைப் புரிந்துகொண:டு பின்நாள் நீயும் வுpலகி வாழ்ந்தனை! பெற்றுவிட்ட…

  25. நீ செத்துவிட்டதாய் அறிந்தபோது நம் தோழிகளில் ஆயிரக்கணக்கான ஒருத்தி இறந்துவிட்டாள் என்றிருந்தது நீ படுகொலை செய்யப்பட்டாய் என்றறிந்தபோது படையினரிடம் சரணடைந்தபின் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தோழிகளில் நீயும் ஒருத்தியாகிவிட்டாய் என்று வேதனையாய் இருந்தது. ஆனால் இன்று..... நீயேகூட நினைத்துப் பார்த்திருக்க முடியாத அரசபடையின் கோரமுகத்தை நேரில் கண்டவள் நீயாகி உலக மனச்சாட்சிகளை உலுக்கும் பேரொலியாகிவிட்டாய். உன் வெற்றுடம்பில் சூடுகண்ட பிசாசுகளையும் அதன் பின்னணியில் இருக்கும் மனிதமுகம் போர்த்திய அரக்கர்களின் முகமூடிகளையும் கிழித்தெறியும் சக்தி உன் அம்மணத்திற்கும் இருக்கிறது. கதிர்காம அழகி மன்னம்பெரியை அவமானப்படுத்துவதாய் எண்ணிய சிங்களவர்கள் தம்மீது அழிக்க ம…

    • 2 replies
    • 717 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.