கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
எத்தைகைய ஒழுங்குமற்ற எனது சொற்றொடர்களை நீங்கள் கவிதை எனக் கொள்க. பின் நவீனத்துவம் எனக் கொண்டாலும் நலமே..!! சாமத்தில் வீடுசேர்ந்து வைகறையில் தலைசாய்ந்து நண்பகலில் கண்விழித்து - தாமதமுணர்ந்து தவித்து அரக்கபரக்க அங்கம் கழுவி மடித்துவைத்த உடுப்பணிந்து அழுக்கேறிய இருசக்கரத்திலமர்ந்து சாலையோர பெட்டிக்கடை தேடி சிகரெட்டுடையும் சிறுசமோசாவையும் சிற்றுண்டியாக்கி சிக்னலில் சிக்ககூடாதென சிரம்தாழ்த்தி சிவன் தொழுது அண்ணாசாலை நோக்கி வாகனம் பாய வழியில் குறுக்கிடும் வழிப்போக்கர்களை வைது வெம்மையால் வியர்வை வழிய - ஓடோடி அலுவலகத்தின் வாசல் கதவை திறக்க சில்லெனப் பாயும் குளிர்காற்று !!
-
- 6 replies
- 735 views
-
-
சிந்திப்பாயா மனிதா எம்வாழ்கைதான் எத்தனை அழகு ஏன் எம்மை நாமே ரசிப்பதில்லை எதைத்தொலைத்து எதை தேடுகின்றோம் புரியாமல் போகும் வாழ்கைதனை சிந்தித்தால் என்ன இயற்கைதனை ரசிக்கும் எம்மால் மனிதனை ஏன் ரசிக்க முடியவில்லை அன்பு பாசம் காதல் சுயநலமாய் மாறியதோ ஆணும்பென்னும் சேர்த்தால்தானே வாழ்கை _இதனை புரிந்தும் சண்டைபோடுகின்றோம் இங்கே உணர்வுகள் மதிக்கப்பட்டால் பிரிவுக்கு என்னவேலை இதனை சிந்தித்தால் என்ன என்னவேடிக்கை பட்டி மன்றங்கள் போட்டு எம்உணர்வுகளை எமக்கே புரியவைக்கும் முயற்சி அதையும் நாமே செய்கின்றோம் வேதணையாக இல்லை…
-
- 5 replies
- 1.4k views
-
-
தூக்கமில்லாத இரவுகளோடு போராடித் தோற்றுப்போனபோதும் கனவுகளுக்கு ஏங்கிய இரவுகள் அதிகம்! நினைவுகளும் ஞாபகங்களும் ஒவ்வொரு இரவிலும் என்னைக் கொன்று போட்டாலும், உன் நினைப்புடன்தான் உயிர்க்கின்றேன் ... அதிகாலைகளில்...! இப்பொழுதெல்லாம்... அதிவிரைவுச் சாலைகள் எனக்கு , பழக்கப்பட்ட ஒழுங்கைகள் போல இருக்கிறது ! வேகங்கள் என்னைப் பயமுறுத்துவதில்லை! சதா ரணமுமாய் சாவதைவிட செத்துப்போனால் பரவாயில்லை என்று தோன்றும்போது, சில அசாதாரணங்கள் கூட.... சாதாரணமாய் மாறிவிடுகின்றனவோ ? நான்.... செத்துத் தொலைந்தால் நன்றாய் இருக்கும்!
-
- 2 replies
- 820 views
-
-
-
இலக்கிய உலகில் நாயை அடிப்படையாக வைத்து பலர் கவிதை எழுதியிருக்கிறார்கள். இந்த நாய்க் கவிதைகள் பல சர்ச்சைகளுக்கும் ஆளாகி இருக்கின்றன. ஞானக் கூத்தன் எழுதிய ஒரு நாய்க் கவிதை அடிதடிவரை கொண்டு போய் விட்டது. ஈழத்தில் என்னுடைய ஊரில் இருந்த ஒரு நாய் பற்றி நானும் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். படித்துவிட்டு கருத்துச் சொல்லுங்கள் நாய்க் கவிதை அது ஒரு அழகிய கிராமம் அங்கே மனிதர்களோடு ஒரு நாயும் இருந்தது நன்றியுள்ளவை என்ற அடைமொழிக்குள் தன்னையும் அடைத்துக்கொண்ட அந்த நாய் ஒரு விசர் நாய் என்பது பின்புதான் புரிந்தது அந்த நாய் வருவோரையும் கடித்தது போவோரையும் கடித்தது - உணவு தருவோரையும் கடித்தது ஊர்மக்கள் பொறுப்பானவர்களிடம் முறையிட்டார்கள் பொறுப…
-
- 40 replies
- 17k views
-
-
வீரவணக்கம் மெளனங்களாய் உங்கள் நினைவேந்திக் கரைகிறது இந்நாள்….. முப்பதாண்டுத் தவம் முள்ளிவாய்க்காலில் கலை(ரை)க்கப்பட்டு மூச்சறுந்த நிலையில் எல்லாம் உறைந்து போய்க் கிடக்கிறது…… வாழ்ந்த நாளின் பாகங்களையெல்லாம் வரலாறாய் பதித்துவிட்டு வழிசொல்லாத் தொலைவாய்ப் போனவரே வரலாறு உங்களை விடுவிக்கும் நாள்வரையில் இந்த மெளனங்களும் ஊகங்களும் வாழ்ந்து கொண்டேயிருக்கப் போகிறது….. உங்கள் பெயர் சொல்லி வாழும் நரிகள் காட்டில் இப்போ நல்ல மழை பெய்கிறது….. நீங்கள் ஊட்டி வளர்த்த உயிர்கள் வாழ்வை உறிஞ்சிக் குடிக்கிறது இந்தக் கூட்டம்….. உங்கள் சொல்லுக்கு உங்கள் அன்புக்கு உங்கள் நம்பிக்கைக்கு உங்கள் கனவுக்கு உயிர் கொடுக்கப் போனவர்கள் …
-
- 3 replies
- 1.1k views
-
-
நாவீரமாய், விலக்கவோ இழக்கவோ முடியவில்லை நினைவுகளை ............. கள்,கள்ளகசிப்பு ௬ட தந்ததில்லை வெடித்தெழும் போதை _உன் விழி மடிக்கையில் விழுதுப்பாலாய் ஒட்டிவிட்டது வெண்சிரிப்பு _இனி அழுது முடியுமோவென் பிழைப்பு . பாடை மேளம் எல்லாம் தயாராக, ஊர்வலம் பிந்துகிறது . அட நான் இன்னும் சாகவில்லையே ............! வத்தாக்கிணற்றடியில் முத்தாதகொவ்வை பளபளப்பு , பாவற்காய் மினுமினுப்பு , என்னவோ செய்யுது , சரம் தூக்கி நடப்பது , றோட்டில் நாயை துரத்தி ஓடி மகிழ்வது _என் மட்டுமிருந்த எனை தாடி சொறிந்து வானம் பார்க்க வைத்த கொடுமை ....... காத்தடிக்க நீவர சைக்கிள் கடையிலிருந்த எனக்கல்லவா வேர்த்தது ? எப்பவோ …
-
- 10 replies
- 1.6k views
-
-
தாயாகி.... தந்தையாகி...! இந்த ரோஜாப்பூ மலர்ந்ததைக்கண்டு சிரித்த முதல் தோட்டக்காரன் நீ! பெண்ணாய் நானும் பிறந்திடவே முகம் சுழித்த பேதையர்க்கு மத்தியிலே பூரிப்புடன் எனைத் தூக்கி முதன்முதலில் கொஞ்சியதும் நீதான்! அம்மாவின் அங்கலாய்ப்பும் இதுவேதான்...! பல்லு முளைத்து சிரிக்கையிலே தலையில் பயறு கொட்டி வாழ்த்தியதும் நீயே தான்! தத்தித் தாவி உருண்டு விழுந்து நடக்க முயலுகையில்... முன்னாடி வந்து நின்று என் விரல் பிடித்து நடை பழக்கியதும்நீ தான்! உன் தோளே என் அரியணையாய்..... எனை அதில் சுமந்துகொண்டு உலகை சுற்றிக் காட்டியதும் நீ... பயத்தோடு என் விரல்கள் உன் தலை மு…
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழ் பெண் கவிஞர்கள் – ஆங்கிலத்தில் – ஆதி மந்தியார் முதல் உமா மஹேஸ்வரி வரை - வெங்கட் சாமிநாதன் சில ஆச்சரியகரமான நிகழ்வுகள் இன்றைய தமிழ்ச் சூழலில் கூட நிகழ்ந்துவிடுகின்றனதான். இவையெல்லாம் நாமறிந்த தர்க்கத்தின் வட்டத்திற்குள் அகப்பட்டு விடுவதில்லை சங்க காலத்திலிருந்து இன்றைய உமா மகேஸ்வரி வரை,, ஒரு வேளை இவர்களில் மிக இளம் வயதினராக லீனா மணிமேகலையோ அல்லது அ.வெண்ணிலாவோ இருக்கக் கூடும். ஆக கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருட நீட்சியில் தமிழ் கவிதைக்கு பெண் கவிஞர்களின் பங்களிப்பை நம் முன் வைத்துள்ளார் கே.எஸ் சுப்ரமணியன். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். பத்து வருடங்களுக்கு முன் நான் சென்னை வந்ததும் எனக்கு அறி…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஏன்... சிந்திக்கிறாய் ..? பூ தருவதா ....? பூ வளையம் தருவதா ...? என்றா .....? @@ கொத்து கொத்தாக ..... இருந்த காதல் ஏன் ..... தனி இதழாக..... வந்துவிட்டது ...??? @@ காதல் பூ போன்றது .... தூரம் நின்று பார்த்தல் ... அழகு .... தொட்டு பார்த்தால் .... ஆபத்து ....!!! @@ & .............காதல் பூ போன்றது ....... ...............கவி நாட்டியரசர்................... ..........கவிப்புயல் இனியவன் ............ ................யாழ்ப்பாணம் ....................
-
- 2 replies
- 1.3k views
-
-
"நான் உன்னைக் காதலிக்கிறேன்" உன் வார்த்தைகள்.. என்னை உன் செல்லப் பிராணியாக்க.. நீ அழைத்த போதெல்லாம் அலுக்காமல் ஓடி வந்தேன்.. உன் காலடித் தடம் பார்த்தே பாதைகள் நடந்து வந்தேன்..! அப்பப்ப ஏதேதோ கோலம் கொண்டு.. நீ வார்த்தைகளால் எட்டி உதைகையில் உள்ளூர நொந்தாலும் வெளியூரா உன் காலடி சுற்றினேன்.. உன் பாதங்களே சரணெனக் கிடந்தேன்..! நான் வாங்கி வர நீ உண்ண.. வாய் பார்த்து எச்சில் வடித்தேன்.. அதில் அன்பின் உச்சம் நான் கண்டேன்..! இறுதியில்.. உன் கார் கதவடியில் தாவி ஏற நான் முயல்கையில் நீயோ.. அட நாயே Get out என்றாய்..! உன் காதல் காலநிலை போல என்றே அறியாமல்.... அது போட்ட அன்புப் பிச்சையில் உயிர் வாழ்ந்த …
-
- 23 replies
- 7.7k views
-
-
சிட்டு 15ம் வருட நினைவுகளோடு ‘சிட்டு’ சிரிப்பு நிறைந்த மகிழ்ச்சியின் உறைவிடம் நீ. நீயழைந்த காற்றும் நீ நடந்த நிலமும் நினது நினைவுகள் நிறைந்து மௌனித்துக் கிடக்கிறது. கனவுகளோடும் கலையாத நினைவுகளோடும் நீ நிறைந்த இசையும் பாடல்களும் உயிர்ப்பின் இருப்பாய் ஈரமாய்…… இசை நிறையும் திசையெல்லாம் உன்னை ஏந்தியிருக்கிறது ஒலிக்கதிர்கள்….. தீயின் சுவடுகள் மீதேறிய உனது கால்களும் மூச்சும் 01.08.1997அன்று ஓய்வெடுத்து உறங்கிய நாள் கடந்து இன்றுன் நினைவுகள் 15ம் ஆண்டைத் தொட்டு நிற்கிறது. ஆற்ற முடியாச் சோகத்தை இந்த நூற்றாண்டு தந்துவிட்டுச் சலனமின்றி நகர்கிற இந்நாட்கள் பற்றிச் சொல்வதானால்…….???? நீயுறங்கிய நிலம் மீது பேயுலவித் திரிகிறது….. அம…
-
- 1 reply
- 558 views
-
-
" உனக்கென இருப்பேன்" என்னை விட்டுச்செல்லாதே எந்தன் பூமி சுற்றாதே உன்னை நீங்கிப்போனாலே உயிரும் என்னில் தங்காதே! காணும் காட்சி உன்னோடு! கவிதைச்சொல்லும் உன்னோடு! வாழும் காலம் எல்லாமே அன்பே நானுன் நெஞ்சோடு! இருளைக்கிழித்த சூரியனாய் எனக்குள் வந்து கதிர் விரித்தாய்! எழும்பி நடக்க நீதானே அன்பே உந்தன் விரல் தந்தாய்! எனக்கே எனக்கென புது உலகம் உன்னால்தானே உண்டாச்சு?! உன்னைச் சேர்ந்த பின்னால்தான் வாழ்வே அர்த்தம் என்றாச்சு?! காதல் என்றெ சொல்லுக்கே உந்தன் பெயரே பொருளாச்சு! இருக்கும் காலம் வரையிலுமே உனக்கே எந்தன் உயிர்மூச்சு! உயிரில் வந்து கலந்தவனே என் உணர்வாய் என்றும் நிறைந்தவனே! இமைபோல் காக்கும் க…
-
- 1 reply
- 813 views
-
-
காத்திருக்க வேண்டாமே ! --------------------------------- துவளாத தமிழினமாய் துடிப்புடனே நீ நடந்து உலகத்தை நீ வென்று உயர்வடைய எழுச்சி கொள்வாய் ! புலம்பெயர் தேசமெங்கும் பதியமாய் நீ இருந்தே உதயத்தைக் காண்பதற்கு உறுதியுடன் நீ எழுவாய் கடுகதியாய் ஓடுகின்ற காலமொன்று விரைவாகும் களம் மாறும் வேளை வரை காத்திருக்க வேண்டாமே ! இவ்வண்ணம் நொச்சியான்
-
- 0 replies
- 860 views
-
-
கலைஞனுக்கு ஒரு மடல்.. அயல் நாடாம் தாய்த்தமிழ் திரு நாட்டின் மூத்த கலைஞனே.... வயதில் மூத்தோனே....'' தமிழ் நாட்டின் தறுதலையே..'' இத்தாலிக்காரியின் செருப்பே...'' தாய் நாடு - உன் தமிழ் நாடு கூட உன் மறைவிற்காய் கண்ணீர் வடிக்காது......'' கடல் நீரில் கூட - உன் சாம்பல் கரையாது...'' உன் இறப்பின் அன்று..... கண்ணீர் என்ற ஒன்று இருந்ததாய்... எவருக்கும் ஞாபகம் இருக்காது...'' அமைதிப்படை அன்றும்.... முகநூலில் இருந்து
-
- 2 replies
- 791 views
-
-
புற்றில் நுழையும் பாம்புபோல மென்மையாக இறங்குகிறாய் இரைதேடியோ அன்றில் உறைவிடம் நாடியோ ? இழக்காத அந்தரங்கவேர்கள் மீதும் சொல்லெறிகிறாய் இடம்மாற்றவோ அன்றில் பிரட்டிப்போடவோ ? மௌனங்களை வென்றுபோக சலனமில்லாத விழிச்சுழற்சியை அனுப்புகிறாய்... என்னை கொள்ளவா கொல்லவா? எதுவென்றாலும் செய்துவிட்டுப்போ.. அதற்குமுன் வா .. இந்த குளிரைப்போக்க ஒரு தேநீர் அருந்தலாம்.. பின்பொரு முத்தத்தை பகிரலாம்.
-
- 10 replies
- 1.1k views
-
-
தலைநிமிர்வோம்! --------------------------- மனிதம் தொலைந்த முதற்பொழுதொன்றிலே சிங்களக் காடைகள் காவலரானதால் தமிழர் உடல்கள் தெருவில் சாய்ந்தன ! பெண்ணோ குழந்தையோ தமிழராய் இருந்தால் புத்தரின் புத்திரர்க்குக் கொல்வதே வேதம்! நான்கு தசாப்தங்கள் நடந்து முடிந்து இன்றும் தொடரும் இனப்படுகொலை ஓயவில்லையே! ஓயவேண்டுமெனில் தமிழீழம் அமைவதே சாலச் சிறந்தது! தமிழாராச்சியே சிங்களத்துக்குச் சினமென்றால் நாடமைப்பதை சிரித்து ஏற்குமா! வீழ்ந்தவர் மீதிலே உறுதியெடுப்போம் தாயகம் மீட்டுத் தலை நிமிர்வோமென! தலைகள் நிமிரக் கரங்களை இணைப்போம்!
-
- 1 reply
- 629 views
-
-
அம்மா,, நான் உன் கருவறையில் உதைத்தது உன்னை நோகடிக்க அல்ல,, என்னை சுமக்கும் அன்பானவள் உன்னைக்கானவே.. பிஞ்சு வயதில் நான் கெஞ்சலாக அழுதது பசியினால் அல்ல,, பால் குடிக்கும் சாட்டில் உன் இதயத்தை முத்தமிட.. பள்ளிக்கு செல்லும் போதும் அழுதேன் அம்மா படிக்கும் கள்ளத்தால் அல்ல சில மணிநேரம் உன்னை பிரிகிரேனே என்ற துடிப்பால்.. திருமணத்தில் நான் அழுதேன் காதலில் தோற்றுப்போய் அல்ல,, கல்யாணம் உன்னிடத்தில் இருந்து என்னை பிரிக்குமோ என்ற பயத்தால்.. வெளிநாடு போகும்போதும் அம்மா நான் அழுதேன் உன்னை பிரிவதால் அல்ல பசியால் நான் அழுதபோது நீ பசிகிடந்து உன் கண்ணீர் மறைத்து என்னை காத்த தெய்வமே உன்னை நான் காக்கும் காலம் இதுவென்ற…
-
- 0 replies
- 805 views
-
-
அன்றொருநாள் அழுது கொண்டிருந்தேன்..... அம்மா மடியில்-முகம் புதைத்து விக்கி.....விக்கி......... அழுது கொண்டிருந்தேன்....... ஏன் அழுதேன்...? தெரியவில்லை-ஆனால் அழுது கொண்டிருந்தேன்....... தாயோ தலை வருடி தாலாட்டு பாடினாள்.... ''ஆராரோ...ஆரிவரோ.......'' அறியவில்லை.... அப்போதோ-அறியும் பருவம் இல்லை.... அழுது கொண்டேன் ''ஆராரோ....ஆரிவரோ.....'' புரிய வில்லை.. பருவம் வந்த பின்பும்... இன்றும் அழுகின்றேன் எதற்காக அழுகின்றேன்...? எனக்குப் புரியவில்லை ஆனால்-அழுகின்றேன்...... பாடம்மா- ஓர் தாலாட்டு இன்றவளைக் கேட்டுவிட்டால்... தாயவளும் அழுதிடுவாள்... அப்போ... யாரிடம் கேட்பேன் எனக்கோர் தாலாட்டு....?? ஏன்....? …
-
- 27 replies
- 3.7k views
-
-
சங்கமம் ஒற்றுமை உயர்வில் சங்கமம், ஆத்திரம் அழிவில் சங்கமம், நதி கடலில் சங்கமம், கதிரவன் மேற்கில் சங்கமம், கற்பனை கவிதையில் சங்கமம், பிரிவு சோகத்தில் சங்கமம், ஐயம் தோல்வியில் சங்கமம், வசந்தம் இளமையில் சங்கமம், காதல் இதயத்தில் சங்கமம், மனிதநேயம் பண்பில் சங்கமம், நல்மணம் அன்பினில் சங்கமம், பிறப்பு இறப்பில் சங்கமம், படிப்பினை மனதில் சங்கமம், ஊக்கம் உற்சாகத்தில் சங்கமம், உழைப்பு உயர்வில் சங்கமம், முயற்சி வெற்றியில் சங்கமம்.
-
- 2 replies
- 1.1k views
-
-
கேட்டேன் தந்தான்... கேட்டேன் அன்பை தந்தான் மறுக்காமல் என்னிடம் கேட்டான் பல கேள்விகள் குடுத்தேன் அனைத்திற்கும் அவன் எதிர்பார்த்த மாதிரியே பதில்கள் இருந்தான் உறவாய் நீண்ட உறவானது எமது உறவு...இன்று முடிக்க நினைக்கிறான் இதற்கும் பதில் என்ன தெரியுமா என்னிடம் ஆமாம் முடித்துவிடு உன் ஆசைக்கு நான் தடை நிற்பதில்லை... தொடங்கியவனும் நீ முடிக்க நினைப்பதும் நீ ஆனால் தொடங்கியதை முடிப்பதற்கு நான் தயார் இல்லை...உன் ஆசைக்கு நான் என்றும் மறுப்பு தெரிவிக்க போவதுமில்லை நீ முடிந்ததாய் நினை நான் நினைவுகளுடன் இருப்பேன் அது போதும்
-
- 13 replies
- 1.7k views
-
-
என்ன பார்க்கிறீர்கள்? மஞ்சள் குளித்து மரமொன்று நின்றது பச்சைப்பசேலென பார்ப்பதற்கு குளிர்ச்சியாய் நிழல் தந்து நின்றது இப்படி மாறிவிட்டதே! பார்த்து நின்றேன். என்ன விகைப்பாய்ப் பார்க்கிறீர்கள்? நாங்கள் பருவ காலத்துக்கேற்ப கோலத்தை மாற்றி வாழுகிறோம். உங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களோ நேரத்துக்கு நேரம் பணத்துக்காகவும் பதவிக்காகவும் குணமும் மாறுகிறார்கள் கொள்கையும் மாறுகிறார்கள் அவர்களைப் பார்க்காமல் என்னை ஏன் பார்க்கிறீர்கள்? வாயடைத்து தலைகுனிந்து வந்தேன். செண்பகன் 18.10.14
-
- 1 reply
- 956 views
-
-
எத்தனை எத்தனையோ பிறந்தநாள் பாடல்கள் வந்திருக்கு... சரி நம்ம பாட்டையும் கொஞ்சம் கேட்டுப் பாருங்கள். பிடித்திருந்தால் உங்கள் பிள்ளைகளின் பிறந்தநாள் விழவாவிலும் போட்டு எங்கள் செல்ல மழலைகளை ஆடவிடுங்கள். http://vaseeharan.blogspot.com/ பல்லவி பிறந்த நாளைக் கொண்டாடும் பிஞ்சு மழலைகளே இந்த வீட்டின் சந்தோஷத்தை கொண்டு வந்தவர்களே அம்மாவின் அன்புபிள்ளை அப்பாவின் நல்ல பிள்ளை ஆண்டவனின் செல்லப் பிள்ளையாய் நல்ல நல்ல பாட்டைக் கேட்டு தன்னாலே ஆட்டம் போடுங்க நல்லாய் படிச்சு பட்டம் முடிச்சு உலகை நீங்கள் வெல்லுங்க சரணம்-1 தரணியெங்கும் சென்று நீயும் தமிழைப் பரப்பிட வேண்டும் நெஞ்சை நிமிர்த்தி நின்று நீயும் தமிழில் கதைத்திட வேண்டும் உன்தன் மூ…
-
- 7 replies
- 1.7k views
-
-
"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்" "இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனு போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவேற்றேன்" "இசை போன்ற அழகிய பேச்சில் இடைவெளி விட்டு தள்ளி அமர்ந்து இறைவி நேரே வந்தது போல இதயம் மகிழ பாடம் தொடங்கினாள்" "இலக்கியம் கொஞ்சம் எடுத்துக் காட்டி இரு வரி திருக்குறள் கூறிக்காட்டி இயல் இசை நாடகம் சொல்லிக்காட்டி இயற்றமிழ் தொல் காப்பியம் இயம்பினாள்" "இரட்டைக் கிளவி பயிற்சி தந்து இலக்கணம் ஐந்துக்கும் விளக்கம் கூறி இடைச்சொல் கூறி கயல் விழியாள் இடை வளைவு குலுங்க புன்னகைத்தாள்" "இலக்கியம் சொல்லா குறுநகை அழகில் இதயம் பறிகொடுத்து கிட்ட நெருங்க இளமையும…
-
- 0 replies
- 128 views
-
-
மெல்லென மாருதம் சில்லென வீச மெல்லிடை மேனியாள் கருவறை கூச வல்வையில் காந்தள் மலர்களும் விரிய வில்லென வீரத் திருமகன் உதித்தனன் நடந்த தின் நிகழ்வு ஐம்பத்தி நான்கினில் எழுநதது வீரமாய் எழுபத்தி ஐந்தினில் மலர்ந்தது புலிகளாய் எழுபத்தி யாறினில் பிளந்தது கண்ணியாய் எண்பத்தி மூன்றினில் மெல்லிய மாருதம் சூ றா வளி யாகிட வல்வைத் திருமகன் வனத்திடை புகுந்திட சொல்லிடக் காரணம் வையகம் மறுத்திட எல்லைகள் தாண்டின மெல்லிளங் குஞ்சுகள் அயலவன் நாட்டினில் பாசறை அமைத்தனர் சயனமும் துறந் தவர் சன்னத்தம் பயின்றனர் உயரிய நோக்குடன் இணைந்தனர் தோழர்கள் பயமறியா தமிழ் புலிப்படை அமைத்தனர் மதிமுக நங்கை பாசறை புகுந்தனள் மதியுரைத்தவரின் சொற்படி நடந்தனள் கதிர்க் கரன் க…
-
- 5 replies
- 1.5k views
-