கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
தமிழினமே தமிழினமே எங்கே போகின்றாய் அகதியாக வந்து நீயும் உன் மானதை விடுகின்றாய் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்றால் என்ன என்கின்றாய் தமிழ் மொழியை நீயும் ஏளனம் செய்கின்றாய் காதலனை நாளுக்கு நாள் மாத்துகின்றாய் கற்பு என்றால் என்ன என்று கேட்கின்றாய் ஊரை உறவை விட்டு வந்தும் உணராமல் இருக்கின்றாய் பண்பாடு மறந்து நீயும் உன் அடையாளம் மறக்கின்றாய் வெளி நாடு தான்உன் அப்பன் நாடு என்கின்றாய் நாசி அடித்தால் நீ எங்கே போகப் போகின்றாய்???
-
- 1 reply
- 897 views
-
-
வளர்ந்து விட்ட தென்னை வாடியது-தன் உடலைப்பார்த்து! தான் இழந்துவிட்ட ஓலைகள் எத்தனை... எண்ணிப் பார்த்தது வடுக்களை... கீழே வீழ்ந்து விட்ட ஓலையொன்று ஆறுதல் சொன்னது! வந்து போகும் சொந்தம் யாவும் நிலைப்பதில்லை எனது வீழ்ச்சியிலும் உனக்கு வளர்ச்சியுண்டு! இழப்பின் வடுவை-நீ பாராதே.... தவித்திருக்கும்-மானிடர்கு இளனீர் கொடு...! உன் பிறப்பின் நோக்கை அறிந்துவிடு... அதனால் வடுவை பாராதே வானை நோக்கி-இன்னும் வளர்ந்து விடு..!
-
- 22 replies
- 3.4k views
-
-
காதல் சொல்ல முன்.... கனவுக்கும்....நிஜத்திற்கும்...... கடிவாளம் நானிட்டேன். புூவுக்கும்... காற்றுக்கும்..... வேலி நான் போட்டேன். முகிலையும்... பனியையும்... சிறையிலேதானிட்டேன். முட்டாள்..நான்... வாய் விட்ட ஒரு சொல்லலே... கண்ணே உன் நட்பையும் இழந்துவிட்டேன்.
-
- 8 replies
- 1.7k views
-
-
"சோ"வென்ற மழையில் கூந்தலிலிருந்து நீர் சொட்டச் சொட்ட.... அந்த நிலாவை என் வீட்டுத்தாழ்வாரத்தில் பார்த்தேன்... முதன்முதலில் பார்த்தேன்... அவளோடு அவளின் குட்டி;த்தங்கை...சுட்டித்தங்க
-
- 28 replies
- 3.8k views
-
-
பத்து மாதம் சுமந்தவளே எனை பாலூட்டி வளர்த்தவளே கண்ணின் இமையாய் காத்தவளே கற்றவனாக்க பெரிதும் முயன்றவளே நோயின்றி வளர்ப்பதற்காய் நோயாளி ஆனவளே அம்மா ஆனாலும் உனை வெறுக்கின்றேன். பாசத்தையும் நேசத்தையும் ஊட்டியவளே தவறுசெய்துவிட்டாய் என்னம்மா வீரம்மில்லாத கோழையாய் நான் நண்பர்கள் மாவீரர்களாய் போராளிகளாய். நான் மட்டும் முகமிழந்து அந்நிய நாட்டில் ஆனாலும் சற்று ஆறுதல் அதற்காக போற்றுகின்றேன். தாய்பாலுடன் துரோகத்தையும் ஊட்டவில்லை. என் கருத்துக்களாவது விடுதலைக்காய் தாயே அதற்காக போற்றுகின்றேன் நன்றியம்மா
-
- 9 replies
- 1.8k views
-
-
என் பிள்ளையை காணலயே..... என் பிள்ளையை காணலயே எவனோ வந்து பிடிச்சானே யாருண்ணு தெரியலயே- அவன் யாருண்ணு சொல்லலையே.... கூட போனவங்க கூடி நின்றவங்க கூட்டத்தோடு காணலயே.... விளையாட போறெண்ணு வீதிக்கு போன புள்ள காணமால் வருவாண்ணு கனவா நான் கண்டேன்.... என்ன ஏதெண்ணு எனக்கேதும் தெரியலயே என் மனசு ஏக்கங்கள் இன்னும் குறையலயே.... ஏன் வந்து பிடிச்சானோ...?? என்ன செய்தானோ...?? எதுவும் அறியாத என் பிள்ளையை பிடிச்சானே.... கண்ணு போலவனை காத்து வந்தேனே கண்ணுhறு... பட்டதுவோ கடத்தி போனாங்களே... வெள்ளை வானென்று வெளியில சொன்னாங்க வேண்டாம் விளையாட்டென்று வேண்டி சொன்னேனே.... எதுவும் இல்லைண்ணு எழுந்தோடி போனானே வர…
-
- 1 reply
- 848 views
-
-
கட்டு இளகி மொட்டவிழ்ந்த புன்னகைப் பூ இதுவோ சிட்டு அவள் இதழ் கவிழ்ந்த-தேன் கிண்ணம்தான் இதுவோ முத்தாக மின்னுகின்ற-பல் மாதுளைதான் அதுவோ கண்களின் கருமையது கருவண்டுதான்அதுவோ தென்றலிலே தவள்ந்துவரும் தெம்மாங்குதான் அவளோ சத்தமிட்டு எனை முத்தமிட்ட-தமிழ்க் கவிதான் அவளோ
-
- 3 replies
- 944 views
-
-
http://vaseeharan.blogspot.com/2007/08/blog-post.html பல்லவி கண்ணீரில் குளிக்கின்ற தேசம்-கடல் தண்ணீரில் மிதந்தது சோகம் அலை கொண்டு வந்த கடல்-மனித தலை கொண்டு போனதே இனம் மதம் மொழி கடந்து-எங்கள் தேசம் சுமந்திடும் சோகமடா! குழு: தேசம் தேசம் எங்கும் சோகம் சோகம் சரணம் 1 போரின் நாக்குகள் தீண்டிய தேசத்தை சுனாமி அலைகள் கிழித்ததே வாழ்வின் ஆசைகள் துளிர்த்திட்ட மக்களை வாழ்வளித்த கடலே அழித்ததே ஆர்ப்பரித்த கடலே ஆள் பறித்தாயே கரையில் நின்று எம்மையே கலங்க வைத்தாயே(2) விழியில் தீமூட்டி அழுகின்றோம் அழுகின்றோம் பிணவாடைக் கடலே கேட்கிறதா...? ஓலம் கேட்கிறதா...? சரணம் 2 அன்னையர் ஆடவர் பால் மணப் பிஞ்சுகளே சீறிவந்த பேரலையே கொண்டு சென்றா…
-
- 7 replies
- 1.5k views
-
-
சிரிப்பு வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம் அது திறந்து கொள்கிறது வாழ்வின்மீது இயற்கை தெளித்த வாசனைத் தைலம் சிரிப்பு எந்த உதடும் பேசத் தெரிந்த சர்வதேச மொழி சிரிப்பு உதடுகளின் தொழில்கள் ஆறு சிரித்தல் முத்தமிடல் உண்ணால் உறிஞ்சல் உச்சரித்தல் இசைத்தல் சிரிக்காத உதட்டுக்குப் பிற்சொன்ன ஐந்தும் இருந்தென்ன? தொலைந்தென்ன? தருவோன் பெறுவோன் இருவர்க்கும் இழப்பில்லாத அதிசய தானம்தானே சிரிப்பு சிரிக்கத் திறக்கும் உதடுகள் வழியே துன்பம் வெளியேறிவிடுகிறது ஒவ்வொருமுறை சிரிக்கும்போதும் இருதயம் ஒட்டடையடிக்கப்படுகிறது சிரித்துச் சிந்தும் கண்ணீரில் உப்புச் சுவை தெரிவ…
-
- 0 replies
- 523 views
-
-
வெறிச்சோடிப்போன வீடுகளும் வீதிகளும்.... பசித்து பின் நொந்துபோன அனாதை நாய்களின் ஈனக் குரைப்புகளுடன் அடங்கிப்போயின! கோயில் திருவிழாக்கள் காணாத மக்கள் கூட்டத்தினை - அகதி மக்கள் நிரப்பி வழிக்க... செஞ்சிலுவை சுமந்த சாலைகளும் அப்படியே! வான் பறவைகளின் இரைச்சல்களில்.. அதைவிடச் சத்தமாய்... ஓலமிட்டது நாங்கள்தான்! இரண்டுமாடி கட்டிடத்தின் "உயரிய பாதுகாப்பில்" நாமிருந்தபோதும், பயத்தினில் பரித்தவித்து உயிரை... கையில்தான் வைத்திருந்தோம்! வெஞ்சினமோடு வந்த பகையை வெறியேற்ற எண்ணாத வரிப்புலிகள் , பக்குவமாய்ப் பதுங்கிப் போன பின்னும், வெறியாட்டம் ஆடிக்கொண்டே... உள்நுழைந்த "விஜயன்கள்" துணைநின்ற பறவைகளின் குறியிலிருந்து, இந்த ஐந்து வயது கவிக்குஞ்சு ஐந்தடி தூரத்தில்…
-
- 13 replies
- 1.8k views
-
-
தமிழினமே.. தமிழினமே.. என் தமிழினமே.. விண்ணை விரல்நுனியில் சுமக்கவும் உயரே பறந்து வான்முட்டி நிற்கவும் என்றோக் கற்ற தமிழினமே... காலத்தை காற்றுப் போல கடந்துவந்துள்ளாய், உலகின் நாகரிகத்தில் உயிரெனக் கலந்துள்ளாய், ஊரின் பேரின் வாழ்தலின் இடுக்களில் மொழியாய் நிறைந்திருக்கிறாய் தமிழினமே... தமிழினமே... தமிழினமே... என் தமிழினமே... எங்கிருக்கிறாய் இன்று தமிழினமே.. யாருக்கு கீழ்நின்று உன் மூச்சை விடுகிறாய் யாரை நம்பிக் கொண்டு இன்னும் உனை யிழக்கிறாய்.. கடல் தின்றதில் கலங்காத நீ காற்றுப் புயலென வீசியதில் கலையாத நீ பூமி இரண்டெனப் பிளந்தபோதும் உள்ளடங்கிவிடாத நீ இப்போது எங்…
-
- 0 replies
- 589 views
-
-
மாரீசன் என்ற மாயமானில், மதியிழந்த சீதா தேவியின், மயக்கம் போல, இரவு பகலாகத், தினமும் பூக்கின்ற,, இணையத் தளங்களின் பூக்களால், பாலும், நீரும் கலந்த கிண்ணத்திளிருந்து, பாலை மட்டும் பிரித்தெடுக்கும், வல்லமையில்லாத, பாவப் பட்ட அன்னப் பறவையாய், உண்மையும் பொய்யும், ஒன்றுடன் ஒன்று, குலவிக் கலவும் , உலகத்தில், உண்மையைத் தேடுகின்றேன்! பொன்னும், மணியும், புன்னகைகளும் அணிந்து, பொய்மை வலம் வருகின்றது. மண்ணின் மைந்தர்கள், என்ற கவசம் பூட்டித், தென்றல் காற்றின் மென்மையோடு, பொய்மை உலா வருகின்றது. புனிதமேனும் பேழையில். பத்திரமாகப் பூட்டிவைத்துப், பீடத்தில் அமர்த்தித், தூவிய அர்ச்சனைப் பூக்களிலும், துளித் துளியாய்ச் சிந்திய, துவர்ப்பு…
-
- 23 replies
- 3.1k views
-
-
அனைத்திற்கும் இணையானவள் தாய். ..! கோல்களனைத்தும் கொலை வெறியில் பூமியை மோதுவதற்கே சுற்றி வருகின்றன சூரிய குடும்பத்தில் காரணம் தங்களிடத்து அனைத்தும் இருந்தாலும் "தங்குவதற்கு" ஒரு நாதி இல்லையே என்ற பொறமை தான் இப்படி சிறப்புள்ள பூமிக்கு இணையானவள் "தாய்"... விண்வெளியில் விளையாடிகொண்டிருக்கும் தான் பிள்ளைகள் விண்ணிலிருந்து விழும் போது பிரிந்து தான் விழும் இதை எண்ணி விண்னெனும் தாய் கதறி அழும் அந்த கண்ணீர் தான் மண்ணில் மழையை ஒன்று சேர்க்கின்றன …
-
- 8 replies
- 1.4k views
-
-
வானம் உனக்கு வாழ்த்துச் சொல்லும், விடியலும் வரும் காற்றும் உனக்குத் துணை நிற்கும், சுதந்திரம் நிட்சயம் கிடைக்கும். தலைவா! நீ அரசியல் வாழ்வில் நுளையவில்லை, சுயநலவாதிகளிடம் அகப்படவில்லை, நீ தனிப்படை வீரன் தலைவா! உன்னை நம்பினால் வாழ்வு அர்த்தமாகும், உனக்குச் சொந்தங்கள் உண்டு, உலகத் தமிழனம் உன் உறவு முறை, உயிர் கொடுக்கும் தோழர்கள் உன் உடன் பிறப்புக்கள் தலைவா! நீ தமிழ் வீரம் காத்த மாபெரும் தமிழன், உனக்கு யார் ஈடு இணை, நேர் நிகர், காயங்களைக் கண்டு அஞ்சமாட்டாய், மீண்டும் எழுவாய், தமிழீழம் காண்பாய். தலைவா! வெல்வோம் இது உறுதி எமக்கேது தோல்வி. உன்னை வாழ்த்துகிறேன் மீண்டும் எழுவாய் தலைவா! புனைந்தவர் - கு. அன்பரசு – சுபாங் ஜெயா…
-
- 4 replies
- 659 views
- 1 follower
-
-
இதயமாக இருப்பவளே ....... இதயத்துடிப்பு வலிக்கிறதா ...? துடிப்பையே நிறுத்துகிறேன் ....!!! ^ கவிப்புயல் இனியவன் ^ கல்லை செதுக்கினேன் உருவம் கண்ணால் செதுக்கினேன் காதல் இதயம் வலியால் துடிக்கிறது ....!!! ^ கவிப்புயல் இனியவன்
-
- 5 replies
- 871 views
-
-
என் திருமணம் கூடக் காதல் திருமணம் தான். கணவர் காதலராய் இருந்தபோது வெளிநாடு சென்றுவிட்டார். அப்போது நான் கொண்ட தவிப்பை இன்று நினைத்துப் பார்த்தேன். இக்கவிதை வந்தது. காதலர் தினம் எனக்குப் பழசாக இருக்கலாம். கவிதை புதிது. கற்பனையில் எண்ணியவை உன்னிடம் கண்டதனால் காதல் கொண்டேனடா காலமெல்லாம் காத்திருந்து உன்னைக் கண்டேனடா கண்ணிமை மூடினும் என்முன்னே நின்று காதல் செய்கிறாய் காதினிக்க வந்து காதல் மொழி பேசுகிறாய் கயவனே உன்னைக் காணாதிருந்திருந்தால் காலமெல்லாம் நான் கற்பனையில் வாழ்ந்திருப்பேன் கண்டதனால் நிதம் என் உயிர் துடிக்க நினைவு நிதம் வதைக்க நேர காலம் தெரியாது நெகிழ்ந்து போய் கிடக்கிறேன். நெருப்பாய் இருந்தவள் நெக்குருகி நிற்கிறேன் நெஞ்சம்…
-
- 22 replies
- 1.4k views
-
-
அசையாத திலீபன்களும் அன்னை பூபதிகளும் கவிதை - இளங்கவி குட்டித் திலீபன்களாய் எங்கள் குமரர்கள் வீதியிலே கட்டிவத்தி விட்டதையா காளை இரத்தம் அவர் உடம்பினிலே..... அன்னை பூபதியாய் எங்கள் அம்மாக்கள் தெருக்களிலே அகிம்சை போராட்டம் குளிரிலே அமைத்த அந்தக் குடிலினிலே..... கொண்டகொள்கை மாறாது தங்கள் உயிர் பாராது தமிழினத்தின் விடியலுக்காய் தான் எரியும் மெழுகுகளாய் தங்கள் உடலெல்லாம் கசங்க கண்களும் பார்வை மங்க நீர்த்துளிகள் சிலகண்டாலும் நெல்லரிசி காணாமல் தமிழர் விடியலுக்காய் பல உயிர்கள் வேள்விகள் நடத்துகின்றார்...... பரமேஸ்வரன் இன்றும் மரணத்தை பார்த்தவண்ணம் நடக்கின்றான் பாதையது தவறாமல் தன் லட்சியத்தை தொடர்கின்றான் வேதனை வி…
-
- 0 replies
- 579 views
-
-
வீட்டுக்கு மேல் போர் விமானங்கள் பறக்க குழந்தைகளை இழுத்துக்கொண்டு நீங்கள் ஓடி ஒளியும்போது... கண்ணெதிரில் உங்கள் வீட்டுப் பெண்கள் கற்பழிக்கப்படும்போது... உங்கள் சகோதரன் சுட்டுக் கொல்லப்படும்போது... பட்டினியால் உங்கள் பெற்றோர் இறக்கும்போது... அப்போதுதான் போர் என்பது புரியும் எனில், அதுவரைக்கும் தமிழர்களே கிரிக்கெட் பாருங்கள். அடுத்த தேர்தல் வந்துவிட்டது வரிசையில் நின்று வாக்களியுங்கள். ---------------------------------------------- பயணத்தில் உங்கள் இருக்கையில் இன்னொருவர் அமர்ந்துகொண்டு எழ மறுத்தால் என்ன செய்வீர்கள்? சாலையில் உங்கள் வாகனத்தை இன்னொரு வாகனம் இடித்துவிட்டால் என்ன செய்வீர்கள்? உங்கள் குழந்தையைப் பள்ளி ஆசிரியர் காயம…
-
- 2 replies
- 1.3k views
-
-
யார் வீட்டுப் பிள்ளைகளோ தம்முடலில் வெடிகொழுத்த... பட்டாசு கொழுத்தி மிட்டாசு கொடுத்து வெற்றிவிழாக் கொண்டாடிய தமிழ்ப் பெருமக்களே! எவர் வீட்டுப் பிள்ளைகளோ காற்றோடு கரைய, உங்கள் வீட்டு வாரிசுகளை அக்கரைச் சீமைக்கு... அக்கறையாய் அனுப்பிவைத்த அருமைத் தமிழ் மக்களே! 'எரியும் வீட்டில் பிடுங்கியது இலாபம்' என... தன்மானமில்லாமல் இனமானம் விற்று, சாக்கடைக் குழிக்குள் சந்தணக் குளியல் போடும்... தமிழ் அரசியல் பெருந்தகைகளே! ஊர்பேர் தெரியாமல் உறவுகளும் அறியாமல் சிதறிப்போன தலைகளுக்கும் உங்களுக்கும், என்ன உறவென்று சிந்தித்தும் பார்க்காத... சிங்கார தேசங்களின் நிரந்தரக் குடிமக்களே! நீங்கள் உண்ணும் சோற்றில்... அவர்களின் தசைத்துண்டங்களும் சேர்ந்திருக்கும் ! நீங்க…
-
- 10 replies
- 1.1k views
-
-
பாவேந்தரின் 131 பிறந்தநாள் இன்று 60 Views பாவேந்தரின் 131 பிறந்தநாள் இன்று ************** கம்பீர தோற்றம், கர்வமில்லா போர்குணம், எழுத்தின் வீச்சு, எரிமலையாய் வெடிக்கும், பகுத்தறிவு பாதையில் சாதிகளை நொறுக்கும், பெண்ணடிமை வேரறுத்து பேரருமையின் உச்சம், பேச்சில் இடி முழக்கம், சமத்துவ பாதையில் கர்ஜித்தக் குரல், விதவை மனம் ஏற்பு, மனுதர்ம கழுத்தறுப்பு, ஏற்றத்தாழ்வு இடிப்பு, சமத்துவமே இவரின் உயிர்த்துடிப்பு, அடிமை விலங்கை உடைத்தெரிந்த ஆயுத நெருப்பு, ஆரியத்தின் தோலை உரித்த …
-
- 0 replies
- 581 views
-
-
தமிழீழ தேசியக்கொடி வீரத் தேசக் கொடிபறக்குது விண்ணில்பாரடா - அது வீறெழுந்து படபடக்கும் வேகம் காணடா! தீரங் கொண்டு துடிதுடித்துச் சொல்வதென்னடா - அது தேடியுன்னை நடநடென்று திக்கைக் காட்டுதா! தீரர் நேசமைந்தர் கொண்ட திண்மை கூறுதா - நின்று தீயைப்போல தீமைகொன்ற தூய்மை சொல்லுதா? ஊரைக் காத்த தெய்வமெண்ணி உள்ளம்சோருதா - இல்லை உண்மைகண்டு ஒங்கிமீண்டும் உயர்பறக்குதா? என்ன சொல்லத் துடிதுடிக்கு தென்றுகேளடா - அது எத்தர்கூட்டம் ஏனிங்கென்று எம்மைக் கேட்குதா? மன்னன் ஆள வன்னிமண்ணில் நின்ற கொடியிதா - அங்கு மற்றவர்க்கு என்னவேலை மண்ணில் என்குதா? கன்னம் வைக்கும் கள்ளர் கூட்டம் கண்டு பொங்கியே -அது கண்சிவந்து காற்றிலாடிக் காணும் தோற்றமா? சின்னப் பெண்கள் மேனிதீண்டி சுட்டெரிக்கையில் - தானு…
-
- 6 replies
- 1.1k views
-
-
காலம் கனிகிறது நேரம் நெருங்குகிறது நெருப்பு வைத்தவர் நெஞ்சேறி மிதிக்கவென பற்ற வைக்கக் குச்சி கொடுத்தவர் படம் காட்டி எம்மை பதற வைக்கிறார் எமக்காக அவர் ஏதேதோ செய்கிறார் ஏக்கத்துடன் நாம் பார்த்திருக்கிறோம் எம் பெண்களை எப்படி வதைத்தார் துணி களைந்து துடிக்க வைத்தார் நிர்க்கதியாக்கி நெரித்துக் கொன்றார் ஆவிதுடிக்க அந்தரிக்க அத்தனை வதைகளும் எம்மவருக்கு எத்தர்கள் செய்தார் அத்தனையும் நாம் பார்த்திருக்கிறோம் அழுதுவிட்டுக் காத்திருக்கின்றோம் இன்னும் எத்தனை படங்கள் போடுவார் ??? எதிரியை எப்போ சிக்க வைப்பார் ???? நீதிமன்றின் முன் நிக்க வைப்பார் ???? எத்தனை கேள்விகள் எம்மிடம் உண்டு ஆயினும் மற்றவன் எமக்காய் எல்லாம் செய்வதை மானம் கெட்டுப் பார்த்திருக்கின்றோம் ந…
-
- 4 replies
- 615 views
-
-
பா.விஜயின் கவிதை நிழல் தேடாதே உன் நிழலில் ஒரு ஊரையே நிற்கவை ! முட்களில் மோதிக் கிழியாதவனுக்குப் பூக்களைத் தடவும் தகுதி கிடையாது ! மகிழ்ச்சியாய்ச் சிரி கவலைகளைப் பிய்த்துக் காற்று மண்டலத்திற்கு அப்பால் வீசு ! எதைக் கண்டும் பிரமிக்காதே பிரமிப்பைப்போல் ஒரு பின்னடைவே கிடையாது ! தோல்வி என்பது சிந்திக்கத் தெரியாதவனின் சித்தாந்தம் ! நிலாவைத் தொட்டது மூன்று தோல்விகளுக்குப் பிறகுதான் ! நீ எழுந்தால் ஒரு எட்டு வந்து பார்க்காதவன் நீ விழுந்தால் விழுந்து விழுந்து விசாரிப்பான் கவனி ! இளைஞனே இரைப்பையையும் நம்பிக்கையையும் காலியாக விடாதே ! நடக்குமா என்ற கேள்வி- உன் நம்பிக்…
-
- 12 replies
- 21.4k views
-
-
எங்கே போகிறாய்? வெளிநாட்டில் தமிழனுடனும் தமிழில்பேச வெட்க்கப்படுகிறாய் எங்கே போகிறாய் தமிழா எங்கேபோகிறாய்......... வேற்று மொழிபேசி நீயும் உன் தாய்மொழி மறந்து நீ எங்கே போகிறாய் தமிழா எங்கேபோகிறாய்......... காதில தோடுபோட்டு எடுப்பாக நடந்து நீயும் எங்கே போகிறாய் தமிழா எங்கேபோகிறாய்.......... தலைமுடிக்கு சாயம்பூசி குதிரைகால் செருப்புபோட்டு எங்கே போகிறாய் தமிழா எங்கேபோகிறாய்.......... வெளிநாட்டில் வந்து உன் பண்பாடு மறந்து நீயும் எங்கே போகிறாய் தமிழா எங்கேபோகிறாய்.......... தமிழின் சமயம் விட்டு தாவிக்குதித்து நீயும் எங்கே போகிறாய் தமிழா எங்கேபோகிறாய்..…
-
- 2 replies
- 1.3k views
-
-
இன்னுயிர் நீக்கி..... எம் உயிர் கலங்க் வைத்து...... எவ்விடம் சென்றயோ பாலா மாமா?? அன்பு கொண்ட நெஞ்சங்கள் துடிக்கின்றன... ஆதரிக்க நீ இன்றி தவிக்கின்றன! நீ பிறந்த மண் இன்று கண்ணீர் வாடிக்கின்றது..... அன்னை மடி உன் முகம் தேடி துடிக்கின்றது! உன் இனம் உன் பிரிவை கேட்டு....... சுய நினைவை இழந்து........ நடை பிணம் ஆனாது மாமா! எம் தேசிய தலைவரின் வலது கரம்..... இன்று தகர்ந்தது ஏன் மாமா? மலைப்போல நிமிர்ந்த உள்ளங்களும்....... இன்று சய்ந்தது உன் இழப்பால்! தேசத்தின் குரவலையை நசித்த..... சிங்கள இனத்திற்க்கு எதிராய்....... ஓர் குரலாய் எழுவாய் என்று அழைத்த...... எம் தேசத்தின் குரலே! இன்று உன் குரல் அடங்கியதோ? பால்லாயிரம் குரல்களை …
-
- 3 replies
- 1.2k views
-