Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்திய தேசமே! ஒதுங்கி விடு!! விந்திய மலைத்தொடரில் அந்த அகத்தியமுனிவன் அடிபதித்த நாள் முதலாய், இந்திய தேசம் எங்கள் தேசத்தைத் தங்கள் தேசத்துடன் இணைத்துக் கொண்டது! சோழ வள நாட்டின் சோறுடைத்த வயல்களும், சேரநாட்டு யானைகளின் செழிப்பான தந்தங்களும், பாண்டிய நாட்டின் பசுமை மிக்க இலக்கியமும், இந்திய தேசத்தின் சொத்துக்களாகின. அரை குறையாய் வளர்ந்த ஆரியமொழி, எங்கள் தமிழிடம் கடன் வாங்கித் தன்னை வளர்த்துக் கொள்ள, விலை போகாத வேதங்களும் வேள்விகளும்,சாதிகளும் எங்கள் சொந்தங்களாகின. புறமுதுகு காட்டாத புறநானுற்றுத் தமிழன் இராமாயணத்தின் குரங்காக, கடாரம் வரை கப்பலோட்டியவன் பிடாரிக்குக் கோவில் கட்டிக் கும்பிடுகி…

  2. கவிப்புயலின் பலரசக்கவிதைகள் --------------- நகைச்சுவை --------------- ஆறடி பனை போல் வளர்ந்திருக்கும் பெண்ணே யாரடி சொன்னது ஓரடி குட்டை பாவாடை போடச்சொல்லி .....? குதிக்கால் செருப்பணிந்து குதிரைபோல்போனவளே குதி இருக்குது உன் கால் எங்கே ...? கை பைக்குள் காசை தவிர கண்டதையும்வைதிருந்தவளே கை இருக்குது உன்கைப்பை எங்கே ...? கண்டதையும் ........ பூசி அழகு காட்டியவளே.... பூசுவதற்கு வர்ணங்கள் இருக்கு ... முகம் இருக்குது உன் அழகு எங்கே ..? ^^^ கவிப்புயல் இனியவன் கானா நகைச்சுவை கவிதை

  3. Started by ஜீவா,

    மரணப்படுக்கையில் மறவர்களும் மக்களும் முள்ளிவாய்க்காலில் இருந்த போதும் மானாட மயிலாட பார்த்து மோட்சம் பெறும் புலத்து தமிழன் நான் மானாட மயிலாடவில் இடைவேளை வரும் போது ஈழம் பற்றி ஆய்வு செய்கிறேன் ஈழத்து அவலத்தை மறந்(றைத்)து எதிரிக்காய் எழுதிக்கொண்டிருக்கிறேன் புலிகள் தேவைப்பட்டார்கள் எம் பொதி சுமப்பதற்காய் இன்று நான் ஜனநாயகவாதி என் தவறை உணராது தோல்விக்கு விடைதேடும் கட்டுரை ஆய்வாளன் எந்த விமானம் எத்தனை பாகையில் குண்டு போட்டது.. எத்தனை அடி ஆழத்தில் பள்ளம் வந்தது எங்கேனும் தண்ணி வந்ததா என பார்க்கிறேன் என்வீட்டு கதவை எதிரி தட்டுவதை மறந்து ஏனென்றால் என்பெருமையை சொல்ல இதை விட்டால் எனக்கு ஏது சந்தர்ப்பம் நான் நாறுவதே தெரியாமல் ந…

  4. நியூயோர்க் ஜம்பரில் லண்டன் ஸ்ரைலில் பி எஸ் 3 வாங்க பிளாசா போனேன் பிற்சாவோடு நிற்கையில் லப்டப் அடக்கமாய் நீ இருந்தாய். திறி டி விசனில் உன்னைக் காண ஐ ஆர் கொண்டு ஸ்கான் செய்தேன் எக்ஸ் பொக்ஸ் கேம் போல திறில்லாய் இருந்தாய்..! புளூருத் சிக்னலாய் என்னைத் தந்தேன் மொபைல் போன் கமராவாய் நீ என்னைப் பார்த்தாய். ஐபொட் ஒன்று வாங்கியே அருகில் வந்தேன் எம்பி 4இல் இசைதேடி எம்பி 3 இல் இசைந்தாய் என்னோடு. ஜி பி எஸ் நவிகேற்றராய் நீ வந்ததால் கை வேயில் ரவுண்டெபவுட் தேடி அலையும் நிலை களைந்தேன். டிஜிற்றல் கமராவாய் நீ அருகில் காணும் காட்சிகளோ பல மெகா பிக்சல் அளவுகளில். என்ன மாயமோ நானறியேன் சடின்லி.. பென்ரியம் 4 காட்டிஸ்க் போல ஸ…

  5. Started by nunavilan,

    வெறுமை சாலைகளிலும் மரங்களிலும் மனிதர்களிலும் இறங்குகிறது வெறுமையான இரவு. காத்திருப்பவை நாய்களின் குரைப்பும் சோற்றின் மௌனமும். ஏதொ மறந்து போய்விட்டது யாருடைய களைத்த முகமும் உன்னைத் தேடுவதில்லை. இழந்தது வசவுகளின் கசிந்த அன்பு. இன்று கால்களுக்குக் கீழ் எந்தத் தரையும் இல்லை என்னிடம் தரப்பட்டவை வார்த்தைகள் என் பின் இருப்பவை துகள்கள். கதியில் மறைந்தது சிரிப்பு ஏன் அழுகையாகக்கூட இருக்கலாம். இப்பொழுதுதான் இங்கு எங்கேயோ ஓய்ந்திருக்கவேண்டும் அந்தப்பாடல் கண்களில் ஒளிர்ந்து தன் புறாக்களை அசைத்து போகிறாள் ஒரு பெண் உச்சிவெயிலில் வேர்க்க விறுவிறுக்க வந்த நண்பன் நீல மேகங்களிடை மறைந்த ஒரு தேவதையைப் பார்த்திருக்கவேண்ட…

    • 9 replies
    • 1.6k views
  6. Started by Thamilthangai,

    காதல் நவரசம் காதல் நவரசம்:.. கொஞ்சி நிற்கும் கருமை விழிகள் கெஞ்ச வைக்கும் செவ்வாய் இதழ்கள்! விரல் தொடுகையின் போது செல்ல மிரட்டல்! வாரி அணைக்கையில் படபடக்கும் நெஞ்சம்! காலை வணக்கம் சொல்ல மறந்தால் சின்னப்பிள்ளைக் கோபம்! ஊட்டி விடுகையில் உன் விரல் பிடித்துக் கடித்தால்!! அருவருப்பாய் ஒரு நெளிப்பு! அலுவல் முடிந்து களைத்து வருகையில் கருணைவழியும் கவனிப்பு!! என்ன தருவாய் பெண்ணே என்றால்!! நாணத்தில் விழி மூடி உன் வீரம்மொத்தமும் கூட்டித் திரட்டி’வைப்பாய் இதழ் முத்தம்!! காதல் நவரசம் யாவும் உன் செல்ல முகத்திலே காண்கிறேன்!! பெண்ணே உன்னால் வாழ்கிறேன்! நன்றி.. எல்லாம் என் பாதி சொன்னதைக்கோர்த்தொரு வடிவம்..)))

  7. காதலர் தினம் கொண்டாடும் அதேவேளை காதலால் வீழ்ந்த மக்களையும் நினைவு கூற வேண்டாமோ. அதுதான். காதல் செய்யுங்க வேணாம் என்றல்ல.. ஆனால் மற்றவர்களை ஏமாற்றனும் என்ற குறிக்கோளை நினைப்பில வைச்சுக் கொண்டு காதலை செய்யாதீங்க. நன்றி பேஸ்புக்.

  8. எட்டாவது அதிசயமே என் தலைவா !! எவர் கைகளுக்கும் நீ எட்டாத அதிசய -த்தை அறிவதற்கு-சில வல்லசருகள் வேவுபார்க்கிறது-விஞ்ஞானமே வியப் -படையும் மெஞ்ஞானம் கொண்ட உனை சிறைப்பிடிக்க எலிப்படைகள் அலைகிறது,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, வலுவற்ற விஞ்ஞானம் விழிபிதுங்கி கிடக்கிறது-தன்மானத்தலைமகனே!!! உனை மண்டியிடச்செல்லிக்கெண்டு சில மடையர் கூட்டம் அலைகிறது -ஒரு வெற்றுடலை காண்பித்து அது உன் வித் -துடல் என்றார்கள் அக்கினிபுத்திரனே உனை நெருங்கவும் முடியாத கோழைகள் கூடிநின்று -பெருமி -தம் கொள்கிறனர்-மூடுபனி கூடிநின்று கொட்டாட்டம் போடுறது-சுட்டெரிக்கும் சுரியனே உனை தடுக்க சிங்களப்பனி உறை -ந்து எம் நிலத்தினில் கிடக்கிறது ,,,,,,,,,,,,,,,, வான் சிவ…

  9. உயிர் நீட்சி குடித்த விஷம் அழைத்து வந்த மரணம் அறைக்குள் நட்பு சம்பாஷணையொலிக்க பேச்சு முடியட்டும் போவோம் என்று பொறுத்திருந்தது மிச்சமிருந்ததை இன்னொரு முறை பருகி துரிதப்படுத்தினேன் விளைவுகளை அது என்னவென்றறியாத நண்பன் எனக்கும் என்று கை நீட்டவில்லை கேட்டிருந்தாலும் உன் பங்கும் சேர்ந்துதான் தீர்ந்தது என்றிருப்பேன் நொறுக்குத் தீனியிருந்தால் நேரம் போகுமென்றெண்ணி மரணம் உலவுகிறது குறுக்கு நெடுக்காக தற்காலிகமாய் விடைபெற்று நண்பன் அகன்றான் உத்வேகமாய் வந்த மரணம் தன் தொழில் பெட்டியை திறக்கும்முன்பு தட்டப்பட்டது தாழிட்ட கதவு "இங்கே என் நண்பன் இருக்கிறானா?" நிலை மறந்து வாய் தவறி மரணமே பதிலிறுத்தது "இருக்கிறான் இருக்கிறான்" உள்ளேயிருந்து கேட்ட குரல் உன்னுடை…

  10. ''தீர்வொன்றை தந்திடுங்கள்....'' நாலும் நடக்குது மனித கொலை- இந்த இலங்கையில்; இன்றதுக்கென்ன விலை...??? செய்து குண்டுகள் வைத்து கொலை- அதை செய்மதியல் பார்க்குது அதந்த பகை.... உலகதில் இன்றது மனித நிலை ஊனமாய் ஆனதால் இந்த நிலை முண்டமாய் விழுகுது மனித தலை- அதை முந்தியே உண்ணுது கழுகு தலை.... நாளும் இலங்கையில் நாளும் யுத்தம்- அழியுது உயிர்கள் அதனால் நித்தம் பகையென போடுறார் யாரோ சத்தம் பழியென ஆகுது உயிர்கள் நித்தம்... தேசமே நனையுது குருதியிலே நீதி சபைகள் ஏனோ உறக்கத்திலே..? விடுதலை கொடுத்திட எழுந்திடுங்கள் விடியலை கொடுத்தே உறங்கிடுங்கள்... ஈழத் தமிழினம் தவிக்கிறதே இன்னலில் இன்றது துடிக்கிறதே கண்ணீர் ஆறாய் பாய்கிறதே கவலையில் தேகம…

  11. மீட்பரினாலும் மீட்கப்படாமல்போன ஈராயிரத்து ஒன்பது வருடங்கள் கழித்து... ஒரு இனத்தையே ஒட்டுமொத்தமாய் சிலுவையில் அறைந்தது சர்வதேசம்! அன்றுதான்... ஈழத்தின் கிழக்குக்கரை வாய்க்காலில் செந்நிறநீர்... ஆறாய் ஓடியது! பரலோகத்தில் இருந்த எங்கள் பிதாவுக்கு காது செவிடானதும் அன்றைக்குத்தான்!! ஒரு கல்வாரிப் பயணத்தை முப்பது வருடங்களாய் சுமந்து களைத்த மீட்பர், அன்றுதான் காணாமல்போனார்! பல யூதாஸ்கள் தோன்றினார்கள்!! ஆட்டுமந்தைகள் எல்லாம் பட்டியில் அடைக்கப்பட்டன! காணாமல் போன பல ஆடுகளை புலிதான் வேட்டையாடியதாய் ஊருக்குள் கதைப்பதாக உலகச் சந்தியின் மதவடியில் உட்கார்ந்து, பரமசிவமும் பான்கீமூனும் பம்பலாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்! ஆனால் அதேநேரம்... எல்லாம் புரிந்தும்…

  12. 'வேப்பம் பூ மிதக்கும் எங்கள் வீட்டு கிணற்றில் தூர் வாரும் உற்சவம் வருடத்துக்கு ஒருமுறை விசேஷமாக நடக்கும் ஆழ நீரினுள் அப்பா மூழ்க மூழ்க அதிசியங்கள் மேலே வரும் கொட்டாங்குச்சி,கோலி, கரண்டி துருபிடித்த கட்டையோடு உள்விழுந்த ராட்டினம், வேலைக்காரி திருடியதாய் சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்' சேற்றுக்குள் கிளறி எடுப்போம் நிறையவே, 'சேறுடா சேறுடா' வென அம்மா அதட்டுவாள் என்றாலும் சந்தோசம் கலைக்க யாருக்கு மனம் வரும்? "படை வென்ற வீரனாய் தலைநீர் சொட்டச் சொட்ட அப்பா மேலே வருவார். இன்று வரை அம்மாவும் கதவுக்கு பின்னாலிருந்துதான் அப்பாவோடு பேசுகிறாள். கடைசி வரை அப்பாவும் மறந்தேபோனார் மனசுக்குள் தூர் எடுக்க"... #விகடனில் ப…

    • 9 replies
    • 3.2k views
  13. எத்தனை நகைப்பொலிகள் இன்னும் என்காதுகளில் சிரிக்கட்டும் விட்டுவிடு சீர்கெட்ட உலகம் இது ஒடும் படைகளினது வெற்று வேட்டொலிகள் துளைக்காது உன் இதயம் போகட்டும் விட்டுவிடு சிரித்தவன் இன்று இங்கே சிறந்தவள் என்கின்றான் சிரிக்கிறேன் நான் இங்கே என் ஒலி கேட்கிறதா?

  14. Started by கஜந்தி,

    ஆசை அதிகாலை தன்னில் பறவைகளின் இசையில் எழுந்திட ஆசை சூரியன் தீண்ட முதல் பணித்துளிதன்னை-நான் தொட்டு விளையாடி மகிழ்ந்திட ஆசை தென்றலின் வருகையால் அசைந்திடும் மொட்டுக்கள் மலர்ந்திடும் அழகால் சிந்திடும் பனித்துளியில் நான் நனைந்திட ஆசை மென்மையான பூக்களின் இதழ்களில் - என் முகம் புதைத்து கண்முடி -இந்த வாழ்கை தன்னை மறந்திட ஆசை இளங்காற்றின் அசைவில் ஆடிடும் மரங்களின் ஓசை தனை ரசித்தபடி நதிக்கரை ஒரமாய் நடத்திட ஆசை சண்டை இல்லா உலகில் மனிதர்கள் மகிழ்ச்சியுடன் மட்டும் வாழ்வதை பார்த்து ரசித்து விட ஆசை நிறைவு பெறுமா இவள் இறுதி ஆசைமட்டும் புரியாது …

  15. [size=4]திசைகள் மூடி இருள் கவிழும் [/size] [size=4]இந்த பனிப்பொழுதின் [/size] [size=4]ஈரமெல்லாம் உலர்ந்து [/size] [size=4]மோதிக்கடக்கிறது காற்று,[/size] [size=4]இனி[/size] [size=4]பெரு வீதிகளிலும் ஓரங்களிலும்[/size] [size=4]படரும் பின்உருகி கசியும் பனித்திரள்.[/size] [size=4]இந்த மனங்களைப்போல,[/size] [size=4]இலைகளை உதிர்த்திவிட்டு[/size] [size=4]வேர்களில் உயிர்ப்பை[/size] [size=4]ஒளித்துக்கொண்ட மரங்களாய்[/size] [size=4]உள்ளெரியும் பெருந்தீயை மறைத்து[/size] [size=4]பொறுத்திருக்கிறோம் இந்த கார்த்திகையிலும்,[/size] [size=4]கொழுந்துவிட்டெரியும்[/size] [size=4]பெருந்தீயில் கொதித்து [/size] [size=4]உருகி வடிந்து கண்ணீராய் வெளிவருகிறது[/s…

  16. இதயம் மட்டும் பேசட்டும் இசை மழைதனில் இன்பமாய் நனைந்து பசை கொண்ட மனிதருடன் பாங்காய் அசைந்து ஆடும் ஆட்டத்தின் உச்சம் இசைந்திடும் மனதின் ஆதாரம் என்றிருந்தேன் இதழுடன் இதழ் ஒன்றாய் இணைந்து பின்னிக் கொள்வதில் அந்த இன்பமான பிணைப்பே இணைப்பாய் அதுவே பேரின்பம் தரும் போதை என்றிருந்தேன் புண்பட்ட மனம் இங்கே நிதம் நிதம் புண்ணாகிப் போனதால் நாளாருபொழுதாய் புகைவிட்டு ஆற்றுகின்றேன் ஆஹா இதுவே புத்துயிர் தரும் டொனிக் என்றிருந்தேன் இத்தனை ஆனந்தம் எனக்குள்ளிருந்து இதுவே வாழ்வின் சொர்க்கம் என்றே நனைந்தவேளை இடப்பெயர்வு இன்னல்கள் சுமந்திடும் இதயங்களின் கதை கேட்டுணர்ந்தபோது இதயத்து சுகங்கள் இமைவழி மறைந்தோடிட இடையறா பங்களிப்பு இரட்டிப்ப…

  17. காலம் உலர்த்த மறந்த நீர் விரல்களில் ஒட்டிக் கொண்டது தன்னிலை பகிராமல்.. வலிந்த வெப்ப இழப்பினை உருவாக்கி, திரட்டத் தொடங்கியது ஆதிச் சிதைவுகளை, ஈமத்தாழிகளையும் வண்டல் படுகைகளையும் கிளறி, சூரிய நட்சத்திரங்களுடனும் கனியாத கருமேகங்களுடனும் உறவாடி, காற்றில் நெருப்பில் உப்பு நீரில் நுகர்ந்தும் எரிந்தும் மூழ்கியும், இழந்துபோன ஈரலிப்பை தேடி அலைந்தது.. வழியெங்கும்.. வர்ணக் கலவைகளாலும் நறுமணப் பூச்சுகளாலும் தரவேற்றிக் கலையாடிக்கொண்டிருந்தன சில. அதீத மோகத்துடன் காலத்தை கலவி செய்து கொண்டிருந்தன சில. ஆதியின் அன்புப் போர்வைக்குள் சிக்கிப் பிணமாய் கிடந்தன சில. இன்னும் சில கௌரவ வெற்றிடங்களில் எதிரோலியோடு மோதிச் சாவடைந்து கிடந்தன. …

  18. [size=5]ஆண்டு மூன்றுகள் ஓடி மறைந்தது அத்தனை அவலம் நடந்து முடிந்தது எத்தனை அழிவுகள் எம்மினம் கண்டது இன்னும் தான் எனக்கு [/size][size=5]மறக்கவில்லை பண்பட்டு நாங்கள் பயணித்தோம் பார் புகழ நாம் பார்த்திருந்தோம் பச்சை வயல்களாய் எம் வாழ்வு பரந்திருந்ததாய்க் கனவு கண்டோம் பெண்ணின் சுதந்திரப் பெருமை கண்டோம் போரில் அவர்தம் வீரம் கண்டோம் எண்ணிலடங்கா எக்களிப்பில் எதிரி அறியாதிருந்துவிட்டோம் வண்ணக் கோலம் நாம் போட்டு வட்டத்துள்ளே நாம் நின்றதனால் எதிரி போட்ட கோலத்தை எட்டிப் பார்க்க மறந்துவிட்டோம் மானம் தானே பெரிதென மாண்டுவிடும் மாண்புமிக்க மானர்குலத் தமிழர் நாம் மாளாதின்னும் இருக்கின்றோம் எங்கள் நிலத்தை எடுப்பவனை எங்கள் பெண்…

  19. புலி மௌனம் கலைத்த பூகம்பச் செய்தி காலப் பெரு வெளியில் - ஈழக் கதை எழுதும் இளைய தேவரீரே! தமிழர் வாழ்வெடுக்கத் திறனாயும் பணியதனை தரணிக்கு விட்டுச் சென்ற தமிழ்மானப் புதல்வர்களே! வரலாறு எழுதும் வண்டமிழ்க் கோல்களுக்கு உரமூறும் கரு தந்த காலக் கருவூலங்களே! கருவூறும் உயிரணுவும், காடேகும் திருவுருவும், இருப்புக்கு மத்தியிலே இயங்கும் எவ்வுயிரும் சிரம் தாழ்த்தி உமைத் தொழுதெழும். நீங்கள் இலக்கெடுத்துப் போனகதை இதயத்தில் வலித்திடினும், இனவாத இதயத்தில் அறைந்த சேதி இனிக்கிறது. வெள்ளரசின் அடியினிலே வேதாளக் கழுத்தறுத்து, விம்மியழும் அன்னையவள் விழிநீரைத் துடைத்து விட்டீர். இது இனங்காக்கும் போர், ஈழ நிலங்காக்கும், மனித வளங்காக்குமெனச் சிங…

  20. முகம் தெரியாத தியாகங்களின் முகவரிகளை, முகமூடிகள் மட்டுமே தேடும் நிர்ப்பந்தம்! காலத்தின் கண்ணாடிகளில் விம்பங்களாய் விழுந்த கோலங்கள் .... எம் காலடிகளில் மிதிபடும் பரிதாபம்!! மாறுவேடம் பூண்டுதான்... மாவீரரையும் பூசிப்போமா? - இல்லை மாறிமாறி நின்றுதான்... அவர்களை நிந்திப்போமா? காறியுமிழ்ந்த எச்சங்களில்... அந்தக் கல்லறைகளின் மிச்சங்கள்! தேறிநிற்கும் தமிழர்க்கு... அவர்கள் தேவையில்லைப் போல?? நெஞ்சு நிமிர்த்தி நடக்கும் தமிழர்களே!? பிச்சைக்காரர்கள்தான் நாங்கள்.... புரிகின்றதா? பித்துப் பிடித்தா.... தம்மேனி பிய்த்தெறிந்தார்கள்?? யாருக்காக? எதற்காக? .... தெரியாதா உங்களுக்கு??? இரவல் வீரத்தில்... இழக்காரம் கதைக்கும் உங்கள் நாவில், அவர்கள் கழுத்து …

    • 9 replies
    • 1.5k views
  21. என் அன்பான உறவே அழகான சிரிப்பே உனக்கு அன்பான கதையே உனக்கு இரக்கமான மனசு உனக்கு ஒரு கொடியில் புூத்த புூ இல்லை நீ உன் கோவம் எனக்கு பிடிச்சு இருக்கு உன் திறமை எனக்கு பிடிச்சு இருக்கு ஆனால் நான் உன்னுடன் கதைக்கும் போதெல்லாம் சண்டைதான் செய்வேன் ஆனால் நீ என் சொந்த அண்ணாவாக இல்லாட்டியும் -- எனக்கு நீ ஒரு நல்ல நண்பனாக இருக்கிறாயே அதுவே எனக்கு போதும் நண்பனே ----------ஆக்கம் --? கீதா :P

    • 9 replies
    • 1.7k views
  22. மெல்ல மெல்லக் கசியும் உண்மைகளிலிருந்து நீண்ட பெருவெளிக் கனவு தற்கொலை செய்து கொள்கிறது..... முட்புதர்களின் அடர்த்திக்குள்ளிருந்து சொட்டுச் சொட்டாய் சேர்த்து வைத்தவையெல்லாம் இரத்தம் குளி(டி)த்துப் பெருத்து நாறிப் பிணங்களாய் மனித எலும்புக் கூடுகளாய் வெளிவருகிறது. நேசித்தவர்களும் நேசிப்பின் நினைவாய் விட்டுச் சென்ற வார்த்தைகளும் ஆள்மாறி ஆள்மாறி அவர்கள் பகிர்ந்தவற்றைப் பகிர்ந்து கொண்டு துயர் வலியில் தடயமறிவிக்காமல் தொடர்பிலிருந்து விடுபடுகிறார்கள். சீருடைகளோடு நிமிர்ந்து நின்ற வீரங்கள் சாவின் நிணம்மாறாத் தடைமுகாம் வேலிகள் பின் தலைகுனிந்து.... யாது நிகழ்ந்திற்று ஏது நடந்திற்றென்று ஏதுமறியா நிலையில் இலக்கத் தகடுகளால் அவர…

    • 9 replies
    • 1.6k views
  23. கார்த்திகைப் பூவோடு, தீபங்களை உன் கரங்களில் ஏந்தியவாறு வாரீரே... இன்று வருவீர்கள் நாளை வருவீர்கள் என்று பூமியின் வேரில் ஒளியின் அடியில் காத்திருக்கின்றோம் .... என்னை பெற்ற தாயே என் தோழியே,என் உறவுகளே உங்களைக் காண.. கல்லறையில் விழித்தவாறு தினமும் வானத்தைப் பார்க்கின்றேன் என் சிறகுகள் பறிக்கப்பட்டாலும், நாளை நீங்கள் சுகந்திரமாக பறப்பதை காணத்தான் காத்திருக்கின்றேன்... என் கண்களைக் கொள்ளை கொள்ளும் காட்சி ஒன்று தெரிகிறதே... என்ன அழகு என்ன அழகு ஒளி கொண்ட எங்கள் கல்லறைகளில் மேலும் தீப ஒளி ஒளிரட்டும் வாசமுள்ள கல்லறையின் மேல் மேலும் காத்திகை பூவின் நறுமணம் வீசட்டும்.... மரணங்களில் நாங்கள் வாழ்கின்றேம் ஒவ்வொரு ம…

  24. Started by kayshan,

    மறந்தும் வலிக்கும் நினைவு மறைந்தும் தெரியும் தழும்பு அணைந்தும் எரியும் அகல் காய்ந்தும் தளிர்க்கும் காம்பு ஓய்ந்தும் வீசும் காற்று உறைந்தும் மீளும் உணர்வு அடங்கியும் எழும் ஆன்மா இறந்தும் வாழும் உயிர் எரியும் அகலில் வலிகள் விலக தளிர்க்கும் காம்பால் தழும்பு மறைய வீசும் காற்று உணர்வை மீட்க எழும்பும் ஆன்மா வாழும் இனி....

  25. காலதேவனின் சாபம் காற்றடைத்த பைகளை நிரப்ப கருமேகங்களிடம் கையேந்தும் நிலை வர்ணங்களைப் பிரிக்கத் தெரியவில்லை எனக்கு நீலம்,பச்சை என கருமையும் செம்மையுமே என் கனவிலும் குடிகொள்கின்றன புரியாத புதிர்களாய்ப் புரட்டிப் போடப்படுகின்றன பொழுதுகள் புலர்ந்தாலும் சாய்ந்தாலும் விதைக்கப்படுகின்றன நச்சு விதைகள் நத்தைகளுக்கு கூட ஓடு இல்லையாம்- இது கொசுறுத்தகவல் கருவேலங்காட்டிற்குள் கானக்குயில் பாட்டிற்காய் காத்திருந்த காலங்கள் போய் கறிவாடை வீசாத விடியலுக்காய் காத்திருக்கின்றோம் மொட்டுக்கள் மலரமுன்னே வண்(ம்)டு(பு)களால் வன்புணரப்படும் போது பேசாதிருந்து பிறப்புறுப்புகளைப்பற்றி பேசியவுடன் பிறவிப்பலன் அடைந்ததாய் பெருமைகொள்கிறது பெண்ணியம் உச்சி மீத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.