கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
அப்பிக்கிடக்கும் அந்தகாரம் துடைத்து கசியும் நிலவொளி துருவேறிய கம்பிகளை கடந்து கரடுமுரடான பழுப்பேறிய சுவர்களில் திட்டுதிட்டாய் விழுகிறது காய்ந்த உதிரச் சிதறல்கள் உயிர்வற்றிய ஓவியங்களாய் பயமுறுத்துகிறது. இரவின் நிசப்தம் உடைகிறது கூட்டத்தைப் பிரிந்து தனியனாகிப்போன குட்டியானையொன்றின் பிளிறலைப்போல் அருகிலோர் அறையில் அலறி அடங்கிப்போகிறது அந்தரித்த ஒரு தமிழ்க்குரல் அடிவயிற்றைப் பிழிகிறது பயம் அடுத்தது நானாகவும் இருக்கலாம் கடந்த விசாரணையின் காயங்களே காயவில்லை உதிரம் கலந்து ஒழுகிறது சலம் பிளாஸ்ரிக்குழாய் செருகப்பட்ட மலவாயிலில் மரணவேதனை நகம் பிடுங்கப்பட்ட விரல்களில் இலையான்கள் இருக்க எத்தனிக்கிறது. இன்னமும் நான் இருக்கி…
-
- 6 replies
- 1.8k views
-
-
பகட்டான கோயில் அமைத்தோமே -நாம் பங்கரில் வாழ்வது தெரியவில்லையா பொங்கலும் படையலும் படைத்தோமே - இன்று பொங்கும் எம்கண்ணீர் தெரியவில்லையா பாலால் அபிஷேகம் செய்தோமே -குழந்தை பாலுக்காய் தவிப்பது தெரியவில்லையா பண்டிகையும் திருவிழாவும் செய்தோமே -நாம் குண்டினால் சாவது தெரியவில்லையா தேரில் வைத்து இழுத்தோமே -நாம் தெருவில் நிற்பது தெரியவில்லையா பன்னீரால் தீர்த்தம் கொடுத்தோமே -நாம் செந்நீரில் தோய்வது தெரியவில்லையா பூங்காவனத் திருவிழா செய்தோமே - இன்று தூங்காத எம்துயர் தெரியவில்லையா நமசிவாய என்று துதித்தோமே - காற்றில் நச்சுவாயு வருவது தெரியவில்லையா மேளமும் தாளமும் இசைத்தோமே -இன்று மரணஓலம் இசைப்பது தெரியவில்லையா கண்ம…
-
- 9 replies
- 1.8k views
-
-
தேடித் பார்க்கின்றேன் இன்னமும் பெரிதாக எதுவும் இங்கு மாறிவிடவில்லை எல்லாம் அப்படியே இருக்கின்றன இயல்பாகவே மண்ணில் இருக்கும் செங்குருதியின் நிறம் தோட்டத்தின் நடுவே இழுத்து போடப்பட்டு உருண்டு போய் பந்தாக காவிளாச்செடிகள் பச்சையாக வெட்டி சூடு மிதிக்கப்பட்ட பனை ஓலைகளும் மூரி மட்டைகளும் வேலிக்கரையில் வளர்ந்து ஆழமாக வேர் விட்ட அறுக்கம்புல் வேலியில் படந்து காய்த்து தொங்கும் பாவல்காய் முன்னர் பாட்டி வைத்த இடத்திலேயே அடுப்பு எரிக்க இப்போதும் பனையின் மட்டைகளும் கொக்காரைகளும் அதே சாணி மெழுகிய நிலம் தாத்தாவின் கயித்து கட்டில் கொடியில் படபடக்கும் தோய்த்த நாலுமுழ வேட்டி துலா கயிற்று கிணறு தாவாரத்தில் தொங்கும் தென்னோல…
-
- 4 replies
- 1.8k views
-
-
செல்வண்ணை! உன் பெயரை உச்சரித்துவிட்டு கண் கலங்குவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. சிரிக்கும் புலி நீ சீறும் சினத்தை சின்னச் சிரிப்புக்குள் அடக்கிவைத்திருக்கும் பேராற்றல் உனக்கு. நெருப்பு வானத்தில் ஒரு குளிர் நிலவு நீ உனக்குள்ளும் நெருப்பாறுகள் ஆனாலும் அதை பக்குவப்படுத்தி பயன்படுத்தத் தெரிந்தவன். பத்திரிகைகளுக்கூடாகத்தான் உன்னோடு பழகியிருக்கிறேன். தீயாக தினேசாக சுழன்றடித்த சூறாவளியாய் உன்னோடு பழக்கமில்லையென்றாலும் உன் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் பனிபூசிய அனல்கள் பறக்கக் காண்பேன். ஒரு தவறிப் பிறந்தவனின் காட்டிக்கொடுப்புக்கு தமிழன் இழந்து நிற்பது "ஒரு பிரிகேடியரை". எதிரியின் எத்தனை பிரிகேடியர்களை கொன்றொழி்த்தாலும் ஈடாகுமா உ…
-
- 4 replies
- 1.8k views
-
-
முள்ளிவாய்க்காலும், கொல்லிஅலைக் காலரும் ... அள்ளிய உயிர்கள் கொஞ்ச நஞ்சமல்ல!!! கடவுளரும் கண்மூடிப் பார்த்திருக்க ... கடலன்னைகூட இரக்கமற்றுப் போனாளே!!! போற்றித் துதித்த மரியன்னை கூட ... வேடிக்கைதான் பார்த்திருந்தாராம்! கடவுளர் மேல் நம்பிக்கை போய்.... ஏழு வயசாச்சு எனக்கு! - ஆனாலும், மீண்டும் சோதிச்சு ... மூன்று வருசமாகுது! ! முள் முடி தரித்த யேசு கூட.... செல்லடிக்கு பயந்து ஒளிந்து போனாரோ?! - இல்லை, புத்தரிடம் சரணடைந்து.... முள்வேலிக்குள்.... சிலுவை சுமந்தாரோ?! வைக்கோற் போருக்குள் பாலகன் பிறந்து மகிழ்ந்திருக்க... நம் பாலகர்களை ...பனை வட்டுக்குள்ளும் முள்வேலிக்குள்ளும் அல்லோ, பொறுக்கியெடுத்து... பொங்கியழுது ...பின் பொறுத்துக்கொண்டோம்!!! …
-
- 16 replies
- 1.8k views
-
-
மண் மணக்குதுகா....! ---------------------------------- சுத்திவர வேலி வேலி நிறையக் கள்ளி கரு நொச்சி சப்பாத்தி முள்ளு கிடசரியா ஆடாதோடை விண்ணாங்கு வேலிப் பருத்தி விஷ முருங்கை இடையிடையே இப்பிலி இன்னும் சொன்னால் இலவ மரம் மஞ்சோணா பூவரசு சுண்ணக்கொடி கோமரச மோதிரக்கண்ணி பேய்ப்பாவை குரங்கு வெற்றிலை கிளாக் கன்று எருக்கலை பூமுத்தை காசான்செடி பொண்டாட்டி மரம் முள் முருங்கை இப்படி இருந்த வேலிகள் எங்கே....? தோளில் துண்டு இடுப்பில் சிறுவால் பேருக்குச் சாரன் கொழுவிய சட்டை கூன் இல்லா முதுகு நேரான நடை ஊருக்கு உழைத்து யாருக்கும் அஞ்சா பேரோடு வாழ்ந்த பெருமக்கள் எங்கே....? குனிந்த தலை நிமிராத களவெட்டிக்குப் போனாலும் களையெடுக்கப் போனாலும் காட்டுக்கு விறகெடுக்க காவலின்றிப் ப…
-
- 2 replies
- 1.8k views
-
-
என்னா நான் உனக்கு ஆன்ட்டி இந்தியன்னா
-
- 2 replies
- 1.8k views
-
-
பசிவந்து உணவு உண்டால் முடிவு இன்பம் தரலாம் உணவைக் கண்டு பசிவந்தால் முடிவு துன்பம் தரலாம் உணர்ச்சி வந்து உறவு கொண்டால் முடிவு இன்பம் தரலாம் உறவுக்காக உணர்ச்சி கொண்டால் முடிவு துன்பம் தரலாம் காதல் வந்து அழகைக் கண்டால் முடிவு இன்பம் தரலாம் அழகைக் கண்டு காதல் வந்தால் முடிவு துன்பம் தரலாம் வாழ்வதற்குப் பொருள் தேடினால் முடிவு இன்பம் தரலாம் பொருள் தேடுவதே வாழ்க்கையானால் முடிவு துன்பம் தரலாம் பாஞ்சின் கவி படிப்போருக்கு கவியா..? கிறுக்கலா...?
-
- 17 replies
- 1.8k views
-
-
-
நிம்மதி தேடி வந்த அந்நிய தேசத்தில் என் பிழைப்பு; என் மதி நிறைந்ததோ சொந்த மண்ணின் நினைப்பு. மன அமைதி இழந்து நாளும் வாழ்கிறேன் வாழ்க்கை; தாய்மண்ணின் வாசத்தை நுகரத்துடிக்கும் நெஞ்சு. சோர்வுற்ற வேளை தந்தையின் ஆதரவும் நோயுற்றவேளை சாய்ந்திட அன்னை மடி பிரிந்து வாழ்வோம் என மறந்து சண்டையிட்ட சகோதரங்களின் இனிய பாசம் இவை இழந்தேன். ஓலைப்பாய் நித்திரை தந்த சுகம் நினைந்து - இங்கே பஞ்சு மெத்தையில் கூட நிம்மதியில்லா உறக்கம். ஓய்வுக்காய் மேலைநாட்டு மக்கள் செல்லும் தேசம் அது எம் தாயகம் போல் மன அமைதி தரும் இடமே. அந்நிய மண்ணில், அந்நியனாய் வாழும் நானும் -ஏங்குகிறேன் அவ் அந்நியன் போல்; என் தாய்மண்ணில் வாழ்ந்திடவே!
-
- 9 replies
- 1.8k views
-
-
வெறிச்சோடிப்போன வீடுகளும் வீதிகளும்.... பசித்து பின் நொந்துபோன அனாதை நாய்களின் ஈனக் குரைப்புகளுடன் அடங்கிப்போயின! கோயில் திருவிழாக்கள் காணாத மக்கள் கூட்டத்தினை - அகதி மக்கள் நிரப்பி வழிக்க... செஞ்சிலுவை சுமந்த சாலைகளும் அப்படியே! வான் பறவைகளின் இரைச்சல்களில்.. அதைவிடச் சத்தமாய்... ஓலமிட்டது நாங்கள்தான்! இரண்டுமாடி கட்டிடத்தின் "உயரிய பாதுகாப்பில்" நாமிருந்தபோதும், பயத்தினில் பரித்தவித்து உயிரை... கையில்தான் வைத்திருந்தோம்! வெஞ்சினமோடு வந்த பகையை வெறியேற்ற எண்ணாத வரிப்புலிகள் , பக்குவமாய்ப் பதுங்கிப் போன பின்னும், வெறியாட்டம் ஆடிக்கொண்டே... உள்நுழைந்த "விஜயன்கள்" துணைநின்ற பறவைகளின் குறியிலிருந்து, இந்த ஐந்து வயது கவிக்குஞ்சு ஐந்தடி தூரத்தில்…
-
- 13 replies
- 1.8k views
-
-
கருவாச்சியுடன் சில மணிநேரங்கள்........ பெண்மைக்கு பெயர் சேர்த்த பேரரசி பேடை என்று இகழ்ந்தவரை பேசு என்புகழ் என பெரு மார்பு தட்டி நின்றவள் துணையின்றி வாடாமல் துணிந்து நின்ற தமிழிச்சி கடந்த சில வாரங்களாக கவிப்பேரரசின் கருவாச்சியை வாசித்து இல்லை இல்லை அவளுடன் வாழ்ந்துவிட்டு வந்திருக்கின்றேன். கருவாச்சி ஒற்றைவரியில் ஓராயிரம் அர்த்தங்கள் புரிய வைத்தவள். பெண்மைக்கு பெயர் சேர்த்தவள். தமிழ்ப்பெண் என்பதை தவறேதுமின்றி தளராத துணிவோடு நிறைவேற்றிக்காட்டியவள். கட்டியவன் கையறுக்க கட்டியதால் ஓட்டிய உறவோ எட்டி உதைக்க ஒற்றையிலே நின்று பற்றையாய் படர்ந்தவள். வாழும்போது அவளடைந்த வேதனைகள் நெஞ்சை நெருடிச்சென்றன. வாழ்த்துக்கள் கவிப்பேரரசே.....
-
- 6 replies
- 1.8k views
-
-
குறும்பு கலந்து எழுதப்படும் குறுகிய பாவாக இருப்பதால் இரட்டை அர்த்தம் தொனிக்க குறும்பா என்று பெயரிட்டார்கள். மறைந்த எமது ஈழக் கவிஞர் மகாகவியே இதற்கு முன்னோடி. வாழ்க்கையில் நடக்கும் சிறிய சம்பவங்களிலுள்ள நகைச்சுவையை அல்லது சாதாரண சம்பவங்களுக்கே நகைச்சுவையையூட்டி குறும்பாக்களை எழுதமுடியும். நமது தமிழில் அத்தகைய இலக்கியவகையிருக்கும்போது ஏன் நாம் லிமெரிக்கென்று பிறமொழிப் பெயர் கொடுத்து எமது தமிழின் ஆற்றலை இருட்டடிப்புச் செய்கிறோமென்று தெரியவில்லை. இதே வகையில் ஆத்திசூடி போன்ற குறுகிய கவிவரிகளையும் குறட்பாக்களையும் சேர்க்கலாம். தமிழில் போதிய பாவகைகளுண்டு. நாம் எதற்காக கைக்கூவை ஜப்பானிலிருந்து இறக்க வேண்டுமென்றும் தெரியவில்லை. இப்படியே போனால் ஒரு காலத்தில், தமிழ் தனது பாவ…
-
- 2 replies
- 1.8k views
-
-
அகிலமெங்கும் உன் பெயர் குழந்தை அடிமை நாட்டில் நீ ஓர் தீவிரவாதி! ஆம் நீ ஓர் தீவிரவாதி! பார்வைக் கணையால் பதைக்க வைக்கும் நீ ஓர் தீவிரவாதி பறக்கு முன்னே உன் இறகொடித்த பின்னும் பார்வையால் கொல்லும் நீ ஓர் தீவிரவாதி! மனிதம் இழந்த மனிதர் மத்தியில் மனம் தேடும் நீ ஓர் தீவிரவாதி! அப்படிப் பார்க்காதே அன்பே அதைத்தாங்கும் வலிவெமக்கில்லை மன்னித்து விடு தேவதையே இது மானிடர் வாழும் பூமி! தேவதைகளுக்கு இங்கே இடமில்லை! இல்லாத இறைவைனின் இறையாண்மை இங்கு வேதம்! அரசியல் சட்டமென்றோர் அரக்கச் சட்டையணிந்த அசுரர் வாழும் அவனியிப் பூமி! தமிழனாய் பிறந்ததால் தன்மானம் இருப்பதால் சுடப்பட்டாய் நீ சுதந்திரம் கேட்டதால்! …
-
- 2 replies
- 1.8k views
-
-
-
ஆடிப் போனது வாழ்க்கையா...? ------------------------ ஆடிக் கலவரத்தில் ஆடிப் போனது நாட்டு நிலவரம் என்பதால் ஆவணியில் அவனியின் ஆதரவுக்காய் ஆலாய்ப் பறந்தும் பயனில்லாது புரட்டாதியில் புதிய படை புறப்பட்டு புரட்சி செய்ய முற்பட்டு ஐப்பசியிலும் எப்பசியும் தீராத முட்டுக்கட்டை முகடாய் விரிய கார்த்திகையில் காரிருள் நீக்கும் காவலர் படை ஆகுதியாய் களமிறங்கி மார்கழியில் மரபுப் படையாய் மதங் கொண்டு போராடி தை பிறந்தால் வழி பிறக்கும் தமிழர் நம்பிக்கை பொய்த்துப்போய் மாசியிலும் மனதிலொரு நம்பிக்கை முளை விடும் எண்ணம் பொதிந்து பங்குனியில் சகுனிகளின் சதிவலை நீண்டு விரிந்து சதி செய்ய சித்திரையில் இத்திரை விலகும் கனவுடன் தமிழ் வருடம் தொடங்க வைகாசியில் வ…
-
- 11 replies
- 1.8k views
-
-
கார்த்திகைப் பூவோடு, தீபங்களை உன் கரங்களில் ஏந்தியவாறு வாரீரே... இன்று வருவீர்கள் நாளை வருவீர்கள் என்று பூமியின் வேரில் ஒளியின் அடியில் காத்திருக்கின்றோம் .... என்னை பெற்ற தாயே என் தோழியே,என் உறவுகளே உங்களைக் காண.. கல்லறையில் விழித்தவாறு தினமும் வானத்தைப் பார்க்கின்றேன் என் சிறகுகள் பறிக்கப்பட்டாலும், நாளை நீங்கள் சுகந்திரமாக பறப்பதை காணத்தான் காத்திருக்கின்றேன்... என் கண்களைக் கொள்ளை கொள்ளும் காட்சி ஒன்று தெரிகிறதே... என்ன அழகு என்ன அழகு ஒளி கொண்ட எங்கள் கல்லறைகளில் மேலும் தீப ஒளி ஒளிரட்டும் வாசமுள்ள கல்லறையின் மேல் மேலும் காத்திகை பூவின் நறுமணம் வீசட்டும்.... மரணங்களில் நாங்கள் வாழ்கின்றேம் ஒவ்வொரு ம…
-
- 9 replies
- 1.8k views
-
-
நினைவுப்படிமங்களிலிருந்து எழும் ஓலக்குரல்கள் ஈனஸ்வரத்தில் ஒலிக்கிறது யாருக்கும் கேளாமல், மனக்காயங்களிலிருந்து கசியும்நிணநீர் கோடுகளாய் உறைந்து வடுக்களாய் வதைக்கின்றன , யாருக்கும் தெரியாமல் , வலுவிருந்து சில கணம் சோர்ந்து ஓய்கிறது_ உடல் கனமாய் விழுகிறது . துரோகியா நான் ? ஓரத்தால் விலத்திவந்து _இங்கு வீரக்கதைகள் பேசவில்லை செத்தவர்கள் மீதேறியென்று _அந்த சரித்திரம் பாடவில்லை , நெருப்பில் நீராடிய மறவர்களின் தேகவாசமிது _ என்று தேவாரம் இயற்றவில்லை . குண்டுவிழும் தேசத்து தெருக்களில் ஆற்றாமையுடன் அலைந்த அதே கணவிளைவுகளே இங்கும் துரோகியா நான் ?
-
- 6 replies
- 1.8k views
-
-
முற்குறிப்பு - வழக்கம் போல் ஓரளவு நீண்ட கவிதை, பொறுமை உள்ளவர்களுக்கு மட்டும்.. - இது போன்ற தொனிப்பொருளில் நான் எழுதுவது குறைவு போட்டி காரணமாக எழுத விழைந்தேன் .(ஏனென்றால் உணர்வு பற்றிய கவிதைகள் பாதிப்பது அதிகம் என உணர்ந்ததால், பற்றும பழைய கசப்புகள் ) விழிபற்றி விதையாகி... (வழங்கப்பட்ட கருப்பொருள் விழியதன் வழியினிலே) எழுதியவர்: மதுரகன் செல்வராஜா துடிக்கின்ற விரல்களிலிருந்து கண்களைப்பற்றி ஆயிரம் கவிதைகள் எழுதவேண்டும் - காதல் மயக்கத்தில் அல்ல... கண்ணீர் பற்றியெரியும் கதைகளையும் வற்றிப்போன விழிகளையும் கொண்டு இன்னும் சிலிர்க்கின்ற மயிர்களும் புடைக்கின்ற நரம்புகளும் கொஞ்சம் மீதமிருப்பதை எதிரிக்குப்புலப்படுத்த வலிக்கின்ற இதயங்களுடன…
-
- 10 replies
- 1.8k views
-
-
சுதந்திரத்தின் வலி தெரியாது தந்திரத்தால் வந்த சுதந்திரத்தை கொண்டாடுதாம் சிங்களம் தமிழனின் ரத்த வாடையுடன் கொண்டாடுதாம் சுதந்திரத்தை கேடுகெட்ட சிங்களம் ரெண்டுக்கும் சுதந்திரம் போய் கனகாலம் வடக்கில் ஒரு கூட்டம் சுதந்திரம் எங்கேயெண்டு தேட கிழக்கிலே ஒரு கூட்டம் உதயமாகுதெண்டு லூசுக் கதை கதைக்குது சுதந்திரம் போய் கனகாலம் வெள்ளை போட்ட பிச்சையை போராடி பெற்றதெண்டு கொண்டாடும் பே சிங்களமே சுதந்திரம் உனக்குமில்லை எனக்குமில்லை என்பதை எப்பொழுது உணரப்போகிறாய்...?
-
- 18 replies
- 1.8k views
-
-
ஒரு நிமிடம் தனித் தனி.... என்னன்பே.. நீயெங்கே.. ஒரு நிமிடம் தனித் தனி.... என்னன்பே.. நீயெங்கே.. அலைகளிலே வலி வலி என்னுயிரே ... நீயெங்கே.. சின்ன அலைகள் கண்டே ஓடிடும் உன் கொலுசுப் பாதமே.. பேரலைகள் வந்தே மூடிய என்னழகே நீயெங்கே.... இந்தக் கடலன்னை -என் தாயென தினம் மணல்மடி து}ங்குவாய்..... அந்த அலைகளில் வரும் நுரை கண்டு - பால் பொங்குதே ஏங்குவாய்...... அள்ளித் தந்த கைகளே.. இன்று அன்பைக் கொல்வதா.... சீற்றம் கொண்டு சீறியே.. - எம் செல்வம் பறிப்பதா.... ஐயோ... நம் விடியலின்னும் து}ரமில்லை -என்ற காதலியை இன்று காணவில்லை ஒரு நிமிடம் தனித் தனி.... என்னன்பே.. நீயெங்கே..
-
- 11 replies
- 1.8k views
-
-
துள்ளி எழும் நீரலை எட்டி நோக்க அது கண்டு நாணல்கள் நாணிக் குனிய தமிழ் நங்கையர் நளினம் பண்ண வன்னி மண்ணெடுத்து நயந்தது ஓடியது பாலி ஆறு. தங்கத் தலைவன் சேனையது வீரச் சமர் முடித்து இளைபாற தாகம் தீர்க்க நாலு துளி நீர் வழங்கி பெருமை கண்டது அது..! காட்டிடை நகரும் அன்ன நடையில் அழகு கண்டு வன்னியனின் வீரமதில் வரலாறு கண்டு தம்பி சேனையதன் வெற்றியில் சுதந்திர மூச்சிழுத்து வாழ்ந்த ஆறு இன்று.... ஈனர்களின் ஒற்றர்களின் காக்கவன்னியச் சகோதர்களின் காட்டிக் கொடுப்பில் வறண்டே போனது..! தமிழ் விளையாடிய நிலமதில் சிங்களம் அரங்கேறுது. நாரைகளும் நாணல்களும் கூடி விளையாடிய நீரதில் புத்தம் சிலை வைக்குது..! பிறை பங்கு பிரிக்குது..! பாலி ஆறு நாளை வரைபடத…
-
- 8 replies
- 1.8k views
-
-
இத்தாலி எருமையின் எட்டப்பன் நீதி கவிதை - இளங்கவி தமிழனின் இனத்தையே நம்பவைத்து கழுத்தறுத்த கரு நாய் நீ தீயே...... தமிழினம் உனை மறவா இதுவே உன் தலைவிதியே..... துரோகத்தின் கலைக்கூடம் தமிழன் துன்பத்துக்கு ஓர் உருவம் தமிழனின் சரித்திரத்தில் நீ தவறிவிட்ட ஓர் அகரம்.... கவிதையால் நமை தடவிவிட்டு கத்தியால் கழுத்தறுத்த கடைசித்தமிழனாய் இருந்துவிடு :இல்லையேல் நம் ஆயிரமாம் உயிர்களுடன் உடன் கட்டை ஏறிவிடு..... தவறிய சகோதரத்தை தட்டிவைத்தான் நம் தலைவன் நெளிவான நடைபாதை நிமிர்த்திவைத்தான் நம் தலைவன்; அதை சகோதர யுத்தமென்று எம் தலையை குனியவைத்தாய் கடைசியில் இத்தாலி எருமையின் எட்டப்பனாய் மாறிவிட்டாய்..... தமிழுக்காய் உன் பதவி …
-
- 3 replies
- 1.8k views
-
-
புணர்ச்சியின் பின் பெண் சிலந்தி ஆண் சிலந்தியை கொன்று தின்பதுபோல் ஈன்ற குட்டிகளை தின்னும் கரடிகள் கடற்சுறா போல் தோழில் சுமந்தவர்களை தோழில் இருந்தவாறே தலையை கடித்து குதறிய பொழுதுகள் ஏழாண்டுகள் கடந்தும் விடியாது விறைத்து நிற்கின்றது. யானையை கொன்று தந்தம் எடுப்பதுபோல் பிடரியில் அடித்தும் முதுகில் குத்தியும் தன் விரலைக் கொண்டே கண்ணில் குத்தி குருடாக்கிக் கொன்று கொன்ற பின் கட்டை விரலை வெட்டி எடுத்து கைநட்டு வைத்து பெற்ற பெருவாழ்விலிருந்து நேற்று நீலிக்கண்ணீர் வடித்தோம் இன்று அதற்கும் நேரமில்லை நேற்று எரியிற வீட்டில் புடுங்குவது லாபம் என்ற சூழல் இன்று எரிப்பதற்கு க…
-
- 7 replies
- 1.8k views
-
-
ஈமத்தாழி - தீபச்செல்வன் ஈமத்தாழி மஞ்சளும் சிவப்புமான ஏதேதோ பொருட்களெல்லாம் தோரணங்களாக துயிலும் இல்ல நினைவுப்பாடலை முணுமுணுக்கிறான் யாரோ ஒரு சிறுவன் அழ முடியாதவர்களுக்காய் வானம் உருக விளக்குகளின் ஒவ்வொரு துளி நெருப்பிலும் தெரிந்தன களம் சென்ற வீரர்களின் புன்னகை மற்றும் இறுதிக் கையசைப்பு துயிலும் இல்லங்களின்மேல் முகாங்கள் கல்லறைகளின் மேல் காவலரண்கள் சிதைமேடுகளின் மேல் துப்பாக்கிகள் மண்ணுக்காய் மாண்டுபோனவர்கள் உறங்கும் மயானங்களைகளிலும் துப்பாக்கிகள் புதையுண்ட சிதைகளோடான யுத்தம் இன்னும் முடியவில்லை வாழ்தலும் இல்லை நினைவுகூர்தலும் இல்லை கண்ணாடிகளெங்கும் தெறி…
-
- 0 replies
- 1.8k views
-