Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தோற்றவன் நான் (ஒருபேப்பருக்காக கோமகன் ) சோகங்கள் ஆயிரம் மனதில் இருந்தாலும் சோம்பியே இருக்க விடவில்லை புலத்து வாழ்க்கை......... எல்லோரையும் போல விசைப்பலகையில் தேசியம் பேச எனக்கு தெரியவில்லை. தோற்றுப் போனோம் என்ற வரியில் நானும் பங்காளிதானே........ உண்மை இதை மறந்து விசைப்பலகையை உடைப்பதில் யாருக்கு என்னபயன் ???????? ஆனாலும், புலத்தில் உண்மையை மறைத்தால் தான் கதாநாயக வேடம்.... நன்றாகத்தான் கட்டுகின்றார்கள் புலத்தில் ஒருசிலர் கதாநாயக வேடங்களை......... வந்தாச்சு வந்தாச்சு கோடைகாலமும் வந்தாச்சு இடத்துக்கு இடம் உல்லாசப் பயணமும் வந்தாச்சு பண்ணை வீடுகளில் பார்பர்கியூ பார்ட்டியும் வந்தாச்சு வாட்டிய இறைச்சில் என் தேசியமும் அரைபடும் ......... தோற்ற …

    • 38 replies
    • 3.2k views
  2. Started by பாகன்,

    இனி யவளே என் இதயத்தில் நிறைந்தவளே இனி என்னுள்ளே எனக்கென்றோர் இதயமில்லை இனி நீ இன்றி என் வாழவிலு மொருத்தியில்லை இனி நீயேதான் என்றுமெந்தன் வாழ்வினெல்லை நீ இருக்கும் வரை தான் இனி நானிருப்பேன் நின் முகமலர் வினை தான் நிதம் பார்த்திருப்பேன் நின் கூந்தலில் மலர்ச் சரம் இனி நானாயிருப்பேன் நின் பாதங்கள் படும் நிலமும் நானா யிருப்பேன் நீ யெனக்கிந்த மண்ணில் வந்த வெண்ணிலா நீ எனை ஆளும் ஆட்சி உந்தன் கண்ணிலா நின் பேச்சினில் வரும் சுகம் இளவேனிலா நின் விழி வழி வரும் மொழி தான் காதலா

    • 5 replies
    • 910 views
  3. இணங்கி வாழ்வதிலும் இன்றே இறந்து போ Jun 27, 2013 நான்கு ஆண்டுகள் கழிந்துவிட்டது. பாய்ந்து செல்லும் காலத்திற்குத்தான் எத்தனை வேகம் வைகாசி மாதமென்றால் தார் ரோட்டில் நெருப்பெரியும் நிலவும் சுடும் காற்றில் தேகம் தகிக்கும் இன்றும் தேசக்காற்றில் வெம்மை சொரிகிறது நாலாண்டாய் தவிக்கும் நினைவுகளும் பெருமூச்சுகளும் புழுங்கித் தவிக்கிறது கார்ப்பெற் வீதிகளால் எமது கனவுகளை புதைக்கமுடியவில்லை கைத்தொலைபேசி மணியோசைகளால் கதறல்களை மறைக்கமுடியவில்லை மலைகள் இல்லையென்றோ ஆறுகள் இல்லையென்றோ அந்திரிக்காமல் ஆழக்கிணறு தோண்டி அமிர்தம் உண்ட இனம் இன்று மினரல் வாட்டர் பருகி மீளா உவகை கொண்டோம் அக்கிரமங்கண்டு ஆர்ப்பரிந்த காலம் மலையேறிவிட்டது. உன் அயல் வீட்டில் களவா …

  4. 2006ல் என்னுடைய கவிதை அம்மா விடுதலைப் புலிகளின் வெளிச்சம் உள்சுற்று சஞ்சிகையில் வெளியாகிப் பாராட்டைப் பெற்றது.ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் குறுங்காவியத்துக்கு அடுத்து தோழன் புதுவை இரத்தினதுரைக்கு பிடித்த என் கவிதைகளுள் அந்தக் கவிதையும் ஒன்று. . அதே காலக்கட்டத்தில் தோழன் ஜெயராஜ் ஆசிரியராக இருந்த விடுதலைப் புலிகளின் உத்தியோக பூர்வ பத்திரிகையான ஈழநாதத்தில் ஊடகத்துறையைக் கண்காணிப்பாலராக புலனாய்வு துறையில் பணிபுரிந்த எழுத்தாளர் தான…

  5. பூட்டி வைத்த பைங்கிளிக்கும் பறந்து பார்க்க ஆசை வரும் பருவம் கண்ட பாவைக்கும் வாழ்ந்து பார்க்க ஆசை வரும்..! ஆசைகள் கோடி இதய அறைகள் எங்கும் பறந்தடிக்க.. சமுதாயக் கேடிகள் பூட்டிவிடுவர் அவளை கோட்பாட்டுக் கோட்டைக்குள்..! நாளும் அவள் அடக்கி வைத்த ஆசைகள் வேட்கைகளாகி வெறுமையில் கழிய ஆசைகள் அலுத்து மனதும் பாளடைந்து ஆகிறாள் பைத்தியம்..! இறுதியில் அருவமும் உருவரும் அற்ற பேய்களாய் அவள் ஆசைகள் ஆடுகின்றன. கூடி இருக்கும் மனிதரோ வேப்பிலையால் போக்குகின்றனராம் பேய்களை..!! யார் தான் புரிந்திடுவர் சமுதாயக் கோட்டைக்குள் சிறகடிக்க நினைக்கும் பேதையவள்.. உள்ளுணர்வை..??!

  6. கொள்ளை கொண்ட காதலா!!!!!!!!!! என் நிம்மதி எங்கே என்று உன்னிடமே கேட்டேன் பார், கொள்ளை அடித்தவனிடமே போய் புகார் செய்தமாதிரி என்னைசெருப்பால் அடிக்க வேண்டும்........ உன் நினைவுகளோ என்னை மூழ்கடித்து விட்டது ஒரு ஆறு கட்டுமரத்தில் ஏறி இருந்தது போல !!!!!!!! என்னைக் கொள்ளை கொண்டவனே நான் சுதந்திரமாய் சிரித்து கனகாலமாகி விட்டதடா . நான் சிரிக்க முயற்சி செய்கின்றேன் நீயோ , ஏன் அழத் தொடங்குகின்றாய் என்கின்றாய் நான் அழமுயற்சி செய்தாலோ , ஏன் சிரிக்கின்றாய் என்கின்றாய் நீ என்னதான் சொல்லவருகின்றாய் ????????? நான் சுகமாக இருக்கின்றேன் என்று ஒருவரிடமே சொல்வதில்லை....... ஏதோ இருக்கின்றேன் என்றுதான் சொல்கின்றேன் . நான் விரைவாக அமைதியா…

  7. துள்ளி எழும் நீரலை எட்டி நோக்க அது கண்டு நாணல்கள் நாணிக் குனிய தமிழ் நங்கையர் நளினம் பண்ண வன்னி மண்ணெடுத்து நயந்தது ஓடியது பாலி ஆறு. தங்கத் தலைவன் சேனையது வீரச் சமர் முடித்து இளைபாற தாகம் தீர்க்க நாலு துளி நீர் வழங்கி பெருமை கண்டது அது..! காட்டிடை நகரும் அன்ன நடையில் அழகு கண்டு வன்னியனின் வீரமதில் வரலாறு கண்டு தம்பி சேனையதன் வெற்றியில் சுதந்திர மூச்சிழுத்து வாழ்ந்த ஆறு இன்று.... ஈனர்களின் ஒற்றர்களின் காக்கவன்னியச் சகோதர்களின் காட்டிக் கொடுப்பில் வறண்டே போனது..! தமிழ் விளையாடிய நிலமதில் சிங்களம் அரங்கேறுது. நாரைகளும் நாணல்களும் கூடி விளையாடிய நீரதில் புத்தம் சிலை வைக்குது..! பிறை பங்கு பிரிக்குது..! பாலி ஆறு நாளை வரைபடத…

  8. துன்பத்தை தந்தவனுக்கே திருப்பிக்கொடு நீண்ட நாட்களின் பின் நிலவு பூத்தது போல் இவ் இரவு சொல்ல முடியாத மகிழ்ச்சி வெள்ளம் சோகம் எல்லாம் மறைத்து நிற்க மத்தாப்பு பூத்து மனம் முழுக்க சிரித்து நிற்க எத்தனையோ நாட்களாய் ஏக்கத்தோடு உறங்காத கண்கள் சேதி அறிந்த கணம் முதல் சிலிர்த்து சொரிந்த கண்ணீரில் உப்பு உறைக்கவில்லை உதிரத்தில் கலந்த தமிழ்தான் இனித்தது துன்பத்தை தந்தவனுக்கே திருப்பிக்கொடு - என்று சொன்னவன் வழி வந்த பிஞ்சுகள் ஆடுகளத்தை அசர வைத்து போர்க்களமாடி உலகமுன்றலில் - எங்கள் கதை மீண்டும் கதையாகாமல் கவனப்படுத்திய காட்சி கண்டு உள்ளம் உவகை கொண்டு சிரிக்கின்றது உளமார வாழ்த்துகின்றேன் வீரரே!!! http://inuvaijurmayuran.blogspot.ch/20…

    • 7 replies
    • 1.2k views
  9. Seelan Ithayachandran முகனூல் ஊடாக அடுத்த தீர்மானம்வரை நீதிக்காகக் காத்திரு. குளம் வற்றும்வரை பொறுத்திரு. நிலம் போனாலும் மீட்பர்கள் அதனை பெற்றுத் தருவார்களென்று நம்பிக்கை கொள். நீங்கள் போராடாமலே விடுதலை வாங்கித்தரும் இரட்சகர்கள் இவர்களென்று நம்பு. இப்படியான தரகு மீட்பர்களின் அடிபணிவு கீதம் பலமாகக் கேட்கிறது. பயணித்த பாதை குரூரமும் வன்மமும் வஞ்சகமும் சூழ்ச்சியும் தன் முனைப்பும் சந்தேகமும் நிரம்பியதொரு வாழ்வின் இருண்ட பக்கங்கள். அங்கு மகிழ்ச்சியும் இருந்தது துரோகங்களுக்கும் குறைவில்லை. துயரமும் இருந்தது நிலம் மீட்ட நிம்மதியும் இருந்தது. இனிவரும் காலம் பட்டறிவின் பரிசோதனைக் களம். இன அழிப்பின் புதிய பரிமாணங்கள…

  10. தமிழினத்தை அழிக்கும் அரச பயங்கரவாதிகளுக்கு, சர்வதேச அரங்கில் என்ன விளையாட்டு?. நீ..கைகளைக்கட்டி முதுகினில் சுடுவாய். தமிழ் பெண்களின் முதுகில் காலால் உதைப்பாய். அதற்கும் 'LIKE ' போட முகநூலில் நாலாயிரம் பேர்!. சிங்களப் பேரினவாதமே.. ஒன்றை உற்றுக்கவனி. உன்னில் பத்தாயிரம் பேர் திரண்டிருந்த மைதானத்தில் எம் தேசியக்கொடியுடன் ஒரு தமிழன். Seelan Ithayachandran

  11. எங்கட ஊருக்கும் மின்சாரம்...!!!! எங்கட ஊருக்கும் மின்சாரம் - இனி அவுணில சுடலாம் பணியாரம் சும்மா குடுக்கிறாங்களாம் எல்.சி.டி இனி எல்லா வீட்டிலயும் சண் டி.வி படிப்பு தான்ரா எங்கட சொத்து வச்சான்ரா ஆமிக்காரன் அதுக்கு ஆப்பு ஆருக்கு வேணும் தமிழீழம் அதை மறந்து நாங்கள் கனகாலம்..!!! தூந்து போன துயிலும் இல்லங்கள் மறந்து போனாலும் மனச்சாட்சி கொல்லும் லாம்பு விளக்கில் மங்கிய இரவுகள் இனி ரியூப்பு பல்ப்பில் பளபளக்கும் கனவுகள்..! அன்றைய இரவில் நிலவும் நச்சத்திரங்களும் கூட இருந்தன மங்கிய வெளிச்சத்திலும் தெளிவாய் நடந்தோம் இரவுகளின் நீளங்கள் தெரியாமல் வாழ்ந்தோம். இனி ஆருக்கு வேணும் தமிழீழம் அதை மறந்து நாங்கள் கனகாலம்...!!! எங்கட ஊருக்கும் மின்சாரம்-இனி அவுணில ச…

    • 8 replies
    • 1.4k views
  12. ஆலாபனையொன்றின் சிதைவுகளிலிருந்து எழுகின்றது சீரான முனகல் ஒலியொன்று இன்றைய பொழுதுகளில், கரிய இருளூடு அந்தரித்தலையும் மெல்லிய வெண்மையொன்றை போல, நீண்ட அமைதிகளை ஊடறுத்து ஒலித்தோயும் தெருநாயொன்றின் ஊளையைப்போல, வைகறையொன்றை நோக்கி தவமிருக்கும் ஒரு பறவையின் பசியைப்போல, நிகழ்த்திப்போகிறது உணர்த்தமுடியாத எதோ ஒன்றை, மதர்த்தெழும் அடுத்தடுத்த பொழுதுகளில் எழும் அச்சங்களை தொலைக்கும் அபயகரமொன்றின் ஓங்கார ஒலியை தடுக்கமுடியாத ஊனங்களை கடக்கும் யாதார்த்த கணங்களில் தேவகணங்களின் ஆதரவுப்பார்வைகளை, எதிர்பார்த்து கிடக்கிறது ஒலி எழுப்பிய அந்த சிதைவுகள். இருந்தபோதும்.................... ஆலாபனைகளூடான நீடிக்கும் அந்த ஒலிமட்டும் ஒலித்துக்கொண்டே …

  13. பெரியாரின் தம்பி பிரபாகரனின் தொண்டன் பாரதிராசாவின் சீடன் சத்தியராசாவின் தோழன் சீமானின் ஆசான் புலியாக வாழ்ந்த காந்தி சினிமாவில் இருந்தும் போராளிகளைத்தந்தவன் எதைச்செய்தாலும் - அதில் ஈழத்தமிழர் நலன் சேர்த்தவன் எங்கு சென்றாலும் - எமக்காக இரு சொல் பேசியவன் இடியாக இறங்கியது செய்தி இழந்து நிற்கின்றோம் எம் நெஞ்செல்லாம் வீற்றிருக்கும் ஒப்பற்ற தோழனே அண்ணனே உன்னை மறவோம் நாம் தமிழிருக்கும் வரை உன் பெயர் இருக்கும் உன் கனவு பலிக்கும் அதை கண்ணால் காண எம்முள் வந்து பிறப்பாயாக...........

  14. வீர மறவனின் விழுதொன்று வேரறுந்து வீழ்ந்தது. தூர நிலத்தில் ஆழ்ந்து துயிலுகின்றது பாரெல்லாம் நாம் தமிழராய் அவன் பேர் சொல்லி விம்முகின்றது பாரதியின் சீடனாய் பல களங்கள் அன்று பாதையிலே பிரிந்து புதிய பாதையிலே சென்று பலமான இனமானக் கலைஞனாய் வென்று பலம் சேர்த்தாய் ஈழவிடுதலையே வழி என்று தமிழனாய் நாம் என்று தரணியெங்கும் தோழனாய் மார்க்சியவாதியாய் மானிலத்தில் வாழ்ந்து ஈழத்தவன் நான் இல்லையென்று ஏக்கமடைந்து வாழப்பிறந்தவன் தமிழன் என சீற்றம் கொண்டு ஈழத்தமிழன் கரங்கோர்த்து வீரப்போரில் தலைவன் வழியில் நேர்கண்டு அவன் தம்பியாகத் தனை வரிந்து கொண்டு நம்பியவன் நாளை எமக்கு நாடு என்று உயிரொன்று மட்டுமே என் சொத்து அதையும் பயிராக்குங்கள் ஈழத்தம…

  15. பிரபாகரனைப் பற்றிப் பேச உனக்கு தகுதி உண்டு என்றால்.. பிற நாய்களைப்பற்றி கவலைப் படாதே..! ************************************ மு.வே.யோகேஸ்வரன் ********************************* விடுவது நாங்கள் மூச்சுத்தான் நண்பா.. ஆனால் விதைப்பது மண்ணில் என்ன தெரியுமா? தமிழின் விதை! வாழ்ந்தான் தமிழன் செத்தான் என்பது வரலாறு அல்ல..ஒரு செய்தி..! பிறந்தான் தமிழன்...வீரம் செழிக்க வாழ்ந்தான் போராட்டக் களத்தில் மடிந்தான்.. என்பதே வரலாறு! பிரபாகரனைப் பற்றிப் பேச உனக்கு தகுதி உண்டு என்றால்.. பிற நாய்களைப்பற்றி கவலைப் படாதே..! பிரபாகரனைப்பற்றி அறிய நீ நினைத்தால் .. வரும் சோதனைகளை எண்ணி வருத்தப் படாதே.. பெரும் வீரர்களின் வரலாற்றைப் பற்றி …

    • 3 replies
    • 1.1k views
  16. மீண்டும் நீ மறக்க முடியா நினைவாக....! Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Sunday, May 26, 2013 comments (0) எதிர்பாராத நிகழ்வுகளாய் வந்தடைகிற நட்புகளும் உறவுகளும் உன்னவர்களாகவே வருகிறார்கள்....! நீண்ட வருடங்களைக் கரைத்திருக்கிற காலக்கதவுகளை உடைத்தபடி கனவுகளோடு இலட்சியம் சுமந்து உன் தோழர்கள் மீண்டும் வருகிறார்கள்....! உன்பற்றியும் உனது வீரமரணம் பற்றியும் நேரமெடுத்துப் பேசுகிறார்கள் நினைவழியா உன் வாழ்வை நேசிக்கிறவர்களாய்....! நினைவிலிருந்து கழற்றியெறியப்பட்ட தடங்களை மீளவும் புதுப்பித்துச் செல்கிறார்கள் மீண்டும் நீ மறக்க முடியா நினைவாக....! வரலாறுகள் என்றுமே வெற்றிடமாய் ஆவதில்லை நீ வழிகாட்டிய பாதைவழி அவை தொடர்ந்து கொண்டே…

    • 5 replies
    • 1k views
  17. இன்று வரைக்கும் அழுகின்றோம் எங்களுக்காக கொஞ்சம் பேசுங்களேன் எங்கள் முற்றங்களில் ஓடி விளையாடிய குழந்தைகள் இன்று உடல் சிதைந்த புகைப்படங்களாக பார்க்கின்றோம்... புள்ளிக் கோலமிட்டு பிட்டு அவித்து ஊட்டிய அம்மாவின் கையில்லை -இன்று தோளில் சுமந்து பள்ளிக்கு கொண்டு விடும் அப்பாவுமில்லை... கொடியேற்றி கொண்டாடினார்கள் நாங்கள் படங்குக்குடிசையில் திண்டாடிய போது சிரித்தார்கள் எங்கள் தேசம், நாங்கள் வாழ்ந்த சொர்க்க பூமி சுடுகாடாய் தெரிந்த போது மானமென்ற ஒன்றுக்காய் மடிந்த பெண்ணின் உடலை நிர்வாண படுத்தி புகைப்படங்கள் எடுத்து புன்னகைத்தார்கள்... உயிர் தப்பி வந்த பெண்களை தெரியாத பாசையில் ஏசினார்கள் அடித்தார்கள் , உதைத்தார்கள் தங்கி…

  18. ஆயிரம் கனவுகளுடனும் விழிமூடா தூக்கத்துடனும் உன்னோடு தினமும் வாழவிடும் இரவுகளும், அற்புத சுகமடி அர்த்த ஜாமத்தில் உன்னருகில் வந்து முத்தமிடும் சத்தங்களும், கட்டி அணைத்தபடியே யுத்தம் கொள்ளும் ஈருடலும் ஒவ்வோர் நாழிகையாய் வேரூன்றி கொள்வதுவாய், காலை எழுந்தவுடன் கண்ணை கசக்கிகொண்டும் உன்னை நினைத்துக்கொண்டும் மீண்டும் அந்த இரவுகளை தேடி..

  19. Started by Sembagan,

    நண்பா றெக்ஸ் இல்லம் தேடி நான் சென்றபோது இன்முகம்காட்டி எமை வரவேற்றான் எப்போ ஒருநாள் பழகிய பழக்கம் இன்றுவரை அதனை நினைவில் கொண்டான். உள்ளம் தளர்ந்து உவகையில் மிதக்க துள்ளிக் குதித்து தன் மகிழ்சியைச் சொன்னான் அன்பாய் என்னிடம் அருகே வந்து அணைத்து முத்தம் தந்து சென்றவன். தங்கிய நாட்கள் தன் கடமையை உணர்த்தி நட்பின் தன்மையை எனக்குக் காட்டி புறப்பட்ட நாளில் என்முகம் பார்த்து பிரிவுத்துயரைத் தன் கண்ணால் சொன்னான். ஏக்கப் பார்வை கண்ணில் தெரிந்தது ஏன்தான் இவன் இப்படிப் பார்க்கிறான் என்று எண்ண்ணியே நானும் அப்போ என்னைப் பிரியும் ஏக்கத்தினாலோ இப்படிப் பார்க்கிறான் என்றெண்ணி வந்தேன் வந்த சில நாட்களில் செய்தி வந்தது அதிர்ச்சியுடன் நானும் அவன் செயல்களை நினைத்தேன். பா…

    • 3 replies
    • 814 views
  20. நீலம் - வ.ஐ.ச.ஜெயபாலன் தோழி காலமாய் நுரைகள் உடைகிற மணலில் சுவடுகள் கரைய சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா? கடலிலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய் நம்மிலும் எதோ படர்கிற தென்றேன். மீன்கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய் உன் கண்களில் எனது பிம்பம் அசையும். ஆண்டு பலவாகினும் நரையிலா மனசடா உனக்கென்றாய். தோழி இளமை என்பது வாழும் ஆசை. இளமை என்பது கற்றிடும் வேட்கை. இளமை என்பது முடிவிலா தேடல்; இளமை பிறரைக் கேட்டலும் நயத்தலும். இளமை என்பது வற்றாத ரசனை இளமை என்பது நித்திய காதல். இளமை என்பது அயராத ஆடலும் பாடலும் கூடலும் என்றேன். தோழா உனக்கு எத்தனை வயசு? தோழி எனக்கு சாகிற வரைக்கும் வாழ்கிற வயசு.

  21. யன்னலால் எட்டிப்பார்த்து எக்கத்தொடு மெல்ல திரும்புமோ நிலவொளி, நிசப்தத்தால் நிலைகுலைந்து வெதும்பி வெளியேறுமோ மலர்தடவிய தென்றல், நிழல்கரங்களால் நிலம் தடவித் தவிக்குமோ தளர்ந்து கொம்பாய் கிடக்குமோ செம்பருத்தி, மேட்டுக்குள் கடக்கும் எலிகள் இறங்கி உலாவுமோ, மேசை லாச்சிகளில் குட்டிகளை ஈனுமோ, என்னதான் நிகழும் எனது அறையில் !! சுவரில் மாட்டிய அழகியின் படத்தில் கூடுகட்டிய வண்டு ஆணியடித்த தடத்தில் உறங்கிக்கிடக்கும் ஆடை கொழுவியில் அமைதியாய் கிடக்கும் வலைபின்னி சிலந்தி, கதவில் ஒட்டிய படம் மக்கிப்போயிருக்கும் -அந்த கதவும் கொஞ்சம் இறங்கிப் போயிருக்கும். மேசையும் கதிரையும் புத்தகங்களும் தூசுகளில் கிடக்கும். மையிறுகி பேனையும், தோல்வெடித்துக் காலணியும், சக்குப்பிடித்து எண்ணைப் போத்…

  22. *** இலை ஓன்று கிளையில் இருந்து பெயர்ந்து விழுகிறது அதன் ஓலம் கேட்டு திரும்புகிறேன் மிகுந்த வலியோடு மண்ணில் புலம் பெயர்ந்து கிடக்கிறது இனி ஒரு போதும் கிளைக்கு திரும்ப முடியா மரண வேதனையோடு மட்கி போக துணிகிறது மண்ணோடு . http://www.saraladevi.com/2013/06/blog-post.html

  23. யூன் 06ம் நாளினிலே...! ------------------------ சிங்களத்தை எதிர்த்தெழுந்த சிறுத்தையொன்று நஞ்சுண்டு தனைத்தந்த நாளே யூன் 6! தீப்பொறியாய் வீழ்ந்தவனோ தீமூட்டி வைத்தபின்னால் திடங்கொண்ட இளைஞர்படை தீவெங்கும் மேலெழுந்து தம்பங்கை மீட்பதற்காய் செங்களத்தில் நின்றாரே! நின்றவரும் வித்தானார் நினைவெங்கும் முத்தானார் நிலம் மீட்கும் கனவோடு நிலத்துக்குள் புதைந்தோரை நினைத்தவிட்டு போகின்றோம் மனதுக்குள் வாழ்கின்ற எங்களது தேசமதை எப்போது மீட்டெழுவோம் என்றதிசை புரியவில்லை! எங்களுக்குள் பிரிவுநிலை எதிரிக்கு ஏற்றநிலை ஏற்படுத்திக் கொடுப்பதனை எப்போது மறப்போமடா! இவன் நாமம் சொல்வதற்கு எந்தனுக்கும் தகுதியில்லை இவன் நாமம் நினைப்பதற்காய் எடுத்துவந்தேன் சிலவரிகள் நஞ்சுண்டு எழவை…

  24. Started by ஷீ-நிசி,

    அம்மா தடுத்தாள்! சின்னப் பிள்ளைகள் தீக்குச்சிகளை கையில் எடுக்கக் கூடாதாம்! அம்மா, உனக்கு தெரியாதா?! எனைப் போல ஒரு பிஞ்சுக்கரம்தானே இவைகளையெல்லாம் அடுக்கியது என்று! நகரத்துக் குழந்தை, தீக்குச்சியை தொட்டால் திட்டு விழும்! கிராமத்துக் குழந்தை, தீக்குச்சியை தொட்டால்தான் சோறே விழும்! குழந்தையும் தெய்வமும் ஒன்றாமே! ஒரு தெய்வம் ஓட்டலில் துடைக்கிறது! ஒரு தெய்வம் தீக்குச்சி அடுக்குகிறது! ஒரு தெய்வம் ஸ்பேனரால் அடிவாங்குகிறது! ஒரு தெய்வம் பிச்சை எடுக்க வைக்கப்படுகிறது ஆம்! கீழே தெய்வங்கள் குழந்தைகளாய் வேலை செய்துகொண்டிருக்கின்றன! மேலே குழந்தைகள் தெய்வங்களாய் பார்த்துக்கொண்டிருக்கின்றன!!

    • 17 replies
    • 3.5k views
  25. மறக்க முடியுமா..................? நாற்றிசையும் ஆலயமணி ஒலித்த நாற்புறமும் கடல் சூழ்ந்த ஞானியர் ஐவர் உதித்த நல்லதோர் ஊராம் எம் காவலூர் போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆண்ட ஊர் - அதில் அழகிய கடற்கோட்டையையும் கொண்டது எம்மூர் கலை வளர்ந்து தலை சிறந்து தனித்துவமாய் இருந்தது எம்மூர் மாணவிகள் எம்மனதில் இருக்கவில்லை சஞ்சலம் மான் குட்டிகள் போல் துள்ளித்திரிந்தோம் மகிழ்வுடன் எம் மகிழ்வழிக்க வந்த மாற்றான் படை பறித்தது - பல உயிர்களை அழித்தது - உடமைகளை இழந்தோம் - நண்பர்களை பிரிந்தோம் - சொந்தங்களை அகதியானோம் -அந்நிய தேசத்தில் சிறப்பாக விளங்கிய எம்மூர் சீர்கெட்டுப்போனதேனோ சிறகுடைந்த பறவைகளாய் திக்கெட்டும் வாழ்வதேனோ பசுமை…

    • 37 replies
    • 4.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.