கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
ஏய்திட மாட்டீரே! --------------------------- மண்ணுக்காய் உயிர்தந்தோர் எண்ணத்தைச் சுமந்தபடி வீட்டுக்கு வாக்களிப்பீர் விடியலுக்காய் நடப்போமென்று வீரமுடன் பேசி நின்றார்! விமோசனத்தை காண்பதற்கு வாக்களிக்க வருமாறு உலகத் தமிழ் உறவுகளும் உரிமையுடன் கேட்டு நிற்க உக்கிவிட்ட மனதினுள்ளே ஊமையாய் காயங்கள்.... புன்னைகைத்து அட்டை வேண்டிப் போட்டோம் நாம் புள்ளடியை வீட்டுக்கே! எமக்கு வாழ்வு வேண்டாம் எமது சந்திக்கு வாழ நிலம் வேண்டும் என்ற வாஞ்சையிலே வாக்களித்தோம் ஏய்திட மாட்டீரே! எங்களையாமாரே ஏய்திட மாட்டீரே!
-
- 3 replies
- 641 views
-
-
உட்காரப் புல்வெளி. எதிரே நீர்வெளி. நீர்மேல் எண்ணெயாய் சூரியன் . பால் சொட்டுகளாய் பறவைகள் . முட்டாமல் மோதாமல் இணக்கமாய் காற்று . தூரத் தூர ரயிலோசைக்கும் செவிக் கூசும் நிசப்தம் . ....................................... .......................... எல்லாம் தவிர்த்து கவனமாய் காத்திருக்கிறான் கரையில் ஒருவன் . தொண்டையை கிழித்து கண்ணைத் துளைத்த தூண்டில் முள்ளுடன் துடிக்கும் ஒரு மீனைக் காணும் ஆவலுடன் .
-
- 5 replies
- 1k views
-
-
-
- 4 replies
- 744 views
-
-
எங்க நாடு கிடக்கிற பாடு எப்படிச் சொல்லுவம் நாங்க பாணுக்கும் பாலுக்கும் நாம படுகிற துன்பத்தைப் பாரும் சோத்துக்கும் கஞ்சிக்கும் நாங்க தூங்கிறம் றோட்டில பாரும் எண்ணைக்கும் காஸ்சுக்குமாக எத்தனை சண்டைகள் இங்கு ஊழலும் லஞ்சமுமாக பாழ்பட்டுக் கிடக்குது நாடு ஆளுக்கு ஒரு பங்காய் அரசியல் வாதிகள் எல்லாம் அறுத்து தின்றனர் நாட்டை அந்த பெரிய பெரிச்சாளிகள் போல எங்கள் உழைப்பெல்லாம் சுரண்டி அந்த பூசுவா கூட்டங்கள் போலே பொல்லாத திருடர்கள் இவர்கள் சிலர் போலி சோஷலிசக்காரர் இனவாதம் எல்லாம் பேசி இருந்ததை எல்லாம் குழப்பி இனத்துக்க குரோதத்தை வளர்த்து இப்போ இருக்குது நாடு கவுண்டு வீழ்த்தினோம் தமிழனை என்றும் வெற்றி விழாக…
-
- 4 replies
- 468 views
-
-
தலைநிமிர்த்தி எழுந்திடுடா தமிழா தமிழைக்காப்போம் -உடல் தளர்வகற்றி புறப்படுடா தமிழா விடியல் காண்போம்- எழும் தடை தகர்த்திட தோள்கொடுடா தமிழா தமிழீழம் அமைப்போம். நேற்றுவரை வானேறினாய் காற்றாகி களமாடினாய் இன்றேன் போயுறங்குகிறாய் கோழைமகனாடா நீ -மாவீரன் பண்டாரவன்னியன் குலமடா மாற்றுவழி யேன்தேடி அலைகிறாய் ஏற்றடா ஏற்று போர்க்கொடி ஏற்று தோற்றிடில் மார்பில் குண்டை ஏந்து. திசையெட்டும் விடுதலைத்தீ மூட்டினர் தீந்தமிழோடு வாழ்ந்திட தமையீந்தனர் வசைகொட்டியவரை இகழ்கிறாய் -நீ வாழ்ந்திட அவர்புகழை போர்க்கிறாய் முறைகெட்டு பகைமடி அடைகின்றாயே -நீ திறங்கெட்டு போய்விடின் நாயென்றாகும் ஏற்றடா ஏற்று போர்க்கொடி ஏற்று தோற்றிடில் மார்பில் குண்டை ஏந்து. விலை கொண்டா வாங்குவ…
-
- 4 replies
- 670 views
-
-
ஏற்றி வைப்பாய் விளக்கு நாடி வந்தோம் சக்தி உன்னை நல்ல வழி காட்டு நாடு இன்றி அலையும் தமிழர் வாழ்வில் ஒளியேற்று! வாடி நிற்கும் பயிருக்கும் கருணை மேகம் நீதான் வந்து நின்றோம் உன்னடிக்கு எங்கள் துணை தாய் தான்! குங்குமத் தாயே எங்கள் குறை களைய வேண்டும் கும்பிட்டோம் உன் பதமே நிறை அருள வேண்டும் எங்கும் நிறை சக்தியம்மா நீதான் வழிகாட்டி வாழ்க்கைச் சாகரத்தில் கரை சேர்க்கும் படகோட்டி மங்களத்தின் மறுபெயரே மகாலஷ்மி நீதானே சங்கடங்கள் தகர்க்கின்ற சங்கரி நீதானே பொங்குதனம் கொண்டவளே போற்றுகின்றோம் உன்னை பகை எரித்து நாட்டிடுவாய் எம் வாழ்வில் நன்மை! கொடுமை கண்டு கொதித்தெழும் கொற்றவையே தாயே! கொடுக்கும் கரம் கொண்டவளே உமையம்மை நீயே எதிர…
-
- 0 replies
- 927 views
-
-
-
- 0 replies
- 788 views
-
-
ஆசைகள் அங்கும் இங்கும் ஒன்று தான்... உடலின் சேர்க்கையில் திரவங்களின் கலப்பில்.. வந்தன விளை பொருட்கள்..! தாயென்றும் தந்தையென்றும் உறவுகள்.. சமூகமென்றும் மக்களென்றும் கூட்டங்கள் கூச்சல்கள்...! எல்லாமே இயற்கையின் விதிப்படி..! ஆனால்... போட்ட குட்டிகளுக்கு இரை தேட வழியின்றி மனிதன்..!! போட்ட குட்டிகளுக்காய் உடல் ஒட்டிய போதும்.. இரைக்காக இரங்கும்.. இதுவும் ஓர் உயிர்ப்புள்ள.. பிராணி தான்..! "சாட்" செய்து சோடி பிடித்து கை கோர்த்து.. காதலித்து மேடை போட்டு வேதம் ஓதி.. தாலி கட்டி தேன்நிலவு கண்டு வந்தால் என்ன.. உடல் ஒட்டி குட்டையோடு.. வீதியோரம் இழுபட்டு நொந்து நூலாகி வந்தால் என்ன விளை பொருள் எங்கும் ஒ…
-
- 2 replies
- 674 views
-
-
என்ன உலகமிது..ஐயா என்ன உலகமிது... பசியினில் மனிதன் பரிதவித்தே.. தூக்கிலிட்டு..வாழ்விழந்து போகிறதே... பார்க்க.. கேட்க மனிதத்தின் உதவியின்றி.. ஒரு சமுதாயம்.. உணவின்றி சாகிறதே.. உணவின் மேலே.. உருளுது ஒரு உலகம்.. உணவிற்காக உயிரைக் கரைத்து அலையுது ஒரு உலகம்.. பசி பசி என்றே அழுகின்ற குழந்தையை பார்த்திட மறுத்தே.. உயிரைத்துறக்கிறான் ஒரு தந்தை.. பசியில்லை என்றே.. மறுக்கின்ற குழந்தைக்கு பலவித உணவாய்ப் படைக்கின்றான் ஒரு தந்தை.. ஏற்றமும் இறக்கமும்.. ஏனிந்த உலகில்-நல் மாற்றங்கள் வருமோ மனிதனின் வாழ்வில் உனக்கான உணவை.. அளவாக அருந்து.. பிறர்க்காக உனது.. உணவினைப்பகிர்ந்து ஏழைக்கு உதவ நாளைக்கு என்றேன்.. இ…
-
- 17 replies
- 15.3k views
-
-
ஏழையாய்ப் போனேனே.... கோமேதகக் கண்ணிரண்டும் கோடி பெறும் கட்டிவைத்த முத்துக்களாய்.. பற்கள் மின்னும்.. தங்கநிற மேனியோ... கண்கள் கூசும் தாமரை அவள் வார்த்தை.. சங்கீதமாகும் எல்லாமும்.. என் சொத்தே எண்ணி வாழ்ந்தேன்... பொல்லாத செல்க் காலானால் ஏழையானேன்.
-
- 1 reply
- 853 views
-
-
ஏழையும் இறைவனும் வ.ஐ.ச.ஜெயபாலன் 1 தந்தன தான தனாதன தந்தன // தந்தன னானானா .........// தந்தன தான தனாதன தந்தன // தந்தன தானானா - தன // தந்தன தானா....னா // அகதிகளாகி உலக உருண்டையில் // அலைகிற செந்தமிழா // கபோதிகளாக இருளின் புதல்வராய் காணாமல் போவோமோ - நாம் காணாமல் போவோமோ. // ( தந்தன...... ) அகிலத்தில் எங்கள் இளைய தலைமுறை // அடியற்றுப் போகாமல் // புகழ்மிகும் எங்கள் கலைகளில் வேரோடி // பூத்திட வேண்டாமோ - நாம் // பூத்திட வேண்டாமோ // ( தந்தன .... ) பாட்டியின் பாட்டி பாட்டனின் பாட்டன் சொல்லிய கதை ஒன்றை நாட்டியம் ஆடி * ச…
-
- 14 replies
- 2.9k views
-
-
மெய்வலியும் செல்நிலையும் வாழ்நாளும் தூ ஓழுக்கும் மெய்யா யளிக்கும் வெறுக்கையிலார் வையத்து பல்கிளையும்வாட பணையணைதோள் சேய்ந்திரங்க நல்லறமும் பேணாது நின்றே யார்ப்பரிக்க திரைகடலும் ஓடியங்கே தம்முயிரைப் பேண விரண்டவர்க் கெல்லாம் எங்கனம் ஆவலுண்டு கருமையின் மேனியர் எனவசைமொழி கூற கருமயிர் தன்னை நரையிராக்கி கவலையுமறந்து மேற்றிசை வாழும் வெண்ணிற மக்களுள் பற்றிய செய்கையும் பரப்பிடு கொள்கையும் கற்றிட நம்மவர் காரணி யாதெனில் மற்றவர் புகழ்ந்திட முழுதுமே தழுவி தரணியில் தமிழினம் பொய்தழிவெய்தி காரணியின்றிக் கண்ணீர்க் கோலமாய் பூரணவாழ்வு புரிந்திட்ட வகையில் தாய்த்தமிழீழம் தறுகண் மிலேச்சரால் மாய்த்திடலறியா மாற்றலர் தொழும்பராய் தாய்பிறர் கைப்பட சகிப்பவனாகி…
-
- 0 replies
- 658 views
-
-
இனவாதச் சிங்கள அரசின் - தமிழ் இனப் படுகொலைப் பாதிப்பால் ஐ.நா.சபையில் நீதி தேவதை தற்கொலை மரணவிசாரணை மட்டும் தொடர்கிறது.
-
- 0 replies
- 807 views
-
-
பாங்கியும் நம்பியும் தம்பி நாராயணனும் போட்ட திட்டம் தமிழர் குருதி பெருக்கி.. சிவந்தது செங்கடல் அல்ல நந்திக் கடல்..! எல்லாம் முடிந்த பின் மூடி மறைக்க ஓர் அறிக்கை மறைத்ததை மூட ஓர் அறிக்கை மூடியதை மறைக்க இன்னோர் அறிக்கை.. மொத்தம் எத்தனை..??! இடைக்கிடை அருண்ட தேசத்துள்.. அமைதிப் புறாவை கட்டி இழுத்து வர ஆயிரம் தோறணைகள். சிங்களப் பேரினப் பசிக்கு சீனத்து ரகன்களின் தீச் சுவாலைக்கு அசோகச் சக்கரத்தின் அரக்கத்திற்கு அத்தனையும் பலி..! காலத்தே தெரிந்து ஓர் தப்பு காலம் கடந்து ஓர் அறிக்கை.. காலம் கடத்தி கற்பது பாடம்..! கற்றபின் பதவி உயர்வு தந்து நிற்பது கடன்...! இப்படியே போனால் உலக அமைதி என்பது …
-
- 9 replies
- 1.1k views
-
-
ஐந்திணை விக்ரமாதித்யன் குறிஞ்சி கண்ணில் தெரிவதெல்லாம் மலை முகடுகள் ஒரு நறுஞ்சுனை தொலை தூரத்தில் சிற்றாறு மரம் செடி கொடிகளில் கனி சுமந்த கிளைகள் உச்சியில் கொம்புத் தேன் கூடுகள் அதிசயமாய் துலங்கும் அருவிகள் மெளனமே இருப்பான சித்தர்கள் முன்னை பழங்குடிகள் வானம் தொடும் மஞ்சுக்கூட்டம் தண்ணீர் பட்டுத் தெறிக்கும் தேக்குகள் மூங்கில்கள் பக்கத்திலேயே பாக்குமரங்களும் ஏலக்கொடிகளில் எச்சமாய் மணம் சிந்திக் கிடக்கும் மலை முந்திரி படர்ந்து தழுவும் மிளகுக் கொடிகள் வேரில் பழுத்துக் கிடக்கும் பலாக்கள் தேன் கதலிகள் வேட்டுவ வள்ளியின் விழிப்பார்வைக்கும் எச்சில் முத்தத்துக்கும் யாசித்து நிற்கும் வடிவேலன் …
-
- 0 replies
- 739 views
-
-
ஐயையோ...ஐயையோ....என்னவோ பண்ணுது.... ------------------------------------------- யாழ் களத்தில் அஜீவன் அண்ணா தலைமையில் "டாவின்சி கோட்'டை தமிழில் சினிமாவாக எடுக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது. தமிழ்ப் படமென்றபடியால் இடையிடையே ஒரு காதல் கதை ஓடவேண்டுமென்பதும் ......இரண்டு மூன்று பாடல் காட்சிகளும் இருக்கவேண்டுமென்பதும் படம் வெற்றி பெறுவதற்கான எழுதப்படாத சட்டமல்லவா...? . முழுக்க முழுக்க யாழ் கள நண்பர்களின் பங்களிப்புடனேயே இந்தப் படம் படமாக்கப்பட இருக்கின்றது. எனவே பங்கு பெற விரும்பும் கலைஞர்கள் உடனும் தொடர்பு கொள்ளுங்கள் முதல் முதல் படமாக்கப் படும் விடயம் மங்கள கரமாக இருக்க வேண்டுமென்பதனால் அந்தப் படத்திற்கான ஒரு பாடலைப் படமாக்குவதற்கு ப…
-
- 104 replies
- 12.6k views
-
-
இருள் சூழ்ந்த கரிய மேகத் திரளிடையே அடிக்கடி விட்டு விட்டு பொழிகின்ற செவ்வானத் தூறல்களாய் சீழ் கட்டிய இரத்த வாடைகள் நிரூபனின் நாற்று வலை தாங்குவோர் இன்றி தத்தளிக்கும் ஈழ மக்களை ஏந்திட நாமிருக்கிறோம் எனும் குரலுக்கு ஏதும் செய்திய முடியாதோராய் நாமிங்கு! நேற்று முத்துக்குமார் மூட்டிய தீ முது பெரும் விடுதலைத் தீயாய் கனன்று மிளாசி எரிந்தது, அதில் காங்கிரஸின் பொய் வேடத்தை தமிழகம் உணர்ந்து கலைஞரின் வாழ்விற்கும் காற் புள்ளி குத்தி வீட்டுக்கு அனுப்பி மகிழ்ந்திருந்தது! நிரூபனின் நாற்று வலை இன்று செங்கொடி அவர்கள்; முத்துக்குமார் வரிசையில்.... நீயும் போனாயா சகோதரி- இல்லை உன் கண் முன்னே காங்கிரஸின் நர்த்தன நடனத்தில் …
-
- 4 replies
- 1.2k views
-
-
-
சாம்பல் பூக்களின் கண்ணீரை திருடும் தேசமிது .. வெந்து வடியும் ஊழியின் பெருமூச்சுக்களை தின்று களிக்கும் கூட்டமுமிது இயலாமையின் ஓலங்களின் மீது வக்கிரக்குறிகளால் புணரும் அரசுமிது.. ஒ கட்டியக்காரர்களே.. எங்கு போனீர்கள் ? சாவுப் பட்டியலில் புள்ளடியிடுகிறீர்களா ஜெனிவாவில்? கண்ணீரால் நிரம்பிய எங்கள் வாசல்களில் கால் நனைத்தீர்களே.. நீரருந்தி நிமிர்ந்து நல்ல உணவருந்தி இன்னும் ஓராண்டு உள்ளக விசாரணைக்கு ஒப்புதல் அளியுங்கள்.. பிணங்களைப் புணர்ந்தவர்கள் காவலில் தேவதைகள் சிறகு விரிப்பதாக வரைவுகளை எழுதுங்கள்... இருள் மூடிக்கிடக்கிறது எங்கள் வானம் நட்சத்திரங்களையும் சூரியனையும் தொலைத்துவிட்டு.. பேரமை…
-
- 2 replies
- 746 views
-
-
அனுராவின் அலை இன்னும் வருகுதாம் அள்ளிப் போக வாக்கை கண்டீர் என்னென்னமோ தாறம் என்று ஏமாற்றும் வித்தை பாரும் வடக்கையும் கிழக்கையும் இரண்டா பிரிச்சுப் போட்ட வந்து இப்போ என்ன கதை சும்மா பொய்கள் சொல்ல வேண்டாம் அண்ணன் தம்பி என்று சொல்லி இப்ப என்ன சமத்துவக் கதை அப்போ எல்லாம் என்ன செய்தீர் நாங்கள் பட்ட துன்பம் கண்டும் கூட ஆமியோடு சேர்ந்து இருந்து எங்கள் இருப்பை எல்லாம் தொலைத்தனீங்கள் அகதியாக்கி எம்மை அலைந்து திரிய கலைத்தனீர்கள் இனவாதப் பேய்களோட நீங்கள் இருந்ததெல்லாம் உண்மை தானே சோசலிசம் கொம்யூனிசம் என்று கொள்கை எல்லாம் சொல்லிறியள் அங்க அது ஒன்றும் இல்லை என்று அறிந்தவனும் தெரிந்தவனும் அறிவர் உண்மையான சோஷலிசவாதி ஒடுக்கப்படுபவன் உரிமைக்காய் குரல் கொடுப்பான் …
-
- 0 replies
- 289 views
-
-
ஒட்டு படை ஒழிகிறது...... ஓலங்கள் தந்தது ஒட்டுப் படை -அந்தோ ஓடியே ஒளியுது அந்த படை... அவலங்கள் ஆயிரம் தந்த படை - அந்தோ அழியுது பாரது அந்த படை... இனவாதி யோடது இருந்த படை இளைஞரை யுவதியை பிடித்த படை.... காட்டியே கொடுக்கின்ற கயவர் படை கண்களை கட்டியே கடத்திய படை... சுட்;டு வெட்டியே கொன்ற படை - அதை சுற்றியே அழிக்குது புலிகள் படை..... கொடுமையாய் கொடுமைகள் ஆடியதே கொடியாரை தமிழரை சாடியதே... கடத்தியே கப்பங்கள் பறித்ததுவே அவர் உயிர்களை வேறது குடித்ததுவே.... எத்தனை எத்தனை இன்னல்களை எண்ணியே எண்ணியே தந்ததுவே... அந்தோ பாரது அழிகிறதே ஆனந்தம் எமக்கு பிறக்கிறதே.... ஒட்டு படைய…
-
- 4 replies
- 1.5k views
-
-
கலிகாலம் பிறக்கக், காத்திருக்கும் கபோதிகள்! கண்ணீர்க் குமுறலுடன் , கண்ணில் விரிந்தது அவலம்! காற்றையும் நஞ்சாக்கிய, கனரக ஆயுதங்களின் குமுறல்! கார்வண்ணன் தேரோட்டாத, குருசேத்திரப் போர்க்களம்! கருகி எரிந்த பிஞ்சுகள் நடுவில், குருதியில் குளித்தன சருகுகள்! கூட்டாக நடத்திய கொலைக்களம்.. கூட்டங்கள் நடத்தம். கொலைகாரர்! கொஞ்சிக் குலாவுகின்றன, காந்தீயக் கோழைகள் ! கலிங்கத்து மன்னனின், கால் பட்ட தூசியும், காந்தீய தேசத்தின்.,, கதை கேட்டு விலகியோடும்! கலிங்கத்துப் பரணியில், கூழுண்ட பேய்களும், கொடுப்புக்குள் சிரிப்புதிர்க்கும்! போதிமரம் காணும் புதிய குருத்துக்கள், பாவத்தின் சின்னமாகும்! பூவேந்தி நீ செல்லும், புத்தனின் தூபிகள், போர்க…
-
- 16 replies
- 2.4k views
-
-
தமிழீழத்தை காதல் செய்து ஈகத்தால் உயர்ந்துவிட்ட ஈகியரை வணங்குதற்காய் வருகின்ற நாட்களிலே அவர் விட்டுச் சென்ற கடமைக்காய் நாமெல்லாம் கரம்கோர்த்து ஒன்றானால் தமிழீழ மண் விடியும் தரணியெங்கும் கொடி பறக்கும் தமிழினத்தின் தலை நிமிரும் தமிழரது தாகமென்ற தாயகத்தைக் காத்து நின்ற தாயகத்து நாயகரை வணக்குமிந்தக் காலத்திலே ஓரணியாய் ஒன்றிணைந்தே வாருங்கள் அணி அணியாய் ஓடிடுவான் எதிரியவன் ஒன்றிணைந்தே சேருங்கள்!
-
- 0 replies
- 563 views
-
-
அடம்பனெல்லாம் திரண்டு நின்றால் பலமும் கிடைக்குமே அடிமையெல்லாம் அணி திரண்டால் விலங்கும் ஒடியுமே ஏழையெல்லாம் எழுச்சி கொண்டால் ஏற்றம் விழையுமே நல்லாரெல்லாம் நன்றாய்ச் சேர்ந்தால் நன்மை நடக்குமே வேங்கையெல்லாம் வீறு கொண்டால் விடிவு பிறக்குமே தமிழரெல்லாம் ஒன்று பட்டால் ஈழம் மலருமே http://gkanthan.wordpress.com/index/onrupattaal/
-
- 4 replies
- 851 views
-
-
தாயிருந்த மண்ணைவிட்டு சமச்சிருந்த சோத்த விட்டு ஊரழிய வந்தோமே ஒன்றுமின்றிப் போனோமே தோல் நிறமும் மாறலியே சொந்த குணம் போகலையே தேரிழுத்து வீதியெல்லாம் செய்த தவம் காக்கலையே புலம்பெயர்ந்து வந்து புலம்புவதால் என்னபயன் மட்டக்களப்போடு மன்னார்தான் போனாலும் வன்னி இருக்குதென்று மகிழ்வோடிருந்தோமே! வெட்டி அரிந்தெம்மை வேரோடு சாய்க்க வென்று வாசலிலே நிற்பவனெம் வாழ்வை அழிப்பானோ! சுற்றிவர நின்று சுடும் பகையைக் காலெடுத்து எற்றி இறைவா எமக்குதவி செய்யாயோ! (யாராவது இந்த ஒப்பாரியைத் தொடருங்கள்.)
-
- 9 replies
- 2.2k views
-