கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
ஒப்பிலாது நீ உலவினை உலகிடை!- பாவலர். பரணன் குழந்தை யோவெனுஞ் சுபதமிழ்ச் செல்வனே குழைந்த தோவுடல் கோழையர் குண்டினால் விழுந்தை யோநிலம் வென்றிடப் போகையில் இழந்த மேமதி யென்செய்கு வாமினி ஒப்பி லாதுநீ யுலவினை யுலகிடை ஒப்பி யேற்கிலா நாட்டினர் கூடவுன் செப்பு வாயதன் சிரிப்பினா லொப்பியே எப்ப வுந்துணை யாகுவம் என்றரே! அண்ணன் பாலசிங் கத்தையி ழந்தபுண் இன்னும் ஆறவில் லையதற் குளேயுமே அன்ன ரோடுநீ கலந்துமே சூழவும் பின்னர் அங்குதான் பெயர்ந்துந டந்தையோ! அண்ணன் பாலாவின் அரசியல் வடிவமே கண்ணைப் பிசையவே கடந்துமேன் சென்றனை மண்ணிற் புதைந்துநீ மறுபடி யெழுவையோ? விண்ணிற் பாலாவிடம் வெற்றிவி ரிப்பையோ? முங்கி னாரவர் மூழ்கடித் தோமெனச் சிங்கள நாய்களும் சிர…
-
- 0 replies
- 1k views
-
-
மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் கிட்டத்தட்ட ஒரே வடிவிலான எழுத்துருக்களை கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும். இவ்வாறான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப்பவைகளாக இருக்கும். அதனாலேயே இவற்றை மயங்கொலிச் சொற்கள் என்றழைக்கப்படுகின்றன. நாம் அதிகமாக இந்த எழுத்துக்களில் தவறு செய்கிறோம். அவற்றை பற்றி ஒரு அறிதலை ஏற்படுத்தவே இந்தப் பதிவு. கவிதை எழுதுபவர்கள் இதனை கவனத்தில் கொண்டால் கவிதை இன்னும் சிறப்பாக இருக்கும். என்னுடைய ஒரு சிறிய முயற்சி தான் இந்தக் மயங்கோகொலி சொல் விளையாட்டு. கவிதை எனக் கொண்டாலும் சிறப்புதான் குழவியுடன் குலவியிருக்கும்போது குளவியோன்று கடியிலிருந்து கடிதாக வ…
-
- 11 replies
- 7.2k views
-
-
[size=3] ஒரு அலாதியான அனுபவம்[/size] [size=3] பிம்பங்கள் அனைத்தும் மங்கலாக[/size][size=3] ஏதோ ஏதோ உருவ அசைபாடுகள்[/size][size=3] செவிப்பறைகளில் மட்டும்[/size][size=3] ஓயாத சப்தம்[/size] [size=3] கண்ணு கோளாறா[/size][size=3] காது கோளாறா[/size][size=3] ஆஸ்பத்ரிக்கு அழைத்து போக வேண்டும்[/size][size=3] அந்த வார்த்தைகள் மட்டும்[/size] [size=3] நீண்ட சப்தத்தின் இடையில்[/size][size=3] வெள்ளம் என பாய்ந்தது[/size][size=3] ஒரு பெரு மூச்சு[/size][size=3] தங்கு தடையில்லாமல் வருகிறது[/size] [size=3] கைகளையும் கால்களையும்[/size][size=3] ஒழுங்கு படுத்திக் கொண்டு[/size][size=3] இருப்போம் என்று இருக்கையில்[/size][size=3] படுக்கையின் விளிம்பில்[/siz…
-
- 1 reply
- 690 views
-
-
ஆரியன் வந்தான் சாத்திரத்தையும் சாதியையும் விதைத்தான்..! மொகலாயன் வந்தான் மதத்தையும் மதத்தால் அழிவையும் விதைத்தான்..! ஆங்கிலயன் வந்தான் சுரண்டலையும் அதனால் பசியையும் வறுமையும் விதைத்தான்..! ஏமார்ந்த தமிழன் எல்லாவற்றையும் ஏற்று கொண்டான்..! தன்னை தானே இழித்து கொள்ளும் தரங்கெட்ட நிலைக்கு தாழ்ந்தும் போனான்..! கூத்தாடிகளை தலைவனாகவும் கொள்ளையர்களை தொண்டனாகவும் கொள்கையற்றும் போனான்..! ஈழம் சென்று கங்கை கொண்டு கடாரம் வென்று இமயத்தில் கொடி நாட்டியவன்..! இன்று இனம் பிரிந்து மொழி மறந்து அகதிகளாய் முகம் தொலைத்து முகவரியற்று அலைகிறான்..! இன்று அங்கவையும் சங்கவையும் கேலிபொருள்கள் கோப்பெருந்தேவியும் குழல்வாய்ம…
-
- 12 replies
- 1.3k views
-
-
உன் இருளுக்குள் என்னை இழுத்தெடுக்கிறாய்...! மூச்சு முட்டும்வரை... என்னை இழுத்தணைக்கிறது உன் வெறி...!! உன் பசிக்காக... என்னைப் பிய்த்துத் தின்னுகிறாய்! என்னை வெறியேற்றி... உன் வெறியை தீர்த்துக்கொள்ள முனைகிறாய்!!! அந்த ஆரவாரத்துக்குள்ளே.... என் அவலக்குரலும் அடங்கிப்போய்விடுகிறது! சத்தமின்றித் தொடங்கி... பேரொலியோடு ஆர்ப்பரித்து, சத்தமின்றியே அடங்கிப்போகும் சத்தங்கள்.... அப்படியே காணாமல் போய்விடுகின்றன...!!! அது மயக்கமா....? அல்லது மரணமா....?? புரியவில்லை... புரிந்துகொள்ள அனுமதியுமில்லை!!! எச்சங்கள் மிச்சங்களை கொஞ்சங் கொஞ்சமாய்... சத்தமின்றி அழித்துவிட்டு, மீண்டுமொரு இரவுக்காய் அலையும்... இராக்கால ராட்சசியே! உன் சிற்றின்பத்துக்காய், என் குருதி குடிப்பதை... எப…
-
- 11 replies
- 1.5k views
-
-
ஒரு ஈராக்கியனின் சப்பாத்து அடே ஜோர்ஜ் புஷ் கண்ணீரால் எம்மக்களின் வேள்வி அதனால் கேட்கிறேன் ஒரு கேள்வி எதற்காக எம்மீது படை எடுத்தாய் எண்ணற்ற உயிர்களைப் பலி எடுத்தாய் எண்ணெய் மேல் நீ கொண்ட பித்தத்தினால் தண்ணி போல் இரத்தத்தை ஓடவிட்டாய் பேரழிவு ஆயுதங்கள் எம்மிடம் இருக்குதென்றாய் பேரழிவுகளை எம்மிடம் ஏற்படுத்தினாய் இலட்சியம் நிறைவேறியதென முன்னர் முழங்கினாய் அதை ஏமாற்றமெனப் பின்னர் கலங்கினாய் சதாமைப் பின்னர் அழித்தவனும் நீதான் அவனை முதலில் வளர்த்தவனும் நீதான் நீ வருமுன் எம்நாடு நாசமயிருந்தது நீ வந்தபின் இன்னமும் மோசமாயிருக்கிறது இன்று என் கையில் சப்பாத்து முடிந்தால் உன் தலையைக் காப்பாத்து http…
-
- 0 replies
- 736 views
-
-
எழுத்தாக்கம் - குரல்வடிவம் : ஒருவன் ~ கவிதை கரைமணலைத் தொட்டுத்தொட்டு விளையாட... நுரையலைகள் விட்டுவிட்டு அலையாட... திரைகடல் மெட்டுப்போட்டு இனிதான, திரைப்பாடல் ஒன்றின் முதல்வரியை ஞாபகமூட்டும்! மெதுவாய் வீசுகின்ற உப்புக்காற்றின் ஈரம், பக்கம்வந்து பேசுகின்ற வார்த்தைகள்... முன்பொருநாளின் மாலைப்பொழுதில் அன்போடு மணல் அளைந்த இருபது விரல்கள் பற்றிய கதை பேசும்! உப்புக்காற்றில் உலர்ந்துபோன இருஜோடி இதழ்கள் காதலின் பருவமழையில் முழுதாக நனைந்துபோக... செக்கச் சிவந்த வானம்கூட அவளின் கன்னம் பார்க்க வெட்கப்பட்டு மேகத்தை அள்ளிப் போர்த்துக்கொள்ளும்! மெளனங்கள் பேசிக்கொள்ளும் ரம்மியமான மாலைப்பொழுதில் விரிந்த கடலுக்கும் வானத்துக்கும் இடையே எதிர்காலக் கனவுகளை தி…
-
- 9 replies
- 9.5k views
-
-
நட்சத்திரங்கள் பூத்த வானம் விரிந்திருந்தது! எமக்குப் பின்னால் பாதியாய் ஒளிர்ந்த நிலவு தொடர்ந்து வந்தது! தூரத்து வயல் வெளியை மூடியிருந்தது வெண்பனி தென்னைகளில் மோதி குடியிருப்புகளை ஊடுருவி எம் செவி வழி நுழைந்தது வங்கக் கடலில் எழுகின்ற அலையோசை ! சந்தடி ஓய்ந்த தெரு வழியே நீயும் நானும் விடுதிவரை நடந்தோம் ! இப்படியே எத்தனையோ இரவுகளில் விவாதிப்போம் நெடு நேரம் முடிவில் ,எதிர்காலம் குறித்த அவநம்பிக்கைகளுடன் பிரிந்து செல்வோம் ! பின் வந்த, பதற்றமான பொழுதொன்றில் உன் விடுதலை வேட்கைக்குத் தடையாயிருந்த அனைத்தையும் உதறி அடவி புகுந்தாய் ! பரணி... உன் நினைவுகள் தேய்ந்து கொண்ட…
-
- 0 replies
- 665 views
-
-
ஒரு கரும்புலியின் நினைவாக தினம் தீயில் நீ குளித்தாய் தியாகத்தின் பொருள் விளக்க புலியே நீ புகழ் வெறுத்தாய்..... இதயத்தில் நீ சுமந்த இலட்சிய நெருப்பதிலே உன்னுயிரை முடிந்து வைத்தாய் என்னொடியும் உன்னுயிரை உதறிவிட நீ துணிந்தாய்.... விழியுறக்கம் நீ மறந்து விளக்காகி ஒளிதந்து எங்கள் விடியலின் கிழக்காகி சூரியனை வலம் வந்தாய் பகை வாசலிலே போய்த்திரிந்தாய்....! உன் இலக்கு உன்னை எட்ட முன்னம் உயிர்ப்பூ வாடியுதிர உடற்கணுக்கள் துடிப்பிழந்து ஓ...எங்கள் உடன்பிறப்பே உறங்கி போனாயோ ? உன் முகமறியேன் உன் குரலும் கேட்டறியேன் அவன் வரமாட்டான் உன் கூட நின்றவன் உறுதிப்படுத்திய செய்தியது.....! விழி கண்ணீர் மாலையிட வீரனே....! விக்கித்து …
-
- 2 replies
- 530 views
-
-
1 பாலி ஆறு நகர்கிறது அங்கும் இங்குமாய் இடையிடையே வயல் வெளியில் உழவு நடக்கிறது இயந்திரங்கள் ஆங்காங்கு இயங்கு கின்ற ஓசை இருந்தாலும் எங்கும் ஒரே அமைதி ஏது மொரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் முன் நோக்கி பாலி ஆறு நகர்கிறது. ஆங்காங்கே நாணல் அடங்காமல் காற்றோடு இரகசியம் பேசி ஏதேதோ சலசலக்கும். எண்ணற்ற வகைப் பறவை எழுப்பும் சங்கீதங்கள். துள்ளி விழுந்து 'துழும்' என்னும் வரால்மீன்கள். என்றாலும் அமைதியை ஏதோ பராமரிக்கும் அந்த வளைவை அடுத்து கருங்கல் மறைப்பில் அடர்ந்துள்ள நாணல் அருகே மணற் கரையில் ஒரு மருங்கம் ஓங்கி முகடு கட்டி ஒளி வடிக்கும் மருத மர நிழலில் எங்கள் கிராமத்து எழில் மிகுந்த சிறு பெண்கள் அக்குவேறு ஆணிவேறாய் ஊரின் புதினங்கள் ஒவ்வொன்றாய் ஆராய்ந்து சிரித்து கேலி செய்து சினந்து வாய்…
-
- 1 reply
- 547 views
-
-
ஒரு உண்மையான காதலின் வலிகள் - வரிகளாய்........!!! ஒரு "கவிதை"யின் கண்ணீரில் வரித்த வரிகள் இவை! எழுத்தும் பகிர்தலும் ஆறுதல் அளிக்கும் என்ற நம்பிக்கையில்..............! பெருந்தெருவில் விழுந்த பச்சைப் புழுவாக நான்! காய்ந்து வரண்ட எனக்குள், என் பச்சை இதயம்... படபடத்து பரிதவிக்கும் பரிதாபம்! என்னை நான் ஒருமுறை நினைத்துப் பார்க்கின்றேன்...! இன்னும் உயிரோடு இருப்பதே எனக்கு ஆச்சரியந்தான்!!! நான் புரளும் மண்ணின் வெட்பம் என் மெல்லிய மேனியைச் சுட்டு அவிக்கின்றது! அவிந்து போகையிலும்... உன் நினைவுகளில் பசுமையாய் ஈரமாகின்றேன்...! உப்புக் கரிக்கும் கண் வழி நீரில்...!!! கரைந்து போகும் உன் காதல் கரைகளில்... பெருகிவரும் கடலாய் என் காதல் ! உன் …
-
- 36 replies
- 7k views
-
-
-
- 32 replies
- 4.1k views
-
-
உலகின் அத்தனை தட்டுக்களிலும் சம்மணம்போட்டு உட்கார்ந்திருந்த அத்தனை கிண்ணங்களும் பலவித எண்ணங்களால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தன! வாழ்வெனும் விருந்துக்கு அங்கிருந்த அனைவரும் கட்டாய விருந்தாளிகள்! பித்துப் பிடித்து தேடியலையும் சுயநல விரல்களுக்கு... அப்படியொரு வெறி! போட்டிபோட்டு முண்டியடித்து... ஏந்திக்கொள்கின்றன கிண்ணங்களை! சில வாய்கள் சிரித்தபடியே செங்குருதியை பருகிக்கொண்டிருக்கின்றன! வேண்டாமென ஒதுங்கிப்போகும்... ஒவ்வொரு நொடியிலும், எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும், மானிட விரல்களுக்குள்... திணிக்கப்படுகின்றன கிண்ணங்கள்! எந்தக் கிண்ணம்...? எப்பொழுது...?எவர் கரங்களில்...? என்பதெல்லாம்....... எவருக்கும் தெரிவதில்லை! அவசியமுமில்லை...!! எதை ஏந்துகிறோமோ…
-
- 9 replies
- 1.4k views
-
-
தன்னைக் கொன்றவனின் வாக்குமூலம் ஆராய்தலின் பின் தற்கொலையென்று தள்ளி வைக்கப்படுகிறது. அங்கு, தன்னைக் கொன்றவனின் வார்த்தைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்காது. தன்னைக்கொல்ல துணிந்தவனின் வார்த்தைகள் வாழ்க்கைக்குள் தன்னை கொன்றவனுக்கு எப்படிப் புரிந்திருக்கும் ? தன்னைக் கொல்லுதல் மலர் உதிர்வதுபோலவும் இருக்கலாம். மை கரைவது போலவும் இருக்கலாம். ஒரு மரம் சரிவது போலவும் இருக்கலாம். தன்னைக்கொன்றவனின் கடைசி நிமிடங்கள் பற்றி எவரும் பேசுவதில்லை, அவன் சுமந்திருந்த தனிமையை எவரும் உணர முயல்வதுமில்லை. அவன் உருவாக்கிய வெற்றிடம் குறித்தும் எவரும் கவலைப்படுவதில்லை, ஆனாலும், தன்னைக்கொன்றவனைத் தாண்டிவிட முடிவதில்லை எவராலும் வழமைபோல, அவனுக்கு அந்த நேரத்தில் தேவையாக…
-
- 8 replies
- 709 views
-
-
கூனி குறுகி நிற்கிறேன் மாமா என் ரத்தத்தில் நானே குளிக்கிறேன் மாமா ஒரு சில நிமிடங்களில் என் உயிர் போய்விடுமே அந்த பாவத்திற்கு நீங்கள் தான் காரணம் மாமா நான் சின்னஞ்சிறு சிறுமி என்பது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா மாமா நாளை நான் கல்வியில் சிறந்து நிற்பேன் என்பதும் உங்களுக்கு புரியவில்லையா மாமா உங்கள் சுகயீனங்களை கவனிக்கும் வைத்தியர் நானாக இருப்பேன் என்று ஒருவேளை தெரிந்தால் இன்று என்னை வதைக்காமல் விட்டிருப்பீர்களா மாமா உங்களுடன் சின்னவயதில் விளையாடிய தங்கை நான் தானே மாமா உங்களுடன் ஆதரவாக என்றும் காத்த அக்காளும் நான் தானே மாமா சோறு ஊட்டி தாலாட்டி வளர்த்த அம்மாவும் நான் தான் மாமா…
-
- 2 replies
- 986 views
-
-
ஒரு கூதல் மாலை ............. குளிருக்குப் பயந்து ஒதுங்கிய பகலவன். இருட்டின் அரசாட்சி. பனி மூடிய மலைகள் வழிய வழி இல்லை. நாட்கள் விறைத்தபடி. காற்றில் ஈரம் இறுகி பனிப் பாதையாகி, வழுக்கி வழுக்கி தெருவில் திரிவதோ செப்படி வித்தையாய். உடைகள் பாதணிகள் பாரமாய் மனம் அதைவிட கனமாய். என்றாலும் ஓர் இதம் பனியின் உறைதலில். பனி கிழித்து சாணகம் தெளித்து கோலம் வரைய நினைக்கிறேன். நிமிடங்கள் சேமித்து ரசிக்க மறுக்கும் தெருப்பாடகனின் பாடலாய், அவரவர்க்கான அவசர அழைப்புக்களாய் அலுவல்கள். கம்பளிப் பூச்சிகளாய் சிறுவர்கள். பூச்சாண்டி மனிதர்கள். பனி ரசித்து பார்வைகள் கண்ணாடி உடைக்கும் படியோடு நடை நிறுத்தும் பூனைக…
-
- 4 replies
- 760 views
-
-
ஒரு கொரில்லாவின் இறுதிக் கணம் வரிகளில் தேசக் கனவை எழுதிய சீருடைகளை அணிந்தனர் நேற்றைய போரில் மாண்டுபோனவர் கல்லறைகளின் முன்னே தலைசாய்த்து அமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர் எல்லோருடைய அழுகையையும் துடைக்கும் அவர்களால்தான் இறுதிக் கணத்தில் புன்னகைக்க முடியும் எல்லோருடைய துயரையும் துடைக்கும் அவர்களால்தான் இறுதிக் கணத்தில் ஒளிமுகத்துடன் செல்ல முடியும் கழுத்தில் சைனைட் குப்பி தோளின் குறுக்கே சன்னங்களின் மாலை துப்பாக்கியை கையளித்து மாண்டுபோன தோழியின் நினைவில் மறந்தாள் களம் செல்லத் தடுக்கும் தாயின் குரலை துப்பாக்கியை ஏந்திக் கையசைக்கும் விழிகளில் தேசத்தி…
-
- 0 replies
- 704 views
-
-
ஒரு கோடியேற்றும் நாளின் சிரிப்பும்.. வந்தேமாதரமும்!! by வித்யாசாகர் சுதந்திரம் என்று சொன்னாலே உள்ளே இதயம் படபடக்குமொரு பயம்; ஏன்? அதன் ஒவ்வொரு எழுத்திற்கும் எம் முந்தையோர் சிந்திய ரத்தமும் கொடுத்த உயிரும் காலம் பல கடந்தும் மறக்கவேண்டாத நினைவின் வலிபற்றிய பயமுமது; நிற்க முறைத்தலும் பார்க்க அடித்தலும் எதிர்த்துப் பேச உயிர்துறத்தலுமென நீண்ட கொடுமைதனைத் தாளாது திருப்பியடித்ததில் வாங்கியச் சுதந்திரம் – இன்று எம் தேசத்தின் ஒற்றைதின சிரிப்புசப்தமாகக் கேட்டாலும் இன்னுமன்றைய வலிக்கான கண்ணீர் ஓய்ந்தபாடில்லையென்பது வருத்தமில்லையா ? சேற்றிலிருந்து எடுத்த காலை மீண்டும் மனிதசாணத்தில் வைத்துக்கொண்டதைப் போல வெள்ளையனை வெளியேற்றிய கையோடு ஒற்றுமையை மண்ணில…
-
- 1 reply
- 402 views
-
-
[size=5]ஒரு கோப்பை தேநீர்... [/size] மண்புழுவினும் அதிகமாக மண்ணில் நாங்கள் உழன்றதால் எங்கள் சதைப் பிண்டங்கள் நீங்கள் வளர்க்கும் தேயிலைக்கு உரமானது. செழித்து வளர்ந்ததால் சந்தோசமாயிருந்தீர்கள்... அட்டை உறிஞ்சியது போக மிச்சமுள்ள எங்கள் குருதியேறி செம்மண் இன்னும் சிவப்பானது. மண்ணின் நிறமும் அதனால் தேயிலையின் தரமும் சேர்ந்து உயர்ந்ததையெண்ணி கர்வமடைந்தீர்கள்... உடல்சோர்வு நீங்க நீங்கள் பருகும் தேநீர் எங்கள் வியர்வையில் குளித்து வளர்ந்ததால் கொஞ்சம் உவர்ப்பாயிருந்தது. பருகுவது எங்கள் குருதியில் வளர்ந்த வியர்வையாதலால் புதுசுவையென இன்னும் இன்னும் அதிகம் பருகுனீர்கள்... அப்படியே உங்கள் பதிவேட்டில் எங்கள் எல்லோரது ப…
-
- 7 replies
- 1.4k views
-
-
திலீபன் புன்னகைக்கும் இதயம் கண்ணீர்த் துளியைப் பற்றிக் கொள்ளும் அழத் தோன்றும் முகத் தோற்றம் நேசத்தை யாசிக்கும் யதார்த்தத்தைக் கனவோடு பிணைத்து இலக்குகளுக்காகத் தரித்து நின்ற திலீபன் ! திலீபன் ! காற்றில் உதித்தவன் ! நெஞ்சங்களில் அநேகமானவற்றை விட்டுச் சென்ற முற்றுப் புள்ளிகளுடனான நிலத்தில் ஒரு ‘கமா’வாக மறைந்த விலைமதிப்பற்ற யௌவனத்தை கோரிக்கைகளுக்காக ஈடு வைத்த நேர்மையான புன்னகையும் தாயன்பின் மிருதுவான குணமும் கொண்டவன் அன்றிலிருந்து இன்று வரை கண்ணீர் ருசிக்கும் அன்னையர் கைகளிலில்லா ஐவிரல்களையும் தேடியலையும் தந்தையர் ஒன்றின் மீதொன்றாக அடுக்கப்பட்டிருக்கும் புதல்வர்களின் சடலங்களின் மீது ஓலமிட்டழுபவர்கள் எல்லா இடங்களிலிலும் இரு…
-
- 19 replies
- 1.9k views
-
-
கவியல்ல இது ஒரு காவியம் தேடியும் கிடைத்திடா தேவதையாய் எண்ணியது தேய்ந்து கட்டெறும்பான கதை சொல்லும் ஜீவகாவியம்…! ஊரின் ஓரத்தில் ஒரு தோப்பு தோப்பிலே குருவியொன்று சிங்காரச் சிறகு விரிக்க சுதந்திர வானம்….! சுதந்திரமாய்க் குடியிருக்க சின்னக் கூடு சுமை தாங்கியாய் சின்ன மாமரம்…! சுந்தரக் கானமிசைக்க தென்றல் போடும் தக திமி தாளம்..! இவை சேர தப்பாமல் தன்பாட்டில் வாழ்ந்தது மனதோடு மகிழ்ச்சி பொங்க….! அன்றொரு வேளை அந்திசாயும் மாலை நெருங்க அருமையாய் வசந்தம் பூத்திருக்க பூமி மகள் அழகு காட்டியிருக்க கண்ணினைக் காட்சிகள் காந்தமாய்க் கவர களம் ஏகியது குருவி….! கண்கொள்ளாக் காட்சிகள் விருந்துகள் படைக்க வாயோடு வந்த கீதம் இசைத்துப் ப…
-
- 16 replies
- 1.6k views
-
-
ஒரு சொல் கவிதைகள்நீ நான் காதல் @ தீ சுடும் சொல் @ வா போ பிரிவு @ இருந்தாய் சென்றாய் வலி @ நினைவு கனவு தோல்வி ஒரு சொல் கவிதைகள் 02காதல் புரிதல் வாழ்க்கை @ சந்தோசம் சந்தேகம் பிரிவு @ தெரியாது பழகும் நட்பு @ ரசித்தேன் திகைத்தேன் என்னவள் @ சாகாது சறுக்காது உண்மைக்காதல் ஒரு வரி கவிதை 03 சிரித்தாள் சிதறியது இதயம் @ வலிக்கிறது எழுதுகிறேன் கவிதை @ கண்டேன் தொடர்ந்தேன் இணைந்தேன் @ பிரிந்தாள் இணைந்தாள் துடிக்கிறேன் @ நாணயம் இருபக்கம் காதல்
-
- 4 replies
- 6.6k views
-
-
ஒரு சொல்.! புரோட்டாவும் நல்ல குருமாவும் முடித்து வைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகளில்..! பல ரவுண்டுகளை மாத்தி மாற்றி அடித்தப் பிறகு என்ன தோன்றும் உங்களுக்கு.. அடப் போங்கையா..!.. உங்களின் பேச்சும் கருத்துக்களும் என்று இருக்கையில் எப்படி நினவு தப்பி வீட்டில் நிலை தடுமாறி குப்பற விழ முடிகிறது என்னால்..? வியப்பும் ஆச்சரியமும் ஒன்று சேர்ந்து கொள்கின்றன.. மீள்சிறகு
-
- 0 replies
- 544 views
-
-
ஒரு சோற்றுப் பருக்கைக்கான பிரேதப் பரிசோதனை தன் காடுகளைப் பறிகொடுத்த ஆதிவாசியொருவன் வீதியில் செல்கையில், சலவை தூளால் தோய்த்து உலர்த்தப்பட்ட உடைகளை அணியாத வாசனை கமழும் சவற்காரத்தால் உடலை கழுவி நறுமணத் திரவியம் தெளித்துக்கொள்ளாத அவனை, திருடன் என்றோம் மலைகளும் மரங்களும் புதையல்களுமாயிருந்த வனங்களை அவனிடமிருந்து திருடிவிட்டு. தானியங்களை பூமிக்குப் பரிசளித்தவனை இரண்டு கவளம் அரிசிக்காக குழந்தமை வழியும் முகத்தில் அடித்துக் கொலை செய்தோம். கனிகளை எமக்குப் பரிசளித்தவனை ஒரு சோற்றுப் பருக்கையைத் தேடி கனிகளை எமக்குப் பரிசளித்தவனின் உடலைக் கிழித்து பிரேதப் பரிசோதனை செய்து திருடிக்கொண்…
-
- 0 replies
- 898 views
-
-
ஒரு ஜீவாத்மாவின் கவிதை ----------------- என்னை அவர்கள் மதிக்கவில்லை...... என்று கோபப்படாமல்...... அவர்கள் மதிக்கும்படி........ நான் மாறவில்லை என்று ...... கவலைப்படு - காரணத்தை..... தேடு மதிக்கப்படுவாய்.......!!! பாராட்டும் போது...... துள்ளி குதிக்கும் மனம் ....... விமர்சிக்கும் போது....... துவண்டு விழுகிறாய்....... அப்போ உன் மனத்தை ...... கடிவாளம் போட்டு .... வழிநடத்துகிறாய்.......... கடிவாளத்தை கழற்று ...... சவாரிசெய் நிச்சயம் விழுவாய்...... காயப்படுவாய்....... ஆனால் வாழ்க்கையில் ...... வெற்றி பெறுவாய்,............!!! கரையில் நின்று கடலை ...... பார்த்தால் தப்புக்கடலும்.…
-
- 1 reply
- 807 views
-