கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
புலம் பெயர்ந்து பிரான்சில் வாழும் சிங்கள கவிஞரான மஞ்சுள வெடிவர்த்தன பாலச்சந்திரன் நினைவாக எழுதிய கவிதை.. பாலச்சந்திரன் சிறு நிலா சிறு நிலாவா? அதைச் சொல்லவும்கூடுமோ? பத்துத் திக்கும் சுடரொளி வீசிய சூரியனைக் கொன்றது சிங்கம் தாய்நிலத்தைச் சூழ்ந்த குருதியால் சுவரோவியங்கள் வரையப்படுகின்றன சினத்துடன் சிங்கம் சிறிய நிலாவையும் கொன்றபோது முகில்களின் திரையைக் கிழித்து உள்ளே ஒளிந்தது நிலா பயத்தில் ஒடுங்கின நட்சத்திரங்கள் இருளின் சஞ்சாரம் நிலா சூரியனாக மாறுகிற ஒரு நாள் வரும் அப்போது எங்களுக்கு ஒளிவதற்கும் இடம் கிடையாது. நன்றி : காலச்சுவடு நீ சாகவில்லையடா என் தம்பி... எம்மைப்போல் ஆயிரம் ஆயிரம் அண்ணண்களின் இதயங்களில்…
-
- 13 replies
- 2.1k views
-
-
சில பிஸ்கட்டுகளும் ஐந்து புல்லட்டுகளும் ஐந்து முட்கள் கண்களில் குத்திக்கொண்டிருந்தன அது கனவு தான் அவை சில நாட்களாக திரும்பத்திரும்ப என் பார்வையில் பட்ட காயங்களின் எண்ணிக்கைகளாயிருக்கலாம். அவன் தம்பியைப் போலிருந்ததாகவும் மகனைப் போலிருந்ததாயும் அயலானைப் போலுமென எண்ணிக்கலங்குகின்றனர் முகப்புத்தக நண்பர்கள். எனக்கும் அவனைப் போல மகன் . பன்னிருவயதுக் குழந்தை சில பிஸ்கட்டுகளும் ஐந்து புல்லட்டுகளும் பாசிசத்தின் நிழலும் புகைப்படத்தில். சரணடையும் குழந்தைகளின் சாவிற்கான குறியீடாக யுத்த நியாயத்துக்கான கேள்வி அவன் பிணம். தொலைக்காட்சிச் செய்திகளில் முந்த நாள் ஆந்திராவில் நேற்று பாகிஸ்தானில் இன்று சிரியாவிலென்று நாளாந்தம் இரத்தங்கள், காயங்கள், மரணங்கள். கண்களைத் திருப்பி…
-
- 0 replies
- 525 views
-
-
பார்க்கும் கண்களே துடிக்கும் காட்சி பாலனின் மேனியில் பலதுளைகள் கொடுங்கோற் சிங்களம் செய்த கொடுமை கொலைக்களத்தின் அதி உச்சக்கட்டம் அவன் விழிகளில் தெரிகின்றது அவன் ஒரு வீரன் மகன் என்று அவன் விழிகளைக் கண்டு மிரண்டு அவன் மேனியில் துளைத்ததா குண்டு சிங்களம் செய்த கொலை வேள்வியில் எங்கள் குலவிளக்கை எரித்ததா ஈனம் இல்லாச் சிங்களம் ஆடிய கொலைவெறியில் தங்கள் இச்சையைத் தீர்த்ததா இச்சிறு வேங்கையின் பொற்திருவுருவில் பாரெங்கும் பரந்திருக்கும் நாமெல்லாம் கோர்த்திடுவோம் கரங்களைக் கொடுங் கோலனை ஒளித்திடக் கூடிடுவோம் ஒன்றாய் கொலைக்களத்தின் உச்சத்தைப் பரப்பிடுவோம் உலகமெங்கும் எடுத்த…
-
- 33 replies
- 2.8k views
-
-
பல்லாயிரம் ஆண்டுகளாம் புகழ்பூத்த முற்குடியாம் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தின் நற்குடியாம் தொல்தோன்றி மண்கண்டு மன்கண்டும் பயனில்லை சொல்கொண்டு இணைவர்தம் சிரமெடுப்பர் காலமிதில் ஒருவிரல் வெளிச்சுட்டி மூவிரல் தனைச்சுட்டி தரையினிலே உடல்பரப்பி உமிழ்கிறார் சிரம்நிமிர்த்தி வருவதுவும் பெயரல்ல தருவதுவும் புகழல்ல திரும்புவது உமிழதுவே மூவிரலும் குறிப்பதுவே களமதனில் உரையாடல் கனிகின்றார் தினம்தானும் தளம்மாறித் தடம்மாறிப் புனைவாரே வசையாடல் களவுதட்டில் ஒருபேச்சு கருத்தியலில் மறுபோக்கு உளமுரையார் சொல்லதுவும் அம்பலம்தான் ஏறிடுமோ எண்ணத்தில் வந்தவுடன் கிண்ணத்தில் தந்துவிட்டார் உண்மைநிலை உணர்வின்றி வசைபாடிச் சென்றுவிட்டார் திண்ணையதன்…
-
- 38 replies
- 3k views
-
-
வாசித்ததில் மனதில் பதிந்த கவிதை இது - ச ச முத்து பிப் 23, 2013 சர்வதேசமே, உங்கள் குழந்தைகளுக்கு துப்பாக்கிகள் பொம்மைகள். எங்கள் குழந்தைகள் துப்பாக்கிகளுக்கு பொம்மைகள்!! http://www.sankathi24.com/news/27321/64//d,fullart.aspx
-
- 0 replies
- 721 views
-
-
பேரன்னை பார்வதி அம்மாவிற்கு வீரவணக்கம்! வீரப்படுக்கையில் துயிலுறங்கும் அன்னையே ! நாம் அடையாமல் விடமாட்டோம் தமிழீழ மண்ணையே ! எம் தலைவரை பெற்றெடுத்தீர் தாயகம் வெல்லவே ! வீரதமிழனாய் வளர்த்தெடுத்தீர் தமிழீழ மண்ணையே ஈழத்தமிழினம் இருட்டிலே உலன்றபொழுது! கேட்க நாதியின்றி வீதியிலே கிடந்தபொழுது! உரிமையின்றி அடிமைகளாய் தாய்மண்ணில் திரிந்தபொழுது ! உன் சிங்கக் குகைதனிலே எம் புலித்தலைவன் பிறந்துவந்தான்! புதியதோர் வரலாற்றை பெற்றெடுத்த எம்தாயே ! புயல் வரினும் மலைவரினும், அவைகளே குண்டுகளாய் மாறிவிழினும் ! மக்களோடு மக்களாய் மனம் தளராது வாழ்ந்தீரே ! மரணம் நெருங்கிடினும் வீரமாய் சாய்ந்தீரே ! எம்மை நிமிரவைத்த புதல்வனை உலகிற்கு தந்தவரே ! எம் சிரம் குனிந்து வணங்குகிறோம் உம் ப…
-
- 0 replies
- 478 views
-
-
மீண்டும் உயிர்த்தெழுந்து வா.... என்னுடன் என் சகோதரனே ' துயரங்களால் ஆழப்புதைக்கப்பட்ட உனது கரங்களை நீட்டு கருங்கல்லால் மூடப்பட்ட கல்லறையில் இருந்து திரும்பி வரப்போவதில்லை நீ.... பூமிக்கு அடியில் புதையுண்டு போன காலத்திலிருந்து எழுந்து வரப்போவதில்லை. உனது கோபக் குரல் மீண்டும் ஒலிக்கப் போவதில்லை - அல்லது தோண்டப்பட்ட உன் விழிகள் இமை திறக்கப் போவதில்லை. பூமியின் அடியாழத்திலிருந்து என்னைப் பாருங்கள் .... நிலத்தை உழுதவர்களே நெசவாளிகளே அதிகம் பேசாத ஆட்டிடையர்களே - நம் இனமரபுக் கடற்பறவையின் இனிய குஞ்சுகளே ' சதிகாரர்களின் கருங்கல் பலிபீடங்கள் உயர்ந்து எழுந்துவிட்டன.... நீங்கள் புதையுண்ட இடத்தின்மேல். ஆண்டியன் மலைத்தொடரின் கண்ணீரில் உறைந்து போன பண…
-
- 1 reply
- 537 views
-
-
சுயநலமற்ற தந்தைக்கு மகனென்பதாலும், வீரப்பரம்பரையின் விழுதென்பதாலும் அவசர அவசரமாக அழிக்கப்பட்டிருக்கிறது உன் தடம்… தனியே பள்ளி செல்லத் தவிக்கும் தமிழ்ப்பிள்ளைகளுக்கு நடுவில், பகைவனிடம் செல்லுகையில் கூட பயப்படவில்லை நீ… அது சரி…., தப்பாமல் பிறந்த தமிழ்மகனல்லவா… ஏதுமறியா அப்பாவியாய் இறுதிக்கணத்தில் இருந்திருக்கிறாய் என்பதை ஏங்கித் தவிக்கும் உன் விழிகள் எமக்குத் தெரியப்படுத்துகின்றன.. வரவேற்று உணவளித்து வாழ்த்தியனுப்புவது தமிழன் பரம்பரை . உணவளித்த பின் உயிரை எடுப்பது சிங்களவன் வரைமுறை ஆயுதபூசைகளுக்கு நடுவில் அவலக்குரல் எழுப்பியிருப்பாய் நீ .. இப்போது தான் உலகக் கடவுள்களில் ஓரிருவர் கண்கள் நீர்த்து நிறைகின்றன…! …
-
- 5 replies
- 924 views
-
-
கேளும் மக்களே தெரியுமா கெலும் மக்ரேவை இல்லை இவர் பால் தாக்ரே இல்லை இவர் பெயரை நாளும் எதிரி உச்சரிக்க இவர் யார் ? வருடங்கள் நாலாக எமது படுகொலைகளை நாம் மறக்க இவர் விடவில்லை அவர் தான் கெலும் மக்ரே சரியான நேரத்தில் தவறாமல் வந்திடுவார் தந்திடுவார் ஆதாரம் மாட்டிவிடுவார் மகிந்தாவை அவர் தான் கெலும் மக்ரே விலைபோன ஊடகத்துறையில் நிலையான உத்தமன் பணம் கோடி கொடுத்தாலும் பொய் சொல்லான் இவன் அவர் தான் கெலும் மக்ரே
-
- 7 replies
- 702 views
-
-
குருதியோடிச் சேறாகி வறண்டுபோய் வெடித்துக் கிடக்கிறது எங்களின் நிலம், முளைகருகிச் சருகாகி புல்பூண்டுகளும், மக்கி மண்னேறி மண்டையோடுகளும் இன்னபிற அவயத்துண்டுகளும் கறைபடிந்த துணிகளும் ஆங்காங்கே சிதைந்து கிடக்கின்றன, ஆந்தைகளும் ஆட்காட்டிகுருவிகளும் கூட இடம்தேடி எங்கோ போய்விட்டன, கடந்தவைகளை மறந்து அடங்கிக்கொண்டிருக்கிறது தேசம். தழுவல்களும் கண்ணீரும் ஒப்பாரிகளும்-என் சிறுதேசத்தில் மாற்றங்களை நிகழ்த்த முயன்று தோற்றுப்போகின்றன, இழவு முடிந்த எங்களின் வீட்டு சுவர்களிலும் தூண்களிலும் தங்களின் கழிவுகளை கொட்டிவிடும் வன்மத்தோடுதான் வாசல்களில் மேடை போடுகிறார்கள் கௌதம புத்தரின் வழிப்பிள்ளைகள். அவர்களுக்காக, சாம்பல் மேடுகள்மீது செங்கம்பளம் விரித்து சாமரையோடு காத்திருக்கிறார்கள்…
-
- 5 replies
- 713 views
-
-
ஒட்டி விட்ட ஊரை விட்டு ஓடி வர மனசின்றி.. ஒட்டிய விசா ஸ்ராம் உந்தித் தள்ள பள்ளிப் படிப்பு இழுத்து வர ஓடி வந்த இடத்தில் ஒதுங்க ஓர் இடம்..! மோகன் - யாழ் என்ற உறவுகளின் சிந்தனையில் உதித்த ஓர் தளம். ஆங்கில மேடையில் விதம் விதமாய் அலங்கரிக்க அங்கீகாரம் இருந்தும் அங்கும் எழுந்தது தாய்த் தமிழ் தாகம்..! நட்புக்கள் தம் உறவாடலில் யாழெனும் இணையத் தொடர்பும் பிணைந்து கொள்ள "வைரஸாய் " முதல் நாமம் இட்டு தொற்றிக் கொண்டது இன்னும் பசுமையான நினைவுகளாய். கேடு இன்றி விளையாட்டா "ஹாக் "செய்து யாழின் "கோட்" எடுத்து தமிழ் போறம் செய்து நண்பர்கள் விளையாட.. கூடியிருந்து களித்தமை இன்றும் நினைவதில் ஊஞ்சலாடுது..! யாழின் நெருக்கம் எம் எஸ் என் வழி கை நீட…
-
- 60 replies
- 4.7k views
-
-
சாவை நேருக்கு நேர் சந்திக்கும் அந்த நிமிடம் யாருக்குமே உடல் ஒருமுறை நடுங்கும் ஆனால் பாலச்சந்திரா ! சாவு உன்னை சந்தித்த அந்த நிமிடம் சாவு தானடா உன்னைக்கண்டு நடுங்கி இருக்கும் ! செத்தவர் என்று உன்னை சொல்வோமா இந்த ஜென்மத்தில் நினைத்திட மறப்போமா குத்துவிளக்கது நீயல்லவோ நாம் கும்பிடும் தெய்வமும் நீயல்லவோ நித்தமும் வாழுவாய் பாலச்சந்திரா எங்கள் நெஞ்சுகளில் என்றும் மாவீரனாய்...! - - ஈழ மண் வாசம் - முக நூல்
-
- 10 replies
- 1.3k views
-
-
ஒரு போராளியின் மகனின் மரணத்தை மற்றொரு பதிப்பாக கண்ட கோலம் ... நெஞ்சுக்குள் எரிமலையை வெடிக்கச் செய்தது. மனிதநேயம் செத்தவர்கள் செய்கின்ற படுகொலைகளில் இதுதாம் உச்சகட்டம். போகட்டும். அணையப் போகும் விளக்கு பிரகாசமாகத்தானே எரியும்? தமிழ்க்குடிகளுக்கு நேர்ந்த கொடுமைகளுக்கெல்லாம் நிச்சயம் பதிலடி உண்டு. ஒரு பாலகனை அழைத்து வைத்துக்கொண்டு உணவுகொடுத்து நெஞ்சில் சுட்டுக் கொல்வதற்கு எப்படி மனம் வந்தது? மிருகம் கூட அப்படி எண்ணாதே? சிறிது நேரத்தில் தாம் கொல்லப்படுவோம் என அறியாது பசியாறிக்கொண்டிருக்கும் அந்தப் பிஞ்சைக் கொல்ல எப்படி ஐயா துணிச்சல் பிறந்தது? மனிதனுக்குப் பிறந்தவர் செய்கிற காரியமா இது? இந்திய தூக்குத் தண்டனைக் குற்றவாளிகள…
-
- 0 replies
- 414 views
-
-
தடுமாற்றங்களும் குழப்பங்களும் நிறைந்த மன நிலை நாம் என்ன செய்ய 2009 உலகமே சேர்ந்து குழப்பியது எம்மை குவிந்தது தாயகத்தில் பிணங்களின் குவியல் கந்தக புகை நிறைந்தது எங்கும் நச்சு புகையும் சேர்ந்தே இருந்தது இலங்கையில் ஓரினம் இன்னோரினத்தின் முகவரி பறித்தது பார்த்தது சர்வதேசம் சதியில் ஐநாவும் பங்கெடுத்தது உரிமைக் குடி ஒன்றின் உரிமை மறுப்பை உலகம் பார்த்தது உரத்து அறிக்கை விட்டன சில நாடுகள் சிறிலங்கா செய்ததை சரி என்று!!! துன்னாலைப் பிறந்தவன் லண்டன் நகர் வசித்தவன் மூவொன்பதாண்டு வயதுளான் முருகதாசெனும் பெயருளான் மூண்ட சினம் கொண்டான் உலகுக்கு உண்மை நிலை புகன்றிட வந்தான். ஏழு பக்கத்தில் எழுதி முடித்தான் மரண சாசனம் உண்மைக்…
-
- 9 replies
- 705 views
-
-
எங்களுக்கும் காதலிக்கு கவிதை எழுத வருமல்ல அமேரிக்கன் ஜீண்ஸ் போட்டு பொட்டு வைக்காமல் கியூட் பிகர் போல பூனை நடையில் நீ வரவேண்டும் அந்த அழகை அடுத்த தெரு பிகரும் பெற வேண்டும் பசுபிக் கடலினிலே சிவந்த மாலை பொழுதினிலே பெண்குமரி நீயும் நானும் ஆடுவோம் அங்கு செய்யாத செயல் எல்லாம் செய்வோம் சென்ட் பூசுவோம் கிங்கிலிஸ் பேசுவோம் ஜாலியா யோக்கிங் போவோம் நாம் ஜாலியா ஆடுவோம்
-
- 15 replies
- 1.1k views
-
-
mummy i want தண்ணி....!!!! ஆயிரம் மைல் கடந்து அன்னைதேசம் தனை பிரிந்து அனாதைகளாய் ஆனபோதும் அண்ணனாய் தம்பியாய் பிள்ளைகளாய் உற்ற உறவுகளாய் அன்போடு அரவணைக்கும் என் புலம் பெயர் சொந்தங்களே வணக்கம்! என் உயிரிலும் மேலான தமிழ்தாயின் உச்சிமுகர்ந்து அவள் தந்த தமிழ்ப்பாலின் பாசம் உணர்ந்து புதுவை அண்ணாவை என் நெஞ்சில் வைத்து காசி அண்ணாவின் கைபிடித்து கவிதை நான் எழுதி வந்தேன் காலம் அறிந்து! வீட்டிலே தமிழ்! தமிழா வீட்டிலே தமிழ் பேசு-இல்லையேல் தமிழ்மானம் போச்சு! தமிழனாய் பிறந்தோம் என்று பெருமை பேசு-இல்லையேல் தமிழினத்தின் அருமை போச்சு! தமிழினத்தின் உயிர் மூச்சுதானே எங்கள் செம்மொழி மூச்சையே நிறுத்திவிட்டால் இனம் வாழ ஏது வழி? படலை திறந்து வந்தோம் உடலை மட்டும் தானே கொண்டுவந்தோ…
-
- 4 replies
- 881 views
-
-
இரவுகளை ஆட்கொள்ளும் இருளை, நிலவும் நட்சத்திரங்களும் எதிர்த்து நடத்தும் போராட்டங்கள் கூட இதமானவைதான்! வெண்மதியை மறைக்கும் மேகங்கள் அங்கேயே நிலைப்பதில்லை! விலகிச்செல்லும் மேகங்கள் போல, கடந்துபோகும் நேரங்கள் நகர்கிறது... விடியலை நோக்கி! வாழத் துடிக்கும் மனசு.... தாழப்பறக்கும் வண்ணத்துப் பூச்சிபோல, சிறக்கடிக்கத் தொடங்கும்! காணத்துடித்த விடியலின் ஒளியில் பூத்த மலர்களில் உட்கார்ந்து... மரகத மணிகளை உருட்டி விளையாடும்! குயில்களின் கானங்கேட்டு துயின்ற கதிரவன் துயிலெழுவான்! மனவறையில் ஒட்டிய பனித்துளித் துயரங்கள் அனைத்தும் கதிரவன் கதிரிலே காணாமற் போகும்! மெல்லப் பரவும் ஒளியில் பிரசவமாகும் விடியலில் பரவசமாகும் பூலோகம்! வலியவன் மனதிலே இருளோடு கரைய..…
-
- 4 replies
- 6.6k views
-
-
1)என் இனத்தின் சில மனிதங்கள்..... போராட்டம் வீறு கொண்டு பயணித்த நாட்களில் விடுதலை கனவினை உன் உரிமைக்காக தங்கள் வாழ்வினை அர்பணித்த புலிகள் மேல் நீ துரோகத்தின் காலில் கிடந்தது ஆயிரம் ஆயிரம் இழிநிலை வதை சொற்கள் வீசினாய் என் இனத்தின் சில மனிதங்கள்..... * சிறுவர்களை பிடிபதாகவும் * காணிகளை பறிப்பதாகவும் நடக்காதவற்ரை நடந்ததாக சித்தரித்த என் இனம் ஈழத்திலும் / புலத்திலும் ஆயிரம் ஆயிரம் ஊடகத்துக்கு செல்விகள் வழங்க்கினீர்களே ? ஆனால் இன்று கண் முன்னே வயது வேறுபாடு இன்று பிஞ்சுக் குழந்தை கூட இனவெறியனாலும் சில துரோக காடையர்களாலும் சிதைக்கபட்டு எம் இனதின் ஆணிவேர்களே அறுக்கபட்டும் செல்கிறதே எங்கே உங்களின் வாய்மையின் வீச்சு ?... இன்று எங்கே உங்கள் ஊடக பற்று ! .... புத்த…
-
- 125 replies
- 7.5k views
-
-
பாலை நிலமாகி வரண்டுபோன என் வாழ்வில் ஒற்றைப் பூவாய் வந்து சோலையாகிப் போனவள் நீ விடியாத அந்த இரவுகளில் என் விசும்பல்களின் வலிகேட்டு உயிர்ப் பூவெடுத்து மலர்மாலை தொடுத்தவள் நீ
-
- 20 replies
- 1.7k views
-
-
வணக்கம் நண்பர்களே! இந்த யாழ்க்களத்தில் பொதுவாக பெண்களைப்பற்றியே கவிதைகள் எல்லாம் வர்ணிக்கின்றனவே எப்போதாவது பெண்கள் மனந்திறந்து ஆண்களை நோக்கி தங்கள் கவிதையை வரைவதில்லை என்ற குறைபாடுகள் நிறையவே இருக்கின்றன. இது யாழுக்குள் மட்டுமல்ல எல்லாவிடத்திலும் உண்டு. இந்தக்களத்திற்குள்ளேயே, ஆண்களை வைத்துக் கவிதை எழுதுங்கள் என்று யாரோ கேட்டதாக ஞாபகம். வாசித்துவிட்டு உங்களுடைய உண்மையான விமர்சனத்தை தாருங்கள் நண்பர்களே! பூக்களுக்கு வாசம் உண்டு கண்ணா உன்னைப்போல் - என் பாக்களுக்குள் வாசம் செய்யும் உயிரே நீதானே! கூகிலுக்குள் தேடிப் பார்த்தேன் அன்பே உன்முகத்தை - வந்த கோபத்தாலே சினந்தது உள்ளம் அதுவே உன் இல்லம். கண்ணில் வந்து மின்னல் வெட்டிக் கவனப்படுத்துகிறாய் - என…
-
- 26 replies
- 4.3k views
-
-
வெளிநாட்டு வாழ்க்கை வேதனையே! இல்லை சாதனை - தினார்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து விட்டு மீட்க முடியாமல் நீரிலேயே மூழ்கிக் கிடக்கும் மீன் குஞ்சுகள் நாங்கள்...... பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு குதூகளிக்க முடியாமல் தங்களின் வாழ்த்துக்களை மனம் முழுக்க சோகத்தோடு கைப்பேசியில் கூக்குரலிட்டு கொஞ்சி மகிழ நேரில் இல்லாத காற்றலைகள் நாங்கள்...... இங்கே கண்ணே கனியமுதே என்றெல்லாம் தன் பெற்றக்குழந்தையை நெஞ்சுருகக் கட்டித்தழுவ முடியாதொரு துர்பாக்கியசாலிகள் நாங்கள்... கொம்பியூட்டர், ஸ்கைப். போனிலும் சொந்த பந்தங்களின் குரல் கேட்டு கேட்டு எங்கள் பாசம் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது... தொலைதூர பாசம் செய்தே/காட்டியே தொலைந்து போனவர்கள் நாங்கள்... நான் இங்கே நல்லா…
-
- 0 replies
- 3.7k views
-
-
நீ.. எனக்கு ஒரு ஏஞ்சல் நான்.. உனக்கு ஒரு வலன்ரைன் கிவ்ட் சுத்திய கஞ்சல். ஓசில வந்ததென்று கிவ்டை கவ்விக்கிட்ட நீ கஞ்சலை.. தூசென.. தூக்கி வீச முன் கண் திறந்து பார்.. அங்கு.. கசங்கிக் கிடப்பது நானும் என் அன்பும்..!
-
- 34 replies
- 2.2k views
-
-
என் திருமணம் கூடக் காதல் திருமணம் தான். கணவர் காதலராய் இருந்தபோது வெளிநாடு சென்றுவிட்டார். அப்போது நான் கொண்ட தவிப்பை இன்று நினைத்துப் பார்த்தேன். இக்கவிதை வந்தது. காதலர் தினம் எனக்குப் பழசாக இருக்கலாம். கவிதை புதிது. கற்பனையில் எண்ணியவை உன்னிடம் கண்டதனால் காதல் கொண்டேனடா காலமெல்லாம் காத்திருந்து உன்னைக் கண்டேனடா கண்ணிமை மூடினும் என்முன்னே நின்று காதல் செய்கிறாய் காதினிக்க வந்து காதல் மொழி பேசுகிறாய் கயவனே உன்னைக் காணாதிருந்திருந்தால் காலமெல்லாம் நான் கற்பனையில் வாழ்ந்திருப்பேன் கண்டதனால் நிதம் என் உயிர் துடிக்க நினைவு நிதம் வதைக்க நேர காலம் தெரியாது நெகிழ்ந்து போய் கிடக்கிறேன். நெருப்பாய் இருந்தவள் நெக்குருகி நிற்கிறேன் நெஞ்சம்…
-
- 22 replies
- 1.4k views
-
-
இன்னும் இருக்கிறது காதல் கடிதம் காதல் ......................!!! *********** முன்னிரவுகளில் தூவிய நட்சத்திரங்களை அடித்து சென்றுவிட்டது ஆதவக்கரங்கள். ********* மெல்லியதாய் எங்கோ ஒலிக்கிறது சோகப்பாடல், சோர்ந்து போய் உச்சரிக்கிறது உதடு. ************ இதே நிலா அன்று, நீயும் நானும். அதோ நிலா .................!!! *********** மலர்தாவிய வண்டை திட்டினாய். வியந்தேன்............. மனம் மாறி திட்டினாய். சிதைந்தேன். ******* உன்னை சந்திக்கும் அந்த நேரம் கடக்கையில் நரகம் தெரிகிறது. கடந்தபின்....... மரணம் புரிகிறது. *********** கைதவறி பட்டபோது தடுமாறிய மனது நீ கரம்பற்றிப்போனபோது அனாதையாய் போனது ............ ************* உன்னை பார்த்தத…
-
- 10 replies
- 1.3k views
-
-
ஏன் உதைத்தீ ( ர )ர்களே ?? இருட்டில் இருந்த உங்களுக்கு வெளிச்சம் காட்டியவர்கள் நாங்கள் உங்கள் பசியெடுத்தபொழுது குறிப்பறிந்து ஊட்டியவர்கள் நாங்கள்..... உங்கள் வலி கண்டு எங்கள் வலியாய் துடித்தவர்கள் நாங்கள்....... உங்கள் வெம்பலுக்கும் தேம்பலுக்கும் குளிர்நிலாவாய் இருந்தோம் நாங்கள்..... எங்களுக்கு என்று ஒரு சந்தோசம் நீங்கள் கண்டதுண்டா ?? உங்கள் வாழ்கையில் மெழுகுதிரியாய் எரியும் எங்களை ஒருகணம் உங்கள் , பார்வை திரும்பியதுண்டா ?? உங்கள் ஏற்றம் இறக்கம் எதிலும் ஒன்றாய் கலந்த எங்களை ஏன் எட்டி உதைத்தீ(ர)ர்களே ?? மைத்திரேயி 19/01/2013
-
- 14 replies
- 940 views
-