கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
வானத்தில் வெள்ளிகள் சிதறிக்கிடக்கின்றது அண்ணாந்து பார்தபடி மரத்தடியில் அவள் இருபக்கமும் சின்னன் இரண்டும் நித்திரையாக கண்கள் நனைய கண்ணீரில் நிலவெளி தெறித்தது வீடிளந்து வீதியோர வாழ்வில் மழைக்கு முன் கூடாரம் அமைக்க கடவுள் வழிவிடவேண்டும் மனதுக்குள் பிரார்தனை விடியாத வாழ்வில் விடிந்தது காலை அருகில் மூன்று கல்லு வைத்து அடுப்பு ஊத ஊத புகையை காற்று சுழற்றி முகத்தில் அடித்தது நாசிக்குள் போக பிரக்கடித்தது கண்ணெரிந்து கண்ணீர் வந்தது ஏனிந்த கண்ணீர் நிற்காமல் வருகிறது விறகு புகைக்கும் வருகிறது வீட்டுக்காரனை ஆமி சுட்ட போதும் மானாவாரியாய் வந்தது நினைக்கும் போதும் நிற்காமல் வருகின்றது தோட்டம் துரவை விட்ட…
-
- 7 replies
- 1.4k views
-
-
பாசத்திற்குரிய முரளிக்கு: வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். இந்தப்பாடல் உங்களுக்கான படையல். அசல்: நா.முத்துக்குமார் நகல்: வசீகரன் பல்லவி: நினைத்து நினைத்துப் பார்த்தேன் விலகி நெருங்கி பார்த்தேன். உங்கள் எழுத்தினாலும் யாழும் மகிழுதே உங்கள் பதிவை எண்ணி நானும் வியக்கிறேன். முகமூடி அணிந்து யாழில் இன்னும் எழுதும் பதிவும் எதற்கு நண்பனே? (இது உங்களுக்கல்ல ஏனைய உறவுகளுக்கு!) சரணம்-1 அமர்ந்து எழுதும் அறையின் ஒளியும் உங்களைக் கேட்கும் எப்படிச் சொல்வேன்? யாழ் உறவுகளின் முகங்கள் தெரியுமா? தொடர்ந்து எழுதும் விரலின் வலியை மயிலிறகு கேட்கும் எப்படிச் சொல்வேன்? தொலைந்துபோன உறவுகள் சேருமா? கருத்துக்களத்தில் ஆக்கம் சேர்க்கும் கைகள் இன்று எங்…
-
- 7 replies
- 2k views
-
-
பிறந்த நாட்டில் .... பிறந்த ஊரில் .... ஒருபிடி மண் தான் .... எனக்கு .... பொன் விளையும் பூமி .....!!! & கவிப்புயல் இனியவன் இவை எனக்கு சிறந்தவை -01 --- பேசும் மொழிகளில் .... எந்த மொழியில் .... கலப்படம் இல்லையோ .... அந்த மொழி .... எனக்கு தாய் மொழி ..........!!! & கவிப்புயல் இனியவன் இவை எனக்கு சிறந்தவை -02 மேலும் தொடரும் ....................
-
- 6 replies
- 891 views
-
-
தமிழர் பிரிவுகளால்...!!! தமிழர்களுக்கும் சிங்களவார்களுக்கும் போராட்டங்கள் ஆரம்பித்தோ பல வருடங்களைத் தாண்டியும் தமிழனும் வெற்றி பெறவில்லை சிங்களவனும் வெற்றி பெறவில்லை.... தமிழர்களுக்குள்ளே பல பல விஷக் கிருமிகள் இன்றைய துரோகி கருணா(கம்) உட்பட பிரிந்து சென்று கூட்டணி வைத்து தமிழர் போராட்டத்திற்கு எதிராக இயங்கும் போது இந்த சிங்கள அரக்கர்களுக்கு எப்படித்தெரியப் போகின்றது நம் இன உயிர்கள் படும் அவஷ்த்தை எப்படித் தெரியப் போகின்றது???? ஒன்றாய் சேர்ந்து சாப்பிடுவார்கள் ஒன்றாய் சேர்ந்து கதைப்பார்கள் ஒன்றாய் சேர்ந்து தூங்குவார்கள் ஒன்றாய் பயிற்சிகளும் பெறுவார்கள் எல்லாம் முடிந்ததும் இந்தப் பச்சோந்திகள் எ…
-
- 6 replies
- 1.3k views
-
-
ஆட்டம் காண்கிறதா ஐக்கிய இராச்சியம்-பா.உதயன் அனைத்து உலகுக்கும் அரசியல் படிப்பித்தவையாம் அந்தப் பெரிய பிரித்தானியாவாம் அண்மைக் காலமாய் ஆடிப்போய் கிடக்கினமாம் அடிக்கடி தலைவர்கள் மாறியும் போகினம் சங்கீத கதிரை போல் எப்போதும் சுத்துகினம் பகிடி அரசியலோ என்று பார்க்கிறவ கேட்கினம் பவுண்டின் பெறுமதி குறைந்திப்போ போச்சுதாம் பணவீக்கம் எல்லாம் கூடிப் போச்சுதாம் கோணிப்பை நிறைய பணத்தை கொடுத்து பாலும் பாணும் வேண்டத்தான் காணுமாம் இனி வரும் காலம் பிரச்சனை தானம் எப்படி சனங்கள் சமாளிக்கப் போகினம் உலகம் எல்லாம் உன்னிப்பாய் பார்க்கினம் என்னப்பா இனி நடக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு …
-
- 6 replies
- 645 views
-
-
-
-
எப்போதும் கண்கள் பார்த்துப் பேசும் பழக்கம் எனக்கு. முகம் பாராமல் நட்பொன்று வளரலாம் என்பதே தொலைபேசியில் நீ அறிமுகமானபோதுதான் தெரிய வந்தது. உன் குரல் வசீகரமும் சரளமான பேச்சும் உனக்கோர் முகத்தை என் மனதில் வரைந்தது. நீயும் எனக்கோர் முகம் வரைந்திருப்பாய். நம் நட்பு வளர்வதில் உடன்பாடுதான் என்றாலும், சந்திப்பு நிகழ்வதில் உடன்பாடில்லை. உனக்கான என் முகமும் எனக்கான உன் முகமும் அழிந்து போவதில் எனக்கு விருப்பமில்லை. நன்றி சௌம்யா.......
-
- 6 replies
- 1.4k views
-
-
புதிதாக மாறிக்கொண்டிருக்க...... ஆண்டுகள் ஒவ்வொன்றும் புதிதாய்ப் பிறந்து கொண்டிருக்க..... வசந்தகாலம் இலையுதிர்காலம் என காலங்கள் மாறிக் கொண்டிருக்க.... பிரம்மன் தன்னிடம் இருப்பதை படைப்பதும் படைத்ததை திருப்பி பறிப்பதுமாக தனது வேலையை மாற்றி மாற்றி செய்து கொண்டிருக்க.... மனிதர்களின் குண இயல்புகள் கூட தாழ்ந்தும் மேலோங்கியும் மாறிக் கொண்டிருக்க...... ஏன் ...ஏன்.. ஈழம் மட்டும் மாறாமல் இன்னும் யுத்த பூமியாக....... நம் ஈழத் தமிழர்களின் கண்ணீர்களை மட்டும் தாங்கிக் கொண்டிருக்கிறது.... ஏன் இன்னும் மாறாமல் கவலைகளை மட்டும் சுமந்து கொண்டிருக்க…
-
- 6 replies
- 1.2k views
-
-
மன்னிக்க நண்ப....! வாசல் தாண்டி உன் மிதிவண்டி வைரவர் கட்டில் கால் தாங்கி நிமிரும். எங்கோ பார்வைகள் போவதாய் கொள்ளையிட்ட உன் மெளனப் புன்னகை இன்னும் விடுபடாமல்.... கண்ணுக்குள் கவிதையெழுதிய - நீ நெஞ்சுக்குள் இருந்த நினைப்பை ஏனோ நெடுங்காலம் அடைகாத்தாய் ? நேரம் வருமென்று காத்திருந்தா இல்லை நெருப்பிது சுடுமென்றா போகவும் வரவும் புரியாத பார்வை தந்தாய் ? கனவுக்குள் காதல் நினைவுக்குள் கரைந்த உன் பார்வைகள் நினைவுக்குள் அறுபடாமல்.... இன்னும் நினைவில் இருக்கிறாய்.... காலம் தந்தது உனக்காய் ஒரு கவிதை மட்டும் தான். மன்னிக்க நண்ப, மறுபடி ஒரு கவிதை உனக்காயில்லை மன்னிக்க நண்ப..... 20.12.2001
-
- 6 replies
- 1.8k views
-
-
ஓரு தடவை உன்னைப் பார்த்தேன் -ஆனால் இப்போழுது உன்னைப் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது! இது நட்பா? காதலா? இல்லை என் சொந்தமா? - ஆனால் இப்போழுது என் இதயம் மட்டு;ம் உன்னிடம் என் மனதுக்குள்ளே புகந்தவனே நீ யார்? - ஏன் எனது தூக்கத்தை கலைக்கிறாய்? எனது இதயத்தை எடுத்துச் சென்றவனே! உனது இதயத்தை என்னிடம் விட்டுச் செல் - நீ வரும் வரை பாதுகாப்பேன்! உன்னுடன் இருக்கும் பொழுது என் இதயம் எதுவும் சொல்லவில்லை உன்னைவிட்டுப் பிரிந்தவுடன் என்னிடம் ஏதேதோ சொல்கிறதே! இவை யாவும் எனக்கு மட்டுமா? இல்லை உனக்கும் தான் பிரியா இவருடைய முதல் கவி இதுவென நினைக்கின்றேன்
-
- 6 replies
- 1.7k views
-
-
'யுத்த கால இரவொன்றில்...' கவின் மலர் 'உங்களின் வரையறைகளின் சாளரத்துக்குப் பின்னால் நீங்கள் என்னைத் தள்ள முடியாது. இதுவரை காலமும் நிரந்தரமாக்கப்பட்ட சகதிக்குள்கிடந்து வெளியே எடுத்து வரப்பட்ட ஒரு சிறிய கல்லைப்போன்று, நான் என்னைக் கண்டெடுத்துள்ளேன்!’ இந்தப் பளீர் கவிதை வரிகள் ஈழத்துப் பெண் கவிஞர் சிவரமணிக்குச் சொந்தம்! 20 வயதுக்குள்ளாகவே ஈழத் தமிழ் இலக்கிய உலகில் முக்கிய இடம் பிடித்த தீர்க்கமான கவிஞர். இலங்கையில் இருந்த பெண்ணிய இயக்கங்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்த சிவரமணியின் எழுத்துகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. குழந்தைகளின் மனதில் போர் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த அவரது அக்கறை 'யுத்த கால இரவொன்றில் நெருக்குதல்’ கவிதையில் வெளிப…
-
- 6 replies
- 2.1k views
-
-
காற்று வெளியிடையே கணங்கள் கனதியாய் நகர்கின்றன காணும் காட்சிகளும் விரைவாய் கடந்து தான் போகின்றன கிழக்கில் காணும் கதிரவன்போல் கீழிருந்து மேலேறும் நினைவுகளில் கிரந்தங்களாய் இடையிடை தோன்றும் கிரகிக்க முடியாத கிடப்பில் போட்ட கீறல் கொண்ட நினைவுகள் குறுக்கும் நெடுக்குமான காலங்களின் கனவுக் கோடுகளில் என்றும் கணக்கிடவே முடியாததான கனமான நினைவுகளின் வரிகள் கண்ணிறைத்துக் கனதியாய்க் காலக் கோடுகளை வரைகின்றன கோலமிழந்த நினைவுகளும் குதூகலிக்கும் கனவுக்களுமாய் காலமிழந்த கணக்கற்ற நாட்களின் கண்டுபிடிக்கவே முடியாத காட்சிக் குவியல்களின் நடுவே கண்மூடிக் கர்வமற்றுக் கிடக்கிறேன்
-
- 6 replies
- 1.1k views
-
-
அதிகாலையில் துயில் எழுந்து … தூரத்துபார்வை கூட தெரியாத பொழுதில் … தலையிலே ஒரு கம்பீர தலைப்பாகை … கமக்கட்டுக்குள் ஒருமுழ துண்டு … தோளிலே மண்வெட்டி -உன் உழைப்பையே காட்டும் விவசாய பாரதி -நீ யாருக்கு வரும் இந்த தைரியம் ….? கொட்டும் மழையில் உடல்விறைக்க… உழைப்பாய் – வாட்டும் வெயிலில் … குருதியே வியர்வையாய் வெளிவர …. உழைப்பாய் – நட்டுநடு ராத்திரியில் … காவல் செய்யவும் புறப்படுவாய் .. யாருக்கு வரும் இந்த தைரியம் ….? பட்ட விவசாய கடனை அடைக்க பட்டையாய் உடல் கருகி …. விற்று வந்த வருவாயை .. கடனுக்கே கொடுத்துவிட்டு … அடுத்துவரும் காலத்தில் சாதிப்பேன் ..!!! அதுவரையும் காத்திருக்கும் -உன் துணிவு யாருக்கு வரும் இந்த தைரியம் ….? உச்ச அறுவடை பொழ…
-
- 6 replies
- 1.1k views
-
-
பாவலனா நீ..?...சீ....துா... தோளிலே துண்டிட்டு தோழனாகி நீ வந்தால் கட்சி தலைவனா நீ- உன்னில் காறி உமிழாரா..? குப்பைகளை கூட்டி உன்- இதய கூடையிலே போட்டு விட்டு நாற்றம் அடிக்குதென்றால்-உன்னில் நாறாமல் என் செய்யும்..? பட்டாடை கட்டி வந்த பா வரியை உதறிவிட்டு கவிதை இதுவென்று கருநெஞ்சே நீயுரைத்தால்- உன்னை கல்லால் அடிக்காரா காறி உமிழாரா..? சிலித்தெழுந்த வரிகளிற்கு சிரச் சேதம் செய்பவனே உன்னையா கவிஞனென்று-நீ உலகேறி பறையடிதாய்...?? நல்ல நாடகம் தான் நல்லாய் அரங்கேற்று கண்முன்னே நீ வந்தால்-உன்னை கல்லால் நானடிப்பேன்....! குறிப்பு..- ஒரு பத்திரிகைக்கு எழுதிய கவிதையை-அங்குள்ளவர் அதன் பொருளை வரிகளை சிதைத…
-
- 6 replies
- 2.3k views
-
-
தாயே உனக்காயும் விபூசிக்காகவும். அம்மா அம்மா என - நீ அழைத்துச் சொல்லும் துயரத்தின் ஈரம் நெஞ்சுக்குள் நெருப்பாய் மூண்ட நாட்கள் இன்று போல.....! உன்னைக் கைவிடோமென நம்பிய உனது பிள்ளைகளின் கனவுகள் மீது உனது நம்பிக்கைகள் து(த)ளிர்த்துக் கொண்டன. உனது கண்ணீரை உனது துயரங்களை நீ சொல்லியழுகிற போதெல்லாம் மறுமுனையில் உனக்காய் உனது குழந்தைகளுக்காய் அழுத நாட்கள் அதிகம் தாயே....! நிலம் மீட்கும் போரில் பிள்ளைகள் விதையாகிப்போன பின்னும் வீரத்தின் அடையாளமாய் அவர்கள் விட்டுச் சென்ற கனவுகள் வாழும் நிலத்தில் வாழும் கனவோடுதானே வன்னியைப் பிரியாமல் அங்கேயே வாழ விரும்பினாய்....! ஏன்றாவது திரும்புவான் கடைக்குட்டியென்ற கனவைத் தானே தாயே என்றென்றும் புலம்புவாய் அவனது வரவைத் தானே நீ தினமும் ஏ…
-
- 6 replies
- 894 views
-
-
அவசரமாய் நான் வீதி கடக்கையிலும் நீயே நினைவுக்கு வருகிறாய் எப்போதோ உன்னோடு வீதி கடக்கையில் நீ குட்டுவைத்து குழந்தை போல் எனை கூட்டிச் சென்றாயே * என்னை எழுத வைப்பதற்காகவே கவிதையாய் படுத்துக் கிடப்பாய் எனக்கு முன் நீ * நீ எழுதிய முதல் கவிதை நான் ஒவ்வொரு பத்திரிகை குப்பைத் தொட்டியிலும் கிழிந்து கிடக்கிறேன் * உன்னை விட தொட்டால் சிணுங்கி பரவாயில்லை நீ பேசினாலே சிணுங்கிறாயே * பெண்களுடன் சுற்றி இருக்கீங்களா என்று கேக்கிறாய் இல்லையென்றால் நீ எனக்கு தேவதையாய் தெரிந்திருக்கமாட்டாய் -யாழ்_அகத்தியன்
-
- 6 replies
- 1.5k views
-
-
தத்துவங்கள் பல தந்தனர் தமிழ் தத்துவ ஞானிகள் தமிழர் நாம் மறந்தோம் தத்துவம் தனை மனதில் பதிக்க சித்திரமாக சுவர்களில் பதித்தோம் சிலையாக வடித்தோம் தெருக்களில் வைத்தோம் குருபூசை-மறந்தோம் வையத்துள் வாழ குரு கூறியவைகளை உலா வந்தோம் உலக மொழி தத்துவங்களில் உணர்தோம் தத்துவம் யாவும் ஒன்றன்று உபதேசங்களை கடை பிடிப்பது கடினமென்று உணர்ந்து மறைத்தோம்,தொலைத்தோம் எம்மை உபதேசித்தவர்களின் பெயர்களிலும் மன்றங்களிலும்
-
- 6 replies
- 1.5k views
-
-
மென்மதி மலர்மீது பூம்பனித் துளிகள் தேனி சிறகசைக்கத் துளிகள் ஒன்றாயின மஞ்சள்த் தேனியின் காலின் கறுப்பிற்கு மகரந்தச் செம்மஞ்சள் முறுவலை என்முகம் முளுதாய்ப் பிரசவித்தது. மலையில் உருளும் பனியருவி போல நேரம் உருண்டு தொலைந்தது கூடவே மாயையும் கரைந்துபோனது நிறம் மணம் மறைந்து ஆவி ஒன்றென ஆகி நின்றோம் எரியும் கட்டையோடு பிறிதொரு கட்டைபோடின், ஒரே நெருப்பு இரண்டிலும் எரிவதுபோல் தேனியும் மென்மதியும் மகரந்தமும் என்னுசிரும் ஜோதியில் ஒன்றாய்ப் புரிந்து கிடந்தன எங்கும் பரந்த முடிவற்ற வெளி ஆதியும் அந்தமும், அடியும் முடியும், நேரமும் மரித்த வெளி அருவத்துள் உருவத்துள் அனைத்துள்ளும் பரந்த ஒரே வெளி கடலிற்குள் உப்பற்ற நீர்த்துளி இல்லை இவ்வெளிக்குள் துளிகள் இல்லை, ஒ…
-
- 6 replies
- 933 views
-
-
வருசாவருடம் பொங்கல் வருகிறது பொங்கலும் நடக்கிறது ஏதோ குறைவது போல்....... என்ன இல்லை புலத்தில் அரிசி சக்கரை கரும்பு அவல் பொங்கிட அவள்... எல்லாம் உண்டு... இருந்தாலும் இனிப்பில்லை .......... பொங்கலாம் புத்தாடை உடுத்தலாம் உற்றார் உறவினர் அயலவர் வீட்டுக்கும் போய்வரலாம் இருந்தாலும் ஒட்டுதில்லை............. என்ன குறை??? அந்த மண் இல்லை அது எங்களிடமில்லை அது வரும் நாளே மனம் பொங்கி பொங்கலிட்டு புதுப்பொலிவுடன் கம்பீரமாக தமிழன் தை நோக்கி நடக்கும் நாள்..............
-
- 6 replies
- 700 views
-
-
சின்ன வயசு எனக்கு அதைவிட சின்ன வயசு உனக்கு மீசை எனக்கும் ஆசை உனக்கும் வராத காலம் அதுவும் பசுமையான காலம் புத்தகங்களை சுமக்க இயலாத வயதில் உன்னை மட்டும் சுமந்ததில் சுகம் எனக்கு நாம் கை பிடித்து பொடி நடை போடுவதற்காகவே நம் பள்ளி வரவை அதிகரித்தோம் ஒரே விட்டில் வாழ்ந்தாலும் ஒரு வார்த்தை பேசியதில்லை பயத்தால் நானும் வெக்கத்தால் நீயும் ஊமையாய் ஊனமாய் வாழ்ந்தோம் இதில்தான் உண்டானது எனக்கும் உனக்குமான உறவு உன்னில் விழிக்க வேண்டும் என்றே தினமும் தூங்க போவேன் நான் அதற்காக நீ அதிகாலை எனக்கு முன் விழிப்பாய் உன்னில் விழிக்காமல் என்றாவது என் தூக்கம் கலைந்ததுண்டா பள்ளியில் விழுந்த எறிகணை என் உயிரை பறித்…
-
- 6 replies
- 1.4k views
-
-
இனியவளே உன் இதயத்தின் முகவரிக்கு நான் எழுதிய கடிதம் கிடைத்ததா? உன் உதயத்திற்காக நான் வருந்திப் பாடிய வாழ்த்துப் புரிந்ததா? உன் சிரிப்புகளில் தான் என் வசந்தம் சிக்கியுள்ளது உன் இதழ் விரியும் போது தான் என் மனம் குளிர்கிறது என் இளமைக் காடுகளில் அப்போது தான் மழை பொழிகிறது.
-
- 6 replies
- 1.5k views
-
-
எத்தனை தேவதைகள் வந்துபோனார்கள் எதுவுமே நடக்கவில்லை...! வந்தவர்கள்... வரம் கொடுக்க வரவில்லை...! வாங்க வந்தார்கள்!! தேவதைகளுக்கும் தேவை அதிகம் தேவையில்லாமல் தேடி வந்தார்கள்! அழைக்காமலேயே அன்பாய்(?) வந்தார்கள்! வந்துபோனபின்... எம்மிடம் மிச்சம் மீதியாய் இருந்ததையும் அழிக்காமல் விட்டிருக்கலாம்...!!! வரம் கொடுப்பதாய் சொல்லிக்கொண்டு காட்சிதரும் தேவதைகளே! பாவம் நாங்கள்... சாபங்களை அள்ளியிறைத்துவிட்டுப் போகாதீர்கள்!! போர் என்றும் சமாதானமென்றும் போர்க்குற்றமென்றும் விசாரணையென்றும் தீர்வென்றும் தீர்மானமென்றும் எத்தனை தேவதைகள் வந்துபோனார்கள்! எதுவுமே நடக்கவில்லை! சாவின் விளிம்பில் நின்று கதறியபோது சாப்பிட ஏதுமின்றி திணறியபோது செல்வீச்சில் சின்னாபின்னமாய் சிதறி…
-
- 6 replies
- 796 views
-
-
எனக்காக தருவாயா? உன்னிடம் விரல்கள் கேட்கிறேன் என் நிலைமையை கவியாக வடிக்க உன்னிடம் வார்த்தைகள் கேட்கிறேன் என் கவிதையை எடுத்துச் சொல்ல! உன் உயிரைக் கேட்கிறேன் என் உடலை வளர்த்துக் கொள்ள! உன் அன்பினைக் கேட்கிறேன் நான் உயிர் வாழ!..
-
- 6 replies
- 1.6k views
-
-
உயிர்ப் பூக்கள் தமிழீழம் மலர்ந்து தன் மானத்துடன் வாழவே தானத் தலைவன் தரணியில் அமைத்தான் புலிப்படை எம் இனத்தை வதை செய்த பாதகரைத் திவசம் செய்ய தலைவன் வழியினில் உதித்த உயிர்ப் பூக்கள் நீங்கள். வானத்திலிருந்து விமானங்கள் குண்டு மழை பொழிந்தாலும் அந்நியப் படைகள் ஆயிர மாயிரமாய் வந்தாலும் சிரிக்கின்ற முகத்துடன் சிட்டாகப் பறந்து சென்று தேடிவந்த பகை விரட்டியடித்து பூரித்து நிற்பதே உங்களின் இலக்கு பார் முழுவதும் வியக்கும் படைப் பலத்தைப் பெற்றீர்கள் களத்தினில் எதிரிகளைக் கொன்று காலனை உம்மிடம் அழைத்தீர்கள் உங்கள் குருதி உறைந்த தமிழ்மண்ணை உயிராய் நேசிப்போம் தமிழ் உயிர்ப் பூக்கள் என்றும…
-
- 6 replies
- 1.5k views
-