கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
[size=5]ஆணிவேரை வாந்தியெடுத்த அகண்ட மரங்கள்... [/size] அபகரிக்கப்பட்ட சிட்டுக்குருவியின் பூமியில் குருதி வார்த்துக் குருதி வார்த்து வளர்க்கப்பட்ட பெருமரங்களின் அகண்ட நீழலின்கீழ் கழுத்தில் ரை சுருக்கிக்கட்டியபடி ஞானசம்பத்தக் கூத்தாடிய கவிஞர்களெல்லாம் காணாமற் போயிருந்தனர் கொஞ்சக் காலமாய் கல்லெறி விழுந்து கலைந்தோடிய இலையான்கள்போல் இவர்களன்றோடிய நாட்கள் நினைவிருக்கிறது நன்றாயின்னமும் சிட்டுக் குருவிக்கு. மேற்குத் திசையில் வெடிச்சத்தம் கேட்ட மேதினத் தோர்நாள் தான் அது. சஞ்சீவி இலைகளில் தோரணங்கட்டி அகண்ட மர நிழலில் கடை பரப்பி கதை கவிதை ஒப்புவித்த காலங்கள் போட்டது போட்டபடி கிடக்க, தலைதெறிக்க ஓடிப்போய் வலுத்தவர் வாலில் நூல…
-
- 0 replies
- 594 views
-
-
தீவினில் ஒரு தீபம் அது வீர தீபம் உடல்தனை உருக்கி உயிரினை அளித்து மூட்டிய தீபம் கார்த்திகை மாதம் மலர்ந்திடும் மலரும் காட்டினில் சிறுத்தையும் வளவினில் செம்பகமும் வீதியில் வாகையும் வணங்கிடும் தீபம் அது வீர தீபம் மக்களின் மனங்களில் மலர்ந்திடும் நினைவுகள் சொரிந்திடும் விழினீரில் உருகியே தாழ்ந்திடும் தீபம் அது வீர தீபம் விடியலின் ஒளிதேட இருளோடு கலந்திட்ட தமிழீழ மைந்தரவர் ஏற்றிய தீபம் அது வீர தீபம் காற்றோடு சாயினும் மழையோடு மாழினும் தமிழீழ மண்ணிலது அணையாத தீபம் அது வீர தீபம் வேங்கைகள் உயிரது வேள்வியில் கலந்திட்ட வேளையில் பிறந்திட்ட மாவீர தீபம் அது வீர தீபம் அழியாத நினைவோடு நெஞ்சினில் வாழ்ந்திடும்…
-
- 4 replies
- 1.5k views
-
-
நான் உனக்கு அன்பான மனைவிதான் உன் சுதந்திரத்தில் நான் தலையிடாமல் இருக்கும் வரை; நான் உனக்கு அன்பான மனைவிதான் உனக்கு மட்டுமே நான் வேலைக்காரியாக இருக்கும் வரை; நான் உனக்கு அன்பான மனைவிதான் உன் குடும்ப பிரச்சினைகளை தாங்கும் வரை நான் உனக்கு அன்பான மனைவிதான் நம் குழந்தையை நானே வளர்க்கும் வரை நான் உனக்கு அன்பான மனைவிதான் என் விருப்பங்களை உன் மேல் திணிக்காத வரை நான் உனக்கு அன்பான மனைவிதான் உனக்காகவே வாழும் வரை!
-
- 23 replies
- 7k views
-
-
வரலாற்றில் புதையுண்டு போன நிலங்களில் இருந்து மீண்டும் குதிரைகள் வெளிக் கிளம்பும்.. நூற்றாண்டுகளாக சாம்பல் மூடிய வீதிகளில் அந்நிய பாதச் சுவடுகளை மேவி தம் கால்கள் பதிக்கும். இருண்ட கானகங்களில் மழையின் பின் மரங்கள் பொந்துகளுக்குள் பொத்தி வைத்த நீரை வாரி இறைக்க நுதல் வழி வழியும் நீர் படர்ந்து காய்ந்த மண்ணின் துகள்கள் ஒவ்வொன்றும் உயிர்த்து எழும். எம் கடற்கரைகளில் எங்கள் கூழைக்கிடாக்கள் சேர்த்து வைத்திருந்த மீன் குஞ்சுகளின் ஆரவாரங்களில் கடலின் மெளன வெளிகளில் தாண்டு போயிருந்த எம் படகுகள் மீண்டும் எம் கடல்களில் வலம் வரும் கால அசைவியக்க காற்றில் எப்பொழுதும் மரங்கள் காய்ந்து கிடப்பதில்லை எப்போதும் வானம் …
-
- 38 replies
- 3.5k views
-
-
[size=5]மழைச்சத்தம் [/size] [size=5]தர்மினி[/size] முன்னொரு காலம் மழை சத்தமிடுவதைக் கேட்டேன். ஓலைக் குடிசையொன்று மூடக்கதவில்லை சன்னல்களற்றுச் சுற்றிவரச் செத்தைகள் அதிலே குறைச்சுருட்டு, பாதிப்புழுக்கொடியல், பற்பொடிப்பைக்கற் சொருகிக்கிடப்பன. சாரைப்பாம்பும் சரசரக்கும். ஓலைக் கூரையில் மழைக்குதியோசை. நடுக்கூரை மழையொழுக டப்…தொப்…டப்…தொப் சட்டியிலும் சத்தம் . தாழ்வாரம் குந்திக் கை நனைக்க முற்றத்தில் குமிழ்கள் ஓடி வெடிக்கும் என் முகத்திலடிக்கும் சாரல். மழைச்சத்தம் காதுகளில் குளிர்ந்து இறங்கி கிணறு தழும்ப நெல்லி முறிந்து முருங்கை சரியும் மாம்பிஞ்சுகள் உதிர்ந்து பரவ பள்ளத்து வெள்ளங்களில் தவளைகள் கத்தும் சற்று நேரத்தில…
-
- 3 replies
- 621 views
-
-
இசை ஞானி காலத்தை வென்றவர்..! தயை கூர்ந்து இசை ஞானி அவர்களை ஈழ விசயத்தில் இழுக்காதீர்கள்..? அவர் ஒன்றும் அரசியல்வாதி அல்ல..! அவர் ஒன்றும் திராவிட/ ஆதி திராவிட அரசியலுக்கு மாற்று அல்ல..! அவரை ஏன் இழுக்க வேண்டும்..? ஈழ அரசியலில்..! கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கு இவர் எப்படியும் பொறுப்பாளர் என்ற அவசியப் பொருள் முத்திரை ஏன்..? தடுமாற்றம் கொள்கிறார்களோ..? காலம் பெருவெளி சூனியம் அந்திவெளி வண்ணங்களில் தோன்றும் ராக ஓசைகள் இவை மிஞ்சியவை அல்ல அனைத்தும் என்று தெரியுமா உங்களுக்கு..? பழந் தமிழனின் கொடுந் துயரமோ இசை ஞானி அவர்கள்..? சங்கிலிக்கருப்பு
-
- 3 replies
- 828 views
-
-
அந்தோ பரிதாபம் ..! யப்பான்,சீனா, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா, தென் கொரியா... இந்த நாடுகள் எல்லாம் என்ன செய்யப் போகின்றனர்..? மூன்றாம் உலகப் போர்..? அதெல்லாம் வாய்ப்பே இல்லை என்று சொல்ல முடியாது நண்பரே..? ஆனால் ஒன்று தெரியுமா.. உங்களுக்கு..? உலக பாட்டாளிகளின் முன்னணிப் படை இலங்கை தமிழர்கள் என்று..! உலகப் பாட்டாளிகள் வசம் இழப்பதற்கு ஏதுமில்லை.. ஆனால் ஈழத் தமிழர்கள் இழப்பதற்கு உயிரை மிகப் பத்திரமாக வைத்துள்ளார்கள். பாட்டாளிகளை மிஞ்சிய ஈழத் தமிழர்கள் ஒரு கேலிப் பொருளாக மாற்றப்பட்டு விட்டார்களோ..? ஒரு மூன்று ஆண்டு காலமாக சங்கிலிக்கருப்பு
-
- 0 replies
- 705 views
-
-
[size=5]" ஈழ மரத்தடித் தேனீ "[/size] [size=5][/size] வாடி விழுந்த பூவுக்குள் சிறுதேனீ தேன்குடிக்க முயல்கிறது! தேடி வைத்த தேன்கூடு ஏதுமன்றி தனிமையில் காய்கிறது! செத்து விழுந்த சருகுகளுக்குள் சில காலூன்றி எழும்பி விழுகிறது! பறக்க முனைந்து பாதி சிறகுகளை வலிய விரித்து தவழ்கிறது! பல்லிகளுக்கும் ஓணான்களுக்கும் அழையா விருந்து நடக்கிறது! ஆடிப்பாடி பறந்து திரிந்த கூட்டம்… சிறுகச் சிறுக வருடங்களாய் சேர்த்து வளர்த்த தேன்வதை… ரீங்காரத்தோடு நிமிர்ந்து நின்ற கூடு… யாருடைய அகங்காரத்தால் வதைபட்டு அழிந்ததுவோ…? நன்றி : கவிதையின் கவிதைகள்
-
- 16 replies
- 1.1k views
-
-
சவுக்கும் ... குப்பி சாராயமும் காற்றில் சுழன்று சுழன்று வீசியது கிர் கிர் செவிப்பறையில் அறைந்து மறைந்தன பார்வை வழி உள்நுழைந்த அசிரீரி உள்புகுந்து வெளியேறிய வெளி உள் நுழைந்து சிவப்பு நிறம் கொண்ட சவுக்கு குப்பி சாராயம் ஆள் கிணற்றுக்குள் சங்கிலிக்கருப்பு
-
- 0 replies
- 544 views
-
-
அது ஒரு கோடைக் காலம் இரவு நேர கிரிக்கெட் மைதானத்தில் வீசும் ஒளி வெள்ளத்தை மிஞ்சும் கண் கூசும் உப்பளங்களில் அது போன்ற ஒரு பளபளப்பு எங்கெங்கு காணினும் கருப்பு வெண்மையும் கானல் நீரும் அழுக்கு நிறைந்த சிறு சிறு கற்கள் கலங்கிய சிறு சிறு ஓடைகளும் சிறகுகள் கொண்ட மீனவர்கள் புறந்தள்ளி விடுகின்றனர் இந்த கோடை காலத்தை சங்கிலிக்கருப்பு
-
- 0 replies
- 451 views
-
-
[size=5]தமிழ்மொழி வாழ்த்து [/size] [size=1][size=5]தான தனத்தன தான தனத்தன [/size] [size=5]தான தந்தா னே [/size] [size=5]வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழிய வே! [/size] [size=5]வான மளந்த தனைத்தும் [/size][size=5]அளந்திடும் வண்மொழி வாழிய வே! [/size] [size=5]ஏழ்கடல் வைப்பினுந [/size][size=5]தன்மணம் வீசி இசைகொண்டு வாழிய வே! [/size] [size=5]எங்கள் தமிழ்மொழி! [/size][size=5]எங்கள் தமிழ்மொழி! என்றென்றும் வாழிய வே! [/size] [size=5]சூழ்கலி நீங்கத் [/size][size=5]தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையக மே! [/size] [size=5]தொல்லை வினை தரு [/size][size=5]தொல்லையகன்று சுடர்க தமிழ்நாடே! [/size] [size=5]வாழ்க தமிழ்மொழி! வாழ்க [/size][size=5]தமிழ…
-
- 10 replies
- 1.5k views
-
-
பசுமை தளிர்த்து கனியும் கிடைத்து நிலைக்கும் என நினைக்கையில் இலைகள் உதிர்ந்து காம்பும் கறுத்துப் பட்டதாய் நின்றது பின் பனியுந்தூற, பட்டை பிளந்து பஞ்சாய்ப்போனதுபோல் பழ மரம் பருத்திச் செடியாய்க் காட்சியளித்தது. புதிதாய்த் தூவிக்கிடந்தது பனி அதில் புதிதாய் ஏதோ பிராணியின் தடம் இதுவரை எதுவும் நடக்காத கிரகத்தின் முதற்சுவடுகள்... மனதுள் பிரமை நிஜமாய்த் தெரிந்தது. ஜக்கட்டுக்குள் நுளைந்து குளிரோடு பொருதும் பிறவும் பூண்டு பின்வளவுக் காட்சி மனதில் இருக்க முன்கதவால் இறங்கித் தெருவில் நடந்தேன். கோடையில் எனது போதியாய் விளங்கும் காட்டுக்குள் புகுந்தேன் பட்டனவாய் நின்ற நெடிதுயர்ந்த விருட்சங்கள் மூச்சின்றி நிமிர்ந்து நின்றன. கிளையாய்ப் பிரிந்தது பாதை இரண…
-
- 11 replies
- 1.7k views
-
-
ஒரு துளி இறுக்கியணைத்த விறைப்பு இறங்க ஓடத்தொடங்கிய ஒரு இலட்சம் வீரியங்கள் விழ விழ எழ முடியாமல் ஒன்று மட்டும் திரும்பி பார்த்து வீழ்வேன் என நினைத்தாயோ? உட்புகுந்தது :lol: :lol: வேறையார் நான்தான். சும்மா ஏதோ தோன்றியது கனக்க யோசிக்க வேண்டாம்
-
- 4 replies
- 676 views
-
-
[size=5]கிரிக்கெட்[/size] நடு ரோட்டில கிரிக்கெட் ஆடினதும் நடுச்சாமத்தில அவுட்டான மாதிரி கனவுகண்டு திடுக்கிட்டு எழும்பினதும் அடிச்ச ஸ்கோரை கொப்பியில எழுதி வச்சதும் வீணாக ரன் அவுட்டானதுக்கு அழுது ஃபீல் பண்ணினதும்... இனிமையான கிரிக்கெட் வாழ்க்கை! இப்பொழுது ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரன்! நன்றி : கவிதையின் கவிதைகள்
-
- 0 replies
- 613 views
-
-
[size=4]மழைக்கூதல் தேகம் தீண்டிப்பரவியவள் சோம்பல் கலைத்தது. கிளைகளின் ஆலாபனை இடம்மாறும் புறாவின் குறுகுறுப்பு கடகத்துள் கிடந்த நாயின் முனகல் கட்டையை சுற்றும் ஆடுகளின் அரவமென, அறிகுறிகளால் அவஸ்த்தைகளை உள்வாங்கி இயங்கத்தொடங்கினாள்.[/size] அள்ளிவந்திருந்த [size=4]கொக்காரை பன்னாடைகளை தாவரத்து ஓரம்தள்ளி மழைநீரேந்த பானைகளை அடுக்கி, தூவானம் தொடாதவிடத்தில் காயாத ஆடைகளை கட்டி, உவனிக்காதவிடம் பார்த்து அடைக்கோழியின் கூட்டையரக்கி, பெருமூச்சுடன் வான்பார்க்கையில் விழுந்தது துளிகள் முகத்தில்.[/size] பாத்திரங்களில் ஒழுக்கு நீர் [size=4]ஒசைலயத்துடன் விழ, தெறித்ததுளிகளால் நனைந்தது நிலம் சாம்பலற்ற அடுப்போரம் வாயிலேதுவுமின…
-
- 5 replies
- 682 views
-
-
[size=5]மண்ணின் வாசனை,[/size] [size=5]மனதை நெருடுகின்றது![/size] [size=5]நினைவுகள் பின்னிப் பிணைந்து,[/size] [size=5]கண்ணாமூச்சி விளையாடுகின்றன![/size] [size=5]உப்புக் கலந்த காற்றின் நினைவில்,[/size] [size=5]நாசித் துவாரங்களின் அடைப்புக்களும்,[/size] [size=5]விலகி வழி விடுகின்றன![/size] [size=5]ஏனிந்தப் பிணைப்பு என்பதை,[/size] [size=5]அறிய மனது துடிக்கிறது?[/size] [size=5]அந்த மண்ணின் நினைவில்,[/size] [size=5]உடம்பின் உழைவுகள் கூட,[/size] [size=5]ஒவ்வொன்றாய் விடை பெறுகின்றன![/size] [size=5]காலைப் பொழுதின் புதுமையில்,,[/size] [size=5]கெக்கலித்துச் சிரிக்கும் பறவைகளே![/size] [size=5]உங்கள் கீதங்களில் உயிர்ப்பு இல்லை![/size] [size=5]எங்கள் குயில…
-
- 40 replies
- 3.5k views
-
-
சிந்தனை செய் ஆதியும் கல்வியிற் சிறந்த ஜலஜாவும் வீரத்தில் வல்ல கட்டை சாந்தியும் மஞ்சள் முகமாம் மலர்வதனியும் கோள் செய் வல்ல கோமதியும் ஜப்பான் குண்டு தாரணியும் கண்களாலே மோகன வலை வீசும் மா. கௌரியும் சாந்தமே உருவான ச. சொரூபாவும் புள்ளிமானாய் வெருண்டோடும் கட்ட கௌரியும் நித்திரைக்குயின் ரொனிக் ரேணுகாவும் கொடியிடையாள் நடைபயிலும் ச. வத்சலாவும் மூக்காலே ரெயில்ஓடும் மூக்குச்சளி மீராவும் பூங்குயிலாம் இசைபாடும் பொருக்குவண்டு வத்சலாவும் வெடுக்கென்ற பேச்சால் கொடுக்காய் கொட்டும் கொடுக்கு சாந்தியும் (எனது பள்ளித் தோழிகளை பற்றி ஒன்பதாம் வகுப்பில் எழுதியது) இதில் ஒருத்திக்கு என்னில் சரியான கோபம், கொஞ்ச காலம் என்னுடன் க…
-
- 10 replies
- 888 views
-
-
[size=5]பனியில் மொழி எழுதி - கவிஞர் சோலைக்கிளி[/size] சோலைக்கிளி இலங்கையின் கிழக்கும் மாகாணத்தின் கல்முனையைச் சேர்ந்த கவிஞர். இவரது இயற்பெயர் உதுமாலெவ்வை முகம்மது அதீக் ஆகும். இவர் 1980களிலே எழுதத் தொடங்கியவர். ஈழத்து கவிதைப் பரப்பில் சோலைக்கிளியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. கடந்த 25 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட கவிதைகளை எட்டுத் தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார். பாம்பு நரம்பு மனிதன், காகம் கலைத்த கனவு, பனியில் மொழி எழுதி, எட்டாவது நகரம் போன்றவை இவரின் கவிதை தொகுப்புகளில் சிலவாகும். அந்த வகையில் இம்மாத சுவடுகள் பதியுமொரு பாதையில் கவிஞர் சோலைக்கிளியோடு பயணிப்போம். இதைத்தான் இவன் இவ்வளவு நாட்களாகப் படித்துக் கொண்டிருந்தான் மேசைப் புத்தகத்…
-
- 1 reply
- 850 views
-
-
[size=5]திருவிழா[/size] கோயிலுக்கு திருவிழா என்பதை விட அது எங்களுக்குத்தான் திருவிழா! ஐஸ்கிறீம், கரஞ்சுண்டல், கச்சான் என வகை வகையா சாப்பிட்டும் அடங்காமல்... பஞ்சு முட்டாய்க்காரன் பின்னால போய், இடம் மாறி தொலைஞ்சு போக... இன்னாரைக் காணவில்லை என ஒலிபெருக்கி அறிவித்தல் வருவதும் நடந்திருக்கு! நன்றி : கவிதையின் கவிதைகள்
-
- 1 reply
- 2.4k views
-
-
[size=5][size=4] இனம் தின்னும் ராஜபக்சே................. [/size][/size] [size=4]சொந்த நாய்களுக்குச் சொத்தெழுதி வைக்கும் தேசங்களே! ஓர் இனமே நிலமிழந்து நிற்கிறதே நிலம் மீட்டுத் தாருங்கள் பூனையொன்று காய்ச்சல் கண்டால் மெர்சிடீஸ் கார் ஏற்றி மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே! ஈழத்து உப்பங்கழியில் மரணத்தை தொட்டு மனித குலம் நிற்கிறதே! மனம் இரங்கி வாருங்கள்! வற்றிய குளத்தில் செத்துக் கிடக்கும் வாளை மீனைப்போல் உமிழ்நீர் வற்றிய வாயில் ஒட்டிக்கிடக்கும் உள்நோக்கோடு ரொட்டி ரொட்டியென்று கைநீட்டிடும் சிறுவர்க்குக் கைகொடுக்க வாருங்கள்! தமிழச்சிகளின் மானக்குழிகளில் துப்பாக்கி ஊன்றித் துளைக்கும் சிங்கள வெறிக…
-
- 21 replies
- 9.9k views
-
-
-
ஒரு அழகான காலைப்பொழுது !சூரியன் மலைகளில் பட்டுத் தெறித்ததில் பூமியெங்கும் பரவசம் ! மலை விட்டு இறங்கிய அருவி மெதுவே தரை தட்டி நதியானது. பார்வை பட்ட இடமெல்லாம் திரும்ப மனமின்றி பதிந்து நின்றது. நதி நிலை அருகே தனி வழி நடந்தேன். கண் முன்னே கடவுளின் உலகம் போல் கரும் கல் மலை! நிமிர்ந்து பார்க்கும் போதெல்லாம் அந்த இயற்கை கட்டிய சுவரின் பின்னே இன்னுமோர் உலகமும், மனிதர்களும் இருக்கிறார்கள் என்கிற பிரமை எழுவதை தவிர்க்க முடியவில்லை. உயர்ந்து நின்ற அந்த மலை மௌனத்தின் பரிமானம் எனக்கு உணர் த்தி நின்றது. அடிவாரத்தில் போய் அப்படியே தங்கி விடலாமா, மனம் கேட்டது..! உற்றுப் பார்த்த போதெல்லாம் என்னை வாவென்று அழைக்கிறதோ, என்ணத் தோன்றியது. ' உனக்கும் எனக்கும் அதி…
-
- 10 replies
- 11.3k views
-
-
உன்னுடன் நான்படித்த காலம் கண்ணில் தெரியுதடா என்னுயிர் நண்பாஉன் நட்பின் தீபம் எரியுதடா உன் மனம் என்னவென்று யாருக்குத்தான் புரியுமடா உன்மனம் அறிந்த உண்மை எனக்கு மட்டும் தெரியுமடா அன்னையுடன் வாழ்ந்த நாளில் ஆத்ம நண்பராயிருந்தோம் இன்னல் மறந்த தோழர்களாய் கல்விக்கூடம் சென்று வந்தோம் இன்சுவை வேண்டுமென்று ஐஸ்கிரீம்கள் பல சுவைத்தோம் முன்கூட்டியே முள்ளி வாய்க்கால் அழிவினை அறியாதிருந்தோம் தோழமைக்கு இலக்கணமாய் துடிப்புடனே நின்றவனே ஆளுமையின் அகல்விளக்காய் அன்னைக்காக சென்றவனே வேளத்தின் பலத்துடனே பகைக்கு முகம் கொடுத்தவனே வாழவேண்டும் நாடென்று வீரத்துடன் மொழிந்தவனே என்னினிய நண்பா இன்று நீ பிறந்த நன்னாள் உன்னை வாழ்த்திக் கவியெழுத எனக்கு வாய்த்த பொன்னாள் …
-
- 8 replies
- 717 views
-
-
-
[size=4]கடவுளுக்கு தான் என்னை பிடிக்கவில்லையென தினமும் கண்ணீர் துளிகளை தருகிறார் அந்த மரணத்திற்கு கூட என்னை பிடிக்காமல் போய் விட்டது இன்றுவரை என்னை தேடி வரவில்லை...[/size]
-
- 0 replies
- 499 views
-