Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வாடிய முகத்தோடு பூங்காவின் வாங்கினில் அவள்... அன்பின் அடையாளமாக இல்லை.. ஆட்களுக்கு அடையாளம் காட்ட தேடிப் பிடித்தவனின் வலன்ரைன் பரிசுக்காக.. உள்ளத்தில் ஏக்கங்களோடு..! நேரம் ஆகுது காத்திருப்பாளே...??! பதட்டத்தோடு தெருவோர உண்டியலில் மணிக்கு ஒரு பவுண் தாரைவார்த்து பெற்ற அந்த கார் தரிப்புச் சீட்டைக் கூட சரியாக ஒட்டாமல்.. ஓட்டமும் நடையுமாய் வந்தான் அவளிடம் அவன்..! வந்தவன் நெருங்கி பொக்கேயை நீட்டினன்..! ஆத்திரத்தில் ஆழ்ந்திருந்த வனிதையின் கரங்களில் வன்முறை..! பொக்கே வானில் பறந்து ஈர்ப்பில் கவர்ந்து பூமியில் வீழ்ந்தது..! அவன் காதலும் நொருங்கிச் சிதறியதாய் நல்ல பாடம் படித்திட்டான்.. உள்ளூர அவள்... தன் செயலில் சாதன…

  2. யூலை 83 உன்னை மறப்பேனோ ?? காலம் என்ற காலச்சுவட்டில் என் நினைவுத்தடங்கள் பல ஆழப்புதையுண்டு அழிந்தாலும் , இந்தமாதமும் இந்த நாளும் என்மனதின் ஓரத்தில் ஆழமாய்க்கீறி ஆறாவடுவாய் போனது….. மாம்பழத்தீவை இனவாத வண்டுகள் அரித்து , அங்கொன்றும் இங்கொன்றுமாய் கருக்கட்டிய இனத்துவேச மேகங்கள் , உக்கிர இரத்தமழை பொழிந்ததும் இந்த மாதமே………. சிங்கத்தின் வம்சங்கள் தமிழ் பெண்டுகளை வகைதொகையாயாய் வேட்டையாடி கொக்கரித்ததும் இந்த மாதேமே !!!!!!!! அட பனங்கொட்டைத்தமிழா நீ எங்கள் அடிமையடா என்று சொன்னதும் இந்த மாதமே !!!! அடிமைப்பட்ட தமிழன் (ர்கள் ) ஊரிலே பொங்காது , உயிரை மட்டு காப்பாற்ற உலகெங்கும் பொங்கச் சென்றதும் , புலிபிடிக்குது சிங்கம்…

  3. Started by yaal_ahaththiyan,

    என்னவனே.. உன்னை நினைத்து நினைத்து வாழ வேண்டும் உந்தன் மடியில் உயிர் துறக்க வேண்டும் வருவாயா? காலை மாலையாவதும் மாலை காலையாவதும் உந்தன் ஆசைக்குள் மறைய வேண்டும் வருவாயா? எந்தன் கோட்டையை விட்டு நீ போனாலும் நீ போட்டு விட்டு போன கோடுகள் ஆறவில்லை அதற்காகவேனும் வருவாயா? கோழி கூவினாலும் கோயில் மணி அடித்தாலும் கோலம் போட மறந்தாலும் உந்தன் மடியில் மறக்க வேண்டும் அதற்காகவேனும் வருவாயா? கனவில் நான் குளித்து நினைவில் காய்கிறேன் என்னை உடுத்திக்கொள்ள உண்ர்வோடு வருவாயா? அங்கத்தில் இடம் பிடித்தாய் ஆசையை தூண்டி விட்டாய் அனுபவத்தை கொளுத்தி விட்டாய் அணையாமல் எரிகிறேன் அதற்காகவேனும் வர…

  4. முதற் பெண்மாவீரரான மாலதி அவர்களின் 26வது நினைவு சுமந்து வீரவணக்கங்கள்! தமிழினப் பெண்களின் அடையாளம் ஆகினாள்! ----------------------------------------------------------------------- வென்றிடச் சென்றவள் பெண்வேங்கையுள் முன்னவள் தாலியைத் தாங்கிடும் மரபிலே வந்தவள் தடை யுடைத்தவள் நஞ்சினைச் சூடினாள்! வேதனை கண்டவள் வெஞ்சினம் கொண்டவள் போரிலே புகுந்தவள் புதுயுகம் படைத்தவள் பாரிலே நிலைத்தவள் செங்கொடி ஏந்தினாள் போர்க்கலை காட்டினாள் தமிழ்ப்பெண்நிலை மாற்றினாள் அஞ்சுதல் போகினாள் ஆயுதம் சூடினாள் தூற்றுதல் துடைத்தவள் களப்பணி யாற்றினாள் வீறுடன் நடந்தவள் வித்தென வீழ்ந்தவள் அடையாளம் ஆகினாள் தமிழினப் பெண்களின் அடையாளம் ஆகினாள்!

    • 8 replies
    • 1.5k views
  5. தாயே அன்று உந்தன் மடியில் மறந்து போன என் எல்லா சோகமும் ஒன்று சேர்ந்து என்னைக் கொல்கிறது எனைத் தூங்க வைக்க தூரத்தில் நீ என்பதால் * இந்த உலகில் எந்த மூலையிலும் கிடைக்கவில்லை உந்தன் கருவறையில் கிடைத்த எனக்கான பாதுகாப்பு * என் மேலான உந்தன் கவனத்துக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் குழந்தையாய் பிறக்கலாம் உனக்கு நான் * எந்தப் பாசப்படியைக் கொண்டு நிறுத்தாயோ தெரியவில்லை உன் எல்லா குழந்தைக்கும் ஒரே அளவிலான அன்பையே காட்டுகிறாயே * என் தாரத்தின் மறுபிறவியில் உணர்ந்து கொண்டேன் நான் பிறக்க நீ தாங்கிய பிரசவ வலியை * உன்னில் தடுக்கி நான் விழுந்தபோதும்…

    • 8 replies
    • 1.5k views
  6. Started by nochchi,

    "எந்த நாளோ?' -கவிஞர் கோ. கலைவேந்தர் போரினை நிறுத்த வேண்டிப் புலம்பினோம் உலகி னோடும்! வீதிகள் எங்கும் உணாது வாடினோம் உறவி னோடும்! போர்வெறிக் கண்ணோட் டத்தில் புலமிழந்த இராச பக்சே ஓநாயின் இழவ றிந்தே உவக்குநாள் எந்த நாளோ? போர்க் களத்தின் அழுகை வெள்ளம் வடியுநாள் எந்த நாளோ? போர்க்களத்தின் உள்கா யங்கள் ஆறுநாள் எந்த நாளோ? போர் வெறி வல்லாட் சிக்குள் மீளுநாள் எந்த நாளோ? பேரொழிந்த இராச பக்சே புதையுநாள் எந்த நாளோ? மண்வெறி கொண்டார் தாமும் பிடிசாம்பல் ஆவார்! - சென்ற உயிரினைப் பொருத்து வாரும் ஒழியுநாட் கொள்வார்! - ஞாலத் தண்பரப்பில் உன்னைப் போற்றித் தொழுவாரும் யாவர்? - மீண்ட கண்பரப்பை …

    • 0 replies
    • 1.5k views
  7. எச்சாதி சொல்வீரோ பத்தே வயதான பாலகனாய் இருக்கையிலே பதிலறியாக் கேள்வியொன்றைப் படித்தவரைக் கேட்டிருந்தேன் என்வயதை ஒத்துநிற்கும் எதிர்வீட்டுப் பையனுடன் ஏற்புடனே விளையாட எதற்காகத் தடுக்கின்றீர் முத்தமிழில் புலமைபெற்ற முன்வீட்டுத் தாயிடத்தில் தமிழ்ப்பாடம் படிப்பதற்குத் தடுப்பதுவும் எதற்காக? இத்தனையும் ஏன்என்று இதமாகக் கேட்டதற்கு இழிசாதி அவரென்று இரகசியமாய்ச் சொல்லிவைத்தார் சாதிகளில் பலசொன்னார் சமனுமில்லை எமக்குஎன்றார் சகபாடி எனச்சொன்னால் சண்டைவரும் இங்குஎன்றார் இச்சாதி கணிப்பதற்கு இருக்கிறதோ ஒருமார்க்கம் இடக்காகக் கேட்டதற்கு இலேசாகப் பதில்சொன்னார் பரம்பரையாய் வருகின்ற பழக்கமிது எனச்சொன்னார் செய்தொழிலை வை…

    • 8 replies
    • 1.5k views
  8. எங்கள் அரசியல்வாதிகளின் முகங்களில், இறுக்கம் தெரிந்தது! சிங்கக் குரலோன் செருமிய போது, கூட்டம் கொஞ்சம் கலங்கித் தான் போனது! சங்கம் வளர்த்த இனம் நமதினம் என்றீர்கள்! எங்கள் தோள்கள் கொஞ்சம் அசைந்ததும் உண்மை! செருக்களமாடியது எமதினம் என்றீர்கள்! பெருமையில் விரிந்தன எமது மார்புகள்! ஒரே ஒரு தடவை மட்டும் ஒற்றுமை காட்டுங்கள், உலகத்தின் கண்கள் உற்றுப் பார்க்கின்றன! ஓடோடி வரக் காத்திருக்கின்றன! உங்கள் வாக்குகள் தான் எங்கள் அஸ்திரங்கள், மீண்டுமொரு முறை நம்பினோம்! எத்தனை தலைமுறைகள் நம்பினோம், இன்னுமொரு முறை நம்புவதால், என்ன கேடா வந்துவிடப் போகின்றது? இந்த முறை வாக்குகளைக் கிள்ளித் தரவில்லை! அள்ளியே தந்தோம்! வாக்குகள் எண்ணி முடிந்ததும், வார்த்தைகள் தடுமாறுகின்றன…

    • 24 replies
    • 1.5k views
  9. காமினியின் குழந்தைகளே.....! கந்தக வாசனை கசக்கிறதா? பராக்கிரமபாகுவின் பாலகர்களே பொட்டாசிய நாற்றம் பொறுக்கமுடியலையா? கொஞ்சம் முகர்ந்துதான் பாருங்களேன்.... உயிரைக் கொல்லாது என்று உத்தரவாதம் சொல்கிறேன்.. ஒரு கால நீட்சியில்-எங்கள் ஒட்சிசனே இதுதானே.... சேதப்பட்டதற்கே உடனடி வீட்டுத்திட்டம்? நச்சுக் காற்றென்று நாலுநாள் விடுமுறை? தானாக வெடித்ததற்கே தார்மீக விசாரணை? எண்ணி ஏழு ஆண்டுகள்.... என்னதான் நடந்து கண்டோம்.......! முள்ளிவாய்க்காலைப் பார்த்ததுண்டா...? கொஸ்கமவை ஆயிரம் மடங்காக்கிப் பாருங்கள் அங்கே சிதறிக்கிடக்கும் உலோகத் துண்டங்கள்தான் இங்கே உடலங்களாக சிதைக்கப்பட்டவை அங்கே எரிந்து கரிந்த மரங்கள்தான் இங்கே கருக்கப்பட்ட எம் …

  10. அலங்காரக் கந்தனே ! அஞ்சற்க, என்று அறிவித்த பொருளே!! அஞ்சுக அருகில் வந்திருப்பது பேய்களென்பதை அறிக!! வங்காளப் பேய்களுடன் கூடிநின்ற "பெருமாளின்" பின்னவர்கள் , மஞ்சள் துண்டுக்கே கழுத்தறுக்கும் கும்பல்கள் விடுதலை கேட்டு வயிறு வளர்க்கும் முகமூடிகள் ஜனநாயகத்தின் விபச்சாரிகள் எல்லாமே இப்போது உன்னருகில் வந்துள்ளன. குப்பையள்ளும் பதவி பெற்று குப்பையெல்லாம் உன் தெருவில். எப்படி முருகா நிம்மதியாய் உறங்குகின்றாய்? உன் கழுத்தில் உள்ளவற்றில் தங்கத்தை அகற்றிவிடு. இல்லையென்றால் ... உன் கழுத்தும் களவாடப்படலாம். வேலெடுத்த வேலவனே ! வேலை விட்டெறி - உன் பன்னிரு கரங்களில் ஒன்றால் "ஆட்லெறியை" கையிலெடு!! பதினொரு க…

  11. உன் இருளுக்குள் என்னை இழுத்தெடுக்கிறாய்...! மூச்சு முட்டும்வரை... என்னை இழுத்தணைக்கிறது உன் வெறி...!! உன் பசிக்காக... என்னைப் பிய்த்துத் தின்னுகிறாய்! என்னை வெறியேற்றி... உன் வெறியை தீர்த்துக்கொள்ள முனைகிறாய்!!! அந்த ஆரவாரத்துக்குள்ளே.... என் அவலக்குரலும் அடங்கிப்போய்விடுகிறது! சத்தமின்றித் தொடங்கி... பேரொலியோடு ஆர்ப்பரித்து, சத்தமின்றியே அடங்கிப்போகும் சத்தங்கள்.... அப்படியே காணாமல் போய்விடுகின்றன...!!! அது மயக்கமா....? அல்லது மரணமா....?? புரியவில்லை... புரிந்துகொள்ள அனுமதியுமில்லை!!! எச்சங்கள் மிச்சங்களை கொஞ்சங் கொஞ்சமாய்... சத்தமின்றி அழித்துவிட்டு, மீண்டுமொரு இரவுக்காய் அலையும்... இராக்கால ராட்சசியே! உன் சிற்றின்பத்துக்காய், என் குருதி குடிப்பதை... எப…

  12. ஓடி மறைந்துகொள் பாப்பா - நீ ஒளிந்து வாழப்பழகிக்கொள் பாப்பா பங்கருக்குள் முடங்கிக்கொள் பாப்பா - நீ பதுங்கி வாழப்பழகிக்கொள் பாப்பா சிங்களப் படைகள்வரும் பாப்பா - வானில் சீறும் விமானம்வரும் பாப்பா எங்களுக்கெனக் குரல்கொடுக்க உலகில் - மனிதர் எவரும் இல்லையடி பாப்பா சினத்தோடு வந்தான் எதிரி பாப்பா - எம்மை இனத்தோடு அழிக்க நினைத்தான் பாப்பா வனத்தில் விலங்குகளாய் ஆனோம் பாப்பா -எம் மனத்தில் சோகங்கள் ஆயிரம் பாப்பா பகைவனுக்கு வேண்டியது சண்டை - அவன் வகைவகையாய் வீசினான் குண்டை புகைமண்டலமாய் ஆனதெம்தேசம் - பார்த்து நகைக்கிறான் எதிரி பாப்பா தெய்வமும் மறந்ததடி பாப்பா - வெறி நாய்கள் சூழ்ந்ததடி பாப்பா பொய்யும் வெல்லுதடி பாப்பா - …

    • 5 replies
    • 1.5k views
  13. தரணியில் தலை (குனிந்த) சிறந்த இராணுவம்....... வல்லரசு நாடுகள் அனைத்திலும் மானத்தை விற்று மண்டியிட்டு பொய்களை அவிட்டு விட்டு ஆயுதத்தையும் ஆள்பலத்தையும் அளவு கணக்கின்றிப் பெற்றுக் கொண்டு பயங்கர வாதத்தை ஒழிக்கிறோம் என வான் பிளக்க பரப்புரை செய்து கொண்டு ஒன்றும் அறியா அப்பாவி பொது மக்களை இரக்கம் இன்றி குலை குலையாக கொன்று குவித்துவிட்டு போர் விதி முறைகளை புதைகுழிக்குள் போட்டு புதைத்து விட்டு சில நாட்கில்; போர் முடியும் என சொல்லி பல மாதங்கள் தொடர்ந்து முட்டாள் தனமான ஆதாரங்கள் பல புனையப்பட்ட அப்பட்டமான பொய்யுடன் வெற்றி வாகை சுhடி நிற்கும் இராணுவமே தரணியில் தலை சிறந்த இராணுவம்

    • 0 replies
    • 1.5k views
  14. பல்லவி பெண்கள் இல்லாத உலகத்தில் வாழ பேயும் விரும்பாதே Girlfriend இல்லாத boysஇன் வாழ்க்கை என்றும் இனிக்காதே Tim Hortenபோகாத ஆண்களுக்கு ஒரு உற்சாகம் பிறக்காதே அட நம்பர் கொடுக்காமல் நீங்கள் போனால் Friendship வளராதே சரணம் 1 E-மெயில் அனுப்பி இன்சல்ட் செய்து disturbe disturbe செய்வோமே sms செய்து உங்களை எழுப்பி Dating Dating கேட்போமே பாரப்பா பழனியப்பா வெளிநாட்டு girls பாருங்கப்பா ஊரெல்லாம் பெரிசப்பா போடுகிற dress தான் சிறுசப்பா yahoo chat இலே searching செய்யாத handsome handsome boys நாங்கள் தானே Girlsஐ கண்டாலே wallet open பண்ணாத Good boys Good boys என்றும் நாங்கள் தானே கார்மோன் துடிப்பில் புது வைரஸ் கிருமியாய் நுழைவோம் …

    • 8 replies
    • 1.5k views
  15. பிஞ்சுகளைப் பிளந்த பிசாசுகள் செஞ்சோலையில்-எங்கள் பிஞ்சுகளின் செங்குருதி குடித்த இரும்புப் பறவைகளே முல்லையின் மரண ஓலம் கேட்கிறதா..? வானம் பார்த்து விழிமூடிக் கிடக்கும்-எங்கள் வண்ணப் பூக்களை வந்து பாருங்கள் யுத்தவெறி பிடித்த புத்தமுகம் கிழியும்! உங்கள் தாகம் தீர்த்துக் கொள்ள தமிழனின் குருதியென்ன மதுபானமா? பிணவெறி பிடித்த இனவெறிகளே! எங்கள் வலிகளைக் சேமிக்கும் இதயங்கள் இனியும் தாங்காது வலிகளைச் செலவு செய்ய வருவோம்! எங்கள் குருதியால் எழுதப்படும் சிங்கள மகிந்தவின் சிந்னைக்கு எரிமலைப் பிழம்புகள் கொடுப்போம்! எல்லை மீறிய எதிரிகள் கூட்டமே-இனி எழுது கருவிகள்கூட ஏவுகணையாகும் எட்டுத் திக்கிலும் வெற்றி எமதாகும!; கனத்த நெஞ்சுட…

  16. முகம் தெரியாத தியாகங்களின் முகவரிகளை, முகமூடிகள் மட்டுமே தேடும் நிர்ப்பந்தம்! காலத்தின் கண்ணாடிகளில் விம்பங்களாய் விழுந்த கோலங்கள் .... எம் காலடிகளில் மிதிபடும் பரிதாபம்!! மாறுவேடம் பூண்டுதான்... மாவீரரையும் பூசிப்போமா? - இல்லை மாறிமாறி நின்றுதான்... அவர்களை நிந்திப்போமா? காறியுமிழ்ந்த எச்சங்களில்... அந்தக் கல்லறைகளின் மிச்சங்கள்! தேறிநிற்கும் தமிழர்க்கு... அவர்கள் தேவையில்லைப் போல?? நெஞ்சு நிமிர்த்தி நடக்கும் தமிழர்களே!? பிச்சைக்காரர்கள்தான் நாங்கள்.... புரிகின்றதா? பித்துப் பிடித்தா.... தம்மேனி பிய்த்தெறிந்தார்கள்?? யாருக்காக? எதற்காக? .... தெரியாதா உங்களுக்கு??? இரவல் வீரத்தில்... இழக்காரம் கதைக்கும் உங்கள் நாவில், அவர்கள் கழுத்து …

    • 9 replies
    • 1.5k views
  17. நாங்கள் பயங்கரவாதிகளல்ல பாசமும் நேசமும் உள்ளவர்கள் நாங்கள் தீவிரவாதிகளல்ல தீரமுள்ள திராவிடர்கள் நாங்கள் நாடில்லா இனமல்ல இலங்கைத்தீவின் மூத்தகுடிகள் நாங்கள் இனத்துவேசம் உள்ளவர்களல்ல இனத்துவேசம் உள்ளவர்களால் இலிவாக நடத்தப்படுபவர்கள் நாங்கள் துஷ்டர்களல்ல துரத்தித் துரத்திக் கொல்லப்படுபவர்கள் நாங்கள் பேடிகளல்ல பெண்கள் மானம் காப்பவர்கள் நாங்கள் கொலைகாரர்களல்ல கடத்திக் கொலை செய்யப்படுபவர்கள் நாங்கள் சகோதரக்கொலை செய்பவர்களல்ல களை எடுப்பவர்கள் நாங்கள் பயந்து ஓடுபவர்களல்ல பதுங்கிப் பின் பாய்பவர்கள் நாங்கள் விடுதலைப்புலிகள்.

    • 2 replies
    • 1.5k views
  18. உடன் பிறப்புக்களே என் முயலாமை நான்கெழுத்து தள்ளாமை நான்கெழுத்து இயலாமை நான்கெழுத்து ஈழத்தமிழா மரணம் நான்கெழுத்து அதுதான் உனது தலையெழுத்து

    • 11 replies
    • 1.5k views
  19. நானிங்கு காத்திருப்பது காதலனுக்காக அல்ல கவிஞரே... கடலலை மெல்ல கால் நனைக்கும் சுகத்திற்காக... மரணித்து விளையாடுதல் பற்றி எங்கேனும் அறிந்ததுண்டா கவிஞரே? பாரும் கடலலையை மரணம் அதற்கு விளையாட்டு! அருகில் நெருங்கி வாரும் கவிஞரே இப்படி அமர்ந்து பேசலாம்... உப்புக் கலந்த காற்று... அலையடிக்கும் கடல்... காலுக்கு இதம் தரும் கடற்கரை மணல்... சும்மா இராமல் கடலுக்குள் விழுந்தெழும்பும் சூரியன்... என கண்முன் விரியும் இயற்கையை கொண்டாடாமல் ஏதோ வாழ்கின்றோம்! இந்த உலகம் பரபரப்புக்குள் சிக்கி இதயங்களை இளைப்பாற விடுவதில்லை... மெல்லிய உணர்வுகளின் மகத்துவமும் புரிவதில்லை... என்ன கவிஞரே அப்படி…

  20. உரிமையின் பரிசாகக் கிடைத்த கறுப்பு யூலை...! மரணங்கள் மலிந்தமண்ணில் உடலங்கள் எரிந்துபோக அவலங்கள் நிறைந்தவாழ்வாய் தினம்தினம்... தொடர்கிறது கறுப்பு யூலை புதைகுழி வயல்கள் நீண்டுசெல்ல... துயரங்கள் சுமந்துகொண்டு தொடரும் காயங்களுக்கு நடுவில் நாளைய பொழுதின் விடிவுக்காக ஏங்கும் ஒரு இனமாகத்தான் இன்றும் தமிழ்...! நீதி என்றைக்கோ செத்துப்போனது மனிதனேயம் எப்போதோ தொலைந்துபோனது அன்றில் இருந்து... நியாயத்தின் அர்த்தம் என்னவென்றே தெரியாத ஆட்சியில் இன்றுவரை... தொடர்கிறது கறுப்பு யூலை தொப்புள்கொடி உறவுகளின் தலைகள் அறுபட்டு உடல்வேறு தலைவேறாய் தூக்கி எறியப்படும் பிஞ்சுகளின் உடலங்களில் தோட்டாக்களால்... துளைகள் இட…

    • 6 replies
    • 1.5k views
  21. Started by இலக்கியன்,

    சீதனம் வாங்கும் ஆண்களே நில்லுங்கள்!!! உங்களுக்கு என்ன ஊனம் நீங்கள் சொல்லுங்கள்!!! சீதனம் தமிழனுக்கு ஒரு புற்றுநோய்!!! இது ஆண்களுக்கு ஒரு தொற்று நோய்!!! விரும்பி தானாக கொடுத்தால் அது அன்பளிப்பு அதை கேட்டு வாங்கினால் அது சீதனம் நூறு பவுனில தாலிதான் உனக்கு வேலியா பெண்ணே? ஆணும் எங்கு போவான் நீயும் சொல்லு பெண்ணே? உடம்பு முழுக்க உனக்குப்பவுந்தான் வேணுமா பெண்ணே? ஆண்களுக்கு இதனால் மொட்டை வராமல் போகுமா பெண்ணே? பட்டம் உள்ள ஆண்கள்தான் உங்களுக்கு தெரிவார்கள் பெண்ணே!!! நல்ல உள்ளம் கொண்ட ஆண்களை தெரிவது …

  22. Started by Paanch,

    பூமி சூரியனைச் சுற்றினால் வருஷம்! தேர் ஊரைச் சுற்றினால் திருவிழா! தீ திரியைச் சுற்றினால் வெளிச்சம்! காற்று உடலுக்குள் சுற்றினால் உயிர்! உயிர் உயிரைச் சுற்றினால் காதல்! நீ என்னையும் நான் உன்னையும் சுற்றுவதே வாழ்க்கை! தாய்ச் அவர்களின் ஒரு கவிதை சிங்களம் தமிழைச் சுத்தினால் மங்களம்!!

    • 7 replies
    • 1.5k views
  23. Started by மோகன்,

    பாலக்காடு 2006 வ.ஐ.ச.ஜெயபால‎‎ன் வண்ன ஆடைகளை வானெங்கும் வீசிவிட்டு அம்மணச் செஞ் சூரிய‎ன் அரபிக் கடல்‏ இறங்க ஆகாச விளிம்பு பற்றும். நாமும் பகலி‎‎ன் பல்லக்குத் தூக்கி களைத்துப்போய் ‏இருந்தோம். கிளர்ந்து கு‎‎ன்று தளுவும் முகிலி‎ன் ஈரக் கருங்கூந்தல் இரப்பர் காட்டில் சரிந்து கீழே அறுவடையாகும் வயல்மீதும் சிந்திப் படர்கிறது. வா‎ன் நோக்கும் அறுவடைக்காரி முதல் துளியையே குருவி எச்சமாய் அருவருத்து நச்சு வசவுகளை உமிழ்கிறாள். நாளை ‏அவளே வெட்கமி‎‎ன்றி பொங்கலும் வைத்து மழையே வா எனப் பாடுவாள். ‏இது வாழ்வு. வானில் இரவு த‎ன் இளம்பிறை மதுக் கிண்ணத்தை உயர்த்திய…

    • 5 replies
    • 1.5k views
  24. உதவிகள் தேவை என்றால் சுற்றி சுற்றி வந்திடுவாய் உதவிகள் பெற்றவுடன் நைசாக மாறிடுவாய் சேர்ந்து இருக்கும் போது சிரித்து சிரித்து பேசுடுவாய் அடுத்தவிடு போயும் நீ அவனைத் தூற்றிடுவாய் சந்தர்ப்பம் கிடைக்கும் போது நல்லா சுரண்டிவிடுவாய் பச்சோந்தி போல நீயும் உன்னை நீ மாற்றிடுவாய் கூட இருந்து நீயும் குழி பறிக்கப் பார்த்திடுவாய் சமயம் கிடைக்கும் போது குழியிலே தள்ளிவிடுவாய் கடனாக காசு வாங்கி நல்ல செலவழிப்பாய் கொடுத்த பணத்தை கேட்டால் அடிக்கவும் வந்திடுவாய் முன்னேறி வந்தால் போட்டும் கொடுத்திடுவாய் வசதிகள் பெற்று விட்டால் …

  25. தமிழ் நிலவன் கைக்கூ கவிதைகள்: காதல், தமிழ் தேசியம், தமிழின உரிமை.... சூரியனா உன் விழிகள் அது சுட்ட வலி என் இதயத்தில் தெரிகிதே..... -------அவள் பார்வை... --------------- நீ என்ன பாண்டியனின் வாரிசா நீ இதயத்தில் அடித்த வலி என்முழுதும் ரணத்தின் தடங்களாய்.... -------காதலினால் மனவலி.... -------------- நீ பார்த்தாய் பரவசமானேன் நீ பேச வானில் பறந்தேன் இன்றோ பள்ளத்தில் நீ எனை நீங்கியதால்... ------காதல் தோலவி.... ---------------- ஓட்டியை தொலைத்துவிட்டு பல தலை(வர்)களின் உரிமைப்போரில் சிக்கித் தவிக்கும் ஓடம் -------தமிழ்த் தேசியம்... --------------- ஒரு வரி தமிழிலக்கியம் உரிமைப் ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.