கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
முன்னிரவு பெய்த மழையில் ஈரம் ஊறிய என் படுக்கை அறை சுவர்களில் இருந்து நான் இராக் காலங்களில் கண்ட கனவுகள் உருக் கொண்டும் உயிர் கொண்டும் வெளித் தெரிகின்றன என் கனவுகளில் நெளியும் புழு ஒன்று சுவரின் ஒரு ஓரத்தில் இருந்து இன்னொரு ஓரத்துக்கு நகர்ந்து செல்கின்றது ஒரு அந்தி சாயும் வேளையில் நான் நல்லூர் தேரடியில் அவள் உதட்டில் இட்ட முத்தம் கனவுகளின் ஊடாக பயணித்து சுவர்களில் பதிந்து வர்ணங்களால் நிரம்புகின்றது என் படுக்கை அறை சுவர்களுக்கு வெட்கம் இல்லை என் கனவுகளை பிரதி எடுத்து பின் ஈர இரவு ஒன்றில் கசிய விட்டு ரசித்துக் கொள்கின்றன கனவுகளில் வெறி பிடித்த மிருகம் சுவர்களில் அமைதியாக தெரிகின்றது கொலைகாரர்களின் துப்பாக்கிக்கு பயந்து ஓடிய என் பூனை …
-
- 6 replies
- 2.1k views
-
-
அழுகை நிறுத்தியெழு.... ஈழத் தமிழா ஈழத் தமிழா- நீ இன்னும் அழுவதா...? இந்த இன்னல் தாங்கி தாங்கி இதயமமுடைவதா....?? அன்னை மண்ணை இழந்து நீயும் அகதியாவதா..?- அந்த அன்னியத்து சிங்களங்கள் ஆட்டம் இடுவதா...? இத்தனை நாள் நீயிருந்தா அடிமை உடையடா- அந்த சிங்களத்து கொட்டமதை நீயும் அடையடா... அழுதழுது நீயலைந்த வாழ்வை அழியடா- அந்த அன்னியத்து சிங்களத்தை ஓட கலையடா... பொங்கி நீயம் புலியணியில் புலியாய் இணையடா- அந்த போர்களமே ஏறி நீயும் பகையை விரட்டடா... அழுதழுது நீயலைந்த வாழ்வை தொலையடா அன்னை தமிழ் வீரமதை உலகில் காட்டடா....!
-
- 6 replies
- 1.3k views
-
-
உரிமைக்கு ஒரு குரல் ஞாலத்தில் பரந்து நாற்றிசை வாழும் ஈழத்துத் தமிழா! நில்!! வாழத் துடிக்கின்ற ஈழத்தமிழினத்தின் காலச் சுவடுகளைச் சொல்! மத்துக்குள் சிக்கிய தயிரடா - இன்றெங்கள் தமிழரின் நிலையெங்கும் கடைபவர் கடைகிறார், காடையர் என்கிறார் தடைகளும் போடுறார் பார்! எத்தர்கள் சாட்சியும், ஏவலர் சூழ்ச்சியும் நித்தமும் சூழுது பார்! - இந்த நித்திலத்தில் வாழும் வித்தகத்தமிழரே! விரைந்து நீர் எழுந்து வாரீர்! மற்றவர் . தப்புக்கணக்கோடு எம் தாய்மண் மீட்பை தர்க்கித்துத் தாக்குகையில் உப்பரிகை சுகத்தோடு உல்லாசப் போக்கிருந்தால் உடனேயே செத்துவிடு! - இல்லை செப்புகிற நல்லுணர் நாவிருந்தால் அதை செகத்திற்கு உணர்த்திவிடு! …
-
- 6 replies
- 1.5k views
-
-
எனக்குள் எரியும் ஓர் நெருப்பு செந்தீயில் என் தேசம் வெந்தணலில் என் மக்கள் பந்தாட வந்தோரால் நொந்தேதான் மெய்சோர்ந்தார் வந்தோடி வந்தோர் நாம் சிந்திக்க ஏன் தயக்கம்? என் மண்ணின் மீட்புக்காய் அங்கே ஓர் பெரும் யாகம் இங்கோ நாம் களிப்போடு உல்லாசம் தரும் கோலம் சோகங்கள் எம் மண்ணில் தொடர்கின்ற இந்நேரம் போகங்கள் ஏன் இங்கு பாரங்கள் தான் அங்கு என் மண்ணின் வசந்தங்கள் எங்கோ போய் ஒளிந்ததனால் என்றுமே நிரந்தரமாய் இலையுதிர் காலங்கள் விரக்தியின் விளிம்பினிலே துடித்திடும் உயிர்க் கூட்டை விடுத்திட விரும்புகின்ற மிடிமையில் என் மக்கள் சொந்தங்கள் சுடராகத் துடிக்கின்ற பொழுதிங்கு நெஞ்சங்கள் உருகாமல் நிலைக்கின்ற நிலைகண்டு என்நெஞ்சி…
-
- 6 replies
- 1.3k views
-
-
சிற்ப்பிகள் இரண்டு வரைந்த ஓவியம் வெள்ளை நிறத்தில் விளையாட்டின் விடைகள், கூடத்தில் மழலைகள் போட்ட கோலங்கள் நிலவுகள் எழுதிய கவிதைகள் இங்கு சமாதான நிறத்தில்
-
- 6 replies
- 1.5k views
-
-
மகனின் பார்வையில் பெண்ணியம் தாய் சகோதரன் கண்களில் பெண்ணியம் சகோதரி காதலன் உணர்வில் பெண்ணியம் காதலி கணவன் கைகளில் பெண்ணியம் மனைவி கவிஞன் கற்பனையில் பெண்ணியம் மயிலாக ஆண்களுக்கும் பூமி பூமாதேவிப் பெண்ணாம்...... அதுதான் மிதிக்கின்றார்களா? ஆண்கள் பெண்மையை..... கங்கா யமுனா சரஸ்வதி நதிகளும் பெண்களாக..... அதனால்தான் முழ்கடிக்கின்றார்கள்? பெண்மையை... ஆண்கள் அரசியல்வாதிகள் கையில் பெண்ணியம்.... மேடைப் பேச்சளவில் வாக்குத்துண்டுகளாகப் பெண்ணியம் பெட்டிக்குள்...... தொ(ல்)லைக்காட்சியில் பெண்ணியம்..... கவர்ச்சி விளம்பரமாக.... தொடர் நாடகமாக விபச்சாரம்.... தொழில் நிலையங்களில் பெண்மை..... கவர்ச்சி பதுமைய…
-
- 6 replies
- 1.4k views
-
-
ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் பறவைகளோடு எல்லை கடப்பேன் பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும் எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன் ஒவ்வொரு புல்லையும்... நீளும் கைகளில் தோழமை தொடரும் நீளாத கையிலும் நெஞ்சம் படரும் எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய் உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய் ஒவ்வொரு புல்லையும்... கூவும் குயிலும் கரையும் காகமும் விரியும் எனது கிளைகளில் அடையும் போதியின் நிழலும் சிலுவையும் பிறையும் பொங்கும் சமத்துவப் புனலில் கரையும்! ஒவ்வொரு புல்லையும்... எந்த மூலையில் விசும்பல் என்றாலும் என் செவிகளிலே எதிரொலி கேட்கும் கூண்டில் மோதும் சிறகுகளோடு எனது சிறகிலும் குருதியின் கோடு! ஒவ்வொரு புல்லையு…
-
- 6 replies
- 7k views
-
-
நன்றி வணக்கம் நாங்கள் செத்துப்போகிறோம் காற்றழுத்தம் கந்தகப்புகையழுத்திச் சாவின் வாயிலில்.... மூச்சிழுக்கவோ முழுமையாய் சுவாசிக்கவோ முடியாத நச்சு நெடில்.... மூலங்கள் எங்கும் கோலங்கள் மாறி கிட்லரின் நச்சுக் கிடங்குகளாய் மகிந்தவின் மந்திரமும் இந்திய மத்திய அரசின் தந்திரமும்.... குருதி சொட்டச் சொட்டச் செத்தவர்கள் எரிகுண்டுப் புகையோடு கருகுண்டு கண்களில் ஈரமின்றி எங்கள் காவியங்கள் முகம் மட்டும் கனவிலும் நினைவாக... பழைய புன்னகையும் பசுமையாய் நெஞ்சக்கூட்டில் தோழரும் தோழியரும் தொலைந்திடா நினைவோடு கண்ணயர முடியாமல் கனவிலும் அவர்களே கலையா நினைவுகளாய்..... பறிபோன தெருக்களெங்கும் அடுக்கடுக்காய் சடலங்கள் சாவுகளின…
-
- 6 replies
- 2.1k views
-
-
அகதிக்காதல் நான் இடம் பெயர்த்தேன் என் இதயத்தில் இருத்து நீ புலம் பெயர்த்தாய்.! #கேள்வி .! மழை இடியுடன் கூடியது காதல் வலியுடன் கூடியது வாழ்க்கை வேதனையுடன் கூடியது மனிதம் சுயநலத்துடன் கூடியது மரணம் மட்டும் தனியே போகுது ஏன் ? அனுபவிப்பு நீயூட்டனின் மூன்றாம் விதி பொய்த்து போவது மனைவியிடம் அடிவாங்கும் போது ..! (மொக்கை )
-
- 6 replies
- 1.3k views
-
-
பூமிப் பந்தில் எழுந்த இந்தப் புயல்கள் எழுதிய சரித்திரம் கண்டு அணு குண்டும் ஏவுகணையும் ஆட்டம் கண்டதுண்டு..! சிங்களம் முதல் ஏகாதபத்தியம் வரை குலப்பன் அடிக்க... பயங்கரவாத முத்திரைக்குள் முத்தாய் சிரிக்கும் இந்த ஈகைகள் எம் இருப்பின் உயிர்ச் சின்னங்கள்..! வாழ்க்கைக்காக பறந்தடிக்கும் மானிடப் பேடிகளுள் மரணத்துக்குள் வாழ்வைத் தேடி வீசிய இந்தப் புயல்கள் எங்கள் கந்தகப் புயல்கள். மாவீரராய் இல்லை இல்லை... அதிலும் மேலாய் என்றும் எம் மூச்சுக் காற்றோடு அவர் வாழ்வு...! வீழ்ந்தார் என்று மறக்க அவர் மறையவில்லை - எங்கும் நிறைந்தே உள்ளார்..! ஆக்கம்: (முதற் கரும்புலி அண்ணன் மில்லரின் கந்தகப் புயல் தந்த வெடியோசை …
-
- 6 replies
- 658 views
-
-
" கண்ணே என்றாள் கடன்காரன் ஆகிவிட்டேன் "-------------------------------------------------------------------" அரும்பிய மீசையுடன் காதலித்தேன் தாடியுடன் அலைகிறேன் "-------------------------------------------------------------------" மாற்றம் ஒன்றே நிலையானது மாறி விட்டேன் உன்னை விட்டு "-------------------------------------------------------------------" பண்டிகை காலத்தில் ஜவுளி கடை காவலாளி கண்வன் "-------------------------------------------------------------------"காதலித்து பார் நெருப்பில் தூங்குவாய் வானத்தில் பறப்பாய் "
-
- 6 replies
- 8.1k views
-
-
எங்கே என் உயிரே..... உயிரே ஏன் என்னை வெறுக்கின்றாய் நான் கேட்டது என்ன... நான் உன்மேல் வைத்திருக்கும் அன்பு.பாசம்.காதல் பொய்யா என்று கேட்டேன் ஆணால் நீ என் மேல் காட்டும் வெறுப்பு நீ ஆம் எண்று சொல்லுவதைப் போல் உள்ளது. தயவு செய்து எனக்கு ஒரு மெயில் அனுப்பு நீ என்னை வெறுக்கவில்லை எண்றும் மறக்க வில்லை எண்றும் ஏன் எண்றால் என் பதிலுக்காக காத்திருக்கிறாள் இன்னொருத்தி உன் பதிலைக்கேட்டுத்தான் நான் அவளுக்கு பதில் சொல்ல வேண்டும். என்ன பார்க்கின்றாய் யார் அவள் என்றா? அவள் பெயர் மரணம் அவள் என் பதிலை எதிர் பார்த்து என் தலைமேல் தவமிருக்கின்றாள். என் உயிரே நீ எங்கே எனக்கொரு மெயில் அனுப்பு..... (இவை நேற்று நடந்த உண்மை சம்பவத்தை தழுவியது)
-
- 6 replies
- 2k views
-
-
கழிவறையில் ஓவியம் தீட்டுவதில் அலாதி சுகமெனக்கு. மனதிற்கு உகந்தவளை சுவற்றில் தீட்டுவதும் மனதார இகழ்ந்தவர்களை சொல்லத்தகா திட்டுவதும் இங்கேதான்.. சில புகழ்பெற்ற ஓவியங்கள் வரையக்கற்றுக் கொண்டதும் இங்கேதான். இங்கே சுழிப்பவர்கள் அங்கே இளிப்பார்கள். கழிவறைக் கதவைத் திறந்து வெளியே செல்லுகையில் ஆழ்ந்த திருப்தி எனக்கு. இன்னும் நால்வர் அதைக் காணக்கூடுமல்லவா?
-
- 6 replies
- 1.9k views
-
-
-
குளிர் போக்கும் ஞாபகங்கள். பாலத்தின் கீழே படர்ந்தோடும் நீரேபோல் பாய்ந்தோடிப்போனதடி கண்ணம்மா காலத்தின் பயணம். கனியெனவே நானுரைத்தேன் நின் பெயரை இனியொருகால் வருமோடி அவ்வின்பம். வருடங்கள் பலவாகியென்விழிகள் உனைக்காணும் வழக்கிழந்து போனதுண்மை கண்ணம்மா. இருந்துமென்ன மனதுழலும் நினைவுகளை மறுத்தலொன்று ஆகுதலோ நடக்குதில்லை. ஒருத்திக்கே தினமும் அன்புரைத்தல் ஓரவஞ்சம் என அறிவேன் இருந்துமென்ன வேறு வழியில்லையடி கண்ணம்மா. வேதனைதான் மிஞ்சி இப்போ நிற்குதடி. கூடிவாழ்ந்தோம் உண்மையடி கண்ணம்மா கூடுடைந்து போனதுவும் குட்டை கலங்கியதும் பீடை வந்து நாம் பிரிந்தது போனதுவும் காடெரிந்து சாம்பரென ஆகியதாய்ப் போனதடி. தொலைத் தொடர்பில் கேட்டேனுன் குரலின்று …
-
- 6 replies
- 2.5k views
-
-
கல்வாரித் தென்றல் கல்லறைக்குள் அடங்காத கவிதை இவர் எவர் கண்களிலும் பொங்குகின்ற கருணை இவர் கல்வாரியின் அன்புச் சுனையும் இவர் அன்புக் கடலினிலே சங்கமிக்கும் நதியும் இவர் பிறரன்பு புரிய வைத்த பெருமை இவர் பிறருக்காய் உயிரீந்த வள்ளல் இவர் மனிதத்தை மலரவைத்த மாண்பும் இவர் மனித நேயத்தை தேடவைத்த தேடல் இவர் ஆற்றலாய் அறிவதுவாய் அருமருந்தாய் தேற்றரவாளனாய் தினம் உணவாய் நேற்றைய தினம் போன்று இன்றும் என்றும் மாற்றமே இல்லாத மகிமை இவர் மனிதனைப் புனிதனாய் மாற்றுதற்காய் புனிதனின் அவதார விந்தை இவர் துன்பத்தில் துவண்டுவிடும் எம்மவர்க்காய் தன்னையே அர்ப்பணித்த தியாகம்; இவர் தூய மனத்தவர்கள் பேறுபெற்றோர் என்று துயருற்றோர் இடர்களைந்த சுடரும் இவர் அமைதிப் பூக…
-
- 6 replies
- 1.8k views
-
-
கல் நெஞ்சும் கசிந்துருக, இன்று கையேந்தும் நிலை வந்தும் சொல் பொறுக்காச் சோர்விலராய் கைகட்டி நிற்காத ஏர் பிடித்த நல் மனிதர் வல் வினையால் வாழ்விழந்து வாழாவெட்டி ஆகி நின்று நெல் மணிக்கும் வரிசை கட்டி கையேந்தும் நிலை கொடிது. பார் போற்ற வாழ்ந்திருந்து பசி விலக்கி வாழ்ந்தவர்கள் ஏர் பிடித்த கையாலே அள்ளி அள்ளிக் கொடுத்தவர்கள்- வந்தாரை வரவேற்று ஊர் மெச்ச உபசரித்தோர் நாதியற்று நடுத் தெருவில் அகதியாய் அலைகிறாரே போர் ஓய்ந்த பின்னாலும் ஊர் ஏக முடியாத கொடுமையினை யாருணர்வார்
-
- 6 replies
- 1.4k views
-
-
சபதம் |||| ||||| சிங்கள விகாரையில் எரிந்தன விளக்குகள் தமிழர் வீடுகளில் அணைந்தன உயிர்கள் சமாதானம் உயிர்க்கும் என்றனர் மக்கள் எதிரியின் கரங்களில் கந்தகக் குழாய்கள் வேள்விக்குக் கிடைத்தோ பச்சிளம் பிஞ்சுகள் சயனத்தில் கருக்கினர் சிங்கள வெறியர்கள் குருதியில் எம்விதி எழுதத்திரண்டனர் தமிழர் ஈழமே தீர்வென பூண்டனர் சபதம்.
-
- 6 replies
- 2k views
-
-
கூடு திறந்தால் காடு ----- அந்த மரண வீட்டில் .... அப்படி ஒரு சனக்கூட்டம் .... ஆராவாரமான மரணவீடு .... ஓலமிடுபவர்கள் ஒப்பாரி ... சொல்பவர்கள் நிறைந்து ... காணப்பட்டனர் ..... மூன்று நாட்களாக ... கண்ணீர் விழா ....!!! சடலம் இருக்கும் பெட்டி ... அலங்காரத்தால் ஜொலிக்கிறது .... குளிரூட்ட பட்ட ஊர்தியில் ... சடலம் வைக்கப்படுகிறது .... மந்திரி வந்து அஞ்சலி செலுத்த .... வீதியெங்கும் வாகன நெரிசல் .... வீதி எங்கும் நிறுத்தி நிறுத்தி ... பறை சத்தம் காதை கிழித்தது ....!!! சடலம் போகும் பாதையில் .... விபத்தில் இறந்த எருமைமாட்டு ... சடலத்தை நாய்களும் காகங்களும் .... குதறி எடுத்தபடி இருந்தன ... இறந்தபின்னும் மற்றவைக்கு ... உதவும் அந்த எருமைய…
-
- 6 replies
- 2.3k views
-
-
சூரியனாய் இரு! சூரியனாய் இரு! சூரியனாய் இருப்பதில் பெரும் சுகம் பூமியும் கூடவே சுற்றிச்சுற்றிவரும்! கொடும் வெம்மை என்று வைதாலும் தன் பாதையை விட்டு விலகுவதில்லை "பரிதி" என்பதுதான் எத்தனை பொருத்தம் துவைத்து வைத்த ஆடைக்கும் - வற்றல் வடாம் மிளகாய் என நாக்குக்கு சுவைதேடும் பல இங்கு உலர்த்தவும் மழைக்கும் இவனே காரணமாகவும் மலர்கள் மலைகள் செழிப்பின் வண்ணமும்! உடலின் உறுதி சுறு சுறுப்புக்கும் இவனே காரணம் ஆம் இவனெம் தாமரையின் காதலன்! மேகம் மறைக்க கூடும் நாயும் குரைத்து ஓடும்! இவன் சிரிப்பின் ஒளிர்வே கதிராய்! என்றும் தன் கடமை விட்டு விலகா சூரியனாய் இருப்பதன்றோ பெரும் சுகம்!
-
- 6 replies
- 1.2k views
-
-
-
- 6 replies
- 955 views
-
-
நீ நினைத்திருக்கலாம் நான் அதுபற்றி கதைக்காமலே இருந்திருக்கலாம் என்று...! ஒரு வகையில் நீ நினைப்பது சரியாகப் பட்டாலும்...! ஒருவகையில் நான் பேசியதும் சரியாகத்தான் படுகின்றது....! ஒருவகையில் அது விழிச் சந்திப்புகளில் வெளிப்பட்டிருக்கலாம்...! அது புனிதமானது புனிதத்தின் நிழலைக்கூட தீண்டும் தகுதி எனக்கில்லை நீ.... இத்துணை ஆண்டுகளில் நான் கண்டெடுத்த அழகு பொக்கிசம்...! நானாக நினைத்தாலும் உன்னை இழக்கும் சக்தி... எனக்கில்லை...! இருந்தாலும்... விளக்கைக் காதலித்து அதன்நூடே மரணிக்கும் ஈசல் வாழ்க்கை என்னுடையது....! கடலைப் பார்த்திருப்பாய்...! எத்துணை முயன்றாலும் கரைகடக்க முடிவதில்லை அதனால் அலை கரை…
-
- 6 replies
- 1.4k views
-
-
அலங்காரக் கந்தனே ! அஞ்சற்க, என்று அறிவித்த பொருளே!! அஞ்சுக அருகில் வந்திருப்பது பேய்களென்பதை அறிக!! வங்காளப் பேய்களுடன் கூடிநின்ற "பெருமாளின்" பின்னவர்கள் , மஞ்சள் துண்டுக்கே கழுத்தறுக்கும் கும்பல்கள் விடுதலை கேட்டு வயிறு வளர்க்கும் முகமூடிகள் ஜனநாயகத்தின் விபச்சாரிகள் எல்லாமே இப்போது உன்னருகில் வந்துள்ளன. குப்பையள்ளும் பதவி பெற்று குப்பையெல்லாம் உன் தெருவில். எப்படி முருகா நிம்மதியாய் உறங்குகின்றாய்? உன் கழுத்தில் உள்ளவற்றில் தங்கத்தை அகற்றிவிடு. இல்லையென்றால் ... உன் கழுத்தும் களவாடப்படலாம். வேலெடுத்த வேலவனே ! வேலை விட்டெறி - உன் பன்னிரு கரங்களில் ஒன்றால் "ஆட்லெறியை" கையிலெடு!! பதினொரு க…
-
- 6 replies
- 1.5k views
-
-
எம் மண்ணின் அவலங்கள்......... கவிதை...... தினம் தோறும் காலைமுதல் மாலைவரை கால்தெறிக்க ஓடுகிறோம் அதனாலே நம் உடம்பு நூலாக இளைத்தும் விட்டோம்....... இனிமேலும் ஓட எங்களால் முடியவில்லை இதைக் கேட்டபின்னும் எங்களுக்கு நீங்கள் உதவி செய்ய மாட்டீரா ? காலை எழுந்ததுமே கதறல் சத்தங்கள் அதன் பின்னால் நம் காதுகளில் கிஃபீரின் இரைச்சல்கள் இரைச்சல் சத்தங்களால் பதுங்கு குழிகள் நிரம்பிவிடும்.... பதுங்கு குழிகளிலே பச்சிளம் குழந்தை கூட பயந்த வண்ணம் பால் குடிக்கும்........ இதைக் கேட்ட பின்னும் எங்களுக்கு நீங்கள் உதவி செய்ய மாட்டீரா ? பலகுழல் எறிகணைகள் எம்மை பலிகொள்ளும் அரக்கர்கள்.... வி…
-
- 6 replies
- 1.4k views
-
-
அமர்த்து இருக்கிறார் நடுவில்.. ஆலாவட்டங்கள் ..சாமரங்கள் .. கன்னியர்கள் கூட்டமாக விசியபடி .. நீதியை காக்கும் சபையாம் அது .. அன்றில் இருந்து இன்றுவரை உலகில் .. ஓலம் இட்டார் எல்லாம் ஒடுவரும் இடம் .. ஒப்பனைகள் கலையாமல் பார்த்தபடி .. தளங்கள் பல போட்டு தலையாட்டி பொம்மைகள் ... இன்னும் ஒரே பாட்டுக்கு ஆடுகிறது .. இசையும் மாற்றம் இல்லை அவர்கள் .. இயல்பும் மாறவில்லை குணங்கள் எப்படியோ .. கூடியிருத்து பேசுகிற நேரம் மட்டும் .. அவர்களுக்கு உலகம் வெளிப்பா தெரியும் .. அப்பொழுது கூட ஒருபகுதி ஒளிப்பாக .. அங்குதான் கனியம் இருக்கும் வளம் இருக்கும் .. தங்களுக்குள் கைகுலுக்கி பங்கு பிரிப்பர் .. வெளியில் வந்து போட்டோக்கு போஸ் கொடுத்து .. பொங்கி எழுந்து உரையாற்றி கண்ணில் .. சினம் காட்டி மீறல் என…
-
- 6 replies
- 1.1k views
-