Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. உன் கண்களில் மிதக்க ஆசைபட்டு மூழ்கிப்போனது யார் யாரோ கண்களில் என் கவிதைகள் * என்னைக் காட்டிக் கொடுப்பவன் தான் தூரோகி என்றால் என்னவளைக் காட்டிக் கொடுக்கும் என் கண்களை யார் என்பேன் * நீ அழகாய் கிழித்தெறிவதை ரசிப்பதற்காகவே அழகான கவிதைகளாய் எழுதிக் கொண்டுவருகிறேன் * சாண் ஏற முழம் சறுக்கிறது உன் வீட்டு வாசல்படி எனக்கு * என் நம்பிக்கை மீது நம்பிக்கையில்லாமல் போனது நீ என்னை மறந்ததை நான் இன்னும் நம்பவில்லை * அவளைச் சிரிக்கவைத்து அழாமல் எடுத்துக் கொடுத்தேன் என் செத்தவீட்டு புகைபடக்காரனாய் அவளின் கல்யாணவீட்டுப் புகைப்படத்தை * உன் வீட்டுச் சுவரில் எனக்கு யாரோ எழுதிய இரங்கல் கவிதை இன்…

    • 9 replies
    • 1.5k views
  2. கோயில் வாசலில் காத்திருக்கும் பிச்சைக்காரனாய் காத்திருக்கிறேன் உன் வீட்டு வாசலில் உன் புன்னகைக்காய் * தயவு செய்து இனி நீ குளிக்கும்போது பஞ்சாயத்தில் அறிவித்தல் கொடுத்து விட்டு குளி ஏனெனில் நீ குளிக்கும் போது ஊர் கிணறு எல்லாம் வைற்றி விடுகிறது * நீ ஊர் கோயிலில் பாடிய தேவாரத்தை கேட்டு சாமியாக ஆசைபட்டதில்லை நீ யாரோ ஒரு அனாதையின் இறந்த வீட்டில் பாடிய புராணத்தை கேட்டுத்தான் அனாதையாய் இறந்து போக ஆசைப்பட்டேன் * நீ படிக்கும் கல்லூரியில் ஆண்களும் சேர்ந்துதான் படிக்கிறார்கள் நீ வராத நாட்களில் மட்டும்தான் பெண்கள் கல்லூரியாய் மாறுகிறது * களைப்பில் எந்த இடத்திலும் இளைப்பாறி விடாதே அந்த இடத்தில் இளைப்பாறியே களைத்து …

    • 7 replies
    • 1.3k views
  3. கோயிலைத்தான் சுற்றிவருகிறார்கள் உன்னைத் தருசிக்காத பக்தர்கள் மட்டும் * உனக்காகவே நட்டு வைத்த பூச்செடியில் யார்யாரோ பறித்து செல்கிறார்கள் தங்கள் காதலியை கண்டுபிடித்தவர்கள் * என் காதல் திருமணத்தில் முடியவில்லைத்தான் ஆனாலும் மரணம்வரை வாழ்த்திருக்கிறது இல்லையென்றால் தற்கொலை செய்திருப்பேனா...? * என்னைப்போல் யாரும் உன் அமைதியை விரும்ப மாட்டார்கள் உன் கீழ் உதடாய் நீ மாறும்போதும் உன் மேல் உதடாய் நான் மாறும் வரையிலும் * இன்றுவரை காதலோடு வரும் எந்த பெண்களுடனும் நான் உரையாடியதில்லை காரணம் எனக்கே தெரியாத உனக்கு துரோகம் செ ய்யக் கூடாது என்பதால் * முடிந்தவரை உன் வீட்டுக் கண்ணாடி முன் நின்று என்னோடு உரையாடு எத்தனை தடவை …

    • 5 replies
    • 1.2k views
  4. நான் உன்னை நினைப்பதை மறந்துவிடப் போவதில்லை அது என்னை மறக்கப் பார்க்கிறது * என் எதிரியல்லக் காதல் அனாலும் சுட்டுக் கொண்டேன் அதன் எதிரியால் சாகக்கூடாது என்பதால் * நீதான் அடைகாக்கிறாய் என்பதற்காய் என் காதல் முட்டையை உடைத்துவிடாதே நானாக உடைத்து வெளிவரும் வரை * அவள் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து தொலைத்த பாதையில்_ நான் என்னைத் தேடி எடுத்துக் கொண்டேன் அவளை நினைத்து வாழ * என்னை மறப்பதற்காய் நான் இறந்து விட்டதாக நினைத்து விடாதே ஏனெனில் நீ வாழ்ந்து கொண்டிருப்பது யுத்த பூமியில் -யாழ்_அகத்தியன்

  5. உனக்காக ஏதாவது எழுதும் போதுதான் எழுத்துக்களின் நெருக்கடியில் சிக்கி மூச்சு விட இடம் தேடுகிறது என் காதல் * என்னைப் போல் யாரும் கண்ணைத்தானம் செய்வதை பார்த்துவிட்டு இறந்து போயிருக்க மாட்டார்கள் ஆனால் கண்ணுக்கும் தெரியாது நான் இறந்து போனது அவள் திருமணவீட்டில் என்று * உனக்காகவே உழைத்ததில் உன்னை வாங்க மறந்துவிட்டேன் என் மனதையும் உன்னிடம் கொடுத்ததால் * நதியாக ஓடி வா என்றாய் வந்த பின்தான் தெரிந்தது என்னை உன்னோடு கலக்க அல்ல கரைக்கத்தான் வரச் சொன்னாய் என்று * உன் ஆடையின் அழகில் உன்னழகு யாருக்கும் தெரியக் கூடாது என்பதிலும் நான் அக்கறையாக இருந்ததில் தோற்த்தான் போனேனடி உன் ஆசைக் கணவரிடம் …

  6. சிறு துளி பெருவெள்ளம் உன் கூந்தல் துவட்டிய பின்னும் தூறும் துளிகள் எனக்கு * உன்னைக் காதலித்ததால் அல்ல நீ என்னை காதலிக்காததால்தான் ஆனேன் கவிஞனாய்.... * விரும்பித்தான் காதலித்தேன் உன்னை விரும்பாமல் காதலிதுக்கொண்டே இருக்கிறது கவிதைகள் மட்டும் என்னை * நீ சூடும் பூவுக்கு எப்படி கற்றுக்கொடுத்தாய் நீ சிரிக்காத போதும் சிரிக்க * உன் கண்களில் படித்துவிட்டுத்தான் வெளியிடுகிறேன் என் ஒவ்வொரு கவிதைகளையும் பல கண்களுக்காய் * உன்னைக் காதலித்ததால் தலைக்கனம் எனக்கு நீ காதலிக்காததால் தலைக்கனம் என் கவிதைகளுக்கு -யாழ்_அகத்தியன்

    • 4 replies
    • 1.3k views
  7. Started by yaal_ahaththiyan,

    உன் பார்வையில் பார்த்துக் கொண்டேன் என் கண் காட்சியை * உன்னை சுற்றியதில் சேலைக்கு கிடைத்தது அழகான தேவதை * தேடிப் பார்க்க தொடங்கினேன் எனக்குள் இருக்கும் உன்னைக் கொண்டு உனக்குள் இருக்கும் என்னை * உன்னை பார்த்த களைப்பில் ஓய்வெடுக்க விரும்புகிறது கண்கள் உழைக்க விரும்புகிறது உதடுகள் * முத்தத்தை முடித்து வைக்க பிரம்மன் வைத்தான் உன் உதட்டில் ஒரு மச்சம் -யாழ்_அகத்தியன்

    • 2 replies
    • 856 views
  8. வெண்ணிலா நீ என் கண்ணிலா தொட்டுவிட்டாய் பெண்ணிலா வண்ணங்களில் பால் நிலா பார்வையிலே தேன்கனா சோகம் ஏன் உன் நெஞ்சிலா தாலாட்ட வா தென்றலா காதலில்லை இது வெண்புறா கட்டவிழ்ந்த கவியுலா

  9. உன்னிடம் இல்லாதபோதும் நட்பு,சொந்தஞ் சொல்லி வருபவருக்கு கேட்பதைக் கொடுத்து உறவைக் காத்துவிடு. உனது „கடன் பட்ட நெஞ்சு“ கலங்கிக் கரையும்போது உன்னை விட்டகன்ற தடங்களின் பின்னே வெறித்துப் பார்ப்பதைத்தவிர உன்னால் என்ன செய்ய முடியும்? இருபது ஆண்டுக்கு முன் தங்கையின் „பட்டப்படிப்பு வெற்றிக்கு“ (ப்) பரிசு அளிக்க கவிஞ நண்பனுக்கு நீ கடன் கொடுத்தாய், சில ஆயிரம்டொச்சு மார்க்கோடு அவனது கவிதை முகமும் கலைந்துபோச்சு! வேலையிழப்பு நஷ்ட ஈட்டுப் பணத்தைக் கண்டபோது கை நீட்டியவர்களை நீ மறக்கவில்லை! நீட்டிய கையை நிறைத்தே உனது அந்த 24000 யூரோவும் கரைந்து காணாமற் போச்சு! அண்ணனுக்குத் தம்பிக்கு,மாமாவுக்கு மச்சாளுக்கென… இப்போ, உனக்குக் கடன் தந்த …

    • 0 replies
    • 984 views
  10. கஸல் கவிதைகள் 1) கடவுளே என்னை மன்னித்துவிடு நான் காதலை கும்பிடுகிறேன் 2) நீ அழகுக்கு நேர்ந்துவிடப்பட்டவள் 3) உனக்கான அரிதாரத்தை மான்களே கொண்டுவருகின்றன 4) உண்மையாகச் சொல் நீ தேவதைகளின் அசலா! நகலா! 5) உன்னை சுவைபட சொல்ல வேண்டும் என்றால் நான் சோகப்பட வேண்டும் 6) இரவு நதியில் உன் ஆனந்த வெள்ளம் கரைபுரண்டோடுகின்றது 7) நீ தாவணி அணிந்தபோதுதான் என்னில் பிரபலமானாய் 😎 உன் ரகசியத்தை அறிந்ததால் நான் அம்பலமானேன் 9) என் இதயத்தில் நீ தங்காவிட்டாலும் பரவாயில்லை வந்தாவது போ 10) விளக்குகள் அணைக்கப்பட்டால் நீ எரிகிறாய் 11) அவளைப் பிரிந்துவிட்டாயா பரவாயில்லை தேடாதே நீ கவிஞன் ஆகும் வாய்ப்பை இழந்துவிடுவ…

  11. காற்றும் வறண்டு கிடக்கும் இதுபோன்ற ஒரு கோடையில் தான் உனை பிரிந்தேன். உனைப்பிரிந்த அந்த காலம் புல் நுனிகள் கருகிய அந்த காலம் காலமாகிப் போய்விடாமல் கிடக்கிறது. அன்று, உயிப்பூவிதழ்களின் சாயங்களை வெளுறவைத்த பெரும் கோடையின் கோபம் நரம்புகளின் பச்சையத்தை தீண்டவே இல்லை........ இன்று, விழிப்பூவிதழ்களில் எழுகின்ற வாசம் தளம்பல்களை தந்தாலும் கோடைக்கு முன்னான அந்த இளவேனிற்காலத்தின் படிமங்களை மீட்டுகின்றன.......... வற்றிய குளத்தின் நிலப்பொருக்கிடைகளில் மக்கிக் கிடக்கும் சிறுவெண் நண்டுக்கூடுகளாய் காதல் உனக்குள்ளும் இருக்க கூடும் இன்னும், எனக்குத்தெரியும் இருந்தவரை நல்ல காதலியாக இருந்தவள் நீ. எனக்குத்தெரியும் பிரியும்வரை அன்பை பொழிந்தவள் நீ …

  12. Started by Thaya Jibbrahn,

    கூந்தல் நீளம் கொண்டமங்கை - என்னை கா(த்)தல் செய்ய வைத்தாள். காத்து காத்து நின்ற எந்தன் காலம் திருடிக் கொண்டாள் . தொலைவில் இல்லை வானம் என்றே தூரம் நடக்க வைத்தாள். தூரம் நடந்து முடித்த பின்னால் - துன்பப் பாரம் சுமக்க வைத்தாள் . வாழும் வாழ்வில் இனிமையேது வாதம் முடியவில்லை . வாதம் முடிவை அடையும்போது வாழ்வு இருப்பதில்லை. கனவில் தோன்றும் முகங்கள் பழைய நினைவை எனக்குள் தேடும். எனக்குள் தோன்றும் நினைவி லென்ன சுவைகள் இருக்கக் கூடும். பாலை நிலத்து நீரிலெங்கே பாசி முளைக்கக் கூடும். - நான் பார்த்த பெண்ணின் மனதிலென்று பாசம் தோன்றக் கூடும். பள்ளி வாழ்வில் நடந்ததெல்லாம் பழைய கதைகள் ஆச்சு. புதிய வாழ்வை தேட நானும் பாதை தேடல் ஆச…

  13. காகங்களே! மேகங்களே!... காகங்கள் கரைந்தால் குயிலின் பாட்டு கேட்காது மேகங்கள் நிறைந்தால் நிலவின் அழகு தெரியாது ஆயினும் காகங்களே! மேகங்களே! குயிலின் சத்தம் குறைந்திருப்பதாலும் நிலவின் ஒளி மறைந்திருப்பதாலும் அவைகள் இல்லையென்று அர்த்தம் இல்லை இதோ! அவைகள் வெளிக்கிளம்பி விட்டன ஆகவே காகங்களே! மேகங்களே! கூவுகின்ற ஆவலையும் வண்ணமாய் மின்னுகின்ற எண்ணத்தையும் விட்டு கரைதலையும் கலைதலையும் மட்டும் செய்யுங்கள்

  14. காகித எழுதி. தேர்ந்த கவி ஒருவனின் கைகளில் சிக்கிக்கொண்ட காகித எழுதி கன வேகமாக நிரப்பிக்கொண்டிருந்தது காகிதத்தின் வெற்றிடங்களை கனமான பொருளோடு... சிறந்த சிந்தனாச் சிப்பியின் கைகளில் சிக்கிய சிறிய தூரிகை கிறுக்கிய அகண்ட நெடிய ஓவியத்தைப்போல் நிறைத்து வழிந்தன கவிதைகள் வெற்றிடத்தில் இருந்து வெற்றிடத்தைப் பற்றியதாக... சூனியத்தில் இருந்து வெறுமையில் இருந்து பிறந்துகொண்டிருந்தது பெருமைகளின் சிந்தனை பிரசவிக்கும் தாயின் முக்கலும் முனகலும் இல்லாமலே பிரசவித்துக்கொண்டிருந்தது காகித எழுதி கவிதையை நியாங்களில் இருந்து நிஜங்களில் இருந்து வெறுமையை நிரம்பிக்கொண்டு பிறந்துகொண்டிருந்தது அந்தக் கவிதை தேன் நிறைந்த பூவின் வாசமாக கிறங்க வைத்தன வெற்றிடத்தைப் பற்றி …

  15. சுள்ளிகள் பொறுக்கும் காக்கையின் கனவுகளில் கூடு. கூட்டில் குலவும் இணையின் இதமான உரசலும் நெருக்கமும், நெருக்கத்தில் விளைச்சலில் கூடுநிறை முட்டைகள், சிறகணைப்பின் சூட்டில் சிலிர்த்துத் தலைநீட்டும் குஞ்சுகள், வழியெல்லாம் தேடி வாகாய்க் கொணர்ந்த இரை, இரை கேட்டு வாய் பிளக்கும் குஞ்சுகளின் பசிக்குரல், பசி தீர்க்கும் தாய்மையின் பரிவான வாய் ஊட்டல். ஓயாத பகற்கனவும் அயராத உழைப்புமாய்க் காலம் கடக்க, நனவானது முதல்கனவு கூட்டின் முழுமையில் குதூகலித்துத் துயில் கொண்ட முதல்நாள் இரவு கருத்தது மேகம் சிறுத்தது மேனி சுழன்றது காற்று உழன்றது மரக்கிளை கூடு சிதைந்தது காடு கவிழ்ந்தது உயிர்த்தெழுந்த காகம் …

  16. முரண் இறைவனின் வாகனம் என்றான் நாயை அவதாரம் என்றான் பன்றியை இறைவனே என்றான் குரங்கை இவனே திட்டினான் என்னை ~நாயே!பன்றியே!குரங்கே!

  17. காசுதான் வாழ்வா ???? வெண்பனிப் புகார் அடர்த்தியாய் மண்டியிருக்க பைன் மரத்துக் காடுகளில் பையப் பைய நடக்கையிலே உன் நினைவும் என்னை ஊஞ்சலாய் ஆட்டுகின்றது...... காலப் பெருவெளியில் உன்னைக் காசுக்காய் தொலைத்தவனுக்கு காலம் தந்த தண்டனை காலத்தால் அழியாதது..... என்மீது நீ கொன்ட அன்பு சுத்தமானது , அதை நான் அசுத்தமாக்கியது என் பிழைதான் பெண்ணே ....... என்னிடம் வந்தவளோ என் காசைக் கணக்குப் பாக்க , பாலை மணல் வெளியில் வழியைத் தொலைத்த வழிப்போக்கனைப் போல நானோ அவளிடம் அன்பைத்தேடி அலைகின்றேன்........ அன்பை மட்டுமே அள்ளித் தரத் தெரிந்த உனக்கு என்னைப் போல் வண்டுக் குணம் இல்லைத்தான் வாழ்க்கையில் வெற்றி... வெற்றி ....... என்று மார்தட்டிய எனக்கு காலம் …

  18. எழுதியவர்: கி.பி. அரவிந்தன் [01] இப்படியாக இருந்து வரும் நாளொன்றில் இங்கோர் ஈரவலயக் காட்டினில் புயலடித்து ஓய்ந்திருந்தது. தூறல் மழையும் ஈரலித்த காற்றும் ஓயாதிருந்தது. வேனிற் காலமும் தள்ளிப் போயிற்று. குழந்தைகளோ புயல் துழாவிச் சென்ற காட்டினைக் காணவும் அக்காட்டிடை உலவவும் ஆவல் கொண்டிருந்தனர். அவர்தம் ஆவல் மேலிட வீட்டின் மூலை முடுக்கிலும் புத்தக அடுக்கிலும் நாற்புற சுவரிலும் தொங்கத் தொடங்கின காடுகள். காடென்றால் பெரு விருட்சங்களும் நெடு மரங்களும் பற்றைகளும் செடி கொடிகளுமாய் அடர்ந்து கிடக்கும் காடுகளவை. சிறுகாடு பெருங்காடு மழைக்காடு பற்றைக்காடு ஈரவலயக்காடு வெப்பவலயக்காடு இப்படியாய் பலவகைக் காடுகள்.. அவ…

  19. Mohamed Nizousபற்ற வைக்கின்றபைத்தியகாரனுக்கும் தெரியாது.எரிகின்ற கடையுடன்எத்தனை மனிதர்களின்எதிர்காலமும் எதிர்பார்ப்பும்எரிகின்றது என்பது.கல்லை எறிகின்றகாவாலிக்குத் தெரியாது.கண்ணாடியுடன் சேர்த்துதன்னாட்டின் பெயரும்உடைந்து போய்உலகளவில் நொறுங்குவது.பள்ளியை உடைக்கும்மொள்ளமாரிக்குத் தெரியாது.அள்ளாஹ்வின் வீட்டில்அத்து மீறி நுழைந்துஅட்டகாசம் செய்தவன்பட்டழிந்து போன செய்தி.வீடுடைத்து எரிக்கும்காடையனுக்குத் தெரியாது.பிறந்து வளர்ந்துபறந்து வாழ்ந்த வீடுஉடைந்து போகும் போதுஉள்ளே எழும் வலிஉடைக்கின்ற காடையனைஒரு நாள் வதைக்கும்.ஐம்பதாயிரம் தருவதாகஅறிவித்தல் கொடுக்கும்அரசுக்குப் புரியாது.தருகின்ற பணம்கருகிய இடத்தின்கறுப்பைப் போக்கவும்காணாது என்று.பாட்டுக் கேட்க கோல் எடுக்கும்பாத்திமாக்களுக்…

    • 0 replies
    • 1.1k views
  20. மின்சார ரயில் மெல்ல மெல்ல .. வேகம் கொள்ளும் நிலை போல் .. உன் மின்சார பார்வை என்னையும் .. லேசா லேசா திரும்பி பார்க்க தூண்ட ... உடைந்து விழும் கண்ணாடி போல் .. மனதில் ஒரு சிதறல் கோடு .. நீ பாடல் கேட்டு தலை அசைப்பது .. எனக்கு ஏனோ சம்மதம் சொல்வதாய் .. உன் விரல்கள் கோலம்மிடும் கைபேசி திரை .. என் மூச்சு காற்றின் வெப்பம் அறியும் .. நீ பாடல்களை மாற்றிக்கொண்டு இருக்கிறாய் .. நான் வாழ்வின் பல படியை உன்னோடு கடக்கிறேன் .. ஒவ்வெரு தரிப்பிடமும் மூச்சு வாங்குது .. நீ எழுத்து போகக்கூடாது என்று வரம் கேட்குது .. நீ நிமிர்த்து பார்க்கும் நொடிகள் தான் .. நான் வாழ்தலின் பலனை எண்ணுகிறேன் .. என்றாவது ஒருநாள் உன் அருகில் நான் .. சேர்த்து பயணிப்பேன் என் காத…

  21. நன்றி: facebook. நன்றி: facebook. (மிகுதி தொடரும்..! நீங்களும் இணைக்கலாம் நீங்க ரசித்தவை.. ஆக்கியவை என்று.)

    • 47 replies
    • 13.4k views
  22. காட்சிப்பிழைகள் - கே இனியவன்காட்சிப்பிழைகள்....................( காதல் காட்சிப்பிழைகள்) காதல் ஒரு மந்திர கோல் ..... இரண்டு இதயங்களை .... ஒன்றாக்கி விடும் ....!!! நெற்றியில் ... குங்கும பொட்டு.....? அப்பாடா - சாமி .... கும்பிட்டு வருகிறாள் ....!!! தேவனிடம் .... பாவ மன்னிப்புக்கேட்கிறாள் .... என்னிடமும் கேட்பாள் .....!!! ^^^ கனவு நிஜத்தில் நிறைவேறாத ... ஆசைகளை நிறைவேற்றும் .... நீர்க்குமிழி .....!!! திடுக்கிட்டு எழுந்தாள் .... தாலியை கண்ணில் வணங்கி... என்னை பார்த்தாள் ....!!! இன்னும் சற்று தூங்கியிருந்தால் .... சொர்கத்தை......... பார்த்திருப்பேன்....!!! ^^^ நீ என்னை .... காதலிக்கும் வரை ... உத…

  23. காட்சியும் கவிதையும் உயரக் கூடு கட்டி உல்லாசமாக வாழ்ந்தாலும் நிலம் நோக்கிய வாழ்வில்லாமல் நின்மதி கிட்டாது.

    • 109 replies
    • 9.1k views
  24. ஒரு கதை கேள் தோழி. ஒரு வசந்தம் மட்டுமே வாழ்கிற ரோமியோக்களின் கதை கேள். காகிதப் பூக்களின் நகரத்தில் காதலில் கசிந்து தேனுக்கு அலைந்தது பட்டாம் பூச்சி. என் இனிய பட்டாம் பூச்சியே சுவர்க் காடுகளுள் தேடாதே. நான் வனத்தின் சிரிப்பு வழுக்குப் பாறைகளில் கண்சிமிட்டும் வானவில் குஞ்செனப் பாடியது பிஞ்சுக்கு ஏங்கிய காட்டுப் பூ. ராணித் தேனீக்களே எட்டாத கோபுரப் பாறைகளில் இருந்து கம கமவென இறங்கியது அதன் நூலேணி. வாசனையில் தொற்றிவந்த வண்ணத்துப் பூச்சியிடம் இனிவரும் வசந்தங்களிலும் தேனுக்கு வா என்றது பூ. காதல் பூவே வசந்தங்கள்தோறும் ஊட்டுவேன் உனக்கு மகரந்தம் என்கிற பட்டாம் பூச்சியின் எதிர்ப்பாட்டில் உலகம் தழைத்தது. நிலைப்ப தொன்றில்லா வாழ்…

    • 3 replies
    • 1.2k views
  25. Started by N.SENTHIL,

    காட்டுமல்லிக்கொடியாய் யாருமற்ற வனத்தில் முளைத்து கிடந்தேன் பூப்பறிக்க வந்தவள் - இந்த கொடியில் ஆசை வைத்து பறித்து போனாள் பதியம் போட்டாள் , பொழுது தவறாமல் நீர் ஊற்றினாள் உரம் போட்டு என் வளர்ச்சிகண்டு பூரித்தாள் மொட்டுவிடும் பருவத்திலொரு நாள் நன்று கொதித்த வெந்நீர் ஊற்றினாள் வேர் வரை பாய்ந்து துடித்தேன் - ஏன் இப்படியென்றேன் பூக்கள் பிடிக்காதென்றாள் பூப்பதுதானே என் இயற்கை விதி என்றேன் பூக்காது பார்த்துக்கொள் என்றாள் ............. முயற்சிக்கிறேன் என்று சொல்லி செத்துப்போனேன்

    • 7 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.