கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
தினம் நினைக்கப்பட திணிக்கப்பட்ட தினமல்ல, மனிதம் பேசும் மரபுக்காயெழுந்த மகத்தான தினமிது ! மூர்க்கம் கொண்ட முதலாளி வர்க்கம் கலைக்கும் வகையறியாது , பார்க்குமிடமெல்லாம் வதைபட்டு வேர்த்தவொருவனின் வேதனை சிதைத்த தினமிது !! புரட்சியின் பரிணாமமாய் எழுந்தான் எங்கெல்ஸ், பொங்கிவெடித்தான் மார்க்ஸ்_அரசியலில் அழைத்துவந்தான் லெனின் . தோழர்கள் தோள்மேல் பயணப்பட்ட எழுச்சி விதைத்துவைத்தது தொழில்புரட்சி. ஓங்கியோலிக்கட்டும் இங்குமினி புரட்சியின் குரல் , அடக்குமொரு அரசினை _மனிதம் மறுக்குமதன் அரசியலிருப்பினை, பாசிச தலைவர்களை _இன அழிப்பின் இயங்குபொறிகளை இனங்காட்டி ஓங்கியோலிக்கட்டும் . உழைக்குமொருவனின் உரிமைகள் இழக்கப்படாதிரு…
-
- 4 replies
- 979 views
-
-
இன்று கிருபன் அண்ணாவின் புளொக்கை வாசித்தேன்...அதில் உள்ள நாட்கள் எனும் கவிதை எனது நினைவுகளையும் தட்டிவிட்டது...போருக்குள் ஊரில் வாழ்ந்த தொலைபேசி இல்லாத நாட்களில் அப்பாவின் கடிதங்களுக்காக காத்திருந்த நாட்கள் கண்களில் நிழல் ஆடின..அந்தக் காலங்களில் அதற்க்கு சற்றும் குறையாத பரிதவிப்புடன் ஊரில் உள்ள உறவுகளின் கடிதங்களுக்காக புலம்பெயர்ந்த நாடுகளில் தனிமையில் உறவுகள் எவ்வளவு தவிப்புடன் இருந்திருப்பார்கள் என்பதை கிருபன் அண்ணாவின் இந்தக் கவிதை நெஞ்சைத்தொடும் வகையில் பேசுகிறது..... நாட்கள்.... கிருபன் குளிர் காலங்களிலும் கடும் கோடைகளிலும் உதிர்கின்றன நாட்கள். பிரசவிக்கும் காலைகளில் தூக்கக் கலக்கத்துடன் விழிகள் எதிர்பார்க்கும் தபாற்காரனை. கதவிடுக்…
-
- 28 replies
- 2.7k views
-
-
-
சிங்கள பெரினவாதம் சிங்க கொடியுடன் சீறும் வரை தமிழினத்தின் உரிமைக்கான தாகம் தவிர்க்க முடியாதது சிறுபன்மையினர் உலகில் சிங்களம் நாம் என்று சிறிலங்காவில் சிறுபான்மையினரை அழித்தால்_உன் இருப்புக்கு நீ இடும் புதை குழி முள்ளிவாய்க்கால் தில்லானவல்ல திருப்புகழுமல்ல சுபமும்மல்ல நன்றி வணக்கமுமல்ல ஊ சிவமயம் ஆகும் ஆயுதமா அகிம்சையா என்பதை தீர்மானிப்பது சிங்கள பெரினவாதம்....
-
- 5 replies
- 900 views
-
-
அந்தி சாயும் அந்த வேளை.. அருவி கீதம் இசைக்க அணில்கள் குத்தாட்டம் போட அண்டங் காக்கைகள் ஆர்ப்பரிக்க அழகிய தோப்பதில் அன்புடன் நான்..! ஆதவனின் மறைவோடு ஆதாம் ஏவாள் நினைவோடு - நிலவை ஆரத்தழுவும் ஆதங்கத்துடன் ஆகி நின்றது செக்கச் சிவந்து வானம்..! இலைகளின் நடுவே இளகிய இதழ் விரித்து இனிமையாய் தேன் சொரிந்து இளமையின் இறுதி நேர உச்சம் கண்டு.. இன்புற்றுக் கொண்டிருந்தன பூக்கள்..! ஈக்களின் கூட்டம் ஈரம் கண்டு மொய்க்க ஈகமே கொள்கை என்று ஈடுகொடுத்து நின்றது காளான்..! உற்றுப் பார்க்கிறேன்... உறவுகள் யாரும் இல்லை உதவிகள் எதுவுமில்லை.. உணவின்றி ஒட்டிய வயிறு உயிரின் இறுதி முனகல்.. உணர்வுகள் மட்டும் எஞ்சிய நிலையில்.... உயிர்ப்புக…
-
- 24 replies
- 2.6k views
-
-
குட்டி அண்ணாவின் கவிதை தந்த தாக்கத்தில் இன்று எழுதியது...(http://www.yarl.com/...pic=101771&st=0) . பிரிந்து பறக்கும் வலி... அன்பே உனக்கும் எனக்குமான உறவுகள் எந்தக் கவிஞ்ஞனும் இதுவரை புனைந்துவிடாத வார்த்தைகளின் வனப்புகளைத் தாண்டி வரையப்பட்ட கவிதைகளடி... நாம் பழகிய அழகிய நாட்களின் நினைவுகள் எந்த ஓவியனது தூரிகையிலும் இதுவரை சிக்கிவிடாத அற்புதமான ஓவியங்களடி... உன் வார்த்தைகள் என் செவிகளில் விழுந்த அந்த மிகமெல்லிய முதலாவது குளிர்நாளில் நீ பேசிய ஒவ்வொரு வரிகளையும் என் நினைவுப் பெட்டகத்தில் எடுத்துச் செல்கிறேன்.. பழைய சில முத்திரைகளையும் பட்டாம்பூச்சிகளின் இறகுகளையும் பொன் வண்டு முட…
-
- 20 replies
- 4.6k views
-
-
" பசி " ... என் பசி யாரென்று தெரியுமா...? உங்களுக்கு...? பசி என், " அழையா விருந்தாளி "... சாதி,மதம்,இனம்,சமயம் பார்க்காத சமத்துவ விருந்தாளிதான், ஆனால், இவன் என் வீட்டில் மட்டுமே இலைப்பார ஆசைப்படுகிறான், இவனுக்கு நான் என்ன விருந்து படைக்க..? ஒட்டு துணியில் மானம் காக்கும் என்னைபோன்றோர்.. ஒட்டு மொத்தமாய் வயிறு நிறைந்ததே இல்லை...! எங்கள் வீட்டு கதவை மட்டும் தட்டும் இந்த விருந்தாளி, கல்லாய் கிடக்கும் கடவுள்களை சீண்டி கூட பார்க்காதோ..? சாமிக்கு படைத்துவிட்டு நீங்கள் வாங்கும் ஒரு உருண்டை பிரசாதத்தில் சிறு உருண்டை கொடுத்து இருந்தாலும் பசி போக்கி இருப்பேனோ..? அப்போது " பசியாற்றுதல் " என்ற…
-
- 6 replies
- 1.1k views
-
-
ஊரில் இருக்கும் நண்பா நலமா? நீயும் “வெளிநாட்டுக்கு “ வரப்போகிறாய் என்று சொன்னாய்...!!! காசு கொடுத்து சந்தோசங்களை விலைக்கு வாங்கும் நான் சந்தோசங்களை விற்று காசை விலைக்கு வாங்க ஆசைப்படும் நீ இதுதாண்டா உனக்கும் எனக்கும் இப்போது வித்தியாசம்.. நான் நேரத்துக்கு நித்திரை கொண்டு நான்கு வருடங்கள் ... நிம்மதியாய் நித்திரை கொண்டு ஆறு வருடங்கள்...!!! இதையே வைரமுத்து பாட்டில் சொன்னால் மண்டையை மண்டையை ஆட்டிக் கேள் சங்கர் படமாய் எடுத்தால் விசிலடித்து கைதட்டு உன் ”நண்பன்” நான் சொன்னால் மட்டும் கொடுப்புக்குள் சிரித்து நக்கல் அடி..!!! கனவுகளை விற்று நித்திரைகளை விலைக்கு வாங்காதே விரல்களை அடைவு வைத்து தூரிகைகளை வட்டிக்கு வாங்காதே....!!!! …
-
- 4 replies
- 1.2k views
-
-
ஒளிமிளிர்ந்து நடனமாடிய உன்கண்களை முதல் முதலில் சந்தித்தபோது என் இதயத்தில் வாள் உருவியது போல் ஒரு வலி உணர்ந்தேன்... பட்டாம் பூச்சியாகப் பறந்து திரியும் உன்னை காதல் என்ற குறுகிய வட்டத்தினுள் அடைக்க மனமில்லை அருகில் பறக்கும் உன்னை விட்டு வேறு திசை நோக்கிப் பறக்கும் மனநிலையும் எனக்கில்லை...! தொந்தரவு செய்வதையே உயிர் மூச்சாகக் கொண்ட இந்த உலகில் யாருக்கும் எந்த இடஞ்சலுமில்லாது தொடர்ந்தே நட்பென்னும் பரந்த வானில் சேர்ந்தே பறக்கலாம் வா...
-
- 64 replies
- 3.6k views
-
-
வறுமையின் பிடியில் உயிர்கள் துடிக்க கடவுளுக்கு வேண்டுமா பாலாபிஷேகம்?????????? சிலைகள் விலைகள் கேட்பதில்லை கடவுளை மனிதன் பார்க்கவில்லை...... உதவும் உள்ளமே கடவுளடா,,,,,,,,,, உனக்கு மேலாக இருப்பது என்றும் உன்னுடயதில்லை பகிர்ந்து கொடு பட்டினிச்சாவு பறக்கட்டும்.............. ***** நன்றி முகநூல்
-
- 2 replies
- 660 views
-
-
எம்.ஜி.ஆரும் இந்திரா காந்தியும் இருந்திருந்தால் இப்போது ஈழத்தில் வாழ்ந்திருப்போம்! Last Updated : இன்னும் உயிருடன் இருக்கின்றன மருதாணி மரங்கள் மற்றும் சில பூவரச மரங்கள் பாதி நிழலை வைத்திருக்கிறது மருத மரம் சாம்பல் சுவடுகளின் மேலாய் புதிய கூடாரம் நாட்டப்பட்டிருக்கிறது வானத்தின் காயம் ஆறிவிடும் என்று அம்மா நம்புவதைப்போல மீண்டும் வீடு வளரும் என்று தங்கை நம்புகிறாள் காணி நிலத்தில் மீண்டும் பாடல்கள் முளைக்கின்றன -தீபச்செல்வன் கவிஞர். தீபச்செல்வன் ( 1983 ) ஈழத்தின் வன்னிப் பிரதேசத்தில் பிறந்தவர். போரின் பூமிக்குள்ளேயே வளர்ந்து வாழ்ந்து வருபவர். 2005ஆம் ஆண்டில் முதல் கவிதை பிரசுரமானது. கண்முன்னால் நடந்த கொடூரங்களை எல்லாம…
-
- 0 replies
- 322 views
-
-
ஆசைகள் அங்கும் இங்கும் ஒன்று தான்... உடலின் சேர்க்கையில் திரவங்களின் கலப்பில்.. வந்தன விளை பொருட்கள்..! தாயென்றும் தந்தையென்றும் உறவுகள்.. சமூகமென்றும் மக்களென்றும் கூட்டங்கள் கூச்சல்கள்...! எல்லாமே இயற்கையின் விதிப்படி..! ஆனால்... போட்ட குட்டிகளுக்கு இரை தேட வழியின்றி மனிதன்..!! போட்ட குட்டிகளுக்காய் உடல் ஒட்டிய போதும்.. இரைக்காக இரங்கும்.. இதுவும் ஓர் உயிர்ப்புள்ள.. பிராணி தான்..! "சாட்" செய்து சோடி பிடித்து கை கோர்த்து.. காதலித்து மேடை போட்டு வேதம் ஓதி.. தாலி கட்டி தேன்நிலவு கண்டு வந்தால் என்ன.. உடல் ஒட்டி குட்டையோடு.. வீதியோரம் இழுபட்டு நொந்து நூலாகி வந்தால் என்ன விளை பொருள் எங்கும் ஒ…
-
- 2 replies
- 674 views
-
-
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான காதல்: இரண்டு பேருக்குள் ஒழுகும் தேன்..! மும்மூர்த்திகள் செய்யும் திருவிளையாடல்..! நாலு சுவருக்குள் அந்தரங்கம் ..! ஐம்புலனும் தறிகெட்டுப்போகும் அவசரம்...! அறுசுவைகள் அனைத்திலும் தெரியும்! ஏழு மலை ஏறி வந்த களைப்பிருக்கும்! எட்டில் சனி தொடங்கும்..! ஒன்பது கிரகங்களும் எதிரியாகும்! சுழியமாகிநின்ற... ஒரு ஆண்பூச்சியை, ஒரு பெண் சிலந்தி இரையாக்கும்! மீண்டும்... விரிகின்ற சிலந்தி வலைகளில், பூச்சிகள் விழ விழ... வளர்ந்துகொண்டே இருக்கின்றன... விழுதல்களும்!
-
- 7 replies
- 885 views
-
-
மாடப்புறாவும் தெருப்புறாவும் காதல் கொண்டதாம் அதைக் கண்ட கொப்பர் கொட்டன் எடுத்தாரும் தெருப்புறாவும் கொடுக்கை கட்டிச்சுதாம் மாடப்புறாவும் மதிகெட்டிச்சுதாம் இருபுறாவும் இன்பமாய்ப் பறந்திதாம் காதல் வாழ்வுதொடங்க வில்லனும் வந்தானாம் வில்லங்கமாய் ஆமி வடிவிலே மாடப்பறாவும் சிதைந்தே போனதாம் தெருப்புறாவும் தன்ரை புத்தியைக் காட்டிச்சுதாம் வீ...........ர்...........ரென்று பறந்ததாம் வேறொரு புறா தேடி..............
-
- 7 replies
- 2.1k views
-
-
ரோஜாச் செடியில் ஏராளமான முற்கள் உண்டு ஆனால் ரோஜாப்பூ அழகாத்தான் இருக்கும் அது போல நீ சில சமயம் கோவபட்டாலும் நீ அழகுடி...
-
- 7 replies
- 1k views
-
-
புலிகளின் இரையாண்மை!!!!!!!! நனறி-முகநூல் http://a6.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/563189_229347280500032_100002742857647_315612_598241312_n.jpg
-
- 3 replies
- 1k views
-
-
நேற்று மொட்டாய் நின்று... இன்று பூத்த பூவது! கட்டுக்குள் அடங்காத காளையை, கட்டியிழுத்த தேரது! இழுத்தலும் பூத்தலும் பூவின் புன்னகைக்குள், தேனாய் இனித்தது! தேன் குடிக்கப் போன வண்டு தேருழுத்துக் களைத்தது! காரிருளில் கதவடியில், கண்ணான கண்மணி கண்ணருகே நின்று நெஞ்சருகே வந்தாள்! தொட்ட இடமெல்லாம் சுட்டன மாமல்லபுரச் சிற்பங்கள்! பதைபதைத்த நெஞ்சம் தப்பி வந்த முயல் போல் தாவி நின்று மூச்சுவிட, மேவிவிட்ட உச்சந்தலையில் ஈரப்படுத்தியது என்னிதழ்! பூச்சூடிய குங்கும வாசம் வாவென்றழைக்க, கண்ணிமைக்கும் நேரத்தில் பூவிதழோடு போராடி வெற்றிகண்ட வண்டு, கட்டிலறைத் தேன்கூட்டே கவர்ந்து சென்று ஆறுதலாய் ரசித்து ருசித்து... முழித்தேனும் முழுத்…
-
- 27 replies
- 3.4k views
-
-
கிழிந்த சட்டையுடன் துணிக்கடைக்கு போனேன்....! ஒரு சட்டையை காட்டியவன் மற்றொன்றை காட்ட மேலும்,கீழும் பார்த்தான்..! பட்டு சட்டை போட்டவன் கைக்குட்டை கேட்டான் மலைபோல் குவித்து காட்டினான் அவனுக்கு...! நான் எடுத்து வந்தேன் அவன் மறுத்து சென்றான்...! -வேடந்தாங்கல் http://www.ilankathir.com/?p=6291
-
- 0 replies
- 517 views
-
-
கம்பஞ் சோற்றுக்கும் தென்றல் காற்றுக்கும் ஓற்றையடி பாதைக்கும் சைக்கிள் சவாரிக்கும் குளிர்ந்த மோருக்கும் பனைமர நுங்குக்கும் அம்மா அன்பில் பங்குக்கும் மனம் ஏங்குதடி... அவசர சாண்ட்விச்சும் பனி மழையும் குளிர் காற்றும் நெரிசல் ஹைவேயில் டொயோட்டோவிலும் கப்புச்சீனோவும் கோக் பாட்டிலுமாக வாழ்க்கைத் தொடருதடி! தாரா http://siragugal.blo...05/01/i_28.html
-
- 0 replies
- 495 views
-
-
ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் பறவைகளோடு எல்லை கடப்பேன் பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும் எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன் ஒவ்வொரு புல்லையும்... நீளும் கைகளில் தோழமை தொடரும் நீளாத கையிலும் நெஞ்சம் படரும் எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய் உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய் ஒவ்வொரு புல்லையும்... கூவும் குயிலும் கரையும் காகமும் விரியும் எனது கிளைகளில் அடையும் போதியின் நிழலும் சிலுவையும் பிறையும் பொங்கும் சமத்துவப் புனலில் கரையும்! ஒவ்வொரு புல்லையும்... எந்த மூலையில் விசும்பல் என்றாலும் என் செவிகளிலே எதிரொலி கேட்கும் கூண்டில் மோதும் சிறகுகளோடு எனது சிறகிலும் குருதியின் கோடு! ஒவ்வொரு புல்லையு…
-
- 6 replies
- 7k views
-
-
சட்டென்று ஒரு வெடிச்சத்தம்...! பட்டென்று போனது ஓருயிர்! சிட்டென்று பறந்த சின்னக் குருவி... வேட்டொன்றில் வீழ்ந்தது வீணாய்! பாழ்பட்ட யாழ் மண்ணில் ஒருநாள், தேள்கொட்டிய மாதிரி ஒரு செய்தி... நோபட்ட மனதோடு விடிந்தது... சிவந்த காலை, மார்தட்டி நின்றவன் புழுதியில் கிடந்தான்!!! கார்கொண்ட மேகம் கண்ணீர் அஞ்சலி செலுத்த, பேர் கொண்ட அவர் முகம் தணலாய் மறைக்க, வீறுகொண்ட நாலுபேர் இருக்குமிடம் விலகினார்! போர்கொண்ட உள்ளங்களின் காரியக் குணம் போல..! காரணம் தெரியாது...! காரியம் புரியாது...! ஆழங்கள் தாண்டி... தோண்டும் நேரம் இதுவோ? காரிருள் ஊடே ஒரு விடிவெள்ளி.. வெளிச்சம் காட்டிச் சிரிக்கிறது! விடைதெரியாத வினாக்களுக்கும், விடைகொடுக்கும் நேரமிது! கடை…
-
- 2 replies
- 901 views
-
-
ஆக்காண்டி ஆக்காண்டி... சண்முகம் சிவலிங்கம் ஆக்காண்டி, ஆக்காண்டி எங்கெங்கே முட்டை வைத்தாய்? கல்லைக் குடைந்து கடலோரம் முட்டை வைத்தேன். வைத்ததுவோ ஐஞ்சு முட்டை பொரித்ததுவோ நாலு குஞ்சு நாலு குஞ்சுக் கிரை தேடி நாலுமலை சுற்றி வந்தேன், மூன்று குஞ்சுக் கிரைதேடி மூவுலகம் சுற்றி வந்தேன். ஆக்காண்டி, ஆக்காண்டி எங்கெங்கே முட்டை வைத்தாய்? கல்லைக் குடைந்து கடலோரம் முட்டை வைத்தேன். குஞ்சு பசியோடு கூட்டில் கிடந்த தென்று இன்னும் இரைதேடி ஏழுலகும் சுற்றி வந்தேன். கடலை இறைத்துக் கடல் மடியை முத்தமிட்டேன். வயலை உழுது வயல் மடியை முத்தமிட்டேன். கடலிலே கண்டதெல்லாம் கைக்கு வரவில்லை. வயலிலே கண்டதெல்லாம் மடிக்கு வரவில்லை. …
-
- 10 replies
- 3.6k views
-
-
அன்று பயந்து விட்டேன் உன் அழகில் மயங்கி உன்னைக் காதலித்து விடுவேனோ என்று. நான் சொன்ன படி கேட்கின்ற என் மனது ஒரு நிமிடம் நிலைமாறி அடம் பிடித்தது உன்னைக் காதலிக்க வேண்டாமென்று, இலச்சியம் தடுத்தது. ஒரு நிலையானது மனம். இனிக்கும் பழமெனத் தெரிந்தும் புளிக்குமென தள்ளிவைத்தேன். புளியைச் சுவைக்க பிடிக்காமலல்ல பற்கள் கூசி வாய் திறக்க முடியாது என்பதனால். இலக்கு வைத்த இலட்சியம் சிகரம் தொட சிரமங்களைத் தாண்டி துள்ளிச் செல்ல வாழ்க்கையில் மிதக்கின்றேன், உயரத்தில் நின்று கஸ்ரங்களை - ஒரு தீப் பெட்டியாய் பார்க்க வேண்டுமென்று. புரிந்து கொண்டேன் என்னை நீ காதலிப்பதனை, காதலியாய் நீ வேண்டாம் என்றும் தோழியாக நீயிரு அப்போதுதான் நான் …
-
- 5 replies
- 3.8k views
-
-
என் இதயத்துக்குள் இன்னொரு இதயம் சுகமாய் வீழ்ந்த அந்த நொடிப் பொழுது அவன் சுவாசம் எனைத் தீண்ட என் மனது காதலை பூத்த அந்த நாழிகை அவன் பார்வைகளால் என் இதயத்துக்குள் சித்திரம் வரைந்த அந்த மணித்துளிகள் அவன் நினைவுகள் என் மனதுக்குள் இறங்கிய தருணங்கள் இவை எல்லாவற்றையும் நினைத்திடும் பொழுது அவன் நினைவுகள் உயிர் பெற்று என் பொழுதுகளை அவிய வைத்து பசியாறிக் கொள்கின்றது... இரக்கமின்றி.. அவன் நினைவுகள் என் இதயத்தை தீண்டி விடாமல் வேலி போடுகின்றேன் - இருந்தும் அவை இதயத்தை தாண்டி -என்னை முழுவதும் ஆக்கிரமித்து படர்கின்றதே... ஒரு வேளை அவன் நினைவுகள் பாதீனியம் போலவோ? நான் அழிக்க அழிக்க மீண்டும் முளைக்கின்றதே.. என் …
-
- 11 replies
- 1.2k views
-
-
வணக்கம் இந்தக் கவிதை என்னுடையது இல்லை . முகநூலில் என்னை நெருடிய முள் அவ்வளவே . நேசமுடன் கோமகன் ******************************************************************************************************************************************************** காதலின் புனிதத்தை காமத்தின் பெயரால் கறைபடிய விட்டதும் காணாமல் கருவுக்கு உயிர் கொடுத்து தெருவில் எறிந்த மனிதமற்ற மண்புழுக்களே வார்தைகள் கொண்டு உங்களை திட்டுவது தமிழுக்கு நான் செய்யும் துரோகம்.... நல்ல உள்ளங்களே யாரும் ஆனாதையாக பிறப்பதில்லை இந்த சமுதாய சனியன்கள் சிலரால் உருவாக்க படுகிறார்கள்................... நன்றி : முகநூல்
-
- 5 replies
- 771 views
-