கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
ஞாபகங்களுடன் இன்றும்.... மீண்டும் சந்திப்பதாய் ஒரு மாலைநேர ஈரக்காற்றின் உவர்ப்போடு அழுததாய் ஞாபகம். தாஜ்மகால் பற்றியும் தலைசிறந்த காதல் இலக்கியம் தந்த ஜிப்ரான் பற்றியும் நிறையவே பகிர்தல்கள். ஒரு தாஜ்மகால் ஒரு முறிந்த சிறகு எங்களுக்காயும் எழுதப்படுமெனும் எண்ணமேயில்லை கௌரவப் பிரிதலாய் அது நீண்டதொரு தசாப்தம் நிறைவாகிறது. என்றாவது நினைவு வரும் சிறுவயது ஞாபகம் போல் எப்போதாவது வந்துபோகும் ஞாபகங்களுடன் இன்றும்.... காதலென்ற சொல்லுக்காய் செய்து கொண்ட சத்தியங்கள் நினைவு இடுக்குகளிலிருந்து கழன்று விழுகிறது. சத்தியம் ää சபதம் சாத்தியமில்லாக் கனவுகள் எல்லா மனசிலும் காதலின் வலி உணர்வாயும் நினைவாயும் நிசம் உணர …
-
- 5 replies
- 1.8k views
-
-
வீர வணக்கம் அண்ணனே.... இடியென வந்துன் செய்தி விழுந்தது இதயம் உடைந்தது விழிகள் கதறுது மொத்த தமிழினம் எங்கணும் கதறுது உன்னை இழந்தெம் தேசமே அலறுது.... ஈழ வானின் உதயம் மறைந்தது எங்கள் வானில் காரிருள் படர்ந்தது தாயை இழந்த சேயினை போல உன்னையிழந்து தமிழினம் கதறுது.... எங்களின் உரிமை வென்றிட வேண்டி எத்தனை செய்தாய் நீயே ஓடி நோயுடல் உன்னை வாட்டையில் கூட ஓய்வின்றி உழைத்த உத்தம வீரா.... எங்களை விட்டு ஏனின்று பிரிந்தாய்....??? காலதேவன் ஏன் உன்னை கடுகதியில் அழைத்தான்....??? ஓடியே வந்த பகைகள் எல்லாம் நீ ஏறிய களமதில் ஒழிந்தே போகும்..... உன் மதியுரை கேட்டு அரக்கன் கூட ஆடியே போவான் …
-
- 5 replies
- 1.7k views
-
-
-
மிகத்தெளிவாகத்தான் இருக்கிறேன்- ஆனால் குழப்பங்களுக்கு நடுவில் இருக்கிறேன். ஆயிரம் கேள்விகள் என்னை துரத்துகின்றன, ஓடிக்கொண்டிருக்கிறேன் பதில்களை நோக்கி...!!! சில பதில்களும் கேள்விகள் ஆக மாறி குழப்புகின்றன..!!!! எது சரி? எது பிழை? நேற்று பிழைகள் என்று தெரிந்தவை இன்று சரியாகலாம். இன்று சரியானவை என்று சொன்னவை நாளை பிழையாகலாம். சரியான வழிகளில் சென்றால் சில சமயம் பிழையான இடங்கள் வருகிறது. பிழையான பாதைகள் சில சிலநேரம் சரியான இடங்களுக்கு மாற்றுவழிகளாகிறது. ஆரம்பத்தில் அருகில் இருப்பது முடிவில் தொலைந்துபோகிறது. தொலைந்ததை தேடி வந்தால் மீண்டும் "ஆரம்பம்" தெரிகிறது. முடிவை காணமுடியவில்லையெனில் ஆரம்பத்தில் பிழை என்கிறார்கள் ஆனால் ஆரம்பத்தில் பிழையானது…
-
- 5 replies
- 1.2k views
-
-
உரிமை குரல் பாடல் ஒலி வடிவில் http://www.alaikal.com/voice.smil
-
- 5 replies
- 2.3k views
-
-
இக்கவிதையை எழுதியவர் யார் என்பதை யாராவது அறிந்து கூறுங்கள் பார்க்கலாம் ? நட்புடன் வாசுதேவன். ---------------------------------------------------- கவிதை என்பது சுதந்திரம்: கவிதை என்பது சுதந்திரம் அப்போது தெரிந்தது நான் இன்று வரையிலும் எழுதியிருப்பவை கவிதைகள் அல்ல என்பது என் நண்பர்கள் எழுதியிருக்கக்கூடும் கவிதை என்பது கட்டுப்பாட்டின் அட்டகாசம் என் நண்பர்கள் எழுதியிருக்கக்கூடும் கவிதை என்பது பூஜ்ஜியம் உளறல்கள் பேரர்த்தம் கவிதை என்பது ஊடுருவி உருக்குலைப்பது கவிதை என்பது பற்றுக்கோலின் கண்கள் கவிதை என்பது உடலுறவின் உச்சக்கட்டம் நான் எழுதியிருப்பவையல்ல கவிதைகள் என் நண்பர்கள் எழுதியிருக்கக்கூடும். ****
-
- 5 replies
- 2.2k views
-
-
முத்து முத்து மாரியம்மா எங்கள் முத்து மாரியம்மா வந்து வினை தீர்த்துடுவாய் செல்லமுத்து மாரி அம்மா வேப்பிலைக் காரி அம்மா வேதனைகள் தீர்த்துடுவாய் எழுதிவைத்த வேண்டுதலை தீர்த்துவைக்கும் வெக்காளி நீ அம்மா மதுரையிலே மீனாச்சிதான் அம்மா வேண்டும் வரம் தந்துடுவாய் நீ அம்மா காஞ்சியிலே காமாச்சிதான் அம்மா கலக்கம் எல்லாம் நீக்கிடுவாய் நீ அம்மா காசியிலே விசாலாச்சிதான் அம்மா எம்மை எல்லாம் ஆட்சி செய்யும் தாயும் நீ அம்மா
-
- 5 replies
- 1.4k views
-
-
-
[size=4]வாழ்க்கை ஒரு போராட்டம் போராடும் வரை லட்சக்கணக்கான விந்தணுக்களுடன் சண்டையிட்டு போராடி தான் பிறக்கின்றோம் போராட்டத்தில் பிறந்து போராட்டத்தில் வளர்ந்து போராட்டத்தில் மடிவது தான் நம் வாழ்க்கை பிறப்பதற்கே லட்சக்கணக்கான அணுக்களை வென்ற நம்மால் வாழ்வதற்கான போராட்டத்தில் வெல்ல முடியாதா என்ன?!!! வாழ்ந்து தான் பார் நண்பா...[/size]
-
- 5 replies
- 10.2k views
-
-
கண்ணால் நுழைந்து கருத்தினில் பதிந்து எண்ணத்தில் நிறைந்து உள்ளத்தில் உறைபவள்
-
- 5 replies
- 691 views
-
-
நல்லூர் முன்றலில் எழுந்ததோர் வேள்வித் தீ கருகிப்போனதோர்... உன்னத தியாகம்! பசியை வென்ற எங்கள் பாலகனுக்கு... அன்று, பாரதம் செய்ததோர் மகா பாதகம்!! ஆறுநாள் விரதத்துக்கே வரமருளும் வேலவன் கூட அவன் கண்மூடும்வரை... கண்திறக்கவில்லை ! நல்லூர்க் கந்தனும் கருணையற்றவனானான் !! இந்திய வல்லூறுகள் செய்த பொல்லாத சதி தியாக தீபமொன்றை அணைத்தது விதி சிந்திய கண்ணீரில் மூழ்கியதே நல்லூரான் வீதி அகிம்சையே அறமென்ற இந்திய தேசம்... ஈழத்தில் செய்த முதல் நாசம் ! பார்த்தீபனின் பட்டினிப்போரால்... வெளுத்துப்போனது... பாரதத்தின் அகிம்சை வேஷம்! 'பஞ்ச வேண்டுதலோடு' பட்டினி கிடந்து போராடி... பார்த்தீபன் மடிந்த போதுதான்... மகாத்மாவுக்கும் புரிந்திருக்கும், கோட்சேயின் துப்பாக்கி…
-
- 5 replies
- 1.9k views
-
-
உவகை கொ(ல்)ள் மனம் உன்னை நினைத்து .. உயிரில் கலந்து நீரில் கலந்த உப்புபோல் .. என்னுள் என்றும் உறைத்து இருக்கும் பனி நீ .. என் வெப்பம் தாங்காமல் .. விலக கூடாது பெண்ணே .. யான் நேசிப்பது உன் இதய அறையில் ஒரு இடம் .. கிடைக்குமா என் கல்லறை கட்ட அங்கு என்றே .. இறுதிவரை உன் மூச்சுப்பட்டவது சிலவேளை நான் .. உயிர்தெழகூடும் உறங்கிய ஒரு சிறு விதையாய் .. நீ சிந்தும் கண்ணீரில் இருந்து நான் மெதுவா வளர ... உன்னுடன் வாழ்த்த காலத்தை நிழலா உனக்கு தர ... இருவரும் அடிக்கடி சந்தித்த குளத்தடி ஆலமரம் போல் .. நான் மட்டும் போரில் மரணிக்காமல் இருந்திருந்தால் .. காதல் வாழ்த்து இருக்கும் மங்கலமா .. நீனு ஏன் இப்பொழுது வாழவேண்டும் அமங்கலமா .. நல்லவர்கள் நாலுபேர் வாழ்த்த…
-
- 5 replies
- 948 views
-
-
மெதுவாகப் பேசலாம்... அரசியல் பேசினால்.. அடுத்த அறைச்சுவரும் கேட்குமாம்..ஏன்.. நமக்கு வம்பு... மௌனிகளாயிருப்போம்... யாரங்கே.. பேசவே பயப்படும் பேடிகள்.. இவர்கள்.. என்ற உண்மைகளை சத்தமாய்.. உள்ளே உறைப்பது.. வேறென்ன் செய்ய.. சத்தமாய் பேசிவிட்டால்.. கூட இருப்பவன்தான்.. குழி பறிக்கிறான் என்பது.. மரணத்தருவாயில் மனதறியும்.. தமிழன் காப்பியங்களிலும்.. இலக்கியங்களிலும்தான்.. உயர்வாகப் பேசப்பட்டிருக்கிறான்.. இன்றோ இழிநிலை நோக்கியல்லவா நடக்கிறான்... ஒப்பற்ற வீரன்.. தலைவனாய்க் கிடைத்தும்.. உருப்படத் தெரியாமல்.. கஞ்சாக்கும் காசுக்கும்.. சோரம் போன துரோகிகள் பாதி பதவிக்கும் பட்டத்திற்கும் பல்லிளித்த பாவிகள் பாதி.. …
-
- 5 replies
- 1.5k views
-
-
ღ♥அன்புள்ள காதலிக்கு ♥ღ♥ பூவுலகில் ஒரு மொட்டாக நான் விழ்ந்து விடலையாய் ஆன பின் என் கண் விழித்திரை விம்பத்தில் உணர்ந்தேன் உன்னை உன்னை பார்த்தாலே எனக்கு பேச்சும் வரவில்லை மூச்சுக்கு என்னவாச்சோ தெரியவில்லை நண்பனை கண்டவுடன் இதயத்தின் ஓர விளிம்பில் ஒரு வித நடுக்கம் ஆனால் உன்னை கண்டாலே மூளைக்குள் ஆயிரம் பூக்கள் பூக்கின்றன, நீ பார்வைகள் உதிர்த்து விட்டு செல்கையில் அது உடலை உருக்கி உயிரை அல்லவா கொல்கின்றது முத்து பற்களும் முறுகிய சுருள் மயிரும் பிராகச மின்னலை உதிரும் விழிகளும் தேன்வடியும் பேச்சும் மெழுகு பொம்மையாய் உடலும்..!! உன அழகை என்னவென்று சொல்வேன்!! அழகு என்ற வார்த்தைக்கு அகராதியில் பொருள் தேடியும் பயனில்லை நடமாடும் அக…
-
- 5 replies
- 1.6k views
-
-
பிறந்தநாள் திருவிழா பேருவகையின் ஒளிவிழா காரிருள் அகன்றது பேரொளி பிறந்தது- அவ் ஓரொளி மகிமையில் உவகையே நிறைந்தது வானமும் வையமும் வாழ்த்தியே மகிழ்ந்தது விண்ணக வேந்தனை மண்ணதில் வாழ்த்திடும் பிறந்தநாள் திருவிழா பேருவகையின் ஒளிவிழா தீபங்கள் கரமேந்தி தெய்வீக மனமேந்தி ஆனந்த உணர்வேந்தி அகமெங்கும் மகிழ்வேந்தி மனங்களில் அன்பேந்தி மனிதத்தை அகத்தேந்தி மழலையாய் மலர்ந்தநம் மகிமையின் தேவனின் பிறந்தநாள் திருவிழா பேருவகையின் ஒளிவிழா எதிர்காலம் சிறந்தோங்க எம் மண்ணும் தளைத்தோங்க வருங்காலம் வளமோங்க எம்வாழ்க்கையும் நலமோங்க வழியதன் வெளிச்சமாய் வாழ்வுக்கே அர்த்தமாய் ஒளியதன் மைந்தனின் உண்மையின் வேந்தனின் பிறந்தநாள் …
-
- 5 replies
- 3.9k views
-
-
இந்த கவிதையை வாசித்து விட்டு அவசரப்பட்டு பெண்ணியவாதிகள் என்னைத்திட்டவேண்டாம். நகைச்சுவையாக (dark comedy) நான் எடுக்க இருந்த ஒரு குறும்படத்திற்காக எழுதிய கவிதை. ஆனால் அப்படத்தை எடுக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டேன். சுயநலம் சுயநலம் சுயநலம் பெண்ணியத்தின் மறுபெயரே சுயநலம் கணவனுக்கு பணிவிடை செய்தால் கசக்கும் பிள்ளைகளை பராமரித்தால் புளிக்கும் மாமா மாமியைக் கண்டால் வயித்தைப்பிரட்டும் சுயநலம் மட்டுமே இனிக்கும் இனிக்கும் இனிக்கும்.
-
- 5 replies
- 1.2k views
-
-
பதில் கூறு....(கருணாநிதி) மூக்கின் மேலொரு கண்ணாடி போட்டே வருகிறாய் முன்னாடி... அடுக்கு மொழியில சொல்லாடி அவையை கலக்கிறாய் கில்லாடி.... வயசில போனாய் தள்ளாடி இருக்கிறாய் முதல்வராய் இன்னாடி..... தமிழுக்கு நீயே உயிர் நாடி வரல ஏன் எம் தமிழ் நாடி....??? யுத்த செலவோ பலகோடி செய்யுது சிங்களம் இன்றோடி.... உன் தமிழ் போகுது உயிர் ஆடி அதை காணா இருக்கிறாய் ஏன் பாவி....??? தோளில போடுறாய் நீ காவி அட தோளை கொடுடா நீ பாவி.... இதயம் வேறா வைச்சிருக்கா இன்னும் இரங்கா ஏனடா நீ இருக்காய்...??? உன் தமிழ் காக்க ஏன் ம…
-
- 5 replies
- 1.3k views
-
-
அனைத்துலக பெண்கள் நாள் பங்குனி 8. மகளிர்தினத்தை முன்னிட்டு நான் ரசித்த இந்த கவிதை இதோ. 'பெண்' பெண்ணே உலகின் ஆதாரம் அவளற்ற ஆண் வெறும் தளமற்ற கட்டிடம் உள்ளத் தவிப்புக்கு மருந்தும் உயிரின் துடிப்புக்குச் சமாதானமும் பெண்ணே இன்றி பெறுவதுதான் எப்படி கலையா கணினியா இலக்கியமா இராணுவமா நாட்டுத் தலைமையா விண்வெளிப் புரட்சியா எங்கே இல்லை அவள் சொல்லுங்களேன் உயிரைச் சுமக்கும் ஒரே உயிர் உலகில் பெண்தானே? துவண்ட மனதுக்கு மடிதந்து தலைகோத ஒரு பெண்ணற்றுப் போயின் மனித இனம் மொத்தமும் சுடுகாட்டுப் பிணங்கள்தானே எல்லாச் சுகங்களும் எங்கும் கிடந்தாலும் ஒரு பெண்ணில்லா பூமியில் சிறு பொழுதேனும் நகருமா அந்தப் பூமியும் கூட ஓர் …
-
- 5 replies
- 1.9k views
-
-
இதுவரை கணக்குகளை மட்டும் விளங்கபடுத்த என் கையோடு கூடிய பேனா முதல் முறை உனக்கு கவி எழுத என் கையோடு கூட்டியதில் வந்த கழித்தல்கள் இவை தயவு செய்து சிரித்துவிடாதே கலைந்து கிடக்கும் என் எழுத்துக்கள் இன்னும் கலைந்துவிடும் பல கோடி கவிதைகளை கண்டபின்னும் பசியாறவில்லை இன்னும் காதலுக்கு எப்படி எழுதப்போகிறேனோ உனக்கொரு கவி சிலையின் கையில் கொடுக்கப்பட்ட பேனாபோல் அசையாமல் மிதக்கிறேன் கற்பனைக்கடலில் எப்படி எழுதப்போகிறேனோ உனக்கொரு கவி எண்ணில் விட்டதில்லை எழுத்துக்களில் விடுவதுண்டு பிழை எப்படி எழுதப்போகிறேனோ உனக்கொரு கவி உனக்காய் கவி எழுத விடிய விடிய யோசித்ததில் இரவுகளின் நீளத்தை என்னால் இப்படித்தான் அளக்க முடிந்தது ந…
-
- 5 replies
- 1.7k views
-
-
(யாழ். முஸ்லிம்கள் பலவந்தமாக - துப்பாக்கிச் சனியன் மூலம் தமது பூர்வீக மண்ணிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு - இன்றுடன் ஆண்டுகள் இருபத்தியேழு! அதனை நினைவுகூர்ந்து - சமர்ப்பணமாக இக்கவிதை)-மீலாத் கீரன்-இரு மணிநேர அவகாசத்தில் - துரத்தியே விட்டார்கள்பெட்டி படுக்கையின்றி... பால்மா பால்போத்தலின்றிபாலகர் பசியார ஒருதுண்டுப் பாணுமின்றி.. .கால்களில் செருப்பு மாட்டக்கூடகால அவகாசந் தராமல்அக்கால நகரப் பொறுப்பாளன்ஆஞ்சநேயர் மேற்பார்வையில்துப்பாக்கிகளின் குழாய்முனையில்குப்பைகளாய் கூளங்களாய் யாழ். ஜின்னா மைதானத்தில்கூட்டிச் சேர்க்கப்பட்ட சருகுகளானோம். .பலவகைப் பொதுக்கூட்டங்களுக்கு களம் பல தந்து -தடகளப் போட்டிகளாலும் தடையறா கால்பந்து போட்டிகளாலும் வெற்றிகள் பல கண்ட…
-
- 5 replies
- 1.5k views
-
-
இரத்தத்தில் தோய்ந்த நிலா....... கவிதை..... ஓர் அம்மாவின் அழுகுரல் அவளருகே தலையிழந்த அத்தாயின் மகனின் சிதறுண்ட ஓர் உடல்..... அந்த அம்மாவைத் தேற்ற நம் போராளிகள் சிலர் எதற்கும் தேறாத மரணத்தின் அழுகுரல்..... நான் கண்டது கனவல்ல காணொளியில் அது நிஜம்.... இது ஓர் நாளின் ஒரு நிமிடக் காட்சி.... வன்னியில் என் நாளும் எத்தனை நிமிடங்கள் அங்கே என் நாளும் கொலையின் பின் கொலையாக எத்தனை மரணங்கள்.... காட்சிகளை காண முடியாமல் மூச்சு முட்டிடவும் முன் எழுந்து சென்று ஜன்னலின் திரையை விலக்குகிறேன்..... நிலாக் கூட நிறம்மாறி சிவப்பாகத் தெரிகிறது... வன்னியில் இரத்தத்தில் குளித்துவிட்டு எங்கள் பார்வைக்கு …
-
- 5 replies
- 1.1k views
-
-
Mohamed Nizous 80களின் தொடக்கத்தில் இருந்த தொடர்பு முறை தம்பிமார் அறிந்தால் நம்ப மாட்டார்கள். கட்டாரில் வேலை செய்ய கடல் தாண்டிப் போனமகன் ஆபத்து ஏதுமின்றி அங்கு போய்ச் சேர்ந்தாரென்று செய்தி தபாலில் வர செல்லும் ரெண்டு வாரம். ஓரத்தில் கலர் கலராய் உள்ள எயார் மெய்லை ஊருக்குள் கொண்டு வரும் ஆரைப் பற்றை போஸ்ட்மேனை தூரத்தில் கண்டதுமே துள்ளி ஓடிச் சென்று எம்புள்ள கடிதம் இருக்காப்பா எனக் கேட்டு அன்புள்ள தாய்மார்கள் ஆதங்கப் படுவார்கள் ஊரு விட்டு ஊரு சென்று உழைக்கின்ற வாப்பாமார் சேருகின்ற பணத்தை செல்லங்களுக்கு அனுப்ப போஸ்ட் ஒபிஸ் சென்று போர்ம் நிரப்பி பணம் கொடுப்பார். மணி ஓடர் கொண்டு வரும் மணி ஓசை கேட்டு குடும்பத்தில் சந…
-
- 5 replies
- 1.7k views
-
-
இனி யவளே என் இதயத்தில் நிறைந்தவளே இனி என்னுள்ளே எனக்கென்றோர் இதயமில்லை இனி நீ இன்றி என் வாழவிலு மொருத்தியில்லை இனி நீயேதான் என்றுமெந்தன் வாழ்வினெல்லை நீ இருக்கும் வரை தான் இனி நானிருப்பேன் நின் முகமலர் வினை தான் நிதம் பார்த்திருப்பேன் நின் கூந்தலில் மலர்ச் சரம் இனி நானாயிருப்பேன் நின் பாதங்கள் படும் நிலமும் நானா யிருப்பேன் நீ யெனக்கிந்த மண்ணில் வந்த வெண்ணிலா நீ எனை ஆளும் ஆட்சி உந்தன் கண்ணிலா நின் பேச்சினில் வரும் சுகம் இளவேனிலா நின் விழி வழி வரும் மொழி தான் காதலா
-
- 5 replies
- 911 views
-
-
தன்மானம் இழந்து தலைகுனிந்து தரையில் தமிழன் வீழ்ந்திட்ட நாள் இன்று ....... என்று இனி நாம் நிமிர்வோம் ??????? ஏகாதிபத்தியத்தின் எமாற்றலில் எமக்கானவை எல்லாம் இழந்தோம் இன்னும் தான் வரவில்லை எவரும் செருக்கிழந்து உருக்குலைந்து செல்வமெல்லாம் இழந்தபின்னும் சேர்ந்திடாதிருக்கிறோம் நாம் கொலைக்களங்கள் பல கண்டு கொடுமைகள் நிதம்கொண்டு அடிமைகளாய் வாழ்கையிலும் கோபமின்றி குரலின்றி கோழைகளாய் வாழ்கின்றோம் செங்குருதி தோய்ந்து செத்தழிந்து போனவர்கள் கந்தகக் காற்றில் கரைந்து போனவர்கள் உயிருடன் மண்ணில் புதைந்து போனவர்கள் அத்தனை பேரிடமும் மண்டியிட்டு மன்னிப்புக் கோருகிறேன் …
-
- 5 replies
- 1.2k views
-
-
அலாரச்'சேவலின் அலறல் கேட்டு அல[ரு]றும் எனது பொழுதுகள். 'ஷவர்'ச்சாரலின் தூரலில் நனைகையில் கரைந்து போகும் கனவுகள் திண்று போட்ட உறக்கத்தின் எச்சங்கள். நேற்றய இரவும்..... அலுப்புடன் சலித்துக்கொண்டே களட்டி எறிந்த இலட்சியச்சட்டைகளை மாட்டிக்கொண்டே காலையின் சாலையில் கலந்து போகிறேன். இதோ.... …
-
- 5 replies
- 1.3k views
-