கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
பிதற்றுகிறான் சுடலைமாடன் கோடை வெப்பம் கொடுமையாய் முடிந்து ஈர வரவை மண் எதிர்பார்த்து காத்திருக்க இளவேனில் முடிந்து இருள் எங்கும் படர தொடங்கும் போது உள் நுழைந்தான் சுடலை மாடன் யாழ் இணையத்தினுள் வந்தவனை வா என்று வாழ்த்தியது ஒரு சிலரே பெண் (பிள்ளை புனை) பெயரில் இங்கு தனில் வந்திருந்தால் வாழ்த்தயுள்ளார் பலபேர் பொல்லாத கவி வடித்து புகழ்வதாய் பொய்யுரைத்து வல்லோராய் தம்மை காட்டயுள்ளார் பலபேர் கன்னிகளின் கேள்விகளுக்கு கவிதையிலே பதில் சொல்லி தூங்காமல் இணையத்திலே அலைந்து தேடி பல இணைப்புகளை இணையத்தில் இணைத்திடுவார் ட்யூப் லையிட் வெளிச்சத்தில் யூடுபில் இல் படம் தேடி பக்குவமாய் பதிவு செய்து பக்கங்களை நிரப்பிட…
-
- 5 replies
- 2.1k views
-
-
தாய்மை என்னும் உறவுக்குள் இதம் தரும் உணர்வுகளுடன் அனுதினம் கலண்டர் கிழிக்கையில் அச்செய்தி கிடைத்திடுமோ – என ஏங்கத்துடன் இருந்த அவள், ஆண்டு பல கடந்தும் – அவள் புரிந்திட்ட நன்மையின் விளைவால் ஆண்டவனின் அருளால் அவள்தன் தங்க வயிற்றில் குட்டி நிலா துயில் கொள்ள தனியான இடம் அமைத்து பெண்மைக்கே பெருமை சேர்க்கும் தாய்மை என்னும் உறவுக்குள் நகர தொடங்கி விட்டாள் இன்று முதல்… வெறுமையாய் இருந்த அவள் முழுமையாயாய் ஆனாதினால் ஆனந்தத்தில் மூழ்கியே சரணடைகின்றாள் தன் கணவன் மடியில்…. பிரிவால் துவண்டு இருந்த உறவினர் முகங்களிலே ஆயிரம் மின்னல் அடித்திடும் புன்னகையின் பிரதிபலிப்புக்கள்.. குட்டி நிலவின் வரவை எண்ணி கலண்டரின் அருகில் காத்திருப்பத…
-
- 0 replies
- 1.1k views
-
-
இக்கவிதை கண்ணதாசன் தான் உயிரோடிருக்கும்போதே தன்னுடைய இறுதி ஊர்வலத்தின்போது சீர்காழி கோவிந்தராஜன் அவர்களது கணீரென்ற குரலினால் பாடப்பட வேண்டும் என்று இயற்றிக்கொண்டாராம் தேனார் செந்தமிழமுதைத் திகட்டாமல் செய்தவன் மெய் தீயில் வேக போனாற் போகட்டுமெனப் பொழிந்த திரு வாய் தீயிற் புகைந்து போக மானார் தம் முத்தமொடும் மதுக் கோப்பை மாந்தியவன் மறைந்து போக தானே எந் தமிழினிமேல் தடம் பார்த்துப் போகுமிடம் தனிமைதானே! கூற்றுவன் தன் அழைப்பிதழைக் கொடுத்தவுடன் படுத்தவனைக் குவித்துப்போட்டு நீ எரிவதிலும் அவன் பாட்டை எழுந்து பாடு! -'கவியரசு'கண்ணதாசன் உங்கள் இரங்கற்பாவை யாழில் இயற்றிவையுங்கள், பிறகு பாடுகிறோம்.............
-
- 3 replies
- 1.1k views
-
-
ஒரு காலை விடிவதற்குள் எத்தனைபேர் அடங்கிப் போனார்கள்!? மீதமிருந்த அழுகுரலையும் பகற்பொழுதுகள் அடக்கியது! ஏங்கித் தவித்தெல்லாம் அனாதையாய்க் கிடக்க, நாங்களும் அனாதைகளாய்த்தான் ஓடி வந்தோம்! வழியில் வந்த குழிகள் எல்லாம்..... அன்று, பதுங்கு குழிகளாகவும் புதைகுழிகளாகவுமே தெரிந்தது!.....இருந்தது! சின்ன மழைத் தூறல் கூட எம் பெருங்கண்ணீரை மறைத்தது! என்னவென்று சொல்ல.... எப்படிச் சொல்ல........??????? மானமுள்ள தமிழர் என்றிருந்த நிலை சொல்லவா? இல்லை... ஓடிவந்து மானம் விட்ட கதை சொல்லவா? கடைசிவரை எதையெதையோ நம்பியிருந்தோம்! ஒன்றுமே நடக்கவில்லை!! இப்பொழுதும் இருக்கின்றோம்.........! சொல்லும்படி ஒன்றுமில்லை!! எதிர்காலம் உட்பட எதுவுமில்லை எங்களிடம்! எதற்காகத் தொ…
-
- 7 replies
- 1.6k views
-
-
(நண்பன் ஒருவன் 2005இல் தனது முதற்காதல் பற்றிச் சொன்னதில் அவனது வலியினை கவிதையாக்கினேன்) என் சுவாச அறைகளின் சுழற்சியாய் இருந்தவளே ! காதல் வார்த்தையையே கௌரவப்படுத்திய கற்பூரமே. கடைசியாய் நீ தந்த கடிதம் என்றோ நீ சொன்னது போல கைகூடாத காதலின் சாட்சியாக.... உனது கண்ணீர் முழுவதையும் கட்டியனுப்பிய கடலது. கட்டுநாயக்கா நான் தாண்ட நஞ்சு தின்ற என் காதலியே ! எங்கேயடி இருக்கிறாய் ? கசங்கிய உன் கடைசிக் கடிதத்துடன்.... கண்ணீரைத் துடைத்தபடி நான்.... முதற் காதல் - நீ தந்த முத்து(த)க் கையெழுத்துக்கள் இன்னும் விரல்களில்.... வாசமடிக்கிறது. கூடப்பிறந்தவர்க்கும் , உன்னைக் காதலிக்க உயிர் தந்தவர்க்கும் அர்ப்பணமாய் என் காதல். அம்மாவி…
-
- 16 replies
- 1.2k views
-
-
-
(ஆறுவருடங்கள் முதல் எழுதிய கவிதையிது. இன்று பழைய தூசுதட்டியதில் கண்ணில் எட்டியதை இணைக்கிறேன்) ஞாபகங்களுடன் இன்றும்.... மீண்டும் சந்திப்பதாய் ஒரு மாலைநேர ஈரக்காற்றின் உவர்ப்போடு அழுததாய் ஞாபகம். தாஜ்மகால் பற்றியும் தலைசிறந்த காதல் இலக்கியம் தந்த ஜிப்ரான் பற்றியும் நிறையவே பகிர்தல்கள். ஒரு தாஜ்மகால் ஒரு முறிந்த சிறகு எங்களுக்காயும் எழுதப்படுமெனும் எண்ணமேயில்லை கௌரவப் பிரிதலாய் அது நீண்டதொரு தசாப்தம் நிறைவாகிறது. என்றாவது நினைவு வரும் சிறுவயது ஞாபகம் போல் எப்போதாவது வந்துபோகும் ஞாபகங்களுடன் இன்றும்.... காதலென்ற …
-
- 11 replies
- 1.6k views
-
-
இருள் சூழ்ந்த கரிய மேகத் திரளிடையே அடிக்கடி விட்டு விட்டு பொழிகின்ற செவ்வானத் தூறல்களாய் சீழ் கட்டிய இரத்த வாடைகள் நிரூபனின் நாற்று வலை தாங்குவோர் இன்றி தத்தளிக்கும் ஈழ மக்களை ஏந்திட நாமிருக்கிறோம் எனும் குரலுக்கு ஏதும் செய்திய முடியாதோராய் நாமிங்கு! நேற்று முத்துக்குமார் மூட்டிய தீ முது பெரும் விடுதலைத் தீயாய் கனன்று மிளாசி எரிந்தது, அதில் காங்கிரஸின் பொய் வேடத்தை தமிழகம் உணர்ந்து கலைஞரின் வாழ்விற்கும் காற் புள்ளி குத்தி வீட்டுக்கு அனுப்பி மகிழ்ந்திருந்தது! நிரூபனின் நாற்று வலை இன்று செங்கொடி அவர்கள்; முத்துக்குமார் வரிசையில்.... நீயும் போனாயா சகோதரி- இல்லை உன் கண் முன்னே காங்கிரஸின் நர்த்தன நடனத்தில் …
-
- 4 replies
- 1.2k views
-
-
தகிக்கும் தாபங்களின் உச்சக் கட்டமாய், தளர்வதற்காய்த் தள்ளாடும்... தேகங்களின் தேடல்களுக்கு, இடுக்களில் வடிந்தோடும் - மன்மத நீரில் நீந்தியபடியே... உயிர் பிரியும் போராட்டம்!!! பதின்மங்களில் பெற்றதை பலமுறை பழகிப் பார்க்க, தவறிய சந்தர்ப்பங்களை... இப்பொழுதேனும் முறையாய் நிறைவாய் பயின்றிடத் துடிக்குது, நெஞ்சம் - கொஞ்சம்! ஆனாலும் பக்கத்தில் இல்லையே... என் மஞ்சம்!!! "இயற்கையின் தவிப்பு இயற்கைதான் ! -அப்படியானால், அதை அடக்குதல் என்பது செயற்கையோ???"
-
- 21 replies
- 4.7k views
-
-
-
மெல்லிதாய் மேலெழும்பி நாள் தோறும் புலர்ந்து மறையும் வலையுலக நாழிகைகள் நடுவே தொலைந்து போகின்றன எங்களின் உணர்வலைகள்! நிரூபனின் நாற்று ஆண்கள் மட்டும் தான் அதிகம் எழுதலாம் என்பதும் அவர்கள் மட்டும் தான் தம் உணர்வுகளை உச்சுக் கொட்டலாம் என்று கூறுவதும் யார் இங்கு இயற்றி வைத்த சட்டமோ தெரியவில்லை! எங்களுக்குள்ளும் சாதாரண மனிதர்களைப் போன்ற மன உணர்விருக்கும், எம் உணர்வுகளுக்கு உருவம் கொடுத்து எழுதிட இணையம் வாய்ப்புத் தந்தது- ஆனால் எம் இடையே உள்ள பச்சோந்திகளும், நரிகளும் காழ்ப்பில் எம்மைக் கொல்கிறார்கள்; காம சுகம் தேடும் மோகத்தில் அலைந்து காறி உமிழ நினைக்கிறார்கள்! நாளைய பெண்களின் விடுதலை நம் உளத்தில் தோன்றும் இன்றை…
-
- 16 replies
- 1.9k views
-
-
செழுமலர் நிறைபொழில் சிதறிய திவலைகள் சொரிவது எனவிழி நீர்வழிய மெழுகெனும் குளிர்சுனை மலரது இதழ்களும் எழுமெழில் முகமதில் தீ பரவ தழுவிடு எனையென பருவமும் அவனிடம் கொலை கொலையென மனம்தான் அழிக்க எழுமிலை மறைகனி இதிலுறை பனிவிழும் எழிலுறும் வகையென இவளிருந்தாள் சொலுவென்ன குறையது சிறுவய துடையொரு சிலையெனும் வடிவெடு ஆரணங்கே கொலுவினி லிருஉரு உயிர்வர அருகினில் குறுநடை பழகிட வருமெனவே பொலபொலஎன உதிர் புதுவகை மலரெனும் பொலிவொடு இதழ்வழி மதுமினுங்க குலுங்கிடு மிவையென்ன கொடுமைகள் தருதென குடமிரு வளை யயல் கோபமிட்டான் அலைகடல்பெரியது அதைவிட இதுபெரும் அதிசய மலையுது நீரின்றியே மலையிடைஎழுமதி முகில்வரு மிடையினில் மகிழ்வென நீந்திடும் மதிகுலைய உலையிடு உயிரென ஊறிட…
-
- 0 replies
- 861 views
-
-
"சொந்தங்கள்" என்ற சொற்பதம் கழிவறைச் சேற்றுக்குள் புதைந்து ரொம்ப நாளாச்சு! அவர்களைத் தேடுவதைவிட என் வீட்டு குப்பைக் குழியில் நிறையவே கொட்டிக் கிடக்குது! சொல்லொன்று செயலொன்று... செய்ந்நன்றி மறந்தின்று... அவராடும் ஆட்டத்திற்கெல்லாம்..... ஆளும் நானில்லை... ஆடுகளமும் நானில்லை! ஆடிப்பார்க்க எனக்கும் ஆசைதான்! - ஆனால், அநியாயமாய்ப் போன அன்பென்ற ஒன்று, என்னோடு கூடிப்பிறந்ததாய்ப் பிதற்றுகின்றது இன்னும்! சொந்தமென்று ஒன்று என்னை ஓங்கி உதைத்து நான் வீழ்ந்தபோதும், நண்பனென்று சொல்லி உரிமையோடு என்னை தாங்கிப் பிடித்தது - நட்பு !!! என்னை நேசிக்கும் நட்புக்காய் உயிரையும் கொடுப்பேன்!!!!!!!!!!!!
-
- 2 replies
- 1.3k views
-
-
என் மகளே செங்கொடி....! *செங்கொடி* நீ செழித்து வேரூன்றி விழுதெறிந்து மானிட விடுதலையை வென்றிருக்க வேண்டிய வித்து நீ. ஏனடி பெண்ணே…? எரிந்தாய் நெருப்பில்….? அவசரப்பட்டு விட்டாய் மகளே..…! அண்ணன்களைக் காக்க நீ அணைத்த தீ அவர்களை வாழும்வரை வருத்தப்போகிற வலியல்லவா உனது தீ….! நீ வாழ்ந்திருக்க வேண்டியவள் வரலாறுகள் படைத்திருக்க வேண்டிய பலம் நீ. ஏனடி பெண்ணே….? இந்த அவசரம்….? உன்போல்வீரமும்மானிடப்பெறுமதியும்புரிந்தவர்கள் இவ்வுலகில்அதிகமில்லையடிமகளே…..! மாற்றங்கள் நிகழ உன்போன்ற மங்கையரும் மகனாரும் தேவையடி எங்களுக்கு….! அரசியல் புலிகளும் நரிகளும் உங்கள் உயிரில் தீமூட்டிக் கரியாக்கி வீர உரை நிகழ்த்தி இன்றோடு உன்ன…
-
- 4 replies
- 1.4k views
-
-
பள்ளிப்பருவத்திலே சித்திரம் வரைவதில் வாலி அவர்கள் மிகவும் முனைப்பாக இருந்தாராம். அப்போதைய காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஒவியத்தில் கரை தேர்ந்து இருந்தவர் ஓவியர் “மாலி”. அவரது தீவிரமான ரசிகரான இவருக்கு, பள்ளித் தோழன் பாபு என்பவன் ” வாலி ” என்னும் பெயர் சூட்டி ஓவியத்தில் மாலியைப் போலவே நீயும் ஒரு கலக்கு கலக்குவாய் என்று வாழ்த்தினானாம். அப்போது அவர் பாரதியாரின் ஒவியம் ஒன்றை வரைந்து அதன் கீழ் வாலி என்று கையொப்பமிட்டு அதைத் தனது தமிழ் வாத்தியாரிடம் காட்டினாராம். அதைப் பார்த்துப் பாராட்டிய தமிழ் வாத்தியார் “உனக்குத்தான் வாலில்லையே, அப்புறம் ஏன் வாலி என்று பெயர் சூட்டினாய்?” என்று கேட்டாராம். அதைக் கேட்ட சுற்றி நின்ற மாணவர்கள் சிரித்து விட்டார்களாம். அப்போது ஒரு துண்டுக் காகித…
-
- 4 replies
- 1.9k views
-
-
எல்லாமே வீணாய்ப் போச்சு! இன்னும் என்ன இருக்கு? இதைச் சொல்லிச்சொல்லியே சமாதான புறாக்களாக பூரிப்போடு பறக்கின்றோம்! வேண்டும் என்று எதைக் கேட்டு நின்றோமோ; இன்னும் ஆரம்பத்திலேதான் நிற்கின்றோம்! தேவையென்று எதைத் தேடினோமோ; அதைத் தொலைத்துவிட்டுத்தான் தேடுகின்றோம்! என்னதான் தேவை எங்களுக்கு....? ஒன்றுமே தெரியவில்லையா உங்களுக்கு??? என்ன மனுஷரடா நீங்கள்??? அயல்நாடாம் தமிழ்நாட்டின் கொதிநிலை கூட, உங்கள் கண்ணீரில் இல்லையே! அச்சச்சோ... தவறாக சொல்லிவிட்டேனோ??? கண்ணீர் வந்தால்தானே...அதைப்பற்றி பேசமுடியும்! தமிழராய் இல்லாட்டியும் பரவாயில்லை... குறைஞ்சது, மனுஷராத்தன்னும் ஒருமுறை நினைச்சுப் பாருங்கோ! நடந்ததை எல்லாம்.... நடக்கின்றவை எல்லாம்... நடக்கப்…
-
- 26 replies
- 2.5k views
-
-
சற்று ஆறுதல்…! -------------------- கடந்த சில நாட்கள் கடப்பதே துயரமாய் கடந்து போனது கண்களில் நீருடன் திரண்ட தமிழகம் தீர்ப்பினை மாற்றென நீதியைக் கோரி நீண்டது தெருக்களில் தமிழகத் தாயோ தன்னால் முடிந்தததை அவையிலே செய்தார் அரியதோர் நகர்வாய் அமைந்தது கண்டோம்! மூவரின் உயிரை முழுதுமாய்க் காத்திட உலகம் எங்கும் வாழ்கின்ற தமிழரே உறுதியோடு குரல் கொடுப்பீரா? காப்பது என்ன மூவரின் உயிரா உயிருடன் இணைந்து நீதியுமல்லவா? நீதியை காத்திட நெருப்பென எழுகின்ற தமிழக உறவே பற்றிக் கொள்கிறோம் நன்றியுடனே! நாதியற்றவன் தமிழன் என்பதை நாளைய சந்ததி எதிர்கொள்ளலாமா? மீட்கும் வரைக்கும் நீதியைக் கேட்போம் நீதியை மறுத்தால் தமிழனுக்…
-
- 8 replies
- 1.2k views
-
-
-
என் தொண்டைக்குழியில் இறங்க மறுக்கும் சோறு - எனக்கு தூக்குக் கயிற்றை மட்டுமே ஞாபகப்படுத்துகின்றது! நீதி தேவதையின் கண்களை... இப்பொழுதாவது, திறந்து விடுங்களேன்!!!! இல்லையெனில், மூவரோடு நால்வராய்... அவளையும் சேர்த்துத் தூக்கில் போடுங்கள்! அன்று, கண்ணகியின் கோபம் மதுரையை எரித்ததாம்!? இன்னும் நம்புகின்றோம்...!!! அது உண்மையோ... இல்லையோ....!!!??? நிச்சயமாக மீண்டும் எரிக்கும்!!! நீதியின் கூக்குரலும்... அழுகுரலும்!!!
-
- 4 replies
- 1.2k views
-
-
ஊரெல்லாம் வீடுகள் இருந்தது வீடெல்லாம் மனிதர்கள் இருந்தார்கள் தேர்முட்டியில் ஆட்கள் இருந்தார்கள் திருவிழாக்களில் கூட்டம் இருந்தது. நாடுமாற நாங்கள் திசைமாறி வந்தோம். ஊரெல்லாம் வீடுகள் இருக்கிறது வீடுகள்தான் பாழ்பட்டுக் கிடக்கிறது சிலவீடுகள் கூரையில்லாது தவிக்கிறது சிலவீடுகள் சுவருடைந்து தவிக்கிறது சிலவீட்டில் காட்டாக்காலி வாழ்கிறது வேலிகள் இல்லாது வளவுகள் தவிக்கிறது துகில் போனபின் அது அம்மணமாய் துடிக்கிறது வாடகை கொடுத்துக் குடியிருந்தார் அப்பொழுது வருமானம் வேண்டிக் குடியிருக்கிறார் இப்பொழுது காலம் மாறி இருக்கிறது. கனடாவுக்கு கதைத்து முடிவெடுக்கிறார். ஆண்டவனைத் துாக்குவதற்கே ஆள்பிடிக்கப் அலைகிறார்கள். அகப்பட்டால் அவர் சகடையில் ஊர்வலம் …
-
- 5 replies
- 1.3k views
-
-
காணும் காட்சியெல்லாம் கறைபடிந்த சிறைச்சுவர்கள் .கனவில் வருவதெல்லாம் அம்மா உன் கண்ணீர் கன்னங்கள். இதழால் ஈரம்செய்து நான் இனிக்கத் தந்த முத்தங்களை கண்ணீர் ஓடி ஓடி கரைத்தே விட்டதாம்மா? குழந்தைப் பருவத்தேநீ கொஞ்சி மகிழ்ந்த தெல்லாம்நினைவில் வந்துவந்துநிதமும் வதைக்குதாம்மா? பாசம் காட்டி என்னை - நடைபழக்கிய இடங்களெல்லாம் தீயாய் நினைவில் நின்றுமனதை கருக்குதாம்மா? கண்ணீராலும் கரையாதகவலைகள் கூடிக்கூடி - உன்நெஞ்சம் புண்ணாகநிதமும் வதைக்குதாம்மா? என்னம்மா நான் செய்ய? இரும்புக்கம்பிகளின் விலகாத பூட்டுகளால் என்னை விடுதலைசெய்துவிடமுடியாமல் இருக்கிறதே. பந்தம் பாசமெல்லாம் தூரத்தில் கிடந்தாலும் சொந்தம் என்று சொல்லிக்கொண்டு நீ சிறைக்கு வருவதால்தான்உறவுகள் …
-
- 3 replies
- 772 views
-
-
என்னடா வாழ்க்கையிது??????? அடிக்கடி வாயில வாற வார்த்தை இது! உண்மையில் அதுதான் உண்மை! ஏனென்று தெரியவில்லை! எதற்கென்றும் புரியவில்லை! என்னதான் நல்லது செய்தாலும் - கடைசியில என் தலையிலதான் வந்து விழுகுது! நல்லவனாய் வாழ்வதும் ... வாழ நினைப்பதும் ... எவ்வளவு கஷ்டம் என்பது ... இப்ப புரியுது!!! தன் கதை வசனத்துக்கு... என் தலையில, தலையெழுத்தாய் எழுதிவிட்டுப் போனவனை... இன்னும் தேடுகின்றேன் நான்! என் கையில் கிடைத்தால் தொலைந்தான் அவன்!!! "கடவுள்" எனும் நபரைப் பார்த்தால் எனக்குச் சொல்லுங்கள்! உங்கள் சார்பாகவும் ஏதாவது இருக்கும்! சேர்த்துச் செய்துவிட்டு... நான் போகின்றேன் நரகத்துக்கு!!! இந்த உலகத்தில் வாழுவதைவிட நரகம் எவ்வளவோ மேல்!
-
- 4 replies
- 1.2k views
-
-
சிங்களவன் உயிரணுவில் உதித்து.. சிங்களத்தி கருவறையில் வளர்ந்து அவள் முலை பிடித்து உணவருந்தி சிங்கள தேசத்தில் உருவானவன்..! ராஜபக்ச வம்ச வழியில்.. கோத்த பாய எனும் ராஜ கொலைஞனின் கொலைக் களத்தில் கோரம் செய்ய கற்றுக் கொண்டவன். தமிழ் பெண்கள் கற்பு எடுப்பு - பின் அவள் முலை அறுப்பு கோத்தாவின் கட்டளை...! பிசகாமல் அதை செய்து முடிப்பதே என் பிறவிக் கடன். முள்ளிவாய்க்கால் என் பயிற்சிக்களம்.. நந்திக்கடலில் எனக்கு பட்டமளிப்பு.. தமிழர் தலை கொய்து - அதில் பட்டம் பெற்றவன். பயங்கரவாதப் போர் முழக்கம்... கழுகுகள்.. மயில்கள்.. றகன்கள்.. பீனிக்ஸ்கள்.. எல்லாம் கைகோர்க்க.. சிங்கத்தின் கையால் புலி அழிப்பு அ…
-
- 8 replies
- 2.2k views
-
-
இதுவா உங்கள் நியாயம்? ------------------------- உண்மையற்ற பொய்மையுலகே உன்னிடம் நேர்மையிருந்தால் எங்கள் உறவுகள் அழிந்திருப்பார்களா? அழிக்கப்படுமிந்த நிலையிது சரியா? எண்ணெயிருப்பதால் போராளிகள் எதுவுமற்றதால் பயங்கரவாதிகள் என்னதானோ உங்கள் நியாயம்! திரிப்பொலி வீழ்ந்தது போராட்டமாம் ஈழம் மீட்பது பயங்கரவாதமாம் நியாயமற்ற உலகிடமல்லவா துடியாய் துடித்து நீதியைக் கோரி எங்கள் தமிழினம் உலகிலலைந்தது எங்கள் அலைவுகள் என்றோ ஒருநாள் உங்களைக்கூடச் சுட்டெரிக்கலாம் அப்போதுகூடச் சுரண்டலைப் பற்றியே உங்கள் சிந்தனை அளக்க முனையலாம் ஆதிக்க சக்திகள் நிலைப்பதுமில்லை அன்னியராதிக்கம் நிற்பதுமில்லை அதுவரை நாங்கள் ஓய்வதுமில்லை. ஓய்வொன்றுவரலாம் உலகமழிந்திடில் …
-
- 7 replies
- 1.2k views
-
-
என் கண்கள் கெட்டுவிட்டது எங்கே சூரியன். இன்றுகாலை அம்மாவுடனான தெலைபேசி உரையாடல். அவர்சொன்ன புதினத்திலொன்று கல்வளை கொடியேறிட்டுது கதைத்து முடித்ததும் என் குரங்கு எண்பதுகளிற்கு தாவியது கல்வளைப்பிள்ளையாரின் காற்றோட்ட மண்டபம் எங்கள் நண்பர் கூட்டம் என் கையிலோர் கரித்துண்டு கீறத்தொடங்கினேளன் சிலாபத்தில் தொடங்கி காங்கேசன்துறையில் வழைந்து மட்டக்கிளப்பில் நிறுத்தினேன். பக்கத்திலிருந்தவன் சொன்னான் அம்பாறையும் எங்கடைதான் அது முஸ்லிம்களிற்கு இது இன்னொருவன். அவங்களும் தமிழர்தானே அம்பாறையும் எங்கடைதான் அம்பாறைவரை வரைந்தேன் கதிர்காமமும் எங்கடைதானாம்.. இழுத்தான் இன்னொருத்தன். இப்போதைக்கு இது போதும் பிறகுபாக்கலாம். பண்டத்தெருப…
-
- 3 replies
- 1.4k views
-