வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5551 topics in this forum
-
தேவதாசி பாரம்பரியமும் ஆரம்பக்கால தமிழ் சினிமாவும் தியடோர் பாஸ்கரன் தென்னிந்தியாவின் முதல் திரைப்படமான ‘கீசகவதம்’ (1916) தொடங்கி ஏறக்குறைய பதினாறு ஆண்டுகாலம் நீடித்த மௌனப்படக் காலத்தில் (1916 - 1931) சென்னையில் மட்டும் 120க்கும் மேற்பட்ட முழுநீளப் படங்கள் தயாரிக்கப்பட்டன. இவை தவிர மைசூர், நாகர்கோவில், வேலூர் போன்ற இடங்களிலிருந்தும் சில படங்கள் வெளிவந்தன. ஆனால் எஞ்சியிருப்பது ஒரே ஒரு படம்தான். நிலைப்படங்கள்கூட இல்லை. அந்தச் சலனப்படங்களைப் பற்றி அச்சில் வந்த, செய்திகள், விமர்சனம் போன்றவையும் அரிதாயிருக்கின்றன. சலனப்படத் தயாரிப்பில் பங்கெடுத்த சிலரையும் நடிகர்களில் சிலரையும் 1970களில் என்னால் சந்திக்க முடிந்தது. எனினும் இந்தப் பொருள்பற்றி நம்மிடம் இருக்கும் மு…
-
- 0 replies
- 584 views
-
-
மைத்திரேயி ராமகிரிஷ்ணன் | இந்த வருடத்துக்கான சிறந்த நடிகர்களில் ஒருவர் – நியூ யோர்க் ரைம்ஸ் பத்திரிகை மிசிசாகா, ஒன்ராறியோவைச் சேர்ந்த 18 வயது தமிழ்க் கனடிய நடிகையான மைத்திரேயி ராமகிரிஷ்ணன், நியூ யோர்க் ரைம்ஸ் பத்திரிகையின் 2020ம் ஆண்டுக்கான சிறந்த நடிகைகளில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மிண்டி கேலிங்கின் இணைத் தயாரிப்பான Never Have I Ever என்னும் நெற்ஃபிளிக்ஸ் நகைச்சுவைத் தொடர் ஒன்றில் நடித்துப் புகழ்பெற்ற மைத்திரேயிக்கு இதுவே முதல் நடிப்பு அனுபவம். 15,000 இளம் நடிகைகளுடன் போட்டி போட்டு இத் தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் சந்தர்ப்பத்தை அவர் பெற்றிருந்தார். Never Have I Ever தொடரின் முதலாவது அங்கம் முடிவடைந்து தற்போது இரண்டாவது அங்கத்துக்கான (S…
-
- 0 replies
- 339 views
-
-
சிங்கமுத்துவை தவிர தன் பழைய கூட்டத்தை அப்படியே மீண்டும் உள்ளே கொண்டு வந்துவிட்டாராம் !வடிவேலு. 'இந்திரனே... சந்திரனே...' ஜால்ராக்களும் கூடவே செட்டுக்குள் இறக்கப்பட, தெனாலிராமன் ஷுட்டிங் எங்கிலும் ஒரே ஜிங்சாக் சப்தம்தான் என்கிறார்கள். இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தை இயக்கும்போது 'பங்காளி பங்காளி' என்று வடிவேலுவும், தம்பி ராமய்யாவும் பாசத்தோடு பழகி வந்தார்கள். படம் பப்படா என்றானதும்தான் தனது சொந்த வாயை திறந்து சோக கீதம் வாசித்தார் தம்பி. 'என்னைய ஷுட்டிங் எடுக்கவே விடல என்னோட பங்காளி. அவரே ஷாட் வச்சார். அவரே டயலாக் சொல்லிக் கொடுத்தார். அவரே மானிட்டர் பக்கத்துல ஒக்கார்ந்து சரி தப்பு சொல்லிக்கிட்டு இருந்தார்' என்று இவர் சொல்ல சொல்ல, படத்தின் தோல்வி செய்தி அப்படியே வடிவேல…
-
- 0 replies
- 534 views
-
-
பொங்கல் படங்கள் பார்த்தீர்களா? கோவில் பார்த்தேன் நன்றாக இல்லை ..... 10 வெள்ளி நஷ்ட்ம்
-
-
இதனை நகைச்சுவைப் பகுதியில்தான் இணைக்க வேண்டும்...ஆனால் சினிமா என்பதால் இங்கு இணைக்கின்றேன் ====================================== "நான் ஓரு பிழைக்கத் தெரியாத அரசியல்வாதி!" ம.கா.செந்தில்குமார் படம்:உசேன் "குறளரசன் ரெடி சார். அடுத்த ஹீரோவா ஆட்டத்துக்கு ரெடி சார். நான் ஹீரோவா நடிக்கிற 'ஒரு தலைக் காதல்' முடிஞ்சதும், குறளரசன் படம் ஆரம்பிச்சிரும். குறளரசன் இப்ப ஜிம்முக்குப் போறார். நானும் போறேன் சார். அவர் டயட்ல இருக்கார். நானும் டயட்ல இருக்கேன் சார். வந்து ஜெயிச்ச சிம்பு வுக்கும் நான் போட்டி. வரப்போற குறளரசனுக்கும் நானேதான் போட்டி. 1980-ல் 'ஒருதலை ராகம்'. 2010-ல் 'ஒருதலைக் காதல்'. 30 வருஷமா சினிமாவில் தாக்குப்பிடிச்சு …
-
- 1 reply
- 1k views
-
-
நமீதா விட்ட டுபாக்கூர் கொஞ்ச நாளைக்கு முன்பு நமீதா ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார். கை விரலில் போட்டிருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரம் கடலில் காணாமல் போய் விட்டதாக அவர் போட்ட போட்டில், கோவை பிரதர்ஸ் பட யூனிட்டே ஆடிப் போனது. காதலர் பரத் கபூர் போட்டு விட்ட மோதிரம் அது என்று வேறு சொல்லி எல்லோரது ஹார்ட்டையும் டச் செய்தார் நமீதா. ஆனால் அது மிகப் பெரிய டுபாக்கூராம். அதை நமீதாவே தனது திருவாயால் ஒத்துக் கொண்டுள்ளார். நம்ம நமீதா வைர மோதிரத்தை தொலைத்துவிட்டாரே ஆறுதலாக நாலு வார்த்தை சொல்லி விட்டு வருவோம் என்று நினைத்த கோலிவுட்டைச் சேர்ந்த நமீதாவின் அன்பாளர் ஒருவர், ஷýட்டிங் ஸ்பாட்டுக்குப் போய் ஆறுதல் கூறியுள்ளார். அப்போது லேசான…
-
- 0 replies
- 1k views
-
-
சந்திரபோஸ் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டார். அதற்காக, அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 24ம்தேதி அவருடைய உடல்நிலை மோசமானதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். மேலதிக புகைப்படங்கள் பார்க்கவும்
-
- 1 reply
- 801 views
-
-
ஈரான் இயக்குனர் கேள்வி… ஏ.ஆர். ரகுமான் பதில்… வசந்த பாலன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, அனைகா, நாசர் மற்றும் பலர் நடிக்கும் ‘காவியத் தலைவன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் சஷிகாந்த் ஒருவர் விடாமல் நன்றி கூறி நீ…….ண்டதொரு பேச்சை வழங்கினார். பொதுவாக ஏ.ஆர்.ரகுமான் இப்படியான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்வது அபூர்வம் என்பதால் அனைத்து பத்திரிகையாளர்களும் ரகுமான் பேச்சைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தனர். இரண்டு மணி நேரம் கடந்த பிறகு கடைசியாகவே ரகுமான் பேச அழைக்கப்பட்டார். அவர் பேசியது சில வரிகள்தான் என்றாலும் அதில் இருக்கும் அர்த்த…
-
- 5 replies
- 759 views
- 1 follower
-
-
இந்த சமுகத்தில் பெண்கள் ஓர் இரவை தனியாக கடக்க முடியுமா..!? - 'எஸ்.துர்கா' படம் எப்படி? காதலனுடன் ஊரைவிட்டு வெளிவரும் பெண் ஓர் இரவைக் கடக்க முடிகிறதா? இந்தச் சமூகம் பகலைப் பார்க்க விடுகிறதா? என்பதை 90 நிமிட த்ரில்லராக சொல்லும் படம் 'எஸ்' துர்கா. மலையாள மாற்று சினிமாவின் அசல் முகம் என வர்ணிக்கப்படும் இயக்குநர் சனல்குமார் சசிதரன் இயக்கத்தில் வந்திருக்கும் இப்படம் தியேட்டரில் ரிலீஸாகும் முன்பே உலகத் திரைப்படவிழாக்களில் கவனம் ஈர்த்தது. கேரளாவின் ஏதோ ஒரு மூலையில், இரவு நேரம் ஆள் அரவமற்ற ஒரு நெடுஞ்சாலையில் சுமார் 25 வயது துர்கா (ராஜ்ஶ்ரீ தேஷ்பாண்டே) தனது காதலனுக்காக கையில் பையுடன் காத்திருக்கிறாள். அவசர அவசரமாக வரும் கபீர்(கண்ணன் …
-
- 0 replies
- 498 views
-
-
தமிழக முதல்வரை சந்திக்க விரும்பும் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு சென்னையில் வரும் 15ஆம் தேதியன்று பிரபல டைரக்டர் ஷங்கர் இயக்கியுள்ள 'ஐ' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதன் சிறப்பு விருந்தினராக பிரபல ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னருமான அர்னால்ட் ஷ்வாஸ்நெகர் கலந்துகொண்டு ஆடியோவை வெளியிடுகின்றார். தமிழக முதல்வரைப் பற்றிக் கேள்விப்பட்ட அர்னால்டு ஷ்வாஸ்நெகர், அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்து அவரது குழுவின் மூலம் தலைமைச் செயலகத்திற்கு ஒரு கோரிக்கையை அனுப்பியுள்ளார் என்று 'ஐ' படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கார் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனிடையில், இந்தியாவின் சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்த்தும் இந்த விழாவில் கலந்துகொள்ள சம்மதித்த…
-
- 4 replies
- 603 views
-
-
உதிரன் சென்னை ஒரு கதைக்காக ஒருவர் எந்த எல்லைக்கும் செல்லத் துணிந்தால் அதுவே 'K-13'. அருள்நிதி படம் இயக்கத் துடிக்கும் ஓர் இயக்குநர். ஷூட்டிங் தொடங்கிய 10 நாளில் அவரது படம் டிராப் ஆகிவிடுகிறது. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் அருள்நிதி மனநல நிபுணரிடம் கவுன்சிலிங் செல்கிறார். அந்த சூழலில் நண்பன் ரமேஷ் திலக் இரண்டாவது படம் இயக்க ஒப்பந்தமாகிறார். அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக ரமேஷ் திலக், அருள்நிதி உள்ளிட்ட சில நண்பர்கள் பாரில் மது அருந்துகின்றனர். அங்கு வரும் எழுத்தாளர் ஷ்ரத்தா ஸ்ரீநாத் அருள்நிதியைச் சந்திக்கிறார். இருவரும் ஷ்ரத்தாவின் வீட்டுக்குச் செல்கின்றனர். மறுநாள் காலையில் பார்த்தால் அருள்நிதி நாற்…
-
- 0 replies
- 746 views
-
-
Published:Yesterday at 1 AMUpdated:Yesterday at 1 AM பி.எச்.அப்துல் ஹமீது Join Our Channel 4Comments Share இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட அப்துல் ஹமீது, கொழும்பு சர்வதேச வானொலி நிலையத்தின் வர்த்தக ஒலிபரப்பில் அறிவிப்பாளராகப் பணியைத் தொடங்கியவர். கணீர் குரலும் தெளிவான தமிழ் உச்சரிப்பும் இவரை கொழும்பிலிருந்து தமிழுக்குக் கூட்டி வந்தது. சன் டிவி, ராஜ் டிவி, கலைஞர் டிவி என ஒரு ரவுண்ட் வந்தவர் ஏராளமான மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்துள்ளார். தமிழ் உச்சரிப்புக்காகவே தொலைக்காட்சிகள் போட…
-
- 1 reply
- 278 views
-
-
நேற்று பிரணயம் என்கிற மலையாளப் படத்தை இரண்டாவது முறையாக பார்த்தேன். ஒரு பெண்ணுக்கும், இரு ஆண்களுக்குமான காதல் கதை. ஒருவருக்கு ஒருமுறைதான் காதல் வரும், ஒரே நேரத்தில் ஒருவர் மேல்தான் காதல் வரும் என்கிற வாதங்களை எல்லாம் படம் காலி செய்கிறது. முழுக்க முழுக்க பெண்ணின் பார்வையில் படம் நகர்வதும், மூவரின் கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்ட விதமும் படத்தை அழகாக நகர்த்தியிருக்கிறது. ஜெயப்பிரதா, விவாகரத்து பெற்றுவிட்ட தன் முதல் கணவன் அனுபம் கெரை நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு எதேச்சையாக சந்திக்கிறார். அந்த அபார்ட்மெண்டில் இருக்கும் தன் மகன் குடும்பத்தோடு வசிக்க ஒரு மாதத்திற்கு முன்புதான் அங்கு வந்திருக்கிறார் அனுபம். ஜெயப்பிரதாவுக்கு தத்துவப் பேராசிரியரான மோகன்லாலோடு இரண்டாவது திருமணமாகி ஒ…
-
- 2 replies
- 2k views
-
-
ஆத்தா... நான் பாஸ் ஆயிட்டேன் என்று ஓடிவந்த ஸ்ரீதேவியை யாராலும் மறக்க முடியாது. அதன் பின் வந்த படங்களிலும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து தன் ரசிகர்களின் மனதில் அழுத்தமாக பதிந்துவிட்ட ஸ்ரீதேவிக்கு இன்னும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த அளவிற்கு புகழ்பெற்ற நடிகையின் அடுத்த குறிக்கோள் தன் மகளையும் தன்னைப் போல ஒரு நடிகையாக கொண்டுவர வேண்டும் என்பது தான். ஸ்ரீதேவி இந்தியிலும், 1970 மற்றும் 80களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். பின்னர் பிரபல இந்தி தயாரிப்பாளர் போனிகபூரை மணந்து மும்பையில் செட்டில் ஆனார். ஸ்ரீதேவிக்கு ஜானவி, குஷி என இரு மகள்கள் உள்ளனர். இதில் ஜானவியை சினிமாவில் நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார். இதற்காக தமிழ், தெலுங்கில் கதை கேட்கிறார். …
-
- 10 replies
- 3.4k views
-
-
பொதுவாகவே ஒரு தனிமனிதனின் வருமானம், சொத்துக்கள், வாழ்க்கையை தோண்டியெடுத்து செய்தியாக்குவது அருவெருப்பான ஒன்றாகவே பார்ப்பதுண்டு. இங்கே வடிவேலுவின் இந்த பிரமாண்டம்பற்றி பகிர்வதற்குகாரணம், வாழ்க்கையின் அடிமட்டத்தின் கீழிருந்து ஒருவர் தனது ஒப்பற்ற திறமையினால் எவ்வளவு உயரத்திற்கு வந்தார் என்பதை காண்பிக்கவே.
-
- 0 replies
- 252 views
-
-
பீமா படத்தில் நான் சாவது போல நடித்தது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி விட்டது. எனவே இனிமேல் இதுபோன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் திரிஷா. சீயான் விக்ரமும், திரிஷாவும் நடித்த பீமா படத்தில், திரிஷாவை சுட்டுக் கொல்வது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இது அவரது ரசிகர்களுக்கும், குடும்பத்தினருக்கும், தோழியருக்கும், நட்பு வட்டாரத்திற்கும் பெரும் அதிருப்தியைக் கொடுத்து விட்டதாம். இப்படியெல்லாமா நடிக்க சம்மதிப்பது, இனிமேல் இதுபோல நடிக்கக் கூடாது என்று அனைவரும் திரிஷாவை வலியுறுத்தினார்களாம். குறிப்பாக அவரது அம்மா உமாவுக்கு திரிஷாவின் இறப்புக் காட்சியைப் பார்த்து அழுகையே வந்து விட்டதாம். இதனால் இனிமேல் இறப்பது போன்ற காட்சியில் நடிப்பதில்லை என்ற முடிவுக்க…
-
- 9 replies
- 1.9k views
-
-
நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து சரத்குமார், ராதாரவி நீக்கம்? சென்னை: நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் ஆகியோரை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. நடிகர் சங்கத்தின் முன்னாள் அறங்காவலர்களாக இருந்த சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாகவும், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் நடிகர் சங்கம் சார்பில் கடந்த 3-ம் தேதி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், நடிகர் சங்க செயற்குழு கூட்டம் இன்று (14-ம் தேதி) நட…
-
- 0 replies
- 285 views
-
-
[size=2]சோகத்தை மறக்க சினிமாவும் எனது குடும்பமும்தான் எனக்கு பெரும் உதவியாக உள்ளது என்கிறார் நயன்தாரா. [/size] [size=2] சிம்புவை காதலித்து பிரிந்த நயன்தாரா, அதன்பின் பிரபுதேவாவை காதலித்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ள தயாராக இருந்தனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திடீரென பிரிந்தனர். இது குறித்து அதிகம் பேசாமல் இருந்தார் நயன்தாரா. இந்நிலையில் ஆந்திர அரசின் நந்தி விருதுக்காக அவர் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார். ஸ்ரீராம ராஜ்யம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருதை அவர் பெற உள்ளார். [/size] [size=2] இது குறித்து நயன்தாரா கூறியதாவது: [/size] [size=2] ஸ்ரீராம ராஜ்யம் படம் நான் எதிர்பார்க்காமல் எனக்கு கிடைத்தது. கவர்ச்சி வேடங்களில் இருந்து ஒதுங்கி, கு…
-
- 3 replies
- 678 views
-
-
சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில சர்ச்சைகளுக்கு பின், வெற்றிகரமாக, தன் இரண்டாவது இன்னிங்சை துவக்கியுள்ள, நயன்தாரா, சமீபத்தில் தெலுங்கில் வெளியான, “கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்என்ற படத்தை, பெரிதும் நம்பியிருந்தார். இந்த படத்தின் மூலம், தெலுங்கில், உச்சத்துக்கு போய் விடலாம் என, நினைத்திருந்தார். ஆனால், படம், ஊற்றிக் கொண்டது மட்டுமல்லாமல், இதில், நயன்தாராவின் நடிப்பு, அவ்வளவாக, ரசிகர்களை ஈர்க்கவில்லை. விமர்சனங்களும், நயனுக்கு எதிராகவே வந்தன. இதனால், கவலையடைந்துள்ளார், அவர். “என்னுடைய திரையுலக வாழ்க்கையை, ஏதாவது ஒரு படத்தை வைத்து, முடிவு செய்வது சரியல்ல. பல படங்கள், இன்னும் கைவசம் உள்ளன. அவை அனைத்துமே, நல்ல கதையம்சம் உடைய படங்கள். அந்த படங்கள் வெளியான பின் பாருங்கள். தெலுங்கிலும்…
-
- 1 reply
- 531 views
-
-
பஞ்சுஅருணாசலம் மரத்தின் கீழ் வளரும் தாவரத்திற்கு வளர்ச்சி இருக்காது என்பார்கள். ஆனால் கண்ணதாச விருட்சத்தின் கீழிருந்த இந்த (பஞ்சு அருணாசலம்) தாவரம்; பாடலாசிரியர், கதாசிரியர், கதை வசனகர்த்தா, தயாரிப்பாளர், இயக்குநர் – என்றபடி சினிமாவுலகில் படிப் படியாக வளர்ச்சியடைந்து நல்ல பலனை நமக்கு தந்தது. இந்த சாதனைகளையெல்லாம் தாண்டி, இளையராஜா என்ற இசைப் புதையலை கண்டு பிடித்ததுடன், கன்னட இசையமைப்பாளர் விஜய பாஸ்கர் என்பவரையும் தமிழுக்கு அறிமுகப் படுத்தினார் பஞ்சு. 1. பஞ்சு அருணாசலம் – வாழ்க்கைகுறிப்பு காரைக்குடியை அடுத்த சிறுகூடல்பட்டி என்ற ஊரில் வசித்துவந்த கண்ணப்பனின் புதல்வராக 1941 இல் பிறந்தார் பஞ்சநாதன் என்ற பஞ்சுஅருணாசலம். படத் தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசனும…
-
- 6 replies
- 5.3k views
-
-
சாதனை படைத்த தமிழ்த் திரைப்பட கலைஞர் பாரதிதாசனார் பற்றி பார்ப்போம். பார் போற்றும் பாவேந்தர் "மகாகவி பாரதி நமக்களித்த ஒப்பற்ற உயர்ந்த முதல் பாடலே பாரதிதாசன்" என்கிறார் நீதியரசர் மகாராசன். தமது ஆசான் பாரதியாரை அடியொற்றியே பாவேந்தரும்,"எளிய சொற்கள், எளிய சொற்றொடரழகு, எளிய சந்தம்,மக்கள் மனதில் பதியும்படியான இசை" என்றவாறாக பாடல்களை உருவாக்கினார். அவர் காலத்தின் திரைப்படங்களின் பிற்போக்கினை கண்டித்து ,கவிதையிலேயே ஒரு விமர்சனம் எழுதியுள்ளார் புரட்சிக்கவிஞர். சினிமா பாடல்கள் எழுதுவதில் இவருக்கு ஆர்வமிருந்ததில்லை. சினிமா பாடல்கள் எழுதும்படி வேண்டுபபவரிடம் "சினிமாப் பாட்டுத்தானே,அது கிடக்கட்டும்,எழுதினாப்போச்சு " என்று கூறிவிட்டு, இலக்கியம் சம்பந்தமா…
-
- 4 replies
- 3.1k views
-
-
கொஞ்சம் விட்டிருந்தால் எஸ்.பி.பியை விஞ்சியிருப்பார் இந்த மனுஷன்! #KamalAsSinger ஆண்பாடகர்களில் எஸ்.பி.பியை விடச் சிறந்த ஒருவர் இல்லவே இல்லை என்று நண்பர்களிடத்தில் உச்சஸ்தாயியில் வாதிட்டாலும் ஒருத்தரை மட்டும் நினைக்கும்போது ‘ஒருவேளை இந்த ஆளு முழுநேரப் பாடகராக மட்டுமே ஆகியிருந்தால் எஸ்.பி.பியை மிஞ்சியிருப்பாரோ’ என்று தோன்றும். கமல்ஹாசன். 'அந்தரங்கம்’ என்ற படத்தில் ஜி.தேவராஜன் இசையமைப்பில் ‘ஞாயிறு ஒளிமழையில் திங்கள் குளிக்க வந்தாள் என்றொரு பாடல்தான் கமல் பாடிய முதல் பாடல். கிட்டத்தட்ட கே.ஜே. ஏசுதாஸின் குரல் போல ரொம்ப சீரியஸாக இருக்கும் பாடல். பயந்து கொண்டே பாடியது போல் தெரியும். ஹிட்டான பாடல்தான். அதன்பிறகு இளையராஜா இசையில் அவள் அப்படித்தான…
-
- 0 replies
- 780 views
-
-
Nikesha Patel (மேலும் படங்களுக்கு படத்தை அல்லது பெயரை அழுத்தவும் ) Sanya Anaika
-
- 4 replies
- 712 views
-
-
80-களின் நாயகிகள் ஒன்று கூடி மகிழ்ச்சி சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகைகள் ராதிகா சரத்குமார், குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ், ராதா, அம்பிகா. லிசி, சுஹாசினி ஆகியோர் கலந்து கொண்டனர். பதிவு: ஜூலை 13, 2021 02:38 AM தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90-களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்த நடிகைகள் சென்னையில் திடீரென்று ஒன்று கூடினார்கள். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகைகள் ராதிகா சரத்குமார், குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ், ராதா, அம்பிகா. லிசி, சுஹாசினி ஆகியோர் கலந்து கொண்டனர். அனைவரும் கதாநாயகிகளாக நடித்த காலத்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். விருந்…
-
- 11 replies
- 820 views
-