வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5550 topics in this forum
-
இக்கட்டுரை ஆசிரியர் ஷோபா சக்தி ஈழத் தமிழர். பிரான்சில் வசிப்பவர். ஈழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு அதன் செயல்பாடுகளில் மனம் கசந்து பிரான்ஸ் சென்றவர். எழுத்தாளர். இவரது 'கொரில்லா' மற்றும் 'ம்' நாவல்கள் தமிழ் இலக்கிய சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. சிங்கள பேரினவாதத்துடன் ஆயுத குழுக்களின் அபாயத்தையும், ஈழத் தமிழர்களின் சாதீய கட்டுமானத்தையும் விமர்சனத்துக்குள்ளாக்க தயங்காதவர். இவரது இந்த கட்டுரை சீமானின் 'தம்பி' திரைப்படத்தை குறித்தது என்ற வகையில் ஒரு குறிப்பிட்ட கால அளவை, எல்லையை கொண்டது. ஆயினும் ஷோபா சக்தி 'தம்பி' யை முன்வைத்து பேசியிருக்கும் தமிழ் சினிமா குறித்த புரிதல், அதன் போக்கு, வணிக நோக்கம் மற்றும் அதன் அரசியல் எல்லா காலத்திற்குமானது என்பது…
-
- 2 replies
- 1.4k views
-
-
அண்மையில் வெளியாகிய 7ம் அறிவு திரைப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இலங்கை தமிழர் பற்றிய பேச்சு ஒளிப்பேளை ஒன்று கீழே இணைக்கப்பட்டுள்ளது. http://akkinikkunchu...-news&Itemid=18
-
- 0 replies
- 1.9k views
-
-
இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து திரைத்துறையில் பிரபலமானவராக வலம் வருகிறார். சென்னை 28 மற்றும் அஜித் நடித்த மங்காத்தா உள்ளிட்ட படங்களில் பிரேம்ஜி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் சில படங்களுக்கு இசை அமைத்து பாடல்களும் பாடியுள்ளார். சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நகைச்சுவை கருத்துக்களை பகிர்ந்து ரசிகர்களை என்டர்டெயின்மென்ட் செய்து வருவார். பன்முகத் திறமை கொண்ட இவர் நீண்ட நாட்களாக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். அவரிடம் ரசிகர்கள் எப்போது உங்களுக்கு திருமணம் நடக்கும் என ரசிகர்கள் கேட்கும் போது, நடக்கும் போது நடக்கும் என நகைச்சுவையாக பதில் அளித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கும் இந்த…
-
- 0 replies
- 209 views
- 1 follower
-
-
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாணிஶ்ரீ நடிப்பில் 1972 ஆம் ஆண்டு திரையிடப்பட்டு 200 நாட்களுக்குமேல் ஓடி வெற்றி கண்ட வசந்த மாளிகை மீண்டும் மறுவெளியீடாக யூன் 21 முதல் தமிழகம் எங்கும் திரையிடப்பட்டு புதிய படங்களுக்கு இணையாக சாதனை ஏற்படுத்தி வருகின்றது . இது பற்றி இணையத்தளங்கள் முகநூல் போன்றவற்றில் பதிவுகள் அதிகம் இடம்பெற்றுள்ளன .அப்பதிவுகள் பார்வைக்கு இங்கே.
-
- 36 replies
- 5.1k views
-
-
பிரேமம் - ஏன் இத்தனை காதல்? கடந்த வாரம் சென்னையில் 200வது நாள் கொண்டாடி இருக்கிறது பிரேமம் என்கிற மலையாளப்படம். அப்படி என்னதான் இருக்கு இதில் இருக்கு என்றுதான் கதையை கேட்ட எல்லாருக்கும் தோணும். ஆண்டாண்டு காலம் அடிச்சுத்துவைச்ச 'பப்பி, பெப்பி, கப்பி' லவ் தான் கதை. சமீப காலத்தில் ஒரு படத்தை இந்தளவு சிலாகிச்சு உரிமை கொண்டாடி சண்டை போட்டு நம் மக்கள் மூச்சையும் ஆவியையும் தொலைத்தது வேறெந்தப் படத்துக்கும் இல்லை என்பதே உண்மை. படம் பெயரோ, ஹீரோவோ, டைரக்டரோ எதுவும் சொல்லத்தேவையில்ல. ஒரே ஒரு வார்த்தை போதும், உங்க உதட்டில் மைக்ரோ, மிக மைக்ரோ புன்னகை வர வைக்க. அந்த வார்த்தை... "மலர் டீச்சர்". வரலாற்றை சற்றே கிளறிப்பார்த்தால் கேரளாவோட தொடர்பிருக்கிற மாதிரி எடு…
-
- 2 replies
- 2.5k views
-
-
உலக நாயகன் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள தசாவதாரம் படத்தை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பார்ப்பதற்கு வசதியாக, ஆங்கில சப் டைட்டிலுடன் அவருக்கு அனுப்பி வைக்கவுள்ளனராம். பெரும் பொருட் செலவில், ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள தசாவதாரம் திரைக்கு வரத் தயாராகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஜாக்கி சானை வரவழைத்து ஆடியோ வெளியீட்டு விழா மிகப் பிரமாண்டமாக நடத்தினர். இப்படத்தில் ஆசின், மல்லிகா ஷெராவத், ஹேமமாலினி, ஜெயப்பிரதா ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர் நெப்போலியன் முக்கிய வேடம் ஏற்றுள்ளார். கமல்ஹாசன் போட்டுள்ள பத்து வேடங்களில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வேடமும் ஒன்று. இதுதவிர 8 அடி உ…
-
- 0 replies
- 959 views
-
-
[size=5]ஈழத்தமிழ்ச் சினிமா என்ற ஒன்றே காலவோட்டத்தில் காணாமல் போய்விட்டதாக உணரப்படும் காலமிது.அத்தி பூத்தாற் போல எப்போதாவது ஒரு முறை வெளியாகும் ஈழத்துக் குறும்படங்கள், ஈழத்தவர்களாலும் ஒரு சினிமாவினை எடுக்க முடியும் எனும் நம்பிக்கையினை மெய்ப்பித்து விடுகின்றன, அவ்வாறான ஒருபடைப்பே''கலையும் நீயே காதலும் நீயே'' குறும்படம்.[/size] [size=5]இந்த குறும்படம் புலம்பெயர் வாழ் இளம் தம்பதியர் இடையேயான உணர்வுகள், புரிதல்கள், இலட்சியங்கள், சமூகம் தொடர்பான பார்வைகள் போன்றவற்றில் ஏற்படும் புரிந்துணர்வு பற்றிய படைப்பாகும், கதையின் நாயகனின் மனைவி மற்றும் கலை இலட்சியம் தொடர்பான பிரைச்சனை தொடர்பாக கதை நகர்கிறது. நாயகன் ஜே ஜே மற்றும் சிந்து சிறப்பாக நடித்துள்ளனர்.[/size] […
-
- 0 replies
- 637 views
-
-
கனடாவில் கச்சேரி... கலக்கல் விளம்பரங்களில் இசைஞானி! சென்னை: சினிமா மட்டுமின்றி, அதைத் தாண்டி மேடைகளிலும் முழுவீச்சில் கவனம செலுத்த ஆரம்பித்துள்ளார் இசைஞானி. கடந்த ஆண்டு சென்னையில் என்றென்றும் ராஜா என்ற தலைப்பில் 5 மணி நேரம் மக்களை தன் இசையால் கட்டிப்போட்ட இளையராஜா, இந்த முறை வெளிநாட்டில் கனடாவின் டொரன்டோ நகரில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். நிகழ்ச்சிக்குப் பெயர் ‘எங்கேயும் எப்போதும் ராஜா'. இந்த நிகழ்ச்சிக்கான விளம்பரங்களில் வெள்ளைக் கோட் - சூட் அணிந்து அட்டகாசமாகக் காட்சி தருகிறார் இளையராஜா. முழுக்க முழுக்க வாத்தியங்களைக் கொண்டு இசைக் கலைஞர்கள் மட்டுமே வாசிக்கும்படி இந்த நிகழ்ச்சி வடிவமைத்துள்ளார் ராஜா. 100 இசைக்கலைஞர்களுடன் செல்லும் அவர், வரும் …
-
- 2 replies
- 662 views
-
-
தமிழ் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த கபாலி பாடல்கள் தமிழ் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த கபாலி பாடல்கள் வெளியாகியுள்ளது. 1) தீம் மியூசிக் நெருப்புடா என ஏற்கனவே தீயை பற்ற வைத்த தீம் சாங், பலரின் எதிர்ப்பார்ப்பாக தற்போது வெளிவந்துள்ள கபாலி ஆல்பத்தில் ஹிட் ஆவது இந்த தீம் மியூஸிக் தான். 2) உலகம் ஒருவனுக்கா சூப்பர் ஸ்டார் படம் என்றாலே ஓப்பனிங் சாங் தான் செம்ம மாஸ். அதிலும் தத்துவங்களை அள்ளி தரும் பாடலாக அமைந்துள்ளது. 3) வானம் பார்த்தேன் சூப்பர் ஸ்டார் படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு மெலடி பாடல் 4) வ…
-
- 0 replies
- 509 views
-
-
சிங்கப்பூரில் சைமா விருது : சிறந்த நடிகர் சீயான் விக்ரம்... சிறந்த நடிகை நயன்தாரா சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடைபெற்ற சைமா 2016 விருது விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுள்ளார் நானும் ரவுடிதான் படத்தில் நடித்த நயன்தாரா. சிறந்த நடிகருக்கான விருதை ஐ படத்திற்காக சீயான் விக்ரம் பெற்றுள்ளார். தென்னிந்திய திரையுலகினரை கவுரவித்து வழங்கப்படும் 'சைமா 2016' விருது கடந்த ஜூன் 30 மற்றும் ஜூலை 1 நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் ஏராளமான தென்னிந்திய திரை பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். தென்னிந்தியாவின் யூத் ஐ கான் விருது நடிகை சமந்தாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்ற தமிழ் திரையுலகினர் பட்டியல்: சிறந்த நடிகர்: விக்ரம…
-
- 3 replies
- 690 views
-
-
இசைத்துறையில் 50வது வருடத்தை கடந்து செல்லும் மாமேதை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இசைவாழ்வின் வெற்றியை கொண்டாடும் இசைப் பெருவிழாவும் சுப்பர் சிங்கர் இசைக் கொண்டாட்டமும். - கனடாவில் தனித்துவம் மிக்க இசை நிகழ்ச்சிகளை வழங்கி தனக்கென தனியிடம் பிடித்துக் கொண்ட ஆர்யா கனடா நிறுவனம் எதிர்வரும் ஆகஸ்ட் 13 - 14 ம் திகதிகளில் கனடாவின் மார்க்கம் பெயர் கிரவுண்ட் மைதானத்தில் இரண்டு பிரம்டமாண்டமான இசை நிகழ்வுகளை நடத்தவுள்ளது. 13ம் திகதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பிரபல சமையல் கலை வல்லுனர் வெங்கடே~; பட் அவர்களுடன் ரொரன்ரோவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 20 பேர் தமது சமையல் திறமையினை வெளிப்படுத்தும் சமையல் போட்டி நிகழ்ச்சி நடைபெறவ…
-
- 0 replies
- 577 views
-
-
இந்த வயதிலும் நாட்டியத்தில் அளவு கடந்த ஆசையில் மேடையில் ஆடிக்கொண்டு இருக்கிறார் நிர்மலா. சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சிக்காக சிதம்பரம் வந்திருந்த நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், பரத நாட்டியம் ஆடுவதால் உடல்வலிமை, உற்சாகமும் இருக்கும். இதை மறந்தவிட்டு, நம்மிடையே மேற்கத்திய நடன கலாச்சாரம் அதிகமாகியுள்ளது. இக்காலக்கட்டத்திலும், பரத நாட்டியத்தை முறைப்படியாக கற்றுக்கொள்ள இளம் தலைமுறைகள் சிலர் வருகின்றனர். நான் சென்னை, திருவள்ளூர் ஆகிய இடங்களில் நிர்மலாஸ் அகாடமி பைன் ஆர்ட்ஸ் என்ற பெயரில் பரத நாட்டிய பள்ளி அமைத்து மாணவ, மாணவிகளுக்கு நாட்டிய பயிற்சி அளித்து வருகின்றேன். பரத நாட்டியத்தை முறைப்படி இ…
-
- 2 replies
- 855 views
-
-
மீண்டும் வாங்க ஜனகராஜ் ! கவிஞர் மகுடேசுவரன் சிறுவயதில் நாமெல்லாம் பார்த்துச் சிரித்த நடிகர். மண் வாசனையில் 'வாத்தியார்' வேடத்தில் நான்கைந்து இடங்களில் தலைகாட்டினாலும் தனித்துவமான நடிப்பு. வாட்டசாட்டத்துக்குத் துளியும் தொடர்பில்லாத இயல்பான உடலசைவுகள். உள்ளொன்று புறமொன்று இல்லாத, இயற்கையான பண்புத்தோற்றங்களில் தொடர்ந்து நம் மனங்கவர்ந்தவர். 'நெத்தியடி'யின் முதற்பாதியில் இவரை மறக்க முடியாது. 'வேணூஉ... திர்காணியெ குட்த்துரு... வந்திருக்கறவுங்கொ நம்புளய பத்தி இன்னா நினிப்பாங்கொ...' என்ற இழுப்பு இன்னும் நினைவிருக்கிறது. இவர் காலத்திற்குப்பின் நகைச்சுவை நடிகர்கள் பலர் வென்றதற்கு உடன்தொடர்ந்த இன்னொரு நடிகர் அரைக்காரணம் ஆவார். ஆனால், இவர்க்கு அப்படி யார்…
-
- 1 reply
- 584 views
-
-
தமிழ் சினிமா 2016-ன் 10 நிகழ்வுகள்: பிரச்சினை முதல் பேரிழப்பு வரை 2016ம் ஆண்டு தமிழ் திரையுலகில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. அவற்றில் பலராலும் கவனிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, பாராட்டப்பட்ட 10 முக்கிய நிகழ்வுகளின் பட்டியல் இதோ! நடிகர் சங்கப் பிரச்சினை நாசர் தலைமையிலான புதிய நிர்வாகம் நடிகர் சங்கத்தில் பொறுப்பேற்றவுடன், நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என்று அறிவித்தது. ஆனால், இந்தாண்டும் அதற்கான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது எனச் சொல்லலாம். சரத்குமார் உள்ளிட்ட பழைய நிர்வாகிகள் கணக்குகளை இன்னும் சரிவர ஒப்படைக்கவில்லை என்று புதிய நிர்வாகம் குற்றம்சாட்டியது.…
-
- 0 replies
- 303 views
-
-
தமிழகத்தில் வெளியாக முடியாத 'செங்கடல்' இப்போது அமெரிக்கா முழுவதும் ரிலீஸ்! Posted by: Shankar Published: Saturday, May 25, 2013, 16:13 [iST] டல்லாஸ் (யு.எஸ்): லீனா மணிமேகலை இயக்கிய செங்கடல் திரைப்படம் அமெரிக்கா முழுவதும் தமிழர் அமைப்புகளால் திரையிடப்படுகிறது. தமிழகத்தில் உருவான செங்கடல் திரைப்படம், தணிக்கைக் குழுவின் தடையை தாண்டி உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெற்று வெளிவந்தது. ஆனாலும் தமிழகத்தில் திரையிடப்படவில்லை. செய்தியாளர் காட்சி மட்டுமே திரையிடப்பட்டது. இப்போது உலகம் முழுவதும் வெவ்வேறு அமைப்புக்களின் உதவியுடன் செங்கடல் திரையிடப்பட்டு வருகிறது. ஜப்பான் டூ அமெரிக்கா ஜப்பானிய, கொரிய, சீன, ஃப்ரெஞ்ச் உட்பட 6 மொழிகளில் சப் டைட்டில்களுடன் ஆஃப்ரிக்கா, ஐரோப்பா, ஆசிய நாடுகள…
-
- 0 replies
- 515 views
-
-
இன்றைய கிராபிக்ஸ் உலகத்தில் எத்தனையோ கிராபிக்ஸ் காட்சிகளை சுலபமாக செய்து முடித்து விடுகிறார்கள். ரசிகர்களுக்காக நடிகர்கள் காட்டும் வித்தைகளில் பல, சமயங்களில் கண் கட்டு வித்தைகள் தான். அப்படித் தான், 1989ல் வெளிவந்த ‘அபூர்வ சகோதர்கள் ‘ படமும் கூட. கமல் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இப்படத்தில், வில்லன்களின் சூழ்ச்சியால் ஒரு கமல் மட்டும் சற்று வளார்ச்சி குறைந்து குள்ளமானவராக காட்சியளிப்பார். இதற்காக மிகவும் கஷ்டப்பட்டு நடித்த கமல், குள்ளமாக நடித்தது எப்படி என்ற ரகசியத்தை இத்தனை நாள் பொத்தி, பொத்திப் பாதுகாத்து வந்தார். ஆனால், தற்போது அந்த ‘சிதம்பர’ ரகசியத்தை போட்டுடைத்திருக்கிறார் அப்படத்தின் ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம். இது குறித்து அவர் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த…
-
- 0 replies
- 623 views
-
-
இரண்டு படங்கள் - இருவேறு விமர்சனப் பார்வைகள் கிருஷ்ணன் 2014ஆம் ஆண்டின் முதல் வெற்றிப் படங்களான விஜயின் ஜில்லா மற்றும் அஜித்தின் வீரம் ஆகிய படங்கள் தர அளவுகோல்களைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாத சாதாரண வெகுஜன திரைப்படங்களாகவே வந்துபோயின. வெகுஜன ரசனைக்கும் அஜித் மற்றும் விஜயின் ரசிகர்களை குதூகலிக்க வைப்பதற்கும் ஏற்ற காட்சிகள் இடம்பெற்றிருந்ததே இந்தப் படங்களின் வெற்றிக்குப் போதுமானதாக அமைந்துவிட்டது. இவ்விரு படங்களின் பேரலை சற்று ஓய்ந்தபோது சனவரி 24 அன்று இரண்டு படங்கள் வெளியாகின. ஒன்று 80களில் முன்னணி கதாநாயகியாக விளங்கிய ஸ்ரீப்ரியா இயக்கிய முதல் படம் மாலினி 22 பாளையங்கோட்டை, மற்றொன்று ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கிய இரண்டாவது படமான கோலி சோடா. இரண்டு படங்களிலும் ப…
-
- 0 replies
- 710 views
-
-
கஞ்சா கருப்புவின் அதிரடிப் பேட்டி "ரகசியாவின் உதட்டை தெரியாத்தனமாகத்தான் கடிச்சேன்" வேல்முருகன் போர்வெல் என்ற கஞ்சா கருப்புவின் சொந்தப்படப்பிடிப்பில் அவரை நேரில் சந்தித்து எடுக்கப்பட்ட பேட்டி மணி ஸ்ரீகாந்தன் வசதி வாய்ப்புகள் வந்து விட்டால் தனது நடை, உடை பாவனைகளை மாற்றிக் கொள்ளும் எத்தனையோ மனிதர்களை நாம் அன்றாடம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் சிலர் அதற்கு விதிவிலக்காகவும் வாழ்ந்து வருகிறார்கள். அப்படியானவர்களில் ஒருவர்தான் நடிகர் கஞ்சா கருப்பு. விக்ரம், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்து பெயரும், புகழும் பெற்றிருந்தாலும் இன்றும் அவர் மனதளவில் மிகவும் எளிமையாகத்தான் வாழ்ந்து வருகிறார். ஜீன்ஸ், டீ ஷர்ட், பெஷன் உடைகள…
-
- 2 replies
- 4.6k views
-
-
'குவார்ட்டர் கட்டிங்' பட டைட்டிலுக்கு சபாஷ் விளக்கம் குவார்ட்டர் கட்டிங் என்று படத்திற்குப் பெயர் வைத்த பின்னர் கேளிக்கை வரி விலக்கு சலுகையையும் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக அந்தத் தலைப்புக்கு முன்னால் பெரிதாக 'வ' என்ற எழுத்தைப் போட்டு சமாளித்துள்ளனர் காயத்ரி-புஷ்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள குவார்ட்டர் கட்டிங் படக் குழுவினர். இப்படத்தை தயாரித்திருப்பது தயாநிதி அழகிரி [^]. எனவே பெரிய அளவில் விதிமுறைகள் பார்க்கப்படாது என படக் குழுவினர் நினைத்திருக்கலாம். இருந்தாலும் குற்றம் [^] சாட்டி விரல்கள் நீண்டு விடுமே என்ற யோசனையில் குவார்ட்டர் கட்டிங் டைட்டிலுக்கு மேலே 'வ' என்ற எழுத்தைப் போட்டு விட்டனர். அதென்ன வித்தியாசமான தலைப்பாக இருக்கிறதே என்று இ…
-
- 0 replies
- 709 views
-
-
காக்கிச் சட்டை மீது வெறுப்போடு இருக்கும் ஹீரோ, பின்னர் காவல் துறையில் சிகரம் தொடும் அதே போலீஸ் கதை! கடமை தவறாத போலீஸ் சத்யராஜ். குழந்தை பிறந்தவுடனேயே அவனுக்கு கற்பனையில் போலீஸ் யூனிஃபார்ம் மாட்டி ரசிக்கும் அளவுக்கு காவல் துறை மீது அவருக்குக் காதல். ஆனால் மகன் விக்ரம் பிரபு, அப்பாவுக்காக போலீஸ் வேலையில் சேருவதுபோல நடிக்கிறார்; திடீர் திருப்பத்தில் போலீஸும் ஆகிவிடுகிறார். ஒரே மாதத்தில் வேலையில் இருந்து விலகிவிடலாம் எனத் திட்டமிட்டிருக்கும்போது, ஏ.டி.எம் கொள்ளையர்கள் பற்றிய வழக்கு விக்ரம் பிரபுவிடம் வருகிறது. அது, அவர் உடலில் போலீஸ் யூனிஃபார்மை எப்படி கவசகுண்டலம்போல ஒட்டவைக்கிறது என்பதுதான் மீதிக் கதை! காதலும் காக்கியும் கலக்கும் 'காக்கிச் சட்டை போட்ட மச்சான்’ வகைக் கதைதான…
-
- 0 replies
- 1.4k views
-
-
''விக்ரம் பிரபு... உங்க மேல அக்கறையோட ஒரு அட்வைஸ்!’’ - 'பக்கா’ விமர்சனம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லாமல் கஷ்டப்பட்டார்கள். பல நூறு கோடி ரூபாய் முதலீடு அந்தரத்தில் தொங்கியது. சொன்ன தேதிக்கு ரிலீஸ் செய்யமுடியாமல் படங்கள் முடங்கின. அரசுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் க்யூப் போன்ற அமைப்புகளுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. இத்தனையையும் கடந்து சினிமா ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்தது. ரீ-என்ட்ரி நல்லதுதான். ஆனால், 'பக்கா' போன்ற படத்தோடு கோலிவுட் திரும்ப ரீ-என்ட்ரி ஆகியிருக்க வேண்டாம். விக்ரம் பிரபு ஊர் ஊராகச் சென்று திருவிழாவில் பொம்மை விற்கும் 'பொம்மைக்கடை' பாண்டி. ஃப்ரேமில் தனியாக நின்…
-
- 0 replies
- 633 views
-
-
வியாபார விஷயத்தில் எந்திரனை தொட்டு விடும் என்று அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த 7 ஆம் அறிவு, அதிகாரபூர்வமாக தொட்டே விட்டது. கிட்டதட்ட 90 கோடி ரூபாய் வியாபாரம் ஆகியிருக்கிறதாம். சிட்டி, என்எஸ்சி, திருச்சி உள்ளிட்ட ஐந்து ஏரியாக்களை பெரும் விலை கொடுத்து வாங்கியிருக்கிறது ஜெமினி லேப் நிறுவனம். எந்திரன் படத்தை வெளியிட்டதும் இவர்கள்தான். வெறும் சூர்யா நடித்த படத்திற்கு இத்தனை மாஸ் இல்லை. கூடவே முருகதாசும் இருப்பதால்தான் இந்த மாஸ் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இதே முருகதாஸ் அடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். சம்பளம் எவ்வளவு தெரியுமா ? 12 கோடி. இது ஷங்கரின் சம்பளத்தை விட ரெண்டு கோடி அதிகம். ஒரு விழாவில், ‘எவ்வளவுதான் சம்பாதிச்சாலும், காலையில் நாலு இட்லிக்கு மேல சாப்ப…
-
- 1 reply
- 971 views
-
-
மீண்டும் திரைப்பட பாடல்களை எழுதுவதற்கு தயாராகிவிட்டேன்- வைரமுத்து அறிவிப்பு கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக, இருபதிற்கும் மேற்பட்ட தமிழ் இலக்கிய ஆளுமைகளைப் பற்றி தமிழாற்றுப்படை கட்டுரைகளை படைத்து முடித்து விட்டேன். தற்பொழுது மீண்டும் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காகவும், கவிதை எழுதுவதற்கும் காத்திருக்கிறேன். இளம் இயக்குநர்களும், இளம் இசையமைப்பாளர்களும் என்னை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற ‘நெடுநல்வாடை’ படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதன் போது, விழாவில் சிறப்பு அதிதியாக பங்கு பற்றிய வைரமுத்து தெரிவிக்கையில், “நெடுநல்வாடை’ என்ற இந்த படத்…
-
- 1 reply
- 588 views
-
-
இது படமாக கடந்தவருடம் வெளியிடப்பட்ட விபரணம். இதன் முக்கிய பங்கை வகித்த அல் கோர் இற்கு இந்தக் கிழமை நோபல் பரிசும் ஜநாவின் சுற்றுச்சூழல் மாற்றங்கள் பற்றிய குழுவோடு இணைத்து வழங்கப்பட்டிருந்தது. http://en.wikipedia.org/wiki/An_Inconvenient_Truth இதில் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை ஒவ்வொரு நிமிடமும் பலனுள்ள தகவல்களை சாதாரணமானவர்களிற்கு உறைக்கக் கூடி முறையில் அதே நேரம் சுவாரசியமாகவும் வழங்கப்படுகிறது. அல் கோர் உலகம் வெப்பமாதலை நிராகரிக்கும் தரப்பினரின் இன்றை பிரச்சார யுக்திகளை புகையிலை புற்றுநோயை உருவாக்கும் என்பதை நிராகரித்துக் கொண்டிருந்து சிக்கெரெட் கொம்பனிகளின் முயற்சிகளோடு ஒப்பிட்டுள்ளார். அடுத்து நாம் உலகம் வெப்பமாதல் சடுதியாக நிகழாது மெதுவாக நிகழ்வதா…
-
- 2 replies
- 1.5k views
-
-
பொழுதோட கோழி கூவுற வேளை... என்று சினிமாவில் மட்டுமே பாடிக்கொண்டிருக்கிற திருநங்கைகளின் (அரவாணிகள்) வாழ்வில், விடியலை சொல்ல ஒரு கோழியும் கூவுவதில்லை என்பதுதான் வேதனை! இந்த வேதனைக்கு மருந்து போடுகிற விதத்தில், பொழுதுபோக்கு மீடியாவிற்கு கம்பீரமாக அழைத்து வரப்பட்டிருக்கிறார் ரோஸ்! தான் அரவாணி என்பதே அவரே வாய் திறந்து சொன்னால்தான் அறிய முடிகிறது. நேரில் பார்த்தால் மாடல் மங்கைகளுக்கே மூச்சிரைக்கும்! அப்படி ஒரு அழகு! சின்னத்திரை உலகில் புதிய புதிய பாதைகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் விஜய் டி.வி, ரோஸ் மூலமாக அரவாணிகளின் வாழ்வில் புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது. என்ன செய்யப்போகிறார் ரோஸ்? வாழ்க்கையை ஒட்டிய அத்தனை விஷயங்களையும் அலசப் போகிறார். 'லேட் நைட் ஷோ' என்ற சப்…
-
- 2 replies
- 4k views
-