வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
ஐஸ்வர்யா இல்லை ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜாக்கிரதை: மீடியாவை விளாசிய ஜெயா பச்சன். மும்பை: தனது மருமகளை செய்தியாளர்கள் ஐஸ்வர்யா என்று அழைத்ததால் ஜெயா பச்சன் ஆத்திரம் அடைந்தார். பாலிவுட் இயக்குனர் சுபாஷ் கய் கொடுத்த விருந்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இந்த விருந்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மாமியார் ஜெயா பச்சனுடன் கலந்து கொண்டார். விருந்து நிகழ்ச்சி முடிந்து அவர்கள் கிளம்புகையில் பத்திரிக்கையாளர்கள், ஐஸ்வர்யா, ஐஸ்வர்யா என்று அவர்களை அணுகினார்கள். அப்போது ஜெயா பச்சன் கோபத்தில் செய்தியாளர்களை திட்டிவிட்டார். என்ன ஐஸ்வர்யா, ஐஸ்வர்யான்னு கூப்பிடுறீங்க, அவர் என்ன உங்களுடன் ஒன்றாக படித்தவரா? ஒழுங்காக ஐஸ்வர்யா ராய் பச்சன் என்று முழுப்பெயரை சொல்லுங்கள் என்று …
-
- 0 replies
- 635 views
-
-
நாட்டியப் பேரொளி பத்மினி பிறந்த நாள் (ஜூன் 12, 1932) தமிழ் திரை உலகம் கண்ட மிக சிறந்த நடிகைகளில் நடிகை பத்மினியும் ஒருவர். திருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் தங்கப்பன் பிள்ளை-சரஸ்வதி அம்மாள் தம்பதியரின் மகளாக 1932ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி பிறந்தார் பத்மினி. நான்கு வயதிலேயே நாட்டியப் பயிற்சியைத் தொடங்கிய இவர், இளம் வயதில் அரங்கேற்றமும் நடத்தி மெய்சிலிர்க்க வைத்தவர். இவரது மூத்த சகோதரி லலிதா, இளைய சகோதரி ராகினி இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள் தான். இவர்கள் திருவாங்கூர் சகோதரிகள் என புகழ் பெற்று விளங்கினார்கள். நாட்டிய உலகில் புகழோச்சி நாட்டியப் பேரொளி என அழைக்கப்பட்ட பத்மினி, குச்சிப்புடி, மோகினியாட்டத்திலும் வல்லவர். பத்மினியும் சகோதரி…
-
- 0 replies
- 635 views
-
-
கடைசியாக தேதி அறிவித்து விட்டார்கள். ஆனால் எல்லோரும் எதிர்பார்த்த ஆடம்பரம் ஐஸ் - அபிஷேக் திருமணத்தில் இருக்காதாம். ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன் போன்ற முன்னணி நட்சத்திரங்களுக்குகூட அழைப்பில்லையாம்! இந்தியாவில் இப்படியொரு திருமணம் நடந்ததில்லை என்று சொல்லும் விதமாக ஐஸ் - அபிஷேக் திருமணத்தை நடத்த விரும்பினார் அமிதாப்பச்சன். உதய்ப்பூர் அரண்மனையும் இதற்கு ஏற்பாடானது. திடீரென்று அமிதாப்பின் தாயார் தேஜி பச்சனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் மிக எளிமையாக திருமணத்தை நடத்துகிறார்கள். சொல்ல மறந்து விட்டோமே.... திருமண தேதி ஏப்ரல் 20! திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒருசிலருக்கு மட்டுமே அழைப்பு. ஷாருக்கான் உள்ளிட்ட எந்த பாலிவுட் ஸ்டார்களுக்க…
-
- 0 replies
- 635 views
-
-
ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் 2 ஆவது முறையாக கோல்டன் குளோப் விருதை பெறும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளார். ஸ்லம்டோக் மில்லியனர் படத்தின் இயக்குநர் டேனி பாயில் இயக்கிய 127 ஹவர்ஸ் படத்திற்காக கோல்டன் குளோப் விருதுக்கு ரஹ்மான் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஸ்லம்டோக் படத்திற்காக ஒரிஜினல் இசைப்பிரிவில் கோல்டன் குளோப் விருதைப் பெற்றவர் ரஹ்மான். தற்போது மீண்டும் ஒரிஜினல் இசைப் பிரிவில் 127 ஹவர்ஸ் படத்திற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார் ரஹ்மான். 44 வயதான ரஹ்மான் ஸ்லம்டோக் படத்திற்காக 2 ஒஸ்கார் விருதுகளைத் தட்டிச் சென்ற பெருமைக்குரியவர் என்பது நினைவிருக்கலாம். ஜேம்ஸ் பிரான்கோ நாயகனாக நடித்துள்ள 127 ஹவர்ஸ் படத்திற்கு நல்ல வரவேற்பும் விமர்சனங்களும் கிடைத்து வருவது …
-
- 0 replies
- 635 views
-
-
தாரை தப்பட்டை - திரை விமர்சனம் சாமிப் புலவன் (ஜி.எம்.குமார்) பிரபலமான இசைக் கலைஞர். இவருடைய மகன் சன்னாசி (சசிகுமார்), தாரை தப்பட்டை மற்றும் கரகாட்டக் குழுவை நடத்தி வருகிறார். அதில் பிரதான நடனக்காரி சூறாவளி (வரலட்சுமி). சூறாவளிக்கு சன்னாசி மீது தீராக் காதல். சன்னாசிக் கும் சூறாவளி என்றால் கொள்ளைப் பிரியம் ஆனால் வெளிக்காட்டுவ தில்லை. செல்லும் இடங்களில் எல்லாம் சூறாவளிக்குச் சிறப்பான வரவேற்புக் கிடைக்கிறது. அவளுடைய ஆட்டத்தைத் தொடர்ச்சியாகக் காணும் அரசாங்க ஊழியர் கருப்பையா (ஆர்.கே.சுரேஷ்) சூறாவளியை மணமுடிக்க விரும்புகிறார். “ஆயுளுக்கும் ஆட்டக்காரியாக அவள் அவதிப்பட வேண்டாம் நிம்மதியாக வாழட்டும்” என நினைக்கும் சன்னாசி, தனது காதலைத் தியாகம் செய்கிறான். திருமணத்த…
-
- 1 reply
- 635 views
-
-
ஆஸ்கர் விருதுகள் - சிறந்த நடிகருக்கான விருதை வென்றார் வில் ஸ்மித் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிறந்த நடிகர் - வில் ஸ்மித் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதுவரை வழங்கப்பட்ட விருதுகளில், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை, சிறந்த சவுண்ட், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகிய பிரிவுகளில், 'டுன்' என்ற திரைப்படம் விருதுகளை குவித்துள்ளன. சிறந்த அனிமேஷன் படமாக, டிஸ்னி தயாரித்த 'என்காண்டோ' (Encanto) திரைப்படம் தேர்வாகியுள்ளது. சிறந்த நடிகரு…
-
- 9 replies
- 634 views
- 1 follower
-
-
சந்தானம் சேகரின் ஒளிப்பதிவு இன்னும் நேர்த்தி கூட்டியிருக்கலாம். அரோல் கரோலி. இசை ஓகே ரகம். ஒரு காவல்துறை அதிகாரியின் கொலைக்குப் பின்னால் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும்போது காவல்துறையில் உள்ள கறுப்பாடுகளின் முகமூடிகளும் அவிழும் கதை ‘லாக்கப்.’ கிழக்குக் கடற்கரைச் சாலையின் ஒரு பங்களாவில் கொலையாகிக் கிடக்கும் இன்ஸ்பெக்டர், தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்படும் ஒரு பெண் - இந்த இரண்டு மரணங்களையும் விசாரிக்கிறார் காவல்துறை அதிகாரி ஈஸ்வரி ராவ். ஒருகட்டத்தில் இரண்டு மரணங்களுக்கும் இடையில் உள்ள பொதுவான புள்ளிகளை அடையாளம் காண்கிறார். குற்றங்களுக்கான பின்னணி என்ன, குற்றவாளிகள் யார் என்பதை இரண்டுமணி நேரத்…
-
- 1 reply
- 634 views
-
-
ரயில்வேயில் பணிபுரிந்து கொண்டிருந்த நாகேஷுக்கு முதலில் நாடகத்தில் கிடைத்தது “வயிற்று வலி நோயாளி’ வேடம். அந்த நாடகத்தில் நாகேஷ் சில நிமிடங்களே மேடையில் தோன்றுவார். ஆனால், அவர் இதை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். “டாக்டர்…’ என அலறியபடி மேடையில் நுழையும் நாகேஷ், நிஜமாகவே வயிற்று வலியால் துடிப்பது போல உடலை வளைத்து, நெளித்து, கைகளால் வயிற்றை பிடித்துக் கொண்டே சிறப்பாக நடித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத பார்வையாளர்களுக்கு ஆச்சரியம். அவர்களின் கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது. அன்றைக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரும் நாகேஷின் நடிப்பை ரசித்தார். நாடகம் முடிந்த பின் மேடை ஏறிய எம்.ஜி.ஆர்., “நாடகம் நன்றாக இருந்தது. ஒரே ஒரு சீனில் வந்தாலும் அபாரமாய் நடித்து …
-
- 1 reply
- 634 views
-
-
ப்ளூ ஸ்டார் விமர்சனம் நடிகர்கள்: அசோக் செல்வன்,கீர்த்தி பாண்டியன்,சாந்தனு பாக்யராஜ் இயக்கம்: எஸ் ஜெயகுமார்சினிமா வகை:Comedy, Drama, Sportகால அளவு:2 Hrs 48 அரக்கோணத்தை சேர்ந்த இரண்டு கிரிக்கெட் அணிகளுக்கு இடையே போட்டியாக உள்ளது. படம் துவங்கியதுமே அந்த இரண்டு அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி குறித்து பேசுகிறார்கள். இந்த ஒரு போட்டியை பற்றி தான் மொத்த படமும் இருக்குமோ என தோன்றுகிறது. ஆனால் அப்படி இல்லை. பெரிதும் பேசப்படும் அந்த கிரிக்கெட் போட்டி படத்தின் முதல் பாதியிலேயே நடந்துவிடுகிறது. …
-
-
- 1 reply
- 633 views
-
-
மங்காத்தாவை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படம் 'பிரியாணி'. கார்த்தி நடிக்கும் இந்தப் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். வெங்கட் பிரபு-யுவன் கூட்டணியில் உருவான பாடல்கள் அனைத்துமே வெற்றிதான். இந்நிலையில் 'பிரியாணி' திரைப்படம் யுவன் இசையமைக்கும் 100வது திரைப்படம் என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் யுவன் தற்போதே இசையமைக்க தொடங்கிவிட்டார். இதற்காக அவர் மலேசியாவில் முகாமிட்டுள்ளார். அவருடன் பிரேம்ஜி மற்றும் வெகங்கட் பிரபும் விகடன் சினிமா
-
- 2 replies
- 632 views
-
-
மணிரத்னம் படத்துக்கு ரூ 50 கோடி பட்ஜெட்!! சென்னை: முழுக்க முழுக்கப் புதுமுகங்களை மட்டுமே வைத்து மணிரத்னம் எடுத்துக் கொண்டிருக்கும் கடல் படத்துக்கு ரூ 50 கோடி பட்ஜெட் என்ற தகவலை வெளியிட்டுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன். நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம், நடிகை ராதா மகள் துளசி ஜோடியாக அறிமுகமாகிறார்கள் இந்தப் படத்தில். இவர்களைத் தவிர, அர்ஜுனும் நடிக்கிறார். படத்தின் உண்மையான ஹீரோவாக ஏ ஆர் ரஹ்மான் இருப்பார் என்று நம்பப்படுகிறது. இந்த நிலையில் படம் குறித்தப் பேசியுள்ள, அப்படத்தின் கதை வசனகர்த்தா எழுத்தாளர் ஜெயமோகன், "நானும் மணிரத்னமும் சேர்ந்து பணியாற்ற கடந்த நபல வருடங்களாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அமையவில்லை. கடலில் அது கைகூடியுள்ளது. கடல் படம் ரூ 50 கோடி ப…
-
- 1 reply
- 632 views
-
-
கவுதம்மேனன் இயக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் திரைக்கதையில் மாற்றங்கள் தேவைப்பட்டதால், படம் நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது! இதற்கிடையில் சூர்யா ஜோடியாக அசின் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஏற்கனவே சென்னையில் ஒரு மழைக் காலம் படத்தில் இருவரையும் ஜோடியாக நடிக்க வைக்க கவுதம் முடிவு செய்தார். ஆனால் அப்படம் நின்று போனது. - See more at: http://vuin.com/news/tamil/we-wont-allow-asin-to-act-in-tamil-films
-
- 1 reply
- 632 views
-
-
கமலஹாசன் சொல்கிறார் -”போர்னோகிராபியால் தான் இன்டர்னெட் வளர்ந்தது”..!! —– ஒவ்வொரு முறை தன் படம் வெளிவரும்போதும், எதையாவது ஏறுமாறாகச் சொல்லி அல்லது செய்து, செலவில்லாமல் பப்ளிசிடி தேடும் கமல் இந்த முறையும் அதே டெக்னிக்கை கையாள்கிறார். விஸ்வரூபம் பார்ட்-2 ரெடி என்று பலமுறை தெரிவித்தும் எதிர்பார்த்த பரபரப்புகள் எதுவும் கிளம்பாத நிலையில், கமலஹாசன் பல சர்ச்சைக்கிடமான கருத்துக்களை புதிதாக ஒரு பேட்டியில் கூறி இருப்பதன் மூலம் பரபரப்பிற்கான சூழ்நிலைக்கு வித்திட்டிருக்கிறார்….! இதுவாவது அவருக்கு கை கொடுக்குமா..? Best of Luck Kamal …! நேரமில்லாதவர்களுக்கு சுருக்கமாக தலைப்புச் செய்திகள் - காந்தியும், பெரியாரும் சினிமாவுக்கு பெரும் அநீதி இழைத்து விட்டார்கள் .. …
-
- 0 replies
- 632 views
-
-
''விக்ரம் பிரபு... உங்க மேல அக்கறையோட ஒரு அட்வைஸ்!’’ - 'பக்கா’ விமர்சனம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லாமல் கஷ்டப்பட்டார்கள். பல நூறு கோடி ரூபாய் முதலீடு அந்தரத்தில் தொங்கியது. சொன்ன தேதிக்கு ரிலீஸ் செய்யமுடியாமல் படங்கள் முடங்கின. அரசுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் க்யூப் போன்ற அமைப்புகளுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. இத்தனையையும் கடந்து சினிமா ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்தது. ரீ-என்ட்ரி நல்லதுதான். ஆனால், 'பக்கா' போன்ற படத்தோடு கோலிவுட் திரும்ப ரீ-என்ட்ரி ஆகியிருக்க வேண்டாம். விக்ரம் பிரபு ஊர் ஊராகச் சென்று திருவிழாவில் பொம்மை விற்கும் 'பொம்மைக்கடை' பாண்டி. ஃப்ரேமில் தனியாக நின்…
-
- 0 replies
- 632 views
-
-
நடிகை தமன்னா ஆந்திராவுக்கு ஆதரவாக கோஷம் போடமாட்டேன் என்று கூறி போராட்டக்காரர்களிடம் இருந்து புத்திசாலித்தனமாக தப்பித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகையான தமன்னா ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். விசாகப்பட்டினம் செல்லும் வழியில் ஒரு கும்பல் ஆந்திர பிரிவினையை எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக செல்லும் வாகனங்களை மறித்து ரகளையில் ஈடுபட்டனர். இதில் நடிகை தமன்னாவின் காரும் அந்த கும்பலிடம் சிக்கியது. காருக்குள் இருப்பது தமன்னா என்பதை தெரிந்து கொண்ட போராட்டக்காரர்கள் ‘ஆந்திராவுக்கு ஜே’ என்று சொல்லுமாறு அவரிடம் வற்புறுத்தியுள்ளனர். ஆனால் தமன்னாவோ நான் அவ்வாறு கூறமாட்டேன். அனைத்து மொழிகளிலும் நடிப்பதுதா…
-
- 2 replies
- 632 views
-
-
சென்னை: அப்புச்சி கிராமம் என்ற பெயரில் ஒரு புதிய படம் உருவாகிறது. இந்தப் படம் ஒரு கிராம கதைக் களத்தில் அறிவியல் பின்னணியுடன் உருவாகிறது. எ கன் அன்ட் எ ரிங் என்ற கனடா நாட்டுப் படத்தைத் தயாரித்த விஷ்ணு முரளி என்பவர் இந்த அப்புச்சி கிராமத்தைத் தயாரிக்கிறார், படத்தின் இயக்குநர் பெயர் வி ஆனந்த். கட்டடக்கலை நிபுணரான இவர் இந்தப் படம் மூலம் இயக்குநராகிறார். இயக்குநர்கள் ஏ ஆர் முருகதாஸ், ஹோசிமின், பிரதாப் போத்தன் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. ஜிஎம் குமார், கும்கி ஜோசப், சிங்கம் புலி, கஞ்சா கருப்பு என தேர்ந்த நடிகர்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர். விஷால் சி இசையமைக்கிறார். பிரசாத் ஜிகே ஒளிப்பதிவு செய்கிறார். தனது இந்தப் படம் உலக அளவில் …
-
- 0 replies
- 631 views
-
-
வியாழக்கிழமை, 14, ஜூலை 2011 (8:50 IST) ரஜினி படத்தை பிரபலப்படுத்த வேண்டிய அவசியமே கிடையாது: அமிதாப்பச்சன் இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப்பச்சன், தனது சொந்த தயாரிப்பில் புத்தா ஹோகா தேரா பாப்' என்ற இந்தி திரைப்படத்தை தயாரித்துள்ளார். அந்த படத்தை விளம்பரப்படுத்தும் பணி முடிந்த நிலையில், ஆரக்ஷான்' என்ற அடுத்த படத்தை விளம்பரப்படுத்தும் பணியை தொடங்கி இருக்கிறார். அந்த திரைப்படம் ஆகஸ்டு 12ந் தேதி வெளியாகிறது. இந்த பணியில் ஈடுபட்டுள்ள நடிகர் அமிதாப்பச்சன், தன்னுடைய இணையதள பக்கத்தில் கட்டுரை எழுதியுள்ளார். அதில், அவர் கூறியுள்ளதாவது: இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களை பிரபலப்படுத்தும் பணி மிகவும் முக்கியமானது. அதிக அளவிலான மக்களின் கவனத்துக்கு அதைக…
-
- 1 reply
- 631 views
-
-
'வசூல் ராஜா' 'விக்ரம் வேதா' படங்களில் நடித்த இயக்குநரும் நடிகருமான இ. ராமதாஸ் காலமானார் பட மூலாதாரம்,E.RAMADOSS/FACEBOOK 4 மணி நேரங்களுக்கு முன்னர் திரைப்பட இயக்குநரும் சினிமா எழுத்தாளருமான இ. ராமதாஸ் காலமானார். பல திரைப்படங்களின் திரைக்கதையில் பங்களிப்பு செலுத்தியுள்ள ராமதாஸ், ஒரு சிறந்த நடிகரும்கூட. சென்னையில் வசித்து வந்த ராமதாஸ், நேற்று காலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், இரவு பத்து மணி அளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது மகன் கலைச்செல்வன் தெரிவித்திருக்கிறார். விழுப்புரம் மாவட்டத்தில் எத்…
-
- 0 replies
- 631 views
- 1 follower
-
-
சூர்யாவை வச்சு செய்த பேட்டி ? ஏன்டா இப்படி இருக்க - இயக்குனர் ஆகாஷ் !
-
- 2 replies
- 630 views
-
-
மும்பை, இந்தி நடிகை அலிஷாகானின் ஆபாச படம் இணையதளத்தில் வெளியானதால் அவரை வீட்டில் இருந்து விரட்டி விட்டனர். இதனால் அவர் சாப்பாட்டுக்கு கூட வழி இன்றி ரோட்டிலும், கோவில்களிலும் படுத்து தூங்குகிறார். இந்தி நடிகை டெல்லியை சேர்ந்த மாடல் அழகி அலிஷாகான். இவர் ‘மை ஹஷ்பன்ட் வைப்’ என்ற இந்தி படத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து மேலும் பல படங்களில் நடித்தார். இந்த நிலையில் அலிஷாகான் இளைஞர் ஒருவருடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். தன்னுடன் நெருக்கமாக இருக்கும் இளைஞரே அந்த வீடியோவை வெளியிட்டு விட்டதாக அந்த புகாரில் கூறி இருந்தார். அனாதையாக சுற்றுகிறார் …
-
- 0 replies
- 630 views
-
-
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் சூரி, தனது ஓட்டலில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கியுள்ளார். .. கொரோனா வைரஸ்’ ஒட்டுமொத்த உலகையும் மிரட்டிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கால் பல்வேறு துறையினரும் வீட்டில் முடங்கி உள்ளனர். அந்த வகையில் பசி, தூக்கம் மறந்து வேலை செய்து வந்த பிரபல நடிகர்-நடிகைகளுக்கும் கட்டாய ஓய்வு கிடைத்துள்ளது. இந்த ஒய்வு நேரத்தை அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் செலவழித்து வருகின்றனர். இதுகுறித்து நகைச்சுவை நடிகர் சூரி கூறியதாவது: “மனைவி குழந்தைகளுடன் பேசக்கூட நேரம் இல்லாமல், ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த எனக்கு பயம் கலந்த ஓய்வு கிடைத்து இருக்கிறது. இந்த ஓய்வில், வீட…
-
- 2 replies
- 629 views
-
-
எட்டாவது சர்வதேச தமிழ் திரைப்பட விழா, ரொரன்டோவில் நடக்கவிருக்கின்றது. ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் இந்த நிகழ்வில் (கடந்த வருடம் சில காரணங்களால் நடாத்தப்படவில்லை) பல குறும் திரைப்படங்கள் திரையிடப்படுவது வழக்கம் நான் 2008 இல் நடந்த நிகழ்வுக்கு சென்றிருந்தேன். மிகவும் அருமையான சில தமிழ் மொழியில் எடுக்கப்பட்ட குறும் திரைப்படங்களை பார்க்கக் கூடியதாக இருந்தது. பல வளரும் கலைஞர்களை சந்திக்க கூடியதாகவும் இருந்தது Uploaded with ImageShack.us எம் சக தமிழ் கலைஞர்களை ஊக்கப்படுத்த வாருங்கள்.
-
- 0 replies
- 629 views
-
-
-
எஸ் பி பாலசுப்ரமணியம் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி சினிமாவில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியவர் எஸ்.பி.பி. ஆரம்பகாலத்தில் மெல்லிசை குழுவில் கச்சேரி நடத்தியதில் தொடங்கி பின்பு கின்னஸ் சாதனை படைத்தது வரை அவரைப்பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அவற்றில் சில சுவாரஸ்ய துளி....................... 1. சினிமாவிற்கு வருவதற்கு முன் இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர் ஆகியோருடன் இணைந்து மெல்லிசைக் குழு ஒன்றை நடத்தி வந்திருக்கின்றார் எஸ்பிபாலசுப்ரமணியம். 2. தெலுங்கு பட இசையமைப்பாளர் எஸ்.பி.கோதண்டபாணி மூலம் திரைப்படத்தில் பின்னணி பாடும் வாய்ப்பினை முதன் முதலாக கிடைக்கப் பெற்றார். படம் : "ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமண்ணா". இதனால் தனது 'ரிக்கார்டிங்' தியேட்டருக்கு 'கோதண்டபாணி' எ…
-
- 1 reply
- 629 views
-
-
மாதவன், ஆர்யா நடித்த, "வேட்டை படம், "தடகா என்ற பெயரில், தெலுங்கில் ரீ-மேக் ஆகிறது. இதில், சுனிலும், நாக சைதன்யாவும், நடிக்கின்றனர். சமீரா ரெட்டி, அமலா பால் நடித்த வேடங்களில், தமன்னாவும், ஆண்ட்ரியாவும் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஸ்டில்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதில், "மில்க் பியூட்டி என, ரசிகர்களால் கொண்டாடப்படும், தமன்னாவின் தாராளத்தை பார்த்து, தெலுங்கு திரையுலகமே, மயக்கம் போடாத குறையாக, ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளது. இதற்கு முன், தான் நடித்த எந்த படங்களிலும் இல்லாத அளவுக்கு, பாடல் காட்சிகளில், கிளாமராக நடித்துள்ளாராம், தமன்னா. அவரின் அதிரடி பாய்ச்சலை பார்த்து, தெலுங்கில், நம்பர் ஒன் கனவுடன் வலம் வந்து கொண்டிருக்கும், அமலாபால், சமந்தா வகையறாக்கள், கடும் கலக்…
-
- 2 replies
- 629 views
-